புதன், 12 ஜனவரி, 2022

103. (சருக்கம் > சராத்தி) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சர்க்கம், CARKKAM, சருக்கம், CARUKKAM

பிரிவு, CHAPTER

எருக்கம்

எருக்கு (=வெட்டு, பிரி) + அம் = எருக்கம் >>> அருக்கம் >>> சருக்கம் >>> சர்க்கம் = பிரிவு

சர்க்கம், CARKKAM, சருக்கம், CARUKKAM

படைப்பு, CREATION

அர்க்கம்

ஆர் (=பெறு) + கம் (=உயிர்) = அர்க்கம் >>> சர்க்கம் = உயிரைப் பெறுதல் = பிறப்பு, படைப்பு

சர்க்கரை, CARKKARAI, சருக்கரை, CARUKKARAI

இனிப்பான பொடி உணவு, SUGAR

அருக்காராய்

அருக்கு (=காய்ச்சு) + ஆர் (=இன்புறு, தண்டு, பெறு, உண்) + ஆய் (=நுண்மை, பிரி) = அருக்காராய் >>> சருக்கரை >>> சர்க்கரை = தண்டிலிருந்து பிரித்துக் காய்ச்சிப் பெற்ற நுண்ணிய இனிய உணவு

சர்க்கா, CARKKAA

நூற்பு இராட்டினம், HAND SPINNING WHEEL

அருக்கா

அரி (=சக்கரம்) + உக்கம் (=கயிறு, நூல்) + ஆ (=ஆக்கு) = அருக்கா >>> சர்க்கா = நூல் ஆக்கும் சக்கரம்

சர்க்கார், CARKKAAR

அரசு, GOVERNMENT

அருக்கார்

அரி (=பகை) + உகு (=அழி) + ஆர் (=போரிடு, பூமி, நாடு) = அருக்கார் >>> சர்க்கார் = நாட்டின் பகையைப் போரிட்டு அழிப்பது = அரசு

சர்க்கார், CARKKAAR

தாழ்வாரம், VERANDAH BELOW A SLOPING ROOF

அருகார்

அருகு (=குறை, தாழ், நெருங்கு, ஒட்டு) + ஆர் (=தங்கு, இடம், மறை) = அருகார் >>> சர்க்கார் = தங்கும் இடத்தை ஒட்டித் தாழ்வாக மறைக்கப்படுவது.

சர்ச்சை, CARCCAI

சண்டை, DISPUTE

அரிச்சாய்

ஆர் (=ஒலி, பேசு) + இசை (=உடன்படு) + ஆய் (=நீங்கு, இல்லாகு) = அரிச்சாய் >>> சருச்சை >>> சர்ச்சை = உடன்பாடு இல்லாத பேச்சு = சண்டை, விவாதம்

சர்ச்சை, CARCCAI

ஆராய்ச்சி, RESEARCH

அறுய்யை

அறு (=பகு) + உய் (=அறி) + ஐ = அறுய்யை >>> சருச்சை >>> சர்ச்சை = பகுத்து அறிவது

சர்த்தி, CARTHTHI

வாந்தி, VOMIT

அருத்தி

ஆர் (=உண், ஒலி) + உத்து (=வெளியேற்று) + இ = அருத்தி >>> சர்த்தி = உண்டதை ஒலியுடன் வெளிப்படுத்துதல் = வாந்தி

சர்தார், CARTHAAR

படைத்தலைவன், ARMY HEAD

ஆர்த்தார்

ஆர் (=கட்டுப்படுத்து) + தார் (=படை) = ஆர்த்தார் >>> சர்தார் = படையைக் கட்டுப்படுத்துபவன் = படைத்தலைவன்

சர்ப்பம், CARPPAM

பாம்பு, SERPENT

அரவம்

அரவம் (=பாம்பு) >>> சரபம் >>> சர்ப்பம்

சர்ப்பனை, CARPPANAI

வஞ்சனை, DECEIT

அர்ப்பணை

ஆர் (=சொல், எதிர், மாறுபடு) + பண் (=செய்) + ஐ = அர்ப்பணை >>> சர்ப்பனை = சொல்லியதற்கு மாறாகச் செய்தல் = ஏமாற்றுவேலை

