ஞாயிறு, 28 நவம்பர், 2021

96. (சங்கி > சஞ்சேபம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சங்கி, CANKI

சந்தேகி, TO DOUBT

அக்கீ

அகம் (=மனம், அறிவு) + ஈ (=பகு) = அக்கீ >>> சக்கி >>> சங்கி = பகுத்தறி = ஆராய், சந்தேகி

சங்கி, CANKI

பெருமைப்படுத்து, TO HONOUR

அக்கீ

ஆக்கம் (=மிகுதி, பெருமை) + ஈ (=கொடு) = அக்கீ >>> சக்கி >>> சங்கி = பெருமை கொடு

சங்கி, CANKI

தொடர்புடையது, RELATED

அக்கி

அகம் (=அன்பு, பற்று, தொடர்பு) + இ = அக்கி >>> சக்கி >>> சங்கி = தொடர்புடையது

சங்கிதை, CANKITHAI

நூல், BOOK

அக்கிதை

ஆக்கம் (=திரட்டு) + இதம் (=அறிவு) + ஐ = அக்கிதை >>> சக்கிதை >>> சங்கிதை = அறிவின் திரட்டு = நூல்.

சங்கிதை, CANKITHAI

வரலாறு, HISTORY

அக்கிறை

ஆக்கம் (=செயல், நிகழ்வு, தொகுப்பு, அமைப்பு) + இறை (=காலம்) = அக்கிறை >>> சக்கிதை >>> சங்கிதை = காலப்படி அமைந்த நிகழ்வுகளின் தொகுப்பு = வரலாறு.

சங்கியை, CANKIYAI

எண்ணிக்கை, NUMBER

அங்கிழை

அங்கை (=விரல்) + இழை (= பிரி, தொடு, சொல், அறி) = அங்கிழை >>> சங்கியை = விரல்களைப் பிரித்துத் தொட்டுச் சொல்லி அறியப்படுவது = எண்ணிக்கை.

சங்கியை, CANKIYAI

பகுத்தறிவு, INTELLECT

அக்கிழை

அகை (=அறு, பகு) + இழை (=அறி) = அக்கிழை >>> சக்கியை >>> சங்கியை = பகுத்தறிவு

சங்கிரகம், CANKIRAKAM

கருத்துச் சுருக்கம், COMPENDIUM

சாய்கூறகம்

சாய் (=வற்று, சுருங்கு) + கூறு + அகம் (=கருத்து) = சாய்கூறகம் >>> சக்கிரகம் >>> சங்கிரகம் = சுருங்கக் கூறப்பட்ட கருத்து.

சங்கிரகணம், CANKIRAKANHAM

ஏற்றுக்கொள்ளுகை, ACCEPTANCE

அக்குரகணம்

ஆக்கம் (=அமைத்துக் கொள்ளுகை) + உரு (=ஒப்பு) + அகம் (=உள்ளம்) + அணம் = அக்குரகணம் >>> சக்கிரகணம் >>> சங்கிரகணம் = உள்ளம் ஒப்புமாறு அமைத்துக் கொள்ளுகை

சங்கிரம், CANKIRAM

காடு, JUNGLE

அக்குரம்

அகம் (=மரம், பூமி) + உரு (=மிகு) + அம் = அக்குரம் >>> சக்குரம் >>> சங்கிரம் = மரங்கள் மிக்க பூமி = காடு

சங்கிரமணம், சங்கிரமம், CANKIRAMANHAM, CANKIRAMAM

இராசிக்குள் நுழைதல், ENTERING INTO A NEW ZODIAC

அக்குறவணம்

அகம் (=ஆகாயம், வீடு, உள்) + உறவு (=நுழைகை) + அணம் = அக்குறவணம் >>> சக்குறவணம் >>> சங்கிரமணம் = ஆகாய வீட்டுக்குள் நுழைகை.

சங்கிரமம், CANKIRAMAM

நோய் தொற்றுகை, CONTAGIOUSNESS

அக்குறவம்

அகம் (=உடல், தீங்கு, உள்) + உறவு (=நுழைகை, பற்று) + அம் = அக்குறவம் >>> சக்கிரவம் >>> சங்கிரமம் = உடலுக்குத் தீங்கானது உள் நுழைந்து பற்றுகை.

சங்கிராமம், CANKIRAAMAM

போர், WAR

அக்கேறவம்

ஆக்கம் (=செயல், கூட்டம்) + ஏறு (=நுழை, எறிகை, அடிக்கை, வெட்டுகை) + அவி (=அழி) + அம் = அக்கேறவம் >>> சக்கிரமம் >>> சங்கிராமம் = கூட்டமாக நுழைந்து எறிந்தும் அடித்தும் வெட்டியும் அழிக்கின்ற செயல் = போர்.

