சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
முட்டம், புட்டம் |
காக்கை |
முற்றம் |
முற்று (=கூடு, சூழ், தாக்கு) + அம் = முற்றம் >>> முட்டம் >>> புட்டம் = கூட்டமாகக் கூடி சூழ்ந்து தாக்குவது. |
அரிட்டம் |
காக்கை |
ஆரீட்டம் |
ஆர் (=உண்) + ஈட்டம் (=கூட்டம்) = ஆரீட்டம் >>> அரிட்டம் = கூட்டமாகக் கூடி உண்பது. |
கரடம் |
காக்கை |
கரடம் |
கரடு (=கபடம், தந்திரம்) >>> கரடம் = தந்திரம் மிக்கது. |
கரும்பிள்ளை |
காக்கை |
கரும்பிள்ளை |
கருமை + பிள்ளை (=பறவைக் குஞ்சு) = கரும்பிள்ளை = கருநிறப் பறவை. |
கலவகம் |
காக்கை |
காளவாகம் |
காளம் (=கருமை) + ஆகம் (=உடல்) = காளவாகம் >>> கலவகம் = கருநிற உடல் கொண்டது. |
காக்கை |
காக்கை |
காக்கை |
கா + கா + ஐ = காக்கை = கா கா என்று கத்துவது |
காகம் |
காக்கை |
காகம் |
கா + கா + அம் = காகம் = கா கா என்று கத்துவது |
காரி |
காக்கை |
காறி |
காறு (=கருமையாகு, கமறு) >>> காறி >>> காரி = தொண்டை கமறுவதைப் போல ஒலிக்கும் கருநிறப் பறவை. |
காலஞ்சொல்லி |
காக்கை |
காலஞ்சொல்லி |
காலம் + சொல் (=உணர்த்து) + இ = காலஞ்சொல்லி = விருந்தினர் வரும் காலத்தை உணர்த்துவதாக அறியப்படுவது. |
கொடி |
காக்கை |
கொடி |
கொட்டி (=கூட்டம், ஓசை) >>> கொடி = கூட்டமாகக் கூடி ஒலி எழுப்புவது. |
சிகரம் |
காக்கை |
சீகாரம் |
சீ (=அகற்று, தூய்மைசெய்) + கார் (=கருமை) + அம் = சீகாரம் >>> சிகரம் = தூய்மைசெய்யும் கரும்பறவை. |
சொற்புள் |
காக்கை |
சொற்புள் |
சொல் (=உணர்த்து) + புள் (=நிமித்தம், பறவை) = சொற்புள் = விருந்தினர் வரும் நிமித்தத்தை உணர்த்தும் பறவை. |
தீர்க்காயுசு |
காக்கை |
தீர்க்காயுசு |
தீர்க்கம் (=நீட்சி) + ஆயுசு (=வாழ்நாள்) = தீர்க்காயுசு = தினமும் சோறு வைத்தால் நீண்ட ஆயுளைத் தருமென்று நம்பப்படுவது |
துரோணம் |
காக்கை |
துறோணம் |
துறு (=நெருங்கு, கூடு) + உண் + அம் = துறோணம் >>> துரோணம் = கூடி உண்பது. |
நந்தம் |
காக்கை |
நந்தம் |
நத்தம் (=கூட்டம், கருமை) >>> நந்தம் = கூடி வாழும் கருநிறப் பறவை. |
நராந்தம், நரந்தம் |
காக்கை |
நரற்றம் |
நரற்று (=ஒலி, அழை, கூட்டு) + அம் = நரற்றம் >>> நரத்தம் >>> நரந்தம், நராந்தம் = இனத்தை அழைத்துக் கூட்டுவது. |
நைச்சி, நைசியம் |
காக்கை |
நைச்சீயம் |
(2). நை (=அழி, இற) + சீ (=அகற்று, தூய்மைசெய்) + அம் = நைச்சீயம் >>> நைசியம், நைச்சி = இறந்தவற்றை அகற்றித் தூய்மைசெய்வது. |
