சொல் |
பொருள் |
தமிழ்ச்சொல் |
தோன்றும் முறை |
கோமாயு, KOAMAAYU |
நரி, JACKAL |
கோமாயு |
கோ (=பேச்சு, எதிர்) + மாய் (=மாயம், தந்திரம், அழி) + உ = கோமாயு = தந்திரமாகப் பேசி எதிரியை அழிப்பது |
கோமாளம், KOAMAALHAM |
கும்மாளம், JOY |
கும்மாளம் |
கும்மாளம் >>> கோமாளம் |
கோமான், KOAMAAN |
பன்றி, HOG |
கீழ்மான் |
கீழ் (=நிலம், தோண்டு) + மான் (=விலங்கு) = கீழ்மான் >>> கூமான் >>> கோமான் = நிலத்தைத் தோண்டும் விலங்கு. |
கோமியம், KOAMIYAM |
பசுமூத்திரம், URINE OF COW |
கோமையம் |
கோ (=பசு) + மை (=கழிவு) + அம் (=நீர்) = கோமையம் >>> கோமியம் = பசு கழிக்கும் நீர். |
கோமுகம், KOAMUKAM |
இசைக்கருவி, MUSICAL INSTRUMENT |
குமுக்கம் |
குமுக்கு (=கையால் குத்து) + அம் (=ஒலி) = குமுக்கம் >>> கோமுகம் = கையால் குத்தி ஒலிக்கப்படும் இசைக்கருவி |
கோரம், KOARAM |
பாத்திரம், UTENSIL |
கூறம் |
குறை (=கொள், பள்ளம்) + அம் (=உணவு) = கூறம் >>> கோரம் = உணவைக் கொள்வதற்கான பள்ளமுடைய பொருள் = பாத்திரம். |
கோரகம், KOARAKAM, கோரகை, KOARAKAI |
பாத்திரம், UTENSIL |
கூறாக்கம் |
குறை (=கொள், பள்ளம்) + ஆக்கம் (=உணவு) = கூறாக்கம் >>> கோரகம் = உணவைக் கொள்வதற்கான பள்ளமுடைய பொருள் = பாத்திரம். |
கோரகம், KOARAKAM, கோரகை, KOARAKAI |
மொட்டு, BUD |
கூரகம் |
கூர் (=மிகு, குவி, கூர்மை) + அகை (=மலர்) + அம் = கூரகம் >>> கோரகம் = குவிந்து கூர்மையுடைய மலர். |
கோரகை, KOARAKAI |
குயில், CUCKOO |
கூறகை, கூரகை |
(1) கூறு (=ஒலி) + அகம் (=இன்பம், உயிர், பறவை) + ஐ = கூறகை >>> கோரகை = இனிமையாக ஒலிக்கும் பறவை. (2) குரு (=சிவப்பு) + அகம் (=கண், பறவை) + ஐ = கூரகை >>> கோரகை = சிவந்த கண்ணுடைய பறவை. |
கோரணி, KOARANHI |
கேலி, MOCKERY |
கூரணி |
கூர் (=குத்தலான பேச்சு) + அணி (=இனிமை) = கூரணி >>> கோரணி = குத்தலாகப் பேசி இன்புறுதல். |
கோரணி, KOARANHI |
முகம் கோணுதல், GRIMACE |
கூரணி |
கூர் (=வளை, கோணு) + அணி (=முகம்) = கூரணி >>> கோரணி = முகம் கோணுதல். |
கோரணி, KOARANHI |
திமிர்ப்பேச்சு, EPILEPSY |
கூரணி |
கூர் (=மிகுதி, திமிர்) + அணி (=சொல்) = கூரணி >>> கோரணி = திமிர்ப் பேச்சு |
கோரணி, KOARANHI |
முணுமுணுப்பு, CAPTIOUS COMPLAINT |
கூறணி |
குறை + அணி (=சொல், ஒலி) = கூறணி >>> கோரணி = குறைந்த ஒலியால் குறையைச் சொல்லுதல். |
கோரதரம், KOARATHARAM |
நரகம், HELL |
கோரற்றாரம் |
கோரம் (=கொடுமை) + அற்றம் (=அழிவு, மரணம், குற்றம், பள்ளம்) + ஆர் (=பெறு) + அம் = கோரற்றாரம் >>> கோரதரம் = மரணித்தோர் குற்றத்திற்காக கொடுமையுறும் பள்ளம். |
