சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
சதிரம், CATHIRAM |
உடல், BODY |
ஆதிறம் |
ஆ (=உயிர்) + திறம் (=நிலைபேறு) = ஆதிறம் >>> அதிரம் >>> சதிரம் = உயிர் நிலைபெற்று இருப்பது = உடல். |
சதிருசம், CATHIRUCAM |
ஒப்புமை, SIMILARITY |
அற்றிருசம் |
ஆறு (=தன்மை) + இருசு (=நேர்மை, சமம்) + அம் = அற்றிருசம் >>> அத்திருசம் >>> சதிருசம் = சமமான தன்மை |
சதிவு, CATHIVU, சதிமானம், CATHIMAANAM |
வஞ்சனை, FRAUD |
சதி |
சதி + வு / மானம் >>> சதிவு, சதிமானம் |
சதீலம், CATHEELAM |
காற்று, WIND |
அற்றிலம் |
ஆறு (=அடங்கு, ஓய், தன்மை) + இல் (=இன்மை) + அம் = அற்றிலம் >>> சத்திலம் >>> சதீலம் = ஓய்வற்ற தன்மையது |
சதீலம், CATHEELAM |
மூங்கில், BAMBOO |
அற்றிலம் |
அறை (=குகை, துளை) + இலை (=தண்டு) + அம் (=நீளம்) = அற்றிலம் >>> சத்திலம் >>> சதீலம் = துளையுடைய நீண்ட தண்டு = மூங்கில். |
சதீனகம், CATHEENAKAM, சதீனம், CATHEENAM |
பயறு, PULSE |
ஆய்தீனக்கம் |
ஆய் (=சிறுமை) + தீனி (=உணவு) + அக்கம் (=தானியம்) = ஆய்தீனக்கம் >>> சதீனகம் = சிறுதானிய உணவு |
சதுக்கம், CATHUKKAM |
சந்திப்பு, JUNCTION |
அத்துகம் |
அத்தம் (=வழி) + உக (=பொருந்து, கூடு) + அம் (=இடம்) = அத்துகம் >>> சதுக்கம் = வழிகள் கூடும் இடம் |
சதுக்கம், CATHUKKAM |
சந்து, LANE |
அத்துகம் |
அத்தம் (=வழி) + உகு (=தேய், சுருங்கு) + அம் = அத்துகம் >>> சதுக்கம் = சுருங்கிய வழி = சந்து |
சதுக்கம், CATHUKKAM |
மேடை, PLATFORM |
அத்துகம் |
அத்தம் (=வழி, இடம்) + உகை (=எழு, உயர்) + அம் = அத்துகம் >>> சதுக்கம் = உயரமான இடம் = மேடு, மேடை |
சதுக்கம், CATHUKKAM |
தலைப்பாகை, TURBAN |
சத்துக்கம் |
சாத்து (=அணி) + உக்கம் (=தலை, வட்டம்) = சத்துக்கம் >>> சதுக்கம் = தலையில் வட்டமாக அணிவது |
சதுர், CATHUR |
மலிவு, CHEAPNESS |
சதிர் |
சதிர் (=மலிவு) >>> சதுர் |
சதுர், CATHUR |
செயல்முறை, MEANS |
அற்றூர் |
ஆறு (=வழி, முறை) + ஊர் (=நடத்து) = அற்றூர் >>> சத்தூர் >>> சதுர் = நடத்துகின்ற வழிமுறை |
சதுர், CATHUR |
நடனம், DANCE |
சதிர் |
சதிர் (=நடனம்) >>> சதுர் |
சதுர், CATHUR |
நான்கு, FOUR |
சதுரம் |
சதுரம் (=நாற்பக்கம் உடையது) >>> சதுர் = நான்கு |
சதுர்க்கதி, CATHURKKATHI |
ஆமை, TORTOISE |
அறூர்க்கதி |
ஆறு (=தணி, மெதுவாகு) + ஊர் + கதி (=பயணம்) = அறூர்க்கதி >>> சதுர்க்கதி = மெதுவாக ஊர்ந்து பயணிப்பது = ஆமை |
சதுர்த்தி, CATHURTHTHI, சதுர்த்திகை, CATHURTHTHIKAI |
நான்காம் நாள், FOURTH DAY |
சதுருற்றி |
