செவ்வாய், 16 நவம்பர், 2021

93. (கோசா > கோமளம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச்சொல்

தோன்றும் முறை

கோசா, KOACAA

அலி, HERMOPHRODITE

கூழாய்

கூழ் (=சந்தேகி, தடுமாறு) + ஆய் (=பிரி) = கூழாய் >>> கோசா = தடுமாற்றம் உடைய பிரிவு = அலி.

கோசாங்கம், KOACAANKAM

நாணல், REED

கூச்சக்கம்

குச்சு (=புல்) + அகை (=உயர்) + அம் = கூச்சக்கம் >>> கோசாங்கம் = உயரமான புல் = நாணல்.

கோசிகம், KOACIKAM, கோசிகை, KOACIKAI

பட்டுடை, SILK CLOTH

கோசேய்கம்

கோ (=உடுத்து) + சேய் (=இளமை, மென்மை) + கம் (=வெண்மை) = கோசேய்கம் >>> கோசிகம் = மென்மையான வெண்ணிற உடை = பட்டு உடை.

கோசிகம், KOACIKAM

ஆந்தை, OWL

கூசுகம்

(2) கூசு (=அஞ்சு) + உகு (=பற, அழி) + அம் (=ஒலி, ஒளி, பொழுது) = கூசுகம் >>> கோசிகம் = ஒளி அழிந்த பொழுதில் அஞ்சுமாறு ஒலிக்கும் பறவை = ஆந்தை

கோசி, KOACI, கோசு, KOACU

கூப்பிடு தூரம், CALLING DISTANCE

கூசேய்

கூ (=அழை) + சேய் (=தூரம்) = கூசேய் >>> கோசி >>> கோசு = அழைக்கும் தூரம்

கோசு, KOACU

தெரு, STREET

கூழுய்

குழை (=ஓட்டை, வழி) + உய் (=செல்) = கூழுய் >>> கோசு = செல்லும் வழி = தெரு

கோசு, KOACU

கயிறு, COIR

கொச்சம்

கொச்சம் (=கயிறு) + உ = கொச்சு >>> கோசு

கோசு, KOACU

தடவை,

கோசூழ்

கோ (=சொல்) + சூழ் (=சுற்று, கருது, எண்ணு) = கோசூழ் >>> கோசு = சுற்றைச் சொல்லும் எண்ணிக்கை.

கோசு, KOACU

தோல்வி, DEFEAT

கூசு

கூசு (=நிலைகுலை, அஞ்சிப் பின்வாங்கு) >>> கோசு = நிலைகுலைந்து அஞ்சிப் பின்வாங்குதல் = தோல்வி

கோசு, KOACU

வேலை, WORK

கூழூ

குழை (=வருத்து, வளை) + ஊ (=தசை, உடல்) = கூழூ >>> கோசு = உடலை வருத்தி வளைத்தல் = வேலை

கோசு, KOACU

முட்டைக்கோசு, CABBAGE

கூழு

குழை (=தளிர், இலை, உருண்டை) + உ = கூழு >>> கோசு = இலை உருண்டை.

கோசு, KOACU

தாழ்வு, LOWNESS

கூசு

கூசு (=நாணு, தாழ்) >>> கோசு = தாழ்வு

கோட்டம், KOATTAM

அறை, ROOM

கூற்றம்

கூற்றம் (=பகுதி, அறை) >>> கோட்டம்

கோட்டம், KOATTAM

கோயில், TEMPLE

கூற்றம்

குறி (=தியானி, குறித்த இடம்) + அம் (=கடவுள், கும்பிடு) = கூற்றம் >>> கோட்டம் = கடவுளைத் தியானித்துக் கும்பிடுவதற்காக குறித்த இடம் = கோயில்.

கோட்டம், KOATTAM

பாசறை, CAMP

குன்றம்

குன்று (=சிறிதாகு) + அம் (=பொருந்து, தங்கு, காலம், வளைவு) = குன்றம் >>> கூட்டம் >>> கோட்டம் = சிறிது காலம் தங்குவதற்காக வளைக்கப்பட்டது.

கோட்டம், KOATTAM

சிறை, PRISON

கூற்றம்

குறை (=குற்றம், அடக்கு, அடை) + அம் = கூற்றம் >>> கோட்டம் = குற்றத்திற்காக அடைக்கப்படும் இடம்.

