புதன், 6 மே, 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 26


சொல்

பொருள்

தமிழ்ச்சொல்

மூலச் சொல்லும்

தோன்றும் முறையும்

பிரத்தியாப்திகம்

ஆண்டுதோறும் பிதிர்களுக்குப் படைத்தல்

பிரதியத்தீகம்

பிரதி (=ஒவ்வொரு) + அத்தம் (=ஆண்டு) + ஈ (=வழங்கு) + கம் (=பொருள்) = பிரதியத்தீகம் >>> பிரத்தியாப்திகம் = ஒவ்வொரு ஆண்டும் முன்னோருக்கு வழங்கல்.

அத்தம், அப்தம்

ஆண்டு

அற்றம்

அற்றம் (=முடிவு) >>> அத்தம் >>> அப்தம் = நாட்கணக்கின் முடிவு = ஆண்டு. ஒ.நோ: அற்றம் (=முடிவு) >>> அத்தம் >>> சத்தம் >>> சதம் = எண்ணிக்கையின் முடிவு = நூறு.

பிரத்தியாலீடம்

இடதுகாலை முன்னிறுத்தி வில்லேந்தல்

விலத்தாளிடம்

வில (=விலக்கு) + தாள் (=கால்) + இடு (=வை) + அம் = விலத்தாளிடம் >>>பிரத்தியாலீடம் = விலக்கப்பட்டதான இடது காலை முன்னால் வைத்து வில்லேந்தும் நிலை.

பிரத்தியேகம்

சிறப்பானது

பிரதியேகம்

பிரதி (=முதன்மை) + ஏகம் (=ஒன்று) = பிரதியேகம் >>> பிரத்தியேகம் = முதன்மையான ஒன்று = சிறப்பானது.

பிரத்தியேகம்

தனியானது

விலத்தியேகம்

விலத்தி (=நீக்கு, தனி) + ஏகம் (=ஒன்று) = விலத்தியேகம் >>> பிரத்தியேகம் = தனியான ஒன்று

பிரதக்கு

தனிமை செய்யப்பட்டது

விலத்தாக்கு

விலத்து (=நீக்கு, தனி) + ஆக்கு = விலத்தாக்கு >>> பிரத்தாக்கு >>> பிரதக்கு = தனிமை ஆக்கப்பட்டது.

பிரதக்கணம், பிரதட்சணம், பிரதட்சிணம்

கோவிலில் வலப்பக்கமாகவே திரும்பி நடத்தல்

விலதெக்கணம்

வில (=வளை, திரும்பு) + தெக்கு (=வலம்) + அணம் = விலதெக்கணம் >>> பிரதக்கணம் >>> பிரதக்ச~ணம் >>> பிரதட்சணம் >>> பிரதட்சிணம் = கோவிலில் வலதுபுறமாகவே திரும்பி நடத்தல். பி.கு: ஒருவர் கிழக்கு நோக்கி நிற்கும்போது அவரது வலப்பக்கத் திசையே தெற்கு என்பதால் தெக்கு என்னும் சொல் தெற்குத் திசையுடன் வலப்பக்கத்தையும் குறிப்பதானது.

பிரததி

படர்கொடி

விலத்ததி

விலத்து (=வளை) + அதி (=மிகுதி) = விலத்ததி >>> பிரத்ததி >>> பிரததி = மிகுதியாக வளைந்து செல்வது = படர்கொடி.

பிரதமம்

முதன்மை

விறதாமம்

விற (=மிகு, மேம்படு) + தாமம் (=இடம்) = விறதாமம் >>> பிரதமம் = மேம்பாடுடைய இடம் = முதன்மை.

பிரதமர்

முதன்மையானவர்

விறதாமர்

விறதாமம் (=முதன்மை) >>> விறதாமர் = முதன்மையானவர்.

பிரதரம்

அதிக மாதவிடாய் ஒழுக்கு

விறதாரம்

விற (=மிகு) + தாரை (=ஒழுக்கு) + அம் = விறதாரம் >>> பிரதரம் = அதிக ஒழுக்குடைய நிலை.