சர்ப்பி, CARPPI

நெய், GHEE

அர்ப்பி

ஆர் (=கல, உண்) + பை (=எரி, உருக்கு, ஒளி, உடல் வலிமை) + இ = அர்ப்பி >>> சர்ப்பி = உடல் வலிமைக்காக உருக்கி உணவில் கலக்கப்படும் ஒளிமிக்க உணவு. = நெய்

சர்ப்பிராசி, CARPPIRAACI

உண்டி உறைவிடம் கொடுத்தல், BOARDING & LODGING PROVISION

அர்ப்புரசி

ஆர் (=உண்) + புர (=கொடுத்துதவு) + அசை (=தங்கு) + இ = அர்ப்புரசி >>> சர்ப்பிராசி = உண்ணவும் தங்கவும் கொடுத்து உதவுதல்

சர்பத்து, CARPATHTHU

இனிய சிவப்பு பானம், RED SWEET DRINK

அருப்பத்து

ஆர் (=உண், குடி) + உப்பு (=இனிமை) + அத்து (=சிவப்பு) = அருப்பத்து >>> சர்பத்து = இனிப்பான சிவப்புநிற பானம்

சர்பரா, CARPARAA, சரபரா, CARAPARAA

உண்ணக் கொடுத்தல், PURVEYING

அர்மாறா

ஆர் (=உண்) + மாறு (=கொடுத்துதவு) + ஆ = அர்மாறா >>> சர்பரா = உண்ணக் கொடுத்து உதவுதல்

சர்பராச்^, CARPARAAJ

புகழ்பெற்ற, FAMOUS

அர்பாராய்

ஆர் (=பரவு) + பார் (=உலகம்) + ஆய் (=அறி) = அர்பாராய் >>> சர்பராச் = உலகத்தால் பரவலாக அறியப்பட்ட

சர்மம், CARMAM, சருமம், CARUMAM

தோல், SKIN

அரூவம்

ஆர் (=பொருந்து, மறை) + ஊ (=தசை) + அம் = அரூவம் >>> சருமம் >>> சர்மம் = தசையில் பொருந்தி மறைப்பது

சர்வதா, CARPATHAA

எப்போதும், ALWAYS

அர்பதா

ஆர் (=நிறை, முழுமையடை) + பதம் (=காலம்) + ஆ = அர்பதா >>> சர்வதா = காலம் முழுவதும்

சர்வம், CARVAM

முழுமை, WHOLENESS

ஆர்ப்பு

ஆர்ப்பு (=நிறைவு, முழுமை) + அம் = அர்ப்பம் >>> சர்வம் = முழுமை

சரக்க, CARAKKA

விரைவாக, FAST

அறக்க

அறு (=இல்லாகு) + அகை (=தாமதி) + அ = அறக்க >>> அரக்க >>> சரக்க = தாமதம் இன்றி = விரைவாக

சரக்கு, CARAKKU

நுகர்பொருள், CONSUMER GOODS

அராக்கு

ஆர் (=அனுபவி, நுகர்) + ஆக்கம் (=பொருள்) + உ = அராக்கு >>> சரக்கு = நுகர் பொருள், உணவு

சரக்கு, CARAKKU

மருந்து, MEDICINE

அரக்கு

அருமை (=நோய்) + அகை (=முறி) + உ = அரக்கு >>> சரக்கு = நோயை முறிப்பது = மருந்து

சரக்கு, CARAKKU

அரும்பொருள், RARE GOODS

அராக்கு

அருமை + ஆக்கம் (=பொருள்) + உ = அராக்கு >>> சரக்கு = அரும்பொருள்

சரக்கு, CARAKKU

உண்ணும் கள், TODDY

அராக்கு

அரி (=கள்) + ஆக்கம் (=உணவு) + உ = அராக்கு >>> சரக்கு = உண்ணும் கள்

சரக்கு, CARAKKU

பேரறிவு, GREAT KNOWLEDGE

அரக்கு

ஆர் (=நிறை) + அகம் (=அறிவு) + உ = அரக்கு >>> சரக்கு = நிறைந்த அறிவு

சரகத்து, CARAKATHTHU

எல்லை, BOUNDARY

அரகற்று

ஆர் (=நிலம்) + அகம் (=உள்ளிடம்) + அறு (=வரையறு) + உ = அரகற்று >>> சரகத்து = நிலத்தின் உள்ளிடத்தை வரையறுப்பது = எல்லை