கோட்டம், KOATTAM

இடம், PLACE

குறி

குறி (=இடம்) + அம் = கூற்றம் >>> கோட்டம்

கோட்டம், KOATTAM

பசுக்கொட்டில், COW SHED

கூட்டம்

குடம் (=பசு) + அம் (=பொருந்து, தங்கு, இடம்) = கூட்டம் >>> கோட்டம் = பசுக்கள் தங்குமிடம்.

கோட்டம், KOATTAM

பசுக்கூட்டம், COW HERD

கூட்டம்

குடம் (=பசு) + அம் (=பொருந்து, கூடு) = கூட்டம் >>> கோட்டம் = பசுக்கூட்டம்

கோட்டா, KOATTAA, கோடா, KOATAA

கேலி, MOCKERY

கொட்டாய்

கொட்டு (=சொல்லு, கைதட்டு) + ஆய் (=சிறுமை, கொண்டாடு, சிரி) = கொட்டாய் >>> கோட்டா = சிறுமை சொல்லிக் கைதட்டிச் சிரித்தல் = நையாண்டி.

கோட்டி, KOATTI

சபை, ASSEMBLY

கோட்டி

கோட்டம் (=கூட்டம், இடம்) + இ = கோட்டி = கூடுமிடம்

கோட்டி, KOATTI

கூட்டம், CROWD

கூட்டம்

கோட்டம் (=கூட்டம்) + இ = கோட்டி

கோட்டி, KOATTI

பேச்சு, SPEECH

கூற்று

கூற்று (=பேச்சு) + இ = கூற்றி >>> கோட்டி

கோட்டி, KOATTI

சேர்க்கை, ASSOCIATION

கூட்டி

கூடு (=சேர்) + இ = கூட்டி >>> கோட்டி = சேர்க்கை

கோட்டி, KOATTI

வாசல், ENTRANCE GATE

கோட்டுய்

கோட்டம் (=வீடு, கோயில்) + உய் (=செல்) = கோட்டுய் >>> கோட்டி = வீடு / கோவிலுக்குள் செல்வதற்கானது.

கோட்டை, KOATTAI

மதிலரண், FORT

கோற்றை

கோல் (=அரசாட்சி, வளை) + தை (=கட்டு) = கோற்றை >>> கோட்டை = அரசாட்சிக்காக வளைத்துக் கட்டியது

கோட்டை, KOATTAI

இஞ்சி, GINGER

கோட்டழி

கோடு (=கிளைத்த தண்டு) + அழி (=உண், மிகு, எரி) = கோட்டழி >>> கோட்டயி >>> கோட்டை = மிகுதியான எரிச்சலுடைய கிளைத்த தண்டுணவு.

கோட்டை, KOATTAI

காடு, JUNGLE

கோட்டை

கோடு (=தண்டு, மரம், குலை, கூட்டம்) + ஐ = கோட்டை = மரங்களின் கூட்டம் = காடு.

கோட்டை, KOATTAI

வட்டம், CIRCLE

கோட்டை

கோடு (=வளை) + ஐ = கோட்டை = வளைவு, வட்டம்

கோட்டை, KOATTAI

உள்ளிடம்,

கோட்டை

கோடு (=வகுத்த இடம்) + ஐ = கோட்டை = உள்ளிடம்

கோடகம், KOATAKAM

கிரீடம், CROWN

கோடாக்கம்

கோடு (=உச்சி, தலை, வட்டம்) + ஆக்கம் (=தங்கம், அமைப்பு) = கோடாக்கம் >>> கோடகம் = தலையில் அமைக்கப்படும் தங்கத்தாலான வட்டம்.

கோடகம், KOATAKAM

தெருச்சந்தி, STREET JUNCTION

கூடேகம்

கூடு (=சந்தி) + ஏகம் (=தெரு) = கூடேகம் >>> கோடகம் = தெருக்கள் சந்திக்கும் இடம்.

கோடகம், KOATAKAM

நீர்ப்பானை, WATER POT

கூடாக்கம்

கூடு (=குவி, உறை, பாத்திரம்) + ஆக்கம் (=நீர்) = கூடாக்கம் >>> கோடகம் = குவிந்த நீர்ப் பாத்திரம்.

