சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
ஆந்தை |
ஆந்தை |
அற்றை |
அல் (=இரவு) + தா (=தாவு, பாய்) + ஐ = அற்றை >>> ஆத்தை >>> ஆந்தை = இரவில் தாவித் திரிவது. |
ஆண்டலை |
ஆந்தை |
அற்றாலை |
அல் (=இரவு) + தாலு (=அலறு, ஒலி) + ஐ = அற்றாலை >>> ஆட்டலை >>> ஆண்டலை = இரவில் அலறுவது. |
கோட்டான் |
ஆந்தை வகை |
கோட்டான் |
கோடு (=கொம்பு) + ஆன் = கோட்டான் = கொம்பு போன்ற அமைப்பினைத் தலைமேல் கொண்ட ஆந்தை வகை. |
குடிஞை |
ஆந்தை வகை |
கோடியை |
கோடு (=கொம்பு) + இயை = கோடியை >>> குடிஞை = கொம்பு போன்ற அமைப்பினைத் தலையில் கொண்டது. |
கூகை, கூகம் |
ஆந்தை வகை |
கூகை, கூகம் |
கூ >>> கூகை, கூகம் = கூ கூ என்று பெருங்குரல் எழுப்புவது. |
குரால் |
ஆந்தை |
குரல் |
குரு (=தோன்று, வெளிப்படு) + அல் (=இரவு) = குரல் >>> குரால் = இரவில் வெளிப்படுவது. |
ஊமன் |
ஆந்தை வகை |
ஊவன் |
ஊ + அன் = ஊவன் >>> ஊமன் = ஊ ஊ என்று ஊளையிடுவதைப் போல ஒலிப்பது |
யூகம் |
ஆந்தை |
ஊகம் |
ஊகி (=கணி) >>> ஊகம் >>> யூகம் = கணிப்பது. பி.கு: இருளில் இரையின் இருப்பினை அதன் ஒலி / அதிர்வைக் கேட்டுக் கணித்துத் தாக்கும் இயல்புடையது ஆந்தை. |
இருடி |
ஆந்தை |
இருளி |
இருள் (=இரவு) >>> இருளி >>> இருடி = இரவில் திரிவது |
ஓரை |
ஆந்தை |
ஓரை |
ஓர் (=கேள், கணி) >>> ஓரை = கேட்டுக் கணிப்பது. பி.கு: இருளில் இரையின் இருப்பினை அதன் ஒலி / அதிர்வைக் கேட்டுக் கணித்துத் தாக்கும் இயல்புடையது ஆந்தை. |
நத்து |
ஆந்தை |
நத்து |
நத்தம் (=இரவு, விரும்பு) >>> நத்து = இரவுப் பொழுதை விரும்புவது = ஆந்தை. |
முதுபுள் |
ஆந்தை |
முதுபுள் |
முது (=பேரறிவு) + புள் (=பறவை) = முதுபுள் = பேரறிவு கொண்ட பறவையாகக் கருதப்படுவது. |
கின்னரம், கின்னரி |
ஆந்தை வகை |
கிண்ணாலம் |
கிண் (=கிண்கிணி) + ஆலு (=ஒலி) + அம் = கிண்ணாலம் >>> கின்னரம் = கிண்கிணியைப் போல ஒலி எழுப்புவது |
கூன் |
ஆந்தை |
கூன் |
குனி (=திருப்பு, உற்றுப்பார்) >>> கூன் = தலையை முழுதுமாய்த் திருப்பி உற்றுப்பார்க்க வல்லது. |
திவாந்தம் |
ஆந்தை |
திவாந்தம் |
திவா (=பகல்) + அந்தம் (=மறைவு) = திவாந்தம் = பகலில் பெரும்பாலும் மறைந்து இருப்பது. |
திவம், திவா |
வெயில், பகல் |
தீப்பம் |
தீப்பு (=எரி, கருக்கு) >>> தீப்பம் >>> திவ்வம் >>> திவம், திவா = எரிப்பது / கருக்குவது = வெயில், பகல். |
அந்தம் |
குருடு, இருள் |
அற்றம் |
