| 
   சொல்  | 
  
   பொருள்  | 
  
   தமிழ்ச் சொல்  | 
  
   மூலச்சொல்லும் தோன்றும் முறையும்  | 
 
| 
   பிரேரகன்  | 
  
   ஏவுபவன், செய்விப்பவன்  | 
  
   பிரேரகன்  | 
  
   பிரேரகம் (=தூண்டுவது) >>> பிரேரகன் = தூண்டிவிட்டு வேலை வாங்குபவன்.  | 
 
| 
   பிரேரி  | 
  
   செயல்படுத்து, துவங்கச்செய்  | 
  
   பிரேரி  | 
  
   பிரேரணம் (=தூண்டுதல்) >>> பிரேரி = தூண்டு = செயல்படச்செய், துவக்கு  | 
 
| 
   பிரேரியம், பிரேரிதம்  | 
  
   தூண்டப்பட்டது, ஏவப்பட்டது  | 
  
   புறேறியம்  | 
  
   புறம் (=வெளி) + ஏறு (=எழு) + இயம் = புறேறியம் >>> பிறேறியம் >>> பிரேரியம் = வெளியே எழுமாறு செய்யப்பட்டது.  | 
 
| 
   பிரேரியர்  | 
  
   செலுத்தப்பட்டவர்  | 
  
   பிரேரியர்  | 
  
   பிரேரியம் (=ஏவப்பட்டது) >>> பிரேரியர் = ஏவப்பட்டவர்  | 
 
| 
   பிரேளிகை  | 
  
   புதிர்  | 
  
   புரேளிகை  | 
  
   புரை (=சிக்கல்) + எளி (=சுளுவாகு) + கை = புரேளிகை >>> பிரேளிகை = சுளுவாக்கப்படும் சிக்கல்.  | 
 
| 
   பிரோகம்  | 
  
   முடிச்சு  | 
  
   புரோகம்  | 
  
   புரை (=பின்னல்) + ஒகு (=சேர், பிணி) + அம் = புரோகம் >>> பிரோகம் = பின்னலை உண்டாக்கும் பிணிப்பு.  | 
 
| 
   பில்லம்  | 
  
   கண்ணீர் வடியும் நோய் வகை  | 
  
   முல்லாம்  | 
  
   முலை (=கண்) + ஆம் (=நீர்) = முல்லாம் >>> புல்லம் >>> பில்லம் = கண்ணில் நீர் வடியச்செய்யும் ஒருவகை நோய்.  | 
 
| 
   பில்லாக்கு, பிலாக்கு  | 
  
   மூக்கின் நடுத் தண்டு அணி  | 
  
   புள்ளகம்  | 
  
   புள் (=வளையம்) + அகம் (=நடு) = புள்ளகம் >>> புல்லாக்கு >>> பில்லாக்கு = மூக்கின் நடுத்தண்டில் மாட்டும் வளையம்.  | 
 
| 
   பில்லாணி  | 
  
   கால்விரலில் மாட்டும் மிஞ்சி  | 
  
   புள்ளணி  | 
  
   புள் (=வளையம்) + அணி = புள்ளணி >>> புல்லணி >>> பில்லாணி = கால்விரலில் மாட்டும் வளையம்.  | 
 
| 
   பில்லி  | 
  
   பூனை  | 
  
   பிள்ளை  | 
  
   பிள்ளை (=பூனை) >>> பில்லை >>> பில்லி  | 
 
| 
   பில்லி  | 
  
   பேய், சூனியம்  | 
  
   மீளி  | 
  
   மீளி (=பேய்) >> மிள்ளி >>> பில்லி = பேய், பேயை ஏவுதல்.  | 
 
| 
   பில்லை  | 
  
   மழுங்கிய மஞ்சள் நிறம்  | 
  
   புல்லி  | 
  
   புலி >>> புல்லி >>> புல்லை >>> பில்லை = புலியின் தோல் போன்ற மஞ்சள் நிறம்.  | 
 
| 
   பில்லை, வில்லை  | 
  
   வட்டமான பொருள்  | 
  
   புள்ளை  | 
  
   புள் (=வளையம், வட்டம்) + ஐ = புள்ளை >>> புல்லை >>> பில்லை >>> வில்லை = வட்டமான பொருள்.  | 
 
| 
   பில்லை  | 
  
   திரட்சி, உருண்டை  | 
  
   பிள்ளை  | 
  
   பீள் (=கரு) + ஐ = பிள்ளை >>> பில்லை = கருவைப் போல உருண்டு திரண்டது. ஒ.நோ: கோள் + ஐ = கொள்ளை.  | 
 