கோடகம், KOATAKAM

குதிரை, HORSE

கோடகம்

(1) கோடு (=வளைவு, வட்டம்) + அகை (=செலுத்து) + அம் (=விலங்கு) = கோடகம் = வட்டப்பாதையில் செலுத்தப்படும் விலங்கு. (2) கோடு (=மயிர்) + அகை (=அறு) + அம் (=நீளம், விலங்கு) = கோடகம் = அறுக்கப்படும் நீண்ட மயிருடைய விலங்கு = குதிரை

கோடணை, KOATANHAI

பேரொலி, TUMULT

கூடணை

கூடு (=மிகு) + அணி (=சொல், ஒலி) + ஐ = கூடணை >>> கோடணை = மிகுதியான ஒலி.

கோடணை, KOATANHAI

யாழ் வாசிப்பு, PLAYING LUTE

கோட்டண்ணை

கோட்டம் (=யாழ்) + அண்ணி (=தித்திக்கச்செய்) + ஐ = கோட்டண்ணை >>> கோடணை = யாழினைத் தித்திக்கச் செய்தல் = யாழ் வாசிப்பு.

கோடணை, KOATANHAI

இசைக்கருவி, MUSICAL INSTRUMENT

கோட்டணை

கொட்டு (=ஒலி, வாத்தியம்) + அணை (=உண்டாக்கு) = கோட்டணை >>> கோடணை = ஒலி உண்டாக்கும் வாத்தியம் = இசைக்கருவி.

கோடணை, KOATANHAI

அலங்காரம், DECORATION

கூட்டணை

கூட்டு (=பெருக்கு) + அணி (=அழகு) + ஐ = கூட்டணை >>> கோடணை = அழகைப் பெருக்குதல்

கோடதகம், KOATATHAKAM

சுக்கு, DRIED GINGER

கோட்டைதாகம்

கோட்டை (=இஞ்சி) + தாகம் (=நீர்வறட்சி) = கோட்டைதாகம் >>> கோடதகம் = நீர்வறண்ட இஞ்சி

கோடம், KOATAM

பேரொலி, TUMULT

கூடம்

கூடு (=மிகு) + அம் (=ஒலி) = கூடம் >>> கோடம் = மிகுதியான ஒலி.

கோடம், KOATAM, கோடி, KOATI

எல்லை, BRIM

கோடு

கோடு (=கரை, எல்லை) + அம் = கோடம்

கோடரம், KOATARAM

மரப்பொந்து, HOLLOW OF A TREET

கோடறம்

கோடு (=கிளை, மரம்) + அறை (=பொந்து) + அம் = கோடறம் >>> கோடரம் = மரப்பொந்து

கோடரம், KOATARAM

குதிரை, HORSE

கோடறம்

கோடு (=மயிர்) + அறு + அம் (=நீளம், விலங்கு) = கோடறம் >>> கோடரம் = அறுக்கப்படும் நீண்ட மயிருடைய விலங்கு = குதிரை

கோடரி, KOATARI, கோடாரி, KOATAARI

மரம் வெட்டுவது, WOOD CUTTING AXE

கோடரி

கோடு (=கிளை, மரம்) + அரி (=வெட்டு) = கோடரி = மரத்தை வெட்டுவது.

கோடவதி, KOATAVATHI

வீணை, VEENA

குடாவதி

குடம் + ஆவம் (=நரம்பு) + தை (=கட்டு) + இ = குடாவதி >>> கோடவதி = நரம்புகள் கட்டப்பட்ட குடங்களைக் கொண்டது = வீணை.

கோடா, KOATAA, கோடை, KOATAI

குதிரை, HORSE

கோடாய்

கோடு (=மயிர்) + ஆய் (=நீக்கு, அறு) = கோடாய் >>> கோடை >>> கோடா = அறுக்கப்படும் மயிருடையது

கோடாலி, KOATAALI

மரம் வெட்டுவது, WOOD CUTTING AXE

கூறளி

குறை (=வெட்டு) + அள் (=தண்டு, மரம், கூர்மை) + இ = கூறளி >>> கோடாலி = மரம் வெட்டும் கூர்ம்பொருள்

கோடி, KOATI

மிகுதி, LARGENESS

கூடி

கூடு (=மிகு) + இ = கூடி >>> கோடி = மிகுதி

கோடி, KOATI

கூட்டம், MULTITUDE

கூட்டம்

கூட்டம் + இ = கூட்டி >>> கோடி = கூட்டம்

கோடி, KOATI

போர்ப்படை, ARMY

கூட்டீ

கூட்டம் + ஈ (=அழிவு) = கூட்டீ >>> கோடி = அழிக்கும் கூட்டம் = போர்ப்படை.