அற்றம் (=மறைவு) >>> அத்தம் >>> அந்தம் = ஒளி மறைவுற்று இருக்கும் நிலை = இருள், குருடு |
நிசாசரம் |
ஆந்தை |
நிசாசரம் |
நிசா (=இரவு) + சல (=இயங்கு) + அம் = நிசாசலம் >>> நிசாசரம் = இரவில் இயங்குவது. |
சர |
இயங்கு, திரி |
அல |
அல (=திரி, இயங்கு) >>> சல >>> சர |
நிசாடம் |
ஆந்தை |
நிசாடம் |
நிசா (=இரவு) + ஆடு (=இயங்கு) + அம் = நிசாடம் = இரவில் இயங்குவது |
பீருகம் |
ஆந்தை |
வீறுகம் |
வீறு (=ஒளி) + உகு (=மறை) + அம் = வீறுகம் >>> பீருகம் = ஒளியின்போது மறைந்து கொள்வது. |
பேசகம் |
ஆந்தை வகை |
பேயாகம் |
பேய் + ஆகம் (=கண்) = பேயாகம் >>> பேசகம் = பேய் போன்ற அச்சுறுத்தும் கண்களைக் கொண்டது. |
மூங்கா |
ஆந்தை |
மூக்கா |
மூக்கு (=அலகு) >>> மூக்கா >>> மூங்கா = வாய் தெரியாததால் மூக்கில் பேசுவதாகக் கருதப்படுவது. |
யாழ் |
ஆந்தை |
யாழ் |
ஆழ் (=நிலை, ஊன்று) >>> யாழ் = ஓரிடத்தில் நிலையாக இருந்து நெடுநேரம் ஊன்றிப் பார்ப்பது. |
வக்கிரநாசிகம் |
ஆந்தை |
வக்கிரநாசிகம் |
வக்கிரம் (=வளைவு) + நாசி (=அலகு) + கம் = வக்கிரநாசிகம் = சிறிய வளைந்த அலகினைக் கொண்டது. |
வக்கிரம் |
வளைவு |
வாங்கிரம் |
வாங்கு (=வளை) + இரு + அம் = வாங்கிரம் >>> வக்கிரம் = வளைவாக இருப்பது. |
வாயசாராதி |
ஆந்தை |
மாயசாரதி |
மாயம் (=கருப்பு, இருள்) + சாரதி (=இயங்குபவன்) = மாயசாரதி >>> வாயசாராதி = இருளில் இயங்குபவன். |
ஊனம் |
ஆந்தை வகை |
ஊனம் |
ஊ >>> ஊனம் = ஊ ஊ என்று ஒலிப்பது |
கபிஞ்சலம் |
ஆந்தை |
கவிஞ்சலம் |
கவி (=மூடு, மறை, இருளு) + சல (=இயங்கு) + அம் = கவிச்சலம் >>> கபிஞ்சலம் = இருளில் இயங்குவது. |
ஊலூகம், உலூகம் |
ஆந்தை வகை |
ஊளுகம் |
ஊளை + உகு (=பற) + அம் = ஊளுகம் >>> ஊலூகம், உலூகம் = ஊ ஊ என்று ஒலிக்கும் பறவை. |
கௌசிகம், கோசிகம் |
ஆந்தை வகை |
கப்புசிக்கம் |
கப்பு (=கிளை) + சிக்கம் (=குடுமி) = கப்புசிக்கம் >>> கவ்வுசிகம் >>> கவுசிகம், கௌசிகம், கோசிகம் = கிளைத்த குடுமி போல காதுகளைக் கொண்டது. |
பொய்கை |
ஆந்தை |
பொய்கை |
பொய் (=மரப்பொந்து) >>> பொய்கை = மரப்பொந்தில் வசிப்பது. |
பிரபு |
மேம்பட்ட பிறப்பினர் |
விறபூ |
விற (=மேம்படு) + பூ (=பிறப்பு) = விறபூ >>> பிரபு = மேம்பட்ட பிறப்பினை உடையவர். |
பிரபு |
பாதரசம் |
வீறப்பு |
வீறு (=ஒளி, வெண்மை) + அப்பு (=நீர்) = வீறப்பு >>> பிரபு = வெண்ணிற நீர் போன்றது. |
பிரபுத்தன் |
மிக விழிப்பாக இருப்பவன் |
விறமுற்றன் |
விற (=மிகு) + முறை (=கவனி) + அன் = விறமுற்றன் >>> பிரபுத்தன் = மிக்க கவனமுள்ளவன். |