சதுர் (=நான்கு) + உறை (=நாள்) + இ = சதுருற்றி >>> சதுருத்தி >>> சதுர்த்தி = நான்காவது நாள். |
சதுரங்கம், CATHURANKAM |
கட்டத்துக்குள் போர் விளையாட்டு, CHESS GAME |
எதிரக்கம் |
எதிர் (=பகை, போர்) + அகை (=செலுத்து, கூறுபாடு, கட்டம்) + அம் (=பொருந்து) = எதிரக்கம் >>> அதுரங்கம் >>> சதுரங்கம் = கட்டத்தில் பொருந்தியவாறே பகையை எதிர்த்துச் செலுத்திப் போரிடுதல் = கட்டத்துக்குள் போர் விளையாட்டு |
சதுரம், CATHURAM |
செங்குத்தான சம தூரங்களைக் கொண்டது, SQUARE |
செந்தூரம் |
செம்மை (=ஒற்றுமை, சமம், நேர்மை, செங்குத்து) + தூரம் = செந்தூரம் >>> சத்தூரம் >>> சதுரம் = செங்குத்தான சம தூரங்களைக் கொண்டது. |
சதுரம், CATHURAM |
திறமை, ABILITY |
சதிர் |
சதிர் (=திறமை) + அம் = சதிரம் >>> சதுரம் |
சதுரம், CATHURAM |
நாகரீகம், DIGNITY |
அற்றீரம் |
ஆறு (=அடங்கு, பணி) + ஈர் (=இனிமை) + அம் (=சொல்) = அற்றீரம் >>> சத்திரம் >>> சதுரம் = இனிமையாகவும் பணிவாகவும் சொல்லுதல் = நாகரீகம் |
சதுரம், CATHURAM |
விவேகம், WISDOM |
அற்றீரம் |
அறம் (=அறிவு) + ஈர் (=நுண்மை) + அம் = அற்றீரம் >>> சத்திரம் >>> சதுரம் = நுட்பமான அறிவு |
சதுனி, CATHUNI |
வவ்வால், BAT |
அதிணிழி |
ஆதி (=பாதம்) + இணை (=பொருத்து, பற்று) + இழி (=தாழ்) = அதிணிழி >>> அதுணி >>> சதுனி = பாதங்களால் பற்றிக்கொண்டு தாழ்ந்திருப்பது = வவ்வால். |
சதேரன், CATHAERAN |
பகைவன், ENEMY |
எதிரி |
எதிரி (=பகைவன்) + அன் = எதிரன் >>> அதேரன் >>> சதேரன் |
சதை, CATHAI |
கூழ், PULP |
சேறு |
சேறு (=கூழ்) + ஐ = செறை >>> செதை >>> சதை |
சதை, CATHAI |
சோடி, PAIR |
அத்தை |
அத்து (=பொருந்து, இணை) + ஐ = அத்தை >>> சத்தை >>> சதை = இணைந்திருப்பது |
சதை, CATHAI |
கண், EYE |
எயிறு |
எயிறு (=கண்) + இ = எயிறை >>> அய்தை >>> சதை |
சதோடம், CATHOATAM |
குற்றமுடையது, HAVING FLAW |
எதொட்டம் |
ஏதம் (=குற்றம்) + ஒட்டு (=பொருந்து) + அம் = எதொட்டம் >>> அதோடம் >>> சதோடம் = குற்றம் பொருந்தியது |
சந்தகம், CANTHAKAM |
இடியாப்பம், MOULDED VERMICELLI |
ஆழ்த்தகம் |
ஆழ்த்து (=அமுக்கு, பிழி) + அகை (=எரி, அவி) + அம் (=நீர், நீளம், உணவு) = ஆழ்த்தகம் >>> சாத்தகம் >>> சந்தகம் = அமுக்கிப் பிழிந்து நீரில் அவித்த நீண்ட உணவு |
சந்தகம், CANTHAKAM |
இன்பம், JOY |
எத்தகம் |
ஏதம் (=துன்பம்) + அகை (=நீங்கு, இல்லாகு) + அம் = எத்தகம் >>> அந்தகம் >>> சந்தகம் = துன்பமின்மை = இன்பம் |
சந்தகன், CANTHAKAN |
சந்திரன், MOON |
அந்தகன் |