கோரம், KOARAM |
கொடுமை, CRUELTY |
கூரம் |
கூர் (=மிகுதி, கொடுமை) + அம் = கூரம் >>> கோரம் |
கோரம், KOARAM |
அச்சந்தருவது, FEAR INVOKING |
கூறம் |
குறு (=அஞ்சு, கொடு) + அம் = கூறம் >>> கோரம் = அச்சத்தைக் கொடுப்பது |
கோரம், KOARAM |
அழகற்றது, UGLINESS |
கூறம் |
குறை (=அழி, இல்லாகு) + அம் (=அழகு) = கூறம் >>> கோரம் = அழகற்றது. |
கோரம், KOARAM |
வெப்பம், HEAT |
குரு |
குரு (=சினம், வெப்பம்) + அம் = கூரம் >>> கோரம் |
கோரம், KOARAM |
விரைவு, SPEED |
கூறம் |
குறு (=விரை) + அம் = கூறம் >>> கோரம் = விரைவு |
கோரம், KOARAM |
குதிரை, HORSE |
கூறம் |
குறை (=வெட்டு, மயிர்) + அம் (=நீளம்) = கூறம் >>> கோரம் = வெட்டப்படும் நீண்ட மயிரைக் கொண்டது = குதிரை. |
கோரம், KOARAM |
நஞ்சு, POISON |
கூறம் |
குறை (=அழி) + அம் (=உணவு) = கூறம் >>> கோரம் = அழிக்கும் உணவு = நஞ்சு |
கோரம், KOARAM |
மொட்டு, BUD |
கூரம் |
கூர் (=மிகு, குவி, கூர்மை) + அம் (=சிரிப்பு, மலர்ச்சி) = கூரம் >>> கோரம் = குவிந்து கூர்மையுடைய மலர் |
கோரா, KOARAA |
அழுக்கு உடை, STAINED CLOTH |
கூறாய் |
கூறை (=ஆடை) + ஆய் (=கழிவு, கறை) = கூறாய் >>> கோரா = கறையுடைய ஆடை |
கோரா, KOARAA |
நிறமற்ற நூல், UNDYED YARN |
கூராய் |
கூர் (=நரம்பு, நூல்) + ஆய் (=நிறம், நீங்கு, இல்லாகு) = கூராய் >>> கோரா = நிறம் இல்லாத நூல். |
கோரா, KOARAA |
பழக்காத விலங்கு, UNTAMED ANIMAL |
கூறா |
குறை (=அடக்கு, ஒடுக்கு, அழி, இல்லாகு) + ஆ (=விலங்கு) = கூறா >>> கோரா = அடக்கி ஒடுக்கப்படாத விலங்கு |
கோரிகை, KOARIKAI |
கரண்டி LADLE |
கோரீகை |
கோரு (=முக) + ஈ (=கொடு, நீளு) + கை (=கைப்பொருள்) = கோரீகை >>> கோரிகை = முகந்து கொடுப்பதற்கான நீண்ட கைப்பொருள் = சட்டுவம், கரண்டி |
கோலம், KOALAM, கோல், KOAL |
தெப்பம், BOAT |
கூலம் |
குலவு / குல (=செல்) + அம் (=நீர்) = கூலம் >>> கோலம் = நீரில் செல்வதற்கானது = தெப்பம். |
கோலம், KOALAM |
பன்றி, HOG |
கோலம் |
கோல் (=தோண்டு) + அம் (=இடம், பூமி) = கோலம் = பூமியைத் தோண்டுவது = பன்றி. |
கோலம், KOALAM |
குரங்கு, MONKEY |
கூலம் |
கூலம் (=குரங்கு) >>> கோலம் |
கோலம், KOALAM, கோல், KOAL, கோலி, KOALI |
இலந்தை, JUJUBE |
கோலம் |
கோல் (=சிவப்பு, திரட்சி, கொத்து, உருண்டை, கொட்டை) + அம் (=பழம்) = கோலம் = கொத்தாகக் காய்க்கும் உருண்ட கொட்டையுடைய செந்நிறப் பழம் = இலந்தை. |
கோலம், KOALAM |
பாக்கு, ARECA NUT |
கோலம் |