| 
   பிலகாரி  | 
  
   பெருச்சாளி  | 
  
   பிலகாரி  | 
  
   பிலம் (=பொந்து, வளை) + கார் (=மயிர், கருமை) + இ = பிலகாரி = வளைக்குள் வாழும் மயிர் மிக்க கருப்பு உயிரி  | 
 
| 
   பிலஞ்சுலோபம்  | 
  
   எறும்பு வகை  | 
  
   புலஞ்சுலோபம்  | 
  
   புலம் (=மண்) + சுலோபம் (=எறும்பு) = புலஞ்சுலோபம் >>> பிலஞ்சுலோபம் = மண்ணுக்குள் வாழும் எறும்பு வகை.  | 
 
| 
   சுலோபம்  | 
  
   எறும்பு  | 
  
   சுளோம்பம், உழுவம்  | 
  
   (1). சுள் (=சிறுமை) + ஓம்பு (=கூடு, பெருகு) + அம் = சுளோம்பம் >>> சுலோபம் = கூடிப் பெருகி வாழும் சிற்றுயிரி = எறும்பு. (2). உழுவம் (=எறும்பு) >>> சுழுவம் >>> சுலோபம்.  | 
 
| 
   பிலவகம்,பிலவம், பிலவங்கம்  | 
  
   தவளை  | 
  
   புலவகம், பிலவகம்  | 
  
   (1). பிலம் (=பொந்து) + அகம் = பிலவகம் = பொந்துக்கு உள்ளே இருப்பது = தவளை. (2). புலம் (=மண்) + அகம் = புலவகம் >>> பிலவகம் = மண்ணுக்குள் புதைந்திருப்பது.  | 
 
| 
   பிலவகதி  | 
  
   பாய்ச்சல்  | 
  
   பிலவகதி  | 
  
   பிலவம் (=தவளை) + கதி (=இயக்கம்) = பிலவகதி = தவளையின் இயக்கம் = பாய்ச்சல்.  | 
 
| 
   பிலவகம், பிலவங்கம்  | 
  
   குரங்கு  | 
  
   விலவாகம்  | 
  
   வில (=வளை) + ஆகம் (=உடல்) = விலவாகம் >>> பிலவகம் = வளைந்த உடல் கொண்டது. ஒ.நோ: குரங்கு (=வளை) >>> குரங்கு = வளைந்த உடல் கொண்டது.  | 
 
| 
   பிலவங்கம்  | 
  
   பொன்மான்  | 
  
   புல்லம்மாக்கம்  | 
  
   புல் + அம்மு (=உண்) + ஆக்கம் (=பொன், உயிரி) = புல்லம்மாக்கம் >>> புலவாக்கம் >>> புலவங்கம் >>> பிலவங்கம் = புல்லை உண்ணும் பொன்னிற உயிரி.  | 
 
| 
   பிலவம்  | 
  
   ஆடு  | 
  
   புலம்மம்  | 
  
   (1). புல் + அம்மு (=உண்) + அம் = புலம்மம் >>> புலவம் >>> பிலவம் = புல்லை உண்பது. (2). புலவு (=இறைச்சி) + அம் = புலவம் >>> பிலவம் = இறைச்சியாக அமைவது.  | 
 
| 
   பிலாக்கணம்  | 
  
   ஒப்பாரி வைத்தல்  | 
  
   புலாக்கணம்  | 
  
   புலா (=புலம்பல், கதறல்) + கணம் (=கூட்டம்) = புலாக்கணம் >>> பிலாக்கணம் = கூட்டமாகக் கூடிப் புலம்பிக் கதறுதல்.  | 
 
| 
   பிலாவனம்  | 
  
   நனைத்தல்  | 
  
   பிலப்பணம்  | 
  
   பில் (=நீர்) + அப்பு (=ஒற்றியெடு) + அணம் = பிலப்பணம் >>> பிலாவனம் = நீரில் ஒற்றியெடுத்தல்.  | 
 
| 
   பிலாளகம்  | 
  
   புழுகுச்சட்டம்  | 
  
   புலாலகம்  | 
  
   புலால் (=நாற்றம்) + அகம் = புலாலகம் >>> புலாளகம் >>> பிலாளகம் = நாற்றம் கொண்டது.  | 
 
| 
   பிலாறு  | 
  
   நீர்நிலை  | 
  
   பிலாறு  | 
  
   பில் (=நீர்) + ஆறு (=தங்கு) = பிலாறு = நீர் தங்கிய இடம்.  | 
 
| 
   பிலீகம்  | 
  
   மண்ணீரல்  | 
  
   புலிகம்  | 
  
   புலம் (=மண்) + இக (=பிரி, நீக்கு) + அம் = புலிகம் >>> பிலிகம் >>> பிலீகம் = உணவில் உள்ள மண்ணைப் பிரித்து நீக்கும் உறுப்பு = மண்ணீரல்.  | 
 