கோடி, KOATI

வரிசை, ROW

கோடு

கோடு (=வரிசை) + இ = கோடி

கோடி, KOATI

நுனி, TIP

கோடு

கோடு (=உச்சி, நுனி) + இ = கோடி

கோடி, KOATI

மூலை, CORNER

கூடீ

கூடு (=வீடு, ஒன்றுசேர், குவி) + ஈ (=உண்டாகு, வகு, பிரி) = கூடீ >>>  கோடி = வீட்டின் பிரிவுகள் ஒன்றுசேர்வதால் உண்டாகும் குவியம் = மூலை..

கோடி, KOATI

குறிப்பு, HINT

குறி

குறி >>> கொடி >>> கோடி = குறிப்பு

கோடிகம், KOATIKAM

பூக்கூடை, FLOWER BASKET

கூடிகம்

கூடை + இகம் (=பூ) = கூடிகம் >>> கோடிகம் = பூக்கூடை

கோடிகம், KOATIKAM

நீர்ப்பானை, WATER POT

குண்டிகை

குண்டிகை + அம் = குண்டிகம் >>> கோடிகம்

கோடிகம், KOATIKAM

அணிகலச் செப்பு, CASKET FOR JEWELS

கூடீகம்

கூடு (=கலம்) + ஈகை (=தங்கம்) + அம் = கூடீகம் >>> கோடிகம் = தங்கத்திற்கான கலம்.

கோடிகம், KOATIKAM

ஆடை, GARMENT

கூறிகம்

குறை (=ஒடுக்கு, மறை) + இகம் (=உடல்) = கூறிகம் >>> கோடிகம் = உடலை மறைப்பது = ஆடை.

கோடிகம், KOATIKAM

கீழாடை, LOWER GARMENT

கோடிகம்

கோடி (=உடை) + இகு (=தாழ்) + அம் = கோடிகம் = தாழ்வாக உடுத்துவது = கீழாடை

கோடிகர், KOATIKAR

நெசவாளி, WEAVER

கோடிகர்

கோடி (=உடை) + இகு (=கொடு) + அர் = கோடிகர் = உடைகளைக் கொடுப்பவர்.

கோடீரம், KOATEERAM

கிரீடம், CROWN

கோடுரம்

கோடு (=உச்சி, தலை, வட்டம்) + உரை (=தங்கம்) + அம் (=பொருத்து) = கோடுரம் >>> கோடீரம் = தலையில் பொருத்தப்படும் வட்டவடிவத் தங்கம்.

கோடீரம், KOATEERAM

சடைமுடி, LONG MATTED HAIR

கோடீரம்

கோடு (=திரட்சி, மயிர்) + ஈர் (=இழு, நீள்) + அம் = கோடீரம் = நீண்டு திரண்ட மயிர் = சடை.முடி

கோண், KOANH, கோணு, KOANHU

நுண்மை, MINUTENESS

குன்று

குன்று (=சிறு) >>> குன்னு >>> கோணு >>> கோண் = சிறுமை, நுண்மை

கோண், KOANH, கோணம், KOANHAM

மூக்கு, NOSE

குழணம்

குழை (=துளை, குழாய்) + அணி (=முகம்) + அம் (=பொருந்து) = குழணம் >>> கொயணம் >>> கோணம் = முகத்தில் பொருந்திய துளையுடைய குழாய்.

கோண்டை, KOANTAI

இலந்தை, JUJUBE

கொட்டை

கொட்டை (=இலந்தை) >>> கோண்டை

கோணம், KOANHAM

முக்கு, மூலை, CORNER

கோணம்

கோணு (=வளை, திரும்பு) + அம் (=இடம்) = கோணம் = வளையும் / திரும்பும் இடம்

கோணம், KOANHAM

மிக தூரமான இடம், VERY REMOTE PLACE

கொன்னம்

கொன் (=பெருமை, மிகுதி) + அம் (=நீளம், தூரம், இடம்) = கொன்னம் >>> கோணம் = மிக தூரமான இடம்.