கோல் (=சிவப்பு, திரட்சி, கொத்து, உருண்டை, கொட்டை) + அம் (=உணவு) = கோலம் = உருண்ட கொட்டையுடன் சிவப்பு நிறத்தில் கொத்தாகக் காய்க்கும் உணவு = பாக்கு |
கோலம், KOALAM |
உடை, DRESS |
கோலம் |
கோல் (=சுற்று, உடு) + அம் = கோலம் = உடுத்துவது |
கோலாகலம், KOALAAKALAM |
கூட்டத்தின் ஒலி, TUMULT |
கூலகலம் |
குலம் (=கூட்டம்) + கலி (=ஒலி) + அம் = கூலகலம் >>> கோலாகலம் = கூட்டத்தின் ஒலி |
கோலாகலம், KOALAAKALAM |
ஆடம்பரம், BIG SHOW |
கோலாகலம் |
கோலம் (=அலங்காரம்) + அகலம் (=மிகுதி, பெருமை) = கோலாகலம் = மிகப் பெரிய அலங்காரம். |
கோலாலம், KOALAALAM |
கூட்டத்தின் ஒலி, TUMULT |
கூலாலம் |
குலம் (=கூட்டம்) + ஆல் (=ஒலி) + அம் = கூலாலம் >>> கோலாலம் = கூட்டத்தின் ஒலி |
கோலி, KOALI |
உருண்டை, BALL |
கோல் |
கோல் (=சுற்று, திரட்சி) + இ = கோலி = திரண்டு சுற்றியது |
கோலிகன், KOALIKAN |
நெசவாளி, WEAVER |
கோலிகன் |
கோலம் (=உடை) + இகு (=கொடு) + அன் = கோலிகன் = உடையைக் கொடுப்பவன் = நெசவாளி |
கோலியன், KOALIYAN |
நெசவாளி, WEAVER |
கோலீயன் |
கோலம் (=உடை) + ஈ (=கொடு) + அன் = கோலீயன் >>> கோலியன் = உடையைக் கொடுப்பவன் = நெசவாளி |
கோலை, KOALAI |
மிளகு, PEPPER |
கோலழி |
கோல் (=திரட்சி, உருண்டை, விதை) + அழி (=எரி, உண்) = கோலழி >>> கோலயி >>> கோலை = எரிச்சல் தருகின்ற உருண்டையான விதை உணவு = மிளகு |
கோவணம், KOAVANHAM |
தொடைச்சந்தில் அணிவது, LOIN |
கவ்வணம் |
கவை (=கவடு, தொடைச்சந்து) + அணி + அம் = கவ்வணம் >>> கௌவணம் >>> கோவணம் = தொடைச்சந்தில் அணிவது. |
கோவம், KOAVAM |
பொன், GOLD |
கோப்பம் |
கோப்பு (=ஆடம்பரம், அலங்காரம், அணி) + அம் = கோப்பம் >>> கோவம் = ஆடம்பர அலங்கார அணிகலன்.. |
கோவர்த்தனம், KOAVARTHTHANAM |
பசுக்களை மழையிலிருந்து காத்த மலை, A MOUNTAIN |
கோமாரித்தணம் |
கோ (=பசு, மலை, மூடிமறை) + மாரி (=மழை) + தணி (=பொறு, தாங்கு) + அம் = கோமாரித்தணம் >>> கோவர்த்தனம் = பசுக்களை மழையில் இருந்து மூடிமறைக்கத் தாங்கப்பட்ட மலை. |
கோவளம், KOAVALHAM |
கடலுக்குள் நீண்ட நிலம், CAPE |
கோவலம் |
கோ (=பூமி, நிலம்) + அலை (=கடல்) + அம் (=நீளம்) = கோவலம் >>> கோவளம் = கடலுக்குள் நீண்ட நிலம். |
கோவன், KOAVAN |
அரசன், KING |
கோ |
கோ (=அரசன்) + அன் = கோவன் |
கோளகம், KOALHAKAM |
மிளகு, PEPPER |
கோளகம் |
கோள் (=உருண்டை) + அகை (=எரி) + அம் (=உணவு) = கோளகம் = எரியக்கூடிய உருண்டையான உணவு. |
கோளம், KOALHAM |
உருண்டை, SPHERE |
கோலம் |
கோல் (=திரட்சி, உருண்டை) + அம் = கோலம் >>> கோளம் |
