வெள்ளி, 29 மே, 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 31


சொல்

பொருள்

தமிழ்ச்சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

கோகிலம்

குயில்

கொக்கில்லம்

கொக்கு (=மாமரம்) + இல்லம் (=வீடு) = கொக்கில்லம் >>> கோகிலம் = மாமரத்தையே தனது வீடாகப் பாவிப்பது.

குயில்

குயில்

கூயில்

கூ + இல் = கூயில் >>> குயில் = கூ கூ என்று கூவுவது.

அன்னிய புட்டம்

குயில்

அன்னிய பிற்றம்

அன்னியம் (=பிறர்) + பிற (=தோன்று) + அம் = அன்னியபிற்றம் >>> அன்னியபிட்டம் >>> அன்னியபுட்டம் = பிறரிடத்தில் பிறந்து வளர்வது.

அன்னிய பிருதம்

குயில்

அன்னிய பிறுந்தம்

அன்னியம் (=பிறர்) + பிற (=தோன்று) + உந்து (=பெருகு, வளர்) + அம் = அன்னியபிறுந்தம் >>> அன்னியபிருதம் = பிறரிடத்தில் பிறந்து வளர்வது.

பரபிருதம்

குயில்

பரபிறுந்தம்

பரம் (=பிறர்) + பிற (=தோன்று) + உந்து (=பெருகு, வளர்) + அம் = பரபிறுந்தம் >>> பரபிருதம் = பிறர் வீட்டில் / கூட்டில் பிறந்து வளர்வது.

களகண்டம், காளகண்டம்

குயில்

களகண்டம்

களம் (=இனிய ஒலி) + கண்டம் (=தொண்டை) = களகண்டம் = இனிய ஒலி எழுப்பும் தொண்டையைக் கொண்டது.

கோரகை

குயில்

கோலக்கை

கோலம் (=இலந்தை, செந்நிறம்) + அக்கு (=கண்) + ஐ = கோலக்கை >>> கோரகை = இலந்தைப் பழம் போலச் சிவந்த கண்களைக் கொண்டது

தாம்பிராட்சன்

குயில்

தாம்பிராக்கன்

தாம்பிரம் (=சிவப்பு) + அக்கு (=கண்) + அன் = தாம்பிராக்கன் >>> தாம்பிராக்ச~ன் >>> தாம்பிராட்சன் = சிவப்புக் கண் உடையது.

ஆம்

மாமரம்

ஆம்

அம் (=அழகு, பொன்னிறம், உண்) >>> ஆம் = பொன்னிறம் மிக்க அழகான பூக்களைக் கொண்டதும் பொன்னிற உணவுப் பொருளைத் தருவதுமான மரம்.

பிகம்

குயில்

வைகாம்

வைகு (=தங்கு) + ஆம் (=மாமரம்) = வைகாம் >>> பிகம் = மாமரத்தில் தங்கியிருப்பது.

பூவை

குயில்

பூமை

பூ (=பூந்தேன்) + மை (=கருப்பு) = பூமை >>> பூவை = பூந்தேன் உண்ணும் கருநிறப் பறவை.

மகரந்தம்

குயில்

மாகரந்தம்

மா (=மாமரம்) + கரை (=ஒலி) + அந்தம் (=கருமை) = மாகரந்தம் >>> மகரந்தம் = மாமரத்தில் இருந்துகொண்டு பாடுகின்ற கருமைநிறப் பறவை.

மகாவீரம்

குயில்

மாகவீரம்

மா (=மாமரம், கருமை) + கவி (=பாடகன்) + ஈர் (=இனிமை, நீட்டி ஒலி) + அம் = மாகவீரம் >>> மகாவீரம் = மாமரத்தில் இருந்தவாறு இனிமையாக நீட்டி ஒலிக்கும் கருநிறப் பாடகன்.

மத்தம்

குயில்

பத்தம்

பதம் (=இனிமை, பாட்டு) >>> பத்தம் >>> மத்தம் = இனிமையாகப் பாடுவது.

மதனபாடகம்

குயில்

மதனபாடகம்

மதனம் (=மயக்கம்) + பாடு + அகம் (=மனம்) = மதனபாடகம் = மனதை மயக்கும் விதமாகப் பாடுவது.

மாரகாகளம்

குயில்

மாறககளம்

மாறு (=மயக்கம்) + அகம் (=மனம்) + களம் (=இனிய ஓசை) = மாறககளம் >>> மாரகாகளம் = மனதை மயக்கும் விதமாக இனிய ஓசையினை எழுப்புவது.