பரபிருதம் |
காக்கை |
பறைவிருந்தம் |
பறை (=சொல்லு) + விருந்து + அம் = பறைவிருந்தம் >>> பறய்பிருத்தம் >>> பரபிருதம் = விருந்தினர் வருகையைச் சொல்வது. |
பராதாரம் |
காக்கை |
பாறைதாரம் |
பாறை (=கல்) + தாரம் (=தருவித்தல், நீர்) = பாறைதாரம் >>> பாறய்தாரம் >>> பராதாரம் = கற்களால் நீர் தருவிப்பது. |
பலி |
காக்கை |
பலி |
பலி (=நிகழ், நட, ஒலி) >>> பலி = நடக்கப் போவதை தனது ஒலியால் உணர்த்துவதாக அறியப்படுவது. |
பலிபுட்டம் |
காக்கை |
பலிபுச்சம் |
பலி (=சோறு) + புசி (=உண்) + அம் = பலிபுச்சம் >>> பலிபுச்~டம் >>> பலிபுட்டம் = சோறு உண்பது. |
பிசுனம் |
காக்கை |
பிசுணம் |
பிசி (=சோறு) + உண் + அம் = பிசுணம் >>> பிசுனம் = சோறு உண்பது. |
யமம் |
காக்கை |
யாப்பம் |
யாப்பு (=சூழ்ச்சி, தந்திரம்) + அம் = யாப்பம் >>> யம்மம் >>> யமம் = தந்திரம் மிக்கது. |
வாயசம் |
காக்கை |
வாயசம் |
வாய் (=நிகழ், நட) + அசை (=ஒலி, சொல்) + அம் = வாயசம் = நிகழப் போவதை தனது ஒலியால் சொல்வதாகக் கருதப்படுவது. |
அப்பிரகிருட்டம் |
காக்கை |
அப்பிறை கீறூட்டம் |
அப்பு (=நீர்) + இறை (=உயர்த்து) + கீறு (=துண்டு, கல்) + ஊட்டு (=இடு) + அம் = அப்பிறைகீறூட்டம் >>> அப்பிரகிருட்டம் = கல் துண்டுகளை இட்டு நீரை உயர்த்துவது. |
உரண்டம் |
காக்கை |
ஊறாட்டம் |
ஊறு (=வல்லூறு) + ஆட்டு (=துரத்து, வெல்லு) + அம் = ஊறாட்டம் >>> உரட்டம் >>> உரண்டம் = வல்லூறைத் துரத்தி வெல்லக் கூடியது. |
கரவதம் |
காக்கை |
கரைபற்றம் |
கரை (=ஒலி, அழை) + பற்று (=உண்) + அம் = கரைபற்றம் >>> கரய்வத்தம் >>> கரவதம் = இனத்தை அழைத்து உண்பது. |
கூகாரி |
காக்கை |
கூகறி |
கூ (=கூப்பிடு, அழை) + கறி (=உண்) = கூகறி >>> கூகாரி = இனத்தை அழைத்து உண்பது. |
பிராட்டி |
தலைவி |
வீறாட்டி |
வீறு (=மேன்மை, பெருமை) + ஆட்டி = வீறாட்டி >>> பிராட்டி = மேன்மை / பெருமை உடையவள் |
பிராணம், பிராணன் |
உயிர் மூச்சு |
விராணம் |
(2). விரை (=புகை, ஆவி) + ஆணம் (=பற்றுக்கோடு, ஆதாரம்) = விராணம் >>> பிராணம், பிராணன் = உயிரிகளின் ஆதாரமாய் விளங்குகின்ற ஆவி = உயிர்மூச்சு. |
பிராணதன் |
உயிரளித்தோன், படைப்பாளி |
பிராணதன் |
பிராணம் (=உயிர்) + தா (=கொடு) + அன் = பிராணதன் = உயிர் கொடுத்தவன் = படைப்பாளி |
பிராணதன் |
வலியவன் |
வீறணத்தன் |