கோச்~டம், KOASHTAM |
கூட்டத்தின் ஒலி, TUMULT |
கோட்டம் |
கோட்டி (=கூட்டம்) + அம் (=ஒலி) = கோட்டம் >>> கோச்~டம் = கூட்டத்தின் ஒலி. |
கோச்~டி, KOASHTI |
கூட்டம், CROWD |
கூட்டம் |
கூட்டம் + இ = கூட்டி >>> கோட்டி >>> கோச்~டி |
கோச~ம், KOASHAM |
கூட்டத்தின் ஒலி, TUMULT |
கோசம் |
கோசம் (=கூட்டத்தின் ஒலி) >>> கோச~ம் |
கௌசலம், KOUCALAM, கௌசல்யம், KOUCALYAM |
வஞ்சனை, FRAUD |
கோசலம் |
கோ (=புனைந்துகூறு) + சலம் (பொய்) = கோசலம் >>> கௌசலம் = பொய்யாகப் புனைந்து கூறுதல் = வஞ்சனை |
கௌசனம், KOUCANAM |
கோவணம், |
கவசணம் |
கவை (=கவடு, தொடைச்சந்து) + அசை (=கட்டு) + அணி (=உடை) + அம் = கவசணம் >>> கௌசனம் = தொடைச்சந்தில் கட்டும் உடை. |
கௌசனை, KOUCANAI |
உறை, ENVELOPE |
கவிழணை |
கவிழ் (=மூடு) + அணி (=சூழ்) + ஐ = கவிழணை >>> கௌசனை = சூழ்ந்து மூடுவது = உறை. |
கௌசிகம், KOUCIKAM |
விளக்குத் தண்டு, LAMP STAND |
கோழிகம் |
கொழு (=கோல், தண்டு) + இக (=பொறு, தாங்கு) + அம் (=ஒளி) = கோழிகம் >>> கௌசிகம் = ஒளியைத் தாங்கும் தண்டு = விளக்குத் தண்டு |
கௌஞ்சம், KOUNJAM |
அன்றில், INDIAN LOVE BIRD |
கவுயம் |
கவை (=பிளவு, பிரிவு) + உய் (=உயிர், நீங்கு) + அம் (=பறவை) = கவுயம் >>> கௌசம் >>> கௌஞ்சம் = பிரிந்தால் உயிர் நீங்கும் பறவை = அன்றில். |
கௌடில்யம், KOUTILYAM |
வளைவு, BEND |
குடிலம் |
குடிலம் (=வளைவு) + இயம் = கூடிலியம் >>> கௌடில்யம் |
கௌணம், KOUNHAM |
இரண்டாவது, SECONDARY |
கவுணம் |
கவுணம் (=இரண்டாம் வகை) >>> கௌணம் |
கௌதம், KOUTHAM, கவுதம், KAVUTHAM |
மீன் கொத்தி, KING FISHER |
கவூன்றம் |
கவ்வு + ஊன்று (=மூழ்கு) + அம் (=நீர், உணவு, அழகு, பறவை) = கவூன்றம் >>> கவுதம் >>> கௌதம் = நீருக்குள் மூழ்கி உணவைக் கவ்வும் அழகிய பறவை. |
கௌதுகம், KOUTHUKAM |
மகிழ்ச்சித் துள்ளல், JOY |
கோதுகம் |
கோதுகம் (=மகிழ்ச்சித் துள்ளல்) >>> கௌதுகம் |
கௌதுகம், KOUTHUKAM, கவுதுகம், KAVUTHUKAM |
மாயாசாலம், JUGGLERY |
கவிழ்த்துகம் |
கவிழ்த்து (=ஏமாற்று) + உக (=விரும்பு, மகிழ்) + அம் = கவிழ்த்துகம் >>> கவுதுகம் >>> கௌதுகம் = விரும்பி மகிழுமாறு ஏமாற்றுதல் = மாயாசாலம். |
கௌந்தி, KOUNTHI |
மிளகு, PEPPER |
காழ்ப்பொறி |
காழ் (=கருமை, வலிமை, விதை) + பொறி (=தீ, எரிதல்) = காழ்ப்பொறி >>> கவ்வுதி >>> கவுந்தி >>> கௌந்தி = எரிச்சலுடைய வலுவான கருநிற விதை = மிளகு. |
கௌபீனம், KOUPEENAM |
கோவணம், LOIN CLOTH |
கவைபூணம் |
