பொருள் |
மேற்கோள் |
பிறப்பியல் |
|
அத்தம் |
வழி |
அக. 109 |
ஆறு (=வழி) + அம் = அற்றம் >>> அத்தம் |
அத்தம் |
பாலை |
அக. 17 |
அறை (=இன்மை, இடம்) + அம் (=நீர்) = அற்றம் >>> அத்தம்
= நீர் இல்லாத இடம் = பாலை |
அத்தன் |
தந்தை |
குறு. 93 |
ஏற்று (=நிறுவு, உண்டாக்கு) + அன் = எற்றன் >>> அத்தன்
= உண்டாக்கியவன் = தந்தை |
அத்திரி |
கோவேறு |
நற். 278 |
ஆய் (=விரை) + தீரம் (=நீர்க்கரை, வலிமை) + இ = அய்த்தீரி
>>> அத்திரி = நீர்க்கரைகளில் விரைந்தோடும் வலிமை கொண்டது = கோவேறு |
அதர் |
வழி |
புற. 150 |
ஆறு (=வழி) + அர் = அறர் >>> அதர் |
அதர் |
மாவு உணவு |
புற. 299 |
அறை (=துண்டு) + ஆர் (=மிகு, உண்) = அறார் >>> அதர்
= மிகவும் துண்டாக்கிய உணவு = மாவு உணவு |
அதரி |
கதிரிலிருந்து நெல்லைப் பிரித்தல் |
மது. 94 |
ஏறு (=காளை, மிதி) + அரி (=நெற்கதிர், நெல், பிரித்தெடு)
= எறரி >>> அதரி = நெற்கதிர்களின் மேல் காளைகளை மிதிக்கவிட்டு நெல்லைப்
பிரித்தெடுத்தல். |
அதவம் |
அத்தி |
நற். 95 |
அத்து (=சிவப்பு, கூடு, செறி) + அமை (=நெருங்கு, தண்டு) +
அம் (=இனிமை, பழம்) = அத்தமம் >>> அதவம் = தண்டுகளில் நெருங்கிச் செறியும்
செந்நிற இனிய பழம் |
அதள் |
தோல் |
மலை. 419 |
ஏறு (=வடு) + அள் (=செறி) = எறள் >>> அதள் = வடுக்களைச்
செறியச்செய்வது = தோல் |
அந்தணர் |
வேதியர் |
புற. 2 |
அந்தி (=மாலை, தீ) + அணை (=உண்டாக்கு) + அர் = அந்தணர் = மாலைப்பொழுதில்
தீயை உண்டாக்குவோர் |
அந்தணர் |
உழவர் |
பரி. 11 |
அறை (=நிலம், பாத்தி) + அணை (=உண்டாக்கு) + அர் = அற்றணர்
>>> அத்தணர் >>> அந்தணர் = நிலத்தைப் பாத்தி செய்து உண்டாக்குவோர்
= உழவர் |
அந்தணன் |
கடவுள் |
பரி. 5 |
அந்தம் (=இறப்பு) + அணை (=இல்லாகு, பிற) + அன் = அந்தணன்
= பிறப்பும் இறப்பும் இல்லாதவன் = கடவுள் |
அந்தரம் |
ஆகாயம் |
திரு. 174 |
அறை (=இடம், இன்மை) + ஆர் (=பரவு, நிறை) + அம் = அற்றாரம்
>>> அத்தரம் >>> அந்தரம் = இன்மை பரவி நிறைந்திருக்கும் இடம்
= ஆகாயம் |
அந்தரம் |
மேகம் |
அக. 68 |
ஆல் (=நீர்) + தரு (=படை) + அம் = அற்றரம் >>> அத்தரம்
>>> அந்தரம் = நீரைப் படைப்பது = மேகம் |
அந்தி |
மறையும் சூரியன் |
பெரு. 413 |