அந்தி (=இரவு) + அகை (=எரி, ஒளிர்) + அன் = அந்தகன் >>> சந்தகன் = இரவில் ஒளிர்பவன் |
சந்தசு, CANTHACU |
இசைப்பாட்டு, MUSICAL SONG |
சத்தசு |
சத்தம் (=இசை, சொல்) + அசை (=கட்டு) + உ = சத்தசு >>> சந்தசு = இசைச் சொற்களால் கட்டப்படுவது = இசைப்பாட்டு |
சந்தடி, CANTHATI |
இரைச்சல், TUMULT |
சத்தடி |
சத்தம் + அடு (=சேர், மிகு) + இ = சத்தடி >>> சந்தடி = மிகுந்த சத்தம் = இரைச்சல், கூச்சல். |
சந்தடி, CANTHATI |
கூட்டம், CROWD |
அத்தடி |
அத்து (=பொருந்து, கூடு) + அடை + இ = அத்தடி >>> அந்தடி >>> சந்தடி = கூடி அடைவது = கூட்டம். |
சந்ததம், CANTHATHAM |
எப்போதும், ALWAYS |
அற்றறம் |
அற்றம் (=காலம்) + அற (=முழுவதும்) + அம் = அற்றறம் >>> சத்ததம் >>> சந்ததம் = காலம் முழுவதும் |
சந்ததி, CANTHATHI |
பரம்பரை, LINEAGE |
எய்தாதி |
எய்து (=தோன்று, பெறு) + ஆதி (=ஒன்று, மூலம்) = எய்தாதி >>> அத்ததி >>> சந்ததி = ஒரே மூலத்தில் தோன்றிப் பெறப்படுபவை = பரம்பரை |
சந்ததி, CANTHATHI |
குழந்தை, BABY |
எய்தாதி |
எய்து (=தோன்று, பெறு) + ஆதம் (=உயிர்) + இ = எய்தாதி >>> அத்ததி >>> சந்ததி = உயிர் தோன்றிப் பெறுவது |
சந்தம், CANTHAM |
அழகு, BEAUTY |
ஐது |
ஐது (=அழகு) + அம் = ஐதம் >>> அத்தம் >>> சந்தம் |
சந்தம், CANTHAM |
நிறம், COLOUR |
அத்தம் |
அத்து (=பொருந்து) + அம் (=ஒளி) = அத்தம் >>> சந்தம் = பொருந்திய ஒளி = நிறம். |
சந்தம், CANTHAM |
வடிவம், FORM |
எய்தம் |
எய்து (=தோன்று) + அம் = எய்தம் >>> அத்தம் >>> சந்தம் = தோன்றுவது = தோற்றம், வடிவம் |
சந்தம், CANTHAM |
இன்பம், DELIGHT |
அற்றேம் |
அறு (=இல்லாகு) + ஏம் (=வருந்து) = அற்றேம் >>> சத்தேம் >>> சந்தம் = வருத்தம் இன்மை = இன்பம். |
சந்தம், CANTHAM |
வழக்கம், CUSTOM |
அற்றம் |
ஆறு (=வழி, நெறிமுறை) + அம் (=நீளம், தொடர்ச்சி) = அற்றம் >>> சத்தம் >>> சந்தம் = தொடரும் நெறிமுறை |
சந்தம், CANTHAM, சந்து, CANTHU, சந்தை, CANTHAI |
இசைப்பாட்டு, MUSICAL SONG |
சற்றம் |
சாற்று (=ஒலி, சொல், அமை) + அம் (=இனிமை) = சற்றம் >>> சத்தம் >>> சந்தம் = இனிமையாய் ஒலிக்கும் சொற்களால் அமைக்கப்படுவது = இசைப்பாட்டு. |
சந்தம், CANTHAM |
எண்ணம், THOUGHT |
அறம் |
அறம் (=அறிவு, எண்ணம்) >>> சதம் >>> சந்தம் |
சந்தம், CANTHAM, சாந்தம், CAANTHAM, சந்து, CANTHU |
சந்தனம், SANDAL |
அற்றம் |
ஆற்று (=கூட்டு, சூட்டைத் தணி) + அம் (=நீர், ஒளி, பொருத்து, பூசு) = அற்றம் >>> சத்தம் >>> சந்தம் = சூட்டைத் தணிப்பதற்காக நீருடன் கூட்டிப் பூசும் ஒளிரும் பொருள். |
சந்தம், CANTHAM |