கவை (=கவடு, தொடைச்சந்து) + பூண் (=அணி) + அம் = கவைபூணம் >>> கவபீணம் >>> கௌபீனம் = தொடைச்சந்தில் அணியப் படுவது = கோவணம். |
கௌமாரம், KOUMAARAM, கொமாரம், KOMAARAM |
இளம்பருவம், CHILD HOOD |
கொமாரம் |
கொம்மை (=இளமை) + ஆர் (=பொருந்து) + அம் (=பொழுது, பருவம்) = கொமாரம் >>> கௌமாரம் = இளம்பருவம் |
கௌரம், KOURAM |
வெண்மை, WHITE |
கவுரம் |
கவுரம் (=வெண்மை) >>> கௌரம் |
கௌரம், KOURAM, கௌரி, KOURI |
பொன்னிறம், GOLDEN COLOR |
கொவுரம் |
கோவம் (=பொன்) + உரு (=நிறம்) + அம் = கொவுரம் >>> கௌரம் = பொன்னிறம் |
கௌரி, KOURI |
கடுகு, MUSTARD |
காழ்பொரி |
காழ் (=கருமை, விதை) + பொரி = காழ்பொரி >>> கபுரி >>> கவுரி >>> கௌரி = பொரிக்கப்படும் கருப்பு விதை. |
கௌரி, KOURI, கௌடி, KOUTI, கவுடி, KAVUTI, கவடி, KAVATI |
பலகறை, COWRY |
கொவுறி |
கோ (=நீர், கண், கவி) + உறை (=வாழ், ஒப்பு, கூடு) + இ = கொவுறி >>> கௌடி / கௌரி >>> கண்போல கவிந்த கூட்டுக்குள் நீரில் வாழ்வது = பலகறை. |
கௌரி, KOURI |
குமரி, YOUNG GIRL |
கொமுறி |
கொம்மை (=இளமை) + உறு (=பொருந்து) + இ = கொமுறி >>> கொவுரி >>> கௌரி = இளமை பொருந்தியவள் |
கௌரியம், KOURIYAM |
வேப்பமரம், NEEM |
கைமுறியம் |
கை (=கசப்பு, சிறுமை) + முறி (=அறு, இலை) + அம் = கய்முறியம் >>> கவுரியம் >>> கௌரியம் = கசக்கின்ற சிறிய அறுபட்ட இலைகளைக் கொண்டது = வேப்பமரம் |
கௌல், KOUL, கவுல், KAVUL |
கெட்டவாடை, BAD SMELL |
கமுள் |
கம் (=மணம்) + உளு / உள் (=அழுகு, கெடு) = கமுள் >>> கவுல் >>> கௌல் = அழுகல் / கெட்ட மணம் |
கௌவியம், KOUVIYAM |
பசுதரும் உணவுகள், FOODS FROM COW |
கோவீயம் |
கோ (=பசு) + ஈ (=கொடு) + அம் (=உணவு) = கோவீயம் >>> கௌவியம் = பசு கொடுக்கும் உணவுகள். |
கௌளி, KOULHI, கவுளி, KAVULHI |
பல்லி, LIZARD |
கப்பொலி |
காப்பு (=வீடு, சுவர், மறைப்பு) + ஒலி = கப்பொலி >>> கபுளி >>> கவுளி >>> கௌளி = வீட்டில் / சுவரில் மறைந்து ஒலிப்பது = பல்லி. |
சக்கட்டம், CAKKATTAM |
கிண்டல், MOCKERY |
எக்காட்டம் |
ஏக்கை (=இகழ்ச்சி) + ஆடு (=சொல்) + அம் (=சிரிப்பு) = எக்காட்டம் >>> செக்கட்டம் >>> சக்கட்டம் = இகழ்ந்து சொல்லி சிரித்தல் = கிண்டல், கேலி |
சக்கட்டை, CAKKATTAI |
அறியாமை, STUPIDITY, திறமையின்மை, INCOMPETENCY |
அக்கற்றை |
ஆக்கம் (=அறிவு, திறமை) + அறு (=இல்லாகு) + ஐ = அக்கற்றை >>> சக்கட்டை = திறமை / அறிவு இல்லாமை |
சக்கத்து, CAKKATHTHU |
முத்து, PEARL |
அக்கற்று |
ஆக்கம் (=ஈட்டம், ஒளி, பொருள்) + அறை (=அலை, கடல்) + உ = அக்கற்று >>> சக்கத்து = கடலில் இருந்து ஈட்டப்படும் ஒளியுடைய பொருள் = முத்து. |