சரகம், CARAKAM, சராகம், CARAAKAM

எல்லை, BOUNDARY

அறகம்

அறு (=வரையறு) + அகம் (=இடம்) = அறகம் >>> சரகம் = இடத்தை வரையறுப்பது = எல்லை

சரகம், CARAKAM

தேனீ, BEE

சறகம்

சாறு (=தேன்) + அகை (=பிரி) + அம் (=உண், பறவை) = சறகம் >>> சரகம் = தேனைப் பிரித்துண்ணும் பறவை

சரங்கம், CARANKAM

நஞ்சு, POISON

அறாக்கம்

அறு (=அழி, கொல்) + ஆக்கம் (=உணவு) = அறாக்கம் >>> சரகம் = கொல்லும் உணவு = நஞ்சு

சரசம், CARACAM

இனிய குணம், COURTEOUSNESS

அறசம்

ஆறு (=தன்மை) + அசை (=தங்கு, பொருந்து) + அம் (=இனிமை) = அறசம் >>> சரசம் = இனிமை பொருந்திய தன்மை = இனிய குணம்

சரசம், CARACAM

பரிகாசம், MOCKERY

அராயம்

ஆர் (=சூழ், ஒலி, பேசு) + ஆய் (=கொண்டாடு, சிரி, வருத்து) + அம் = அராயம் >>> சரசம் = சூழ்ந்து சிரித்துப் பேசி வருத்துதல் = பரிகாசம்

சரசம், CARACAM

காம விளையாட்டு, AMOROUS GESTURE

அரச்சம்

ஆர் (=பரவு, அனுபவி) + அச்சு (=உடல்) + அம் (=இனிமை) = அரச்சம் >>> சரசம் = உடலில் பரவி இன்பம் அனுபவித்தல் = காம விளையாட்டு

சரசம், CARACAM

மலிவு, CHEAPNESS

அரசம்

ஆர் (=பெறு) + அசை (=மெலி, குறை) + அம் = அரசம் >>> சரசம் = குறைவாகப் பெறப்படுவது

சரசம், CARACAM

உண்மை, TRUTH

அறசம்

அறை (=பொய்) + அசை (=நீங்கு) + அம் = அறசம் >>> சரசம் = பொய் நீங்கியது = உண்மை

சரசம், CARACAM

இனிய பேச்சு, SWEET TALK

அராயம்

ஆர் (=ஒலி, பேசு) + ஆய் (=கொண்டாடு, இன்புறு) + அம் = அராயம் >>> சரசம் = இனிமையாகப் பேசுதல்

சரசிசம், CARACICAM

தாமரை, LOTUS

அராழியம்

அரி (=சூரியன், வண்டு, இதழ்) + ஆழ் (=புதை, மறை, மூடு) + இயை (=பொருந்து, தங்கு) + அம் = அராழியம் >>> சரசிசம் = சூரியன் மறைந்ததும் தங்கிய வண்டுகளை இதழ்களால் மூடுவது = தாமரை

சரசிரூகம், CARACIROOKAM

தாமரை, LOTUS

அராழிறுக்கம்

அரி (=சூரியன், வண்டு, இதழ்) + ஆழ் (=புதை, மறை, மூடு) + இறுக்கு (=நெருக்கு) + அம் = அராழிறுக்கம் >>> சரசிரூகம் = சூரியன் மறைந்ததும் வண்டுகளை இதழ்களால் நெருக்கி மூடுவது = தாமரை

