சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
சம்பிரதம், CAMPIRATHAM |
விளைவு, EFFECT |
அவிராறம் |
அவிர் (=விளங்கு, தோன்று) + ஆறு (=பயன்) + அம் = அவிராறம் >>> சபிராதம் >>> சம்பிரதம் = பயனாகத் தோன்றுவது = விளைவு. |
சம்பிரதம், CAMPIRATHAM |
மாயாசாலம், MAGIC ART |
யப்பிறறம் |
யாப்பு (=கட்டு) + இறை (=கண்) + அறம் (=ஞானம், வித்தை) = யப்பிறறம் >>> சம்பிரதம் = கண்கட்டு வித்தை. |
சம்பிரதாயம், CAMPIRATHAAYAM |
தொன்றுதொட்ட வழக்கம், CASTE ESTABLISHED USAGE |
அம்மிறைதாயம் |
அமை (=செய்) + இறை (=கடமை) + தாயம் (=குலம்) = அம்மிறைதாயம் >>> சம்பிரதாயம் = குலத்தின் கடமையாகச் செய்யப்படுவது = தொன்று தொட்ட சாதி வழக்கம். |
சம்பிரதாயம், CAMPIRATHAAYAM |
சாமர்த்தியம், ARTFULNESS |
அவிராற்றாயம் |
அவிர் (=தோன்று) + ஆற்று (=செய்) + ஆய் (=நுட்பமாகு) + அம் = அவிராற்றாயம் >>> சபிராத்தாயம் >>> சம்பிரதாயம் = செயலில் நுட்பம் தோன்றுதல் = சாமர்த்தியம். |
சம்பிரதாரணை, CAMPIRATHAARANHAI |
ஆய்ந்தெடுத்த முடிவு, DECISION AFTER DUE DELIBERATION |
செவ்விறைதேரணம் |
செம்மை (=ஒற்றுமை) + இறை (=முடிவு) + தேர் (=ஆராய்) + அணம் = செவ்விறைதேரணம் >>> சம்பிரதாரணை = ஆராயப்பட்ட ஒருமித்த முடிவு. |
சம்பிரதானம், CAMPIRATHAANAM |
கொடை, DONATION |
எவ்விராற்றணம் |
எவ்வம் (=துன்பம், வறுமை) + இரி (=நீங்கு) + ஆற்று (=உதவு) + அணம் = எவ்விராற்றணம் >>> அம்பிராதணம் >>> சம்பிரதானம் = வறுமை நீங்க உதவுதல். |
சம்பிரதி, CAMPIRATHI |
தலைமைக் கணக்கன், HEAD ACCOUNTANT |
அவ்விறறி |
அவை (=சபை, ஊர்) + இறை (=தலைமை) + அறம் (=கல்வி, கணக்கு) + இ = அவ்விறறி >>> சம்பிரதி = ஊரின் / சபையின் தலைமைக் கணக்கன். |
சம்பிரமம், CAMPIRAMAM |
அவசரம், HASTINESS |
அம்மிறவம் |
அமை (=பொறு) + இறை (=கடமை, வேலை) + அவி (=அழி, இல்லாகு) + அம் = அம்மிறவம் >>> சம்பிரமம் = வேலையில் பொறுமை இல்லாமை = அவசரம், பரபரப்பு |
சம்பிரமம், CAMPIRAMAM |
பேரின்பம், ELATION |
அவிரேமம் |
அவிர் (=தோன்று) + ஏமம் (=களிப்பு) = அவிரேமம் >>> சபிராமம் >>> சம்பிரமம் = களிப்பு தோன்றுதல் |
சம்பிரமம், CAMPIRAMAM |
சிறப்பு, பெருமை, SPLENDOUR, GREATNESS |
அம்மிரவம் |
அமை + இரி (=நீங்கு) + அவம் (=இழிவு) = அம்மிரவம் >>> சம்பிரமம் = இழிவு நீங்கி அமைந்தது = பெருமை, சிறப்பு |
சம்பிரமம், CAMPIRAMAM |
நிறைவு, SATISFACTION |
எவ்விரமம் |
எவ்வம் (=வறுமை, குறைவு) + இரி (=நீங்கு) + அமை + அம் = எவ்விரமம் = அம்பிரமம் >>> சம்பிரமம் = குறைவு நீங்கி அமைந்தது = திருப்தி, நிறைவு |
சம்பிராத்தி, CAMPIRAATHTHI |
நற்பேறு, GOOD FORTUNE, BLESSING |
எம்முறற்றி |