| 
   பிலீகோதரம்  | 
  
   மண்ணீரல் வீக்கம்  | 
  
   பிலீகோந்தரம்  | 
  
   பிலீகம் (=மண்ணீரல்) + உந்து (=பெருகு) + அரம் = பிலீகோந்தரம் >>> பிலீகோதரம் = மண்ணீரல் பெருக்கம்.  | 
 
| 
   பிவாயம்  | 
  
   பானைகளில் திருநீறு பூசுதல்  | 
  
   பூவாயம்  | 
  
   பூ (=பொலிவு, பொடி) + வாய் (=பொருத்து, பூசு) + அம் = பூவாயம் >>> புவாயம் >>> பிவாயம் = பொலிவு பெறுமாறு பொடியைப் பூசுதல்.  | 
 
| 
   பிள்ளுவம்  | 
  
   யானைக்கன்று  | 
  
   பிள்ளுவம்  | 
  
   பிள்ளை (=குட்டி) + உவா (=யானை) + அம் = பிள்ளுவம் = யானையின் குட்டி.  | 
 
| 
   பிக்காலி  | 
  
   பயந்தாங்கொள்ளி  | 
  
   பிற்காலி  | 
  
   பிற்காலி (=பின்வாங்கு, பயந்தோடு) >>> பிக்காலி  | 
 
| 
   அனுபவம்  | 
  
   நுகர்ச்சி, நுகர்ச்சி அறிவு  | 
  
   அண்ணுபாவம்  | 
  
   அண்ணு (=நெருங்கு, அடை) + பா (=பருகு, நுகர்) + அம் = அண்ணுபாவம் >>> அனுபவம் = நுகர்ந்து அடைந்தது.  | 
 
| 
   அனுபவி  | 
  
   நுகர்  | 
  
   அனுபவி  | 
  
   அனுபவம் (=நுகர்ச்சி) >>> அனுபவி = நுகர்  | 
 
| 
   மன்னிப்பு  | 
  
   பொறுத்துக் கைவிடுதல்.  | 
  
   மாணீவு  | 
  
   மாண் (=சும, பொறு) + ஈவு (=ஒழி, கைவிடு) = மாணீவு >>> மண்ணீமு >>> மன்னிப்பு = (ஒருவர் செய்த தவறைப்) பொறுத்துக் கைவிடுகை.  | 
 
| 
   பிறகுத்தம்  | 
  
   படர்கொடி  | 
  
   விலகுற்றம்  | 
  
   வில (=வளை) + குறை (=மெலி) + அம் = விலகுற்றம் >>> பிரகுத்தம் >>> பிறகுத்தம் = வளைவும் மெலிவும் உடையது.  | 
 
| 
   பின்னகம்  | 
  
   வேறுபாடு, மாறுபாடு  | 
  
   பின்றகம்  | 
  
   பின்று (=மாறு, வேறுபடு) + அகம் = பின்றகம் >>> பின்னகம் = மாறுபாடு, வேறுபாடு  | 
 
| 
   பின்னகம்  | 
  
   பேதி  | 
  
   பின்றகம்  | 
  
   பின்று (=கலங்கு) + அகம் (=வயிறு) = பின்றகம் >>> பின்னகம் = வயிறு கலங்குதல்.  | 
 
| 
   பின்னம், பின்னிதம்  | 
  
   மாறுபாடு, வேறுபாடு  | 
  
   பின்றம்  | 
  
   பின்று (=மாறு, வேறுபடு) + அம் = பின்றம் >>> பின்னம் = மாறுபாடு, வேறுபாடு  | 
 
| 
   பின்னம், பின்னிதம்  | 
  
   பிரிவுற்றது, சிதைவு, பிளவு  | 
  
   பின்றம்  | 
  
   பின்று (=நீங்கு, பிரி) + அம் = பின்றம் >>> பின்னம் = பிரிவுற்றது = சிதைவு, பிளவு, பொடி  | 
 
| 
   பின்னம், பின்னிதம்  | 
  
   தடை  | 
  
   பின்றம்  | 
  
   பின்று (=நீங்கு, பிரி) + அம் = பின்றம் >>> பின்னம் = பிரிவை உண்டாக்குவது = தடை.  | 
 
| 
   பின்னோதரன்  | 
  
   மாற்றாந்தாயின் மகன்  | 
  
   பின்னோதரன்  | 
  
   பின்னம் (=மாறுபாடு) + உதரம் (=வயிறு) + அன் = பின்னோதரன் = மாறுபட்ட வயிற்றில் பிறந்தவன்.  | 
 
| 
   பினாகம்  | 
  
   திரிசூலம்  | 
  
   மூன்றாகம்  | 
  
   மூன்று + அஃகம் (=கூர்மை) = மூன்றாகம் >>> புன்னாகம் >>> பினாகம் = மூன்று கூர்முனை கொண்டது.  | 
 