ஆழ் (=மூழ்கு, மறை) + தீ (=சூரியன்) = ஆழ்த்தீ
>>> அந்தி = மறையும் சூரியன், சூரியன் மறைவு |
அந்தி |
தோன்றும் சூரியன் |
புற. 34 |
எழு (=தோன்று) + தீ (=சூரியன்) = எழுதீ >>> அயுதி
>>> அந்தி = தோன்றும் சூரியன் |
அப்பு |
அம்பு |
அக. 9 |
எய் + பூ (=கூர்மை) = எய்ப்பூ >>> அப்பு = எய்யப்படும்
கூரிய பொருள் |
அம்பணம் |
மரக்கால் |
பதி. 66 |
ஆம்பி (=கொள்கலம்) + எண் (=அள) + அம் = அம்பெணம்
>>> அம்பணம் = அளப்பதற்கான கொள்கலம் |
அம்பணம் |
படகு |
ஐங். 143 |
அம்பு (=வட்டம்) + அணை (=கரை, சேர், உதவி) + அம் = அம்பணம்
= கரையைச் சேர உதவும் வட்டப் பொருள் |
அம்பர் |
அங்கே |
பெரு. 117 |
அ (=அந்த) + ஆர் (=இடம்) = அவ்வார் >>> அம்பர் =
அந்த இடம் = அங்கே |
அம்பல் |
பழிச்சொல் |
நற். 36 |
அம் (=சொல்) + எள் (=நிந்தை, பழி) = அம்மெள் >>>
அம்பல் = பழிச்சொல். |
அம்பல் |
பேரொலி |
நற். 85 |
அம் (=ஒலி) + பல் (=பல, மிகுதி) = அம்பல் = மிக்க ஒலி |
அம்பலம் |
வில் |
பரி. 18 |
அம்பு + ஆள் + அம் = அம்பாளம் >>> அம்பலம் = அம்பினை
ஆள்வது = வில் |
அம்பா |
ஆறு |
பரி. 11 |
அம் (=நீர்) + பா (=பரப்பு, செல்) = அம்பா = செல்கின்ற நீர்ப்
பரப்பு = ஆறு |
அம்பி |
படகு |
ஐங். 168 |
அம்பு (=நீர், வட்டம்) + ஏ (=செலுத்து) = அம்பே
>>> அம்பி = நீரில் செலுத்தப்படும் வட்டப் பொருள் = படகு |
அம்பு |
வில்லில் எய்வது |
பதி. 33 |
எய் + பூ (=கூர்மை) = எய்ப்பூ >>> அப்பு
>>> அம்பு = எய்யப்படும் கூரிய பொருள் |
அம்புலி |
சந்திரன் |
கலி. 80 |
ஏமம் (=இரவு, இனிமை) + ஒளி = எம்மொளி >>> அம்புலி
= இரவில் இனிதாய் ஒளிர்பவன் = சந்திரன் |
அமயம், அமையம் |
பொழுது |
நெடு. 75, குறு. 154 |
அமை (=வரவிரு, நிகழ், இற) + அம் (=நீளம்) = அமையம்
>>> அமயம் = வரவிருத்தல், நிகழ்தல், இறத்தல் என்ற மூன்றினால் நீளும் தன்மையினது
= பொழுது |
அமர் |
போர் |
மது. 128 |
அவை (=கூட்டம், அழி) + ஆர் (=சண்டையிடு) = அவார்
>>> அமர் = கூட்டமாகச் சண்டையிட்டு அழித்தல் |
அமர் |
நிறைந்த அழகு |
குறு. 286 |
அமை (=பொருந்து) + ஆர் (=நிறை, அழகு) = அமார்
>>> அமர் = நிறைவாகப் பொருந்திய அழகு |
அமர் |
விருப்பம் |
ஐங். 64 |
அவா (=விருப்பம்) + அர் = அவர் >>> அமர் |
அமர்ப்பு |