ஏமுறு (=பொருந்து) + அறம் (=புண்ணியம்) + இ = எம்முறற்றி >>> அம்புரத்தி >>> சம்பிராத்தி = புண்ணியத்தால் பொருந்தியது = நற்பேறு. |
சம்பீரம், CAMPEERAM |
எலுமிச்சை, LEMON |
அம்பூரம் |
அம்பு (=வளையல், வட்டம்) + ஊர் (=வடி) + அம் (=நீர், ஒளி, பழம்) = அம்பூரம் >>> சம்பீரம் = நீர் வடிக்கப்படும் வட்டமான ஒளிரும் பழம் = எலுமிச்சை. |
சம்பீரம், CAMPEERAM |
கருநாவல், BLACK JAMUN |
ஞெம்மிரம் |
ஞெமை (=நாவல்) + இருமை (=கருமை) + அம் = ஞெம்மிரம் >>> செம்பிரம் >>> சம்பீரம் = கருநாவல். |
சம்பு, CAMPU |
சூரியன், SUN |
அம்பூ |
அம் (=ஒளி) + பூ (=படை) = அம்பூ >>> சம்பு = ஒளியைப் படைப்பவன் = சூரியன் |
சம்பு, CAMPU |
நாவல், JAMUN TREE |
ஞெமை |
ஞெமை (=நாவல்) + உ = ஞெம்மு >>> செம்பு >>> சம்பு |
சம்பு, CAMPU |
நரி, FOX |
அம்மூ |
அம் (=ஒலி, நீளம்) + ஊ = அம்மூ >>> சம்பு = ஊ என்று நீளமாக ஒலிப்பது = நரி |
சம்பு, CAMPU |
எலுமிச்சை, LEMON |
அம்மூழ் |
அம் (=ஒப்பு, நீர், பழம்)) + ஊழ் (=சூரியன், ஒளி) = அம்மூழ் >>> சம்பு = சூரியனைப் போல ஒளிர்கின்ற நீருடைய பழம். |
சம்பு, CAMPU |
இடம்பம், POMP |
சம்பம் |
சம்பம் (=பெருமை மிகுதி, இடம்பம்) + உ = சம்பு |
சம்பு, CAMPU |
மின்னல், LIGHTNING |
அம்பூழ் |
அம்பு (=ஆகாயம்) + ஊழ் (=ஒளி, தோன்று, மறை) = அம்பூழ் >>> சம்பு = ஆகாயத்தில் தோன்றி மறையும் ஒளி |
சம்புகம், CAMPUKAM |
நரி, FOX |
ஏய்ப்பூழ்கம் |
ஏய்ப்பு (=வஞ்சனை) + ஊழ் (=பகை) + கம் (=உயிரி) = ஏய்ப்பூழ்கம் >>> அம்புகம் >>> சம்புகம் = பகையை வஞ்சிக்கும் உயிரி = நரி. |
சம்புகானா, CAMPUKAANAA |
தரைவிரிப்புக் கம்பளம், CARPET |
அவ்விகணா |
அவை (=இடம், நிலம்) + இகு (=விரி) + அணி (=அழகு, துணி) + ஆ = அவ்விகணா >>> சம்புகானா = நிலத்தில் விரிக்கப்படும் அழகிய துணி |
சம்புடம், CAMPUTAM |
வட்டச் சிறுகலம், SMALL ROUND CASKET |
அம்புறம் |
அம்பு (=வளையல், வட்டம்) + உறை (=குறைவு, உயரம், கலம்) + அம் = அம்புறம் >>> சம்புடம் = குறைந்த உயரமுடைய வட்டமான கலம். |
சம்புடம், CAMPUTAM |
நூல் பிரிவு, VOLUME OF BOOK |
யப்புடம் |
யாப்பு (=நூல்) + உடை (=பிரி) + அம் = யப்புடம் >>> சம்புடம் = நூல் பிரிவு |
சம்புரோட்சணம், CAMPUROATCHANHAM, சம்புரோட்சணை |
பாவசுத்தி, PURIFICATION OF SINS |
அம்புரோச்சணம் |
அம் (=நீர்) + புரை (=குற்றம், பாவம்) + ஓச்சு (=பாய்ச்சு, தெளி, ஓட்டு) + அணம் = அம்புரோச்சணம் >>> சம்புரோட்சணம் = நீரைத் தெளித்துப் பாவங்களை ஓட்டுதல் |
சம்பூரணம், CAMPOORANHAM |
நிறைவு, FULFILLNESS, முடிவு, END |
செம்மூறணம் |
செம்மை (=நேர்மை) + ஊறு (=பெருகு) + அணம் = செம்மூறணம் >>> சம்பூரணம் = பெருகி நேராதல் = நிறைவு, முடிவு. |
சம்பூரணம், CAMPOORANHAM |
மிகுதி, PLENTY |
அம்மூறணம் |