| 
   பினாகம்  | 
  
   பின்னப்பட்டது, மணிமாலை  | 
  
   பின்னாக்கம்  | 
  
   பின்னு + ஆக்கம் (பொருள்) = பின்னாக்கம் >>> பினாகம் = பின்னப்பட்ட பொருள்.  | 
 
| 
   பினாகம்  | 
  
   மண்மாரி  | 
  
   பின்னாகம்  | 
  
   பின்னம் (=பொடி, புழுதி) + அகை (=எழு, வீசு) + அம் = பின்னாகம் >>> பினாகம் = புழுதி எழுந்து வீசுதல்.  | 
 
| 
   பினாகி  | 
  
   அருகம்புல்  | 
  
   பிணங்கி  | 
  
   பிணங்கு (=செறி) + இ = பிணங்கி >>> பினாகி = செறிந்து வளரும் புல்.  | 
 
| 
   பினாதி  | 
  
   அற்பன்  | 
  
   பின்னற்றி  | 
  
   பின்னம் (=பொடி, தூசி) + அற்று (=போல) + இ = பின்னற்றி >>> பின்னத்தி >>> பினாதி = தூசி போன்றவன்  | 
 
| 
   பினாமி  | 
  
   வேறான பெயருடையது  | 
  
   வீநாமி  | 
  
   வீ (=மாறு, வேறுபடு) + நாமம் (=பெயர்) + இ = வீநாமி >>> பினாமி = வேறுபட்ட பெயரைக் கொண்டது.  | 
 
| 
   பைக்கம்  | 
  
   பிச்சை உணவு  | 
  
   வயிகம்  | 
  
   வை (=இழிவுசெய்) + இகு (=சொரி, கொடு) + அம் = வயிகம் >>> பைக்கம் = இழிவுசெய்து கொடுக்கப்படுவது.  | 
 
| 
   பிச்சை  | 
  
   இழிவான பொருள்  | 
  
   வீழை  | 
  
   (2). வீழ் (=தாழ், இழி) + ஐ = வீழை >>> பீசை >>> பிச்சை = இழிவானது.  | 
 
| 
   பிட்சாடணம்  | 
  
   பிச்சை எடுத்துத் திரிதல்  | 
  
   பிச்சாடணம்  | 
  
   பிச்சை + ஆடு (=திரி) + அணம் = பிச்சாடணம் >>> பிட்சாடனம் = பிச்சை எடுத்துத் திரிதல்.  | 
 
| 
   பிட்சு, பிக்சு~  | 
  
   துறவி  | 
  
   பிச்சு  | 
  
   பிச்சை (=இரந்தூண்) >>> பிச்சு >>> பிக்சு~ >>> பிட்சு = இரந்தூண் பெற்று வாழ்பவர் = துறவி.  | 
 
| 
   பீய், பீ  | 
  
   மலம்  | 
  
   வீழ்  | 
  
   வீழ் (=இறக்கு, கழி, கெடு) >>> பீய் >>> பீ = கீழே இறக்கிக் கழிக்கப்படும் கெட்டுப்போன பொருள்.  | 
 
| 
   பீ  | 
  
   அச்சம்  | 
  
   பீ  | 
  
   பை (=அஞ்சு) >>> பீ = அச்சம்  | 
 
| 
   பீக்கலாட்டம்  | 
  
   தடை, தொந்தரவு  | 
  
   வீக்கலாட்டம்  | 
  
   வீக்கு (=தடு) + அல்லாடு (=வருந்து) + அம் = வீக்கலாட்டம் >>> பீக்கலாட்டம் = தடுத்துத் துன்புறுத்தல்.  | 
 
| 
   பீக்கை  | 
  
   மெலிவானது  | 
  
   வீங்கை  | 
  
   வீங்கு (=ஏங்கு, இளை, மெலி) + ஐ = வீங்கை >>> பீக்கை = மெலிவானது.  | 
 
| 
   பீகம், வீகம்  | 
  
   பூட்டு, தாழ்ப்பாள்  | 
  
   வீக்கம்  | 
  
   வீக்கு (=கட்டு, பிணி) >>> வீக்கம் >>> வீகம் >>> பீகம் = கட்டுவது, பிணிப்பது = பூட்டு, தாழ்ப்பாள்  | 
 
| 
   பீகரம்  | 
  
   பயங்கரமானது  | 
  
   பைகரம்  | 
  
   பை (=அஞ்சு) + கரம் = பைகரம் >>> பீகரம் = அஞ்சத்தக்கது  | 
 
| 
   பீசம்  | 
  
   விதை, கொட்டை, சுக்கிலம்  | 
  
   வீயம்  | 
  
   வீ (=மகரந்தம், தாது) + அம் = வீயம் >>> பீசம் = தாதினைக் கொண்டது = விதை, கொட்டை, சுக்கிலம்.  | 
 
