ஞாயிறு, 16 ஜனவரி, 2022

1. (அக்குளு > அணை) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் (Tamil Etymological Dictionary- Part 1 - akkulu to anai )

 

தமிழ்ச்சொல்

பொருள்

மேற்கோள்

பிறப்பியல்

அக்குளு

தயக்கம்

கலி. 94

ஆக்கு (=செய்) + இளை (=சோர், பின்வாங்கு) + உ = அக்கிளு >>> அக்குளு = செய்வதற்குப் பின்வாங்குதல்

அகடு

கண்ணிமை

நற். 370

ஆகம் (=கண்) + அடை (=பொருந்து, மூடு) + உ = அகடு = கண்களைப் பொருந்தி மூடுவது = கண்ணிமை

அகடு

வயிறு

ஐங். 81

அகம் (=உள்ளிடம்) + அடை (=சேர், தங்கு, உணவு) + உ = அகடு = உணவு சேர்ந்து தங்கும் உள்ளிடம் = வயிறு.

அகடு

உள்ளிடம்

புற. 390

அகம் (=உள்) + அடை (=இடம்) + உ = அகடு = உள்ளிடம்

அகப்பா

கோட்டை

நற். 14

அகை (=உயர், நீள், வளை, தடு) + பா (=காப்பு) = அகைப்பா >>> அகப்பா = உயரமாகவும் நீளமாகவும் வளைக்கப்பட்டுத் தடுக்கின்ற காப்பு.

அகல்

சிறுதீ விளக்கு

நெடு. 102

அகை (=எரி, தளிர், அறு) + அல் (=இருள்) = அகல் = எரியின் தளிரால் இருளை அறுப்பது = சிறுதீ விளக்கு

அகல்

முழுமை

கலி. 56

அகை (=அறு, குறை) + அல் (=இன்மை) = அகல் = குறைவின்மை = முழுமை

அகலம்

மார்பு

நற். 235

ஆகம் (=உடல்) + அள் (=செறிவு, திரட்சி, வலிமை) + அம் = அகளம் >>> அகலம் = திரண்டு வலுவான உடல் பகுதி

அகலம்

பெருமை

புற. 20

அகல் (=விரிவடை, பெரு) + அம் = அகலம் = பெருமை

அகவல்

பாட்டு

பதி. 43

அகவு (=பாடு) + அல் = அகவல் = பாட்டு

அகவலன்

பாடுவோன்

பதி. 43

அகவல் (=பாட்டு) + அன் = அகவலன் = பாடுபவன்

அகவன்

பாடுவோன்

மது. 223

அகவு (=பாடு) + அன் = அகவன் = பாடுவோன்

அகழி, அகழ்

மதில் சூழ் குளம்

புற. 18, 379

அகை (=வளை, சுற்று, தடு) + ஆழ் (=தோண்டு) + இ = அகாழி >>> அகழி = தடுப்புக்காக சுற்றிலும் தோண்டியது

அகளம்

நீர் ஏற்றும் கூடை

மலை. 104

அகை (=உயர்த்து, இழு) + ஆல் (=அகன்றசட்டி, நீர்) + அம் = அகாலம் >>> அகளம் = நீரை இழுத்து உயர்த்துவதற்கான அகன்ற சட்டி.

அகில்

நறுமண மர வகை

சிறு. 263

அகை (=கிளை, முறி, எரி, பரப்பு) + உள் (=இனிமை) = அகுள் >>> அகில் = எரித்தால் இனிமை பரப்பும் முறிகிளை

அங்கண்

அருள்

கலி. 37

ஐ (=மென்மை) + கண் (=உறுப்பு, உணர்த்துவது) = ஐங்கண் >>> அங்கண் = கண்களால் உணர்த்தும் மென்மை = அருள்

அங்காடி

கடை, கடைத்தெரு

மது. 430

ஆக்கம் (=பொருள், பணம், அமைப்பு) + ஆடு (=சொல்) + ஈ (=கொடு) = அக்காடீ >>> அங்காடி = பொருளுக்குப் பணம் சொல்லிக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்டது