சரசு, CARACU

குளம், POND

அரயு

ஆர் (=நிறை, பெரு, இடம்) + அயம் (=நீர், பள்ளம்) + உ = அரயு >>> சரசு = நீர் நிறைந்த பெரிய பள்ளமான இடம்

சரஞ்சாம், CARANCAAM

தட்டுமுட்டுப் பொருட்கள், PARAPHERNALIA

அறச்சம்

அறை (=வீடு) + அச்சு (=ஆதாரம், உடல், பொருள்) + அம் = அறச்சம் >>> சரஞ்சாம் = வீட்டுக்கு ஆதாரமான பொருட்கள் = தட்டுமுட்டுச் சாமான்கள்

சரட்டை, CARATTAI, சிரட்டை, CIRATTAI

தேங்காய் ஓடு, COCONUT SHELL

செறட்டை

செறி (=வலுவாகு) + அடை (=உணவு, மூடு, உள்ளடக்கு) + ஐ = செறட்டை >>> சிரட்டை, சரட்டை = உணவை உள்ளடக்கி மூடியிருக்கும் வலுவான பொருள்.

சரடம், CARATAM

பச்சோந்தி, CHAMELEON

அராடம்

ஆர் (=நிறம், ஒப்பாக்கு, மறை) + ஆடை (=தோல்) + அம் = அராடம் >>> சரடம் = தோலின் நிறத்தை ஒப்பச்செய்து மறைத்துக் கொள்வது = பச்சோந்தி

சரடு, CARATU

கயிறு, ROPE

அரடு

ஆர் (=கட்டு) + அடை (=சேர்) + உ = அரடு >>> சரடு = சேர்த்துக் கட்ட உதவுவது = கயிறு

சரடு, CARATU

வரிசை, ROW

அறடு

ஆறு (=ஒழுங்கு) + அடை (=பொருந்து) + உ = அறடு >>> சரடு = ஒழுங்கு பொருந்தியது = வரிசை

சரடு, CARATU

தந்திரச்சொல், TRICKY TALK

அறடு

அறை (=வஞ்சனை) + அடை (=பொருந்து, சொல்) + உ = அறடு >>> சரடு = வஞ்சனை பொருந்திய சொல்

சரணம், CARANHAM, சரண், CARANH

பாதம், FOOT

அரணம்

ஆர் (=நிலம், தண்டு, கால்) + அண் (=பொருந்து, வெட்டு, பிரிவு) + அம் = அரணம் >>> சரணம் = நிலத்தில் பொருந்தும் காலின் பிரிவு

சரணம், CARANHAM, சரண், CARANH

பாடலின் பிரிவு, SECTION OF POEM

அரணம்

ஆர் (=ஒலி, பாடு) + அண் (=பிரிவு) + அம் = அரணம் >>> சரணம் = பாடலின் பிரிவு

சரணம், CARANHAM, சரண், CARANH

அடைக்கலம், REFUGE

அறணம்

அறு (=வருந்து, நீங்கு) + அணை (=சேர், இடம்) + அம் = அறணம் >>> சரணம் = வருத்தம் நீங்க சேரும் இடம்

சரணம், CARANHAM

மருத நிலத்தூர், TOWN IN AGRICULTURAL TRACTS

செறணம்

செறு (=வயல், உள்ளடக்கு) + அணை (=தங்குமிடம்) + அம் = செறணம் >>> சரணம் = வயல்களை உள்ளடக்கிய தங்குமிடம் = மருத நிலத்தூர்

சரணம், CARANHAM

வீடு, HOUSE

அரணம்

ஆர் (=மறை, தங்கு, கட்டு) + அணை (=இடம், தடு) + அம் = அரணம் >>> சரணம் = தங்குவதற்காகத் தடுத்தும் மறைத்தும் கட்டப்படும் இடம் = வீடு

சரணம், CARANHAM

மயில் தோகை, TAIL OF PEACOCK, மயில், PEACOCK

அரணம்

அரி (=மயிர், அழகு, கண்) + அணை (=பொருந்து) + அம் (=நீளம்) = அரணம் >>> சரணம் = மயிர்களால் பொருந்திய அழகிய கண்களைக் கொண்டு நீண்டிருப்பது

