| 
   சொல்  | 
  
   பொருள்  | 
  
   தமிழ்ச்சொல்  | 
  
   மூலச் சொல்லும் தோன்றும் முறையும்  | 
 
| 
   கேகயம்  | 
  
   மயில்  | 
  
   கேகேயம்  | 
  
   கேகே + அம் = கேகேயம் = கேகே என்று ஒலிப்பது  | 
 
| 
   கேகை  | 
  
   மயில் குரல்  | 
  
   கேகே  | 
  
   கேகே >>> கேகை = கேகே என்ற ஒலி.  | 
 
| 
   தாரம்  | 
  
   ஓசை  | 
  
   தாலம்  | 
  
   தாலு (=ஒலி) >>> தாலம் >>> தாரம் = ஒலி  | 
 
| 
   கேதாரம்  | 
  
   மயில்  | 
  
   கேதாரம்  | 
  
   கே + தாரம் (=ஓசை) = கேதாரம் = கே கே என்று ஒலிப்பது  | 
 
| 
   சதம்  | 
  
   நூறு  | 
  
   சத்தம்  | 
  
   அற்றம் (=முடிவு) >>> அத்தம் >>> சத்தம் >>> சதம் = எண்ணிக்கையின் முடிவு. பி.கு: பழங்காலத்தில் எண்ணிக்கையானது நூறு நூறாக எண்ணப்பட்டது.  | 
 
| 
   சதபத்திரம்  | 
  
   மயில்  | 
  
   சதபத்திரம்  | 
  
   சதம் (=நூறு) + பத்திரம் (=இறகு) = சதபத்திரம் = நூற்றுக்கணக்கான இறகுகளைக் கொண்டது.  | 
 
| 
   சந்திரகம்  | 
  
   மயில் தோகை  | 
  
   சத்திறகம்  | 
  
   சதம் (=நூறு) + இறகு + அம் = சத்திறகம் >>> சந்திரகம் = நூற்றுக் கணக்கான இறகுகளைக் கொண்டது.  | 
 
| 
   சந்திரகி  | 
  
   மயில்  | 
  
   சத்திறகி  | 
  
   சதம் (=நூறு) + இறகி = சத்திறகி >>> சந்திரகி = நூற்றுக்கணக்கான இறகுகளைக் கொண்ட பறவை.  | 
 
| 
   சிகி  | 
  
   மயில்  | 
  
   சிகை  | 
  
   சிகை (=கொண்டை) >>> சிகி = கொண்டை உடையது  | 
 
| 
   சிகாவலம்  | 
  
   மயில்  | 
  
   சிகாவலம்  | 
  
   சிகை (=உச்சி) + ஆவலம் (=ஆர்ப்பரிப்பு) = சிகாவலம் = உச்ச ஒலியில் ஆர்ப்பரிப்பது.  | 
 
| 
   சிகண்டி  | 
  
   மயில்  | 
  
   சிகண்டி  | 
  
   சிகை (=கொண்டை) + அண்டு (=பொருந்து) + இ = சிகண்டி = கொண்டை பொருந்தியது.  | 
 
| 
   ஞமலி  | 
  
   மயில்  | 
  
   நாவாலி  | 
  
   நாவு (=அழை) + ஆலி (=ஒலி) >>> நாவாலி >>> ஞாமாலி >>> ஞமலி = அழைப்பதைப் போன்ற ஒலியை எழுப்புவது.  | 
 
| 
   தீத்தாங்கம்  | 
  
   மயில்  | 
  
   தீத்தாங்கம்  | 
  
   தீத்தம் (=ஒளி, அழகு) + அங்கம் (=உடல்) = தீத்தாங்கம் = அழகான உடலைக் கொண்டது.  | 
 
| 
   நகரவிரம்  | 
  
   மயில்  | 
  
   நகரவிரம்  | 
  
   நகர் + அவிர் (=அழகு) + அம் = நகரவிரம் = நகரும் அழகு  | 
 
| 
   நவிரம்  | 
  
   மயில்  | 
  
   நவிலம்  | 
  
   நவில் (= பெரிதாக ஒலி, பாடு) >>> நவிலம் >>> நவிரம் = பாடுவதைப் போலப் பெரிதாக ஒலிப்பது.  | 
 
| 
   நாகவாரிகம்  | 
  
   மயில்  | 
  
   நாகபாறிகம்  | 
  
   நாகம் (=பாம்பு) + பாறு (=கொல், சிதறடி) + இகம் = நாகபாறிகம் >>> நாகவாரிகம் = பாம்பைக் கொன்று சிதறடிப்பது.  | 
 
| 
   நீலகண்டம்  | 
  
   மயில்  | 
  
   நீலகண்டம்  | 
  
   நீலம் + கண்டம் (=கழுத்து) = நீலகண்டம் = நீலநிறக் கழுத்தினைக் கொண்டது.  | 
 
| 
   பிரபாதிகம்  | 
  
   மயில்  | 
  
   பிரபாதிகம்  | 
  
   பிரபை (=ஒளி, அழகு) + அதிகம் (=மிகுதி) = பிரபாதிகம் = மிகுந்த அழகினைக் கொண்டது.  | 
 