அமை + ஊறு (=பெருகு) + அணம் = அம்மூறணம் >>> சம்பூரணம் = பெருகி அமைந்தது |
சம்பை, CAMPAI |
மீன், FISH |
அம்பாய் |
அம் (=நீர், அழகு, உயிரி) + பாய் (=தாவு, துள்ளு) = அம்பாய் >>> சம்பை = நீரில் துள்ளுகின்ற அழகிய உயிரி = மீன் |
சம்பை, CAMPAI |
மின்னல், LIGHTNING |
அம்பாய் |
அம்பு (=ஆகாயம்) + ஆய் (=விரை, அழகு, ஒளி, கூராகு, பிள) = அம்பாய் = சம்பை = ஆகாயத்தைப் பிளந்து விரையும் கூரிய ஒளி = மின்னல். |
சம்பை, CAMPAI |
செழிப்பு, FERTILITY |
செழிப்பு |
செழிப்பு + ஐ = செழிப்பை >>> சய்ப்பை >>> சம்பை |
சம்போக்கு, CAMPOAKKU |
கப்பல் கூட்டம், FLEET OF SHIPS |
அம்போக்கு |
அம்பி (=கப்பல்) + ஓகம் (=கூட்டம்) + உ = அம்போக்கு >>> சம்போக்கு = கப்பல்களின் கூட்டம். |
சம்போகம், CAMPOAKAM, சம்யோகம், CAMYOAKAM |
புணர்ச்சி, SEXUAL UNION |
அப்பொகம் |
ஆப்பு (=உடல்) + ஒகு (=கூடு, பொருந்து) + அம் = அப்பொகம் >>> சம்போகம் = உடலைப் பொருந்துதல் = புணர்ச்சி |
சம்போர், CAMPOAR |
பூதம், GHOST |
அவ்வூர் |
ஆவி (=உயிர்) + ஊர் (=கழலு, நீங்கு) = அவ்வூர் >>> சம்போர் = நீங்கிய உயிர் = பேய், பூதம் |
சம்மட்டி, CAMMATTI |
சுத்தியல், HAMMER |
சம்மட்டி |
சமம் + அடி + இ = சம்மட்டி = சமமாக்க அடிப்பது |
சம்மட்டி, CAMMATTI |
சாட்டை, WHIP |
எவ்வட்டி |
ஏவு (=செலுத்து) + அடி + இ = எவ்வட்டி >>> அம்மட்டி >>> சம்மட்டி – செலுத்துவதற்காக அடிப்பது. |
சம்மதம், CAMMATHAM, சம்மதி, CAMMATHI |
உடன்பாடு, CONSENT |
செம்மதம் |
செம்மை (=ஒற்றுமை) + மதி (=கருத்து) + அம் = செம்மதம் >>> சம்மதம் = ஒருமித்த கருத்து = உடன்பாடு |
சம்மதம், CAMMATHAM |
நட்பு, FRIENDSHIP |
யப்பத்தம் |
யாப்பு (=அன்பு) + அத்து (=பொருந்து) + அம் = யப்பத்தம் >>> சம்மதம் = அன்பினால் பொருந்துதல் = நட்பு. |
சம்மதம், CAMMATHAM |
கரு, OPINION |
அம்மறம் |
அமை (=தங்கு) + அறி (=சிந்தி) + அம் = அம்மறம் >>> சம்மதம் = சிந்தனையில் தங்கியது = கொள்கை, கருத்து |
சம்மதி, CAMMATHI |
உடன்படு, AGREE |
சம்மதி |
சம்மதம் (=உடன்பாடு) + இ = சம்மதி = உடன்படு |
சம்மதி, CAMMATHI |
கருது, THINK |
சம்மதி |
சம்மதம் (=கருத்து) + இ = சம்மதி = கருது |
சம்மார்ச்சனம், CAMMAARCHCHANAM |
கூட்டிச் சுத்தமாக்கல், SWEEPING |
செம்மாறாயணம் |
செம் (=பெருக்கு) + மாறு (=துடைப்பம்) + ஆய் (=நீக்கு, கழிவு) + அணம் = செம்மாறாயணம் >>> சம்மார்ச்சனம் = கழிவுகளைத் துடைப்பத்தால் பெருக்கி நீக்குதல் |
சம்மாரம், CAMMAARAM, சம்கா`ரம், CAMHAARAM |
போரில் பகையழித்தல், KILLING ENEMY IN WAR |
செம்மாறம் |
செம் (=தாக்கு) + மாறு (=பகை, அழி) + அம் (=போர்) = செம்மாறம் >>> சம்மாரம் >>> சம்கா`ரம் = போரில் பகையைத் தாக்கி அழித்தல் |
சம்மானம், CAMMAANAM |
