சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
கைங்கர்யம், KAINKARYAM |
கைவேலை, HAND WORK |
கைக்காரியம் |
கை + காரியம் (=வேலை) = கைக்காரியம் >>> கைங்கர்யம் = கையால் செய்யும் வேலை. |
கைதவம், KAITHAVAM |
பொய், FALSEHOOD |
கத்தம் |
கத்தம் (=கதை, பொய்) + அம் = காத்தவம் >>> கைதவம் |
கைதவம், KAITHAVAM |
துன்பம், AFFLICTION |
கத்தம் |
கத்தம் (=தீங்கு) + அம் = காத்தவம் >>> கைதவம் |
கைது, KAITHU |
கைப்பூட்டு, ARREST |
கைது |
கை + தை (=பிணி, பூட்டு) + உ = கைது = கைகளைப் பூட்டுதல். |
கைதி, KAITHI |
கைதானவன், ARRESTED MAN |
கைதி |
கைது (=கைப்பூட்டு) + இ = கைதி = கைகள் பூட்டப்பட்டவன் |
கைதை, KAITHAI |
வயல், FIELD |
கைதை |
கை (=இடம்) + தை (=இளம்பயிர், நாற்றாங்கால், பதி, நடு) = கைதை = நாற்றாங்கால்களைப் பதிக்கும் இடம் = வயல். |
கைப்பு, KAIPPU |
போதை, INTOXICATION |
கழுமு |
கழுமு (=மயங்கு) + உ = கழும்மு >>> கயுப்பு >>> கைப்பு = மயக்கம் = போதை. |
கைபத்து, KAIPATHTHU |
இருப்பின்மை, ABSENCE |
காழ்ப்பறு |
காழ்ப்பு (=சாரம், இருப்பு) + அறு (=இல்லாகு) = காழ்ப்பறு >>> காய்ப்பது >>> கைபத்து = இருப்பு இல்லாமை. |
கைபியத்து, KAIPIYATHTHU, கைபீது, KAIPEETHU |
விவரக் குறிப்பு, STATEMENT |
காழ்ப்பியற்று |
காழ்ப்பு (=சாரம்) + இயற்று (=எழுது) = காழ்ப்பியற்று >>> காய்ப்பியத்து >>> கைபியத்து >>> கைபீது = சாரமாக எழுதப்பட்டது = விவரக் குறிப்பு |
கைமா, KAIMAA |
பொடித்த தசை, MINCED MEAT |
கழிமா |
கழி (=மிகு, வெட்டு, தசை) + மா (=விலங்கு) = கழிமா >>> கயிமா >>> கைமா = மிகுதியாக வெட்டிய விலங்கின் தசை |
கையரியம், KAIYARIYAM |
இரும்பு, IRON |
காழரியம் |
காழ் (=கருமை, வலிமை) + அரி (=ஆயுதம், உண்டாக்கு) + இயம் = காழரியம் >>> கயரியம் >>> கையரியம் = கருப்பான வலுவான ஆயுதங்களை உண்டாக்குவது = இரும்பு. |
கைரவம், KAIRAVAM |
ஆம்பல், WATER LILLY |
காராவம் |
கார் (=இருள், அரும்பு, பூ) + ஆவி (=திற, மலர்) + அம் (=நீர்) = காராவம் >>> கைரவம் = இருளில் மலரும் நீர்ப்பூ |
கைராத்து, KAIRAATHTHU |
தருமம், CHARITY |
கையறாற்று |
கையறை (=வறுமை) + ஆற்று (=தணி) = கையறாற்று >>> கைராத்து = வறுமையைத் தணித்தல் |
கைராத்து, KAIRAATHTHU |
பயனின்மை, USELESSNESS |
கையறாற்று |
கையறு (=செயலறு) + ஆற்று (=உதவு) = கையறாற்று >>> கைராத்து = உதவி செயலறுதல் |
கைரிகம், KAIRIKAM |