அங்கி

தீ

பட். 54

அகை (=எரி) + இ = அக்கி >>> அங்கி = எரிப்பது = தீ

அங்குசம்

யானைத் தோட்டி

திரு. 110

எஃகு (=கூர்மை, இரும்பு, ஏறு) + ஓச்சு (=செலுத்து) + அம் (=நீளம்) = எஃகோச்சம் >>> அங்குசம் = ஏறிச் செலுத்துவதற்கான கூரிய நீண்ட இரும்பு

அங்கை

விரல்

முல். 95

(1) ஆய் (=எண்ணு, பிரி) + கை = அய்க்கை >>> அங்கை = எண்ணுவதற்காக கையில் பிரிக்கப்படுவது = விரல். (2) ஐ (=ஐந்து) + கை (=உறுப்பு, பிரிவு) = ஐக்கை >>> அங்கை = கையில் ஐந்தாகப் பிரிந்திருப்பது = விரல்

அச்சம், அச்சு

பயம்

குறு. 392, பரி. 3

அஞ்சு (=பயப்படு) + அம் = அஞ்சம் >>> அச்சம் = பயம்

அச்சிரம்

குளிர்காலம்

ஐங். 223

அசை (=நீங்கு, நடுங்கு) + எரி (=வெப்பம்) + அம் (=காலம்) = அச்செரம் >>> அச்சிரம் = வெப்பம் நீங்கி நடுங்கும் காலம்

அச்சு

அச்சுமரம்

புற. 102

ஆழி (=சக்கரம்) + உய் (=செலுத்து) = அழுய் >>> அசு >>> அச்சு = சக்கரங்களைச் செலுத்துவது = அச்சுமரம்

அசா

சோர்வு

அக. 47

ஆய் (=வருந்து, சோர்) + ஆ = அயா >>> அசா = வருத்தம், சோர்வு

அசுணம்

பூனை

அக. 88

அசை (=ஒலி, இசை) + உண் (=அனுபவி) + அம் (=புளகம், இனிமை, விலங்கு) = அசுணம் = இனிய இசையை அனுபவித்துப் புளகமுறும் விலங்கு = பூனை

அசும்பு

நீரூற்று

அக. 8

அயம் (=நீர், குளம்) + உப்பு (=பெருகு) = அயுப்பு >>> அசும்பு = நீர் பெருகுகின்ற குளம்

அசைவு

சோர்வு

நற். 81

அசை (=சோர்) + வு = அசைவு = சோர்வு

அசைவு

தங்கல்

அக. 255

அசை (=தங்கு) + வு = அசைவு = தங்கல்

அசோகம்

நறுமண மர வகை

கலி. 57

அசை (=வருத்து) + ஓ (=நீக்கு) + கம் (=நறுமணம்) = அசோகம் = வருத்தத்தை நீக்கும் நறுமணம் கொண்டது

அஞ்சல்

பயம்

குறி. 181

அஞ்சு (=பயப்படு) + அல் = அஞ்சல் = பயம்

அஞ்சனம்

அழகுக்காக பூசுவது

ஐங். 16

ஆசு (=நுட்பம்) + அணி (=முகம், அழகு, பூசு) + அம் = அச்சணம் >>> அஞ்சனம் = அழகுக்காக முகத்தில் பூசப்படும் நுண்பொருள் = பூச்சு மை / பூச்சு பொடி

அஞ்சில்

அழகுக்காக பூசுவது

அக. 129

ஆய் (=அழகு, நுண்மை) + எல் (=இரவு, கருமை) = அய்யெல் >>> அஞ்சில் = அழகுக்கான கரிய நுண்பொருள்

அஞ்ஞை

குழந்தை

அக. 15

ஆய் (=கொய், பிரித்தெடு, கொண்டாடு, அழகு, மென்மை, சிறுமை) + ஐ = அய்யை >>> அஞ்ஞை = கொய்து பிரித்தெடுத்து கொண்டாடப்படும் அழகும் மென்மையும் உடைய சிறியது = குழந்தை, குட்டி

அஞர்

சோர்வு, வருத்தம்

பொரு. 88, அக. 202

அயர் (=சோர், வருந்து) >>> அஞர் = சோர்வு, வருத்தம்

அடக்கம்

பணிவு

கலி. 32

அடங்கு (=பணி) + அம் = அடங்கம் >>> அடக்கம் = பணிவு

அடகு

இலைக்கறி

புற. 197

அடை (=இலை, உணவு, பெறு) + அகை (=எரி, சமை) + உ = அடகு = இலையைச் சமைத்துப் பெறும் உணவு