சக்கந்தம், CAKKANTHAM, சக்காந்தம், CAKKAANTHAM |
கிண்டல், MOCKERY |
எக்கற்றம் |
ஏக்கை (=இகழ்ச்சி) + அறை (=சொல்) + அம் (=சிரிப்பு) = எக்கற்றம் >>> செக்கத்தம் >>> சக்கந்தம் = இகழ்ந்து சொல்லி சிரித்தல் = கிண்டல், கேலி |
சக்கரம், CAKKARAM |
வண்டியின் உருளை, WHEEL OF A CART |
எக்காரம் |
ஏகு (=செல்) + ஆரம் (=வட்டம்) = எக்காரம் >>> செக்கரம் >>> சக்கரம் = செல்லுகின்ற வட்டம். |
சக்கரம், CAKKARAM |
பூமி, EARTH |
அக்கேரம் |
அக்கம் (=தானியம், விதை) + ஏர் (=எழு, வளர்ச்சி) + அம் = அக்கேரம் >>> சக்கரம் = விதைகளை எழுப்பி வளரச் செய்வது = பூமி. |
சக்கரம், CAKKARAM |
செக்கு, OIL PRESS |
அக்கரம் |
அக்கம் (=தானியம், விதை) + அரை + அம் (=ஒளி, உணவு) = அக்கரம் >>> சக்கரம் = ஒளிரும் உணவுக்காக விதைகளை அரைப்பது = செக்கு. |
சக்கரம், CAKKARAM |
சுவர், WALL |
அக்காரம் |
அகம் (=இடம்) + ஆர் (=மறை, கட்டு) + அம் = அக்காரம் >>> சக்கரம் = இடத்தை மறைத்துக் கட்டப்படுவது = சுவர். |
சக்கரம், CAKKARAM, சாகரம், CAAKARAM |
கடல், SEA |
அக்கறம் |
அகம் (=இடம்) + அறை (=அலை) + அம் (=ஒலி) = அக்கறம் >>> சக்கரம் >>> சாகரம் = அலைகள் ஒலிக்கும் இடம். |
சக்கரம், CAKKARAM |
மலை, MOUNTAIN |
அக்காரம் |
அகை (=உயர்) + ஆர் (=பூமி, நிலம்) + அம் (=நீளம்) = அக்காரம் >>> சக்கரம் = நீண்டு உயர்ந்த நிலம். |
சக்கரம், CAKKARAM |
பாம்பின் படம், |
அக்கரம் |
அகை (=உயர்த்து, மலர்த்து, விரி) + அரி (=பாம்பு) + அம் = அக்கரம் >>> சக்கரம் = பாம்பு உயர்த்தி விரிப்பது. |
சக்கரம், CAKKARAM |
பிறப்பு, BIRTH |
அய்க்கரம் |
ஆய் (=நீங்கு) + கரு + அம் = அய்க்கரம் >>> சக்கரம் = கருவில் இருந்து நீங்குதல் = பிறத்தல். |
சக்கரம், CAKKARAM |
பெருமை, DIGNITY |
அக்காரம் |
அகை (=உயர்) + ஆர் (=பொருந்து) + அம் = அக்காரம் >>> சக்கரம் = உயர்வு பொருந்தியது = மேன்மை, பெருமை |
சக்கரவர்த்தி, CAKKARAVARTHTHI |
பேரரசன், EMPEROR |
சக்கரவார்த்தி |
சக்கரம் (=பூமி, உலகம், பெருமை) + ஆர்த்து (=கட்டுப்படுத்து) + இ = சக்கரவார்த்தி >>> உலகைக் கட்டுப்படுத்துகின்ற பெருமை கொண்டவன் = பேரரசன். |
சக்கரவாகம், CAKKARAVAAKAM |
அன்றில் பறவை, INDIAN LOVE BIRD |
அக்கறவகம் |
அகை (=வருந்து) + அறவு (=பிரிவு) + அகம் (=அன்பு, பறவை) = அக்கறவகம் >>> சக்கரவாகம் = பிரிவினால் வருந்துகின்ற அன்புடைய பறவை = அன்றில். |
சக்கரவாளம், CAKKARAVAALHAM |
இருள்சூழ் ஒளிமலை, A MYTHICAL MOUNTAIN |