கோணம், KOANHAM

ஒதுக்கிடம், மறைவிடம், OBSCURE PLACE

கோணம்

கோணு (=விலகு, ஒதுங்கு) + அம் (=இடம்) = கோணம் = ஒதுங்கும் இடம்.

கோணம், KOANHAM

தோட்டம், ESTATE

கோட்டம்

கோட்டம் (=தோட்டம்) >>> கோண்ணம் >>> கோணம்

கோணம், KOANHAM

குதிரை, HORSE

கொயிணம்

கொய் (=அறு) + இணை (=மயிர்) + அம் = கொயிணம் >>> கோணம் = அறுக்கப்படும் மயிருடையது

கோணி, KOANHI, கோணிகை, KOANHIKAI

சாக்கு, GUNNY BAG

கொன்னிழை

கொன் (=வலிமை, பெருமை) + இழை (=சேகரி, நூல், உடை, பின்னு) = கொன்னிழை >>> கோணி = சேகரிப்பதற்காக வலுவான நூல்களால் பெரிதாகப் பின்னப்பட்ட உடை. = சாக்குப்பை

கோணி, KOANHI

பன்றி, HOG

கோணீ

கோள் (=உணவு, பூமி) + நீ (=பிரி, கீறு) = கோணீ >>> கோணி = உணவுக்காக பூமியைக் கீறுவது = பன்றி

கோணை, KOANHAI

அழிவின்மை, IMPERISHABILITY

குன்றாய்

குன்று (=அழி) + ஆய் (=நீங்கு, இல்லாகு) = குன்றாய் >>> கொன்னாய் >>> கோணை = அழிவின்மை

கோத்தணிகை, KOATHTHANHIKAI, கோத்தணி, KOATHTHANHI

கொடிமுந்திரி, GRAPES

கோத்தணிகை

கொத்து (=குலை, உணவு) + அணி (=இனிமை) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = கோத்தணிகை = தாழ்ந்து தொங்கும் இனிப்பான கொத்து உணவு.

கோத்திரம், KOATHTHIRAM

கூட்டப் பிரிவு, LINEAGE

கொத்தீரம்

கொத்து (=குலை, கூட்டம்) + ஈர் (=அறு, பிரி) + அம் = கொத்தீரம் >>> கோத்திரம் = கூட்டப் பிரிவு

கோத்திரம், KOATHTHIRAM, கோத்திரி, KOATHTHIRI

மலை, HILL

கோத்திறம்

கொத்து (=குலை, திரட்சி) + இறை (=உயரம், நிலம்) + அம் (=நீளம்) = கோத்திறம் >>> கோத்திரம் = நீண்டு உயர்ந்து திரண்ட நிலம் = மலை

கோத்திரம், KOATHTHIRAM, கோத்திரை, KOATHTHIRAI

பூமி, EARTH

கோத்திரம்

கொத்து (=தோண்டு, உருண்டை) + இருமை (=பெருமை) + அம் = கோத்திரம் = தோண்டப்படுகின்ற பெரிய உருண்டை = பூமி.

கோத்திரிகை, KOATHTHIRIKAI, கோத்திரி, KOATHTHIRI

கொடிமுந்திரி, GRAPES

கொத்தீரிகை

கொத்து (=குலை, உணவு) + ஈர் (=இனிமை) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = கொத்தீரிகை >>> கோத்திரிகை = தாழ்ந்து தொங்கும் இனிப்பான கொத்து உணவு.

கோத்தை, KOATHTHAI

பழுது, DEFECT

குற்றம்

குற்றம் (=பழுது) + ஐ = கூற்றை >>> கோத்தை.

கோதண்டம், KOATHANTAM

வில், BOW

கோற்றண்டம்

கோல் (=வளை, தொடங்கு, தொடு) + தண்டு + அம் (=அம்பு) = கோற்றண்டம் >>> கோத்தண்டம் >>> கோதண்டம் = அம்பு தொடுப்பதற்கான வளைந்த தண்டு

கோதண்டம், KOATHANTAM

புருவமத்தி, MIDDLE OF EYE BROWS

கோதட்டம்

கோதி (=நெற்றி) + அடை (=சேர், வழி) + அம் (=கடவுள்) = கோதட்டம் >>> கோதண்டம் = கடவுளைச் சேர்வதற்கான நெற்றியில் உள்ள வழி புருவமத்தி.