பிரபூதபலி |
இறந்துபோன பிதிர்களுக்கான படையல் |
விறபூதபலி |
விற (=மேம்படு) + பூதம் (=ஆவி) + பலி (=சோறு) = விறபூதபலி >>> பிரபூதபலி = மேல்நிலை அடைந்த ஆவிகளுக்கான படையல். |
பிரபேதம் |
வகை |
பிறபேதம் |
பிற (=தோன்று) + பேதம் (=வேறுபாடு) = பிறபேதம் >>> பிரபேதம் = வேறுபட்டுத் தோன்றுவது. |
பிரபோதம் |
பேரறிவு |
விறபோதம் |
விற (=மிகு) + போதம் (=கல்வி, அறிவு) = விறபோதம் >>> பிரபோதம் = மிக்க கல்வி அறிவு |
போதம் |
கல்வி, அறிவு |
போற்றம் |
போற்று (=பாடு) + அம் = போற்றம் >>> போத்தம் >>> போதம் = பாட்டு, கல்வி, அறிவு. பி.கு: பழங்காலத்தில் கல்வியானது பாட்டு வடிவில்தான் கற்பிக்கப்பட்டது. |
பிரபோதனம் |
கற்பிக்கை |
பிறபோதணம் |
பிற (=தோன்று) + போதம் (=அறிவு) + அணம் = பிறபோதணம் >>> பிரபோதனம் = அறிவு தோன்றுமாறு செய்தல் = கற்பித்தல். |
பிரம்பு |
கடல் |
விறம்பு |
விற (=செறி, மிகு) + அம்பு (=நீர்) = விறம்பு >>> பிரம்பு = மிகச் செறிவுடைய நீர் = கடல். |
பிரம்பு |
வெண்ணெய், நெய் |
வீறம்பு |
வீறு (=ஒளி, வெண்மை) + அம்பு (=நீர்) = வீறம்பு >>> பிரம்பு = வெண்மையான / ஒளிமிக்க நீர் போன்றது. |
பிரம்பு |
வரப்பு, கரை |
விலம்பு |
வில (=தடு) + அம்பு (=நீர்) = விலம்பு >>> பிரம்பு = நீரைத் தடுப்பது = வரப்பு, கரை |
பிரமணம் |
சுழற்சி, மயக்கம் |
விறவணம் |
வீற்று (=வட்டம்) <<< விற (=சுழல்) + அணம் = விறவணம் >>> பிரமணம் = சுழற்சி >>> கிறக்கம், மயக்கம் |
பிரமதம், பிரமத்தம், பிரமாத்தியம் |
மிகு மயக்கம் |
விறமதம் |
விற (=மிகு) + மதம் (=மயக்கம்) = விறமதம் >>> பிரமதம் >>> பிரமத்தம் >>> பிரமாத்தியம் = மிகுதியான மயக்கம் |
பிரமத்தம் |
போதைப்பொருள் |
பிறமதம் |
பிற (=தோன்று) + மதம் (=போதை) = பிறமதம் >>> பிரமத்தம் = போதையைத் தோற்றுவிப்பது |
பிரமத்தம், பிரமாதம், பிரமாத்தியம் |
பிழை, அசட்டை |
பிறமதம் |
பிற (=தோன்று) + மதம் (=செருக்கு, மயக்கம்) = பிறமதம் >>> பிரமாதம் >>> பிரமத்தம் >>> பிரமாத்தியம் = செருக்கு / மயக்கத்தால் உண்டாவது. |
பிரமதனம் |
தயிர் கடைதல் |
விலமத்தணம் |
வில (=பிரி) + மத்து (=சுழற்று) + அணம் = விலமத்தணம் >>> பிரமதனம் = பிரித்து எடுப்பதற்காகச் சுழற்றுதல். |
பிரமதனம் |
கொலை |
விறமாற்றணம் |
விற (=வெல்) + மாறு (=பகை) + அணம் = விறமாற்றணம் >>> பிரமத்தணம் >>> பிரமதனம் = பகையை வெல்லுதல். |
பிரமதாலயம் |
நரகம் |