வீறணம் (=வலிமை) + அத்து (=பொருந்து) + அன் = வீறணத்தன் >>> பிராணதன் = வலிமை பொருந்தியவன் |
பிராணம், பிராணன் |
வீரம், வலிமை |
வீறாணம் |
வீறு (=வெற்றி) + ஆணம் (=ஆதாரம், அடிப்படை) = வீறாணம் >>> பிராணம், பிராணன் = வெற்றிக்கு அடிப்படையானது |
பிராணி |
மூச்சுவிடு |
பிராணி |
பிராணம் (=மூச்சு) >>> பிராணி = மூச்சுவிடு |
பிராணி |
உயிரி |
பிராணி |
பிராணம் (=உயிர்) >>> பிராணி = உயிர் உடையது |
பிராணி |
மரப்பட்டை, தோல் |
விலாணை |
வில (=தடு, மறை) + அணை (=பொருந்து) = விலாணை >>> பிராணி = மறைக்கும் விதமாகப் பொருந்தியிருப்பது. |
பிராத்தி, பிராப்தி, பிராப்தம், பிராத்தம் |
நற்பேறு |
வீறத்தி, வீறத்தம் |
வீறு (=நன்மை) + அத்து (=அடை) + இ / அம் = வீறத்தி / வீறத்தம் >>> பிராத்தி / பிராத்தம் >>> பிராப்தி / பிராப்தம் = நன்மை அடைதல். |
பிராத்திகன் |
பெறச்செய்பவன் |
வீறத்திகன் |
பிராத்தி (=பேறு) >>> பிராத்திகன் = பெறச்செய்பவன் |
பிராதம் |
விடியல், காலை |
விலாற்றம் |
வில (=விலகு, நீங்கு) + அற்றம் (=காலம், இருள்) = விலாற்றம் >>> பிராத்தம் >>> பிராதம் = இருள் விலகும் காலம். |
பிராதம்மியம், பிராதமிகம் |
முதலிடம், முற்பட்டது |
விறாத்தவியம் |
விற (=முற்படு) + அத்தம் (=இடம்) + இயம் = விறாத்தவியம் >>> பிராதம்மியம் = முற்பட்ட இடம் = முதன்மை. |
பிராதமிகன் |
அண்ணன் |
விறாத்தமிகன் |
பிராதமிகம் (=முற்பட்டது) >>> பிராதமிகன் = முற்பட்டவன் |
பிராதன், பிராதா |
உடன்பிறந்தோன் |
பிறாத்தன் |
பிற + அத்து (=பொருந்து, உடனாகு) + அன் = பிறாத்தன் >>> பிராத்தன் >>> பிராதா = உடன் பிறந்தவன். |
பிராதானியம் |
முதன்மை |
பிரதானியம் |
பிரதானம் (=முதன்மை) + இயம் >>> பிராதானியம் |
பிராதிபதிகம் |
பகாப்பதம் |
விலாறைபதிகம் |
வில (=பிரி, பகு) + அறை (=இன்மை) + பதம் + இகம் = விலாறைபதிகம் >>> பிராதைபதிகம் >>> பிராதிபதிகம் = பகுத்தல் இல்லாப் பதம் = பகாப்பதம் |
பிராதிபாசிகம் |
பிரதிபலிப்பது |
பிரதிபயிகம் |
பிரதி (=எதிர்) + பை (=ஒளிர்) + இகம் = பிரதிபயிகம் >>> பிராதிபாசிகம் = எதிரே ஒளிர்வது. |
பிராது |
புகார் |
மிறாற்று |
மிறை (=குற்றம், பழி) + ஆற்று (=சுமத்து) = மிறாற்று >>> பிராத்து >>> பிராது = குற்றம் சுமத்துதல். |
பிராந்தகன், பிராந்தன், பிராந்து |
அறிவு மயங்கியவன் |
பிராந்தகன் |
பிராந்தம் (=மயக்கம், கலக்கம்) + அகன் = பிராந்தகன் = சிந்தை மயங்கியவன் / கலங்கியவன் |