பிரதானம்

பெருங்கொடை

விறதானம்

விற (=மிகு) + தானம் (=கொடை) = விறதானம் >>> பிரதானம்

பிரதானன்

கொடையாளி

விறதானன்

பிரதானம் (=பெருங்கொடை) >>> பிரதானன் = கொடையாளி

பிரதம்

பெருங்கொடை

விறதம்

விற (=மிகு) + தா (=கொடு) + அம் = விறதம் >>> பிரதம் = மிகுதியாகக் கொடுப்பது.

பிரதன்

கொடையாளி

விறதன்

விற (=மிகு) + தா (=கொடு) + அன் = விறதன் >>> பிரதன் = மிகுதியாகக் கொடுப்பவன்.

பிரதனை

பெரும்படை

விறதானை

விற (=மிகு) + தானை (=படை) = விறதானை >>> பிரதனை >>> பிரதனம் = மிகுதியான படை.

பிரதாபம்

பெரும்புகழ்

விறதாமம்

விற (=மிகு) + தாமம் (=புகழ்) = விறதாமம் >>> பிரதாபம் = மிகுதியான புகழ்.

பிரதாபம்

பேரொளி

விறதாமம்

விற (=மிகு) + தாமம் (=ஒளி) = விறதாமம் >>> பிரதாபம் = மிகுதியான ஒளி.

பிரதாபம்

பெருவீரம்

வீரதவம்

வீரம் + தவம் (=மிகுதி) = வீரதவம் >>> பிரதாபம் = மிக்க வீரம்

பிரதாபி

பாராட்டு

பிரதாபி

பிரதாபம் (=புகழ்) >>> பிரதாபி = புகழ் செய், பாராட்டு

பிரதானம்

முதலிடம், முதன்மை

விறதானம்

விற (=மிகு, மேம்படு) + தானம் (=இடம்) = விறதானம் >>> பிரதானம் = மேம்பாடுடைய இடம் = முதலிடம், முதன்மை

பிரதானன்

முதலானவன்

விறதானன்

விறதானம் (=முதல்) >>> விறதானன் = முதலானவன்

பிரதானி

மந்திரி

விறதானி

விற (=செறி, நெருங்கு) + தானம் (=இடம்) = விறதானம் >>> பிரதானி = மன்னருக்கு நெருக்கமான இடத்தில் இருப்பவர்.

பிரதானிக்கம்

முக்கியத்துவம், மந்திரித்துவம்

விறதானிகம்

விற (=செறி, நெருங்கு) + தானம் (=இடம்) + இகம் = விறதானிகம் >>> பிரதானிக்கம் = நெருக்கமான இடத்தில் இருக்கும் நிலை.

பிரதிக்கினை

தீர்மானம், சபதம், முடிவு

விரதிங்கம்

விரதம் (=உறுதி) + இங்கம் (=அறிவு, எண்ணம்) = விரதிங்கம் >>> பிரதிக்கன் >>> பிரதிக்கினை = உறுதியான எண்ணம் = தீர்மானம்

பிரதிகரணம்

வெறுக்கும் செயல்

விரத்திகரணம்

விரத்தி (=வெறுப்பு) + கரணம் (=செயல்) = விரத்திகரணம் = பிரதிகரணம் = வெறுக்கும் செயல்.

விரதம்

சபதம், உறுதி.

வீறாற்றம்

வீறு (=வலிமை) + ஆற்று (=அமை, சொல்) + அம் = வீறாற்றம் >>> வீரத்தம் >>> விரதம் = (1) வலுவாக அமைந்தது = உறுதி. (2) வலுவாகச் சொல்லப்பட்டது = சபதம்.

பிரதிகாசம்

பரிகாசம்

விரத்திகாசம்

விரத்தி (=வெறுப்பு) + காசம் (=சிரிப்பு) = விரத்திகாசம் >>> பிரதிகாசம் = வெறுப்பேற்றும் சிரிப்பு.