சரணம், CARANHAM

பெருங்காயம்,

சறணம்

சாறு (=நறுமணம், குழம்பு, கரைசல்) + அணை (=சேர்) + அம் = சறணம் >>> சரணம் = நறுமணத்திற்காக குழம்பில் கரைத்துச் சேர்க்கப்படுவது = பெருங்காயம்

சரணம், CARANHAM

அங்குசம், ELEPHANT GOAD

அரானம்

அரி (=தண்டு, கூர்மை, வருத்து) + ஆனை (=யானை) + அம் (=நீளம்) = அரானம் >>> சரணம் = யானையை வருத்துகின்ற நீண்ட கூரிய தண்டு

சரணி, CARANHI

வழி, PATH

அறணி

அறு (=இயங்கு, இல்லாகு) + அணை (=தடை) + இ = அறணி >>> சரணி = இயங்குவதற்குத் தடை அற்றது

சரத்து, CARATHTHU

குளிர்ச்சி, CHILLNESS

எரற்று

எரி (=வெப்பம்) + அறு (=இல்லாகு) + உ = எரற்று >>> அரத்து >>> சரத்து = வெப்பமின்மை = குளிர்ச்சி

சரதம், CARATHAM

உண்மை, TRUTH

அறற்றம்

அறு (=இல்லாகு) + அற்றம் (=பொய்) = அறற்றம் >>> சரத்தம் >>> சரதம் = பொய் இல்லாதது = உண்மை

சரபத்து, CARAPATHTHU

நரம்பிசைக் கருவி, KIND OF GUITAR

அராவாற்று

ஆர் (=கட்டு, ஒலி) + ஆவம் (=நரம்பு) + ஆற்று (=பொறு, நீளு) = அராவாற்று >>> சரபத்து = நீண்ட நரம்புகளால் கட்டி ஒலிக்கப்படுவது = நரம்பிசைக் கருவி

சரபம், CARAPAM

சிங்கங்கொல் பறவை FABULOUS BIRD

அரவம்

அரி (=சிங்கம்) + அவி (=கொல்) + அம் (=பறவை) = அரவம் >>> சரபம் = சிங்கத்தைக் கொல்லும் பறவை

சரபம், CARAPAM

வெட்டுக்கிளி, GRASS HOPPER

அரவம்

அரி (=தின், பசுமை, இலை) + அவி (=அழி) + அம் (=பறவை) = அரவம் >>> சரபம் = பச்சிலைகளைத் தின்று அழிக்கும் பறவை = வெட்டுக்கிளி

சரபம், CARAPAM

ஒட்டகம், CAMEL

அரவம்

ஆர் (=மிகு, நிலம், தங்கு, இயங்கு) + அவி (=வெப்புறு) + அம் = அரவம் >>> சரபம் = வெப்பம் மிக்க நிலத்தில் தங்கி இயங்குவது = ஒட்டகம்

சரபம், CARAPAM

ஆடு, SHEEP

அரவம்

ஆர் (=உண்) + அவி (=கொல்) + அம் (=விலங்கு) = அரவம் >>> சரபம் = உண்பதற்காகக் கொல்லப்படும் விலங்கு

சரம், CARAM

இயக்கம், MOVEMENT

அரம்

ஆர் (=பரவு, இயங்கு) + அம் = அரம் >>> சரம் = இயக்கம்

சரம், CARAM

மூச்சு, BREATH

அரம்

அரி (=சிறிதாக நுகர், நீக்கு, காற்று) + அம் = அரம் >>> சரம் = சிறிதாக நுகர்ந்து நீக்கப்படும் காற்று = மூச்சு