வலாசகம்

குயில்

மாலசகம்

மால் (=மயக்கம்) + அசை (=பாடு) + அகம் (=மனம்) = மாலசகம் >>> வலாசகம் = மனம் மயங்குமாறு பாடுவது.

மதுகண்டம்

குயில்

மதுகண்டம்

மது (=இனிமை) + கண்டம் (=குரல்) = மதுகண்டம் = இனிய குரலைக் கொண்டது.

மேகம்

குயில்

மேகம்

மேகம் >>> மேகம் = (1) மேகம் போல வானில் திரிவது. (2) மேகம் போல கருநிறம் கொண்டது. (3) மேகம் வானத்தில் பிறக்காமல் கடலில் பிறப்பதைப் போலப் பிற பறவைகளின் கூட்டில் பிறப்பது = குயில்.

பகம்

குயில்

பாகம்

மாகம் (=மேகம்) >>> பாகம் >> பகம் = மேகத்தின் மூன்று தன்மைகளைக் கொண்டது.

பஞ்சது

குயில்

பாசறு

பசுமை (=வசந்தம்) + அறை (ஒலி, பாடு) + உ = பாசறு >>> பச்சது >>> பஞ்சது = வசந்தத்தின் வரவைப் பாடுவது.

வசந்ததூதம்

குயில்

வசந்ததூதம்

வசந்தம் + தூது + அம் = வசந்ததூதம் = வசந்தகாலத்தின் வரவினைத் தூதனைப் போல அறிவிப்பது.

வனப்பிரியம்

குயில்

பணவிரியம்

பண் (=இசை) + அவிர் (=விளங்கு) + இய (=பாடு) + அம் = பணவிரியம் >>> வனப்பிரியம் = இசை விளங்கப் பாடுவது

வாசந்தம்

குயில்

மாசந்தம்

மா (=மாமரம்) + சந்தம் (=இசைப்பாட்டு) = மாசந்தம் >>> வாசந்தம் = மாமரத்தில் இருந்தவாறு இசைப்பாட்டு பாடுவது.

அளிம்பகம்

குயில்

அளிவாக்கம்

அளி (=அன்பு, இனிமை) + வாக்கு (=சொல், ஒலி) + அம் = அளிவாக்கம் >>> அளிபாகம் >>> அளிம்பகம் = அன்பு நிறைந்த சொல்லைப் போல இன்னொலி செய்வது.

களத்தொனி

குயில்

களத்தொனி

களம் (=இனிய ஓசை, கருமை) + தொனி (=ஒலி) = களத்தொனி = இனிய ஓசையை ஒலிக்கும் கருநிறப் பறவை.

கிருட்டிணம்

கருங்குயில்

குருட்டினம்

குருடு (=இருள்) + இன் (=இனிமை) + அம் = குருட்டினம் >>> கிருட்டிணம் = இனிமையாகப் பாடும் இருள்நிறப் பறவை.

குகூகண்டம்

குயில்

கூகூகண்டம்

கூ + கூ + கண்டம் (=குரல்) = கூகூகண்டம் >>> குகூகண்டம் = கூ கூ என்று ஒலி எழுப்புவது.

பீருகம்

கரடி

விருகம்

விரை (=தேன்) + உக (=விரும்பு) + அம் = விருகம் >>> பீருகம் = தேனை விரும்பி உண்பது.

பீருகம்

காடு

விருக்கம்

விருக்கம் (=மரம், பெருக்கம்) >>> பீருகம் = மரங்கள் பெருகி இருக்கும் இடம்.

சவம்

பிணம்

சாவம்

சாவு (=இறப்பு) + அம் = சாவம் >>> சவம் = இறந்து பட்டது.

சாவடி

ஓய்விடம்

சாவடி

சா (=சோர், ஓய்) + அடி (=இடம்) = சாவடி = ஓய்வெடுக்குமிடம்

பீருகன்

அச்சம் மிகுந்தவன்

விறூங்கன்

விற (=அஞ்சு) + ஊங்கு (=மிகு) + அன் = விறூங்கன் >>> பீருகன் = அச்சம் மிக்கவன்.

