சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
பிரயோகம் |
செலுத்துதல் |
விரயோக்கம் |
விரை + ஓக்கு (=எறி) + அம் = விரயோக்கம் >>> பிரயோகம் = விரைவாக எறிதல் = செலுத்துதல். |
பிரயோகம் |
பயன்படுத்துதல் |
பிரயோக்கம் |
பிரை (=பயன்) + ஓக்கு (=எழுப்பு, தூண்டு) + அம் = பிரயோக்கம் >>> பிரயோகம் = பயனைத் தூண்டுதல். |
பிரயோகி |
செலுத்து, பயன்படுத்து |
பிரயோகி |
பிரயோகம் (=செலுத்துகை, பயன்படுத்துகை) >>> பிரயோகி = செலுத்து, பயன்படுத்து. |
பிரயோகம் |
மருந்து |
மிறயோக்கம் |
மிறை (=நோய், வலி) + ஓக்கு (=நீக்கு) + அம் = மிறயோக்கம் >>> பிரயோகம் = நோய் / வலியை நீக்குவது |
பிரயோகம் |
மேற்கோள், உவமை |
பிறயோகம் |
பிற (=தோன்று) + யோகம் (=பொருத்தம்) = பிறயோகம் >>> பிரயோகம் = பொருத்தமாகத் தோன்றுவது. |
யோகம் |
பொருத்தம் |
ஓகம் |
ஒகு (=சேர், பொருந்து) + அம் = ஒகம் >>> ஓகம் >>> யோகம் = பொருத்தம். |
பிரயோகம் |
குதிரை |
விரயோக்கம் |
விரை (=ஓடு) + ஓக்கு (=தூண்டு) + அம் = விரயோக்கம் >>> பிரயோகம் = தூண்டினால் ஓடக்கூடியது. |
பிரயோகி |
கெட்டிக்காரன் |
பிரயோக்கி |
பிரை (=பயன்) + ஓக்கு (=உண்டாக்கு) + இ = பிரயோக்கி >>> பிரயோகி = பயனை உண்டாக்கும் ஆற்றல் கொண்டவன். |
பிரயோசனம், பிரயோசகம் |
பயன்படுத்துதல் |
பிரயோச்சணம் |
(2). பிரை (=பயன்) + ஓச்சு (=தூண்டு, எழுப்பு) + அணம் = பிரயோச்சணம் >>> பிரயோசனம் = பயனைத் தூண்டுதல். |
பிரயோசனம், பிரயோசகம் |
நற்பயன், ஆதாயம் |
பிரயோச்சணம் |
பிரை (=பயன்) + ஓச்சம் (=உயர்வு) + அணம் = பிரயோச்சணம் >>> பிரயோசனம் = உயர்வான பயன். |
பிரயோச்சியன், பிரயோசகன் |
பயன்படுத்துபவன் |
பிரயோச்சியன் |
பிரை (=பயன்) + ஓச்சு (=எழுப்பு, தூண்டு) + இயன் = பிரயோச்சியன் = பயனைத் தூண்டுபவன். |
பிரயோசனன், பிரயோசிகன் |
பயன்படுபவன் |
பிரயோச்சணன் |
பிரயோச்சணம் (=பயன்பாடு) >>> பிரயோச்சணன் >>> பிரயோசனன் = பயன்படக் கூடியவன் |
பிரரோகம் |
தளிர் |
விறலோங்கம் |
விறல் (=தோன்று, வெளிப்படு) + ஓங்கு (=வளர்) + அம் = விறலோங்கம் >>> பிரரோக்கம் >>> பிரரோகம் = தோன்றி வளரும் இயல்புடையது = தளிர். |
பிரலம்பம் |
மிகுதியாக ஆடுதல், தொங்குதல் |
விறலம்பம் |
விற (=மிகு) + அலம்பு (=ததும்பு, அசை, ஆடு) + அம் = விறலம்பம் >>> பிரலம்பம் = மிகுதியாக ஆடுதல் = தொங்குதல். |
பிரலம்பம் |
மரக்கிளை |
வீறாலம்பம் |
வீறு (=பிரி, கிளை) + ஆலம்பம் (=பற்றுக்கோடு) = வீறாலம்பம் >>> பிரலம்பம் = கிளைந்து செல்லும் பற்றுக்கோடு = மரக்கிளை |
பிரலாபம் |
பெரும் பிதற்றல் |
விறலப்பம் |