பிரமதாலயம் |
பிரமதம் (=பிழை) + அலை (=துன்புறுத்து) + அயம் (=பள்ளம்) = பிரமதாலயம் = செய்த பிழைக்காகத் துன்புறுத்தப்படும் பள்ளம். |
பிரமதிதம் |
கடைந்த மோர் |
விலமத்திதம் |
வில (=பிரி) + மத்து (=சுழற்று) + இதம் (=இனிமை) = விலமத்திதம் >>> பிரமதிதம் = சுழற்றிப் பிரித்து எடுக்கப்பட்ட இனிமையான பொருள். |
பிரமதை |
அழகிய பெண் |
விறபதை |
விற (=மிகு) + பதம் (=அழகு) + ஐ = விறபதை >>> பிரமதை = மிக்க அழகுடையவள். |
பிரமம், பிரமை |
கிறக்கம், மயக்கம், கலக்கம் |
விறமம் |
விற (=சுழல்) + மம் = விறமம் >>> பிரமம் = சுழற்சி, கிறக்கம், மயக்கம், கலக்கம் |
பிரமபத்திரம், பிரமபத்திரி |
புகையிலை |
விறமபத்திரம் |
விறமம் (=கிறக்கம்) + பத்திரம் (=இலை) = விறமபத்திரம் >>> பிரமபத்திரம் = கிறக்கத்தைத் தரும் இலை. |
பிரமம் |
ஒளி, சூரியன், சந்திரன், அக்கினி |
பிறமம் |
பிற (=தோன்று, வெளிப்படு) + மம் = பிறமம் >>> பிரமம் = வெளிப்பட்டுத் தோன்றுவது = ஒளி >>> ஒளியைத் தருவதான சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூலங்கள். |
பிரமபிங்கை |
வெள்ளி |
பிரமவிங்கம் |
பிரமம் (=ஒளி, வெண்மை) + இங்கம் (=பொருள்) = பிரமவிங்கம் >>> பிரமபிங்கை = வெண்ணிறப் பொருள் |
பிரமம் |
முழு முதல் |
விறமம் |
விற (=மேம்படு) + மம் = விறமம் >>> பிரமம் = மேம்பட்டது, தலையாயது = முழுமுதல். |
பிரமம் |
ஆடு |
வீறம்மம் |
வீறு (=வெட்டு, அறு) + அம்மு (=உண்ணு) + அம் = வீறம்மம் >>> பிரமம் = வெட்டி / அறுத்து உண்ணப்படுவது |
பிரமம் |
நடு |
விலமம் |
வில (=பிரி) + மம் = விலமம் >>> பிரமம் = பிரிப்பது |
பிரமம் |
சக்கரம், சுழல்காற்று |
விறமம் |
விற (=சுழல்) + மம் = விறமம் = சுழல்வது = சுழல்காற்று, சக்கரம். |
பிரமம் |
தவறு |
விலமம் |
வில (=விலகு, பிசகு) >>> விலமம் >>> பிரமம் = பிசகு |
பிரமம், பிரமை |
ஞானம் |
விலமம் |
வில (=பிரி, பகு) + மம் = விலமம் >>> பிரமம் = பகுத்துக் காணும் இயல்புடையது = ஞானம். |
பிரமரம் |
வண்டு, தேனீ |
விறவாரம் |
விற (=செறி, மொய்) + ஆர் (=ஒலி, உண்ணு) + அம் = விறவாரம் >>> பிரமரம் = ஒலித்துக் கொண்டே மொய்த்து உண்பன. |
பிரமரி |
சுழற்சி |
விறமறி |
விற (=சுழல்) + மறி (=மீளு) = விறமறி >>> பிரமரி = மீண்டும் மீண்டும் சுழல்தல். |
பிரமாண்டம் |
மிகப் பெரியது, உலகம் |
விறமட்டம் |
விற (=மிகு) + மட்டம் (=அளவு) = விறமட்டம் >>> பிரமாண்டம் = மிகுதியான அளவுடையது, உலகம் |
பிரமாணம் |