பிரதிகாதம்

தாக்கிவிட்டு மீளுகை

விலத்திகான்றம்

விலத்தி (=திரும்பு, மீள்) + கான்று (=தாக்கு) + அம் = விலத்திகான்றம் >>> பிரத்திகாற்றம் >>> பிரதிகாத்தம் >>> பிரதிகாதம் = தாக்கிவிட்டு மீளுதல்.

பிரதிகாதம்

ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளுதல்

பிரதிகான்றம்

பிரதி (=மாற்று) + கான்று (=தாக்கு) + அம் = பிரதிகான்றம் >>> பிரதிகாற்றம் >>> பிரதிகாத்தம் >>> பிரதிகாதம் = மாற்றிமாற்றித் தாக்கிக் கொள்ளுதல்

பிரதிகாதம்

செல்வதைத் தடுத்தல்

விலத்திகத்தம்

விலத்து (=தடைசெய்) + இக (=கட, செல்) + தம் = விலத்திகத்தம் >>> பிரதிகாதம் = செல்வதைத் தடைசெய்தல்.

பிரதிகாதனம்

பழிக்காகச் செய்யும் கொலை

பிரதிகதணம்

பிரதி (=பதில்) + கதம் (=கொலை) + அணம் = பிரதிகதணம் >>> பிரதிகாதனம் = பதிலுக்குக் கொலை செய்தல்

பிரதிகாந்தி

பிரதிபிம்பம்

பிரதிகாந்தி

பிரதி (=பதில்) + காந்தி (=ஒளி) = பிரதிகாந்தி = பதிலாகப் பெறப்படும் ஒளி.

காந்தி

ஒளி

காந்தி

காந்து (=எரி, ஒளி) >>> காந்தி = ஒளிர்வது = ஒளி

பிரதிகாயம்

இலக்கு, குறிக்கோள்

பிரதிகாயம்

பிரதி (=பதில், எதிர்) + காய் (=சுடு) + அம் = பிரதிகாயம் = எதிரில் சுடப்படுவது = குறிக்கோள், இலக்கு

பிரதிகாரகன்

வஞ்சகன்

விலத்திகாரகன்

விலத்தி (=தடு, மறை) + காரம் (=செயல்) + அகன் = விலத்திகாரகன் >>> பிரதிகாரகன் = மறைத்துச் செயலாற்றுபவன்

பிரதிகாரம்

பரிகாரம், பழிவாங்கல்

பிரதிகாரம்

பிரதி (=எதிர்) + காரம் (=செயல்) = பிரதிகாரம் = எதிர்வினை = பரிகாரம், பழிவாங்கல்.

பிரதிகாரகன்

வாயில் காப்போன்

விலத்திகாரகன்

விலத்தி (=தடு) + காரம் (=செயல்) + அகன் = விலத்திகாரகன் >>>> பிரதிகாரகன் = தடுக்கும் செயலைப் புரிபவன்.

பிரதிகுலம், பிரதிகூலம்

தீமை

பிரதிகுலம்

பிரதி (=எதிர்) + குலம் (=நன்மை) = பிரதிகுலம் = நன்மைக்கு எதிரானது = தீமை

பிரதிகுலம், பிரதிகூலம்

தடை

விலத்திகுளம்

விலத்து (=தடு) + இக (=செல்) + உள் + அம் = விலத்திகுளம் >>> பிரத்திகுலம் >>> பிரதிகுலம் = உள்ளே செல்வதைத் தடுத்தல்

பிரதிச்சந்தம்

ஒத்த வடிவம்

பிரதிச்சந்தம்

பிரதி (=ஒப்பு) + சந்தம் (=வடிவம்) = பிரதிச்சந்தம் = ஒத்த வடிவம்

பிரதிசந்தானம்

ஒவ்வொன்றாகப் புகழ்தல்

பிரதிசாற்றணம்

பிரதி (=ஒவ்வொரு) + சாற்று (=புகழ்) + அணம் = பிரதிசாற்றணம் >>> பிரதிசாத்தணம் >>> பிரதிசந்தானம் = ஒவ்வொன்றாகப் புகழ்ந்து கூறுதல்.