விற (=மிகு) + அலப்பு (=பிதற்று) + அம் = விறலப்பம் >>> பிரலாபம் = மிகுதியாகப் பிதற்றுதல். |
பிரலாபி |
பிதற்று, புலம்பு |
விறலபி |
விறலப்பம் (=பிதற்றல்) >>> விறலபி >>> பிரலாபி = பிதற்று |
பிரலோடனம் |
உருளுகை |
விறலோடணம் |
விறல் (=சுற்று) + ஓடு + அணம் = விறலோடணம் >>> பிரலோடனம் = சுற்றிக்கொண்டே ஓடுதல். |
பிரலோபம் |
விருப்பம் |
விறலோப்பம் |
விறல் (=தோன்று) + ஓப்பு (=செலுத்து) + அம் = விறலோப்பம் >>> பிரலோபம் = உள்ளத்தில் தோன்றிச் செலுத்துவது. |
பிரலோபனம் |
காதலால் உண்டான மனக்கலக்கம் |
விறலோம்பாணம் |
விறலி (=பெண்) + ஓம்பு (=விரும்பு) + ஆணம் (=குழப்பம், கலக்கம்) = விறலோம்பாணம் >>> பிரலோப்பாணம் = பிரலோபனம் = பெண்மீது கொண்ட விருப்பத்தால் / காதலால் உள்ளத்தில் உண்டான கலக்கம். |
பிரவகம் |
காற்று |
விரவகம் |
விரவு (=கல, பரவு) + அகம் (=ஆகாயம், வெளி) = விரவகம் >>> பிரவகம் = வெளியில் பரவியிருப்பது. |
பிரவாகம் |
நீர்ப்பெருக்கு |
விறவாக்கம் |
விற (=மிகு, பெருகு) + ஆக்கம் (=நீர்) = விறவாக்கம் >>> பிரவாகம் = நீர்ப்பெருக்கு = வெள்ளம் |
பிரவாகி, பிரவகி |
பெருகி ஓடு |
விறவாகி |
விறவாக்கம் (=நீர்ப்பெருக்கு) >>> விறவாகி >>> பிரவாகி >>> பிரவகி >>> பெருகி ஓடு. |
பிரவசனம் |
விளக்கவுரை |
விறவசனம் |
விற (=மிகு) + வசனம் (=பேச்சு) = விறவசனம் >>> பிரவசனம் = மிகுதியான பேச்சு = விளக்கவுரை. |
பிரவஞ்சன், பிரபஞ்சனன் |
காற்று |
விரவச்சன் |
விரவு (=கல, பரவு) + அசை + அன் = விரவச்சன் >>> பிரவஞ்சன் >>> பிரபஞ்சனன் = எங்கும் கலந்து பரவியிருப்பதும் அசைவதும் ஆனது. |
பிரவணம் |
சந்திப்பு, பள்ளத்தாக்கு |
விரவணம் |
விரவு (=கல, சந்தி) + அணம் = விரவணம் >>> பிரவணம் = சந்திப்பு, இருமலைகள் சந்திக்கும் இடைவெளி. |
பிரவணம் |
வளைந்த தன்மை |
விலவண்ணம் |
வில (=வளை) + வண்ணம் (=தன்மை) = விலவண்ணம் >>> பிரவணம் = வளைந்த தன்மை. |
பிரவத்தகம் |
பெருங்காரியம் |
விறவாற்றகம் |
விற (=சிற) + ஆற்று (=செய்) + அகம் = விறவாற்றகம் >>> பிரவத்தகம் = சிறப்பான செயல். |
பிரவத்தம் |
குடும்பம் |
விரவத்தம் |
விரவு (=கல, கூடு) + அத்து (=தங்கு) + அம் = விரவத்தம் >>> பிரவத்தம் = கலந்து / கூடித் தங்கியிருப்பது. |
பிரவத்தி |
கூட்டுழைப்பு |
விரவாற்றி |
விரவு (=கல, கூடு) + ஆற்று (=செய்) + இ = விரவாற்றி >>> பிரவத்தி = கூடிச் செய்யும் செயல். |
பிரவபணம் |
விதைக்கை |
விரைபாமணம் |
விரை (=விதை) + பா (=பரப்பு, தூவு) + மண் + அம் = விரைபாமணம் >>> பிரய்வாபணம் >>> பிரவபணம் = விதைகளை மண்ணில் தூவுதல். |