சங்கிருதம், CANKIRUTHAM,

கலப்பு, MIXTURE

எக்குறுத்தம்

ஏகம் (=ஒன்று) + உறுத்து (=ஆக்கு) + அம் = எக்குறுத்தம் >>> செக்கிருத்தம் >>> சங்கிருதம் = ஒன்றாக்குதல்

சங்கிருதி, CANKIRUTHI

உலக அழிவு, END OF THE WORLD

அக்கிறுதி

அகம் (=பூமி, உலகம்) + இறுதி (=முடிவு) = அக்கிறுதி >>> சக்கிருதி >>> சங்கிருதி = உலகத்தின் முடிவு

சங்கிலி, CANKILI

உருக்குத் தொடர், CHAIN

யாக்குலி

யா (=அகலம், நீளம், பிணி) + குலை (=உருக்கு) + இ = யாக்குலி >>> சாக்குலி >>> சங்கிலி = நீளமாகப் பிணிக்கப்பட்ட உருக்குப் பொருள்.

சங்கிலிதம், CANKILITHAM

இணைப்பு, UNION

அக்கிலிதம்

அகை (=பிரிவு) + இல் (=இன்மை) + இதம் = அக்கிலிதம் >>> சக்கிலிதம் >>> சங்கிலிதம் = பிரிவற்றது = இணைப்பு

சங்கீதம், CANKEETHAM

இசைப்பாட்டு, MUSICAL SONG

செங்கூறம்

செம்மை (=நேர்த்தி) + கூறு + அம் (=ஒலி, நீளம், இனிமை) = செங்கூறம் >>> சங்கீதம் = இனிமையாக நீட்டி ஒலித்து நேர்த்தியாகக் கூறப்படுவது = இசைப்பாட்டு

சங்கீர்த்தனம், CANKEERTHTHANAM

புகழ்மாலை, PRAISE

அக்குறுத்தணம்

ஆக்கம் (=சொல்) + உறுத்து (=விரி) + அணி (=பெருமை, இனிமை) + அம் = அக்குறுத்தணம் >>> சக்கிருத்தனம் >>> சங்கீர்த்தனம் = பெருமைகளை இனிமையாக விரித்துச் சொல்லுதல் = புகழ்ந்து பாடுதல்.

சங்கீர்தம், CANKEERTHAM

புணர்ச்சி, COPULATION, கலப்பு, MIXTURE

அக்குறுத்தம்

ஆகம் (=பொருள், உடல்) + உறுத்து (=அழுத்து, பொருத்து) + அம் = அக்குறுத்தம் >>> சக்கிருத்தம் >>> சங்கீர்தம் = பொருட்கள் / உடல்கள் அழுந்தப் பொருந்துதல் = கலப்பு, புணர்ச்சி.

சங்கீரணம், CANKEERANHAM

கலப்பு, MIXTURE

அக்கீரணம்

அகை (=நீங்கு, இல்லாகு) + ஈர் (=அறு, பிரி) + அணம் = அக்கீரணம் >>> சங்கீரணம் = பிரிவு இல்லாமை

சங்கீரணம், CANKEERANHAM

பறை, DRUM

அக்குரணம்

அகை (=அடி, விரி) + உரி (=தோல்) + அணை (=கட்டு) + அம் (=ஒலி) = அக்குரணம் >>> சக்கிரணம் >> சங்கீரணம் = தோலை விரித்துக் கட்டி அடித்து ஒலிக்கப்படுவது.

சங்கு, CANKU

சேவல், COCK

ஏக்கூ

ஏ (=செருக்கு, மேல்நோக்குகை) + கூ (=கூவு) = ஏக்கூ >>> சேக்கு >>> சங்கு = செருக்குடன் மேல்நோக்கிக் கூவுவது

சங்கு, CANKU, சங்கை, CANKAI

கணைக்கால், SHANK

சங்கம்

சங்கம் (=கணைக்கால்) >>> சங்கு, சங்கை

சங்கு, CANKU

கூர்ங்கழி, STAKE

அக்கு

அகம் (=மரம், கூர்மை) + உ = அக்கு >>> சக்கு >>> சங்கு = கூரிய மரம்.