பீருரந்திரம்

அடுப்பு, சூளை

வீறுராத்திரம்

வீறு (=மிகுதி) + உரு (=தோன்று) + ஆத்திரம் (=சினம், வெப்பம்) = வீறுராத்திரம் >>> பீருரந்திரம் = மிகு வெப்பம் தோன்றுமிடம்.

பீலி

குருத்து

முளை, பீளி

(1). முளை (=குருத்து) >>> புலை >>> பிலி >>> பீலி. (2). பீள் (=முளை, கரு) + இ = பீளி >>> பீலி = குருத்து

பீலி

நீர்த்தொட்டி

பீலி

பில் (=நீர்) + இ >>> பிலி >>> பீலி = நீரினைக் கொண்டது.

பீலி

தாயக்கட்டை

புள்ளி

புள்ளி >>> பூலி >>> பீலி = புள்ளிகளைக் கொண்டது.

பீலு

அணு

பிளு

பிள் (=பொடியாகு) + உ = பிளு >>> பீலு = பொடி, நுண்மை.

பீலு

அச்சம்

விளு

பிலு (=அதிர், நடுங்கு) >>> பீலு = அதிர / நடுங்கச் செய்வது = அச்சம்.

கிருட்டிணம்

கருப்பு, மிளகு, காகம், கருங்குயில், கருப்புமான்

குருட்டினம்

குருடு (=இருள்) + இனம் (=வகை) = குருட்டினம் >>> கிருட்டிணம் = இருள் / கருப்பு நிறம் கொண்ட வகை.

பீலுகன்

அச்சப்படுபவன்

பீலுகன்

பீலு (=அச்சம்) >>> பீலுகன் = அச்சப்படுபவன்.

பீலுகம்

கரடி

புல்லூகம்

புல் (=மயிர்) + ஊகம் (=கருமை) = புல்லூகம் >>> பிலூகம் >>> பீலுகம் = உடலெங்கும் கருநிற மயிரைக் கொண்டது.

பீவரம்

கொழுப்பு

பைவாரம்

பை (=பசுமை, வெண்மை) + வார் (=ஒழுகு) + அம் = பைவாரம் >>> பிவாரம் >>> பீவரம் = புண் / இறைச்சியில் இருந்து ஒழுகும் வெண்மையான பசும்பொருள்..

பீவரம்

ஆமை

பைவாரம்

பை (=வலிமை) + வார் (=தோல், ஓடு) + அம் = பைவாரம் >>> பிவாரம் >>> பீவரம் = வலிமையான ஓட்டினைக் கொண்டது

பீவரி

பசு

பயவாரி

பயம் (=பால்) + வார் (=சொரி) + இ = பயவாரி >>> பைவாரி >>> பிவாரி >>> பீவரி = பாலைச் சொரிவது.

பீவரி

பருவப்பெண்

பைவாலி

பை (=அழகு) + வால் (=இளமை) + இ = பைவாலி >>> பிவாரி >>> பீவரி = அழகும் இளமையும் உடையவள்.

பீவரி

பெண் கிளி

பைவரி

பை (=பச்சை, அழகு) + வரி = பைவரி >>> பிவரி >>> பீவரி = பச்சை வண்ண உடலும் அதே வண்ணத்தில் கழுத்து வரியும் கொண்ட அழகான பறவை.

பீனசம், பீனிசம்

மூக்குச் சளி, சளிநோய்

பீநாசம்

பீ (=மலம், கழிவு) + நாசி (=மூக்கு) + அம் = பீநாசம் >>> பீனசம் = மூக்கில் உண்டாகும் கழிவு. 

பீனம்

பருமை, பெருமை

பயினம், பைனம்

பை (=பெரு, பெருகு) + இனம் = பயினம் >>> பைனம் >>> பினம் >>> பீனம் = பெருமை, பருமை

பீனம்

பாசி

பயினம், பைனம்

பை (=பசுமை, ஈரம்) + இனம் (=வகை) = பயினம் >>> பைனம் >>> பினம் >>> பீனம் = பசுமையும் ஈரமும் கொண்டது.

பீனம்

ஊர்

பீணம்

பிணை (=சேர், செறி) + அம் = பீணம் >>> பீனம் = மக்கள் சேர்ந்து செறிந்து வாழுமிடம்.

புக்கசன்

சண்டாளன்

பொங்காயன்

பொங்கு (=சின, செருக்குறு) + ஆய் (=குத்து, தாக்கு) + அன் = பொங்காயன் >>> பொக்காசன் >>> புக்கசன் = சினந்து / செருக்குற்றுத் தாக்குபவன்.

