தமிழ்ச் சொல் |
பொருள் |
மேற்கோள் |
பிறப்பியல் |
இப்பி |
சிப்பி |
நற். 87 |
இமை (=ஒளிர், கண்ணிமை) + ஈ (=பகு, ஒப்பு,
படை) = இம்மீ >>> இப்பி = ஒளிரும் கண்ணிமையைப் போல பகுப்புக்களைக் கொண்ட
படைப்பு = சிப்பி |
இம்பர் |
இவ்விடம் |
புற. 287 |
இவ் (=இந்த) + ஆர் (=இடம்) = இவ்வார்
>>> இம்பர் = இந்த இடம் |
இம்மை |
இப்பிறவி |
புற. 134 |
இ (=இந்த) + மை (=பிறவி) = இம்மை = இப்பிறவி |
இமயம், இமையம் |
இந்தியாவின் வடக்கில் உள்ள பெரிய மலை |
நற். 356, புற. 369 |
ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, பெருக்கம்)
+ ஆய் (=பொன்) + அம் (=ஒளி, அழகு) = எவாயம் >>> இமயம் = பொன்னழகு ஒளிரும்
மேல்நோக்கிய அடுக்கினைக் கொண்ட பெரிய இடம் |
இமில் |
காளையின் திமில் |
கலி. 102 |
இவர் / இவ (=ஓடு, பாய், செறி) + ஏல்
(=அடக்கு, பற்று) = இவேல் >>> இமில் = ஓடுவதை அடக்குவதற்காக பாய்ந்து பற்றப்படும்
செறிவுடையது = காளையின் திமில் |
இமை |
அஞ்சனத்தால் எழுதப்படுவது |
கலி. 70 |
ஈ (=எழுது, படை) + மை (=அஞ்சனம்) = இமை = அஞ்சனத்தால் எழுதிப் படைக்கப்படுவது |
இமை |
இரவு |
குறு. 285 |
ஏமம் (=இரவு) + ஐ = எமை >>> இமை |
இயம், இயன் |
இசைக்கருவி |
சிறு. 125, கலி. 36 |
ஈ (=படை) + அம் (=இனிமை, ஒலி) = இயம்
= இனிய ஒலியைப் படைப்பது = இசைக்கருவி |
இயம் |
வயல் |
குறி. 99 |
ஈ (=கீறு, உண்டாக்கு) + அம் (=உணவு, இடம்)
= இயம் = உணவை உண்டாக்கக் கீறப்படும் இடம் = வயல் |
இயம் |
மேல்நோக்கிய வளைவு |
ஐங். 377 |
ஏ (=மேல்நோக்குகை) + அம் (=வளைவு) = எயம்
>>> இயம் = மேல்நோக்கிய வளைவு |
இயக்கம் |
அசைவு |
நற். 44 |
இயங்கு (=அசை) + அம் = இயங்கம்
>>> இயக்கம் = அசைவு |
இயக்கம், இயக்கு |
ஓசை |
கலி. 41, அக. 100 |
இயக்கு (=ஒலி) + அம் = இயக்கம் |
இயக்கம் |
பயண ஓசை |
அக. 351 |
இயக்கு (=பயணம், ஒலி) + அம் = இயக்கம்
= பயண ஓசை |
இயக்கு |
பயணம் |
நற். 79 |
இயங்கு (=செல், பயணி) >>> இயக்கு
= பயணம் |
இயங்கல் |
பயணம் |
நற். 47 |
இயங்கு (=செல், பயணி) + அல் = இயங்கல்
= பயணம் |
இயல் |
நடை, பயணம் |
நெடு. 98, பரி. 9 |
எழு (=செல், நட) + அல் = எழல்
>>> இயல் = நடை, பயணம் |
இயல் |
அழகு, ஒளி, நிறம் |
குறி. 126, அக. 142, அக. 324 |
ஈ (=அழி) + அல் (=இருள்) = இயல் = இருளை
அழிப்பது = ஒளி >>> அழகு |
இயல் |