சங்கு, CANKU

அஞ்சு, TO FEAR

ஏங்கு

ஏங்கு (=அஞ்சு) >>> சேங்கு >>> சங்கு

சங்குசிதம், CANKUCITHAM

சுருக்கம், ABSTRACT

அக்கீயிதம்

ஆக்கம் (=பெருக்கம்) + ஈ (=அழிவு, இன்மை) + இதம் = அக்கீயிதம் >>> சக்குசிதம் >>> சங்குசிதம் = பெருக்கமற்றது

சங்குட்டம், CANKUTTAM

எதிரொலி, ECHO

அக்குற்றம்

அகை (=எழு, தோன்று) + உறை (=சுவர், மோது) + அம் (=ஒலி) = அக்குற்றம் >>> சக்குட்டம் >>> சங்குட்டம் = சுவரில் மோதித் தோன்றும் ஒலி = எதிரொலி

சங்குலம், CANKULAM

சாதி, CASTE

செங்குலம்

செம்மை (=ஒற்றுமை) + குலம் (=கூட்டம்) = செங்குலம் >>> சங்குலம் = ஒற்றுமையுடைய கூட்டம் = சாதி

சங்குலம், CANKULAM

போர், WAR

சாய்க்குலம்

சாய் (=அழி) + குலம் (=கூட்டம்) = சாய்க்குலம் >>> சங்குலம் = கூட்டமாக அழித்தல் = போர்.

சங்கேதம், CANKAETHAM

குறியீடு, SYMBOL

ஆய்க்கீறம்

ஆய் (=அறி) + கீறு (=குறிப்பி) + அம் = ஆய்க்கீறம் >>> சாக்கீதம் >>> சங்கேதம் = குறிப்பால் அறிவது

சங்கேதம், CANKAETHAM

கூட்டத்தால் மிகுகின்ற துணிச்சல், CROWD BRAVERY

சங்கெற்றம்

ஆக்கம் (=கூட்டம், மிகுதி) + எற்றம் (=துணிவு) = அக்கெற்றம் >>> சக்கெத்தம் >>> சங்கேதம் = கூட்டத்தால் மிகுகின்ற துணிச்சல்.

சங்கேதம், CANKAETHAM

உறுதிமொழி, VOW

அக்கெற்றம்

ஆக்கம் (=சொல்) + எற்றம் (=துணிபு, உறுதி) = அக்கெற்றம் >>> சக்கெத்தம் >>> சங்கேதம் = உறுதிமொழி.

சங்கேதம், CANKAETHAM

உடன்படிக்கை, AGREEMENT

அக்கீறம்

ஆ (=நேர், ஒப்பு) + கீறு (=எழுது) + அம் (=சொல்) = அக்கீறம் >>> சக்கேதம் >>> சங்கேதம் = ஒப்பி எழுதப்பட்ட சொல்.

சங்கேதம், CANKAETHAM

இறையிலி நிலம், TAXFREE TEMPLE LAND

அக்கிறம்

அகை (=நீக்கு) + இறை (=வரி, இடம், கடவுள், வாரிவழங்கு) + அம் = அக்கிறம் >>> சக்கிதம் >>> சங்கேதம் = கடவுளுக்கு வாரி வழங்கப்பட்டு வரி நீக்கப்பட்ட இடம்.

சங்கை, CANKAI

சந்தேகம், DOUBT

அக்காய்

அகம் (=எண்ணம்) + ஆய் (=ஆராய்) = அக்காய் >>> சக்கை >>> சங்கை = ஆராயும் எண்ணம் = சந்தேகம்

சங்கை, CANKAI

அச்சம், FEAR

எங்கை

ஏங்கு (=அஞ்சு) + ஐ = எங்கை >>> செங்கை >>> சங்கை

சங்கை, CANKAI

பேய், DEMON

அக்காய்

அகம் (=உயிர்) + ஆய் (=நீங்கு) = அக்காய் >>> சக்கை >>> சங்கை = உயிர் நீங்கியது = பேய்

சங்கை, CANKAI

எண்ணம், THOUGHT

அகம்

அகம் (=எண்ணம்) + ஐ = அக்கை >>> சக்கை >>> சங்கை

சங்கை, CANKAI

வழக்கம், CUSTOM

ஆக்கம்

ஆக்கம் (=செயல், முறை) + ஐ = அக்கை >>> சக்கை >>> சங்கை = முறையாகச் செய்யப்படுவது = வழக்கம்.

சங்கை, CANKAI

சுக்கு, DRIED GINGER

அக்காய்

அகை (=கிளை, எரி) + ஆய் (=மெலி, வற்று, உண்ணு) = அக்காய் >>> சக்கை >>> சங்கை = கிளைத்து வற்றி மெலிந்த எரிகின்ற உணவு = சுக்கு.

சங்கை, CANKAI

எண்ணிக்கை, NUMBER

ஆய்கை

ஆய் (=பிரி, அறி) + கை (=கைவிரல், வரிசை) = ஆய்கை >>> சாக்கை >>> சங்கை = கைவிரல்களைப் பிரித்து வரிசை அறிதல் = எண்ணிக்கை.

சங்கை, CANKAI

பெருமை, GREATNESS

ஆக்கம்

ஆக்கம் (=சிறப்பு, பெருமை) + ஐ = அக்கை >>> சக்கை >>> சங்கை = பெருமை.

