| சொல் | பொருள் | தமிழ்ச் சொல் | மூலச்சொல்லும் தோன்றும் முறையும் | 
| மாருசு | விண்ணப்பம் | வாரியு | வரம் (=விருப்பம்) + இயம் (=சொல்) + உ = வாரியு >>> மாரிசு >>> மாருசு = விருப்பத்தைக் கூறுதல். | 
| மாரௌரவம் | நரகம் | மாரவரமம் | மாறு (=இற, தவறு) + அவை (=தண்டி) + அரம் (=பள்ளம்) + அம் = மாரவரமம் >>> மாரௌரவம் = இறந்தவர்களைத் தவறுக்காகத் தண்டிக்கின்ற பள்ளம். | 
| மால் | அச்சு | மால் | மலி (=நிறை) >>> மால் = நிறைக்கப்படுவது. | 
| மால் | காளவாய் | மால் | மால் (=அச்சு) >>> மால் = அச்சுக்களில் செங்கல் செய்யுமிடம் | 
| மால் | சொத்து | மல் | மல் (=வளம், செல்வம்) >>> மால் = சொத்து | 
| மால் | தொழுவம் | மால் | வல (=கட்டு) >>> மால் = கட்டப்படும் இடம். | 
| மால் | வலை | வலை | வலை >>> மால் | 
| மால் | எல்லை | மால்பு | மால்பு (=எல்லை) >>> மால் | 
| மால் | அரண்மனை | மால் | மால் (=உயரம், பெருமை) >>> மால் = உயரமும் பெருமையும் கொண்ட கட்டடம். | 
| மயானம் | இடுகாடு, சுடுகாடு | மாயணம் | (2). மாய் (=இற) + அணை (=சேர், அடங்கு) + அம் = மாயணம் >>> மயானம் = இறந்தவர்கள் சேர்ந்து அடங்கும் இடம். | 
| மாலகம் | வேப்ப மரம் | பாலகம் | பலம் (=இலை) + அகை (=எரி, அறு) + அம் = பாலகம் >>> மாலகம் = அறுப்பதைப் போன்ற தோற்றத்துடன் தீநிறங்கொண்ட இலைக்கொழுந்தை உடையது. | 
| மாலதி | மல்லிகை | மாலதி | மல் (=நறுமணம்) + அதி (=மிகுதி) = மாலதி = நறுமண மிக்கது | 
| மாலதி | விளக்குத் தண்டு | பாலாறி | பால் (=ஒளி) + ஆறு (=சும, தாங்கு) + இ = பாலாறி >>> மாலதி = ஒளியைத் தாங்குவது = விளக்குத் தண்டு. | 
| மாலதி | முத்தி | வாலத்தி | வலம் (=மேலிடம்) + அத்து (=பொருந்து, சேர்) + இ = வாலத்தி >>> மாலதி = மேலிடம் சேர்தல். | 
| மாலம் | பேய் | மாலம் | மால் (=கருமை, காற்று) + அம் = மாலம் = கருப்புக் காற்று | 
| மாலம் | குங்குமம் | மாலம் | மால் (=செம்மை) + அம் = மாலம் = சிவப்பானது. | 
| மாலயம் | சந்தனம் | மலயம் | மலயம் (=சந்தனம்) >>> மாலயம் | 
| மாலர் | கவசம் | பாலார் | பாலி (=பாதுகா) + ஆர் (=பொருந்து, அணி) = பாலார் >>> மாலர் = பாதுகாப்புக்காகப் பொருந்துமாறு அணிவது. | 
| மாலர் | வேடர் | வாலர் | வலி (=பலவந்தப்படுத்து, பற்றிக்கொள்) + அர் = வாலர் >>> மாலர் = விலங்குகளைப் பலவந்தப்படுத்திப் பிடிப்பவர்கள். | 
| மாலி | கள் | மாலி | மால் (=மயக்கம்) + இ = மாலி = மயக்கம் தருவது | 
| மாலி | சூரியன் | பாலீ | பால் (=ஒளி) + ஈ (=கொடு) = பாலீ = மாலி = ஒளி தருபவன் | 
| மாலி | தோட்டக்காரன் | பாளி | பள்ளம் (=தோட்டம்) + இ = பாளி >>> மாலி = தோட்டக்காரன் | 
| மாலிகை | மாலை, வரிசை | மாலைகை | மாலை (=பூமாலை, வரிசை) + கை = மாலைகை >>> மாலிகை | 
| மாலியம் | பூ | மாலியம் | மல் (=நறுமணம்) + இயம் = மாலியம் = நறுமணம் உடையது | 
| மாலின்யம் | கேடு, அழுக்கு | மலினியம் | மலினம் (=கேடு, அழுக்கு) + இயம் = மலினியம் >>> மாலின்யம் = கேடு, அழுக்கு. | 
| மாலுமி | கப்பலோட்டி | மாலோப்பி | மால் (=கடல்) + ஓப்பு (=ஓட்டு, செலுத்து) + இ = மாலோப்பி >>> மாலோமி >>> மாலுமி = கடலில் செலுத்துபவன். | 
| மாவுத்தன் | யானைப்பாகன் | மாவுந்தன் | மா (=யானை) + உந்து (=செலுத்து, ஓட்டு) + அன் = மாவுந்தன் >>> மாவுத்தன் = யானையைச் செலுத்துபவன். | 
| மாளம் | கத்தூரி | மாலம் | மல் (=நறுமணம்) + அம் = மாலம் >>> மாளம் = நறுமணம் கொண்டது. | 