ஒளிரும் அழகு |
நற். 179 |
அம் (=அழகு) + ஆர் (=ஒளிர்) + பு = அமார்ப்பு
>>> அமர்ப்பு = ஒளிரும் அழகு |
அமரர் |
தேவர் |
புற. 55 |
அம் (=அமுதம்) + ஆர் (=உண்) + அர் = அமாரர் >>> அமரர்
= அமுதம் உண்டவர் = தேவர் |
அமலை |
உருண்டைச் சோறு |
புற. 33 |
அம் (=உணவு) + அள் (=கல, செறி, திரட்டு) + ஐ = அமளை
>>> அமலை = கலந்து திரட்டிய உணவு |
அமலை |
மிகுதி |
குறு. 369 |
அவி (=குறை) + அல் (=இன்மை) + ஐ = அவலை >>> அமலை
= குறைவற்றது = மிகுதி |
அமலை |
மகிழ்ச்சிக் கூத்து |
அக. 142 |
ஏமம் (=மகிழ்ச்சி) + ஆலு (=ஒலி, ஆடு) + ஐ = எமாலை
>>> அமலை = மகிழ்ச்சியுடன் ஒலித்து ஆடுதல் |
அமளி |
படுக்கை |
பெரு. 252 |
அமை (=படு) + அளை (=கூடிக்கல, அனுபவி) + இ = அமளி = படுக்கவும்
கூடிக்கலந்து அனுபவிக்கவும் அமைந்தது |
அமிர்து, அமிர்தம் |
இனிய உணவு |
மது. 532, பரி. 8 |
அம் (=உணவு) + ஈர் (=இனிமை, நெய்ப்பு) + து = அமீர்து
>>> அமிர்து = நெய்ப்புடைய இனிய உணவு |
அமிழ்து, அமிழ்தம் |
சாவா மருந்து |
சிறு. 101, குறு. 83 |
ஆவி (=உயிர், வலிமை, வெளியேறு) + இழு (=நீட்டு) + துய் (=உண்)
= அவிழுதுய் >>> அமிழ்து = உயிர் வெளியேறுவதை நீட்டித்து வலிமைதரும் உணவு |
அமிழ்து, அமிழ்தம் |
இனிய கலப்பு உணவு |
கலி. 20, குறு. 201 |
அம் (=பால், உணவு) + இழுது (=தேன், நெய், இனிமை) = அமிழுது
>>> அமிழ்து >>> அமுது = தேன், நெய், பால் முதலியன கலந்த இனிய
உணவு |
அமுது, அமுதம் |
இனிய கலப்பு உணவு |
பெரு. 475, நற். 65 |
அம் (=பால், உணவு) + இழுது (=தேன், நெய், இனிமை) = அமிழுது
>>> அமிழ்து >>> அமுது = தேன், நெய், பால் முதலியன கலந்த இனிய
உணவு |
அமை |
மூங்கில் |
அக. 388 |
அம் (=நீளம், வளைவு) + ஐ = அமை = வளையக் கூடிய நீண்ட பொருள்
= மூங்கில் |
அமைதி |
பொருத்தம் |
அக. 375 |
அமை (=பொருந்து) + தி = அமைதி = பொருத்தம் |
அமைவு |
தங்கல் |
குறு. 4 |
அமை (=தங்கு) + வு = அமைவு = தங்கல் |
அயம் |
குளம் |
அக. 62 |
ஆழ் (=பள்ளமாகு) + அம் (=நீர்) = அழம் >>> அயம்
= நீருடைய பள்ளம் = குளம் |
அயம் |
அழகு |
அக. 38 |
ஆய் (=அழகு) + அம் = அயம் |
அயம் |
நீரோட்டம் |
கலி. 46 |
ஆய் (=விரை) + அம் (=நீர்) = அயம் = விரையும் நீர் |
அயர்ச்சி |
சோர்வு |