பிராந்தம் |
ஓரம் |
வீறந்தம் |
வீறு (=துண்டு, கூறு) + அந்தம் (=முடிவு) = வீறந்தம் >>> பிராந்தம் = துண்டின் முடிவு = ஓரம். |
பிராந்தம் |
நாடு, பெருநிலம் |
வீறத்தம் |
வீறு (=பெருமை) + அத்தம் (=இடம்) = வீறத்தம் >>> பீரந்தம் >>> பிராந்தம் = பெரிய இடப்பரப்பு கொண்டது. |
பிராந்தியம் |
நாடு, பெருநிலம் |
வீறத்தியம் |
வீறு (=பெருமை) + அத்தம் (=இடம்) + இயம் = வீறத்தியம் >>> பீரந்தியம் >>> பிராந்தியம் = பெரிய இடப்பரப்பு கொண்டது. |
பிராந்தி |
பேதி |
பிறழ்த்தி |
பிறழ் (=நிலைகெடு, கலங்கு) >>> பிறழ்த்து >>> பிறழ்த்தி >>> பிறய்ந்தி >>> பிராந்தி = வயிற்றைக் கலக்குவது. |
பிராந்து |
பருந்து |
விறாற்று |
விற (=சுற்று, சுழல்) + ஆற்று (=வலிமையாகு) = விறாற்று >>> பிராத்து >>> பிராந்து = வானில் சுற்றிக்கொண்டே இருப்பதான வலிமை மிக்க பறவை. |
பிராப்பியம் |
பெறத்தக்கது |
வீறப்பியம் |
வீறு (=நன்மை) + அப்பு (=பொருந்து) + இயம் = வீறப்பியம் >>> பீரப்பியம் >>> பிராப்பியம் = பொருந்தக்கூடிய நன்மை. |
பிராபவம் |
மேன்மை |
விறபாவம் |
விற (=மேம்படு) + பாவம் (=நிலை) = விறபாவம் >>> பிரபாவம் = மேம்பட்ட நிலை = மேன்மை. |
பிராமணன் |
கல்வியில் சிறந்தவன் |
விறபாணன் |
விற (=மேம்படு, மிகு) + பாண் (=பாட்டு, கல்வி) + அன் = விறபாணன் >>> பிரமாணன் >>> பிராமணன் = மேம்பட்ட / மிக்க கல்வி அறிவினைக் கொண்டவன். |
பிராமாணிகன் |
நம்புதற்குரியவன் |
பிரமாணிக்கன் |
பிரமாணிக்கம் (=உறுதி, நம்பிக்கை) >>> பிராமாணிகன் |
பிராமாணியம் |
ஆதாரங்களால் அளக்கப்பட்டது |
பிரமாணியம் |
பிரமாணம் (=அளவு, ஆதாரம்) + இயம் = பிரமாணியம் >>> பிராமாணியம் = ஆதாரங்களால் அளவிடப்பட்டது. |
பிராமியம் |
பிரம்ம முகூர்த்தம் |
விறாமையம் |
விற (=மேம்படு) + அமையம் (=பொழுது) = விறாமையம் >>> பிராமியம் = மேலான பொழுது. |
பிராயச்சித்தம் |
பரிகாரம் |
மிறயாயிற்றம் |
மிறை (=குற்றம், பழி) + ஆய் (=நீக்கு, களை) + இறு (=பதிலளி) + அம் = மிறயாயிற்றம் >>> பிரயாசித்தம் >>> பிராயசித்தம் = குற்றம் / பழியை நீக்குவதான பதில்வினை. |
பிராயம் |
நேரம், வயது |
விரயம் |
விரை (=ஓடு) + அம் = விரயம் >>> பிராயம் = ஓடிக்கொண்டே இருப்பது = நேரம், வாழ்நாள். |
பிராயம் |
சமம் |
விறயம் |
விறை (=நிமிர், சமமாகு) + அம் = விறயம் >>>பிராயம் = சமம் |