பிரதிசிகுவை

உள் நாக்கு

பிரதிசிகுவை

பிரதி (=ஒப்பு) + சிகுவை (=நாக்கு) = பிரதிசிகுவை = நாக்குக்கு ஒப்பானது = உள் நாக்கு.

சிகுவை

நாக்கு

சிக்குவாய்

சிக்கு (=அகப்படு) + வாய் = சிக்குவாய் >>> சிகுவை = வாய்க்குள் அகப்பட்டு இருப்பது = நாக்கு.

பிரதிதானம்

கைம்மாறு

பிரதிதானம்

பிரதி (=எதிர்) + தானம் (=கொடை) = பிரதிதானம் = எதிர்க்கொடை

பிரதிநாதம்

எதிரொலி

பிரதிநாதம்

பிரதி (=எதிர்) + நாதம் (=ஒலி) = பிரதிநாதம்

பிரதிநிதி

பதிலாக நியமிக்கப் பட்டவன

பிரதிநிறி

பிரதி (=பதில்) + நிறு (=நியமி, வை) + இ = பிரதிநிறி >>> பிரதிநிதி = பதிலாக நியமிக்கப்பட்டவன்

பிரதிபத்தி

முழு நம்பிக்கை

பிரதிபற்றி

பிரதி (=முழுமை) + பற்று (=நம்பு) + இ = பிரதிபற்றி >>> பிரதிபத்தி = முழுமையான நம்பிக்கை.

பிரதிபதம்

ஒருபொருட் பன்மொழி

பிரதிபதம்

பிரதி (=மாற்று) + பதம் (=சொல்) = பிரதிபதம் = மாற்றுச் சொல்

பிரதிபந்தம், பிரதிபந்தகம்

கட்டி வைத்துத் தடுத்தல்

விலத்திபந்தம்

விலத்தி (=தடு) + பந்தம் (=கட்டு) = விலத்திபந்தம் >>> பிரதிபந்தம் = கட்டுவதன் மூலம் தடுத்தல்

பிரதிபலன்

பதில் நன்மை

பிரதிபலன்

பிரதி (=பதில்) + பலன் (=நன்மை) = பிரதிபலன்

பிரதிபலி

எதிர் தோன்று

பிரதிபலி

பிரதி (=எதிர்) + பலி (=தோன்று) = பிரதிபலி = எதிர் தோன்று

பிரதிபலனம்

எதிர் தோன்றுவது

பிரதிபலணம்

பிரதி (=எதிர்) + பலி (=தோன்று) + அணம் = பிரதிபலணம் >>> பிரதிபலனம் = எதிர் தோன்றுவது

பிரதிபாதனம்

ஒவ்வொன்றையும் தெளிவாக்கிக் கூறுதல்

பிரதிமாற்றணம்

பிரதி (=ஒவ்வொரு) + மாற்று (=தெளிவாக்கு) + அணம் (=சொல்) = பிரதிமாற்றணம் >>> பிரதிபாத்தணம் >>> பிரதிபாதனம் = ஒவ்வொன்றையும் தெளிவாக்குதல்.

பிரதிபாத்தியம்

எடுத்து விளக்கப்படுவது

பிரதிமாற்றியம்

பிரதி (=ஒவ்வொரு) + மாற்று (=தெளிவாக்கு) + இயம் (=சொல்) = பிரதிமாற்றியம் >>> பிரதிபாத்தியம் = ஒவ்வொன்றாக எடுத்து தெளிவாக்கப்படும் சொல்.

பிரதிபாதகம்

எடுத்து விளக்குவது

பிரதிமாற்றகம்

பிரதி (=ஒவ்வொரு) + மாற்று (=தெளிவாக்கு) + அகம் = பிரதிமாற்றகம் >>> பிரதிபாத்தகம் >>> பிரதிபாதகம் = ஒவ்வொன்றின் தெளிவையும் அடக்கியது.