பெரியது |
விறமாணம் |
விற (=மிகு) + மாண் (=அளவு) + அம் = விறமாணம் >>> பிரமாணம் = அளவு மிக்கது = பெரியது |
பிரமாணம் |
பொருந்தும் அளவு |
விறமாணம் |
விற (=செறி, பொருந்து) + மாண் (=அளவு) + அம் = பிறமாணம் >>> பிரமாணம் = பொருந்தும் அளவு. |
பிரமாணம், பிரமாணிக்கம் |
ஆதாரம், உறுதி, மேற்கோள் |
விறவாணம் |
விற (=செறி, பொருந்து) + ஆணம் (=பற்றுக்கோடு) = விறவாணம் >>> பிரமாணம் = பொருத்தமான பற்றுக்கோடு |
பிரமாணம், பிரமாணிக்கம் |
சத்தியம், உண்மை |
விறவாணம் |
விற (=வெல்) + ஆணம் (=பற்றுக்கோடு) >>> விறவாணம் >>> பிரமாணம் = வெல்கின்ற பற்றுக்கோடு. |
பிரமாணம் |
விதிமுறை |
விறவண்ணம் |
விற (=செறி, பொருந்து) + வண்ணம் (=வகை) = விறவண்ணம் >>> பிரமாணம் = பொருந்தும் வகை. |
பிரமாணம், பிரமாணிக்கம் |
ஆணை, கட்டளை |
பிறபணம் |
பிற + பணி + அம் = பிறபணம் >>> பிரமாணம் = பிறரைப் பணியச் செய்வது. |
பிரமாணம் |
சபதம், உறுதிமொழி |
விறபன்னம் |
விற (=பொருந்து, நிலைபெறு) + பன்னு (=சொல்) + அம் = விறபன்னம் >>> பிரமாணம் = நிலைபேறாக / உறுதியாகச் சொல்லப்படுவது = சபதம், உறுதிமொழி |
பிரமாணன் |
உண்மையானவன் |
பிரமாணன் |
பிரமாணம் (=உண்மை) >>> பிரமாணன் |
பிரமாணி |
அளவிடு |
பிரமாணி |
பிரமாணம் (=அளவு) >>> பிரமாணி = அளவிடு |
பிரமாணி |
நம்பு, உறுதிகொள் |
பிரமாணி |
பிரமாணம் (=உறுதி) >>> பிரமாணி = உறுதிகொள் |
பிரமாணி |
அடிபணி, இணங்கு |
பிரமாணி |
பிரமாணம் (=கட்டளை) >>> பிரமாணி = ஒப்புக்கொள் |
பிரமாணி |
விதி, நியமி |
பிரமாணி |
பிரமாணம் (=விதிமுறை) >>> பிரமாணி = விதி, நியமி |
பிரமாணி |
பெரியோன் |
பிரமாணி |
பிரமாணம் (=பெரியது) >>> பிரமாணி = பெரியோன் |
பிரமாணி |
பெரும்புலவன், பேரறிஞன் |
பிரமாணி |
பிரமாணம் (=மேற்கோள்) >>> பிரமாணி = பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டும் அறிவுடையவன். |
பிரமாதம் |
பெரியது |
விறபதம் |
விற (=மிகு) + பதம் (=அளவு) = விறபதம் >>> பிரமாதம் = அளவு மிகுந்தது = பெரியது. |
பிரமாதா |
அளப்பவன் |
விலபதன் |
வில (=பிரி) + பதம் (=அளவு) + அன் = விலபதன் >>> பிரமாதன் >>> பிரமாதா = பிரித்து அளப்பவன். |
பிரமாதா |
தாய்வழிப் பாட்டன் |
விறமாதா |
விற (=மேம்படு) + மாதா (=தாய்) = விறமாதா >>> பிரமாதா = தாய்க்கு மேம்பட்டவர் = தாய்வழிப் பாட்டன் |
பிரமாதாமகன் |
தாய்வழித் தாத்தாவின் தந்தை |
பிரமாதாமகன் |
பிரமாதா (=தாய்வழிப் பாட்டன்) + மகன் = பிரமாதாமகன் = தாய்வழிப் பாட்டனை மகனாகக் கொண்டவன். |