புக்கனம்

குரைத்தல்

பொங்கணம்

பொங்கு (=சின, ஒலி) + அணம் = பொங்கணம் >>> பொக்கணம் >>> புக்கனம் = சினந்து ஒலித்தல்.

புக்காரம், புகார்

எக்காளம், மிகுந்த கூச்சல்

பொங்காரம்

பொங்கு (=சின, மிகு) + ஆர் (=ஒலி) + அம் = பொங்காரம் >>> பொக்காரம் >>> புக்காரம் = சினங்கொண்டு மிகுதியாக ஒலித்தல்.

புக்கை

நீர்க்கேணி

முங்கை

முங்கு (=நிறை, மூழ்கு, குளி) + ஐ = முங்கை >>> புக்கை = மூழ்கிக் குளிக்கும் அளவில் நீர் நிறைந்தது.

புக்தம், புக்தி

உணவு, அனுபவிக்கப் பட்டது

முக்கம்

முக்கு (=உண்ணு, அனுபவி) + அம் = முக்கம் >>> புக்கம் >>> புக்தம் = உணவு, அனுபவிக்கப்பட்டது.

புகர்

கொக்கு

புகர்

புகர் (=ஒளி, வெண்மை, அழகு, உயிர்) >>> புகர் = வெண்ணிறம் கொண்ட அழகான உயிரி.

புகார்

குற்றச்சாட்டு

புகார்

புகை (=குற்றம்) + ஆர் (=பொருத்து, சுமத்து) = புகார் = குற்றம் சுமத்துதல்.

புங்கம்

அம்பு

புகம்

புகு (=நுழை, உட்செல்) + அம் = புகம் >>> புங்கம் = உட்செல்லக் கூடியது.

புங்கம்

குவியல்

பொங்கம்

பொங்கு (=பெருகு, குவி) + அம் = பொங்கம் >>> புங்கம் = குவியல், பெருக்கம்.

புங்கம், புங்கவம்

உயர்ந்தது, சிறந்தது

பொங்கம்

பொங்கு (=உயர்) + அம் = பொங்கம் >>> புங்கம் >>> புங்கவம் = உயர்ந்தது, சிறந்தது.

புங்கவன்

உயர்ந்தவன், கடவுள், குரு

புங்கவன்

புங்கவம் (=உயர்ந்தது) >>> புங்கவன் = உயர்ந்தவன், சிறந்தவன், கடவுள், குரு

புங்கம்

மெல்லிய ஆடை

புக்கம்

புகை (=ஆவி) + அம் = புக்கம் >>> புங்கம் = ஆவி போல மெல்லிய ஆடை.

புங்கர்

மெல்லிய ஆடை

புங்கர்

புகர் (=உயிர், ஆவி) >>> புங்கர் = ஆவி போல மெல்லிய ஆடை.

புங்கவம்

காளை மாடு

பொங்காவம்

பொங்கு (=சின, செருக்கு) + ஆ (=மாடு) + அம் = பொங்காவம் >>> புங்கவம் = சினமும் செருக்கும் மிக்க மாடு.

புங்கவம்

அம்பு

பொங்காவம்

பொங்கு (=கிளர், விரை) + ஆவம் (=வில் நாண்) = பொங்காவம் >>> புங்கவம் = வில்லின் நாணில் இருந்து கிளர்ந்து விரைவது.

புங்கன்

முட்டாள்

புக்கன்

புகை (=கருமை, குற்றம்) + அன் = புக்கன் >>> புங்கன் = அறிவில் கருமை / குற்றம் உடையவன்.

புச்சம்

வால், தோகை, தொங்குவது, கொடுக்கு

வீழம்

விழு (=தொங்கு) + அம் = விழம் >>> பிசம் >>> பிச்சம் >>> புச்சம் = தொங்கக் கூடியது = வால், தோகை, கொடுக்கு.

புச்சம்

தேள்

புச்சம்

புச்சம் (=கொடுக்கு) >>> புச்சம் = கொடுக்கினை உடையது.

புச்சம்

பிருட்டம்

விழம்

விழு (=பிற்படு, திரண்டு கூடு) + அம் = விழம் >>> பிசம் >>> பிச்சம் >>> புச்சம் = பிற்பட்டுத் திரண்டு கூடியது.