ஐங். 396 |
அயர் (=சோர்) + சி = அயர்ச்சி = சோர்வு |
அயர்வு |
சோர்வு |
குறு. 316 |
அயர் (=சோர்) + வு = அயர்வு = சோர்வு |
அயர்வு |
விருந்து |
பரி. 17 |
ஆய் (=கொண்டாடு) + ஆர் (=சேர், உண்) + வு = அயார்வு
>>> அயர்வு = சேர்ந்து உண்டு கொண்டாடுதல் |
அயல் |
அருகு |
பரி. 14 |
ஏய் (=எதிர்ப்படு, நெருங்கு) + அல் = எயல் >>> அயல்
= நெருக்கம், அருகு, பக்கம் |
அயல் |
வேறு |
கலி. 129 |
ஏய் (=பொருந்து) + அல் (=இல்லாகு) = எயல் >>> அயல்
= பொருத்தம் இல்லாதது = வேறு |
அயல் |
விரைவு |
பெரு. 226 |
ஆய் (=விரை) + அல் = அயல் = விரைவு |
அயலார் |
வேற்றார் |
கலி. 59 |
அயல் (=வேறு) + ஆர் = அயலார் = வேற்றார் |
அயலோர் |
வேற்றார் |
நற். 73 |
அயல் (=வேறு) + ஓர் = அயலோர் = வேற்றார் |
அயறு |
சீழ் |
புற. 22 |
ஆய் (=நீங்கு, அழகு, வெண்மை) + அறை (=வெட்டு, காயம்) + உ
= அயறு = காயத்தில் இருந்து வெண்மையாய் நீங்குவது = சீழ் |
அயா |
சோர்வு |
கலி. 40 |
எய் (=இளை, சோர்) + ஆ = எயா >>> அயா = சோர்வு |
அயிர் |
சர்க்கரை |
மது. 625 |
ஆய் (=நுண்மை, பொடி) + ஈர் (=இனிமை) = அயீர் >>>
அயிர் = இனிப்பான பொடி = சர்க்கரை |
அயிர் |
வெண்கடுகு |
நெடு. 56 |
ஐ (=அழகு, வெண்மை, நுண்மை, சளி) + ஈர் (=அறு, நீக்கு) = அயீர்
>>> அயிர் = சளியை நீக்கும் வெண்ணிற நுண்பொருள் = வெண்கடுகு |
அயிர் |
வெண்மணல் |
நற். 163 |
ஆய் (=அழகு, வெண்மை) + ஈர் (=இழு, பரப்பு, நுண்மை) = அயீர்
>>> அயிர் = வெண்மையாய்ப் பரவியிருக்கும் நுண்பொருள் = வெண்மணல் |
அயிர் |
பூந்தாது |
அக. 154 |
அழி (=வண்டு) + ஈர் (=இழு, நுண்மை, இனிமை) = அழீர்
>>> அயிர் = வண்டுகளை இழுக்கும் இனிய நுண்பொருள் |
அயிர் |
சந்தேகம் |
அக. 84 |
ஆய் (=எண்ணு) + ஈர் (=அறு, இரண்டுபடு) = அயீர் >>>
அயிர் = இரண்டுபட்ட எண்ணம் = சந்தேகம் |
அயிர்ப்பு |
கூத்து |
நற். 46 |
ஆய் (=அசை, ஆடு) + ஈர் (=இழு, நீட்டு) + பு = அயீர்ப்பு
>>> அயிர்ப்பு = நீண்ட ஆட்டம் |
அயிரை |
மீன்வகை |
குறு. 166 |
ஆய் (=அசை, அழகு, சிறுமை) + ஈரம் (=நீர்) + ஐ = அயீரை
>>> அயிரை = நீரில் சிறியதாய் அழகாக அசைவது |
அயில் |
கூர்மை |
பரி. 18 |
ஆய் (=குத்து, நுண்மை) + இல் = அயில் = குத்துகின்ற நுண்மை
= கூர்மை |