சங்கை, CANKAI

கணைக்கால், SHANK

அக்கை

அகை (=தாமதி, நீட்டு, முறி, மடக்கு, செல், உறுப்பு) + ஐ = அக்கை >>> சக்கை >>> சங்கை = செல்லும்போது நீட்டி மடக்கப்படும் நீண்ட உறுப்பு = கணைக்கால்.

சங்கோசம், CANKOACAM

மஞ்சள், TURMERIC

சாய்க்கோழம்

சாய் (=சார்த்து, பூசு, ஒளி, அழகு) + கோழி (=கிழங்கு) + அம் = சாய்க்கோழம் >>> சக்கோசம் >>> சங்கோசம் = ஒளிரும் அழகுக்காக பூசப்படும் கிழங்கு = மஞ்சள்.

சங்கோசம், CANKOACAM

கூச்சம், SHYNESS, சுருங்குகை, CONTRACTION

சாய்க்கூச்சம்

சாய் (=வற்று, சுருங்கு) + கூசு + அம் = சாய்க்கூச்சம் >>> சக்கோசம் >>> சங்கோசம் = கூசிச் சுருங்குகை

சங்கோபனம், CANKOAPANAM

இரகசியம், SECRECY

அக்கோம்பணம்

அகம் (=மனம்) + ஓம்பு (=கா) + அணம் = அக்கோம்பணம் >>> சக்கோபனம் >>> சங்கோபனம் = மனதுக்குள் காப்பது

சச்சடம், CACCATAM

தாமரை, LOTUS

சயேடம்

சாய் (=ஒளி, குறை, ஒடுக்கு) + ஏடு (=இதழ், மலர்) + அம் (=பொழுது) = சயேடம் >>> சசேடம் >>> சச்சடம் = ஒளி குறைந்த மொழுதில் இதழ்களை ஒடுக்கும் மலர்.

சச்சடி, CACCATI, சஞ்சடி, CANCATI

மக்கள் திரளுதல், CROWDING OF PEOPLE

ஆயடி

ஆயம் (=மக்கள் கூட்டம்) + அடை (=சேர்) + இ = ஆயடி >>> சாசடி >>> சச்சடி = மக்கள் கூட்டமாகச் சேர்தல்

சச்சம், CACCAM

உண்மை, TRUTH

ஆழம்

அழி (=மாறு, இல்லாகு) + அம் = ஆழம் >>> சாசம் >>> சச்சம் = மாற்றம் இல்லாதது = உண்மை.

சச்சரவு, CACCARAVU, சச்சரை, CACCARAI

பகை, ENMITY

ஆயறவு

ஆயம் (=நட்பு) + அறவு (=இன்மை) = ஆயறவு >>> சாசறவு >>> சச்சரவு = நட்பின்மை = பகை.

சச்சரி, CACCARI, சச்சரை, CACCARAI

பறை, DRUM

அச்சாரி

அசை (=தட்டு, அடி, கட்டு, ஒலி) + ஆரம் (=வட்டம்) + இ = அச்சாரி >>> சச்சரி = அடித்து ஒலிக்கப்படும் வட்டமாகக் கட்டிய பொருள் = பறை.

சச்சரை, CACCARAI

முறிந்த துண்டு, BROKEN PIECE

சாயறை

சாய் (=முறி) + அறை (=துண்டு) = சாயறை >>> சாசரை >>> சச்சரை = முறிந்த துண்டு

சச்சனம், CACCANAM

காவல், PROTECTION

ஆயணம்

ஆய் (=துன்பம், ஆபத்து) + அணை (=தடு) + அம் = ஆயணம் >>> சாசனம் >>> சச்சனம் = ஆபத்தைத் தடுத்தல்.

சச்சாரம், CACCAARAM

யானைக்கூடம், ELEPHANT STALL

அச்சேறம்

அசை (=தங்கு, கட்டு) + ஏறு (=உயர், விலங்கு) + அம் = அச்சேறம் >>> சச்சேறம் >>> சச்சாரம் = உயரமான விலங்குகளைக் கட்டுகின்ற தங்குமிடம்.

சச்சிதம், CACCITHAM

அழகமைந்த நிலை, DECORATED STATE

ஆயிதம்

ஆய் (=அழகமை) + இதம் = ஆயிதம் >>> சாசிதம் >>> சச்சிதம் = அழகமைந்த நிலை

சச்சு, CACCU

பதர், CHAFF

செச்சூழ்

செச்சை (=தோல்) + ஊழ் (=பதனழி, மூடு) = செச்சூழ் >>> சச்சு = தோல் மூடிப் பதனழிந்தது = பதர்

சச்சு, CACCU

பதனழிந்த உலர் இலை, INFERIOR DRIED LEAVES

சாயூழ்

சாய் (=புல், இலை, வற்று) + ஊழ் (=பதனழி) = சாயூழ் >>> சாசூ >>> சச்சு = பதனழிந்து வற்றிய இலை.

