புதன், 26 ஜனவரி, 2022

3. (அரி > அலங்கல்) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 3 - Ari to Alankal

 

தமிழ்ச்

சொல்

பொருள்

மேற்கோள்

பிறப்பியல்

அரி

கருமை

திரு. 76

ஆர் (=ஒளிர்) + ஈ (=அழிவு) = அரீ >>> அரி = ஒளியின் அழிவு = இருள், கருமை

அரி

பன்றி

பெரு. 202

ஆர் (=உண், பூமி) + ஈ (=பிள) = அரீ >>> அரி = உணவுக்காக பூமியைப் பிளப்பது = பன்றி

அரி

நண்டு

பெரு. 473

ஆர் (=உண், பெறு, கைகளால் பற்று) + ஈ (=வெட்டு) = அரீ >>> அரி = கைகளால் பற்றி வெட்டி உண்பது

அரி

கட்டு

மது. 612

ஆர் (=கட்டு) + இ = அரி = கட்டு

அரி

கண்

நெடு. 164

ஆர் (=ஒளிர், பெறு, அனுபவி) + இ = அரி = ஒளியால் அனுபவம் பெறுவது = கண்

அரி

வண்டு

மது. 252

ஆர் (=பரவு, சுற்று, ஒலி, உண்) + இ = அரி = பரவிச் சுற்றிக்கொண்டு ஒலித்தவாறே உண்பது = வண்டு, தேனீ

அரி

நெற்கதிர்

மலை. 180

ஆர் (=நிலம், அழகு, பரவு, நிறை, உண், கட்டு) + ஈ (=அறு) = அரீ >>> அரி = நிலத்தை அழகாக்கிப் பரவி நிறைந்து அறுத்துக் கட்டப்படும் உணவு = நெற்கதிர்

அரி

வண்ணவரி

மலை. 45

ஆர் (=அழகு, பரப்பு, நீட்டு) + இ = அரி = அழகுக்காக நீட்டப்படுவது = வண்ணவரி

அரி

சிலம்பு

நற். 250

ஆர் (=கால், கட்டு, அணி, ஒலி) + இ = அரி = காலில் கட்டி அணியப்பட்டு ஒலிப்பது = சிலம்பு

அரி

கொட்டை

கலி. 69

ஆர் (=பரவு, ஆடு, ஒலி, நிறை) + இ = அரி = ஆட்டத்தில் ஒலிப்பதற்காக நிறைக்கப்படுவது = பரல், கொட்டை

அரி

கள்

அக. 122

ஆர் (=மரம், பெறு, குடி, அழகு, வெண்மை) + இ = மரத்திலிருந்து பெற்றுக் குடிக்கப்படும் வெண்ணிறத்தது

அரி

தீ

அக. 236

ஆர் (=பரவு, உண்) + ஈ (=அழி) = அரீ >>> அரி = பரவி உண்டு அழிப்பது -= தீ

அரி

வெண்மை

அக. 271

ஆர் (=மின்னு, நிறம்) + இ = அரி = மின்னல் நிறம்

அரி

அழகு, நிறம்

பெரு. 490, மலை. 413

ஆர் (=அழகு, நிறம்) + இ = அரி = அழகு, நிறம்

அரி

மென்மை

நற். 110

அரை (=தேய், மெலி) + இ = அரி = மெலிவு, மென்மை

அரி

தோல்

குறி. 193

ஆர் (=பொருந்து, மறை) + ஊ (=தசை) = அரூ >>> அரி = தசையில் பொருந்தி மறைப்பது = தோல்

அரி

மயிர்

பதி. 12

அரி (=அறு, நீக்கு, மென்மை, தோல்) >>> அரி = தோலில் இருந்து அறுத்து நீக்கப்படும் மென்பொருள் = மயிர்

அரி

பசுமை

கலி. 109

ஆர் (=பூமி, பொருந்து, பரவு, அழகு) + இ = அரி = பூமியில் பொருந்திப் பரவி அழகு சேர்ப்பது = பசுமை

அரி

நீர்

அக. 45

அரி (=தீ, அழி) >>> அரி = தீயை அழிப்பது = நீர்

அரி

ஒப்பு, சமம்

ஐங். 200

ஆர் (=ஒப்பு) + இ = அரி = ஒப்பு, சமம்

அரி

மலை

கலி. 91

ஆர் (=பரவு, நிறை, பெரு, நிலம்) + இ = அரி = பெருத்துப் பரந்திருக்கும் நிலம் = மலை

அரி

அரிசி

மலை. 180

அரி (=நெற்கதிர், நெல், நீக்கு, தோல்) + ஈ (=படை) = அரீ >>> அரி = நெல்லின் தோல் நீக்கிப் படைத்தது