பிரதிபாதி

எடுத்து விளக்கு

பிரதிபாதி

பிரதிபாதனம் (=எடுத்து விளக்குதல்) >>> பிரதிபாதி

பிரதிபிம்பம்

எதிர் உருவம்

பிரதிபிம்பம்

பிரதி (=எதிர்) + பிம்பம் (=உருவம்) = பிரதிபிம்பம்

பேதம்

வேறுபாடு

வேறம்

வேறு + அம் = வேறம் >>> பேதம் = வேறுபாடு

பிரதிபேதம்

நகல் வேறுபாடு

பிரதிபேதம்

பிரதி (=நகல்) + பேதம் (=வேறுபாடு) = பிரதிபேதம்

பிரதிபை

பகுத்து ஆய்ந்து புதியன பெருக்கல்

விலத்திபை

விலத்தி (=பிரி, பகு) + பை (=பெருக்கு) = விலத்திபை >>> பிரதிபை = எப்பொருளையும் பகுத்து ஆய்ந்து புதியனவற்றைப் பெருகச் செய்தல்

பிரதிபோதம்

விரிவாகக் கற்பித்தல்

பிரதிபோதம்

விலத்தி (=பகு, விரி) + போதி (=கற்பி) + அம் = பிரதிபோதம் = விரிவாகக் கற்பித்தல்.

போதி

கற்பி

போற்றி

போற்று (=பாடு) >>> போற்றி (=கற்பி) >>> போத்தி >>> போதி = கற்பி. பி.கு: பழங்காலத்தில் கல்வியானது பாட்டு மூலமாகவே கற்பிக்கப்பட்டது.

பிரதிமண்டலம்

கோணவட்டம்

விலத்தி மண்டலம்

விலத்தி (=விலகு) + மண்டலம் (=வட்டம்) = விலத்திமண்டலம் >>> பிரதிமண்டலம் = விலகிய வட்டம் = கோணவட்டம்

பிரதிமண்டலம்

வட்டத்தின் அளவு

பிறந்தை மண்டலம்

பிறந்தை (=தன்மை, அளவு) + மண்டலம் (=வட்டம்) = பிறந்தைமண்டலம் >>> பிரத்திமண்டலம் >>> பிரதிமண்டலம் = வட்டத்தின் அளவு.

பிரதிமாலை

மாற்றுமாலை

பிரதிமாலை

பிரதி (=மாற்று) +மாலை = பிரதிமாலை =மாற்றுமாலைப் பாட்டு

பிரதிமூர்த்தி

ஒத்த வடிவம்

பிரதிமூர்த்தி

பிரதி (=ஒப்புமை) + மூர்த்தி (=வடிவம்) = பிரதிமூர்த்தி

பிரதிமை

போலி வடிவம், பொம்மை

பிரதிபை

பிரதி (=ஒப்புமை) + பை (=வடிவம்) = பிரதிபை >>> பிரதிமை = ஒத்த வடிவம் = போலி வடிவம், பொம்மை

பிரதியத்தனம்

சிறைப்படுத்தல்

விலத்தியத்தணம்

விலத்தி (=தடு) + அத்து (=தங்கு) + அணம் = விலத்தியத்தணம் >>> பிரதியத்தனம் = தடுத்துத் தங்கச் செய்தல்

பிரதியத்தனம்

பழி வாங்குதல்

பிரதியாற்றணம்

பிரதி (=எதிர்) + ஆற்று (=செய்) + அணம் = பிரதியாற்றணம் >>> பிரதியத்தனம் = எதிராகச் செய்தல் = பழி வாங்குதல்.

பிரதியாதனை

ஒத்த வடிவம்

பிரதியாதனை

பிரதி (=ஒப்புமை) + ஆதனம் (=வடிவம்) + ஐ = பிரதியாதனை

ஆதனம்

வடிவம், நிலை

அத்தணம்

அத்து (=பொருந்து, தங்கு, நிலை) >>> அத்தணம் >>> ஆதனம் = நிலை, வடிவம்.

உத்தரம்

பதில்

உய்த்தாரம்

உய் (=ஈடேற்று, நிரப்பு) + தாரம் (=ஓசை, சொல்) = உய்த்தாரம் >>> உத்தரம் = ஈடேற்றும் / நிரப்பும் சொல் = மறுமொழி, பதில்.