சச்சு, CACCU

கூட்டம், CROWD

ஆயம்

ஆயம் (=மக்கள் கூட்டம்) + உ = ஆயு >>> சாசு >>> சச்சு

சச்சு, CACCU

தொல்லை, NUISANCE

ஆயு

ஆய் (=வருத்து) + உ = ஆயு >>> சாசு >>> சச்சு = தொல்லை

சச்சு, CACCU, சஞ்சு, CANCU

பறவை அலகு, BEAK

ஆயுய்

ஆய் (=குத்து) + உய் (=உண்) = ஆயுய் >>> சாசு >>> சச்சு = உண்பதற்காகக் குத்தப்படுவது = பறவை அலகு

சச்சு, CACCU

கொஞ்சம், LITTLENESS

ஆய்

ஆய் (=சிறுமை) + உ = ஆயு >>> சாசு >>> சச்சு

சச்சை, CACCAI

ஆராய்ச்சி, RESEARCH

ஆயை

ஆய் (=ஆராய்) + ஐ = ஆயை >>> சாசை >>> சச்சை = ஆராய்ச்சி.

சச்சை, CACCAI

ஓதுகை, RECITATION

அசை

அசை (=சொல், ஓது) >>> சசை >>> சச்சை = ஓதுகை

சசகம், CACAKAM

வெண்முயல், WHITE HARE

அயகம்

அயம் (=முயல்) + கம் (=வெண்மை) = அயகம் >>> சசகம் = வெண்முயல்

சசபரம், CACAPARAM

நாணல், LARGE LONG GRASS

சயேவாரம்

சாய் (=புல்) + ஏ (=உயர்) + ஆர் (=நிறை, செறி) + அம் = சயேவாரம் >>> சசபரம் = செறிவுடைய உயரமான புல்

சசம், CACAM

முயல், HARE

அயம்

அயம் (=முயல்) >>> சசம்

சசாங்கன், CACAANKAN

சந்திரன், MOON

செஞ்சாய்கன்

செம்மை (=கருமை) + சாய் (=ஒளி, கொடு) + கம் (=ஆகாயம், வெண்மை) + அன் = செஞ்சாய்கன் >>> சசாங்கன் = கரிய ஆகாயத்தில் வெள்ளொளி தருபவன் = சந்திரன்

சசி, CACI

சந்திரன், MOON

சாயி

சாய் (=வெண்மை, ஒளி, அழகு, கொடு) + இ = சாயி >>> சசி = அழகிய வெள்ளொளியைத் தருபவன் = சந்திரன்

சசி, CACI

கற்பூரம், CAMPHOR

சாயி

சாய் (=ஒளி, கொடு, அழி, வெண்மை) + இ = சாயி >>> சசி = அழிந்து ஒளிதரும் வெண்பொருள்

சசி, CACI, சசியம், CACIYAM

உப்பு, SALT

ஆயீ

ஆய் (=வெண்மை, நுண்மை, பொடி, சிறுமை, உண்) + ஈ (=இடு) = ஆயீ >>> சாசி >>> சசி = உணவில் சிறிதே இடப்படும் வெண்ணிறப் பொடி = உப்பு.

சசி, CACI

கடல், SEA

ஆழி

ஆழி (=கடல்) >>> சாசி >>> சசி

சசி, CACI

மழை, RAIN

ஆயீ

ஆயம் (=மேகம், வருவாய்) + ஈ (=கொடு) = ஆயீ >>> சாசீ >>> சசி = மேகம் தரும் வருவாய் = மழை.

சசியம், CACIYAM

நில விளைச்சல், LAND PRODUCE, பயிர், CROP

அயீயம்

அயம் (=நிலம்) + ஈ (=கொடு) + அம் (=உணவு) = அயீயம் >>> சசியம் = நிலம் தரும் உணவு, பயிர்.

சசிவன், CACIVAN

நண்பன், FRIEND

சயுவன்

சாய் (=சார், பொருந்து) + உவ (=அன்புறு) + அன் = சயுவன் >>> சசுவன் >>> சசிவன் = அன்புற்றுப் பொருந்துபவன்

சசிவன், CACIVAN

மந்திரி, MINISTER

அயீவன்

ஐ (=அரசன், நுட்பம்) + ஈவு (=கொடை) + அன் = அயீவன் >>> சசிவன் = அரசனுக்கு நுட்பங்களைக் கொடுப்பவன்