பிரவயணம் |
அங்குசம் |
விரைவயனம் |
விரை + வயன் (=இரும்பு) + அம் = விரைவயனம் >>> பிரய்வயனம் >>> பிரவயணம் = விரைவுபடுத்த உதவும் இரும்புக் கருவி. |
பிரவர்த்தகம், பிரவர்த்தனம் |
முயற்சி |
விறவருத்தகம் |
விற (=மேம்படு) + வருத்து + அகம் = விறவருத்தகம் >>> பிரவர்த்தகம் = மேம்பாட்டினைத் தரும் வருத்தம். |
பிரவர்த்தகன் |
முயல்பவன் |
விறவருத்தகன் |
விற (=மேம்படு) + வருத்து + அகன் = விறவருத்தகன் >>> பிரவர்த்தகன் = மேம்பாட்டிற்காக வருத்திக் கொள்பவன். |
பிரவரம் |
மரபு |
பிறவாரம் |
பிற (=தோன்று) + வார் (=நீள், தொடர்) + அம் = பிறவாரம் >>> பிரவரம் = தோன்றித் தொடர்ந்து வருவது. |
பிரவாகம் |
குளம் |
விரவாக்கம் |
விரவு (=அடை) + ஆக்கம் (=நீர்) = விரவாக்கம் >>> பிரவாகம் = நீர் அடைந்த இடம் = குளம். |
பிரவாகம் |
தொழில் |
விறவாக்கம் |
விற (=மிகு, பெருக்கு) + ஆக்கம் (=பொருள், செயல்) = விறவாக்கம் >>> பிரவாகம் = பொருளைப் பெருக்கும் செயல் = தொழில். |
பிரவாகனாதி |
தொன்றுதொட்டு வருவதான மரபு |
பிறவாக்கனாதி |
பிற (=தோன்று) + ஆக்கன் (=அமைப்பு, ஏற்பாடு) + ஆதி = பிறவாக்கனாதி >>> பிரவாகனாதி = ஆதியில் தோன்றிய ஏற்பாடு / அமைப்பு முறை = மரபு. |
பிரவாசம் |
கோவில் |
விறவாசம் |
விற (=மேம்படு) + வாசம் (=இருப்பிடம்) = விறவாசம் >>> பிரவாசம் = மேம்பட்ட இருப்பிடம் = கோவில். |
பிரவாசனம் |
பிறநாட்டில் வாழ்தல் |
பிறவாசணம் |
பிற + வாசம் (=வாழ்க்கை) + அணம் = பிறவாசணம் >>> பிரவாசனம் = பிறநாட்டில் வாழ்வது. |
பிரவாசனம் |
கொலை |
விலவாசணம் |
வில (=பிரி, நீக்கு) + வாசி (=மூச்சு, உயிர்) + அணம் = விலவாசணம் >>> பிரவாசனம் = மூச்சை / உயிரைப் பிரித்தல் = கொல்லுதல். |
பிரவாணி |
நாடா |
விறபணி |
விற (=செறி) + பணை (=கட்டு) + இ = விறபணி >>> பிரவாணி = செறித்துக் கட்ட உதவுவது. |
பிரவாதம் |
பெருங்காற்று |
விறவாதம் |
விற (=மிகு) + வாதம் (=காற்று) = விறவாதம் >>> பிரவாதம் = பெருங்காற்று. |
பிரவாதம் |
ஊர்ப்பேச்சு |
பிறவாதம் |
பிற + வாதம் (=பேச்சு) = பிறவாதம் >>> பிரவாதம் = பிறரது பேச்சு. |
பிரவாரணம் |
தடை |
விலவாரணம் |
வில (=தடு) + ஆர் (=பரவு, செல்) + அணம் = விலவாரணம் >>> பிரவாரணம் = செல்வதைத் தடுத்தல் |
பிரவாரணம் |
குடை |
விலமாரணம் |
வில (=தடு, மறை) + மாரி (=மழை) + அணம் = விலமாரணம் >>> பிரவாரணம் = மழைநீர் மேலே படாமல் மறைத்துத் தடுப்பது. |
பிரவாரம் |
ஆடை, புடவை |
விலவாரம் |
வில (=மறை) + ஆர் (=அணி) + அம் = விலவாரம் >>> பிரவாரம் = மறைப்பதற்காக அணியப்படுவது = ஆடை. |