அடகு

இலை

புற. 318

ஆடு (=அசை) + அகை (=தளிர்) + உ = அடகு = தளிர்த்து அசைவது = இலை

அடங்கல்

குறைவு

கலி. 13

அடங்கு (=குறை) + அல் = அடங்கல் = குறைவு

அடங்கார்

பகைவர்

பதி. 39

அடங்கு (=பணி) + ஆ + ஆர் = அடங்கார் = பணியாதவர்

அட்டில்

சமையலறை

சிறு. 132

அடு (=சமை) + இல் (=வீடு, இடம்) = அட்டில் = வீட்டில் சமைக்கும் இடம் = சமையலறை

அடர்

ஒளித்தகடு

கலி. 140

ஏடு (=இதழ், தகடு) + ஆர் (=மின்னு, ஒளிர்) = எடார் >>> அடர் = ஒளிர்கின்ற தகடு

அடல்

கொலை

கலி. 102

அடு (=கொல்) + அல் = அடல் = கொலை

அடல்

வெற்றி

புற. 377

அடு (=வெல்) + அல் = அடல் = வெற்றி

அடல்

போர்

அக. 45

அடு (=போரிடு) + அல் = அடல் = போர்

அடல்

சமையல்

புற. 393

அடு (=சமை) + அல் = அடல் = சமையல்

அடார், அடாஅர்

கற்பொறி

புற. 19, மலை. 194

அறை (=பாறை, பள்ளம்) + ஆர் (=பொருத்து, கட்டு, மூடு, தண்டு) = அறார் >>> அடார் = பாறையால் பள்ளத்தை மூடுமாறு தண்டினைப் பொருத்திக் கட்டப்படுவது

அடிசில்

வெண் சோறு

புற. 188

அடு (=சமை, ஒப்பு) + செல் (=கறையான்) = அடுசெல் >>> அடிசில் = கறையானை ஒப்பச் சமைக்கப்பட்டது

அடிசில்

சமைத்த உணவு

குறி. 204

அடு (=சமை) + சில் = அடுசில் >>> அடிசில் = சமைக்கப்பட்டது = சமைத்த உணவு

அடியுறை

அடைக்கலம்

பரி. 18

அடி (=பாதம்) + உறை (=பொருந்து, வாழ்வு) = அடியுறை = பாதம் பொருந்திய வாழ்வு

அடுக்கம்

குன்று

நற். 233

அடை (=சேர், திரள், இடம்) + உகை (=உயர்) + அம் = அடுக்கம் = உயரமாகச் சேர்ந்து திரண்ட இடம் = குன்று

அடுக்கல்

குன்று

மலை. 19

அடை (=சேர், திரள், இடம்) + உகை (=உயர்) + அல் = அடுக்கல் = உயரமாகச் சேர்ந்து திரண்ட இடம் = குன்று

அடுப்பு

சூலை

புற. 164

ஆடு (=சமையல், முயலு) + பு = அடுப்பு = சமையல் முயலப்படுவது = சூலை

அடும்பு

கொடி வகை

நற். 145

அடை (=ஒப்பு, இலை, பிரிவு, பிளவு) + இழுவை (=நீட்டம், கயிறு) + உ = அடிழுவு >>> அடுயுபு >>> அடும்பு = பிளந்த இலைகளைக் கொண்ட நீண்ட கயிறு போன்றது 

அடை

வழி

அக. 75

ஆடு (=அசை, செல்) + ஐ = அடை = செல்வதற்கானது

அடை

இலை

அக. 96

ஏடு (=இலை) + ஐ = எடை >>> அடை

அடை

உணவு

புற. 366

அடு (=சமை) + ஐ = அடை = சமைக்கப்பட்டது

அடையல்

செருப்பு

பரி. 21

அடி (=பாதம்) + ஆழ் (=நுழை) + அல் = அடாழல் >>> அடையல் = பாதத்தில் நுழைக்கப்படுவது = செருப்பு

அணங்கு

பேய்

அக. 7

அணை (=அவி, இற) + அகம் (=உயிர்) + உ = அணக்கு >>> அணங்கு = இறந்த உயிர் = பேய்

அணங்கு

கோபம்

பதி. 11

எண் (=சிந்தி) + அகை (=எரி, வெப்புறு) + உ = எணக்கு >>> அணங்கு = வெப்புடைய சிந்தனை = சினம்