அயில் |
இரும்பு |
கலி. 135 |
ஆய் (=பொன்) + எல் (=இருள், கருமை) = அயெல் >>> அயில்
= கரும்பொன் = இரும்பு |
அயிலை |
மீன் வகை |
அக. 70 |
ஆய் (=சிறுமை, அழகு, அசை) + ஏல் (=நீர்) + ஐ = அயேலை
>>> அயிலை = நீரில் சிறியதாய் அழகாக அசைவது = மீன் |
அயினி |
வெண்சோறு |
புற. 77 |
ஆய் (=அழகு, வெண்மை) + இனை (=எரி, சமை) + இ = அயினி = வெண்ணிறமாய்ச்
சமைக்கப்பட்டது |
அரக்கம் |
இரத்தம் |
அக. 14 |
அரி (=அறு, ஒழுகு, சிவப்பு) + ஆக்கை (=உடல்) + அம் = அராக்கம்
>>> அரக்கம் = அறுத்தால் செந்நிறத்தில் உடலில் இருந்து ஒழுகுவது = இரத்தம் |
அரக்கன் |
பெரிய உருவத்தவன் |
புற. 378 |
ஆர் (=பெரு) + ஆக்கை (=உடல்) + அன் = அராக்கன்
>>> அரக்கன் = பெரிய உடலைக் கொண்டவன் |
அரக்கு |
செம்மெழுகு |
பொரு. 43 |
அரி (=சிவப்பு, ஒழுகு) + அகை (=எரி) + உ = அரக்கு = எரித்தால்
செந்நிறத்தில் ஒழுகுவது |
அரக்கு |
சிவப்பு |
பெரு. 293 |
அரி (=நிறம்) + அகை (=எரி) + உ = அரக்கு = எரிநிறம் |
அரங்கு, அரங்கம் |
மேடை |
கலி. 79, பரி. 8 |
ஆர் (=கட்டு, இடம்) + அகை (=உயர், வகு) + உ = அரக்கு
>>> அரங்கு = உயரமாக வகுத்துக் கட்டும் இடம் |
அரசன், அரசர் |
மன்னன், மன்னர் |
குறு. 276, அக. 338 |
ஆர் (=பூமி, நாடு) + ஐ (=தலைமை) + அன் = அரையன்
>>> அரைசன், அரசன் = நாட்டின் தலைவன் |
அரசு |
நாட்டுத் தலைமை |
மது. 128 |
ஆர் (=பூமி, நாடு) + ஐ (=தலைமை) + உ = அரையு >>>
அரைசு, அரசு = நாட்டின் தலைமை |
அரசியல் |
நாட்டுத் தலைமைமுறை |
மது. 191 |
ஆர் (=பூமி, நாடு) + ஐ (=தலைமை) + இயல் (=முறை) = அரையியல்
>>> அரசியல் = நாட்டுத் தலைமை முறை |
அரண், அரணம் |
கோட்டை |
பட். 229, ஐங். 444 |
ஆர் (=கட்டு, மறை) + ஏண் (=உயரம், வளைவு, எல்லை) = அரேண்
>>> அரண் = எல்லையை வளைத்து உயரமாகக் கட்டப்படும் மறைப்பு = கோட்டை |
அரணம் |
கவசம் |
பதி. 52 |
அரி (=ஆயுதம், தாக்கு) + அணை (=தடை, கட்டு, அணி) + அம் = அரணம்
= ஆயுதத் தாக்குதலைத் தடுக்க அணியப் படுவது = கவசம் |
அரணம் |
செருப்பு |
பெரு. 69 |
அரி (=கல், அறு) + அணை (=தடை, கட்டு, அணி) + அம் = அரணம்
= கற்கள் அறுப்பதைத் தடுக்க அணியப் படுவது = செருப்பு |
அரணம் |
அடைக்கலம் |
பதி. 59 |