புசகம், புசங்கம்

நல்ல பாம்பு, பாம்பு

விசகம்

(1). விசம் (=நஞ்சு) + அகம் = விசகம் >>> பிசகம் >>> புசகம், புசங்கம் = நஞ்சினை உடையது. (2). பை (=படப்பொறி, சீறு) + அகம் = பையகம் >>> பிசகம் >>> புசகம், புசங்கம் = படப்பொறியைக் கொண்டதும் சீறும் இயல்பினதுமான பாம்பு.

புயம், புசம்

தோள்

மொயம்

மொய் (=வலிமை, திரள்) + அம் = மொயம் >>> பொயம் >>> புயம் >>> புசம் = வலிமை மிக்க திரண்ட உறுப்பு.

புசம்

பதர், போலி

பொயம்

பொய் (=போலி, உள் துளை) + அம் = பொயம் >>> பொசம் >>> புசம் = போலியானது, உள்துளை உடையது.

புசம்

எரு வறட்டி

பீயம்

பீ (=மலம், எரு) + அம் = பீயம் >>> பிசம் >>> புசம் = மாட்டின் எருவைக் கொண்டு செய்யப்பட்டது.

புசம்

தயிர்

பையம்

பை (=வெண்மை, திரள்) + அம் (=உண்) = பையம் >>> பிசம் >>> புசம் = வெண்மையாகத் திரளும் உணவு.

புசம்

பாக்கியம், நற்பேறு

விழம்

விழு (=சிறந்த, பெறு) + அம் = விழம் >>> பிசம் >>> புசம் = சிறப்புடைய பேறு.

அதிர்ச்~டம்

நற்பேறு, பாக்கியம்

அறிலீட்டம்

அறி (=கணி, எதிர்பார்) + இல் + ஈட்டம் (=பேறு) = அறிலீட்டம் >>> அதிரீட்டம் >>> அதிர்ச்~டம் = எதிர்பாராது கிடைத்த பேறு

புஞ்சம்

திரட்சி, கூட்டம்

மொயம்

மொய் (=திரள், கூடு) + அம் = மொயம் >>> பொயம் >>> புயம் >>> புசம் >>> புஞ்சம் = திரட்சி, கூட்டம்

புஞ்சலி

வேசி, விலைமாது

பொய்யளி, மொய்யளி

(1). பொய் + அளி (=அன்பு) = பொய்யளி >>> பொஞ்சளி >>> புஞ்சலி = பொய்யான அன்பு உடையவள். (2). மொய் (=பணம்) + அளி (=அன்பு) = மொய்யளி >>> பொஞ்சளி >>> புஞ்சலி = பணத்திற்காக அன்பு காட்டுபவள்.

புஞ்சிகை

ஆலங்கட்டி

பையிகை

பை (=ஒளி, வெண்மை) + இகு (=விழு, கரை) + ஐ = பையிகை >>> பிசிகை >>> பிஞ்சிகை >>> புஞ்சிகை = வெண்ணிறத்தில் விழுந்து கரையக் கூடியது.

புஞ்சித்துவம்

விந்து, சுக்கிலம்

பையிறுவம்

பை (=ஒளி, வெண்மை) + இறு (=வடி) + அம் = பையிறுவம் >>> பிசிதுவம் >>> பிஞ்சித்துவம் >>> புஞ்சித்துவம் = விதைப்பையில் இருந்து வெண்ணிறத்தில் வடியக் கூடியது.

புஞ்சு

சேர், கூடு

மொசு

மொய் (=சேர், கூடு) >>> மொசு >>> பொஞ்சு >>> புஞ்சு

புட்கரம்

பருந்து

புட்கரம்

புள் (=பறவை, வட்டம்) + கருமை (=வலிமை) + அம் = புட்கரம் = வட்டமிடுகின்ற வலிமை மிக்க பறவை.

புட்கரம்

பாம்பு

முட்கரம்

முள் (=கூரியது) + கரம் (=நஞ்சு) = முட்கரம் >>> புட்கரம் =  நஞ்சுடைய கூரிய பல்லைக் கொண்டது.

புட்கரம்

குகை

பொட்கரம்

பொள் (=துளை) + கர (=மறை) + அம் = பொட்கரம் >>> புட்கரம் = மறையக்கூடிய துளை போன்ற அமைப்பு.

புட்கரம்

செந்தாமரை

பொய்காரம்

பொய்கை (=குளம்) + ஆர் (=தீ) + அம் = பொய்காரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = குளத்தில் எரியும் தீ போன்ற மலர்.