| 
   பீசம்  | 
  
   சந்ததி, தாமரைத் தண்டு  | 
  
   வீழம்  | 
  
   வீழ் (=விழுது) + அம் = வீழம் >>> பீசம் = விழுது போன்றது.  | 
 
| 
   பீசி  | 
  
   விதையுடையது  | 
  
   வீயி  | 
  
   வீயம் (=விதை) + இ = வீயி >>> பீசி = விதையுடையது.  | 
 
| 
   பீட்டகம்  | 
  
   தொழில்  | 
  
   பீடாக்கம்  | 
  
   பீடு (=உயர்வு, பெருமை) + ஆக்கம் (=உண்டாக்குதல்) = பீடாக்கம் >>> பீட்டகம் = உய்ரவை / பெருமையை உண்டாக்குவது.  | 
 
| 
   உத்தியோகம்  | 
  
   தொழில்  | 
  
   உந்தியோக்கம்  | 
  
   உந்தி (=உயர்வு, பெருமை) + ஓக்கு (=உண்டாக்கு) + அம் = உந்தியோக்கம் >>> உத்தியோகம் = உயர்வை / பெருமையை உண்டாக்குவது.  | 
 
| 
   பீட்டி  | 
  
   மார்புத்துணி  | 
  
   பீட்டி  | 
  
   பீடு (=பெருமை, மார்பு) + இ = பீட்டி = மார்பில் அணிவது. ஒ.நோ: அகலம் = பெருமை, மார்பு.  | 
 
| 
   பீடணம்  | 
  
   அச்சம்  | 
  
   விறணம்  | 
  
   விற (=அஞ்சு) + அணம் = விறணம் >>> பீடணம் = அச்சம்  | 
 
| 
   பீடம், பீடிகை  | 
  
   உயரமான இருக்கை  | 
  
   வீறம்  | 
  
   வீறு (=உயர்வு, அமர்) + அம் = வீறம் >>> பீடம் = உயரமான அமரும் இடம்.  | 
 
| 
   பீடம்  | 
  
   குதம்  | 
  
   பீறம்  | 
  
   பீறு (=வெளிப்படு) + அம் = பீறம் >>> பீடம் = மலம் வெளியேறும் வழி.  | 
 
| 
   பீடரம்  | 
  
   கோயில்  | 
  
   வீடறம்  | 
  
   வீடு (=இல்லம்) + அறம் (=புண்ணியம்) = வீடறம் >>> பீடரம் = புண்ணியம் தரும் வீடு.  | 
 
| 
   பீடனம்  | 
  
   வருத்தம், தொந்தரவு  | 
  
   வீறணம்  | 
  
   வீறு (=தாக்கு, வருத்து) + அணம் = வீறணம் >>> பீடனம் = வருத்துகை, தொந்தரவு செய்கை  | 
 
| 
   பீடி  | 
  
   துன்புறுத்து  | 
  
   வீறி  | 
  
   வீறு (=அடி, துன்புறுத்து) >>> வீறி >>> பீடி  | 
 
| 
   பீடி  | 
  
   வமிசம்  | 
  
   வீறி  | 
  
   வீறு (=தோன்று) + இ = வீறி >>> பீடி = தோன்றியது = வமிசம்  | 
 
| 
   பீடி  | 
  
   சிறிய இலைச்சுருட்டு  | 
  
   முறி  | 
  
   முறி (=துண்டு, அழி, இலை) >>> புடி >>> பிடி >>> பீடி = புகையிலைத் துண்டுகளைக் கொண்ட அழிவைத் தருவதான இலைச் சுருட்டு  | 
 
| 
   பீடிகை  | 
  
   வரம்பு கடந்து பெருமை பேசுகை  | 
  
   பீடிகை  | 
  
   பீடு (=பெருமை) + இக (=மீறு) + ஐ = பீடிகை = வரம்பு மீறிப் பெருமை பேசுதல்.  | 
 
| 
   பீடிகை  | 
  
   வட்டக் கூடை  | 
  
   வீறிகை  | 
  
   வீறு (=வட்டம்) + இகு (=சொரி, இடு) + ஐ = வீறிகை >>> பீடிகை = இடுவதற்கான வட்டமான பொருள்.  | 
 