காவிக்கல், RED OCHRE |
காரிகம் |
கருமை (=வலிமை, செம்மை) + இகு (=திரள்) + அம் (=கல்) = காரிகம் >>> கைரிகம் = சிவந்து திரண்ட வலுவான கல். |
கைரிகம், KAIRIKAM |
தங்கம், GOLD |
காரிகம் |
கார் (=அழகு) + இகு (=தா, கரை, உருகு) + அம் = காரிகம் >>> கைரிகம் = அழகைத் தரும் உருக்கு = தங்கம் |
கைலி, KAILI, கயிலி, KAYILI |
வண்ணக் கட்ட உடை, LUNGI |
காலி |
(2) கலை (=உடை, பிரிவு, கட்டம், நிறம்) + இ = காலி >>> கைலி = பல கட்டங்களைக் கொண்ட வண்ண உடை. |
கைவல்லியம், KAIVALLIYAM, கைவலம், KAIVALAM |
மோட்சம், FINAL BLISS |
கைமேலியம் |
கை (=இடம்) + மேல் + இயை (=அடை) + அம் = கைமேலியம் >>> கைவல்லியம் = மேலிடம் அடைதல் |
கொக்கி, KOKKI |
வளைந்தது, HOOK |
குங்கி |
குங்கு (=குன்று, வளை) + இ = குங்கி >>> கொக்கி = வளைவானது. |
கொக்கு, KOKKU |
செந்நாய், WILD DOG |
கொங்கூழ் |
கொங்கு (=தேன், தோல்) + ஊழ் (=நிறம், பகை, சூழ், அழி) = கொங்கூழ் = கொக்கு = பகையைச் சூழ்ந்து அழிக்கும் தேன்நிறத் தோலுடையது = செந்நாய். |
கொக்கு, KOKKU |
குதிரை, HORSE |
கொய்கூழை |
கொய் (=அறு) + கூழை (=பிடரிமயிர்) = கொய்கூழை >>> கொக்குயை >>> கொக்கு = அறுக்கப்படும் பிடரி மயிருடையது = குதிரை. |
கொங்காரம், KONKAARAM |
குங்குமம், SAFFRON |
கொங்காரம் |
கொங்கு (=பொடி) + ஆர் (=சிவப்பு) + அம் (=அழகு) = கொங்காரம் = அழகுக்கான சிவப்புப் பொடி. |
கொச்சு, KOCCU |
குஞ்சம், TASSEL |
குஞ்சம் |
குஞ்சம் + உ = குஞ்சு >>> கொச்சு |
கொச்சை, KOCCAI |
இழிவு, MEANNESS |
கூழை |
குழி (=தாழ், இழி) + ஐ = கூழை >>> கோசை >>> கொச்சை = தாழ்வு, இழிவு. |
கொச்சை, KOCCAI |
ஆடு, GOAT |
குழாய் |
குழை (=காது, அசை, தழை) + ஆய் (=உண்) = குழாய் >>> கொசாய் >>> கொச்சை = காதுகளை அசைத்துக் கொண்டே தழையை உண்பது = ஆடு |
கொஞ்சம், KONJAM |
சிறுமை, LITTLENESS |
குஞ்சம் |
குஞ்சு (=குட்டி, சிறுமை) + அம் = குஞ்சம் >>> கொஞ்சம் |
கொட்டகம், KOTTAKAM, கொட்டகை, KOTTAKAI |
மூடப்பட்ட இடம், SHED |
கொட்டகம் |
கோடு (=பக்கம், உச்சி) + அகை (=தடு, மறை) + அம் = கொட்டகம் = பக்கங்களிலும் உச்சியிலும் மறைப்புடையது. |
கொட்டகாரம், KOTTAKAARAM |
நெற்களஞ்சியம், GRANARY |
கொட்டகாரம் |
கொட்டகம் (=மூடிய அறை) + ஆர் (=உண், நிறை) + அம் = கொட்டகாரம் = உணவு நிறைக்கப்பட்டு மூடிய அறை. |
கொட்டடி, KOTTATI |
மூடப்பட்ட இடம், SHED |
கொட்டடி |