| 
   பீலி  | 
  
   தோகை, மயில்  | 
  
   பீலி  | 
  
   பீலி (=தோகை) >>> பீலி = தோகையைக் கொண்டது  | 
 
| 
   மாயூரம், மயூரம்  | 
  
   மயில்  | 
  
   பையூரம்  | 
  
   பை (=அழகு) + ஊர் (=நகர்) + அம் = பையூரம் >>> பாயூரம் >>> மாயூரம், மயூரம் = நகரும் அழகு. ஒ.நோ: நகர் + அவிர் (=அழகு) + அம் = நகரவிரம் = நகரும் அழகு = மயில்.  | 
 
| 
   மார்ச்சாரகம்  | 
  
   மயில்  | 
  
   வார்ச்சாரங்கம்  | 
  
   வார் (=மேகம்) + சாரங்கம் (=வில்) = வார்ச்சாரங்கம் >>> மார்ச்சாரகம் = மேகங்களைக் கண்டதும் தோகையை வில்லாக விரிக்கும் இயல்பினது.  | 
 
| 
   மேகாரம்  | 
  
   மயில்  | 
  
   மேகாரம்  | 
  
   மேகம் + ஆரம் (=வில்) = மேகாரம் = மேகங்களைக் கண்டதும் தோகையை வில்லாக விரிக்கும் இயல்பினது.  | 
 
| 
   மேகானந்தி  | 
  
   மயில்  | 
  
   மேகானந்தி  | 
  
   மேகம் + ஆனந்தி = மேகானந்தி = மேகங்களைக் கண்டதும் ஆனந்தம் கொள்வது.  | 
 
| 
   மேனாதம்  | 
  
   மயில்  | 
  
   மேனாதம்  | 
  
   மேல் + நாதம் (=ஓசை) = மேனாதம் = மேலோங்கிய ஓசையை எழுப்புவது.  | 
 
| 
   விசித்திராங்கம்  | 
  
   மயில்  | 
  
   விசித்திராங்கம்  | 
  
   விசித்திரம் (=அழகோவியம்) + அங்கம் (=உடல்) = விசித்திராங்கம் = அழகான ஓவியம் போன்ற உடலைக் கொண்டது  | 
 
| 
   விசித்திரம்  | 
  
   அழகோவியம்  | 
  
   பைசித்திரம்  | 
  
   பை (=அழகு) + சித்திரம் (=ஓவியம்) = பைசித்திரம் >>> பிசித்திரம் >>> விசித்திரம் = அழகோவியம்  | 
 
| 
   வீரந்தரம்  | 
  
   மயில்  | 
  
   வீறந்தரம்  | 
  
   வீறு (=அழகு) + அந்தரம் (=எல்லை) = வீறந்தரம் >>> வீரந்தரம் = அழகின் எல்லை  | 
 
| 
   புசம்  | 
  
   தோள்  | 
  
   மூசம்  | 
  
   மூசு (=நெருங்கு, திரள்) + அம் = மூசம் >>> புசம் = திரட்சி உடையது = மார்பு, தோள்.  | 
 
| 
   அகிபுசம்  | 
  
   தோகை, மயில்  | 
  
   அக்கிமூசம்  | 
  
   அக்கி (=கண்) + மூசு (=திரள், தொகு) + அம் = அக்கிமூசம் >>> அகிபுசம் = கண்களின் தொகுப்பு = தோகை. ஒ.நோ: பிணி (=தொகு) + முகம் (=கண்) = பிணிமுகம் = கண்களின் தொகுப்பு.  | 
 
| 
   கலவம்  | 
  
   தோகை, மயில்  | 
  
   கலவம்  | 
  
   கலவு (=சேர், தொகு) + அம் = கலவம் = தொகுப்பு, தோகை.  | 
 
| 
   கலபி  | 
  
   மயில்  | 
  
   கலவி  | 
  
   கலவம் (=தோகை) >>> கலவி >>> கலபி = தோகை உடையது  | 
 
| 
   களத்தொனி  | 
  
   மயில்  | 
  
   காளத்தொனி  | 
  
   காளம் (=ஊதுகொம்பு) + தொனி (=ஓசை) = காளத்தொனி >>> களத்தொனி = ஊதுகொம்பின் ஓசை போல ஒலிப்பது.  | 
 
| 
   காளகண்டம்  | 
  
   மயில்  | 
  
   காளகண்டம்  | 
  
   காளம் (=கருமை, நீலம்) + கண்டம் (=கழுத்து) = காளகண்டம் = நீலநிற கழுத்தைக் கொண்டது. ஒ.நோ: நீலகண்டம் = மயில்.  | 
 
| 
   வாகு  | 
  
   ஒளி, அழகு  | 
  
   வாகு  | 
  
   வகு (=அறு) >>> வாகு = அறுக்கும் இயல்புடையது = ஒளி. ஒ.நோ: பகு (=அறு) >>> பகல், பகர்.  | 
 