இயற்கை, தன்மை |
மது. 774, குறு. 229 |
இழை (=செய்) + அல் (=எதிர்மறை) = இழல்
>>> இயல் = செய்யப் படாதது = இயற்கை >>> தன்மை |
இயல் |
தோற்றம், ஆக்கம் |
பட். 149, நற். 192 |
எழு (=தோன்று, ஆகு) + அல் = எழல்
>>> இயல் = தோற்றம், ஆக்கம் |
இயல் |
பொருத்தம், ஒப்பு |
நற். 90, குறு. 189 |
இயை (=பொருந்து) + அல் = இயல் = பொருத்தம்,
ஒப்பு |
இயல் |
உடல் |
நற். 20 |
உய் (=உயிர்வாழ்) + அல் = உயல்
>>> இயல் = உயிர் வாழ்வது = உடல் |
இயல் |
பெருமை, மிகுதி |
பதி. 24 |
எழு (=மிகு) + அல் = எழல்
>>> இயல் = மிகுதி, பெருமை |
இயல் |
மாதம் |
பதி. 74 |
ஊழ் (=ஒளி, சிந்து) + அல் (=இரவு) = உழல்
>>> இயல் = இரவில் ஒளி சிந்துபவன் = சந்திரன் >>> மாதம் |
இயல் |
அறிவு |
பரி. 3 |
உய் (=அறிவி) + அல் = உயல்
>>> இயல் = அறிவு |
இயல் |
வகை, பிரிவு |
பரி. 20 |
ஈ (=வகு, பிரி) + அல் = இயல் = பிரிவு,
வகை |
இயல் |
செயல் |
அக. 182 |
இழை (=செய்) + அல் = இழல்
>>> இயல் = செயல் |
இயல் |
கொடை |
அக. 208 |
ஈ (=கொடு) + அல் = இயல் = கொடை |
இயல் |
வீடு |
புற. 229 |
இழை (=கூடு, பொருந்து, தங்கு, கட்டு)
+ அல் = இழல் >>> இயல் = கூடித் தங்குவதற்காகக் கட்டப்படுவது = வீடு |
இயல் |
முறை, விதி |
அக. 262 |
இழை (=விதி) + அல் = இழல்
>>> இயல் = விதி, முறை |
இயல்பு |
அறிவு |
பரி. 9 |
இயல் (=அறிவு) + பு = இயல்பு |
இயல்பு |
தன்மை |
அக. 65 |
இயல் (=தன்மை) + பு = இயல்பு |
இயல்பு |
கொடை |
புற. 302 |
இயல் (=கொடை) + பு = இயல்பு |
இயல்பு |
உடல் |
திரு. 136 |
இயல் (=உடல்) + பு = இயல்பு |
இயல்பு |
வீடு |
திரு. 177 |
இயல் (=வீடு) + பு = இயல்பு |
இயல்பு |
முறை |
மலை. 537 |
இயல் (=முறை) + பு = இயல்பு |
இயவர், இயவன் |
இசைக்கருவி ஒலிப்பவர் |
மது. 304, அக. 356 |
இயம் (=இசைக்கருவி) + ஆர் (=ஒலி) = இயவார்
>>> இயவர் = இசைக்கருவிகளை ஒலிப்பவர் |
இயவர் |
பகைவர் |
பதி. 78 |
இயைவு (=ஒப்பு, உடன்பாடு) + ஆ (=எதிர்மறை)
+ ஆர் = இயைவார் >>> இயவர் = உடன்பாடு இல்லாதவர் = எதிரி |
இயவு |
இடம் |
அக. 374 |
உழை (=இடம்) + வு = உழைவு = இயவு |
இயவு |
வழி |
அக. 218 |
இழை (=பிரி, செல், நீள், அமை) + வு = இழைவு
>>> இயவு = செல்வதற்காக நீளமாய் அமைந்தது = வழி |
இயவு |
பயணம் |
மலை. 323 |
இழை (=பிரி, செல்) + வு = இழைவு