பிரமாதாமகி |
தாய்வழிப் பாட்டனின் தாய் |
பிரமாதாமகி |
பிரமாதாமகன் >>> பிரமாதாமகி |
பிரமாதிகை |
கற்பிழந்தவள் |
விறமாதிகை |
விற (=மேம்படு, சிற) + மாது (=பெண்) + இக (=நீங்கு) + ஐ = விறமாதிகை >>> பிரமாதிகை = மேம்பாடு / சிறப்பு நீங்கிய பெண் = கற்பிழந்தவள். |
பிரமாபணம் |
கொலை |
விறவம்பணம் |
விற (=வெல்) + வம்பு (=பகை) + அணம் = விறவம்பணம் >>> பிரமப்பணம் >>> பிரமாபணம் = பகையை வெல்லுதல் |
பிரமாம்பசு |
பசுமூத்திரம் |
விறமாப்பயம் |
விற (=மேம்படு) + மா (=விலங்கு) + பயம் (=ஒழுகுவது, நீர்) = விறமாப்பயம் >>> பிரமாம்பசம் >>> பிரமாம்பசு = மேம்பட்ட விலங்கின் ஒழுகும் நீர். |
பிரமானந்தம் |
பேரின்பம் |
பிரமானந்தம் |
பிரமம் (=முழுமுதல், இறை) + ஆனந்தம் (=இன்பம்) = பிரமானந்தம் = இறைவனால் அடையும் இன்பம். |
பிரமி |
மயங்கு, திகை |
பிரமி |
பிரமம் (=மயக்கம், கலக்கம்) >>> பிரமி = மயங்கு, திகை |
பிரமிப்பு |
திகைப்பு |
பிரமிப்பு |
பிரமி (=திகை) >>> பிரமிப்பு = திகைப்பு, மயக்கம் |
பிரமிசம் |
நழுவுகை |
விலவியம் |
வில (=விலகு, நழுவு) + இயம் = விலவியம் >>> பிரமிசம் = நழுவுகை. |
பிரமிசம் |
கேடு |
விறவீயம் |
விற (=மேம்படு) + வீ (=அழி) + அம் = விறவீயம் >>> பிரமிசம் = மேம்பாட்டை அழிப்பது. |
பிரமிதி |
நல்லறிவு |
பிரமிதி |
பிரமம் (=அறிவு) + இதம் (=நன்மை) + இ = பிரமிதி. |
பிரமிருதம் |
உழவுத் தொழில் |
விறமிர்தம் |
விற (=மிகு, பெருக்கு) + அமிர்தம் (=உணவு) = விறமிர்தம் >>> பிரமிருதம் = உணவைப் பெருக்கும் தொழில். |
பிரமிருதம் |
விளைச்சல் |
பிறமிர்தம் |
பிற (=தோன்று, விளை) + அமிர்தம் (=உணவு) = பிறமிர்தம் >>> பிரமிருதம் = விளைந்த உணவு. |
பிரமு |
பொருமு, மிகு |
விறவு |
விற (=மிகு) >>> விறவு >>> பிரமு = பெருகு, மிகு |
பிரமு |
அடி, தாக்கு |
விறவு |
விற (=பொரு, தாக்கு) >>> விறவு >>> பிரமு = அடி |
பிரமுகம் |
உயர்வானது, சிறந்தது |
பிறவுகம் |
பிற (=தோன்று) + உக (உயர்) + அம் = பிறவுகம் >>> பிரமுகம் = உயர்வு தோன்றுவது, சிறந்தது. |
பிரமுகம் |
நிகழ்காலம் |
பிறமுகம் |
பிற (=தோன்று) + முகம் (=கண்) = பிறமுகம் >>> பிரமுகம் = கண் எதிரே தோன்றுதல் = நிகழ்காலம். |
பிரமுகன் |
உயர்வானவன் |
பிறவுகன் |
பிற (=தோன்று) + உக (உயர்) + அன் = பிறவுகன் >>> பிரமுகன் = உயர்வு தோன்றுபவன், சிறந்தவன் |
பிரமூடன் |
பெரும் முட்டாள் |
விறமூடன் |