| 
   கிருகவாகு  | 
  
   மயில்  | 
  
   கிருகவாகு  | 
  
   கிருகம் (=இருப்பிடம்) + வாகு (=அழகு) = கிருகவாகு = அழகின் இருப்பிடமாக விளங்குவது.  | 
 
| 
   கேது  | 
  
   மயில்  | 
  
   கேது  | 
  
   கே + து = கே கே என்று ஒலி எழுப்புவது  | 
 
| 
   மோரி  | 
  
   மயில்  | 
  
   மௌலி  | 
  
   மௌலி (=கிரீடம், கொண்டை) >>> மோலி >>> மோரி = கிரீடம் போன்ற கொண்டையை உடையது = மயில். ஒ.நோ: சிகை (=கொண்டை) + அண்டு (=பொருந்து) + இ = சிகண்டி = கொண்டை பொருந்தியது = மயில்  | 
 
| 
   குண்டலி  | 
  
   மயில்  | 
  
   கூட்டாலி  | 
  
   கூடு (=மிகு, நீளு) + ஆலி (=ஒலி) = கூட்டாலி >>> குண்டலி = மிக நீளமான ஒலியை எழுப்புவது.  | 
 
| 
   இமை  | 
  
   மயில்  | 
  
   இமை  | 
  
   இமை (=கண்) >>> இமை = கண் போன்ற வடிவம் பல கொண்டது  | 
 
| 
   அராவைரி  | 
  
   மயில்  | 
  
   அராவைரி  | 
  
   அரா (=பாம்பு) + வைரி (=எதிரி, பகை) = அராவைரி = பாம்புப்பகை  | 
 
| 
   மஞ்ஞை  | 
  
   மயில்  | 
  
   பையை  | 
  
   பை (=மிகு, அழகு) + ஐ = பையை >>> பய்யை >>> மஞ்ஞை = மிக்க அழகினைக் கொண்டது.  | 
 
| 
   மயில்  | 
  
   மயில் பறவை  | 
  
   பையில்  | 
  
   பை (=அழகு) + இல் (=இருப்பிடம்) = பையில் >>> மையில் >>> மயில் = அழகின் இருப்பிடமாக விளங்குவது.  | 
 
| 
   சரணம்  | 
  
   மயில், தோகை  | 
  
   சரணம்  | 
  
   சரண் (=இருப்பிடம்) + அம் (=அழகு) = சரணம் = அழகின் இருப்பிடமாக விளங்குவது.  | 
 
| 
   பிரக்கியாதம்  | 
  
   புகழ்  | 
  
   பிறங்கேற்றம்  | 
  
   பிறங்கு (=விளங்கு) + ஏற்றம் (=உயர்வு) = பிறங்கேற்றம் >>> பிறக்கேத்தம் >>> பிரக்கியாதம் = விளங்கும் உயர்வு..  | 
 
| 
   பிரக்கியாதி  | 
  
   புகழ் பெற்றது  | 
  
   பிறங்கேற்றி  | 
  
   பிறங்கேற்றம் (=புகழ்) >>> பிறங்கேற்றி >>> பிறக்கேத்தி >>> பிரக்கியாதி = புகழ் உடையது.  | 
 
| 
   பிரக்கியானம், பிரக்கினை, பிரக்ஞை  | 
  
   உணர்ச்சி  | 
  
   பிறங்குணை  | 
  
   பிறங்கு (=தோன்று) + உண் (=அனுபவி) + ஐ = பிறங்குணை >>> பிறக்குணை >>> பிரக்கினை >>> பிரக்ஞை, பிரக்யானம் = மனதில் தோன்றி அனுபவிக்கப் படுவது.  | 
 
| 
   பிரக்கிரமம்  | 
  
   தொடக்கம்  | 
  
   பிறங்கிருவம்  | 
  
   பிறங்கு (=தோன்று, தொடங்கு) + இரு + அம் = பிறங்கிருவம் >>> பிரக்கிருமம் >>> பிரக்கிரமம் = தொடங்கி இருப்பது.  | 
 
| 
   பிரகசனம்  | 
  
   சிரிப்பு  | 
  
   விறகாயணம்  | 
  
   விற (=மிகு) + காய் (=ஒளிர், சிரி) + அணம் = விறகாயணம் >>> பிரகாசணம் >>> பிரகசனம் = மிகுதியான சிரிப்பு.  | 
 
| 
   பிரகடம்  | 
  
   விளம்பரம்  | 
  
   பிறக்காடம்  | 
  
   பிறக்கு (=தோன்றச்செய், அறியச்செய்) + ஆடு (=சொல்) + அம் = பிறக்காடம் >>> பிரகடம் = பிறர் அறியச் சொல்லுதல்.  | 
 
| 
   பிரகடனம்  | 
  
   விளம்பரம்  | 
  
   பிறக்காடணம்  | 
  
   பிறக்கு (=தோன்றச்செய், அறியச்செய்) + ஆடு (=சொல்) + அணம் = பிறக்காடணம் >>> பிரகடனம் = பிறர் அறியச் சொல்லுதல்.  | 
 