சாய்க்கரைமாலம் |
சாய் (=ஒளி) + கரை (=எல்லை) + மால் (=இருள், மலை) + அம் = சாய்க்கரைமாலம் >>> சக்கரவாளம் = இருளை எல்லையாகக் கொண்டு ஒளிரும் மலை. |
சக்கல், CAKKAL |
பயனற்றது, USELESS |
அக்கல் |
ஆக்கம் (=பயன்) + அல் (=இன்மை) = அக்கல் >>> சக்கல் = பயனற்றது |
சக்கல், CAKKAL |
அழுகல், ROTTEN |
அழுகல் |
அழுகல் >>> அயுகல் >>> அக்கல் >>> சக்கல் |
சக்களத்தி, CAKKALHATHTHI |
கணவனின் அன்பைப் பங்கிடுபவள், CO-WIFE |
அக்காளற்றி |
அகம் (=அன்பு) + ஆள் (=கணவன்) + அறு (=பிரி, பங்கிடு) + இ = அக்காளற்றி >>> சக்களத்தி = கணவனின் அன்பினைப் பிரித்துப் பங்கிடுபவள். |
சக்களையன், CAKKALHAIYAN |
வேலைசெய்யாத சோம்பேறி, SLUGGISH FELLOW |
அக்கலியன் |
ஆக்கு (=விருத்திசெய்) + அலு (=சோர், சோம்பு) + இயன் = அக்கலியன் >>> சக்களையன் = விருத்தி செய்வதற்குச் சோம்புபவன் = வேலைசெய்யாத சோம்பேறி |
சக்காத்து, CAKKAATHTHU |
இலவசம், FREE |
அக்கற்று |
அகை (=மதிப்பு, விலை) + அற்றம் (=இன்மை) + உ = அக்கற்று >>> சக்காத்து = விலை இல்லாதது = இலவசம் |
சக்காரம், CAKKAARAM |
தேமா, SWEET MANGO |
அக்கரம் |
ஆக்கம் (=பொன், திரட்சி) + அரி (=நிறம்) + அம் (=இனிமை, பழம்) = அக்கரம் >>> சக்காரம் = பொன்நிறம் உடைய திரண்ட இனிமையான பழம் = இனிப்பு மாம்பழம். |
சக்கி, CAKKI |
மரத்துண்டு, WOODEN PIECE |
அக்கீ |
அகம் (=மரம்) + ஈ (=வகு, பிள) = அக்கீ >>> சக்கி = மரத்தின் பிளவு |
சக்கிமுக்கிக் கல், CAKKIMUKKI KAL |
தீயை மூட்டும் கல், FLINT STONE |
அக்கிமுக்கி |
அக்கி (=தீ) + முகை (=தோன்று) + இ = அக்கிமுக்கி >>> சக்கிமுக்கி = தீயைத் தோன்றச் செய்வது. |
சக்கியம், CAKKIYAM |
இயல்வது, POSSIBLE |
அக்கியம் |
ஆக்கு (=செய்) + இயை (=பொருந்து, கூடு) + அம் = அக்கியம் >>> சக்கியம் = செய்யக் கூடியது |
சக்கியம், CAKKIYAM |
நட்பு, FRIENDSHIP |
அக்கியம் |
அகம் (=அன்பு, உள்ளம்) + இயை (=கூடு) + அம் = அக்கியம் >>> சக்கியம் = அன்புடைய உள்ளங்களின் கூட்டம். |
சக்கியார்த்தம், CAKKIYAARTHTHAM |
இயல்பான சொற்பொருள், EXPLICIT MEANING |
அக்கியருத்தம் |
அகம் (=தான்) + இயை (=பொருந்து) + அருத்தம் (=சொற்பொருள்) = அக்கியருத்தம் >>> சக்கியார்த்தம் = தானே பொருந்துகின்ற சொற்பொருள். |
சக்கரமுகம், CAKKARAMUKAM, சக்கிரமுகம், CAKKIRAMUKAM |
பன்றி, HOG |
சக்கரமுகம் |
சக்கரம் (=வட்டம்) + முகம் (=வாய்) = சக்கரமுகம் = வட்டவடிவ வாயினைக் கொண்டது = பன்றி. |
சக்கரி, CAKKARI |
பாம்பு, SERPENT |
சக்கரி |