பிரவாலம் |
இளந்தளிர் |
பிறவாலம் |
பிற (=தோன்று) + வால் (=இளமை) + அம் = பிறவாலம் >>> பிரவாலம் = இளமையாகத் தோன்றுவது. |
பிரவாளம் |
பவளம் |
விரவளம் |
விரவு (=கல, பரவு) + அள் (=செறி, வலிமை) + அம் = விரவளம் >>> பிரவாளம் = கடலில் செறிந்தும் பரவியும் இருப்பதான வலிமையான பொருள். |
பிரவிக்யாதி |
புகழ் |
பிறமிக்கறை |
பிற (=தோன்று) + மிகு (=சிற) + அறை (=சொல்) = பிறமிக்கறை >>> பிரவிக்கதை >>> பிரவிக்கதி >>> பிரவிக்யாதி = சிறப்பு தோன்றும் சொல். |
பிரவிடை, பிரவுடை |
திருமணத்திற்குப் பக்குவமான பெண் |
விரவிடை |
விரவு (=கல, கூடு) + இடை (=சமயம், பருவம்) = விரவிடை >>> பிரவிடை, பிரவுடை = கலப்பு / கூடுதலுக்கு ஏற்ற பருவத்தை அடைந்தவள். |
பிரவிருத்தி |
முயற்சி |
மிறைவிருத்தி |
மிறை (=வருத்தம்) + விருத்தி (=வளர்ச்சி) = மிறைவிருத்தி >>> மிறய்விருத்தி >>> பிரவிருத்தி = வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் வருத்தம். |
பிரவிருத்தன் |
முயல்பவன் |
மிறைவிருத்தன் |
மிறை (=வருத்தம்) + விருத்தி (=வளர்ச்சி) + அன் = மிறைவிருத்தன் >>> மிறய்விருத்தன் >>> பிரவிருத்தன் = வளர்ச்சிக்காக வருத்தத்தை மேற்கொள்பவன். |
பிரவிருத்தி |
முயற்சி செய் |
மிறைவிருத்தி |
மிறைவிருத்தி (=முயற்சி) >>> பிரவிருத்தி = முயற்சிசெய் |
பிரவிருத்தி |
மலம் கழித்தல் |
விலவுலுத்தி |
வில (=நீக்கு, கழி) + உலுத்தி (=மலம்) = விலவுலுத்தி >>> பிரவுருத்தி >>> பிரவிருத்தி = மலம் கழித்தல். |
பிரவீணதை |
நுட்பம், திறமை |
விறபின்னதி |
விற (=மிகு) + பின்னம் (=பொடி, நுட்பம்) + தி = விறபின்னதி >>> பிரவீணதை = மிகுதியான நுட்பம். |
பிரவீணன் |
திறமைசாலி |
விறபின்னன் |
விற (=மிகு) + பின்னம் (=பொடி, நுட்பம்) + அன் = விறபின்னன் >>> பிரவீணன் = மிகுதியான நுட்பம் அறிந்தவன் = திறமைசாலி. |
பிரவுடம், பிரௌடம் |
பெருமை, மேம்பாடு |
விறவுறம் |
விற (=சிற, மேம்படு) + உறு + அம் = விறவுறம் >>> பிரவுடம் = மேம்பாடு, பெருமை, சிறப்பு |
பிரவுடன் |
பெருமைமிக்கோன் |
விறவுறன் |
பிரவுடம் (=பெருமை) >>> பிரவுடன் = பெருமை மிக்கோன் |
பிரவேசம், பிரவேசனம் |
உள் நுழைகை |
விலவேயம் |
வில (=செல், கட) + வேயம் (=வழி) = விலவேயம் >>> பிரவேசம் = வழியாகச் செல்லுதல். |
பிரவேசம், பிரவேசனம் |
நுழைவாயில் |
விலவேயம் |
வில (=செல், கட) + வேயம் (=வழி) = விலவேயம் >>> பிரவேசம் = செல்லும் வழி. |
பிரவேசி |
நுழை, உட்செல் |
பிரவேசி |
பிரவேசம் (=நுழைகை) >>> பிரவேசி = நுழை. |
பிரவேசகன் |
தூதன் |
பிறவேயகன் |