| 
   பிரகத்வாதம், பிரகத்வாயு  | 
  
   வயிற்றுப் பொருமல்  | 
  
   பிறங்குவாதம்  | 
  
   பிறங்கு (=மிகு) + வாதம் (=காற்று) = பிறங்குவாதம் >>> பிரக்குவாதம் >>> பிரகத்வாதம் = வயிற்றில் காற்று மிகுதல்.  | 
 
| 
   பிரகம்பனம்  | 
  
   காற்று  | 
  
   பிறக்கப்பணம்  | 
  
   பிறக்கு (=நிலைபெயர்) + அப்பு (=தாக்கு) + அணம் = பிறக்கப்பணம் >>> பிரகம்பனம் = பொருட்களைத் தாக்கி நிலைபெயரச் செய்வது  | 
 
| 
   பிரகம்பனம்  | 
  
   நரகம்  | 
  
   வீறாகம்படம்  | 
  
   வீறு (=அறு, தாக்கு) + ஆகம் (=உடல்) + படு (=பள்ளம்) + அம் = வீறாகம்படம் >>> வீரகம்பணம் >>> பிரகம்பனம் = பாவிகளின் உடலை அறுத்தும் தாக்கியும் தண்டிக்கும் பள்ளமான இடம்.  | 
 
| 
   பிரகரணம்  | 
  
   சந்தர்ப்பம்  | 
  
   பிறங்காரணம்  | 
  
   பிறங்கு (=தோன்று, நிகழ்) + ஆர் (=பொருந்து) + அணம் = பிறங்காரணம் >>> பிரகரணம் = நிகழுமாறு பொருந்துவது.  | 
 
| 
   பிரகரம்  | 
  
   அடி  | 
  
   விறகரம்  | 
  
   விற (=தாக்கு) + கரம் (=கை) = விறகரம் >>> பிரகரம் = கையால் தாக்குதல்.  | 
 
| 
   பிரகரி  | 
  
   அடி  | 
  
   விறகரி  | 
  
   விறகரம் (=அடி) >>> விறகரி >>> பிரகரி = அடி  | 
 
| 
   பிரகற்பதி, பிரகச்`பதி  | 
  
   குருவுக்கெல்லாம் குரு  | 
  
   பிறங்கற்பதி  | 
  
   பிறங்கல் (=பெருமை, உயர்வு) + பதி (=குரு) = பிறங்கற்பதி >>> பிரக்கற்பதி >>> பிரகற்பதி = பெரிய / உயர்ந்த குரு  | 
 
| 
   பிரகாசம்  | 
  
   பேரொளி  | 
  
   விறகாயம்  | 
  
   விற (=மிகு) + காய் (=ஒளிர்) + அம் = விறகாயம் >>> பிரகாசம் = மிகுதியாக ஒளிர்வது.  | 
 
| 
   பிரகாசி  | 
  
   மிக்கு ஒளிர்  | 
  
   விறகாய்  | 
  
   விற (=மிகு) + காய் (=ஒளிர்) = விறகாய் >>> பிரகாசி = மிகுதியாக ஒளிவீசு  | 
 
| 
   பிரகாண்டம்  | 
  
   மரம்  | 
  
   பிறக்காண்டம்  | 
  
   பிறக்கம் (=கிளை) + அண்டு (=பொருந்து) + அம் = பிறக்காண்டம் >>> பிரகாண்டம் = பல கிளைகள் பொருந்தியது.  | 
 
| 
   பிரகாண்டரம்  | 
  
   மரம்  | 
  
   பிறங்கண்டறம்  | 
  
   பிறங்கு (=மிகு, விளங்கு) + அண்டம் (=உலகம்) + அறம் (=தருமம்) = பிறங்கண்டறம் >>> பிரக்காண்டறம் >>> பிரகாண்டரம் = உலகில் பிறர்க்குத் தருமம் செய்வதில் மிக்கு விளங்குவது.  | 
 
| 
   பிரகாரணம்  | 
  
   நன்கொடை, பெருங்கொடை  | 
  
   பிறங்காரணம்  | 
  
   பிறங்கு (=மிகு) + ஆர் (=கொடு) + அணம் = பிறங்காரணம் >>> பிரக்காரணம் >>> பிரகாரணம் = மிகுதியாகக் கொடுத்தல்.  | 
 
| 
   பிரகாரம்  | 
  
   முறை, விதம்  | 
  
   பிறங்காறம்  | 
  
   பிறங்கு (=நிகழ்) + ஆறு (=வழி) + அம் = பிறங்காறம் >>> பிரக்காரம் >>> பிரகாரம் = நிகழும் வழி = முறை, விதம்  | 
 
| 
   பிரகாரம்  | 
  
   வகுப்பு, வகை  | 
  
   பிறங்காறம்  | 
  
   பிறங்கு (=நிகழ்) + ஆறு (=பிரிவு) + அம் = பிறங்காறம் >>> பிரக்காரம் >>> பிரகாரம் = நிகழும் பிரிவு = வகை, வகுப்பு  | 
 