ஓட்டை, HOLE |
அறை |
அறை (=குகை, ஓட்டை) + அம் = அற்றம் >>> சத்தம் >>> சந்தம் = துளை. |
சந்தம், CANTHAM |
நஞ்சு, POISON |
அற்றம் |
அறு (=கொல்) + அம் (=உணவு) = அற்றம் >>> சத்தம் >>> சந்தம் = கொல்லும் உணவு = நஞ்சு |
சந்தம், CANTHAM |
சந்திரன், MOON |
அந்தம் |
அந்தி (=இரவு) + அம் (=ஒளி) = அந்தம் >>> சந்தம் = இரவில் ஒளியாக இருப்பது = சந்திரன் |
சந்தயம், CANTHAYAM |
சந்தேகம், DOUBT |
அற்றாயம் |
அற்றம் (=முடிவு, உறுதி) + ஆய் (=நீங்கு) + அம் = அற்றாயம் >>> சத்தாயம் >>> சந்தயம் = உறுதி இல்லாதது |
சந்தர்த்தாரை, CANTHARTHTHAARAI |
ஓயாத மழை, INCESSANT RAIN |
அற்றறுதாரை |
அற்றம் (=முடிவு) + அறு (=இல்லாகு) + தாரை (=மழை) = அற்றறுதாரை >>> சத்தருதாரை >>> சந்தர்த்தாரை = முடிவு இல்லாத மழை. |
சந்தர்ப்பம், CANTHARPPAM |
அருமையான பொழுது, OCCASION |
அற்றருப்பம் |
அற்றம் (=பொழுது) + அருப்பம் (=அருமை) = அற்றருப்பம் >>> சத்தருப்பம் >>> சந்தர்ப்பம் = அருமையான பொழுது |
சந்தரி, CANTHARI |
துளசி, BASIL |
செற்றரி |
செற்றை (=இலை) + அரி (=திருமால், பச்சை) = செற்றரி >>> சத்தரி >>> சந்தரி = திருமாலுக்கான பச்சிலை. |
சந்தனம், CANTHANAM |
குளிர்ச்சிக்காக பூசும் பொருள், SANDAL |
அற்றணம் |
ஆற்று (=கூட்டு, சூட்டைத் தணி) + அணி (=பூசு) + அம் (=நீர், ஒளி) = அற்றணம் >>> சத்தணம் >>> சந்தனம் = சூட்டைத் தணிப்பதற்காக நீருடன் கூட்டிப் பூசும் ஒளிரும் பொருள். |
சந்தனம், CANTHANAM |
புகைவண்டி, TRAIN |
அற்றணம் |
அறு (=நீங்கு, செல்) + அணி (=வரிசை, பொருந்து) + அம் = அற்றணம் >>> சத்தனம் >>> சந்தனம் = வரிசையாய்ப் பொருந்திச் செல்வது = புகைவண்டி. |
சந்தா, CANTHAA |
முன்பதிவுக் கட்டணம், SUBSCRIPTION |
அற்றாய் |
அற்றம் (=காலம், உறுதி) + ஆய் (=தேர்ந்தெடு, பணம்) = அற்றாய் >>> சத்தா >>> சந்தா = தேர்ந்தெடுத்த காலத்திற்கான உறுதிப் பணம் |
சந்தாபம், CANTHAAPAM |
சுடுகை, SCORCHING |
அற்றாவம் |
ஆற்று (=நீக்கு) + ஆவி + அம் (=நீர்) = அற்றாவம் >>> அத்தாபம் >>> சந்தாபம் = நீரை ஆவியாக நீக்குதல். |
சந்தாபம், CANTHAAPAM |
துன்பம், DISTRESS |
அற்றவம் |
அறம் (=இன்பம்) + அவி (=அழி, இல்லாகு) + அம் = அற்றவம் >>> சத்தபம் >>> சந்தாபம் = இன்பம் இல்லாமை |
சந்தாபம், CANTHAAPAM |
பாவத்திற்கு இரங்கல், REPENTANCE |
அற்றாவம் |
அற்றம் (=குற்றம், வருத்தம்) + ஆவி (=மனம்) + அம் = அற்றாவம் >>> சத்தாபம் >>> சந்தாபம் = குற்றத்திற்காக மனம் வருந்துதல் = பாவத்திற்கு இரங்கல் |
சந்தாபம், CANTHAAPAM |
நரகம், |