பிராயிகம் |
பெரும்பான்மை |
விறயிகம் |
விற (=மிகு) + இகம் = விறயிகம் >>> பிராயிகம் = மிகுதி |
பிராயோபவேசம், பிராயோப வேசனம் |
உண்ணாமல் அமர்ந்திருந்து உயிர் நீத்தல் |
விரயோம்பா மேயம் |
விரை (=புகை, ஆவி, உயிர்) + ஓம்பு (=போற்று) + ஆ + மே (=பொருந்து, அமர்) + அம் = விரயோம்பாமேயம் >>> பிரயோப்பாவேசம் >>> பிராயோபவேசம் = தனது ஆவியைப் / உயிரைப் போற்றாமல் அமர்ந்திருத்தல். |
பிரார்த்தனம், பிரார்த்தனை |
நறுமணப் பொருட்களை நுகர்வித்து வழிபாடு செய்தல் |
விரயருத்தணம் |
விரை (=வாசனை, புகை, மலர், சந்தனம்) + அருத்து (=நுகர்வி, ஊட்டு) + அணம் = விரயருத்தணம் >>> பிரார்த்தனம் = வாசனை மிக்க புகை, பூக்கள், சந்தனாதிப் பொருட்களை இறைவனுக்கு நுகர்வித்தல் = வழிபாடு செய்தல். |
பிரார்த்தனம், பிரார்த்தனை |
வேண்டுதல் |
விரார்த்தணம் |
விரு (=விரும்பு) + ஆர்த்து (=அறியச்செய்) + அணம் = விரார்த்தணம் >>> பிரார்த்தனம் = தனது விருப்பத்தை இறைவன் அறியச்செய்தல். |
பிரார்த்தி |
வேண்டு, வழிபடு |
பிரார்த்தி |
பிரார்த்தனை (=வேண்டுதல், வழிபாடு) >>> பிரார்த்தி |
பிரியம் |
விருப்பம், அன்பு |
விரியம் |
(2).விரு (=விரும்பு) + இயம் = விரியம் >>> பிரியம் = விருப்பம் |
வீரை |
தாய், மனைவி |
வீரை |
விரு (=விரும்பு) + ஐ = வீரை = விருப்பம் உடையவள். |
பிரார்த்தம், பிராரத்தம், பிராரப்தம் |
முன்வினைப் பயனை அனுபவித்தல் |
பிரயருத்தம் |
பிரை (=பயன்) + அருத்து (=ஊட்டு) + அம் = பிரயருத்தம் >>> பிரார்த்தம் >>> பிராரத்தம் >>> பிராரப்தம் = வினைப்பயன் ஊட்டப்படுதல். |
பிராரம்பம் |
தொடக்கத்தின் தொடக்கம் |
பிறாரம்பம் |
பிற (=தோன்று) + ஆரம்பம் (=தொடக்கம்) = பிறாரம்பம் >>> பிராரம்பம் = தொடக்கத்தின் தோற்றம். |
பிராரம்பி |
தொடக்கத்தைத் தொடங்கு |
பிறாரம்பி |
பிறாரம்பம் (=தொடக்கத்தின் தொடக்கம்) >>> பிறாரம்பி >>> பிராரம்பி = தொடக்கத்தைத் தொடங்கு |
பிராவண்ணியம் |
ஈடுபாடு |
விரவண்ணியம் |
விரவு (=கல, பழகு) + அண்ணு (=நெருங்கு) + இயம் = விரவண்ணியம் >>> பிராவண்ணியம் = நெருங்கிப் பழகுதல். |
பிராவம் |
கொல்லை, காடு |
புறவம் |
புறவம் (=கொல்லை, காடு) >>> பிராவம். ஒ.நோ: (1) புரள் >>> பிரள். (2) புழுக்கை >>> பிழுக்கை. (3) புரி >>> பிரி |
பிராவிரச்சீயன் |
முற்றும் துறந்தவர் |
விறவிரசையன் |