| 
   பிரகிருதம்  | 
  
   நிகழ்காலம்  | 
  
   பிறங்கிறுதம்  | 
  
   பிறங்கு (=நிகழ்) + இறுது (=காலம்) + அம் = பிறங்கிறுதம் >>> பிரக்கிருதம் >>> பிரகிருதம் = நிகழ்காலம்.  | 
 
| 
   பிரகிருதி  | 
  
   மூலம்  | 
  
   பிறங்கிருதி  | 
  
   பிறங்கு (=தோன்று) + இறுதி (=அடிப்பகுதி) = பிறங்கிறுதி >>> பிரக்கிருதி >>> பிரகிருதி = தோன்றும் அடிப்பகுதி.  | 
 
| 
   பிரகீரணம்  | 
  
   பாவம், கொலை  | 
  
   பிறகீறணம்  | 
  
   பிற + கீறு (=அறு, கொல்) + அணம் = பிறகீறணம் >>> பிரகீரணம் = பிறரை அறுத்துக் கொல்லுதல்.  | 
 
| 
   பிரகுத்தம்  | 
  
   மான் கொம்பு  | 
  
   பிறக்குந்தம்  | 
  
   பிறக்கம் (=மரக்கிளை) + உந்து + அம் = பிறக்குந்தம் >>> பிரகுத்தம் = உந்துகின்ற மரக்கிளை போன்ற உறுப்பு.  | 
 
| 
   பிரகோவம்  | 
  
   கடுமை  | 
  
   விறகோபம்  | 
  
   விற (=மிகு) + கோபம் (=சினம்) = விறகோபம் >>> பிரகோவம் = மிகுந்த சினம் = கடுமை.  | 
 
| 
   பிரகாரம்  | 
  
   நடைபாதை  | 
  
   பிறங்காறம்  | 
  
   பிறங்கு (=நிகழ், நட) + ஆறு (=வழி) + அம் = பிறங்காறம் >>> பிரக்காரம் >>> பிரகாரம் = நடக்கும் வழி.  | 
 
| 
   சங்கம்  | 
  
   ஒலி, சொல்  | 
  
   சங்கம்  | 
  
   சங்கு (=குரல்வளை) >>> சங்கம் = குரல்வளையில் இருந்து தோன்றுவது = ஒலி, சொல்.  | 
 
| 
   பிரசங்கம்  | 
  
   மிகுதியான பேச்சு, விளக்கம்  | 
  
   விறசங்கம்  | 
  
   விற (=மிகு) + சங்கம் (=சொல்) = விறசங்கம் >>> பிரசங்கம் = மிகுதியாகச் சொல்லுதல், விளக்குதல்.  | 
 
| 
   பிரசங்கி  | 
  
   மிகுதியாய்ப் பேசு  | 
  
   விறசங்கி  | 
  
   விறசங்கம் (=மிகுதியாகப் பேசுதல்) >>> விறசங்கி >>> பிரசங்கி  | 
 
| 
   பிரசங்கி  | 
  
   விளக்குபவர்  | 
  
   விறசங்கி  | 
  
   விறசங்கம் (=விளக்கம்) >>> விறசங்கி = விளக்குபவர்.  | 
 
| 
   பிரசஞ்சை, பிரசம்சை  | 
  
   புகழ்ச்சி, வாழ்த்து  | 
  
   விறசஞ்சை  | 
  
   விற (=சிற) + சஞ்சை (=சொல்) = விறசஞ்சை >>> பிரசஞ்சை >>> பிரசம்சை = சிறப்பித்துச் சொல்லுதல்.  | 
 
| 
   சஞ்சை  | 
  
   சொல், ஒலி  | 
  
   சஞ்சை  | 
  
   அசை (=சொல்) >>> அஞ்சை >>> சஞ்சை = சொல், ஒலி  | 
 
| 
   பிரசண்டம்  | 
  
   கடுமை  | 
  
   விறசாட்டம்  | 
  
   விற (=மிகு) + சாடு (=கண்டி) + அம் = விறசாட்டம் >>> பிரசண்டம் = மிகுதியாகக் கண்டித்தல்  | 
 
| 
   பிரசண்டன்  | 
  
   கடுமையாளன்  | 
  
   விறசாட்டன்  | 
  
   விற (=மிகு) + சாடு (=கண்டி) + அன் = விறசாட்டன் >>> பிரசண்டன் = மிகுதியாகக் கண்டிப்பவன்.  | 
 
| 
   பிரசத்தி, பிரசக்தி  | 
  
   தக்க சமயம்  | 
  
   விறசாற்றி  | 
  
   விற (=செறி, நெருங்கு) + சாற்று (=அமை) + இ = விறசாற்றி >>> பிரசத்தி >>> பிரசக்தி = நெருக்கமாக அமைவது.  | 
 
| 
   பிரசத்தி  | 
  
   சாசனம்  | 
  
   பிறசாற்றி  | 
  
   பிற (=தோன்று) + சாற்று (=பலர் அறியச்செய்) + இ = பிறசாற்றி >>> பிரசத்தி = பலரும் அறியுமாறு தோன்றியது.  | 
 