அற்றவம் |
அற்றம் (=அழிவு, மரணம், குற்றம்) + அவை (=வருத்து, இடம்) + அம் = அற்றவம் >>> சத்தபம் >>> சந்தாபம் = மரணித்தோர் குற்றத்திற்காக வருத்தப்படும் இடம் = நரகம் |
சந்தாயம், CANTHAAYAM |
கூடிச் செய்வது, COMMUNAL ACTION |
அற்றாயம் |
ஆற்று (=நடத்து) + ஆயம் (=கூட்டம்) = அற்றாயம் >>> சத்தாயம் >>> சந்தாயம் = கூடி நடத்துவது |
சந்தானகரணி, CANTHAANAKARANHI |
வெட்டிய உறுப்பைப் பொருத்தும் மருந்து, REUNITING MEDICINE |
அற்றணைகரணி |
அறை (=துண்டி, உறுப்பு) + அணை (=பொருத்து) + கரணி (=மருந்து) = அற்றணைகரணி >>> சத்தணகரணி >>> சந்தானகரணி = துண்டித்த உறுப்பைப் பொருத்தும் மருந்து |
சந்தானம், CANTHAANAM |
குழந்தை, BABY |
எய்தணம் |
எய்து (=தோன்று, பெறு) + அணு (=உயிர்) + அம் = எய்தணம் >>> அத்தணம் >>> சந்தானம் = உயிர் தோன்றிப் பெறுவது. |
சந்தானம், CANTHAANAM |
பரம்பரை, LINEAGE |
அத்தணம் |
ஆதி (=ஒன்று, மூலம்) + அணை (=உண்டாகு, தோன்று) + அம் = அத்தணம் >>> சந்தானம் = ஒரே மூலத்தில் தோன்றியவை |
சந்தானம், CANTHAANAM |
அம்பெய்கை, ARCHERY |
எய்தனம் |
எய் + தனு (=வில்) + அம் (=அம்பு) = எய்தனம் >>> அத்தனம் >>> சந்தானம் = வில்லில் அம்பெய்தல் |
சந்தி, CANTHI, சந்திப்பு, CANTHIPPU, சந்து, CANTHU |
சந்திப்பு, JUNCTION |
அத்தி |
அத்து (=பொருந்து, கூடு, வழி, இடம்) + இ = அத்தி >>> சத்தி >>> சந்தி = வழிகள் கூடுமிடம் |
சந்தி, CANTHI, சந்திப்பு, CANTHIPPU, சந்து, CANTHU |
கூடுகை, UNION |
அத்தி |
அத்து (=கூடு) + இ = அத்தி >>> சத்தி >>> சந்தி = கூடுகை. |
சந்தி, CANTHI, சந்து, CANTHU |
பொழுது, TIME |
அற்றம் |
அற்றம் (=பொழுது) + இ = அற்றி >>> சத்தி >>> சந்தி |
சந்தி, CANTHI |
மூங்கில், BAMBOO |
அற்றெழி |
அறை (=குகை, துளை) + எழு (=உயர், மரம்) + இ = அற்றெழி >>> சத்தெயி >>> சந்தி = துளையுடைய உயரமான மரம் |
சந்தி, CANTHI |
சேர், JOIN |
அத்து |
அத்து (=பொருத்து, சேர்) >>> சத்து >>> சத்தி >>> சந்தி |
சந்தி, CANTHI, அந்தி, ANTHI |
இரவு, NIGHT |
அற்றம் |
அற்றம் (=இரவு) + இ = அற்றி >>> அத்தி >>> அந்தி >>> சந்தி |
சந்தி, CANTHI, அந்தி, ANTHI |
மாலை, EVENING |
அற்றூழி |
அற்றம் (=மறைவு, பொழுது) + ஊழ் (=வெயில், ஒளி) = அற்றூழ் >>> சத்தூய் >>> சந்தி = ஒளி மறையும் பொழுது |
சந்தி, CANTHI |
வழிபாடு, வணக்கம், WORSHIP |
சற்றி |
சாற்று (=இசை, புகழ், போற்று) + இ = சற்றி >>> சத்தி >>> சந்தி = இசையுடன் போற்றுதல் = வழிபாடு, வணக்கம் |
சந்தி, CANTHI |
திருவிழா, FESTIVAL |
சாறு |