>>> இயவு = செல்லுதல் |
இயவுள் |
கடவுள் |
திரு. 274 |
(1) ஈ (=படை) + அவை (=இடம், உலகம், உயிர்க்கூட்டம்)
+ உள் = இயவுள் = உலகையும் உயிர்க் கூட்டத்தையும் படைத்தவன். (2) இய (=கட) + உள்
(=உள்ளம்) = இயவுள் = உள்ளத்தைக் கடந்தவன். ஒ.நோ: கட + உள் (=உள்ளம்) = கடவுள் =
உள்ளத்தைக் கடந்தவன். |
இயவுள் |
தலைமை |
அக. 29 |
ஈ (=கொடு, இடு) + அம் (=கட்டளை) + உள்
= இயமுள் >>> இயவுள் = கட்டளை இடுவது = தலைமை |
இயற்கை |
தன்மை |
புற. 2 |
இயல் (=தன்மை) + கை = இயற்கை |
இயைபு |
நிலை |
அக. 297 |
இயை (=பொருந்து, நில்) + பு = இயைபு =
நிலை |
இயைபு |
பொருத்தம் |
கலி. 123 |
இயை (=பொருந்து) + பு = இயைபு = பொருத்தம் |
இரவு, இரா, இர |
இருள் மிக்க பொழுது |
ஐங். 172, குறு. 145, அக. 160 |
இருமை (=கருமை) + அமை (=நிறை, பொழுது)
+ உ = இரமு >>> இரவு >>> இரா >>> இர = கருமை நிறைந்த
பொழுது. |
இரக்கம் |
கடந்ததை நினைந்துருகல் |
புற. 243 |
ஈரம் (=நீர்ப்பற்று, நினைவு) + ஆகம்
(=கண்) = இராகம் >>> இரக்கம் = கண்ணில் ஈரத்தை உண்டாக்கும் நினைவு |
இரங்கல் |
பேரொலி |
பதி. 31 |
இருமை (=பெருமை) + அகவு / அக (=ஒலி) +
அல் = இரகல் >>> இரங்கல் = பேரொலி |
இரண்டு |
ஒன்றை அடுத்த எண் |
பரி. 3 |
ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு
= பிளப்பதால் அடைவது.. |
இரண்டு |
பொய் |
குறு. 312 |
இறை (=மறைப்பு, சொல்) + அண்டு (=அடை, பொருந்து)
= இறண்டு >>> இரண்டு = மறைப்பு பொருந்திய சொல் |
இரத்தல் |
பிச்சை எடுத்தல் |
புற. 154 |
இறை (=வணங்கு, கை, நிறை, சொல்) + தல்
= இறைத்தல் >>> இரத்தல் = கைகளை நிறைக்குமாறு வணங்கிச் சொல்லுதல் |
இரதி |
பேரழகி |
பரி. 19 |
ஏர் (=அழகு, மிகுதி) + அத்து (=பொருந்து)
+ இ = எரத்தி >>> இரதி = மிக்க அழகு பொருந்தியவள் |
இரலை |
மான் வகை |
முல் 99 |
(1) உரு (=மான், தண்டு, கொம்பு) + அலை
(=திரி) = உரலை >>> இரலை = திரிந்த கொம்புடைய மான். (2) உரு (=மான், நிறம்)
+ அல் (=இருள்) + ஐ = உரலை >>> இரலை = கருநிற மான் |
இரவு |
பிச்சை |
குறு. 283 |
இறை (=வணங்கு, கை, நிறை, சொல்) + பு =
இறைபு >>> இரவு = கைகளை நிறைக்குமாறு வணங்கிச் சொல்லுதல் |
இரவல் |
பிச்சை |
புற. 328 |
இரவு (=பிச்சை) + அல் = இரவல் |
இரவல் |
வயல் |
பதி. 59 |
ஈர் (=பசுமை, ஈரம்) + அவல் (=பள்ளம்)