கோடு (=பக்கம், உச்சி) + அடை (=தடு, மறை) + இ = கொட்டடி = பக்கங்களிலும் உச்சியிலும் மறைப்புடையது. |
கொட்டணம், KOTTANHAM |
குத்துகை, POUNDING |
கொட்டணம் |
கொட்டு (=குத்து) + அணம் = கொட்டணம் = குத்துதல். |
கொட்டம், KOTTAM |
பசுத்தொழுவம், COW SHED |
குட்டம் |
கூடு (=தங்குமிடம்) + அம் (=பால், தெய்வம்) = குட்டம் >>> கொட்டம் = பாலுடைய தெய்வம் தங்குமிடம் |
கொட்டம், KOTTAM |
நறுமண வேர், COSTUS ROOT |
கொற்றேம் |
கோல் (=நரம்பு) + தேம் (=நறுமணம்) = கொற்றேம் >>> கொட்டம் = நறுமணம் கொண்ட நரம்பு. |
கொட்டாரம், KOTTAARAM |
தானிய அறை, GRANARY |
குட்டாரம், கொட்டாரம் |
(1) கூடம் (=வீடு, அறை) + ஆர் (=உண், நிறை) + அம் = குட்டாரம் >>> கொட்டாரம் = உணவு நிறைந்த அறை (2) கொட்டு (=குவி) + ஆர் (=உண், மிகு, இடம்) + அம் = கொட்டாரம் = மிகுதியான உணவைக் குவிக்கும் இடம் |
கொட்டாரம், KOTTAARAM |
தானியம் குத்துமிடம், GRAIN POUNDING PLACE |
கொட்டாரம் |
கொட்டு (=குத்து) + ஆர் (=உண், இடம்) + அம் = கொட்டாரம் = உணவைக் குத்துகின்ற இடம். |
கொட்டாரம், KOTTAARAM |
யானைக்கூடம், ELEPHANT STALL |
கொட்டாரம், குட்டாரம் |
(1) கோடு (=யானை) + ஆர் (=கட்டு, இடம்) + அம் = கொட்டாரம் = யானைகளைக் கட்டும் இடம். (2) கூடம் (=கொட்டில்) + ஆர் (=நிறை, பெரு) + அம் = குட்டாரம் >>> கொட்டாரம் = பெரிய கொட்டில் = யானைக்கூடம். |
கொட்டாரம், KOTTAARAM |
அரண்மனை, PALACE |
குட்டாரம் |
கூடம் (=வீடு) + ஆர் (=நிறை, பெரு) + அம் = குட்டாரம் >>> கொட்டாரம் = பெரிய வீடு = அரண்மனை. |
கொட்டாரம், KOTTAARAM |
கோட்டைக் கதவு, FORT GATE |
கொட்டாரம் |
கோட்டை + ஆரி (=கதவு) + அம் = கொட்டாரம் = கோட்டைக் கதவு |
கொட்டாவி, KOTTAAVI |
சோர்வு நெட்டுயிர்ப்பு, YAWN |
குன்றாவி |
குன்று (=தளர், சோர்) + ஆவி (=வாய்திற, வெளிப்படு, நெட்டுயிர்ப்பு) = குன்றாவி >>> குற்றாவி >>> கொட்டாவி = சோர்வினால் வாய்திறந்து வெளிப்படும் நெட்டுயிர்ப்பு. |
கொட்டி, KOTTI |
வாசல், GATE |
குட்டி |
குடை (=உட்புகு, துளை) + இ = குட்டி >>> கொட்டி = உட்புகுவதற்கான துளை = வாசல். |
கொட்டி, KOTTI |
கூட்டம், CROWD |
கூட்டம் |
கூட்டம் + இ = குட்டி >>> கொட்டி |
கொட்டியம், KOTTIYAM |
எருதுக் கூட்டம், PACK OF BULLS |
குண்டியம் |
குண்டை (=எருது) + இயை (=கூடு) + அம் = குண்டியம் >>> கொட்டியம் = எருதுக் கூட்டம் |
கொட்டில், KOTTIL |
பசுத்தொழுவம், COW SHED |
குட்டில் |