கோதம், KOATHAM

குற்றம், CRIME

குற்றம்

குற்றம் >>> குத்தம் >>> கோதம்

கோதம், KOATHAM

சினம், ANGER

கோதம்

கொதி (=சின) + அம் = கோதம் = சினம்

கோதம், KOATHAM

கூட்டம், LINEAGE

கொத்து

கொத்து (=கூட்டம்) + அம் = கொத்தம் >>> கோதம்

கோதம், KOATHAM

மலை, MOUNTAIN

கொத்தம்

கொத்து (=குதி, உயர், திரட்சி, இடம், நிலம்) + அம் (=நீளம்) = கொத்தம் >>> கோதம் = நீண்டு உயர்ந்து திரண்ட நிலம் = மலை.

கோதன்னம், கோதனம், KOATHANNAM, KOATHANAM

பசுக்கன்று, CALF

கோதன்னம்

கோ (=பசு) + தன்னம் (=சிறுமை, கன்று) = கோதன்னம் >>> கோதனம் = பசுக்கன்று

கோதா, KOATHAA, கோதை, KOATHAI

உடும்பு, MONITOR LIZARD

காப்புதா

காப்பு (=சுவர்) + தா (=வலிமை, கைப்பற்று) = காப்புதா >>> கவ்வுதா >>> கௌதா >>> கோதா = சுவரை வலுவாகப் பற்றுவது = உடும்பு.

கோதா, KOATHAA

மற்களம், WRESTLING GROUND

கோதா

கோ (=கைபிணி, எதிர், பூமி, இடம்) + தா (=வலிமை) = கோதா = கைபிணித்தவாறு வலிமையால் எதிர்க்கின்ற இடம் = மல்லுக் கட்டும் களம்.

கோதிகை, KOATHIKAI

உடும்பு, MONITOR LIZARD

காப்புதூகை

காப்பு (=சுவர்) + தூ (=வலிமை, பற்றுக்கோடு) + கை  = காப்புதூகை >>> கவ்வுதிகை >>> கௌதிகை >>> கோதிகை = கைகளால் சுவரை வலுவாகப் பற்றுவது.

கோதிகை, KOATHIKAI

முதலை, CROCODILE

கோதுகை

கோ (=நீர், மறை, எதிர்) + துகை (=தாக்கு) = கோதுகை >>> கோதிகை = நீருள் மறைந்திருந்து எதிர்த்துத் தாக்குவது

கோது, KOATHU

கழிவு, REFUSE

குறை

குறை (=எஞ்சியது, கழிவு) + உ = கூறு >>> கோது

கோது, KOATHU

தோல், SKIN

கூறு

குறை (=தசை, ஒடுக்கு, மறை) + உ = கூறு >>> கோது = தசையை மறைப்பது = தோல்

கோது, KOATHU

குற்றம், DEFECT

குறை

குறை (=குற்றம்) + உ = கூறு >>> கோது

கோது, KOATHU

நரம்பு, FIBRE

குந்து

குந்து (=பழத்தின் சிம்பு) >>> கோது

கோது, KOATHU

தவறுகை, DEVIATION

குந்து

குந்து (=தவறு, விலகு) >>> கோது

கோது, KOATHU

மகிழ்ச்சித் துள்ளல், DANCE WITH JOY

கூது

குதி (=மகிழ்ந்து துள்ளு) + உ = கூது >>> கோது = மகிழ்ச்சித் துள்ளல்.

கோதுகம், KOATHUKAM

மகிழ்ச்சித் துள்ளல், DANCE WITH JOY

கூதுகம்

குதி (=துள்ளு) + உக (=மகிழ்) + அம் = கூதுகம் >>> கோதுகம் = மகிழ்ச்சித் துள்ளல்.

கோதுகலம், KOATHUKALAM

மகிழ்ச்சித் துள்ளல், DANCE WITH JOY

குதிகளம்

குதி (=துள்ளு) + களி (=மகிழ்) + அம் = குதிகளம் >>> கோதுகலம் = மகிழ்ச்சியால் துள்ளல்.

கோதுகுலம், KOATHUKULAM

மகிழ்ச்சித் துள்ளல், DANCE WITH JOY

குதிகுலம்

குதி (=துள்ளு) + குல (=மகிழ்) + அம் = குதிகுலம் >>> கோதுகுலம் = மகிழ்ச்சியால் துள்ளல்.