வரவேற்பு, RECEPTION |
ஏய்பணம் |
ஏய் (=எதிர்கொள்) + பணி (=வணங்கு, சொல்) + அம் = ஏய்பணம் >>> அப்பணம் >>> சம்மானம் = எதிர்கொண்டு வணங்கிச் சொல்லுதல் = வரவேற்பு |
சம்மானம், CAMMAANAM, சன்மானம், CANMAANAM |
REWARD, வெகுமதி |
செம்பணம் |
செம்மை (=பெருமை) + பணி (=செயல், கொடு) + அம் = செம்பணம் >>> சம்மானம் = பெருமை செய்து கொடுப்பது |
சம்மானம், CAMMAANAM |
இறையிலி நிலம், TAX FREE LAND |
ஆய்மனம் |
ஆய் (=வரி, நீக்கு) + மனை (=நிலம்) + அம் = ஆய்மனம் >>> அம்மானம் >>> சம்மானம் = வரி நீக்கப்பட்ட நிலம் |
சம்மானம், CAMMAANAM, சம்மான், CAMMAAN |
கப்பல், SHIP |
அம்பணம் |
அம்பணம் (=மரக்கலம்) >>> சம்மானம் |
சம்மிராட்டு, CAMMIRAATTU, சாம்ராட், CAAMRAAT |
பேரரசன், EMPEROR |
அம்பிறாட்டு |
அம்பு (=உலகம்) + இறை (=அரசன்) + ஆட்டு = அம்பிறாட்டு >>> சம்மிராட்டு >>> சாம்ராட் = உலகத்தை ஆட்டுவிக்கும் அரசன். |
சம்மேளனம், CAMMAELHANAM |
கூட்டம், CROWD |
அம்மேலணம் |
அமை (=பொருந்து, கூடு) + ஏல் (=மிகு) + அணம் = அம்மேலணம் >>> சம்மேளனம் = மிகுதியாகக் கூடியது |
சம்மோகம், CAMMOAKANAM, சம்மோகனம், CAMMOAKAM |
வசீகரம், INFATUATION |
செம்மொய்கணம் |
செம்மை (=அழகு) + ஒய் (=இழு, கவர்) + கண் + அம் = செம்மொய்கணம் >>> சம்மோகனம் = கண் கவர் அழகு |
சம்யுக்தம், CAMYUKTHAM |
உடன்படுமெய், CONJUNCT CONSONANT |
அம்மொற்றம் |
அமை (=பொருத்து, சேர்) + ஒற்று + அம் = அம்மொற்றம் >>> சம்முத்தம் >>> சம்யுக்தம் = சேர்க்கும் ஒற்றெழுத்து |
சம்ரட்சணம், சம்ரட்சணை, CAMRATCHANHAM, CAMRATCHANHAI |
காப்பாற்றுகை, PROTECTION |
எம்முறயணம் |
ஏமம் (=பாதுகாவல்) + உறை (=துன்பம்) + அணம் = எம்முறயணம் >>> அம்முரசணம் >>> சம்ரட்சணம் = துன்பத்தில் இருந்து பாதுகாத்தல். |
சம்ரம்பம், CAMRAMPAM |
பரபரப்பு, HASTINESS |
அமிரவ்வம் |
அமை (=பொறு) + இறை (=வேலை) + அவி (=இல்லாகு) + அம் = அமிரவ்வம் >>> சமிரம்மம் >>> சம்ரம்பம் = வேலையில் பொறுமை இல்லாமை |
சம்வச்சரம், CAMVACCARAM, சம்வற்சரம், சம்வத்சரம், CAMVATHCARAM |
ஆண்டு, YEAR |
செவ்வூழறம் |
செவ்வி (=பருவம்) + ஊழ் (=முற்று, முடி) + அறி (=கருது) + அம் = செவ்வூழறம் >>> சம்மூசரம் >>> சம்வச்சரம் = பருவங்களின் முடிவாகக் கருதப்படுவது = ஆண்டு |
சம்வர்த்தம், CAMVARTHTHAM |
மணிமழை மேகம், CLOUD RAINING GEMS |
அம்பருறம் |
அம்பு (=மேகம்) + அரி (=மணி) + உறை (=மழை, பொழி) + அம் = அம்பருறம் >>> சம்வருதம் >>> சம்வர்த்தம் = மணிகளை மழையாகப் பொழியும் மேகம் |
சம்வாகம், CAMVAAKAM |
நெல்லுடை மலையூர், HILL TOWN OF PADDY |
சம்பகம் |
சம்பு (=நெல்) + அகம் (=மலை, ஊர்) = சம்பகம் >>> சம்வாகம் = நெல் விளையும் மலையூர். |
சம்வாதம், CAMVAATHAM |