பிரதியுத்தரம்

மறுமொழி

பிரதியுய்த்தாரம்

பிரதி (=பதில்) + உய் (=கொடு) + தாரம் (=சொல்) = பிரதியுய்த்தாரம் >>> பிரதியுத்தரம் = பதிலாகக் கொடுக்கும் சொல்

பிரதியுபகாரம்

பதில் நன்மை

பிரதியுபகாரம்

பிரதி (=பதில்) + உபகாரம் (=நன்மை) = பிரதியுபகாரம்

பிரதியோகம்

கூட்டம்

பிரதியொகம்

பிரதி (=மிகுதி) + ஒகு (=சேர்) + அம் = பிரதியொகம் >>> பிரதியோகம் = மிகுதியாகச் சேர்தல்.

பிரதியோகம்

பிரிவு, பகை.

பிரதியோகம்

பிரதி (=எதிர்) + யோகம் (=சேர்க்கை) = பிரதியோகம் = சேர்க்கைக்கு எதிரானது = பகை, பிரிவு.

பிரதிவசனம்

மறுமொழி, எதிரொலி

பிரதிவசனம்

பிரதி (=பதில், எதிர்) + வசனம் (=பேச்சு, ஒலி) = பிரதிவசனம் = பதில்பேச்சு, எதிரொலி

பிரதிவச்`தூபமை

மாற்றுப் பொருள் உவமை

பிரதிவத்துவமை

பிரதி (=மாற்று) + வத்து (=பொருள்) + உவமை = பிரதிவத்துவமை >>> பிரதிவச்`தூபமை = மாற்றுப் பொருளால் காட்டும் உவமை

பிரதிவாதம்

எதிர்பேச்சு

பிரதிவாதம்

பிரதி (=எதிர்) + வாதம் (=பேச்சு) = பிரதிவாதம்

பிரதிவாதி

எதிராளி

பிரதிவாதி

பிரதி (=எதிர்) + வாதி (=பேசுபவர்) = பிரதிவாதி = எதிராளி

பிரதிவாபம்

ஒரே சமயத்தில் உடன் உண்ணப்படுவது

பிரதிவவ்வம்

பிரதி (=ஒப்புமை) + வவ்வு (=உண்ணு) + அம் = பிரதிவவ்வம் >>> பிரதிவப்பம் >>> பிரதிவாபம் = ஒப்புமையாக ஒரே சமயத்தில் மருந்துடன் சேர்த்து உண்ணப்படுவது. எ.கா: நீர்.

பிரதிட்டை, பிரதிச்~டை

சிலையை நிலைநிறுத்தல்

பேரதட்டை

பேரம் (=சிலை) + தட்டு (=தடு, நிறுத்து, நிறுவு) + ஐ = பேரதட்டை >>> பிரதிட்டை

பிரதிட்டி

நிலைநிறுத்து

பேரதட்டி

பேரம் + தட்டு + இ = பேரதட்டி >>>  பிரதிட்டி

பிரதீகம்

உறுப்பு

விலத்திங்கம்

விலத்து (=பிரி) + இங்கம் (=பொருள்) = விலத்திங்கம் >>> பிரத்திக்கம் >>> பிரதீகம் = பிரிந்த பொருள் = உறுப்பு

பிரதிகாரம்

வஞ்சனை

விலத்திகாரம்

விலத்தி (=தடு, மறை) + காரம் (=செயல்) = விலத்திகாரம் >>> பிரதிகாரம் = மறைத்துச் செயலாற்றுதல்

பிரதிகாரம்

கதவு

விலத்திகாரம்

விலத்தி (=தடு, மறை) + காரம் (=செயல்) = விலத்திகாரம் >>>> பிரதிகாரம் = நுழையவிடாமல் தடுப்பது / மறைப்பது.

பிரதீசினம்

மேற்குத் திசை

விலத்தீசினம்

வில (=நீங்கு) + தீ (=சூரியன்) + சினம் (=வெயில்) = விலத்தீசினம் >>> பிரத்தீசினம் >>> பிரதீசினம் = சூரியனின் சினமாகிய வெயில் நீங்கும் திசை.