சஞ்சகாரம், CANCAKAARAM

முன்பணம், EARNEST MONEY

செய்யாக்காரம்

செய் + ஆக்கம் (=உறுதி, பணம்) + ஆர் (=கட்டு) + அம் = செய்யாக்காரம் >>> சச்சகாரம் >>> சஞ்சகாரம் = உறுதி செய்வதற்காகக் கட்டப்படும் பணம் = முன்பணம்

சஞ்சம், CANCAM

பூணூல், SACRED THREAD

அச்சம்

அச்சு (=உடல், மார்பு) + அம் (=இறைவன், கும்பிடு, பொருத்து, அணி, நீளம்) = அச்சம் >>> சச்சம் >>> சஞ்சம் = இறைவனைக் கும்பிட்டு மார்பில் அணியும் நீண்ட பொருள்

சஞ்சம், CANCAM

கச்சு, SASH

அச்சம்

அச்சு (=உடல், மார்பு) + அம் (=பொருத்து, கட்டு) = அச்சம் >>> சச்சம் >>> சஞ்சம் = மார்பில் பொருத்திக் கட்டுவது.

சஞ்சயம், CANCAYAM

கூட்டம், CROWD

அச்சாயம்

அசை (=நீங்கு, இல்லாகு) + ஆய் (=சிறுமை) + அம் = அச்சாயம் >>> சச்சயம் >>> சஞ்சயம் = சிறுமை அற்றது = பெருமை, மிகுதி, கூட்டம்

சஞ்சயம், CANCAYAM

சந்தேகம், DOUBT

அச்சாயம்

அச்சு (=வலிமை, உறுதி) + ஆய் (=நீங்கு, இல்லாகு, கருது) + அம் = அச்சாயம் >>> சச்சயம் >>> சஞ்சயம் = கருத்தில் உறுதி இல்லாமை = சந்தேகம்.

சஞ்சரம், CANCARAM

விரைந்து அசைகை, RAPID MOTION

அச்சரம்

ஆசு (=விரைவு) + அரி (=செல், அசை) + அம் = அச்சரம் >>> சச்சரம் >>> சஞ்சரம் = விரைந்து அசைகை

சஞ்சரம், CANCARAM

உடல், BODY

அச்சாரம்

அச்சு (=உயிர், ஆதாரம்) + ஆர் (=தங்கு) + அம் = அச்சாரம் >>> சச்சரம் >>> சஞ்சரம் = உயிர் தங்கும் ஆதாரம்

சஞ்சரம், CANCARAM

வழி, WAY, தெரு, STREET

அச்சாரம்

அசை (=இயங்கு) + ஆர் (=பூமி, இடம்) + அம் (=நீளம்) =  அச்சாரம் >>> சச்சரம் >>> சஞ்சரம் = இயங்குவதற்கான நீண்ட இடம் = வழி, தெரு

சஞ்சரி, CANCARI

செல், MOVE

சஞ்சரி

சஞ்சரம் (=வழி) >>> சஞ்சரி = வழிப்படு, செல்

சஞ்சலம், CANCALAM

நிலையாமை, UNSTABILITY

அச்சலம்

அச்சு (=வலிமை, உறுதி) + அல் (=இன்மை) + அம் = அச்சலம் >>> சஞ்சலம் = உறுதியின்மை

சஞ்சலம், CANCALAM

விரைந்து அசைகை, RAPID MOTION

அச்சலம்

ஆசு (=விரைவு) + அலை (=செல், அசை) + அம் = அச்சலம் >>> சஞ்சலம் = விரைந்து அசைகை

சஞ்சலம், CANCALAM

நடுக்கம், SHIVERING

அச்சலம்

அச்சம் (=பயம்) + அலை (=செல், அசை) + அம் = அச்சலம் >>> சஞ்சலம் = பயத்தால் உண்டாகும் அசைவு

சஞ்சலம், CANCALAM

துன்பம், GRIEF

ஆயலம்

ஆய் (=கொண்டாடு, மகிழ்) + அல் (=இன்மை) + அம் = ஆயலம் >>> சாசலம் >>> சஞ்சலம் = மகிழ்ச்சியின்மை

சஞ்சலம், CANCALAM

நோய், DISEASE

அச்சலம்

அச்சு (=உடல்) + அலை (=கெடு, வருத்து) + அம் = அச்சலம் >>> சஞ்சலம் = உடலைக் கெடுத்து வருத்துவது = நோய்

சஞ்சலை, CANCALAI

மின்னல், LIGHTNING

சய்யாலை

சாய் (=ஒளி, வளை, ஓடு) + ஆலம் (=ஆகாயம்) + ஐ = சய்யாலை >>> சச்சாலை >>> சஞ்சலை = ஆகாயத்தில் வளைந்து ஓடுகின்ற ஒளி = மின்னல்.