சண்டை, DISPUTE |
அம்மாறம் |
அம் (=சொல், பேசு) + மாறு (=எதிர்) + அம் = அம்மாறம் >>> சம்மாதம் >>> சம்வாதம் = எதிர்த்துப் பேசுதல் = சண்டை |
சம்வித்து, CAMVITHTHU |
அறிவு, WISDOM |
செப்பிற்று |
செப்பம் (=மனம்) + இறை (=தங்கல், விடை) + உ = செப்பிற்று >>> சம்வித்து = மனதில் தங்கியுள்ள விடை = அறிவு |
சம்வேகம், CAMVAEKAM |
ஆசை, DESIRE |
செப்பேங்கம் |
செப்பம் (=மனம்) + ஏங்கு + அம் = செப்பேங்கம் >>> சம்வேகம் = மனதில் ஏங்கியது = விருப்பம், ஆசை |
சம்சாயி, CAMCAAYI |
சமாதானப்படுத்து, RECONCILE |
செஞ்செய் |
செம்மை (=ஒற்றுமை, உடன்பாடு) + செய் = செஞ்செய் >>> சம்சாயி = உடன்பாடு செய், சமாதானமாக்கு |
சமக்காளம், CAMAKKAALHAM, சமுக்காளம், CAMUKKAALHAM |
தரைவிரிப்புக் கம்பளம், CARPET |
அவாக்களம் |
ஆவி (=திற, விரி) + ஆக்கம் (=வேலைப்பாடு, துணி) + அளம் (=நிலம்) = அவாக்களம் >>> சமக்காளம் = நிலத்தில் விரிக்கப்படும் வேலைப்பாடுடைய துணி. |
சமக்கிரம், CAMAKKIRAM |
முழுமை, FULLNESS |
சவங்கிறம் |
சவங்கு (=மெலி, குறை) + இறு (=அழி, இல்லாகு) + அம் = சவங்கிறம் >>> சமக்கிரம் = குறைவற்றது = முழுமை |
சமசம், CAMACAM |
சிறுபாத்திரம், SMALL VESSEL WITH HANDLE |
செப்பாசம் |
செப்பு (=சிறுபாத்திரம்) + ஆசு (=பற்று, பிடி) + அம் = செப்பாசம் >>> சமசம் = பிடியுள்ள சிறுபாத்திரம் |
சமசி, CAMACI |
முழுமை, FULLNESS |
அவசி |
அவி (=அழி, இல்லாகு) + அசை (=மெலி, குறை) + இ = அவசி >>> சமசி = குறைவின்மை = முழுமை. |
சமசி, CAMACI, சமசியை, சமசை, CAMACAI, CAMACIYAI |
கவி யாப்புச் சொல், WORD FOR A POEM |
அமாசி |
அமை (=இயற்று, கொடு) + ஆசு (=பாட்டு, சொல்) + இ = அமாசி >>> சமசி = பாடல் இயற்றக் கொடுக்கும் சொல். |
சமஞ்சசம், CAMANCACAM |
முழுப் பொருத்தம், PERFECT MATCH |
அமய்சாயம் |
அமை (=பொருந்து) + சாய் (=முடி, நிறை) + அம் = அமய்சாயம் >>> சமஞ்சசம் = நிறைந்த பொருத்தம் |
சமஞ்சிதன், CAMANCITHAN |
சபைக் கணக்கன், VILLAGE ACCOUNTANT |
அவாயிறன் |
அவை + ஆய் (=கணக்கிடு) + இறை (=வேலை) + அன் = அவாயிறன் >>> சமசிதன் >>> சமஞ்சிதன் = அவையில் கணக்கு வேலை செய்பவன் |
சமட்டி, CAMATTI |
கூட்டம், COLLECTION |
செமட்டி |
செம் (=நிறை, மிகு) + அடை (=பொருந்து) + இ = செமட்டி >>> சமட்டி = மிகுதியாகப் பொருந்தியது = கூட்டம். |
சமட்டம், CAMATTAM, சமட்சம், CAMATCAM |
கூட்டம், COLLECTION |
செமட்டம் |
செம் (=நிறை, மிகு) + அடை (=பொருந்து) + அம் = செமட்டம் >>> சமட்டம் >>> சமட்சம் = மிகுதியாகப் பொருந்தியது |
சமணம், CAMANHAM, சமண், CAMANH |
ஆடை அணியாமை, NUDITY |
அம்மணம் |
அம்மணம் (=ஆடை அணிந்திராமை) >>> சம்மணம் >>> சமணம் |
சமணி, CAMANHI |
இலவம், SILK COTTON TREE |