கோதூளி, KOATHOOLHI

மாலைநேரம், EVENING

கூறொளி

குறி (=பொழுது) + ஒளி (=சூரியன், மறை) = கூறொளி >>> கோதூளி = சூரியன் மறையும் பொழுது = மாலைநேரம்

கோந்தி, KOANTHI

குரங்கு, MONKEY

கூந்தி

குந்து (=இருகால்களையும் ஊன்றி உட்கார்) + இ = கூந்தி >>> கோந்தி = இருகால்களையும் ஊன்றி உட்கார்வது.

கோந்து, KOANTHU

பிசின், GUM

கூழ்த்து

கூழ் (=பொருள், குழைவு) + தை (=பொருத்து, ஒட்டு) + உ = கூழ்த்து >>> கோந்து = ஒட்டுகின்ற குழைந்த பொருள்.

கோப்பியம், KOAPPIYAM

இரகசியம், SECRECY

கூப்பியம்

கூப்பு (=குவி, மறை) + இயம் (=சொல்) = கூப்பியம் >>> கோப்பியம் = மறைக்கப்பட்ட சொல் = இரகசியம்

கோப்பியம், KOAPPIYAM

அடக்கம், RETICENCE

கூப்பியம்

கூப்பு (=குவி, ஒடுங்கு, அடங்கு) + இயம் (=தன்மை) = கூப்பியம் >>> கோப்பியம் = அடங்கிய தன்மை.

கோபக்கிதம், KOAPAKKITHAM

சூட்டுக் கொட்டை, BONDUC NUT

கோபக்கிதம்

கோபம் (=சினம், சூடு) + அக்கம் (=தானியம், கொட்டை) + இதம் = கோபக்கிதம் = சூட்டுக் கொட்டை

கோபம், KOAPAM

சினம், ANGER

கோவம்

கோ (=எதிர், சின) + அம் = கோவம் >>> கோபம் = சினம்

கோபம், KOAPAM

வெப்பம், HEAT

கூமம்

குமை (=புழுங்கு, வெப்புறு) + அம் = கூமம் >>> கோபம் = புழுக்கம், வெப்பம்

கோபம், KOAPAM

தம்பலப் பூச்சி, HOLOSERICEUM

கோப்பம்

கோப்பு (=சிவப்பு, ஆடம்பரம், அலங்காரம்) + அம் (=ஒப்பு, அழகு) = கோப்பம் >>> கோபம் = ஆடம்பர அலங்காரம் போன்ற சிவப்பழகு உடையது.

கோபன், KOAPAN

இடையன், HERDSMAN

கோவன்

கோ (=மாடு, சேர், கூட்டு) + அன் = கோவன் >>> கோபன் = மாட்டுக் கூட்டத்தைக் கொண்டவன் = இடையன்.

கோபனம், KOAPANAM

இரகசியம், SECRECY

கூப்பணம்

கூப்பு (=குவி, மறை) + அணி (=சொல்) + அம் = கூப்பணம் >>> கோபனம் = மறைக்கப்பட்ட சொல் = இரகசியம்

கோபாலன், KOAPAALAN

இடையன், HERDSMAN

கோவலன்

கோ (=பசு) + வல (=சுற்று, திரியச்செய், கட்டு) + அன் = கோவலன் >>> கோபாலன் = பசுக்களைத் திரியச்செய்துக் கட்டி வைப்பவன்

கோபி, KOAPI

சின, TO GET ANGER

கோபி

கோபம் (=சினம்) + இ = கோபி = சின

கோபினை, KOAPINAI

கடுங்கோபம், WRATH

கோவினை

கோ (=எதிர், சின) + இனை (=அஞ்சு) = கோவினை >>> கோபினை = அஞ்சத்தக்க சினம் = கடுங்கோபம்

கோபீகன், KOAPEEKAN

கடுங்கோபி, MAN OF WRATH

கோபிகன்

கோபம் (=சினம்) + இக (=வரம்புமீறு) + அன் = கோபிகன் >>> கோபீகன் = வரம்புமீறிய சினமுடையவன்

கோபிச்~டன், KOAPISHTAN, கோபிட்டன், KOAPITTAN

கடுங்கோபி, MAN OF WRATH

கோபிற்றன்

கோபம் (=சினம்) + இற (=வரம்புமீறு) + அன் = கோபிற்றன் >>> கோபிட்டன் >>> கோபிச்~டன் = வரம்பு மீறிய சினமுடையவன்.