சாறு (=திருவிழா) + இ = சற்றி >>> சத்தி >>> சந்தி |
சந்தி, CANTHI |
பாடை, BIER |
அற்றி |
அற்றம் (=அழிவு, மரணம், சோர்வு, உறக்கம்) + இ = அற்றி >>> சத்தி >>> சந்தி = மரணித்தோர் உறங்குவது |
சந்தி, CANTHI |
எய், SHOOT |
எறி |
எறி (=எய்) >>> எதி >>> செதி >>> சதி >>> சந்தி |
சந்திப்பு, CANTHIPPU |
காணிக்கை, OFFERING AT MEETING |
சந்தீவு |
சந்தி (=காண்) + ஈவு (=கொடை) = சந்தீவு >>> சந்திப்பு = கண்டு கொடுப்பது. = காணிக்கை. |
சந்தியை, CANTHIYAI |
மல்லிகை, JASMINE |
அற்றூழை |
அறு (=அகற்று) + ஊழ் (=கெட்டநாற்றம், மலர், ஒளி, வெண்மை) + ஐ = அற்றூழை >>> சத்தூயை >>> சந்தியை = கெட்ட நாற்றத்தை அகற்றும் வெண்மலர் |
சந்திரகம், CANTHIRAKAM |
தேனீ, BEE |
சற்றீரகம் |
சாறு (=தேன்) + ஈர் (=உண்) + அகம் (=பறவை) = சற்றீரகம் >>> சத்திரகம் >>> சந்திரகம் = தேன் உண்ணும் பறவை |
சந்திரகம், CANTHIRAKAM |
மயில் தோகை, PEACOCK’S TAIL |
எயிற்றிறகம் |
எயிறு (=கண்) + இறகு + அம் (=அழகு, நீளம்) = எயிற்றிறகம் >>> அத்திரகம் >>> சந்திரகம் = அழகிய கண்களைக் கொண்ட நீண்ட இறகு = மயில் தோகை. |
சந்திரகம், CANTHIRAKAM, சந்திரி, CANTHIRI, சந்திரிகை, சந்திரிகம், CANTHIRIKAI, CANTHIRIKAM |
ஓலையின் உறைச் சுருள், OLA ENVELOPE IN FORM OF RING |
அத்திறகம் |
ஆதி (=வட்டம், வளையம்) + இறை (=இலை, ஓலை) + அகம் (=உள்ளடக்கம்) = அத்திறகம் >>> சந்திரகம் = ஓலையை உள்ளடக்கிய வளையம். |
சந்திரகம், CANTHIRAKAM |
வெண்மிளகு, WHITE PEPPER |
அழற்றீரகம் |
அழற்றி (=மிளகு) + ஈரம் + கம் (=வெண்மை) = அழற்றீரகம் >>> சய்த்திரகம் >>> சந்திரகம் = வெண்மையான ஈரமிளகு |
சந்திரகம், CANTHIRAKAM |
நகம், NAIL |
அத்தீரங்கம் |
அத்து (=பொருந்து) + ஈர் (=அறு, கீறு) + அங்கை (=விரல்) + அம் (=நீளம்) = அத்தீரங்கம் >>> சத்திரகம் >>> சந்திரகம் = விரலில் நீளமாகப் பொருந்திக் கீறுவது = நகம் |
சந்திரகி, CANTHIRAKI |
மயில், PEACOCK |
சந்திரகி |
சந்திரகம் (=மயில் தோகை) + இ = சந்திரகி = மயில் தோகையைக் கொண்டது = மயில். |
சந்திரம், CANTHIRAM |
கற்பூரம், CAMPHOR |
அற்றுரம் |
ஆற்று (=கொடு) + உரு (=எரி) + அம் (=ஒளி, அழகு) = அற்றுரம் >>> சத்துரம் >>> சந்திரம் = எரிந்து ஒளி தருகின்ற அழகிய பொருள் = கற்பூரம். |
சந்திரம், CANTHIRAM |
தங்கம், GOLD |
அழற்றிறம், சத்தீரம் |
(1) அழல் (=ஒளிர்) + திறம் (=செல்வம், மேன்மை) = அழற்றிறம் >>> சய்த்திரம் >>> சந்திரம் = ஒளிர்கின்ற மேலான செல்வம். (2) சாத்து (=அணி) + ஈர் (=கவர்) + அம் (=அழகு, ஒளி) = சத்தீரம் >>> சந்திரம் = கவரும் அழகுடைய ஒளியணி |