செவ்வணி |
செவ்வி (=சிவப்பழகு, மலர்) + அண் (=பொருந்து, தண்டு, மரம்) + இ = செவ்வணி >>> சமணி = சிவப்பழகு உடைய மலர்கள் பொருந்திய மரம் = இலவம் |
சமத்காரம், CAMATHKAARAM, சமக்காரம், CAMAKKAARAM |
பேச்சுத் திறமை, SKILL IN SPEAKING |
செப்பகாரம் |
செப்பு (=சொல்) + அகம் (=மனம்) + ஆர் (=கட்டு, பிணி) + அம் = செப்பகாரம் >>> சமக்காரம் >>> சமத்காரம் = சொற்களால் மனதைப் பிணித்தல். |
சமத்காரம், CAMATHKAARAM, சமக்காரம், CAMAKKAARAM |
செய்யுள் நயம், POETIC CHARM |
யப்பகாரம் |
யாப்பு (=செய்யுள்) + அகம் (=இனிமை, மனம்) + ஆர் (=கட்டு, பிணி) + அம் = யப்பகாரம் >> சமக்காரம் >>> சமத்காரம் = மனதைப் பிணிக்கும் செய்யுள் இனிமை. |
சமத்காரம், CAMATHKAARAM, சமக்காரம், CAMAKKAARAM |
தோற்றம், MANIFESTATION |
அவக்காரம் |
ஆவி (=வெளிப்படு) + அகம் (=உள்ளடக்கம்) + ஆர் (=பெறு) + அம் = அவக்காரம் >>> சமக்காரம் >>> சமத்காரம் = உள்ளடங்கியது வெளிப்படுவதால் பெறப்படுவது |
சமத்தம், CAMATHTHAM, சமச்`தம், CAMASTHAM |
முழுமை, |
செமத்தம் |
செம் (=நிறை) + அத்து (=பொருந்து) + அம் = செமத்தம் >>> சமத்தம் >>> சமச்`தம் = நிறைவாகப் பொருந்தியது. |
சமத்து, CAMATHTHU |
திறமை, SKILL |
செம்மல் |
செம்மல் (=வலிமை, திறமை) + து = செம்மற்று >>> சமத்து |
சமத்தன், CAMATHTHAN |
திறமைசாலி, SKILLED PERSON |
சமத்தன் |
சமத்து (=திறமை) + அன் = சமத்தன் = திறமைசாலி |
சமத்தானம், CAMATHTHAANAM, சமச்`தானம், CAMASTHAANAM |
அரசனின் ஆணைக்கு உட்பட்ட ஊர்களின் தொகுதி, KINGDOM |
ஐபற்றாணம் |
ஐ (=அரசன்) + பற்று (=ஊர், கட்டு, தொகுதி) + ஆணை + அம் = ஐபற்றாணம் >>> சமத்தானம் >>> சமச்`தானம் = அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்ட ஊர்களின் தொகுதி |
சமத்து, CAMATHTHU |
நாட்டுப்பகுதி, DIVISIONS OF A KINGDOM |
ஐபற்று |
ஐ (=அரசன்) + பற்று (=நாட்டுப்பகுதி) = ஐபற்று >>> சமத்து = அரசனுக்குரிய நாட்டுப் பகுதி |
சமதளம், CAMATHALHAM |
மனிதக் கூட்டம், CROWD OF PEOPLE |
அவைதலம் |
அவை (=கூட்டம்) + தலை (=மனிதன்) + அம் = அவைதலம் >>> சமதளம் = மனிதக் கூட்டம் |
சம்மதன், CAMMATHAN, சமதன், CAMATHAN |
நண்பன், FRIEND |
சம்மதன் |
சம்மதம் (=நட்பு) + அன் = சம்மதன் >>> சமதன் = நண்பன் |
சமதாடு, CAMATHAATU |
உடைவாள், CUTLASS |
அமேதாடு |
அமை (=பொருத்து) + ஏதி (=வாள்) + ஆடை (=உடை) + உ = அமேதாடு >>> சமதாடு = உடையில் பொருத்தும் வாள் |
சமதீதம், CAMATHEETHAM |
காலஞ்சென்றது, WHICH IS PAST |
அமறிதம் |
அமை (=காலம்) + அறு (=நீங்கு, கட) + இதம் = அமறிதம் >>> சமதீதம் = காலம் கடந்தது. |
சமதீதம், CAMATHEETHAM |
ஒன்றுசேர்தல், UNION |
செமத்திதம் |