கோபுரம், KOAPURAM

நகர் நுழைவாயில், TOWN’S ENTRANCE GATE

கோப்பூரம்

கோப்பு (=வழி) + ஊர் (=நகர், செல்) + அம் = கோப்பூரம் >>> கோபுரம் = நகருக்குள் செல்வதற்கான வழி.

கோபுரம், KOAPURAM

கோயில் நுழைவாயில், TEMPLE’S ENTRANCE GATE

கோப்பூரம்

கோப்பு (=அமைப்பு, வழி) + ஊர் (=செல்) + அம் (=கடவுள், கும்பிடு) = கோப்பூரம் >>> கோபுரம் = கடவுளைக் கும்பிடச் செல்வதற்காக அமைக்கப்பட்ட வழி.

கோம்பை, KOAMPAI

தேங்காய், COCONUT

கோப்பை

கோ (=மூடு, கண், நீர்) + பை (=வலிமை, கலம்) = கோப்பை >>> கோம்பை = வலுவாக மூடப்பட்ட கண்ணுடைய நீர்க்கலம் = தேங்காய்.

கோம்பை, KOAMPAI

முட்டாள், IDIOT

கோப்பாய்

கோப்பு (=கவிப்பு, மூடுகை) + ஆய் (=அறி) = கோப்பாய் >>> கோம்பை = அறிவு மூடப்பட்டவன் = முட்டாள்.

கோமயம், KOAMAYAM

பசுமூத்திரம், URINE OF COW

கோவாயம்

கோ (=பசு) + ஆய் (=நீக்கு, கழி) + அம் (=நீர்) = கோவாயம் >>> கோமயம் = பசு கழிக்கும் நீர்

கோமயம், KOAMAYAM

பசுவின் சாணம், COW DUNG

கோவாயம்

கோ (=பசு) + ஆய் (=மலம்) + அம் = கோவாயம் >>> கோமயம் = பசுவின் மலம்.

கோமளம், KOAMALHAM

பேரிளமை, JUVENILITY

கோமளம்

கொம்மை (=இளமை) + அள் (=மிகு) + அம் = கோமளம் = மிக்க இளமை

கோமளம், KOAMALHAM

பேரழகு, BEAUTY

கோமளம்

கொம்மை (=அழகு) + அள் (=மிகு) + அம் = கோமளம் = மிக்க அழகு

கோமளம், KOAMALHAM

மென்மை, SOFTNESS

கோவளம்

கோ (=எதிர்) + அள் (=வலிமை) + அம் = கோவளம் >>> கோமளம் = வலிமைக்கு எதிரானது = மென்மை

கோமளம், KOAMALHAM

பாலுடைய பசு, MILCH COW

கோபாலம்

கோ (=பசு) + பால் + அம் = கோபாலம் >>> கோமளம் = பாலுடைய பசு

ஞமலி, GNAMALI

ஆண்மயில், PEACOCK

நாவாலி

நா (=அழகு) + வால் (=நீளம், பெருமை, தோகை) + இ = நாவாலி >>> ஞமலி = நீண்ட பெரிய அழகிய தோகையைக் கொண்டது = ஆண்மயில்.

நாய், NAAY, நாயி, NAAYI

நாய், DOG

நாயிழி

நா (=நாக்கு) + இழி (=தாழ், தொங்கவிடு) = நாயிழி >>> நாயி = நாக்கைத் தொங்கவிடுவது.

ஞமலி, GNAMALI

நாய், DOG

நாவாலி

நா (=நாக்கு) + ஆல் (=தொங்கவிடு) + இ = நாவாலி >>> ஞமலி = நாக்கைத் தொங்கவிடுவது = நாய்.

இராகூச்சிட்டம், IRAAKOOCCITTAM

இலைத்தண்டு, LEEK

இறய்குழூற்றம்

இறை (=சிறகு, இலை) + குழு (=திரட்சி) + ஊற்று (=கோல், தண்டு) + அம் (=ஒப்பு, உணவு) = இறய்குழூற்றம் >>> இரய்கூசூட்டம் >>> இராகூச்சிட்டம் = இலைகள் தண்டுபோலத் திரண்டிருக்கும் உணவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.