விற (=மிகு, முற்று) + விரசு (=கடி, நீக்கு) + ஐயன் (=பெரியோன்) = விறவிரசையன் >>> பிரவிரசியன் >>> பிராவிரச்சீயன் = முற்றும் கடிந்த பெரியோன். |
பிராறு |
நீர் நிறைந்த ஆறு |
விறாறு |
விற (=மிகு, பெருகு) + ஆறு = விறாறு >>> பிராறு = நீர் மிகுந்த ஆறு. |
பிராறு |
நீர் இயங்கும் பாதை |
விராறு |
விரை (=செல், ஓடு) + ஆறு (=வழி, நீர்) = விராறு >>> பிராறு = நீர் செல்லும் / ஓடும் வழி. |
பிரான் |
தலைவன் |
விறான் |
விற (=மிகு, மேம்படு) + அன் = விறான் >>> பிரான் = மேம்பட்டவன் = தலைவன். |
பிரியம், பிரிசம், பிரிசல் |
பற்றாக்குறை |
பிரியம் |
பிரி (=நீக்கு, குறை) + அம் = பிரியம் >>> பிரிசம் = பற்றாக்குறை. |
பிரிசாலம், பிரிசாரம் |
தன்னைத் தானே விரும்புதல் |
விரியலம் |
விரு (=விரும்பு) + இயல் (=தன்மை) + அம் = விரியலம் >>> பிரிசாலம் >>> பிரிசாரம் = தன்னைத் தான் விரும்புதல். |
பிரிசாலம், பிரிசாரம் |
வற்புறுத்தல் |
விரியலம் |
விரு (=விரும்பு) + இயல் (=உடன்படுத்து) + அம் = விரியலம் >>> பிரிசாலம் >>> பிரிசாரம் = தமது விருப்பத்திற்குப் பிறரை உடன்படச் செய்தல். |
பிரியன் |
காதலன், கணவன் |
விரியன் |
விரு (=விரும்பு) + இயன் = விரியன் >>> பிரியன் = விருப்பம் கொண்டவன். |
பிரியை |
காதலி, மனைவி |
விரியை |
விரியன் (=காதலன், கணவன்) >>> விரியை >>> பிரியை |
பிரீத்தி, பிரீதி |
விருப்பம், மகிழ்ச்சி. |
விரின்றி |
விரு (=விரும்பு) + இன் (=இனிமை, மகிழ்ச்சி) + தி = விரின்றி >>> பிரிற்றி >>> பிரீத்தி = விருப்பமும் மகிழ்ச்சியும் கலந்தது. |
பிருக்கம் |
சிறுநீரகம் |
விருகம் |
விரை (=கொட்டை) + உகு (=சிந்து, சொரி) + அம் = விருகம் >>> பிருக்கம் = நீரைச் சிந்தும் கொட்டையுடைய உறுப்பு. |
பிருகதி |
மாமரம் |
வீறுகதி |
வீறு (=ஒளி, மஞ்சள்) + உக (=விரும்பு) + தி = வீறுகதி >>> பிருகதி = விரும்பத்தக்க மஞ்சள்நிறப் பழங்களை உடையது. |
பிருகுடி |
புருவம் |
வீறுகுணி |
வீறு (=வளைவு) + குணி (=வில்) >>> வீறுகுணி >>> பிருகுடி = வில் போன்ற வளைவைக் கொண்டது. |
பிருங்கம் |
வண்டு |
விருகம் |
விரை (=பூந்தேன்) + உக (=விரும்பு) + அம் = விருகம் >>> விருக்கம் >>> பிருங்கம் = பூந்தேனை விரும்புவது. |
பிருசகன் |
கொலைகாரன் |
வீறுசாகன் |
வீறு (=வெட்டு) + சாகம் (=உடல்) + அன் = வீறுசாகன் >>> பிருசகன் = உடலை வெட்டிக் கொல்பவன். |
சாகம் |
உடல் |
ஆகம் |
ஆகம் (=உடல்) >>> சாகம் |