குடம் (=மாடு) + இல் (=வீடு) = குட்டில் >>> கொட்டில் = மாடுகளின் வீடு. |
கொட்டில், KOTTIL |
சிறுவீடு, HUT |
குட்டில் |
குட்டி (=சிறுமை) + இல் (=வீடு) = குட்டில் >>> கொட்டில் = சிறிய வீடு. |
கொட்டில், KOTTIL |
பெட்டிவீடு, SHED |
குட்டில் |
கூடு (=பெட்டி) + இல் (=வீடு) = குட்டில் >>> கொட்டில் = பெட்டி வீடு. |
கொட்டில், KOTTIL |
சண்டைப் பயிலகம், MARTIAL ARTS SCHOOL |
கொட்டில் |
கொட்டு (=தாக்கு, பார், அறி, பயில்) + இல் (=இடம்) = கொட்டில் = தாக்குவதைப் பார்த்துப் பயிலும் இடம். |
கொடாரி, KOTAARI |
கோடாலி, AXE |
கொடறி |
கோடு (=தண்டு, மரம்) + அறு (=வெட்டு) + இ = கொடறி >>> கொடாரி = மரத்தை வெட்டுவது. |
கொண்டை, KONTAI, கொட்டை, KOTTAI |
இலந்தை, JUJUBE |
கொட்டை |
கொட்டை (=உருண்டை, விதை, பழம்) >>> கொண்டை = உருண்டையான விதையையே பழமாகக் கொண்டது |
கொத்தவால், KOTHTHAVAAL |
அதிகாரி, COMMANDING OFFICER |
கொற்றவாள் |
கொற்றம் (=அதிகாரம்) + ஆள் = கொற்றவாள் >>> கொத்தவால் = அதிகாரஞ் செலுத்துபவன் |
கொத்தளம், KOTHTHALHAM |
கோட்டை மதிலுள் மேடை, BASTION |
கொற்றளம் |
கொல் (=அழி) + தளம் (=மேலிடம், மேடை, படை) = கொற்றளம் >>> கொத்தளம் = படையை அழிப்பதற்கான மேலிடத்து மேடை. |
கொத்தை, KOTHTHAI |
கழிவு, RUBBISH |
கோது |
கோது (=கழிவு) + ஐ = கொத்தை |
கொத்தை, KOTHTHAI |
அறியாமை, குருடன், IGNORANCE, BLINDMAN |
கொத்தை |
கோது (=வழிதவறுகை, அறியாமை, பார்வையின்மை) + ஐ = கொத்தை = அறியாமை, குருடன் |
கொத்தை, KOTHTHAI |
பாவி, SINNER |
கொத்தை |
கோது (=குற்றம்) + ஐ = கொத்தை = குற்றவாளி |
கொந்தம், KONTHAM |
மயிரொழுங்கு, FORM OF HAIR LOCK |
கொத்தம் |
கோதை (=மயிர், ஒழுங்கு) + அம் = கொத்தம் >>> கொந்தம் = மயிர் ஒழுங்கு |
கொந்தளம், KONTHALHAM |
கூந்தல், WOMEN’S HAIR LOCK |
கூந்தல் |
கூந்தல் + அம் = குந்தலம் >>> கொந்தளம் |
கொந்தாலி, KONTHAALI |
குந்தாலி, PICK AXE |
குந்தாலி |
குந்தாலி >>> கொந்தாலி |
கொப்பம், KOPPAM |
பள்ளம், PIT |
குழும்பு |
குழும்பு (=பள்ளம்) + அம் = குழும்பம் >>> குயுப்பம் >>> குப்ப்ம் >>> கொப்பம். |
கொப்பரம், KOPPARAM |
முழங்கை, ELBOW |
கூபரம் |
கூபரம் (=முழங்கை) >>> கொப்பரம் |
கொப்பரை, KOPPARAI |
பெரும்பாத்திரம், CAULDRON |
கொப்பாரை |
கோப்பை (=வட்டப் பாத்திரம்) + ஆர் (=நிறை, பெரு) + ஐ = கொப்பாரை >>> கொப்பரை = பெரிய வட்டப் பாத்திரம் |