அரி

மரம்

அக. 151

ஆர் (=மரம்) + இ = அரி

அரி

இரத்தம்

பரி. 10

அரி (=தோல், அறு, ஒழுகு) >>> அரி = தோலை அறுத்தால் ஒழுகுவது = இரத்தம்

அரிகால்

கதிர் அறுத்த தாள்

அக. 41

அரி (=நெற்கதிர், நீக்கு) + கால் (=தண்டு) = அரிகால் = நெற்கதிரில் இருந்து நீக்கிய தண்டு

அரிசி

தோல் நீக்கிய நெல்மணி

திரு. 233

அரி (=நெற்கதிர், நெல், நீக்கு, தோல்) + ஈ (=படை) = அரியீ >>> அரிசி = நெல்லின் தோல் நீக்கிப் படைத்தது

அரிஞர்

அறுவடை செய்வோர்

அக. 84

அரி (=நெற்கதிர், அறு) + நர் = அரிநர் >>> அரிஞர் = நெற்கதிரை அறுப்போர்

அரிது

கடினமானது

நற். 203

அருமை (=கடினம்) + து = அருது >>> அரிது = கடினமானது

அரிமான், அரிமா

சிங்கம்

பதி. 88, நற். 112

அரி (=தீ, நிறம், மயிர், கொல்) + மா (=விலங்கு) = அரிமா = தீநிற மயிருடைய கொல்லும் விலங்கு

அரியல்

கள்

பதி. 62

அரி (=கள்) + அல் = அரியல்

அரில்

மீன்

நற். 4

அரி (=கண், அழகு, ஒளி) + ஏல் (=ஒப்பு, நீர்) = அரேல் >>> அரில் = நீரில் கண் போல அழகாக ஒளிர்வது = மீன்

அரில்

பின்னல்

குறு. 364

ஆர் (=பொருந்து, பின்னு) + இல் = அரில் = பின்னல்

அரில்

போர்

பதி. 12

ஆர் (=போரிடு) + இல் = அரில் = போர்

அரில்

மூங்கில்

கலி. 13

அரி (=தீ, உண்டாக்கு, மரம்) + ஏல் (=பொருந்து, உரசு) = அரேல் >>> அரில் = உரசித் தீயை உண்டாக்கும் மரம்

அரிவை

இளம்பெண்

நற். 41

அரி (=கண், அழகு) + மை (=அஞ்சனம், இளமை) = அரிமை >>> அரிவை = அஞ்சன அழகுடைய கண்களும் இளமையும் உடையவள் = இளம்பெண்

அருகு

நெருக்கம்

புற. 207

ஆர் (=பொருந்து) + உகை (=செல், பிரி) + உ = அருகு = பிரிவுடன் பொருந்துகை = நெருக்கம்

அருகு

விளிம்பு

அக. 131

ஆர் (=இடம், பரவு) + உகு (=முடி) = அருகு = இடப் பரப்பின் முடிவு = எல்லை, விளிம்பு

அருப்பம்

கோட்டை

முல். 26

ஆர் (=கட்டு, சுற்று, தடு) + உப்பு (=உயர்) + அம் (=நீளம்) = அருப்பம் = உயரமாகவும் நீளமாகவும் சுற்றிக் கட்டப்படும் தடுப்பு = கோட்டை மதில்

அருப்பம்

பெருங் கடினம்

மலை. 378

அருமை (=கடினம்) + உப்பு (=பெரு) + அம் = அருப்பம் = பெருங் கடினம்

அருங்குரை

பெருங் கடினம்

அக. 33

அருமை (=கடினம்) + குரை (=பெருமை) = அருங்குரை = பெருங் கடினம்

அரும்பு

மொட்டு

முல். 10

ஆர் (=கூர்மை, மலர்) + உப்பு (=உயர், தோன்று) = அருப்பு >>> அரும்பு = கூர்மையாய்த் தோன்றும் மலர்

அருவி

மலை நீர் வீழ்ச்சி

திரு. 316

அரி (=மலை, ஒழுகு, நீர்) + வீழ் (=விழு) = அரிவீழ் >>> அருவி = மலையில் இருந்து ஒழுகி விழும் நீர்