பிற + வேய் (=ஒற்று, செய்தி) + அகன் = பிறவேயகன் >>> பிரவேசகன் = பிறரது செய்தியைக் கொண்டவன். |
பிரவேசிதன் |
நுழைபவன் |
பிரவேசிதன் |
பிரவேசம் (=நுழைகை) >>> பிரவேசிதன் = நுழைபவன் |
பிரவேட்சணம் |
கண்முன்னால் காணுதல் |
பிறவேயணம் |
பிற (=தோன்று) + ஏய் (=எதிர்ப்படு) + அணம் = பிறவேயணம் >>> பிரவேச்சணம் >>> பிரவேட்சணம் = எதிர்ப்பட்டுத் தோன்றுதல். |
பிரவேட்டம் |
தோள் |
விறவேணம் |
விற (=மிகு) + ஏண் (=திண்மை, வலிமை) + அம் = விறவேணம் >>> பிரவேடம் >>> பிரவேட்டம் = மிக்க திண்மையும் வலிமையும் கொண்டது |
பிரவேட்டம் |
மணிக்கட்டு |
விறமேட்டம் |
விற (=செறி, பொருந்து) + மேடு (=கை) + அம் = விறமேட்டம் >>> பிரவேட்டம் = கை பொருந்துமிடம். |
பிரவேணி |
சடை |
விறவேணி |
விற (=செறி) + வேணி (=மயிர்) = விறவேணி >>> பிரவேணி = செறிந்த மயிர் = சடை. |
வேணி |
மயிர், வேர் |
மேனி |
மென்மை (=நுண்மை, மிருது, தாழ்வு) >>> மேனி >>> வேணி = நுட்பமும் மிருதுவும் கொண்டு தாழ்ந்து / வீழ்ந்து இருக்கும் பொருள் = மயிர், வேர் |
பிரவேணி |
யானையின்மேல் அமரும் பலகை |
விறவேணி |
விற (=செறி, பொருத்து) + ஏணி (=உயரம், அடுக்கு) = விறவேணி >>> பிரவேணி = பொருத்தப்பட்ட உயரமான அடுக்கு. |
பிரளயம் |
பூமியின் அழிவு / இறுதிக் காலம் |
பிறழயம், பிரளயம் |
பிறழ் / பிரள் (=மாறுபடு, நிலைகெடு) + அயம் (=பள்ளம், பூமி) = பிறழயம் / பிரளயம் = பூமியானது தனது நிலைகெட்டு மாறுபாடு அடைதல். |
பிரளயம் |
நீர்ப்பெருக்கு |
பிரளயம் |
பிரள் (=மிகு, உருள்) + அயம் (=நீர்) = பிரளயம் = மிகுதியாக உருண்டு ஓடிவரும் நீர். |
பிரசாபதி |
அரசன் |
பிரசாபதி |
பிரசை (=குடிமக்கள்) + பதி (=தலைவன்) = பிரசய்பதி >>> பிரசாபதி = குடிமக்கள் தலைவன் |
பிரச்`தானம், பிரத்தானம் |
புறப்படுதல் |
விலத்தானம் |
வில (=நீங்கு, செல்) + தானம் (=இடம்) = விலத்தானம் >>> பிரத்தானம் >>> பிரச்`தானம் = இடத்தை விட்டு நீங்குதல் |
பிரச்`தாபனம், பிரத்தாபனம் |
அனுப்புதல் |
விலத்தாமணம் |
வில (=நீக்கு, செலுத்து) + தாமம் (=இடம்) + அணம் = விலத்தாமணம் >>> பிரத்தாபனம் >>> பிரச்`தாபனம் = இடத்தை விட்டு செலுத்துதல். |
பிரச்`தாபனம், பிரத்தாபனம் |
நியமித்தல் |
பிறத்தாபணம் |
பிற + தாபி (=நிறுவு) + அணம் = பிறத்தாபணம் >>> பிரத்தாபனம் >>> பிரச்`தாபனம் = பிறரை நிறுவுதல். |
பிரத்தாபி, பிரச்`தாபி |
புகழ், விளம்பரப் படுத்து, சொல் |
பிரத்தாபி |
பிரதாபம் (=புகழ்) >>> பிரத்தாபி >>> பிரச்`தாபி = புகழ், விளம்பரப்படுத்து. தெரியப்படுத்து, சொல் |
பிரத்தாவம், பிரச்`தாவம், பிரத்தாபனை |