கொப்பரை, KOPPARAI, கொப்பறா, KOPPARHAA |
அரைத்தேங்காய், COCONUT SEMI KERNEL |
கொப்பாரை |
கோப்பை + ஆர் (=ஒப்பு, உண்) + ஐ = கொப்பாரை >>> கொப்பரை = கோப்பையைப் போன்ற உணவு. |
கொம்மை, KOMMAI |
திரட்சி, ROUNDNESS, உருண்டை, SPHERE, வட்டம், CIRCLE |
குவ்வை |
குவி (=திரள்) + ஐ = குவ்வை >>> கொம்மை = திரட்சி, உருண்டை, வட்டம். |
கொரடா, KORATAA, கொறடா, KORHATAA |
சவுக்கு, WHIP |
குறடா |
குறடா (=சவுக்கு) >>> கொறடா >>> கொரடா |
கொலு, KOLU |
பொம்மை இருப்பு, CASCADE DECORATION OF IDOLS |
கொலு |
கோல் (=அழகு வேலைப்பாடு, வகைப்படுத்து, திரட்டு, சேர், அமை) + உ = கொலு = அழகிய வேலைப்பாடு கொண்டவற்றை வகைப்படுத்தியும் சேர்த்தும் அமைத்தல் |
கொலு, KOLU |
தியானம், MEDITATION |
கொலு |
கோல் (=தியானி) + உ = கொலு = தியானம் |
கொலுசு, KOLUCU |
சலங்கை, ANKLET |
கொலிசு |
கோல் (=தண்டு, கால், வளை, ஆடு) + இசை (=கட்டு, ஒப்பு, ஒலி) + உ = கொலிசு >>> கொலுசு = ஆடும்போது ஒத்து ஒலிக்குமாறு காலில் கட்டப்படுவது. |
கோ, KOA |
மலை, MOUNTAIN |
கொழு |
கொழி (=உயர், குவி) + உ = கொழு >>> கொயு >>> கோ = உயரமாகக் குவிந்தது = மலை. |
கோ, KOA |
அரசன், KING, தந்தை, FATHER |
கோழ் |
கோழ் (=செழிப்பு, மிகுதி, பெருமை) >>> கோ = பெருமை உடையவன் = பெரியோன் = அரசன், தந்தை. |
கோ, KOA |
குயவன், POTTER |
குழீ |
குழை (=சேறு, குழைமண்) + ஈ (=படை, உருவாக்கு) = குழீ >>> கொய் >>> கோ = குழைமண்ணில் படைப்பவன் |
கோ, KOA |
எருது, OX |
கொழீ |
கொழு (=நுகம்) + ஈ (=இழு) = கொழீ >>> கோய் >>> கோ = நுகத்தை இழுப்பது = எருது. |
கோ, KOA |
வயல், FIELD, பூமி, EARTH |
கொழீ, கூ |
(1) கொழு (=நுகம்) + ஈ (=வகு, கீறு) = கொழீ >>> கோய் >>> கோ = நுகத்தால் கீறப்படுவது = வயல், பூமி (2) கூ (=பூமி) >>> கோ. |
கோ, KOA |
நீர், WATER |
கோழீ |
கோழ் (=வளம், செழிப்பு) + ஈ (=தா) = கோழீ >>> கோய் >>> கோ = செழிப்பைத் தரும் வளம் = நீர். |
கோ, KOA |
சாறு, SAP |
கொழீ |
கொழி (=பிரி, வடிகட்டு) + ஈ (=உண்) = கொழீ >>> கோய் >>> கோ = வடிகட்டிய உணவு = சாறு. |
கோ, KOA |
ஆகாயம், HEAVEN |
குழை |
குழை (=ஆகாயம்) >>> கொயை >>> கோ |
கோ, KOA |
அம்பு, ARROW |
கொழீ |
கொழு (=கூரிய தண்டு) + ஈ (=இழு, செலுத்து) = கொழீ >>> கோ = செலுத்தப்படும் கூரிய தண்டு = அம்பு |
கோ, KOA |
ஒளிக்கீற்று, LIGHT RAY, ஒளி, LIGHT |
கொழீ |
கொழி (=ஒளிர்) + ஈ (=இழு, நீளு) >>> கொழீ >>> கோய் >>> கோ = நீண்டு ஒளிர்வது = ஒளிக்கீற்று, ஒளி |