புட்கரம்

வாள்

போழ்கரம்

போழ் (=பிள, அறு) + கரம் (=கை) = போழ்கரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = அறுக்கும் கை போன்றது.

புட்கரம்

அம்பு

முள்காரம்

முள்கு (=துளை, உட்செல்) + ஆரம் (=தண்டு) = முள்காரம் >>> புட்கரம் = துளைத்து உட்செல்லும் தண்டு.

புட்கரம்

ஆகாயம்

மொய்கரம்

மொய் (=செறி) + கருமை (=இருள்) + அம் = மொய்கரம் >>> பொச்~கரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = இருள் செறிந்தது.

புட்கரம்

விண்மீன்

பைக்கரம்

பை (=எரி, ஒளிர்) + கருமை (=இருள்) + அம் = பைக்கரம் >>> பிக்கரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = இருளில் ஒளிர்வன.

புட்கரம்

துதிக்கை

பொய்கரம்

பொய் (=துளை) + கரம் (=கை) = பொய்கரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = துளையுடைய கை.

புட்கரன்

ஆண் யானை

புட்கரன்

புட்கரம் (=துதிக்கை) >>> புட்கரன் = துதிக்கை உடைய ஆண்

புட்கரினி

பெண் யானை

புட்கரினி

புட்கரம் (=துதிக்கை) >>> புட்கரினி = துதிக்கை உடைய பெண்

புட்கரம்

மூழ்கும் நீர்

மூழ்காரம்

மூழ்கு (=குளி) + ஆர் (=நிறை) + அம் = மூழ்காரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = குளிக்க ஏதுவாக நிறைந்திருப்பது.

புட்கரினி

குளம்

புட்கரினி

புட்கரம் (=மூழ்கும் நீர்) >>> புட்கரினி = மூழ்கும் நீருடையது

புட்கரம்

நாரை, கொக்கு

புட்கலம்

புள் (=பறவை) + கலம் (=ஏர்நுகம்) = புட்கலம் >>> புட்கரம் = ஏர்நுகம் போல கூரிய நீண்ட அலகுடைய பறவை.

புட்கரம்

போர்

மொய்காரம்

மொய் (=பகை) + காரம் (=அழிவு) = மொய்காரம் >>> பொச்~காரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = பகையை அழித்தல்

புட்கரம்

பறை

புட்கலம்

புள் (=ஒலி, வட்டம்) + கலம் (=கருவி) = புட்கலம் >>> புட்கரம் = ஒலி எழுப்புகின்ற வட்டமான கருவி.

புட்கரம்

பாத்திரத்தின் வாய்

மூழ்கலம்

மூழ் (=வளை) + கலம் (=பாத்திரம்) = மூழ்கலம் >>> புச்~கரம் >>> புட்கரம் = பாத்திரத்தின் வளைவான விளிம்பு.

புட்கரம்

நோய்

மூழ்கலம்

மூழ்கு (=அழுந்து, ஆழ்) + அலம் (=துன்பம்) = மூழ்கலம் >>> புச்~கரம் >>> புட்கரம் = துன்பத்தில் ஆழ்த்துவது.

புட்கரம்

மாத்திரை

போழ்காரம்

போழ் (=துண்டு) + காரம் (=மருந்து) = போழ்காரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = மருந்தின் துண்டு.

புட்கரம்

போதை

புட்காரம்

புள் (=மதுபானம்) + காரம் (=மயக்கம்) = புட்காரம் >>>  புட்கரம் = மதுபானத்தால் உண்டாகும் மயக்கம்.

புட்கலம், புட்கரம்

நிறைவு, பரிபூரணம்

மூய்கலம்

மூய் (=நிறை) + கலம் (=பாத்திரம்) = மூய்கலம் >>> புச்~கலம் >>> புட்கலம் >>> புட்கரம் = பாத்திர நிறைவு = பூரணம்.

புட்கரம்

பங்குப் பொருள்

போழ்காரம்

போழ் (=துண்டு, கூறு) + காரம் (=பொன், பொருள்) = போழ்காரம் >>> புச்~கரம் >>> புட்கரம் = பொருளின் கூறு.

புட்கலம்

உடல்

புட்களம்

புள் (=பறவை, உயிர்) + களம் (=கொட்டகை, வீடு) = புட்களம் >>> புட்கலம் = உயிர்ப் பறவை தங்கும் வீடு.