| 
   பீடிகை  | 
  
   கொள்கலம்  | 
  
   பிடிகை  | 
  
   பிடி (=கொள்) + கை (=இடம்) = பிடிகை >>> பீடிகை = கொள்ளும் இடம்.  | 
 
| 
   பீடிப்பு  | 
  
   துன்பம்  | 
  
   பீடிப்பு  | 
  
   பீடி (=துன்புறுத்து) >>> பீடிப்பு = துன்பம்  | 
 
| 
   பீடு  | 
  
   தாழ்வு, குறைவு  | 
  
   பிற்று  | 
  
   பின்று (=தாழ்) >>> பிற்று >>> பிட்டு >>> பீடு = தாழ்வு, குறைவு  | 
 
| 
   பீடு  | 
  
   துன்பம்  | 
  
   வீறு  | 
  
   வீறு (=தாக்கு, துன்புறுத்து) >>> பீடு = துன்பம்  | 
 
| 
   பீடு  | 
  
   தரிசு நிலம்  | 
  
   பிற்று  | 
  
   பின்று (=மாறு, பிறழ்) >>> பிற்று >>> பிட்டு >>> பீடு = இயற்கைத் தன்மையில் மாறியது / பிறழ்ந்தது.  | 
 
| 
   பீடு  | 
  
   குழைவானது  | 
  
   பிற்று  | 
  
   பின்று (=பிறழ், கலங்கு) >>> பிற்று >>> பிட்டு >>> பீடு = கலங்கிய / குழம்பிய நிலை கொண்டது.  | 
 
| 
   பீடு  | 
  
   சமம், ஒப்பு  | 
  
   வீறு  | 
  
   (1). வீறு (=அமர், சமமாகப் பொருந்து) >>> பீடு = சமம், ஒப்பு. (2). வீறு (=வலிமை, விறைப்பு) >>> பீடு = நிமிர்வு, சமம்.  | 
 
| 
   பீடை  | 
  
   தாழ்வு, துன்பம்  | 
  
   பின்றை  | 
  
   (2). பின்று (=தாழ்) + ஐ = பின்றை >>> பிற்றை >>> பிட்டை >>> பீடை = தாழ்வு, துன்பம்.  | 
 
| 
   பீத்தை  | 
  
   தலைமுடியின் நாடா  | 
  
   பீத்தை  | 
  
   பித்தை (=தலைமுடி) >>> பீத்தை = தலைமுடியை இறுக்கிக் கட்ட உதவுவது.  | 
 
| 
   பீதகந்தம்  | 
  
   பன்றி  | 
  
   பீதகந்தம்  | 
  
   பீ (=மலம்) + தகு (=பொருந்து) + அந்தம் (=கருமை) = பீதகந்தம் = மலம் பொருந்திய கருநிற உடலைக் கொண்டது.  | 
 
| 
   பீதகம்  | 
  
   பொன்னிறம், பொன், மஞ்சள்  | 
  
   வீறகம்  | 
  
   வீறு (=ஒளி, அழகு) + அகம் = வீறகம் >>> பீதகம் = ஒளி உடையது = பொன்னிறம், பொன், மஞ்சள், பித்தளை.  | 
 
| 
   பீதகம்  | 
  
   தேன்  | 
  
   வீறாக்கம்  | 
  
   வீறு (=ஒளி, அழகு, தனிச்சிறப்பு) + ஆக்கம் (=நன்மை, உணவு) = வீறாக்கம் >>> பீதகம் = பொன்னிற அழகும் தனிச்சிறப்பும் கொண்ட நன்மை தரும் உணவு.  | 
 
| 
   பீதகம்  | 
  
   மஞ்சள் ஆடை  | 
  
   வீறாக்கம்  | 
  
   வீறு (=ஒளி, அழகு) + ஆக்கம் (=ஆடை) = வீறாக்கம் >>> பீதகம் = பொன்னிற அழகுடைய ஆடை.  | 
 
| 
   பீதகன்  | 
  
   வியாழன்  | 
  
   பீதகன்  | 
  
   பீதகம் (=பொன்) >>> பீதகன் = செம்பொன் நிறக் கோள்  | 
 
| 
   பீதகாட்டம்  | 
  
   சந்தனக் கட்டை  | 
  
   பீதகட்டம்  | 
  
   பீதம் (=மஞ்சள்) + கட்டை (=விறகு) + அம் = பீதகட்டம் >>> பீதகாட்டம் = மஞ்சள்நிற விறகு.  | 
 
| 
   பீதகாவேரம்  | 
  
   மஞ்சள், பித்தளை  | 
  
   பீதகாவிரம்  | 
  
   பீதகம் (=பொன்னிறம்) + அவிர் (=ஒளிர்) + அம் = பீதகாவிரம் >>> பீதகாவேரம் = பொன்னிறத்தில் ஒளிர்வது  | 
 