கோ, KOA |
கண், EYE |
கொழீ |
கொழி (=ஒளிர்) + ஈ (=இழு, ஈர்) = கொழீ >>> கோய் >>> கோ = ஒளியை ஈர்ப்பது = கண். |
கோ, KOA |
சொல், WORD |
கொழி |
கொழி (=பேசு) >>> கோய் >>> கோ = பேச்சு, சொல் |
கோ, KOA |
மின்னல், LIGHTNING |
கொழீ |
கொழி (=ஒளிர்) + ஈ (=வகு, பிள) = கொழீ >>> கோய் >>> கோ = பிளக்கும் ஒளி = மின்னல். |
கோ, KOA |
திசை, DIRECTION |
கொய் |
கொய் (=தேர்ந்தெடு, சுட்டு) >>> கோ = சுட்டுவது = திசை |
கோ, KOA |
பசு, COW |
குயீ |
குயம் (=முலை, புல்) + ஈ (=தா, உண்) = குயீ >>> கொய் >>> கோ = முலையுணவு தரும் புல் உண்ணி. |
கோ, KOA |
இலந்தை, JUJUBE |
கவூழ் |
காவி (=சிவப்பு, உருண்டை) + ஊழ் (=பழு, வலிமை) = கவூழ் >>> கௌ >>> கோ = வலுவான உருண்டையான சிவப்பான பழம் = இலந்தை. |
கோகடம், KOAKATAM |
முயல், HARE |
குங்கெட்டம் |
குங்கு (=குன்று, சிறிதாகு) + எட்டு (=தாவு) + அம் (=அழகு, வெண்மை, விலங்கு) = குங்கெட்டம் >>> கோகடம் = சிறிதாகத் தாவும் அழகிய வெண்ணிற விலங்கு. |
கோகத்தி, KOAKATHTHI |
பசுக்கொலை, COW KILLING |
கோகாற்றி |
கோ (=பசு) + காற்று (=அழி, கொல்) + இ = கோகாற்றி >>> கோகத்தி = பசுக்கொலை |
கோகம், KOAKAM |
செந்நாய், WILD DOG |
கொக்கு |
கொக்கு (=செந்நாய்) + அம் = கோக்கம் >>> கோகம் |
கோகம், KOAKAM |
தவளை, FROG |
குங்கம் |
குங்கு (=குன்று, மறை) + அம் (=நீர், ஒலி) = குங்கம் >>> கொக்கம் >>> கோகம் = நீரில் மறைந்திருந்து ஒலிப்பது |
கோகயம், KOAKAYAM |
தாமரை, LOTUS |
கோகயம் |
கோகம் (=பூ) + அயம் (=சேறு) = கோகயம் = சேற்றில் பூப்பது = தாமரை. |
கோகர்ணம், KOAKARNHAM |
கைப்பிடி கொண்ட நீர்ப் பாத்திரம், WATER VESSEL WITH HANDLE |
கோய்கரணம், கோகாராணம் |
(1) கோய் (=பாத்திரம்) + கரம் (=கை) + அணை (=பிடி) + அம் (=நீர்) = கோய்கரணம் >>> கோகர்ணம் = கைப்பிடி உடைய நீர்ப் பாத்திரம். (2) கோகு (=புயம், கை) + ஆர் (=பொருத்து, பிடி) + ஆணம் (=பாத்திரம்) = கோகாராணம் >>> கோகர்ணம் = கைப்பிடி உள்ள பாத்திரம் |
கோகனதம், KOAKANATHAM |
செந்தாமரை, RED LOTUS |
கோகணத்தம் |
கோகம் (=பூ) + அணை (=தோன்று) + அத்து (=சிவப்பு) + அம் (=நீர்) = கோகணத்தம் >>> கோகனதம் = நீரில் தோன்றும் சிவப்பு மலர் = தாமரை. |
கோகனகம், KOAKANAKAM |
செந்தாமரை, RED LOTUS |
கோகணகம் |
கோகம் (=பூ) + அணை (=தோன்று) + அகை (=எரி) + அம் (=நீர், ஒப்பு) = கோகணகம் >>> கோகனகம் = நீரில் எரிவதைப் போலத் தோன்றும் பூ = தாமரை. |