புட்டகம், புட்டம்

புடவை

புட்டாக்கம்

புடை (=இடுப்பு) + ஆக்கம் (=துணி) = புட்டாக்கம் >>> புட்டகம் = இடுப்பில் கட்டும் துணி.

புட்டம்

நிறைவு

முற்றம்

முற்று (=நிறை) + அம் = முற்றம் >>> புட்டம் = நிறைவு

புட்டம், புட்டை

உடலின் பின்பக்கம்

புட்டம்

புடை (=பெரு, திரள், பக்கம்) + அம் = புட்டம் = பெருத்துத் திரண்ட பக்கம்.

புட்டா

ஆடையின் பூத்தொழில்

புட்டம்

பூ + உடை + அம் = புட்டம் >>> புட்டா = உடையில் செய்யப்படும் பூ வேலைப்பாடு.

புட்டி

இடுப்பு

புடை

புடை (=இடுப்பு) >>> புடி >>> புட்டி = இடுப்பு

புட்டி, புச்~டி

பருமை

புட்டி

புடை (=பெரு, பரு) >>> புடி >>> புட்டி >>> புச்~டி = பருமை

புச்~பகம், புட்பகம்

பொய்ச்சிறகு உடையது

பொய்பக்கம்

பொய் + பக்கம் (=சிறகு) = பொய்பக்கம் >>> புச்~பகம் >>> புட்பகம் = பொய்யான சிறகுகளைக் கொண்டது.

புட்பகம்

கல் வளையல்

புட்பகம்

புள் (=வளையல்) + பகம் (=துண்டு, கல்) = புட்பகம்

புச்~பம், புட்பம்

மலர், வாழை இலை

புய்மம்

புய் (=பறி) + மம் = புய்மம் >>> புச்~பம் >>> புட்பம் = நாள்தோறும் பறிக்கப்படுவது.

புட்பி

மலர்

புட்பி

புட்பம் (=மலர்) >>> புட்பி = மலர்

புச்~பம், புட்பம்

மாதவிலக்கு

மூசுமம்

மூசு (=திரள், கெடு) + மம் = மூசுமம் >>> புச்~பம் >>> புட்பம் = திரண்டு வெளிவரும் கெட்ட பொருள்.

புச்~பவதி, புட்பவதி

இருதுவான பெண்

புச்~பவதி, புட்பவதி

புச்~பம் / புட்பம் (=மாதவிலக்கு) + வதி (=பெண்) = புச்~பவதி / புட்பவதி = மாதவிலக்கு அடைந்த பெண்.

புடகம்

இலைத் தொன்னை

முறகம்

முறி (=இலை) + அகம் (=உள்ளிடம்) = முறகம் >>> புடகம் = இலையால் செய்யப்பட்டு உள்ளிடம் கொண்டது.

புடகம்

தாமரை

விடகம்

விடம் (=நீர்) + அகை (=எரி) + அம் = விடகம் >>> பிடகம் >>> புடகம் = நீரில் எரிவதைப் போன்று தோன்றுவது.

புடகினி

தாமரைக் குளம்

புடகினி

புடகம் (=தாமரை) >>> புடகினி = தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்திருக்கும் குளம்.

புடம்

மூடுகை, மூடி, கோமணம், கண்ணிமை

மூடம்

மூடு + அம் >>> மூடம் >>> புடம் = மூடுதல் >>> மூட உதவுவன = மூடி, கண்ணிமை, கோமணம்.

புடம்

பக்கம், இடம்

புறம்

புறம் (=பக்கம், இடம்) >>> புடம்

புடம்

வளைவு

முடம்

முடம் (=வளைவு) >>> புடம்

புடம்

பாத்திரம்

பிடம்

பிடி (=கொள்) + அம் = பிடம் >>> புடம் = கொள்கலம்.

புடம்

சுத்தஞ்செயல், சுத்தம்

புடம்

புடை (=நீக்கு, சுத்தம் செய்) + அம் = புடம் = சுத்தம் செய்தல், சுத்தம்.

புடம்

சுற்றிவருகை

விறம்

விற (=சுற்று) + அம் = விறம் >>> பிடம் >>> புடம் = சுற்றுகை

புடம்

சுத்தம்

புடம்

புடை (=நீக்கு, சுத்தம் செய்) + அம் = புடம் = சுத்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.