சரம், CARAM

அமைதியின்மை, RESTLESSNESS

அறம்

அறு (=இல்லாகு) + அம் (=பொருந்து, அமை) = அறம் >>> சரம் = அமைதி இல்லாமை

சரம், CARAM

அம்பு, ARROW

எறம்

எறி (=செலுத்து, கொல், பொழி) + அம் (=ஒப்பு, போர், நீர்) = எறம் >>> அரம் >>> சரம் = போரில் நீர்ப்பொழிவைப் போலச் செலுத்திக் கொல்ல உதவுவது

சரம், CARAM

நாணல், REED

அரம்

ஆர் (=வளர், நிலம், பொருந்து, பரவு, செறி, தண்டு) + அம் (=நீளம், நீர்) = அரம் >>> சரம் = நீர் பொருந்திய நிலத்தில் பரவிச் செறிந்து நீண்டு வளரும் தண்டு = நாணல்

சரம், CARAM

மாலை, STRING

அரம்

ஆர் (=பொருத்து, கட்டு) + அம் (=நீளம்) = அரம் >>> சரம் = நீளமாகப் பொருத்திக் கட்டப்படுவது 

சரம், CARAM

நீர், WATER

அரம்

ஆர் (=பூமி, பரவு, நிறை, உண்) + அம் = அரம் >>> சரம் = பூமியில் பரவி நிறைந்திருக்கும் உணவு = நீர்

சரம், CARAM

நீர்நிலை, POND

அரம்

ஆர் (=இடம், நிறை) + அம் (=நீர்) = அரம் >>> சரம் = நீர் நிறைந்துள்ள இடம்

சரம், CARAM

இசை, MUSIC

அரம்

ஆர் (=ஒலி) + அம் (=இனிமை) = அரம் >>> சரம் = இனிமையான ஒலி = இசை

சரம், CARAM

போர், BATTLE

அரம்

ஆர் (=போரிடு) + அம் = அரம் >>> சரம் = போர்

சரம், CARAM

தனிமை, LONELINESS

அறம்

அறு (=இல்லாகு) + அம் (=பொருந்து, சேர்) = அறம் >>> சரம் = சேர்ந்து இல்லாமை = தனிமை

சரமம், CARAMAM

மரணம், DEATH

அரமம்

ஆர் (=தங்கு, வாழ்) + அமை (=முடி, காலம்) + அம் = அரமம் >>> சரமம் = வாழும் காலத்தின் முடிவு

சரமம், CARAMAM

மேற்கு, WEST

அறவம்

ஆறு (=பக்கம், திசை) + அவி (=அடங்கு) + அம் (=ஒளி) = அறவம் >>> சரமம் = ஒளி அடங்கும் திசை

சரவணம், CARAVANHAM

கல்வி, EDUCATION

அறவணம்

அறம் (=கல்வி) + அணம் = அறவணம் >>> சரவணம்

சரவை, CARAVAI, சரவல், CARAVAL

எழுத்துப் பிழை, SPELLING MISTAKE

அரவை

அரி (=எழுத்து) + அவி (=கெடு, தவறு) + ஐ = அரவை >>> சரவை = எழுத்துத் தவறு

சரவியம், CARAVIYAM

அம்பெய்யும் இலக்கு, TARGET OF ARROW

சரவெயம்

சரம் (=அம்பு) + எய் + அம் = சரவெயம் >>> சரவியம் = அம்பு எய்யப்படுவது

சரவை, CARAVAI

கலங்கல் எழுத்து, ILLEGIBLE WRITING

அரேமை

அரி (=எழுத்து) + ஏம் (=கலங்கு) + ஐ = அரேமை >>> சரவை = கலங்கலான எழுத்து

சரவை, CARAVAI

தொந்தரவு, TROUBLE

அரவை

அரி (=இடைவிடு) + அவம் (=கேடு, துன்பம்) + ஐ = அரவை >>> சரவை = இடைவிட்டுத் துன்புறுத்தல்

சரவை, CARAVAI

திருத்தாத எழுத்து, UNCORRECTED VERSION

அரமை

அரி (=எழுத்து, இல்லாகு) + அமை (=சரியாக்கு, திருத்து) = அரமை >>> சரவை = திருத்தப் படாத எழுத்து