சக்கரம் (=படம்) + இ = சக்கரி = படம் உடையது = பாம்பு |
சக்கரி, CAKKARI |
குயவன், POTTER |
சக்கரி |
சக்கரம் (=குயத்திகிரி) + இ = சக்கரி = குயத் திகிரியோன் |
சக்கரி, CAKKARI |
எண்ணைக்காரன், OIL MONGER |
சக்கரி |
சக்கரம் (=செக்கு) + இ = சக்கரி = செக்குடையவன் |
சக்கரி, CAKKARI |
அரசன், KING |
சக்கரி |
சக்கரம் (=பூமி) + இ = சக்கரி = பூமியை உடையவன் |
சக்கிரிகை, CAKKIRIKAI |
முழங்கால், KNEE |
அக்கரைகை |
அகை (=முறி, வளை) + அரை (=தண்டு, கால், நடு) + கை (=உறுப்பு) = அக்கரைகை >>> சக்கரிகை = காலில் வளைகின்ற நடு உறுப்பு. |
சக்கிரிவதம், CAKKIRIVATHAM |
கழுதை, DONKEY |
அக்கிரிபறம் |
அகம் (=உயிரி) + இரி (=ஓட்டு, செலுத்து) + பறி (=பாரம், மூட்டை) + அம் = அக்கிரிபறம் >>> சக்கிரிவதம் = மூட்டையுடன் செலுத்தப்படும் உயிரி = கழுதை. |
சக்கு, CAKKU |
கண், EYE |
ஆகம் |
ஆகம் (=கண்) + உ = அக்கு >>> சக்கு |
சக்கை, CAKKAI |
கழிவு, REFUSE |
அக்காய் |
ஆக்கம் (=பயன்) + ஆய் (=நீங்கு) = அக்காய் >>> சக்கை = பயன் நீங்கியது = கழிவு |
சக்கை, CAKKAI |
பட்டை, BARK |
அக்காழ் |
அகம் (=மரம், உடல்) + ஆழ் (=மறை, மூடு) = அக்காழ் >>> சக்கை = மரத்தின் உடலை மூடியிருப்பது = பட்டை |
சக்கை, CAKKAI |
துண்டு, PIECE |
அகை |
அகை (=முறி) >>> சக்கை = முறிந்தது = துண்டு |
சக்கை, CAKKAI |
ஆப்பு, PEG |
அக்காழ் |
அகை (=பிள, அடி) + ஆழ் (=அழுத்து) = அக்காழ் >>> சக்கை = பிளவுக்குள் அடித்து அழுத்தப்படுவது |
சக்கை, CAKKAI |
பலா, JACK |
சாய்க்காய் |
சாய் (=செறும்பு, நார், திரள், மிகுதி) + காய் = சாய்க்காய் >>> சக்கை = நார்கள் மிக்க திரண்ட காய் = பலா |
சக்கை, CAKKAI |
உடல், BODY |
யாக்கை |
யாக்கை (=உடல்) >>> சாக்கை >>> சக்கை |
சக்கை, CAKKAI |
மிகுதி, MULTITUDE |
ஆக்கம் |
ஆக்கம் (=பெருக்கம், மிகுதி) + ஐ = அக்கை >>> சக்கை |
அக்கு, AKKU |
தோல், SKIN |
அக்கூழ் |
அகம் (=உள்ளடக்கம்) + ஊழ் (=தசை, மூடு) = அக்கூழ் >>> அக்கு = தசையை உள்ளடக்கி மூடுவது = தோல். |
துரோகம், THUROAKAM |
ஏமாற்றுப்பேச்சு, CHEATING |
திருகு |
திருகு (=ஏமாற்றுப் பேச்சு) + அம் = திருகம் >>> துரோகம் |
விரோதம், VIROATHAM |
பகை, ENMITY |
பிரொற்றம் |
பிரி (=நீங்கு) + ஒற்றுமை + அம் = பிரொற்றம் >>> விரோத்தம் >>> விரோதம் = ஒற்றுமை நீங்கியது |
கோள், KOALH |
கிரகம், PLANET |
கோல் |
கோல் (=திரட்சி, உருண்டை, சுற்று) >>> கோள் = சுற்றுகின்ற உருண்டை = கிரகம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.