விற (=மிகு) + மூடன் (=முட்டாள்) = விறமூடன் >>> பிரமூடன் = மிகவும் முட்டாள். |
பிரமேயம் |
சந்தேகம் |
பிரமேயம் |
பிரமம் (=மயக்கம்) + ஏய் (=பொருந்து) + அம் = பிரமேயம் = மயக்கம் பொருந்தியது = சந்தேகம் |
பிரமேயம் |
நூல் பொருள் |
பிரமேயம் |
பிரமம் (=அறிவு) + ஏய் (=பொருந்து) + அம் = பிரமேயம் = நூலில் பொருந்திய அறிவு. |
பிரமேயம் |
சந்தர்ப்பம் |
பிறவேயம் |
பிற (=தோன்று) + ஏய் (=பொருந்து) + அம் = பிறவேயம் >>> பிரமேயம் = பொருத்தமாகத் தோன்றுவது. |
பிரமை |
பெருமோகம், பைத்தியம் |
விறமை |
விற (=மிகு) + மை (=மயங்கு) = விறமை >>> பிரமை = மிக்க மயக்கம் = பெருமோகம், பைத்தியம் |
பிரமை |
அறியாமை |
பிறமை |
பிற (=தோன்று) + மை (=இருள்) = பிறமை >>> பிரமை = இருள் தோற்றம் = அறியாமை. |
பிரமோதம் |
பெருமகிழ்ச்சி |
விறபோதம் |
விற (=மிகு) + போதை (=களிப்பு) + அம் = விறபோதம் >>> பிரமோதம் = பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி |
பிரமோதனி |
மல்லிகை |
விரைபோதணி |
விரை (=நறுமணம்) + போதை (=மயக்கம்) + அணி (=பொருந்து) = விரைபோதணி >>> பிரமோதனி = மயக்கம் தரும் நறுமணம் பொருந்தியது. |
பிரயத்தனம் |
பெருமுயற்சி |
விறயெத்தனம் |
விறை (=மிகு) + எத்தனம் (=முயற்சி) = விறயெத்தனம் >>> பிரயத்தனம் = மிகுதியான முயற்சி. |
எத்தனம் |
முயற்சி |
எற்றணம் |
எற்று (=முட்டு, மோது, அசை) + அணம் = எற்றணம் >>> எத்தனம் = முட்டி மோதி அசைத்துப் பார்த்தல். |
எத்தனி |
முயல் |
எற்றணி |
எற்றணம் (=முயற்சி) >>> எற்றணி >>> எத்தனி = முயல். |
பிரயதன் |
பரிசுத்தன் |
மிறயற்றன் |
மிறை (=குற்றம்) + அறு + அன் = மிறயற்றன் >>> பிரயத்தன் >>> பிரயதன் = குற்றமற்றவன். |
பிரயாசம், பிரயாசை |
பெருமுயற்சி |
விறயசம் |
விறை (=மிகு) + அசை (=முயல்) + அம் = விறயசம் >>> பிரயாசம் = மிகுதியான முயற்சி. |
பிரயாசி |
முயல்பவர் |
விறயசி |
விறயசம் (=முயற்சி) >>>விறயசி >>>பிரயாசி = முயல்பவர் |
பிரயாணம் |
பயணம் |
விரயணம் |
(2). விரை (=செல், பயணி) + அணம் = விரயணம் >>> பிரயாணம் = செல்லுதல், பயணித்தல். |
பிரயுக்தம் |
மிகுதியாகப் பெற்றது, அளுவம் |
விறயுற்றம் |
விறை (=மிகு) + உறு (=பெறு) + அம் = விறயுற்றம் >>> பிரயுத்தம் >>> பிரயுக்தம் = மிகுதியாகப் பெற்றது. |
ஞாயிறு, 10 மே, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம் - பகுதி 27
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.