பிரதீதி

அறிவு, புகழ், மகிழ்ச்சி, புரிந்துகொள்கை

பிறதீற்றி

பிற (=தோன்று) + தீற்று (=விளக்கு) + இ = பிறதீற்றி >>> பிரதீத்தி >>> பிரதீதி = தோன்றி விளக்குவது = ஒளி >>> மகிழ்ச்சிப் பொலிவு, அறிவு, புகழ், புரிந்துகொள்கை 

பிரதீபம்

எதிர்நிலை

பிரதிமம்

பிரதி (=எதிர்) + மம் = பிரதிமம் >>> பிரதீபம் = எதிர்நிலை

பிரதீரம்

கரை

விலத்தீரம்

விலத்தி (=தடு, மறை) + ஈரம் (=நீர்) = விலத்தீரம் >>> பிரத்தீரம் >>> பிரதீரம் = வரம்பு மீறாமல் நீரைத் தடுத்து இருப்பது.

பிரதேசம்

நாடு

விறதேயம்

விற (=மிகு) + தேயம் (=இடம்) = விறதேயம் >>> பிரதேசம் = மிகுதியான இடப் பரப்பு உடையது.

பிரதோசம்

சிறந்த வழிபாடு

விறதொழம்

விற (=சிற) + தொழு (=வணங்கு) + அம் = விறதொழம் >>> பிரதோசம் = சிறந்த வழிபாடு.

பிரபத்தி

சரணாகதி

விறபற்றி

விற (=சிற) + பற்று + இ = விறபற்றி = பிரபத்தி = சிறந்த பற்று

பிரபதனம்

சரணாகதி

விறபற்றணம்

விற (=சிற) + பற்று + அணம் = விறபற்றணம் >>> பிரபத்தனம் >>> பிரபதனம் = சிறந்த பற்று.

பிரபந்தம்

நூல்

விறபந்தம்

விற (=சிற, மேம்படு) + பந்தம் (=கட்டு, யாப்பு) = விறபந்தம் >>> பிரபந்தம் = சிறந்த யாப்புடையது = நூல்.

பிரபம்

தண்ணீர்ப் பந்தல்

பிறபம்

பிற + பா (=பகிர்) + அம் (=நீர்) = பிறபம் >>> பிரபம் = பிறர்க்கு நீரைப் பகிர்ந்து கொடுக்கும் இடம்.

சாத்தன்

வணிகன்

சாற்றன்

சாற்று (=விளம்பரம் செய், கூவு) >>> சாற்றன் >>> சாத்தன் = விளம்பரப்படுத்தி / கூவி விற்பவன்

சாத்தன்

வழிப்போக்கன்

ஆற்றன்

ஆறு (=வழி) + அன் = ஆற்றன் >>> சாற்றன் >>> சாத்தன் = வழியில் செல்பவன் = வழிப்போக்கன்.

சத்திரம்

தங்கிச் செல்லும் இடம்

சாத்திரம்

சாத்து (=வணிகர், வழிப்போக்கர்) + இரு (=தங்கு) + அம் = சாத்திரம் >>> சத்திரம் = வணிகரும் வழிப்போக்கரும் தங்கிச் செல்லும் இடம்.

பிரபல்லியம்

புகழ்

விறபலியம்

விற (=சிற, மேம்படு) + பலி (=தோன்று) + அம் = விறபலியம் >>> பிரபல்லியம் = மேம்பட்டுத் தோன்றுதல். 

பிரபலம்

புகழ்

விறபலம்

விற (=சிற, மேம்படு) + பலி (=தோன்று) + அம் = விறபலம் >>> பிரபலம் = மேம்பட்டுத் தோன்றுதல்.

பிரபலம்

மிக்க வலிமை

விறவலம்

விற (=மிகு) + வலம் (=வலிமை) = விறவலம் >>> பிரபலம் = மிக்க வலிமை.

பிறபன்னன்

சரணாகதி அடைந்தவன்

விறபன்னன்

விற (=சிற, மேம்படு) + பன்னு (=பாடு, பொருந்து) + அன் = விறபன்னன் >>> பிரபன்னன் = மேலானதையே எப்போதும் பொருந்திப் பாடுபவன்.