= இரவல் = ஈரமும் பசுமையும் உடைய பள்ளம் = வயல் |
இரவலன், இரவலர் |
பிச்சைக்காரர் |
புற. 180, பதி. 54 |
இரவல் (=பிச்சை) + அன் / அர் = இரவலன்
/ இரவலர் = பிச்சை எடுப்போர் |
இரியல் |
ஓட்டம் |
பெரு. 202 |
இரி (=ஓடு) + அல் = இரியல் = ஓட்டம் |
இரியல் |
பயணம் |
பெரு. 432 |
இரி (=செல், பயணி) + அல் = இரியல் = பயணம் |
இரியல் |
பெருங்கொடை |
புற. 135 |
இருமை (=பெருமை) + இயல் (=கொடை) = இரியல்
= பெருங்கொடை |
இரிவு |
அச்சம் |
கலி. 92 |
இரி (=அஞ்சு) + பு = இரிபு
>>> இரிவு = அச்சம் |
இருக்கை |
ஊர், ஆசனம் |
பொரு. 169, பதி. 42 |
இரு (=தங்கு, அமர்) + கை = இருக்கை = தங்குவது
/ அமர்வது = ஊர், ஆசனம் |
இருக்கை |
கட்டு, பிணி |
பொரு. 15 |
இறுக்கு (=கட்டு) + ஐ = இறுக்கை
>>> இருக்கை = கட்டு |
இருக்கை |
நிலை |
நற். 181 |
இரு (=தங்கு, நில்) + கை = இருக்கை = நிலை |
இருக்கை |
கொடை |
நற். 381 |
இறு (=கொடு) + கை = இறுக்கை
>>> இருக்கை = கொடை |
இருப்பு |
ஊர், தங்கல் |
மது. 143, பொரு. 39 |
இரு (=தங்கு) + பு = இருப்பு = தங்குவது,
தங்கல் |
இருப்பு, இரும்பு |
வலுவான உலோகம் |
புற. 369, பெரு. 91 |
(1) இருமை (=கருமை) + பூ (=பொன்) = இருப்பூ
>>> இருப்பு >>> இரும்பு = கரும்பொன். (2) எறி (=அடி, நுகர்வி)
+ பூ (=தீ, உண்டாக்கு) = எறிப்பூ >>> இருப்பு >>> இரும்பு = தீயை
நுகர்வித்து அடித்து உண்டாக்கப்படுவது |
இருப்பை |
இனிப்பான பூ |
நற். 279 |
இலை (=பூ) + உப்பு (=இனிப்பு) + ஐ = இலுப்பை
>>> இருப்பை = இனிப்புடைய பூ |
இருவி, இருவை |
உணவு முளைத் தண்டு |
குறு. 133, ஐங். 286 |
உரு (=உணவு, முளை, தண்டு) + இ = உருவி
>>> இருவி = உணவு முளைக்கும் தண்டு |
இருள் |
ஒளி நீங்கியது |
திரு. 91 |
இரி (=நீங்கு) + ஒள் (=ஒளி) = இரொள்
>>> இருள் = ஒளி நீங்கியது. |
இருள் |
அறியாமை |
பெரு. 445 |
இரி (=நீங்கு) + உள் (=உள்ளம், அறிவு)
= இருள் = அறிவு நீங்கியது = அறியாமை |
இருள் |
மேகம் |
நற். 270 |
ஈர் (=நீர், இழு) + உள் (=எழுச்சி) = இருள்
= நீரை இழுத்து எழுவது = மேகம் |
இருள் |
யானை |
புற. 126 |
இருமை (=கருமை, பெருமை) + உள் (=எழுச்சி)
= இருள் = கருப்பு நிறத்தில் பெரிதாக எழுச்சி உடையது = யானை |
இரை |
உணவு |
நற். 123 |
ஈர் (=உண்) + ஐ = இரை = உணவு |
இரை |
பெருமை |
புற. 371 |
இருமை (=பெருமை) + ஐ = இரை |