ஆர் (=பொருந்து, இடம்) + அணை (=ஆதரவு) + அம் = அரணம் = ஆதரவாகப்
பொருந்தும் இடம் |
அரந்தை |
அழுது புலம்பல் |
புற. 221 |
அரற்று (=அழுது புலம்பு) + ஐ = அரற்றை >>> அரத்தை
>>> அரந்தை = அழுது புலம்பல் |
அரம் |
அறுக்கும் வாள் |
ஐங். 194 |
அரி (=அறு, ஆயுதம்) + அம் = அரம் = அறுக்கும் ஆயுதம் |
அரம்பு |
ஆறலைக் கள்வர் |
அக. 179 |
ஆர் (=மறை, பொருந்து, போரிடு, கூடு) + அம்பு = அரம்பு = மறைவாகப்
பொருந்தி அம்பினால் போரிடும் கூட்டம் |
அரமியம் |
நிலாமுற்றம் |
மது. 451 |
அரி (=சந்திரன்) + அமை + ஏ (=மேலிடம்) + அம் (=ஒளி) = அரமேயம்
>>> அரமியம் = சந்திரனின் ஒளிக்காக அமைக்கப்பட்ட மேலிடம் = நிலாமுற்றம் |
அரலை |
பஞ்சு, நார் |
அக. 309 |
அரி (=பிரி, மென்மை, குவியல்) + எல் (=ஒளி, வெண்மை) + ஐ =
அரெலை >>> அரலை = பிரித்துக் குவிக்கப்படும் வெண்ணிற மென்பொருள் = பஞ்சு,
நார் |
அரலை |
நார்ச்செடி |
நற். 121 |
அரி (=வரி, பச்சை, பிரி, மென்மை) + எல் (=ஒளி, வெண்மை) + ஐ
= அரெலை >>> அரலை = வெண்ணிற மென்பொருள் பிரிக்கப்படும் வரிகளைக் கொண்ட பசுஞ்செடி
= மரல், நார்ச்செடி |
அரலை |
தவறு |
புற. 381 |
ஆர் (=பொருந்து) + அல் (=இன்மை) + ஐ = அரலை = பொருத்தம் இல்லாதது
= தவறு, குற்றம் |
அரவணை |
பாம்புப் படுக்கை |
கலி. 105 |
அரவு (=பாம்பு) + அணை (=படுக்கை) = அரவணை = பாம்புப் படுக்கை |
அரவம் |
ஒலி |
பரி. 18 |
அரவு (=ஒலி) + அம் = அரவம் |
அரவம் |
இடியோசை |
புற. 211 |
அரவு (=மேகம், ஒலி) + அம் = அரவம் = மேக ஒலி |
அரவம், அரவு, அரா |
பாம்பு |
பரி. 19, கலி. 50, நற். 125 |
ஆர் (=பொருந்து, நிலம், செல், வளை) + ஆப்பு (=உடல்) + அம்
= அராப்பம் >>> அரவம் = நிலத்தில் உடல் பொருந்தியவாறு வளைந்து செல்வது
= பாம்பு |
அரவு |
மேகம் |
கலி. 105 |
ஆர் (=சேர், ஒலி, ஒளிர், மறை) + அவை (=கூட்டம்) + உ = அரவு
= கூட்டமாகச் சேர்ந்து ஒளியை மறைப்பதும் ஒலிப்பதும் ஆனது = மேகம் |
அரவிந்தம் |
தாமரை |
பரி. 12 |
அரி (=இதழ், சூரியன், வண்டு) + அவி (=மறை, அடக்கு) + இறை
(=பொழுது) + அம் = அரவிற்றம் >>> அரவித்தம் >>> அரவிந்தம் = சூரியன்
மறைந்த பொழுதில் வண்டுகளை இதழ்களுக்குள் அடக்குவது = தாமரை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.