| 
   பீதகி  | 
  
   மஞ்சள் தூள்  | 
  
   பீதகி  | 
  
   பீதகம் (=மஞ்சள்) >>> பீதகி = மஞ்சள் தூள்  | 
 
| 
   பீதசாலம், பீதசாரம், பீதசாரி  | 
  
   சந்தனம்  | 
  
   பீதசாலம்  | 
  
   பீதம் (=பொன்னிறம்) + சால் (=பொருந்து) + அம் = பீதசாலம் >>> பீதசாரம் = பொன்னிறம் பொருந்தியது.  | 
 
| 
   பீதம்  | 
  
   பொன்னிறம், பொன், மஞ்சள்  | 
  
   வீறம்  | 
  
   வீறு (=ஒளி, அழகு) + அம் = வீறம் >>> பீதம் = ஒளியும் அழகும் உடையது = பொன்னிறம், பொன், மஞ்சள்.  | 
 
| 
   பீதம்  | 
  
   அச்சம்  | 
  
   வீறம்  | 
  
   விற (=அஞ்சு) + அம் = வீறம் >>> பீதம் = அச்சம்  | 
 
| 
   பீதம்  | 
  
   பருமை  | 
  
   வீறம்  | 
  
   வீறு (=பெருமை) + அம் = வீறம் >>> பீதம் = பருமை  | 
 
| 
   பீதம்  | 
  
   நேரம்  | 
  
   வீறம்  | 
  
   வீறு (=பகு, பிரி) + அம் = வீறம் >>> பீதம் = பகுக்கப்பட்டது = நேரம். ஒ.நோ: பகு >>> பகல்.  | 
 
| 
   பீதம்  | 
  
   நீர்  | 
  
   பிந்தம்  | 
  
   பிந்து (=துளி) + அம் = பிந்தம் >>> பீதம் = துளியுடையது.  | 
 
| 
   பீதம்  | 
  
   குடித்தல்  | 
  
   பிந்தம்  | 
  
   பிந்து (=துளி) + அம் (=உண்) = பிந்தம் >>> பீதம் = துளியை உண்ணுதல் = நீர் பருகுதல்.  | 
 
| 
   பீதி  | 
  
   சாராயக் கடை  | 
  
   பீதி  | 
  
   பீதம் (=குடித்தல்) >>> பீதி = குடிக்கும் இடம்.  | 
 
| 
   பீதமணி  | 
  
   புச்~பராகக் கல்  | 
  
   பீதமணி  | 
  
   பீதம் (=பொன்னிறம்) + மணி (=கல்) = பீதமணி = பொன்னிறம் கொண்ட கல்  | 
 
| 
   பீதர்  | 
  
   மாம்பழம்  | 
  
   வீறார்  | 
  
   வீறு (=ஒளி, பொன்னிறம்) + ஆர் (=பொருந்து, உண்) = வீறார் >>> பீதர் = ஒளி / பொன்னிறம் பொருந்திய உண்பொருள்.  | 
 
| 
   பித்தளை  | 
  
   உலோகக் கலவை  | 
  
   வீற்றளை  | 
  
   (2). வீறு (=ஒளி, பொன்னிறம்) + அள் (=கூடு, கல) + ஐ = வீற்றளை >>> பித்தளை = பொன்னிறம் கூடிய கலவை.  | 
 
| 
   பீதலகம், பீதலம்  | 
  
   பித்தளை  | 
  
   வீற்றளகம், வீற்றளம்  | 
  
   வீறு (=ஒளி, பொன்னிறம்) + அள் (=கூடு, கல) + அகம் = வீற்றளகம் >>> பீத்தலகம் >>> பீதலகம் = பொன்னிறம் கூடிய கலவை.  | 
 
| 
   பீதன், பீது  | 
  
   சூரியன், தீ  | 
  
   வீற்றன்  | 
  
   வீறு (=ஒளி) + அன் = வீற்றன் >>> பீத்தன் >>> பீதன் = ஒளி தருபவன்.  | 
 
| 
   பீதன்  | 
  
   கோழை  | 
  
   வீற்றன்  | 
  
   விற (=அஞ்சு) + அன் = வீற்றன் >>> பீத்தன் >>> பீதன் = அச்சம் கொள்பவன்.  | 
 
| 
   பீதனம்  | 
  
   மஞ்சள் தூள்  | 
  
   வீற்றணம்  | 
  
   வீறு (=ஒளி, பொன்னிறம், துண்டு) + அணம் = வீற்றணம் >>> பீத்தணம் >>> பீதனம் = பொன்னிறம் மிக்க பொடி.  | 
 
| 
   பீதனேகம்  | 
  
   பித்தளை  | 
  
   பீதநெகம்  | 
  
   பீதம் (=ஒளி, பொன்னிறம்) + நெகு (=உருகு) + அம் = பீதநெகம் >>> பீதனேகம் = பொன்னிறம் கொண்ட உருக்கு.  | 
 