பிருட்டம், பிருச்~டம் |
குண்டிப் பகுதி |
புறூற்றம் |
புறம் (=பின்பக்கம்) + ஊறு (=தசை) + அம் = புறூற்றம் >>> புருட்டம் >>> பிருட்டம் = பின்பக்கத் தசை. ஒ.நோ: (1) புரள் >>> பிரள். (2) புரி >>> பிரி. (3) புழுக்கை >>> பிளுக்கை. |
பிருட்டம் |
இடுப்பு |
புறூட்டம் |
புறம் (=பகுதி, இடம்) + ஊடு (=நடு) + அம் = புறூட்டம் >>> புருட்டம் >>> பிருட்டம் = நடுவில் இருக்கும் பகுதி. |
பிருட்டம் |
முதுகு |
புறூற்றம் |
புறம் (=பின்பக்கம்) + ஊறு (=உடல்) + அம் = புறூற்றம் >>> புருட்டம் >>> பிருட்டம் = உடலின் பின்பக்கம். ஒ.நோ: (1) புரள் >>> பிரள். (2) புரி >>> பிரி. (3) புழுக்கை >>> பிளுக்கை. |
பிருட்டம் |
அரைத்த மாவு |
வீறுற்றம் |
வீறு (=துண்டு, கூறு) + உறு + அம் = வீறுற்றம் >>> பிருட்டம் = துண்டாக்கப்பட்டது / கூறுசெய்யப்பட்டது. |
பிருடை |
மரையாணி |
புருடை |
புரி (=முறுக்கு, முடுக்கு) + உடை (=துண்டு) = புருடை >>> பிருடை = முடுக்கப்படும் சிறுதுண்டு. |
பிருடை |
தக்கை |
புரூட்டை |
புரை (=ஓட்டை, துளை) + ஊட்டு (=திணி) + ஐ = புரூட்டை >>> புருடை >>> பிருடை = துளையில் திணிக்கப்படுவது. |
பிருடை, புருடை, புரூடா |
பித்தலாட்டம், பொய் |
விலுறை |
புரை (=பொய்) + உடை = புருடை >>> பிருடை = பொய்யினை உடையது = பித்தலாட்டம். |
பிருத்தியன் |
அடிமை |
பிறுந்தியன் |
பிறை (=வளைவு, பணிவு) + உந்து (=செல், இயங்கு) + இயன் = பிறுந்தியன் >>> பிருத்தியன் = பணிவுடன் இயங்குபவன். |
பிருதிவி |
பூமி |
வீறுதீவி |
வீறு (=மிகுதி, பெருமை) + தீவு + இ = வீறுதீவி >>> பிருதிவி = மிகப் பெரிய தீவாக இருப்பது. பி.கு: நாற்புறமும் நீர் சூழ்ந்தது தீவு எனப்படும். பூமியைக் கடல்நீர் நாற்புறமும் சூழ்ந்திருப்பதால் பூமியே மிகப்பெரும் தீவாகும். |
திவி |
சொர்க்கம் |
தீமி |
தீம் (=இனிமை, மகிழ்ச்சி) + இ = தீமி >>> திவி = இனிமை / மகிழ்ச்சி நிறைந்த இடம். |
பிருதூதரம் |
ஆட்டுக்கிடா |
விருந்தூதரம் |
விருந்து + உதரம் (=வயிறு) = விருந்தூதரம் >>> பிருதூதரம் = வயிற்றுக்கு விருந்தாக அமைவது. |
பிருந்தம் |
கூட்டம் |
விறுந்தம் |
விற (=மிகு) + உந்து (=பெருகு) + அம் = விறுந்தம் >>> பிருந்தம் = மிகுதியான பெருக்கம். |
பிருந்தம், பிருந்தை |
துளசி |
விருந்தம் |
விரை (=நறுமணம்) + உந்து (=அனுப்பு, பரப்பு) + அம் = விருந்தம் >>> பிருந்தம் = நறுமணம் பரப்புவது. |