சரளம், CARALHAM, சராளம், CARAALHAM

தடையின்மை, FREE FROM OBSTRUCTION

அரலம்

ஆர் (=மறை, தடு) + அல் (=இன்மை) + அம் = அரலம் >>> சரளம் = தடையின்மை

சரளம், CARALHAM, சராளம், CARAALHAM

எளிது, EASINESS

அரலம்

அருமை (=கடினம்) + அல் (=இன்மை) + அம் = அரலம் >>> சரளம் = கடினமற்றது

சரளம், CARALHAM, சராளம், CARAALHAM

ஒழுங்கு, ORDER

அறலம்

அறு (=இல்லாகு) + அலை (=நிலைகெடு) + அம் = அறலம் >>> சரளம் = நிலைகேடு அற்றது = ஒழுங்கு

சரளி, CARALHI

ஓசை ஒழுங்கு,

அறாலி

ஆறு (=ஒழுங்கு) + ஆல் (=ஒலி, ஓசை) + இ = அறாலி >>> சரளி = ஓசை ஒழுங்கு

சரளி, CARALHI

கோழை, PHLEGM

அராலி

ஆர் (=செறி, பேசு, மறை, தடு, ஒப்பு) + ஆலம் (=நீர், பனிக்கட்டி) + இ = அராலி >>> சரளி = பனிக்கட்டியைப் போல் செறிந்து பேச்சைத் தடுக்கும் நீர்

சரன், CARAN

தூதன், MESSENGER

அரன்

ஆர் (=பேசு, சேர்) + அன் = அரன் >>> சரன் = பேசிச் சேர்த்து வைப்பவன் = தூதன்

சரன், CARAN

ஒற்றன், SPY

அரன்

ஆர் (=பேசு, பெறு, மறை) + அன் = அரன் >>> சரன் = பேசுவதை மறைந்திருந்து பெறுபவன்

சரசபம், CARACAPAM

கடுகு, MUSTARD

அராசவம்

ஆர் (=சேர், உண்) + ஆசு (=நுண்மை) + அவி (=நெய், புழுக்கு) + அம் = அராசவம் >>> சரசபம் = நெய்யுடன் சேர்த்து புழுக்கப்படும் நுண்ணிய உணவு

சரா, CARAA

குறிப்பு, HINT

அரா

ஆர் (=அருமை, சிறுமை, சொல்) + ஆ = அரா >>> சரா = சுருக்கிச் சொல்லப்படுவது = குறிப்பு

சரா, CARAA

கொஞ்சம், LITTLE

அருமை

அருமை (=சிறுமை) + ஆ = அரா >>> சரா = கொஞ்சம்

சராகம், CARAAKAM

நேர்பாதை, STRAIGHT ROAD

சரேகம்

சரி (=சமம், நேர்) + ஏகு (=செல்) + அம் = சரேகம் >>> சராகம் = நேராகச் செல்வது = நேர்பாதை

சராகை, CARAAKAI

வட்டில், ROUND VESSEL

அரகழி

ஆரம் (=வட்டம்) + அகழி (=பாத்திரம்) = அரகழி >>> சரகயி >>> சராகை = வட்டமான பாத்திரம்

சராங்கம், CARAANKAM

முழுமை, COMPLETENESS

அராக்கம்

ஆர் (=நிறை) + ஆகு (=முடி) + அம் = அராக்கம் >>> சராங்கம் = நிறைந்து முடிதல் = முழுமை

சராங்கம், CARAANKAM

தடையின்மை, FREE FROM OBSTRUCTION

அரேக்கம்

ஆர் (=மறை, தடு) + ஏகு (=நீங்கு, இல்லாகு) + அம் = அரேக்கம் >>> சராங்கம் = தடை இல்லாமை

சராங்கம், CARAANKAM

நேர்மை, STRAIGHTNESS

அரேக்கம்

அரி (=வளையம், வட்டம்) + ஏகு (=நீங்கு, இல்லாகு) + அம் = அரேக்கம் >>> சராங்கம் = வளைவு இல்லாமை