சந்திரம், CANTHIRAM |
நீர், WATER |
அற்றிரம் |
ஆற்று (=சூட்டைத் தணி) + இரி (=ஓடு, ஒழுகு) + அம் (=உணவு) = அற்றிரம் >>> சத்திரம் >>> சந்திரம் = சூட்டைத் தணிக்கின்ற ஒழுகும் உணவு = நீர். |
சந்திரன், CANTHIRAN |
நிலா, MOON |
அந்திறம் |
அந்தி (=இரவு) + இறை (=பாய்ச்சு) + அம் (=அழகு, ஒளி) = அந்திறம் >>> சந்திரம் >>> சந்திரன் = இரவில் அழகிய ஒளியைப் பாய்ச்சுபவன். |
சந்திராதபம், CANTHIRAATHAPAM |
நிலவொளி, MOON LIGHT |
சந்திரதாமம் |
சந்திரம் (=நிலா) + தாமம் (=ஒளி) = சந்திரதாமம் >>> சந்திராதபம் = நிலவின் ஒளீ |
சந்திரி, CANTHIRI |
நாட்காட்டி, CALENDAR |
அற்றீரி |
அற்றம் (=காலம்) + ஈர் (=கீறு, குறி) + இ = அற்றீரி >>> சத்திரி >>> சந்திரி = காலக் குறிப்பு |
சந்திரிகை, CANTHIRIKAI |
நிலா, MOON |
அந்திறைகை |
அந்தி (=இரவு) + இறை (=பாய்ச்சு) + கை (=ஒளி) = அந்திறைகை >>> சந்திரிகை = இரவில் ஒளி பாய்ச்சுபவன். |
சந்தில், CANTHIL |
சனி, SATURN |
அற்றில் |
அற்றம் (=இருள், கருமை) + இல் (=வீடு, கிரகம்) = அற்றில் >>> சத்தில் >>> சந்தில் = கரிய கிரகம் = சனி |
சந்தில், CANTHIL |
மூங்கில், BAMBOO |
அத்தெல் |
அத்து (=காடு, பொருத்து, மூட்டு) + எல் (=ஒளி, தீ) = அத்தெல் >>> சந்தில் = காட்டில் தீயை மூட்டுவது |
சந்து, CANTHU |
பொருத்து, JOINT |
அத்து |
அத்து (=பொருத்து) >>> சத்து >>> சந்து |
சந்து, CANTHU |
இடுப்பு, HIP |
சத்து |
அத்து (=அரைப்பட்டிகை, பொருத்து, இடம்) >>> சத்து >>> சந்து = அரைப்பட்டிகையைப் பொருத்தும் இடம் = இடுப்பு |
சந்து, CANTHU |
குறுகிய வழி, LANE |
அத்தோய் |
அத்தம் (=வழி) + ஓய் (=சுருங்கு) = அத்தோய் >>> சத்துய் >>> சந்து = சுருங்கிய வழி |
சந்து, CANTHU |
பிளவு, CLEAVAGE |
அறை |
அறை (=பிரிவு, பிளவு) + உ = அற்று >>> சத்து >>> சந்து |
சந்து, CANTHU |
தூது, MESSAGE, தூதன், MESSENGER |
அத்துய் |
அத்து (=பொருத்து, சேர்) + உய் (=நீக்கு, பிரி, அனுப்பு) = அத்துய் >>> சத்து >>> சந்து = பிரிவை நீக்கிச் சேர்த்து வைப்பதற்காக அனுப்பப் படுவது = தூது |
சந்து, CANTHU |
சமாதானம், RECONCILIATION |
அத்துய் |
அத்து (=பொருத்து, சேர்) + உய் (=நீக்கு, பிரி, அறிவி, சொல்) = அத்துய் >>> சத்து >>> சந்து = பிரிவை நீக்கிச் சேர்த்து வைப்பதற்காகச் சொல்லப் படுவது = சமாதானம் |
சந்துட்டி, CANTHUTTI, சந்துச்~டி, CANTHUSHTI |
மகிழ்ச்சி, JOY |
அந்துட்டி |
அந்தம் (=கேடு, துன்பம்) + உடை (=அழி, இல்லாகு) + இ = அந்துட்டி >>> சந்துட்டி >>> சந்துச்~டி = துன்பம் அற்றது |