கோகிதம், KOAKITHAM |
குதிகால், HEEL |
கொழுகுதம் |
கொழு (=தண்டு, கால்) + குதி + அம் = கொழுகுதம் >>> கொயுகிதம் >>> கோகிதம் = குதிகால் |
கோகிலம், KOAKILAM, கோகுலம், KOAKULAM |
குயில், CUCKOO |
கோக்கிலம் |
கொக்கு (=மாமரம்) + இல் (=வீடு) + அம் (=இனிமை, ஒலி, பறவை) = கோக்கிலம் >>> கோகிலம் = மாமரத்தை வீடாகக் கொண்ட இனிதாக ஒலிக்கும் பறவை |
கோகிலம், KOAKILAM |
பல்லி, LIZARD |
குங்கிலம் |
குங்கு (=குன்று, மறை) + இல் (=வீடு) + அம் (=அழைப்பு, ஒலி, ஒப்பு) = குங்கிலம் >>> கோகிலம் = வீட்டுக்குள் மறைந்திருந்து அழைப்பதைப் போல ஒலிப்பது |
கோகிலம், KOAKILAM, கோகுலம், KOAKULAM |
குரங்கு, MONKEY |
கொய்கிளம் |
கொய் (=பறி) + கிளை (=மரக்கிளை, கூட்டம்) + அம் (=உண், விலங்கு) = கொய்கிளம் >>> கோகிலம் = மரக்கிளைகளில் பறித்து உண்ணும் விலங்குக் கூட்டம் |
கோகு, KOAKU |
தோள், SHOULDER |
கோகு |
கோ (=பொருந்து) + கை (=உறுப்பு, இடம்) + உ = கோகு = கை பொருந்தியுள்ள இடம் = தோள். |
கோகு, KOAKU |
கபடம், FRAUD |
கோகூழ் |
கோ (=புனைந்துகூறு) + கூழ் (=கெடு) = கோகூழ் >>> கோகு = புனைந்து கூறிக் கெடுத்தல்.. |
கோகு, KOAKU |
ஒழுங்கின்மை, |
கோகூழ் |
கோ (=ஒழுங்குசெய்) + கூழ் (=கெடு, அழி) = கோகூழ் >>> கோகு = ஒழுங்கின்மை. |
கோகு, KOAKU |
கழுதை, DONKEY |
கொழிகிழி |
கொழி (=சும) + கிழி (=முடிச்சு, மூட்டை) = கொழிகிழி >>> கோகீ >>> கோகு = மூட்டை சுமப்பது = கழுதை. |
கோசகாரம், KOACAKAARAM |
பட்டுப்புழு, SILK WORM |
கொச்சகாரம் |
கொச்சம் (=கயிறு, இழை) + அகம் (=வீடு, உள்) + ஆர் (=கட்டு, தங்கு) + அம் (=அழகு, வெண்மை) = கொச்சகாரம் >>> கோசகாரம் = வெண்ணிற இழைகளால் வீடு கட்டி உள்ளே தங்குவது = பட்டுப்புழு. |
கோசங்கம், KOACANKAM |
வைகறை, DAWN |
கோசங்கம் |
கோசம் (=தோற்றம்) + கம் (=வானம், வெண்மை) = கோசங்கம் = வானத்தில் வெண்மை தோன்றுதல். |
கோசணை, KOCANHAI, கோசனை, KOACANAI |
கூட்டத்தின் ஒலி, TUMULT |
கோசணை |
கோசம் (=திரட்சி, கூட்டம்) + அணி (=சொல்) + ஐ = கோசணை = கூட்டமாகச் சொல்லுதல். |
கோசம், KOACAM |
முட்டை, EGG, கருப்பை, WOMB |
குஞ்சம் |
குஞ்சு (=குட்டி) + அம் (=பொருந்து, தங்கு) = குஞ்சம் >>> கொச்சம் >>> கோசம் = குட்டி தங்குவது. |
கோசம், KOACAM |
குவியல், HEAP |
கோழம் |
கொழி (=செழி, மிகு, குவி) + அம் = கோழம் >>> கோசம் = செழிப்பு, மிகுதி, குவியல், கூட்டம் |