விளம்பரம், வெளிப்படை |
பிரத்தாவம் |
பிரதாபம் (=புகழ்) >>> பிரத்தாவம் >>> பிரச்`தாவம் = விளம்பரம், வெளிப்படை, வதந்தி |
பிராக்கியன் |
அறிஞன் |
விரகியன் |
விரகு (=அறிவு) + இயன் = விரகியன் >>> பிராக்கியன் = அறிவு உடையவன். |
பிராக்கம், பிராக்கு |
சென்றது, பழையது |
விலாக்கம் |
வில (=செல், கட) + ஆக்கம் (=ஆகியது) = விலாக்கம் >>> பிராக்கம் >>> பிராக்கு = சென்று / கடந்து ஆகியது. |
பிராகபாவம் |
பழையது இன்மை |
பிராக்கபாவம் |
பிராக்கம் (=பழையது) + பாவம் (=அழிவு, கேடு) = பிராக்கபாவம் >>> பிராகபாவம் = பழையது இன்மை |
பிராகாதம் |
போர் |
வீறகற்றம் |
வீறு (=வெறுப்பு, பகை) + அகற்று + அம் = வீறகற்றம் >>> பீரகத்தம் >>> பிராகாதம் = பகையை அகற்றுதல். |
பிரகாமியம் |
விரும்பியதைப் பெறுதல் |
விறகாமியம் |
விற (=பொருந்து, அடை) + காமம் (=விருப்பம்) + இயம் = விறகாமியம் >>> பிரகாமியம் = விரும்பியதைப் பெறல். |
பிரகாரம், பிராகாரம் |
கோயிலின் சுற்றுப்பாதை |
விலகாறம் |
(2). விலகு (=வளை, சுற்று) + ஆறு (=பாதை) + அம் = விலகாறம் >>> பிரகாரம், பிராகாரம் = சுற்றுப் பாதை. |
பிரகாரம், பிராகாரம் |
மதில் |
விலங்காரம் |
விலங்கு (=தடு, மறை) + ஆர் (=கட்டு) + அம் = விலங்காரம் >>> பிரக்காரம் >>> பிரகாரம், பிராகாரம் = தடுக்க / மறைக்கக் கட்டப்பட்டது. |
பிரகிருதி, பிராகிருதம் |
இயற்கை, தன்மை |
பிறங்கிருதி |
பிறங்கு (=தோன்று) + இரு + தி = பிறங்கிருதி >>> பிரக்கிருதி >>> பிரகிருதி, பிராகிருதம் = தோன்றி இருப்பது = இயற்கை, குணம். |
பிராகிருதர் |
சாமானியர் |
பிராகிருதர் |
பிராகிருதம் (=இயற்கை) >>> பிராகிருதர் = இயல்பானவர் |
பிராங்கம், பிராங்கணம் |
பறை |
பிறங்கம், பிறங்கணம் |
(1). பிறங்கு (=ஒலி) + அம் = பிறங்கம் >>> பிராங்கம். (2). பிறங்கு (=ஒலி) + அணம் = பிறங்கணம் >>> பிராங்கணம் = ஒலி எழுப்புவது = பறை. |
பிராசம் |
கத்தி |
வீறயம் |
வீறு (=வெட்டு, நீக்கு) + அயம் (=இரும்பு) = வீறயம் >>> பிராசம் = வெட்டி நீக்கும் இரும்பு. |
பிராசம் |
எழுத்தோசையின் பொருத்தம் |
விறாசம் |
விற (=பொருந்து) + அசை (=எழுத்தோசை) + அம் = விறாசம் >>> பிராசம் = எழுத்தோசையின் பொருத்தம் |
பிராசயம் |
ஆதி, இயற்கை |
பிறாசயம் |
பிற (=தோன்று) + அசை (=தங்கு) + அம் = பிறாசயம் >>> பிராசயம் = தோன்றித் தங்கியது. |
பிராசனம் |
சோறு ஊட்டுதல் |
பிறாயணம் |
பிற + ஆய் (=உண்ணு) + அணம் = பிறாயணம் >>> பிராசனம் = பிறரை உண்ணச் செய்தல். |
அசனம் |
உணவு, சோறு |
ஆயணம் |
(2). ஆய் (=உண்ணு) + அணம் = ஆயணம் >>> அசனம் = உண்ணப்படுவது = உணவு. |