சஞ்சாயம், CANCAAYAM

நாட்கூலி, DAILY WAGES

அச்சாயம்

ஆசு (=விரைவு, உடனடி) + ஆயம் (=வருமானம், சம்பளம்) = அச்சாயம் >>> சஞ்சாயம் = உடனடி சம்பளம்

சஞ்சாயம், CANCAAYAM

மிக்க இலாபம், EXCESS GAIN

எச்சாயம்

எச்சு (=மிகுதி) + ஆயம் (=வருமானம், இலாபம்) = எச்சாயம் >>> அஞ்சாயம் >>> சஞ்சாயம் = மிக்க இலாபம்

சஞ்சாயம், CANCAAYAM

இலவசம், PRICELESS

அச்சாயம்

அசை (=நீங்கு, இல்லாகு) + ஆயம் (=விலை) = அச்சாயம் >>> சஞ்சாயம் = விலையற்றது = இலவசம். ஒ.நோ: இலம் (=இன்மை) + ஆயம் (=விலை) = இலவாயம் >>> இலவசம்

சஞ்சாயம், CANCAAYAM

விளைச்சல், PRODUCE, விவசாயம், CULTIVATION

செய்யாயம்

செய் (=வயல்) + ஆயம் (=வருவாய்) = செய்யாயம் >>> சச்சாயம் >>> சஞ்சாயம் = வயல் வருவாய், விவசாயம்

சஞ்சாரம், CANCAARAM

பயணம், TRAVELLING

அச்சாறம்

அசை (=இயங்கு) + ஆறு (=வழி) + அம் = அச்சாறம் >>> சஞ்சாரம் = வழியில் இயங்குதல் = பயணம்.

சஞ்சாரம், CANCAARAM

இயற்கை வீடு, NATURAL HABITAT

அச்சறம்

அசை (=கட்டு, தங்கு) + அறை (=வீடு, இன்மை) + அம் = அச்சறம் >>> சஞ்சாரம் = கட்டப்படாத தங்கும் வீடு.

சஞ்சாரம், CANCAARAM

ஒலிக்கலப்பு, MIXED VOICE MODULATIONS

அச்சாரம்

அசை (=குறை) + ஆர் (=நிறை, கல, ஒலி) + அம் = அச்சாரம் >>> சஞ்சாரம் = குறையொலி நிறையொலிகளின் கலப்பு

சஞ்சாரம், CANCAARAM

தீயொழுக்கம், IMMORALITY

அச்சாறம்

ஆசு (=குற்றம்) + ஆறு (=ஒழுக்கம்) + அம் (=பொருந்து) = அச்சாறம் >>> சஞ்சாரம் = குற்றம் பொருந்திய ஒழுக்கம்

சஞ்சாரம், CANCAARAM

விவசாயம், CULTIVATION

செய்யாரம்

செய் (=வயல்) + ஆர் (=பெருக்கு, நிறை, உண்) + அம் = செய்யாரம் >>> சச்சாரம் >>> சஞ்சாரம் = வயல் நிறையுமாறு உணவுப் பொருட்களைப் பெருக்குதல்

சஞ்சாரி, CANCAARI

பயணி, TRAVELLER

சஞ்சாரி

சஞ்சாரம் (=பயணம்) + இ = சஞ்சாரி = பயணி

சஞ்சாரி, CANCAARI

விவசாயி, FARMER

சஞ்சாரி

சஞ்சாரம் (=விவசாயம்) + இ = சஞ்சாரி = விவசாயி

சஞ்சாலி, CANCAALI

துப்பாக்கி, GUN

அச்சளீ

ஆசு (=விரைவு, குழாய், இலக்கு, துண்டு) + அள் (=கூர்மை, இரும்பு) + ஈ (=பிள) = அச்சளீ >>> சஞ்சாலி = இலக்கினைப் பிளக்குமாறு கூரிய இரும்புத் துண்டை விரையச்செய்யும் குழாய் = துப்பாக்கி.

சஞ்சாலிகம், CANCAALIKAM, சஞ்சாளிகம், CANCAALHIKAM

தும்பி, LARGE BLACK BEE

அச்சாலிக்கம்

ஆசு (=கறை, கருமை) + ஆல் (=ஒலி) + இக்கு (=தேன்) + அம் (=உணவு, பறவை) = அச்சாலிக்கம் >>> சஞ்சாலிகம் = ஒலித்தவாறு தேனுண்ணும் கரும் பறவை = தும்பி

சஞ்சரிகம், CANCARIKAM, சஞ்சரீகம், CANCAREEKAM

தும்பி, LARGE BLACK BEE

அச்சாரிக்கம்

ஆசு (=கறை, கருமை) + ஆர் (=ஒலி, உண்) + இக்கு (=தேன்) + அம் (=பறவை) = அச்சாரிக்கம் >>> சஞ்சரிகம் = ஒலித்தவாறு தேனுண்ணும் கரும் பறவை = தும்பி

சஞ்சிகை, CANCIKAI

அச்சிட்ட செய்தி, PRINTED NEWS

அச்சிங்கை

அச்சு + இங்கம் (=அறிவு, செய்தி) + ஐ = அச்சிங்கை >>> சச்சிகை >>> சஞ்சிகை = அச்சிடப்பட்ட செய்தி

சஞ்சிதம், CANCITHAM

திரட்டப்பட்டது, WHICH IS ACCUMULATED

சாயிதம்

சாய் (=திரட்டு) + இதம் = சாயிதம் >>> சாசிதம் >>> சஞ்சிதம் = திரட்டப்பட்டது.