கோசம், KOACAM |
கூட்டத்தின் ஒலி, TUMULT |
கோழம் |
கொழி (=ஒலி, செழி, மிகு, கூடு) + அம் = கோழம் >>> கோசம் = கூடி ஒலித்தல். |
கோசம், KOACAM |
கொத்தளம், BASTION |
கோழம் |
கொழி (=செலுத்து, உயர்) + அம் (=போர், அம்பு) = கோழம் >>> கோசம் = போரில் அம்பு செலுத்துவதற்கான உயரமான இடம் = கொத்தளம் |
கோசம், KOACAM |
உறை, SHEATH |
கவிழம் |
கவிழ் (=மூடு) + அம் (=நீளம்) = கவிழம் >>> கவுசம் >>> கௌசம் >>> கோசம் = மூடுகின்ற நீண்ட பொருள் |
கோசம், KOACAM |
செல்வம், TREASURE |
கூழ் |
கூழ் (=தங்கம், செல்வம்) + அம் = கூழம் >>> கோசம் |
கோசம், KOACAM |
அகராதி, DICTIONARY, நூல், TREATISE |
கூழம் |
குழை (=திரட்டு) + அம் (=சொல்) = கூழம் >>> கோசம் = சொற்களின் திரட்டு = அகராதி, நூல். |
கோசம், KOACAM |
ஆண் குறி, MALE GENITAL ORGAN |
கூழம் |
குழி (=பெண்குறி) + அம் (=பொருந்து) = கூழம் >>> கோசம் = பெண்குறியில் பொருந்துவது = ஆண்குறி |
கோசம், KOACAM |
தெரு, STREET |
கூழம் |
குழை (=ஓட்டை, வழி) + அம் (=நீளம்) = கூழம் >>> கோசம் = நீண்ட வழி = தெரு, சாலை. |
கோசரம், KOACARAM |
அறிவு, KNOWLEDGE |
கோழாரம் |
கொழி (=ஆராய்) + ஆர் (=பெறு) + அம் = கோழாரம் >>> கோசரம் = ஆராய்ந்து பெறுவது = அறிவு. |
கோசரம், KOACARAM |
ஊர், TOWN |
கோழாரம் |
கொழி (=மிகு, கூடு) + ஆர் (=தங்கு, இடம்) + அம் = கோழாரம் >>> கோசரம் = கூட்டமாகத் தங்கும் இடம். |
கோசரம், KOACARAM |
கிரகங்களின் இருப்பு,, MOMENTARY POSITION OF PLANETS |
கூழாரம் |
குழை (=ஆகாயம், குண்டலம்) + ஆர் (=தங்கு, இடம்) + அம் (=கணம், பொழுது) = கூழாரம் >>> கோசரம் = ஆகாயத்தின் குண்டலங்கள் கணப்போது தங்கும் இடம். |
கோசரம், KOACARAM |
கிளை, LINEAGE |
கோசாரம் |
கோசம் (=குவியல், கூட்டம்) + ஆர் (=பொருந்து) + அம் = கோசாரம் >>> கோசரம் = பொருத்தமுடைய கூட்டம் |
கோசரம், KOACARAM |
பூந்தாது, POLLEN |
கோழெரம் |
கொழி (=பொழி, சொரி) + எரு (=பொடி) + அம் (=தேன்) = கோழெரம் >>> கோசரம் = தேனைச் சொரியும் பொடி. |
செயந்தி, JEYANTHI, சயந்தி, JAYANTHI |
பிறந்தநாள் விழா, BIRTHDAY CELEBRATION OF DEITIES / LEADERS |
எழேற்றி |
எழு (=உயர், தோன்று, பிற) + ஏற்று (=நினை, சிறப்பி) + இ = எழேற்றி >>> செயேத்தி >>> செயந்தி >>> சயந்தி = உயர்ந்தோர் பிறப்பினை நினைவுகூர்ந்து சிறப்பித்தல். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.