பிரபாகரன்

சூரியன், சந்திரன், தீ

பிறபைகரன்

பிற (=தோன்று) + பை (=ஒளிர்) + கரம் (=கை) + அன் = பிறபைகரன் >>> பிரபய்கரன் >>> பிரபாகரன் = தோன்றி ஒளிரும் கரங்களைக் கொண்டவன் = சூரியன், சந்திரன், தீ

கீடம்

புழு, பூச்சி

கீடம்

கிட (=இழி, தாழ்) + அம் = கீடம் = இழிவானது / தாழ்வானது

பிரபாகீடம்

மின்மினிப் பூச்சி

பிறபைகீடம்

பிற (=தோன்று) + பை (=ஒளிர்) + கீடம் (=பூச்சி) = பிறபைகீடம் >>> பிரபய்கீடம் >>> பிரபாகீடம் = தோன்றி ஒளிரும் பூச்சி.

பிரபாணி

உள்ளங்கை

விலபாணி

வில (=பிரி) + பாணி (=கை) = விலபாணி >>> பிரபாணி = விரல்கள் பிரிகின்ற கையின் பகுதி.

பிரபாதம்

அருவி, செங்குத்து நிலை

பிறபதம்

பிற (=தோன்று) + பதம் (=நீர், ஒளி) = பிறபதம் >>> பிரபாதம் = ஒளிர்ந்து தோன்றும் நீர் = அருவி >>> அருவி விழுதலைப் போன்ற செங்குத்து நிலை.

பிரபாதம்

நீர்க்கரை

விலபதம்

வில (=தடு, மறை) + பதம் (=நீர்) = விலபதம் >>> பிரபாதம் = வரம்பு மீறாமால் நீரைத் தடுப்பது.

பிரபாதம்

விடியற்காலை

பிறபதம்

பிற (=தோன்று) + பதம் (=ஒளி, நேரம்) = பிறபதம் >>> பிரபாதம் = ஒளி தோன்றும் நேரம்.

பிரபாதம்

தெரு

விறபதம்

விற (=மேம்படு) + பதம் (=வழி) = விறபதம் >>> பிரபாதம் = மேம்படுத்தப்பட்ட வழி.

பிரபாலன்

மாணவன்

விறபாலன்

விற (=சிற) + பாலன் (=சிறுவன்) = விறபாலன் >>> பிரபாலன் = சிறப்புடைய சிறுவன் = மாணவன். பி.கு: கல்வியே ஒருவருக்கு சிறப்பு என்பதால் மாணவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

பிரபாவம்

ஒளி, புகழ்

விறபாமம்

பிற (=தோன்று) + பாமம் (=ஒளி) = பிறபாமம் >>> பிரபாவம் = தோன்றி ஒளிர்வது = ஒளி, புகழ்.

பிரபாவம்

பெரு வலிமை

விறமாவம்

விற (=மிகு) + மா (=வலிமை) + அம் = விறமாவம் >>> பிரபாவம் = மிக்க வலிமை.

பிரபாவனம்

குளிர்சோலை

விறபைவனம்

விற (=மிகு) + பை (=ஈரம்) + வனம் (=சோலை) = விறபைவனம் >>> பிரபய்வனம் >>> பிரபாவனம் = மிக்க ஈரமுடைய சோலை

பிரபிதாமகன்

கொள்ளுத்தாத்தா

விறபிதாமகன்

விற (=மிகு, மேம்படு) + பிதாமகன் (=தாத்தா) = விறபிதாமகன் >>> பிரபிதாமகன் = தாத்தாவுக்கு மேம்பட்டவன் / முன்னோன்

பிரபிதாமகி

கொள்ளுப்பாட்டி

விறபிதாமகி

விற (=மிகு, மேம்படு) + பிதாமகி (=பாட்டி) = விறபிதாமகி >>> பிரபிதாமகி = பாட்டிக்கு மேம்பட்டவள் = கொள்ளுப்பாட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.