| 
   பிரசரணம்  | 
  
   வளைத்துத் தாக்குதல், கொள்ளையடிக்கை  | 
  
   விறசாரணம்  | 
  
   விற (=தாக்கு) + சார் (=வளை) + அணம் = விறசாரணம் >>> பிரசரணம் = வளைத்து / சூழ்ந்து தாக்குதல் = கொள்ளையடித்தல்  | 
 
| 
   பிரசலை  | 
  
   மனக்கலக்கம்  | 
  
   பிறசலை  | 
  
   பிற (=தோன்று) + சலம் (=சுழற்சி) + ஐ = பிறசலை >>> பிரசலை = மனதில் தோன்றும் சுழற்சி.  | 
 
| 
   சலம்  | 
  
   சுழற்சி  | 
  
   சலம்  | 
  
   அலம் (=சுழற்சி) >>> சலம் = சுழற்சி  | 
 
| 
   பிரசவம்  | 
  
   மகப்பேறு  | 
  
   பிறசவ்வம்  | 
  
   பிற (=தோன்று) + சவ்வு + அம் = பிறசவ்வம் >>> பிரசவம் = சவ்வுக்குள் இருந்து தோன்றுதல்.  | 
 
| 
   பிரசவி  | 
  
   பெற்றெடு  | 
  
   பிறசவ்வி  | 
  
   பிறசவ்வம் (=மகப்பேறு) >>> பிறசவ்வி >>> பிரசவி = பெற்றெடு  | 
 
| 
   பிரசன்னம்  | 
  
   சாட்சியாகத் தோன்றுதல்  | 
  
   பிறசான்றம்  | 
  
   பிற (=தோன்று) + சான்று (=சாட்சி, காட்சி) + அம் = பிறசான்றம் >>> பிரசன்னம் = சாட்சியாகத் தோன்றுதல், காட்சியளித்தல்.  | 
 
| 
   பிரசாதம்  | 
  
   சிறப்புச்சோறு  | 
  
   விறசாதம்  | 
  
   விற (=சிற) + சாதம் (=சோறு) = விறசாதம் >>> பிரசாதம் = சிறப்பாகக் கொடுக்கப்படும் சோறு.  | 
 
| 
   பிரசாதனம்  | 
  
   வெள்ளி, கொக்கு  | 
  
   பிறசாறாணம்  | 
  
   பிற (=தோன்று) + சாறு (=தெளிவு, வெண்மை) + ஆணம் (=பொருள்) = பிறசாறாணம் >>> பிரசாதனம் = வெண்மையாகத் தோன்றும் பொருட்கள் = வெள்ளி, கொக்கு.  | 
 
| 
   பிரசாந்தி  | 
  
   முழு அமைதி  | 
  
   விறசாந்தி  | 
  
   விற (=மிகு) + சாந்தி (=அமைதி) = விறசாந்தி >>> பிரசாந்தி = முழு அமைதி.  | 
 
| 
   சாந்தி  | 
  
   அமைதி  | 
  
   சாற்றி  | 
  
   சாற்று (=அமை) >>> சாற்றி >>> சாத்தி >>> சாந்தி = அமைதி  | 
 
| 
   பிரசாமம்  | 
  
   மனவமைதி  | 
  
   விறசமம்  | 
  
   விற (=மிகு) + சமம் (=அமைதி) = விறசமம் >>> பிரசாமம் = மிகுதியான அமைதி.  | 
 
| 
   பிரசாரம்  | 
  
   மிகுதியாகப் பேசுதல்  | 
  
   விறசாலம்  | 
  
   பிற + சாலம் (= மிகுதியான பேச்சு) = விறசாலம் >>> பிரசாரம் = பிறருக்காக மிகுதியாகப் பேசுதல். ஒ.நோ: சாலம் (=மிகைப்பேச்சு) >>> சலம்பு = மிகுதியாகப் பேசு.  | 
 
| 
   பிரசாரம்  | 
  
   வேங்கை  | 
  
   பிறசாலம்  | 
  
   பிற (=தோன்று, பூ) + சால் (=புகழ், ஒளி) + அம் = பிறசாலம் >>> பிரசாரம் = ஒளிமிக்க பூக்களைக் கொண்டது.  | 
 
| 
   பிரசித்தம், பிரசித்தி  | 
  
   வெளிப்படையாகப் பரவியது, புகழ்  | 
  
   பிறசிந்தம்  | 
  
   பிற (=தோன்று, வெளிப்படு) + சிந்து (=பரவு) + அம் = பிறசிந்தம் >>> பிரசித்தம் = வெளிப்படையாகப் பரவியது = புகழ்.  | 
 
| 
   பிரசுரம்  | 
  
   படைத்தல்  | 
  
   பிறசூலம்  | 
  
   பிற (=தோன்று) + சூல் (=கரு) + அம் = பிறசூலம் >>> பிரசுரம் = கருவில் இருந்து தோன்றுதல் = படைத்தல்.  | 
 