அருள்

அன்பு

ஐங். 362

ஆர் (=கட்டு, பிணி) + உள் (=உள்ளம்) = அருள் = உள்ளங்களைப் பிணிப்பது = அன்பு

அருள்

ஒளி

கலி. 148

ஆர் (=ஒளிர்) + உள் = அருள் = ஒளி

அருள்

அச்சம்

அக. 117

அரி (=வலிமை, அறு) + உள் (=உள்ளம்) = அருள் = உள்ளத்தின் வலிமையை அறுப்பது = அச்சம்

அரை

தண்டு

பெரு. 83

ஆர் (=தண்டு) + ஐ = அரை

அரை

இலை

சிறு. 183

அரி (=பசுமை, மென்மை) + ஐ = அரை = பசுமை நிறத்தில் மெலிந்திருப்பது = இலை

அரை

இடுப்பு

பெரு. 467

ஆர் (=தண்டு, கால், பொருந்து, இடம்) + ஐ = அரை = கால்கள் பொருந்தும் இடம் = இடுப்பு

அரை

வயிறு

மலை. 562

ஆர் (=உண், செல், தங்கு, இடம்) + ஐ = அரை = உண்டது சென்று தங்கும் இடம் = வயிறு

அரை

பாதி

நற். 68

அரி (=அறு, சமம்) + ஐ = அரை = சமமாக அறுத்தது

அரைசன், அரைசர்

மன்னன், மன்னர்

கலி. 130, நற். 291

ஆர் (=பூமி, நாடு) + ஐ (=தலைமை) + அன் = அரையன் >>> அரைசன் = நாட்டின் தலைவன்

அரைசு

நாட்டுத் தலைமை

பதி. 34

ஆர் (=பூமி, நாடு) + ஐ (=தலைமை) + உ = அரையு >>> அரைசு = நாட்டின் தலைமை

அரையம்

அரசமரம்

ஐங். 325

அரை (=இலை, தண்டு, காம்பு, மரம்) + அம் (=நீளம், ஒலி) = அரையம் = நீண்ட காம்புகளுடன் ஒலிக்கும் இலைகளைக் கொண்ட மரம்

அல்கல்

இரவு

கலி. 92

அல் (=இருள்) + கால் (=பொழுது) = அல்கால் >>> அல்கல் = இருண்ட பொழுது = இரவு

அல்கல்

பகல்

கலி. 113

எல் (=பகல்) + கால் (=பொழுது) = எல்கால் >>> அல்கல் = பகல் பொழுது

அல்கல்

நாள்

மலை. 443

அல்கல் (=பகல், இரவு) >>> அல்கல் = பகலும் இரவும் உடையது = நாள்

அல்கல்

வறுமை

அக. 129

அல்கு (=குறை) + அல் = அல்கல் = குறைவு, வறுமை

அல்குல்

நெற்றி

திரு. 16

அள் (=செறிவு, பூட்டு) + கோல் (=சித்திரவேலை, உண்டாக்கு, வளையம், பகுதி) = அள்கோல் >>> அல்குல் = சித்திரவேலைகள் உண்டாக்கப்பட்ட வளையத்தைப் பூட்டிச் செறிக்கும் பகுதி = நெற்றி.

அலகு

பலகறை

புற. 399

ஏல் (=நத்தை) + அகம் (=வீடு, கூடு) + உ = எலகு >>> அலகு = நத்தையின் கூடு = பலகறை

அலகை

ஆவி, புகை, உயிர்

மலை. 234, புற. 282

ஆலம் (=நீர், ஆகாயம்) + அகை (=எரி, தோன்று, பரவு) = அலகை = நீரை எரித்தால் தோன்றி ஆகாயத்தில் பரவுவது = ஆவி >>> புகை, உயிர்

அலங்கல்

மலர்மொட்டு

நற். 169

ஆலம் (=மலர்) + அஃகு (=குவி, கூர்) + அல் = அலஃகல் >>> அலங்கல் = குவிந்து கூரிய மலர் = மலர்மொட்டு

அலங்கல்

அசைவு

குறு. 76

அலங்கு (=அசை) + அல் = அலங்கல் = அசைவு

அலங்கல்

மாலை

பதி. 31

அளை (=சேர், அணி) + ஆக்கை (=நார், கட்டியது) + அல் = அளாக்கல் >>> அலங்கல் = நாரினால் சேர்த்துக் கட்டி அணிவது = மாலை

அலங்கல்

சிலந்திக் கூடு

பதி. 39

அலை (=சுற்று, கொலை) + ஆக்கை (=நார், இழை, கட்டியது) + அல் = அலாக்கல் >>> அலங்கல் = கொல்வதற்காக இழைகளால் சுற்றிக் கட்டியது

அலங்கல்

வற்றல்

நற். 189

ஆல் (=நீர்) + அஃகு (=சுருங்கு, வற்று) + அல் = அலஃகல் >>> அலங்கல் = நீர் வற்றிச் சுருங்கியது

அலங்கல்

நெற்கதிர்

அக. 13

அளை (=உண், செறி) + அகை (=செழி, உயர், அறு, வளை) + அல் = அளக்கல் >>> அலங்கல் = செழித்துச் செறிந்து உயர்ந்து வளைந்ததும் அறுக்கப்படும் உணவு

அலங்கல்

பூங்கிளை

அக. 229

ஆலம் (=பூ) + அகை (=கிளை) + அல் = அலக்கல் >>> அலங்கல் = பூக்களை உடைய கிளை

அலங்கல்

விழுது

புற. 364

அளம் (=நிலம்) + அகை (=ஈர், கிளை, வளர்) + அல் = அளக்கல் >>> அலங்கல் = நிலத்தால் ஈர்க்கப்பட்டு வளரும் கிளை = விழுது

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.