சஞ்சிதம், CANCITHAM

எஞ்சிய வினை, REMAINS OF KARMA BENEFITS AFTER EXPERIENCE

எச்சிதம்

எச்சம் (=வினை, எஞ்சியது) + இதம் (=சுகம், அனுபவம்) = எச்சிதம் >>> அஞ்சிதம் >>> சஞ்சிதம் = அனுபவித்து எஞ்சிய வினை.

சஞ்சீவனம், CANCEEVANAM

உயிர்ப்பிக்கை, LIFE RESTORATION

அச்சீவணம்

ஆசு (=காற்று, மூச்சு) + ஈவு (=கொடை) + அணம் = அச்சீவணம் >>> சஞ்சீவனம் = மூச்சைக் கொடுத்தல்

சஞ்சீவம், CANCEEVAM, சஞ்சீவி, CANCEEVI, சஞ்சீவினி, CANCEEVINI

உயிர்ப்பிக்கும் மருந்து, RESTORING MEDICINE

அச்சீவம்

ஆசு (=காற்று, மூச்சு) + ஈவு (=கொடை) + அம் (=மருந்து) = அச்சீவம் >>> சஞ்சீவம் = மூச்சைக் கொடுக்கும் மருந்து

சஞ்சீவன், CANCEEVAN

மாமரம், MANGO

சாயுவம்

சாய் (=ஒளி, அழகு, திரள், கொடு) + உவ (=மகிழ், இனி) + அம் (=பழம்) = சாயுவம் >>> சசுவன் >>> சஞ்சீவன் = ஒளிரும் அழகான இனிய திரண்ட பழங்களைக் கொடுப்பது

சஞ்சீவனை, CANCEEVANAI

மண்புழு, EARTH WORM

செய்யுழுமணை

சே (=சிவப்பு, தங்கு) + உழு (=புழு) + மண் + ஐ = செய்யுழுமணை >>> சச்சுயுவனை >>> சஞ்சீவனை = மண்ணுக்குள் தங்கும் சிவப்புநிறப் புழு = மண்புழு

சஞ்சு, CANCU

சாயல், LIKENESS

சாயூழ்

சாய் (=பொருந்து, ஒப்பு) + ஊழ் (=நினை, அறி) = சாயூழ் >>> சாசு >>> சஞ்சு = ஒப்பாக அறியப்படுவது

சஞ்சு, CANCU

வழக்கம், CUSTOM

அச்சூழ்

அசை (=இயங்கு) + ஊழ் (=பழமை, முறை) = அச்சூழ் >>> சச்சு >>> சஞ்சு = இயங்குவதற்கான பழமையான முறை

சஞ்சுகை, CANCUKAI

சாயல், LIKENESS

சாயிங்கை

சாய் (=பொருந்து, ஒப்பு) + இங்கம் (=அறிவு) + ஐ = சாயிங்கை >>> சசிங்கை >>> சஞ்சுகை = ஒப்பாக அறியப்படுவது = சாயல்.

சஞ்சுபம், CANCUPAM, சஞ்சுவம், CANCUVAM

அரசனின் விருதுகள், KING’S PARAPHERNALIA

அஞ்சுமம்

அம் (=கடவுள், அரசன், பொருத்து, ஒளி) + சுமை (=பாரம், பொருள்) + அம் = அஞ்சுமம் >>> சஞ்சுபம் = அரசனுக்குச் சுமையாகப் பொருத்தப்படும் ஒளிரும் பொருட்கள்.

சஞ்சேபம், CANCAEPAM

சுருக்கவுரை, ABSTRACT

சய்யாப்பம்

சாய் (=வற்று, சுருங்கு) + ஆப்பு (=கட்டு) + அம் (=சொல்) = சய்யாப்பம் >>> சச்சேபம் >>> சஞ்சேபம் = சுருங்கக் கட்டிய சொல் = சுருக்கவுரை.

இலவசம், ILAVACAM

விலையற்றது, PRICELESS

இலவாயம்

இலம் (=இன்மை) + ஆயம் (=விலை) = இலவாயம் >>> இலவசம் = விலையற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.