| 
   பிரசுரம்  | 
  
   மிகுதி, பெருக்கம்  | 
  
   பிறசுரம்  | 
  
   பிற (=தோன்று) + சுர (=பெருகு, மிகு) + அம் = பிறசுரம் >>> பிரசுரம் = மிகுதியாகத் தோன்றுதல்  | 
 
| 
   சூதம்  | 
  
   கருப்பம்  | 
  
   சூதம்  | 
  
   சூல் (=கரு) + தல் >>> சூறல் (=கருப்பமாதல்) >>> சூறம் >>> சூதம் = கருப்பம்.  | 
 
| 
   பிரசூதம், பிரசூதி  | 
  
   குழந்தைப்பேறு  | 
  
   பிறசூதம்  | 
  
   பிற (=தோன்று) + சூதம் (=கருப்பம்) = பிறசூதம் >>> பிரசூதம் = கருப்பத்தில் இருந்து தோன்றுதல்.  | 
 
| 
   பிரசூதிகை, பிரசூதை  | 
  
   குழந்தை பெற்றெடுத்தவள்  | 
  
   பிரசூதிகை, பிரசூதை  | 
  
   பிரசூதி (=மகப்பேறு) >>> பிரசூதிகை, பிரசூதை = மகப்பேறு உற்றவள், குழந்தை பெற்றவள்.  | 
 
| 
   பிரசூனம்  | 
  
   பூ, மலர்  | 
  
   விறசூனம்  | 
  
   விற (=மிகு, மேம்படு) + சூனம் (=அரும்பு) = விறசூனம் >>> பிரசூனம் = அரும்பில் இருந்து மேம்பட்டது = மலர்.  | 
 
| 
   சூனம்  | 
  
   அரும்பு  | 
  
   சூலம்  | 
  
   சூல் (=கரு) >>> சூலம் >>> சூனம் = அரும்பு  | 
 
| 
   பிரசை  | 
  
   குடிமக்கள்  | 
  
   பிறாசை  | 
  
   பிற (=தோன்று) + அசை (=தங்கு, வாழ்) = பிறாசை >>> பிரசை = தோன்றி வாழ்பவர்கள்.  | 
 
| 
   பிரஞ்ஞன்  | 
  
   அறிஞன், புலவன்  | 
  
   விறாய்நன்  | 
  
   விற (=மிகு) + ஆய் (=அறி) + நன் = விறாய்நன் >>> பிரஞ்ஞன் = மிக்க அறிவுடையவன்.  | 
 
| 
   பிரஞ்ஞை  | 
  
   மிக்க அறிவு, புலமை  | 
  
   விறாயை  | 
  
   விற (=மிகு) + ஆய் (=அறி) + ஐ = விறாயை >>> பிரஞ்ஞை = மிகுதியான அறிவு  | 
 
| 
   பிரட்சாளகம், பிரட்சாளனம்  | 
  
   கால்களுக்கு நீரால் சிறப்பு செய்தல்  | 
  
   விறக்காலாக்கம்  | 
  
   விற (=சிற) + கால் + ஆக்கம் (=நீர்) = விறக்காலாக்கம் >>> பிரக்காலகம் >>> பிரக்சா~ளகம் >>> பிரட்சாளகம் = கால்களுக்கு நீரால் சிறப்பு செய்தல்.  | 
 
| 
   பிரட்டம்  | 
  
   பெருமை மிக்கது  | 
  
   வீறண்டம்  | 
  
   வீறு (=பெருமை) + அண்டு (=செறி, மிகு) + அம் = வீறண்டம் >>> வீரட்டம் >>> பிரட்டம் = பெருமை மிக்கது.  | 
 
| 
   பிரட்டம்  | 
  
   கடியப்பட்டது, விலக்கப்பட்டது  | 
  
   விரட்டம்  | 
  
   விரட்டு (=கடி, விலக்கு) + அம் = விரட்டம் >>> பிரட்டம் = கடியப்பட்டது / விலக்கப்பட்டது  | 
 
| 
   பிரட்டன்  | 
  
   விலக்கப்பட்டவன்  | 
  
   விரட்டன்  | 
  
   விரட்டு (=கடி, விலக்கு) + அன் = விரட்டன் >>> பிரட்டன் = கடியப்பட்டவன் / விலக்கப்பட்டவன்.  | 
 
| 
   பிரடை  | 
  
   முடுக்காணி  | 
  
   விரட்டை  | 
  
   விரட்டு (=முடுக்கு) >>> விரட்டை >>> பிரடை = முடுக்காணி  | 
 
| 
   பிரணயம்  | 
  
   பேரன்பு  | 
  
   விறநயம்  | 
  
   விற (=மிகு) + நயம் (=அன்பு) = விறநயம் >>> பிரணயம் = மிகுதியான அன்பு = பேரன்பு.  | 
 