சந்துடி, CANTHUTI |
ஏலம், CARDAMOM |
சற்றொட்டி |
சாறு (=நறுமணம்) + ஒட்டு (=தோல்) + இ = சற்றொட்டி >>> சத்துட்டி >>> சந்துடி = நறுமணத் தோல் உடையது |
சந்தூக்கு, CANTHOOKKU |
சிறுபெட்டி, HAND BOX |
ஆய்தூக்கு |
ஆய் (=சிறுமை) + தூக்கு (=பெட்டி) = ஆய்தூக்கு >> அத்தூக்கு >>> சத்தூக்கு >>> சந்தூக்கு = சிறுபெட்டி |
சந்தேகம், CANTHAEKAM |
ஐயம், DOUBT |
அற்றெஃகம் |
அற்றம் (=முடிவு, அழிவு) + எஃகு (=எட்டு, ஆராய்) + அம் = அற்றெஃகம் >>> சத்தேகம் >>> சந்தேகம் = முடிவை எட்டாமல் ஆராய்தல். |
சந்தேகம், CANTHAEKAM |
ஆராய்ச்சி, RESEARCH |
அற்றெஃகம் |
அறம் (=எண்ணம்) + எஃகு (=ஆராய்) + அம் = அற்றெஃகம் >>> சத்தேகம் >>> சந்தேகம் = ஆராயும் எண்ணம். |
சந்தேகம், CANTHAEKAM |
மறைகேடு, RISK |
அற்றேகம் |
அற்றம் (=மறைந்திருப்பது, கேடு) + ஏகு (=நட, நிகழ்) + அம் = அற்றேகம் >>> சத்தேகம் >>> சந்தேகம் = மறைந்திருந்து நிகழும் கேடு = ஆபத்து. |
சந்தேசம், CANTHAECAM |
தூது, MESSAGE |
அத்தேயம் |
அத்து (=பொருத்து, சேர்) + ஏ (=செலுத்து, அனுப்பு) + அம் (=சொல்) = அத்தேயம் >>> சத்தேசம் >>> சந்தேசம் = சேர்த்து வைப்பதற்காகச் சொல்லி அனுப்பப் படுவது = தூது |
சந்தை, CANTHAI |
கடைத்தெரு, BAZAAR |
சாத்து |
சாத்து (=வணிகக் கூட்டம்) + ஐ = சத்தை >>> சந்தை = வணிகர் கூட்டத்தைக் கொண்டது = கடைத்தெரு |
சந்தை, CANTHAI |
கூட்டம், CROWD |
சாத்து |
சாத்து (=கூட்டம்) + ஐ = சத்தை >>> சந்தை |
சந்தோசம், CANTHOACAM |
இன்பம், JOY |
அற்றோயம் |
அற்றம் (=கேடு, துன்பம்) + ஓய் (=அழி, இல்லாகு) + அம் = அற்றோயம் >>> சத்தோசம் >>> சந்தோசம் = துன்பமின்மை |
வேதம், VAETHAM |
மறைமொழி, VEDA |
மாறம் |
மறை + அம் (=சொல், மொழி) = மாறம் >>> வாதம் >>> வேதம் = மறைமொழி |
தசை, THACAI |
மாமிசம், MEAT |
தெயாய் |
தேயம் (=உடல்) + ஆய் (=கொய்) = தெயாய் >>> தெயை >>> தசை = கொய்யப்பட்ட உடல் |
பாதம், PAATHAM |
காலடி, FOOT |
பாதம் |
பதி (=பூமி, ஊன்று) + அம் = பாதம் = பூமியில் ஊன்றப் படுவது = காலடி.. |
ஆதி, AATHI |
பாதம், FOOT |
ஆத்தி |
அத்து (=பூமி, பொருத்து, பதி, வரையறை, உறுப்பு) + இ = ஆத்தி >>> ஆதி = பூமியில் பதிக்கும் உறுப்பு = பாதம். |
ஆதி, AATHI |
பூமி, EARTH |
ஆற்றி |
ஆற்று (=பொறு, சும) + இ = ஆற்றி >>> ஆத்தி >>> ஆதி = சுமப்பது = பூமி. |
ஆதி, AATHI |
வட்டம், CIRCLE |
ஆறி |
அறுவு / அறு (=முழுமை) + இ = ஆறி >>> ஆதி = வட்டம் |
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.