பிராசாதம் |
கோயில், உப்பரிகை |
விறசந்தம் |
விற (=மேம்படு) + சந்தி (=கூடுமிடம்) + அம் = விறசந்தம் >>> பிரசத்தம் >>> பிராசாதம் = மேலான கூடுமிடம். |
ஆசை |
விருப்பம் |
ஆயை |
(2). ஆய் (=விரும்பு) + ஐ = ஆயை >>> ஆசை = விருப்பம் |
சத்திரம் |
தங்கும் அமைப்பு |
சாற்றிரம் |
(2). சாற்று (=அமை) + இரு (=தங்கு) + அம் = சாற்றிரம் >>> சத்திரம் = தங்குவதற்கான அமைப்பு. |
ஆசாரி |
நுட்பம் அறிந்தோன் |
ஆசறி |
ஆசு (=நுட்பம்) + அறி = ஆசறி >>> ஆசாரி = நுட்பம் அறிந்தவன். |
ஆசாரியன், ஆச்சாரியன் |
குரு |
ஆசரியன் |
ஆசு (=ஐயம்) + அரி (=அறு, நீக்கு) + அன் = ஆசரியன் >>> ஆசாரியன் = ஐயம் களைபவன். ஒ.நோ: ஆசு (=ஐயம்) + இரி (=நீக்கு) + அன் = ஆசிரியன் = ஐயம் நீக்குபவன். |
ஆசான் |
குரு |
ஆசான் |
ஆசு (=நுட்பம், புலமை) + ஆன் = ஆசான் = நுட்பம் / புலமை வாய்ந்தவன். |
பிராசாரியன் |
குருவுக்கெல்லாம் குரு |
விறாசாரியன் |
விற (=மேம்படு) + ஆசாரியன் = விறாசாரியன் >>> பிராசாரியன் = மேலான குரு. |
பிராசி |
கிழக்கு |
பிறாயி |
பிற (=தோன்று) + ஆய் (=ஒளி) + இ = பிறாயி >>> பிராசி = ஒளி தோன்றும் திசை. |
பிராசி |
முன்னுள்ளது |
விறாசி |
விற (=மேம்படு, முற்படு) + அசை (=இரு) + இ = விறாசி >>> பிராசி = முற்பட்டு இருப்பது |
பிராசிகை |
கொசு |
விறாயிக்கை |
விற (=செறி, மொய்) + ஆய் (=சிறுமை, குத்து) + இக்கு (=துன்பம்) + ஐ = விறாயிக்கை >>> பிராசிகை = கூட்டமாக மொய்த்துக் குத்தித் துன்புறுத்தும் சிற்றுயிரி. |
பிராசீரம் |
சுவர், வேலி |
விலாசீரம் |
வில (=தடு, மறை) + அசை (=கட்டு) + இரு + அம் = விலாசீரம் >>> பிராசீரம் = தடுக்க / மறைக்கக் கட்டப்பட்டு இருப்பது. |
பிராசீனம் |
பழமையானது, முற்பட்டது |
விறாசீனம் |
விற (=மேம்படு, முற்படு) + அசை (=தங்கு) + இனம் = விறாசீனம் >>> பிராசீனம் = முற்பட்டுத் தங்கியது. |
பிராசீனர் |
முன்னோர் |
விறாசீனர் |
விறாசீனம் (=முற்பட்டது) >>> விறாசீனர் = முன்னோர் |
பிராஞ்ஞம் |
அறிவு, புலமை |
விறாயம் |
விற (=மிகு) + ஆய் (=நுண்மை, நுட்பம்) + அம் = விறாயம் >>> பிராஞ்ஞம் = மிக நுட்பமானது = அறிவு. |
பிராஞ்ஞன் |
அறிஞன் |
விறாயன் |
விற (=மிகு) + ஆய் (=நுண்மை, நுட்பம்) + அன் = விறாயன் >>> பிராஞ்ஞன் = நுட்பம் மிக்கவன். |
ஞாயிறு, 10 மே, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 28
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொடர்ந்து வாசிக்கிறேன். சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :))
நீக்கு