அணங்கு

நோய், துன்பம்

நற். 17, புற. 349

அணை (=சார்) + அகை (=வருத்து) + உ = அணக்கு >>> அணங்கு = சார்ந்து வருத்துவது = நோய், துன்பம்

அணங்கு

பேரழகு

நற். 9

அணி (=அழகு) + அகை (=எரி, ஒளிர்) + உ = அணக்கு >>> அணங்கு = ஒளிரும் அழகு = பேரழகு

அணங்கு

பேய் பிடித்தல்

நற். 322

அணை (=சார், பற்று) + அகம் (=ஆன்மா, பேய்) + உ = அணக்கு >>> அணங்கு = பேய் பற்றுதல்

அணங்கு

மோகினி

கலி. 52

அணி (=பெருமை, அழகு) + அகை (=வருத்து) + உ = அணக்கு >>> அணங்கு = பேரழகால் வருத்துபவள்

அணங்கு

கடவுள்

திரு. 289

ஆணம் (=பற்றுக்கோடு) + அகம் (=உயிர்) + உ = அணக்கு >>> அணங்கு = உயிர்களின் பற்றுக்கோடு = கடவுள்

அணங்கு

குட்டி

அக. 381

அணை (=பிற) + அகம் (=உயிர்) + உ = அணக்கு >>> அணங்கு = பிறந்த உயிர் = குட்டி

அணங்கு

கொலை

புற. 174

அணை (=அவி, அழி) + அகம் (=உயிர்) + உ = அணக்கு >>> அணங்கு = உயிரை அழித்தல் = கொலை

அண்டர்

இடையர்

குறு. 210

ஆன் (=பசு) + தார் (=கூட்டம், உடையோர்) = அன்றார் >>> அண்டர் = பசுக் கூட்டத்தை உடையோர் = இடையர்

அண்டர்

பகைவர்

பதி. 88

அண்டு (=பொருந்து, ஒட்டு) + ஆ + ஆர் = அண்டார் >>> அண்டர் = ஒட்டாதவர் = பகைவர்

அண்ணல்

உயரம்

நற். 236

அண (=தலையெடு, உயர்) + அல் = அண்ணல் = உயரம்

அண்ணல்

தலைமை, தலைவன்

குறி. 171, பதி. 81

அணி (=கூட்டம், முகம்) + அல் = அண்ணல் = கூட்டத்தின் முகமாக இருப்பது = தலைமை, தலைவன்

அண்மை

நெருக்கம்

கலி. 108

அள் (=செறி, நெருங்கு) + மை = அண்மை = நெருக்கம்

அணல்

கழுத்து

பெரு. 205

அணி (=முகம், தலை, பொருத்து, பகுதி) + அல் = அணல் = தலையைப் பொருத்துகின்ற பகுதி = கழுத்து

அணல்

தாடி

ஐங். 389

அணி (=முகம், பக்கம்) + அள் (=செறி) = அணள் >>> அணல் = முகத்தின் பக்கங்களில் செறிந்திருப்பது = தாடி

அணல்

தாடை, கன்னம்

நற். 22

அணி (=முகம், பக்கம்) + அல் = அணல் = முகத்தின் பக்கங்களாக இருப்பது = கன்னம், தாடை

அணி

அழகு

அக. 5

அல் (=இருள், கருமை, கறை) + நீ (=நீங்கு) = அனீ >>> அணி = இருள் / கறை நீங்கியது = ஒளி / அழகு

அணி

நெருக்கம்

புற. 375

அண் (=நெருங்கு) + இ = அணி = நெருக்கம்

அணில்

சிறு உயிர் வகை

பெரு. 85

அணி (=உயரம், பொருந்து, ஒலி, அழகு, வரிசை, வரி ) + எல் (=ஒளி, வெண்மை, இருள், கருமை) = அணெல் >>> அணில் = அழகான வெண்ணிற கருநிற வரிகளுடன் உயரத்தில் பொருந்தி ஒலிப்பது

அணை

படுக்கை

கலி. 72

அள் (=செறி, பொருந்து) + நை (=வாடு, சோர், நீங்கு) = அணை = சோர்வு நீங்கப் பொருந்துவது = படுக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.