செம்மை (=ஒற்றுமை) + அத்து (=சேர்) + இதம் = செமத்திதம் >>> சமதீதம் = ஒன்று சேர்தல். |
சமதை, CAMATHAI |
ஒப்புமை, EQUALITY |
செமத்தை |
செம்மை (=ஒற்றுமை) + அத்து (=பொருந்து) + ஐ = செமத்தை >>> சமதை = பொருந்துகின்ற ஒற்றுமை |
சமதை, CAMATHAI |
நடுவுநிலைமை, IMPARTIALITY |
செம்மறை |
செம்மை (=கோட்டமின்மை) + அறம் (=தகுதி, நிலை) + ஐ = செம்மறை >>> சமதை = கோட்டமில்லாத நிலை |
சமதை, CAMATHAI |
சமநிலை, EQUILIBRIUM |
செம்மறை |
செம்மை (=நேர்மை) + அறம் (=தகுதி, நிலை) + ஐ = செம்மறை >>> சமதை = நேரிய நிலை = சமநிலை |
சமம், CAMAM |
அமைதி, PEACE |
அமம் |
அமை (=அடங்கு) + அம் = அமம் >>> சமம் = அடக்கம் |
சமம், CAMAM |
ஒப்பு, EQUALITY |
செம்மை |
செம்மை (=ஒற்றுமை, ஒப்பு) + அம் = செமம் >>> சமம் |
சமம், CAMAM |
போர், WAR |
அம் |
அம் (=போர்) + அம் = அமம் >>> சமம் |
சமம், CAMAM |
முதுவேனில், PEAK SUMMER |
அவம் |
அவி (=சூரியன், புழுக்கு) + அம் (=காலம், பருவம்) = அவம் >>> சமம் = சூரியனால் புழுக்கப்படும் பருவம் = முதுவேனில் |
சமயம், CAMAYAM |
பொழுது, TIME |
அமையம் |
அமை (=வரவிரு, நிகழ், இற) + அம் (=நீளம்) = அமையம் >>> சமயம் = வரவிருத்தல், நிகழ்தல், இறத்தல் என்று நீளும் தன்மையது = காலம். |
சமயம், CAMAYAM |
மதம், RELIGION |
அமையம் |
அமை (=தீர்மானி, ஒழுங்குசெய், ஒன்று, இல்லாகு, உருவாக்கு) + அம் (=கடவுள், கும்பிடு) = = அமையம் >>> சமயம் = கடவுளைத் தீர்மானிப்பதில் ஒற்றுமையின்றி உருவாக்கப்பட்ட வழிபாட்டு ஒழுங்குமுறை = மதம். |
சமயம், CAMAYAM |
சமய நூல், RELIGIOUS TREATISE |
அமாயம் |
அமை (=இயற்று) + ஆய் (=கருது) + அம் (=கடவுள்) = அமாயம் >>> சமயம் = கடவுள் கருத்துக்களால் இயற்றியது |
சமயம், CAMAYAM |
உடன்படிக்கை, AGREEMENT |
அமையம் |
அமை (=இயற்று, உடன்படு) + அம் (=சொல்) = அமையம் >>> சமயம் = உடன்பட்ட சொற்களால் இயற்றப்படுவது |
சமயம், CAMAYAM |
மரபு, RULES |
அமையம் |
அமை (=விதி) + அம் = அமையம் >>> சமயம் = விதித்தது |
சமயோசிதம், CAMAYOACITHAM |
காலத்திற்குப் பொருத்தமானது, SUITING TO OCCASION |
அமயோயிதம் |
அமையம் (=காலம்) + ஓய் (=தங்கு, பொருந்து) + இதம் = அமயோயிதம் >>> சமயோசிதம் = காலத்திற்குப் பொருத்தமானது |
சமர், CAMAR, சமரம், CAMARAM |
போர், WAR |
அவார் |
அவை (=கூட்டம், அழி) + ஆர் (=சண்டையிடு) = அவார் >>> அமர் >>> சமர் = கூட்டமாகச் சண்டையிட்டு அழித்தல் |
சமர், CAMAR, சமரம், CAMARAM |
முள்ளம்பன்றி, PORCUPINE |
அப்பார் |
அப்பு (=அம்பு, கூர்முள், உடல்) + ஆர் (=நிறை) = அப்பார் >>> அமர் >>> சமர் = கூர்முட்கள் நிறைந்த உடலுடையது |
சமர்ச்சனம், CAMARCCANAM |
இறை வழிபாடு, WORSHIP OF GOD |
அமாருச்சணம் |