| 
   பீதாம்பரம்  | 
  
   பொன்னாடை  | 
  
   வீறம்பரம்  | 
  
   வீறு (=ஒளி, பொன்னிறம்) + அம்பரம் (=ஆடை) = வீறம்பரம் >>> பீதாம்பரம் = பொன்னிற ஆடை.  | 
 
| 
   பீதி  | 
  
   அச்சம்  | 
  
   வீறி  | 
  
   (2). விற (=அஞ்சு) + இ = வீறி >>> பீதி = அச்சம்.  | 
 
| 
   பீதி  | 
  
   வலி தரும் நோய்  | 
  
   வீறி  | 
  
   வீறு (=துன்புறுத்து, வலிமை) + இ = வீறி >>> பீதி = வலிமையாகத் துன்புறுத்துவது.  | 
 
| 
   பீது  | 
  
   தலைமை யானை  | 
  
   வீறு  | 
  
   வீறு (=வலிமை, வெற்றி, பெருமை) >>> பீது = வலிமையும் வெற்றியும் கொண்ட பெரிய விலங்கு.  | 
 
| 
   பீதை  | 
  
   மஞ்சள்  | 
  
   வீறை  | 
  
   வீறு (=ஒளி) + ஐ = வீறை >>> பீதை = ஒளி மிக்கது.  | 
 
| 
   பீப்பாய், பீப்பா, பிப்பா  | 
  
   பெரிய கொள்கலம்  | 
  
   மீப்பெய்  | 
  
   (2). மீ (=மிகுதி) + பெய் (=ஊற்று) = மீப்பெய் >>> பீப்பை >>> பீப்பாய், பீப்பா, பிப்பா = மிகுதியாக ஊற்றக்கூடிய கலம்.  | 
 
| 
   பீமம்  | 
  
   பெருக்கம், மிகுதி  | 
  
   பைமம்  | 
  
   பை (=பெருகு) + மம் = பைமம் >>>பிமம் >>> பீமம் = பெருமை  | 
 
| 
   பீமம்  | 
  
   அச்சம்  | 
  
   பைமம்  | 
  
   பை (=அஞ்சு) + மம் = பைமம் >>>பிமம் >>> பீமம் = அச்சம்  | 
 
| 
   பீமம்  | 
  
   மிக்க வலிமை  | 
  
   பைமம்  | 
  
   பை (=வலிமை, மிகு) + மம் = பைமம் >>> பிமம் >>> பீமம் = மிகுதியான வலிமை.  | 
 
| 
   பீமன்  | 
  
   பலசாலி  | 
  
   பீமன்  | 
  
   பீமம் (=மிக்க வலிமை) >>> பீமன் = பலம் மிகுந்தவன்.  | 
 
| 
   பீமநாதம்  | 
  
   சிங்கம்  | 
  
   பீமநாதம்  | 
  
   பீமம் (=அச்சம், மிகுதி) + நாதம் (=ஒலி) = பீமநாதம் = அச்சுறுத்துவதான மிகுதியான ஒலியை எழுப்புவது.  | 
 
| 
   பீமரம்  | 
  
   போர்  | 
  
   வீமறம்  | 
  
   வீ (=அழிவு) + மறம் (=பகை) = வீமறம் >>> பீமரம் = பகையை அழித்தல்.  | 
 
| 
   பீமரன்  | 
  
   போர் வீரன்  | 
  
   வீமறன்  | 
  
   பீமரம் (=போர்) >>> பீமரன் = போர் வீரன்  | 
 
| 
   பீமா  | 
  
   பெருகக் கூடிய பணம்  | 
  
   பைமம்  | 
  
   பை (=பெருகு, பணம்) + மம் = பைமம் >>> பிமம் >>> பீமம் >>> பீமா = பெருகக் கூடிய பணம்.  | 
 
| 
   பீயூசம்  | 
  
   பால்  | 
  
   பையுயம்  | 
  
   பை (=வெண்மை, பொங்கு) + உய் (=உயர், உண்) + அம் = பையுயம் >>> பியுசம் >>> பீயூசம் = காய்ச்சினால் பொங்கி உயர்கின்ற வெண்ணிற உணவுப்பொருள்.  | 
 
| 
   பீர்  | 
  
   அச்சம்  | 
  
   வீர்  | 
  
   விற (=அஞ்சு) >>> வீர் >>> பீர் = அச்சம்  | 
 
| 
   பீரு  | 
  
   புருவம்  | 
  
   வீறு  | 
  
   வீறு (=வளை) >>> பீரு = வளைவானது.  | 
 
| 
   பீரு  | 
  
   அச்சமுள்ளவன்  | 
  
   வீறு  | 
  
   விற (=அஞ்சு) + உ >>> வீறு >>> பீரு = அச்சம் கொண்டவன்.  | 
 
ஞாயிறு, 17 மே, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 30
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.