பிருமத்தி |
பெருமயக்கம் |
வீறுமத்தி |
வீறு (=மிகுதி) + மதம் (=மயக்கம்) + இ = வீறுமத்தி >>> பிருமத்தி = மிகுதியான மயக்கம். |
பிரேட்சை |
அறிவு |
வீறேயை |
வீறு (=ஒளி) + ஏய் (=ஒப்பு) + ஐ = வீறேயை >>> பிரேசை >>> பிரேச்சை >>> பிரேட்சை = ஒளி போன்றது. |
பிரேட்சை |
காணப்படுதல் |
பிறேயை |
பிற (=தோன்று) + ஏய் (=எதிர்ப்படு) + ஐ = பிறேயை >>> பிரேசை >>> பிரேச்சை >>> பிரேட்சை = எதிர்ப்பட்டுத் தோன்றுதல். |
பிரேட்சை |
மரக்கிளை |
பிறேஞ்சை |
பிற (=தோன்று) + எஞ்சு + ஐ = பிறேஞ்சை >>> பிரேச்சை >>> பிரேட்சை = தோன்றி எஞ்சி இருப்பது. |
பிரேட்சை |
விளையாட்டு |
விரேசை |
விரை (=ஓடு) + அசை (=ஆடு) = விரேசை >>> பிரேச்சை >>> பிரேட்சை = ஓடி ஆடுதல். |
பிரேடணம் |
அனுப்புகை |
புறேறணம் |
புறம் (=வெளி) + எறி (=செலுத்து) + அணம் = புறேறணம் >>> புரேடணம் >>> பிரேடணம் = வெளியே செலுத்துதல். |
பிரேதம் |
பிணம் |
விரேற்றம் |
விரை (=புகை, ஆவி, உயிர்) + எற்று (=நீங்கு) + அம் = விரேற்றம் >>> பிரேத்தம் >>> பிரேதம் = உயிர் நீங்கியது. |
பிரேதம், பிரேதகம் |
பேய் |
பிரேதகம் |
பிரேதம் (=பிணம்) + அகம் = பிரேதகம் = இறந்த உடலைக் கொண்டது = பேய். |
பிரேதம் |
தெற்குத்திசை |
புறேற்றம் |
புறம் (=பக்கம்) + ஏற்றம் (=வலிமை) = புறேற்றம் >>> புரேத்தம் >>> புரேதம் >>> பிரேதம் = வலிமையான பக்கம் = வலப்பக்கம் = தெற்கு. பி.கு: நம் உடலில் வலதுகையே வலிமை மிக்கதாக இருப்பதாலும் கிழக்குநோக்கி நிற்கையில் வலப்பக்கமே தெற்கு என்பதாலும் இப் பெயர் ஏற்பட்டது. |
பிரேதம் |
முதுகு, பின்புறம் |
புறேறம் |
புறம் (=பின்பக்கம்) + ஏறு (=பரவு) + அம் = புறேறம் >>> புரேதம் >>> பிரேதம் = பின்பக்கப் பரப்பு |
பிரேயம் |
கள் |
பிரேயம் |
பிரை (=மோர்) + ஏய் (=ஒப்பு) + அம் = பிரேயம் = மோரைப் போல வெண்மையும் புளிப்பும் கொண்டது. |
பிரேரணம், பிரேரணை |
தூண்டுதல் |
புறேறணம் |
புறம் (=வெளி) + ஏறு (=எழு) + அணம் = புறேறணம் >>> பிரேரணம் = வெளியே எழுமாறு செய்தல். |
பிரேரகம் |
தூண்டுவது |
புறேறாக்கம் |
புறம் (=வெளி) + ஏறு (=எழு) + ஆக்கம் (=பொருள்) = புறேறாக்கம் >>> பிறேறாக்கம் >>> பிரேரகம் = வெளியே எழுமாறு செய்வது. |
ஞாயிறு, 17 மே, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 29
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.