| 
   பிரணவம்  | 
  
   ஓம் எனும் ஒலி  | 
  
   விறனாவம்  | 
  
   விறல் (=வெற்றி, சிறப்பு) + நாவு (=ஒலி) + அம் = விறனாவம் >>> பிரணவம் = வெற்றியைத் தரும் சிறப்புடைய ஒலி.  | 
 
| 
   பிரணாமம்  | 
  
   வணக்கம்  | 
  
   மிறைநாமம்  | 
  
   மிறை (=வளை, பணி) + நாமம் (=சொல்) = மிறைநாமம் >>> மிறய்ணாமம் >>> பிரணாமம் = பணிவைக் காட்டும் சொல்.  | 
 
| 
   பிரத்தல்  | 
  
   எழுத்திலா ஓசை  | 
  
   வீறற்றால்  | 
  
   வீறு (=கீறு, எழுது) + அல் + தால் (=ஒலி) = வீறற்றால் >>> பிரத்தல் = எழுத்து இல்லாத ஒலி.  | 
 
| 
   பிரத்தியக்கம், பிரத்தியட்சம்  | 
  
   காட்சி, கண்ணால் காண்பது.  | 
  
   வீறந்தியாகம்  | 
  
   வீறு (=ஒளி) + அந்தி (=கிடை) + ஆகம் (=கண்) = வீறந்தியாகம் >>> பிரத்தியக்கம் >>> பிரத்தியக்ச~ம் >>> பிரத்தியட்சம் = ஒளியால் கண்ணுக்குக் கிட்டுவது = காட்சி.  | 
 
| 
   பிரத்தியக்கு  | 
  
   மேற்கு  | 
  
   வீறற்றிக்கு  | 
  
   வீறு (=ஒளி) + அல் (=மறை) + திக்கு (=திசை) = வீறற்றிக்கு >>> பீரத்திக்கு >>> பிரத்தியக்கு = ஒளி மறையும் திசை  | 
 
| 
   பிரதி  | 
  
   ஒப்பானது, நகல்  | 
  
   பிறத்தி  | 
  
   பிற (=தோன்று) + அத்து (=பொருந்து) + இ = பிறத்தி >>> பிரதி = பொருந்தித் தோன்றுவது.  | 
 
| 
   பிரதி  | 
  
   பதில், மாற்று  | 
  
   விலத்தி  | 
  
   விலத்து (=மாற்று) >>> விலத்தி >>> விரத்தி >>> பிரதி = மாற்று.  | 
 
| 
   பிரதி  | 
  
   முதன்மை, ஒன்று, ஒவ்வொரு  | 
  
   பிறாதி  | 
  
   பிற (=தோன்று) + ஆதி (=முதல்) = பிறாதி >>> பிரதி = முதலில் தோன்றியது = முதன்மை, ஒன்று >>> ஒவ்வொரு  | 
 
| 
   பிரதி  | 
  
   முழுமை, மிகுதி  | 
  
   விறத்தி  | 
  
   விற (=மிகு, நிறை) + அத்து (=பொருந்து) + இ = விறத்தி >>> பிரதி = முழுமை, மிகுதி.  | 
 
| 
   அபகாரம்  | 
  
   தீமை  | 
  
   அவகாரம்  | 
  
   அவம் (=தீங்கு) + காரம் (=செயல்) = அவகாரம் >>> அபகாரம்  | 
 
| 
   அவம்  | 
  
   தீங்கு  | 
  
   அவம்  | 
  
   அவி (=கெடு) >>> அவம் = கேடு, தீங்கு  | 
 
| 
   பிரத்தியபகாரம்  | 
  
   பழிக்குப் பழி  | 
  
   பிரதியபகாரம்  | 
  
   பிரதி (=பதில்) + அபகாரம் (=தீமை) = பிரதியபகாரம் >>> பிரத்தியபகாரம் = பதிலுக்குத் தீமை செய்தல்.  | 
 
| 
   பிரத்தியருத்தம்  | 
  
   மறுமொழி  | 
  
   பிரதியருத்தம்  | 
  
   பிரதி (=பதில்) + அருத்து (=ஊட்டு) + அம் = பிரதியருத்தம் >>> பிரத்தியருத்தம் = பதில் ஊட்டுதல் = மறுமொழி கூறல்.  | 
 
| 
   பிரத்தியவாயம்  | 
  
   குற்றம்  | 
  
   விலத்தியவையம்  | 
  
   விலத்தி (=கடியப்பட்டது) + அவை (=நெரி, துன்புறுத்து) + அம் = விலத்தியவையம் >>> பிரத்தியவாயம் = கடியப்பட்ட துன்பம்.  | 
 
| 
   பிரத்தியாகாரம்  | 
  
   நுகரவிடாமல் புலன்களைத் தடுத்தல்  | 
  
   விலத்தியாக்காரம்  | 
  
   விலத்தி (=விலக்கு) + ஆக்கம் (=பொருள்) + ஆர் (=நுகர், அனுபவி) + அம் = விலத்தியாக்காரம் = பிரத்தியாகாரம் = பொருட்களை நுகரவிடாமல் புலன்களை விலக்குதல்.  | 
 
புதன், 6 மே, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 25
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.