சராசரம், CARAACARAM

பேரண்டம், UNIVERSE

அராசரம்

ஆர் (=பூமி) + ஆசு (=பற்றுக்கோடு) + அரி (=சூரியன், சந்திரன்) + அம் = அராசரம் >>> சராசரம் = சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் பற்றுக்கோடாக இருப்பது

சராசரி, CARAACARI

சரிவீதம், AVERAGE

அறசறி

அறு (=வகு) + அசை (=கட்டு, கூட்டு) + அறி (=கணக்கிடு) = அறசறி >>> சராசரி = கூட்டி வகுத்துக் கணக்கிடுவது

சராசனம், CARAACANHAM

வில், BOW

சரேயணம்

சரம் (=அம்பு) + ஏ (=செலுத்து) + அணம் = சரேயணம் >>> சராசனம் = அம்பினைச் செலுத்துவது

சராப்பு, CARAAPPU

பொக்கிசதாரி, SHROFF

அரேமு

ஆர் (=பெறு) + ஏமம் (=பொக்கிசம், காவல்) + உ = அரேமு >>> சராப்பு = பொக்கிசங்களைப் பெற்றுக் காப்பவன்

சராய், CARAAY, சரா, CARAA

கால் சட்டை, TROUSERS

அரேய்

ஆர் (=தண்டு, கால், மறை, கட்டு, அணி) + ஏய் (=பொருந்து) = அரேய் >>> சராய் >>> சரா = காலுடன் பொருந்தி மறைக்குமாறு அணியப்படுவது

சராய், CARAAY

பயணியர் விடுதி, CARAVANSARY

அராய்

ஆர் (=பரவு, பயணி, தங்கு, கட்டு) + ஆய் (=வருந்து, நீக்கு) = அராய் >>> சராய் = பயண வருத்தம் நீக்கித் தங்குவதற்காகக் கட்டப்படுவது

சராயம், CARAAYAM

கூட்டப்பட்ட வரி, ADDITIONAL TAX

செராயம்

சேர் (=கூட்டு) + ஆயம் (=வரி) = செராயம் >>> சராயம் = கூட்டப்பட்ட வரி

சராயு, CARAAYU

கர்ப்பப்பை, WOMB

சரேழு

சரம் (=மூச்சு, உயிர், தனிமை, நீர்) + ஏழ் (=தோன்று) + உ = சரேழு >>> சராயு = உயிர் தனித்துத் தோன்றுகின்ற நீரைக் கொண்டது = கருப்பப்பை

சராவம், CARAAVAM

அகன்சிறு பாத்திரம், SHALLOW WIDE VESSEL

அராம்பம்

ஆர் (=சிறுமை, பரவு, அகலி) + ஆம்பி (=பாத்திரம்) + அம் = அராம்பம் >>> சராவம் = அகலமான சிறு பாத்திரம்

சராவம், CARAAVAM

மெலிந்து நீண்டது, LONG AND THIN

அராவம்

அரி (=மென்மை) + ஆ (=நீளு) + அம் = அராவம் >>> சராவம் = மெலிந்து நீண்டு இருப்பது

சராளம், CARAALHAM

பேதி, LOOSE MOTION

அரலம்

அரை (=வயிறு, நீக்கு, கழி) + அலை (=கலங்கு) + அம் = அரலம் >>> சராளம் = வயிறு கலங்கிக் கழிதல்

சராச்`தி, CARAASTHI, சராத்தி, CARAATHTHI

அசையும் சொத்து, MOVABLE PROPERTY

அரத்தி

ஆர் (=பரவு, அசை) + அத்தம் (=பொருள், சொத்து) + இ = அரத்தி >>> சராத்தி >>> சராச்`தி = அசையும் சொத்து

அரவம், ARAVAM, அரவு, ARAVU

பாம்பு, SERPENT

அராப்பம்

ஆர் (=பொருந்து, பூமி, நிலம், பரவு, செல்) + ஆப்பு (=உடல்) + அம் = அராப்பம் >>> அரவம் = நிலத்தில் உடல் பொருந்தியவாறு செல்வது = பாம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.