அம் (=இறை, கும்பிடு) + ஆர் (=ஒலி) + உச்சம் (=சிறப்பு) + அணம் = அமாருச்சணம் >>> சமர்ச்சனம் = இறையின் சிறப்பினை ஒலித்துக் கும்பிடுதல் = இறைவழிபாடு |
சமர்த்தம், ச்`மார்த்தம், CAMARTHTHAM, SMAARTHTHAM |
சடங்குகளைப் பின்பற்றுதல், FOLLOWING VEDIC RITES |
செம்மறுந்தம் |
செம்மை (=ஒற்றுமை) + மறை (=வேதம்) + உந்து (=செல், நட) + அம் (=கட்டளை) = செம்மறுந்தம் >>> சமர்த்தம் = வேதங்களின் கட்டளைகளை ஒற்றி நடத்தல். |
சமர்த்தனம், CAMARTHTHANAM |
பொருந்தக் கூறுதல், JUSTIFICATION |
அமருத்தணம் |
அமை (=பொருத்து) + அருத்து (=ஊட்டு, சொல்) + அணம் = அமருத்தணம் >>> சமர்த்தனம் = பொருத்தமாகச் சொல்லுதல் |
சமர்த்தி, CAMARTHTHI |
நிறைவு, FULLNESS |
அமர்த்தி |
அமர்த்து (=முடி, நிறைவேற்று) + இ = அமர்த்தி >>> சமர்த்தி = நிறைவு, முடிவு |
சமர்த்து, CAMARTHTHU |
செயல் திறமை, ABILITY, SKILL |
அமருத்து |
அமை (=உண்டாகு, முடி) + அருத்தம் (=பயன்) + உ = அமருத்து >>> சமர்த்து = பயன் உண்டாகுமாறு முடித்தல் |
சமர்ப்பணம், சமர்ப்பணை, CAMARPPANHAM, CAMARPPANHAI |
நெல்லும் பூவுமிடல், OFFERING FLOWERS & PADDY AT THY FEET |
அமரும்பணம் |
அமை (=படை, பணி) + அரும்பு (=பூ, அரிசி, நெல்) + அணம் = அமரும்பணம் >>> சமர்ப்பணம் = நெல்லும் பூவும் படைத்து வணங்குதல் |
சமர்ப்பி, CAMARPPI |
நெல் பூவிட்டுப் பணி, OFFER PADDY, FLOWERS |
அமரும்பி |
அமை (=படை, பணி) + அரும்பு (=பூ, அரிசி, நெல்) + இ = அமரும்பி >>> சமர்ப்பி = நெல்லும் பூவும் படைத்துப் பணி |
சமரங்கம், CAMARANKAM |
போர்க்களம், BATTLE FIELD |
சமரகம் |
சமர் (=போர்) + அகம் (=இடம்) = சமரகம் >>> சமரங்கம் = போர் செய்யும் இடம் |
சமரசம், CAMARACAM |
ஒற்றுமை, EQUALITY |
அமரசம் |
அமர் (=பொருந்து) + அசை (=தங்கு, இரு) + அம் = அமரசம் >>> சமரசம் = பொருத்தமாக இருப்பது |
சமரி, CAMARI |
பாம்பு, SNAKE |
அம்பேறி |
அம்பு (=விசம்) + ஏறு (=எறிகை, கொத்துகை, கொலை) + இ = அம்பேறி >>> சம்மேரி >>> சமரி = விசத்தால் கொத்திக் கொல்வது = பாம்பு |
சமரம், CAMARAM, சாமரம், CAAMARAM, சாமரை, CAAMARAI |
வட்டமான மயிர் விசிறி, CIRCULAR HAIRY FLY FLAPPER OF KING |
அம்பெறை |
அம்பு (=வளையல், வட்டம், வேர், நார், மயிர்) + எறி (=வீசு) + ஐ = அம்பெறை >>> சம்மெரை >>> சாமரை = மயிர்களால் ஆன வட்டவடிவ வீசும் பொருள் |
சமலம், CAMALAM |
அழுக்கு, FILTH, கழிவு, REFUSE |
செம்மலம் |
செம்மை (=சுத்தம்) + அல் (=இன்மை) + அம் = செம்மலம் >>> சமலம் = சுத்தமற்றது = அழுக்கு, கழிவு |
அனுபவம், ANUPAVAM |
பட்டறிவு, EXPERIENCE |
அண்ணுபாவம் |
அண்ணு (=பொருந்து, கூடு) + பா (=பருகு, நுகர்) + அம் = அண்ணுபாவம் >>> அனுபவம் = நுகர்ச்சியால் பொருந்தியது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.