| மாளிகை | அரண்மனை | மாலிங்கை | மால் (=பெருமை, உயரம்) + இங்கு (=தங்கு) + ஐ = மாலிங்கை >>> மாளிகை = பெரிய உயரமான தங்குமிடம். | 
| மாளை | பட்டை | பாளை | பாளை (=உறை) >>> மாளை = மறைக்கும் பட்டை. | 
| மான்மியம் | பெருமை போற்றுகை | மான்வியம் | மான் (=பெருமை) + விய (=பாராட்டு) + அம் = மான்வியம் >>> மான்மியம் = பெருமைகளைப் பாராட்டுதல். | 
| மானசம், மானதம் | மனம் பற்றியது, கருத்து | மானசம் | மனசு (=கருத்து) + அம் = மானசம் = மனசு தொடர்புடையது, கருத்து. | 
| மானதன் | அரசன் | மானதன் | மான் (=பெருமை) + அதி (=,மிகுதி) + அன் = மானதன் = அதிக பெருமை கொண்டவன். | 
| மானரந்தரி | நாழிகை வட்டில் | மானாலந்தான்றி | மான் (=அள, கணக்கிடு) + ஆலம் (=நீர்) + தான்றி (=பொழுது) = மானாலந்தான்றி >>> மானரந்தரி = நீரின் உதவியால் பொழுதைக் கணக்கிட உதவும் கருவி. | 
| மானரியம் | வினோதமானது | மானரியம் | மான் (=ஒப்புக்கொள்) + அருமை + இயம் = மானரியம் = ஒப்புக்கொள்வதற்கு அரிதானது. | 
| மானவன் | மனிதன் | மானவன் | மனம் (=சிந்தனை) + அன் = மானவன் = சிந்திப்பவன். | 
| மானவன் | அரசன் | மானவன் | மானம் (=பெருமை) + அன் = மானவன் = பெருமை மிக்கவன் | 
| மானவன் | வீரன் | மானவன் | மானம் (=வலிமை, வீரம்) + அன் = மானவன் = வீரம் மிக்கவன் | 
| மானாவி | நவராத்திரி விழா | மாநாவி | மா (=பெரிய, இரவு) + நவம் (=ஒன்பது) + இ = மாநாவி >>> மானாவி = ஒன்பது இரவுகள் நடக்கும் பெருவிழா. | 
| மானிகை | சாராயம் | மானிகை | மான் (=மயங்கு) + இகு (=சொரி, ஊற்று) + ஐ = மானிகை = மயக்கம் தருவது; ஊற்றப்படுவது. | 
| மானிடன் | மனிதன் | மானீடன் | மனம் (=சிந்தனை) + ஈடு (=தகுதி) + அன் = மானீடன் >>> மானிடன் = சிந்திக்கும் தகுதி உடையவன். | 
| மானிதம், மானிதை | பெருமை | மானிதம் | மானம் (=பெருமை) + இதம் = மானிதம் | 
| மானியம் | அளவிடுகை | மானியம் | மான் (=அள) + இயம் = மானியம் = அளத்தல். | 
| மானியம் | பெருமைக்கான கொடை | மானீயம் | மானி (=பெருமைப்படுத்து) + ஈ (=கொடு) + அம் = மானீயம் >>> மானியம் = பெருமைப்படுத்திக் கொடுக்கப்படுவது. | 
| மானியம் | இலவச நிலக்கொடை | மாணீயம் | மண் (=நிலம்) + ஈ + அம் = மாணீயம் >>> மானியம் = இலவசமாகக் கொடுக்கப்பட்ட நிலம். | 
| மானினி | பெண் | மானினி | மானி (=வெட்கப்படு) + இனி = மானினி = வெட்கப்படுபவள். | 
| மானுடன் | மனிதன் | மானுடன் | மனம் (=சிந்தனை) + உடை + அன் = மானுடன் = சிந்தனை உடையவன். | 
| மானுசன், மனுசன் | மனிதன் | மானுயன் | மனம் (=சிந்தனை) + உய் (=வாழ்) + அன் = மானுயன் >>> மானுசன் >>> மனுசன் = சிந்தித்து வாழ்பவன். | 
| மானுசம் | மனிதத்தன்மை | மானுசம் | மானுசன் (=மனிதன்) >>> மானுசம் = மனிதத் தன்மை | 
| மானுசியம், மானுச்~யம் | சிந்தித்து அறிதல் | மானுயியம் | மனம் (=சிந்தனை) + உய் (=அறி) + இயம் = மானுயியம் >>> மானுசியம் >>> மானுச்~யம் = சிந்தித்து அறிதல். | 
| அமானுசியம், அமானுச்~யம் | சிந்தனைக்கு அப்பாற்பட்டது | ஆய்மானுசியம் | ஆய் (=நீங்கு) + மானுசியம் (=சிந்தித்து அறிகை) = ஆய்மானுசியம் >>> அமானுசியம் = சிந்தித்து அறிதல் அற்றது | 
| மாசி^ | முந்தைய | மாயி | மாய் (=கழி) >>> மாயி >>> மாசி^ = கழிந்த, கடந்த, முந்தைய | 
| மிகிரம் | காற்று | வீக்கிறம் | வீக்கு (=கட்டு, அடக்கு) + இறு (=அழி, அறு) + அம் = வீக்கிறம் >>> மிகிரம் = கட்டுப்பாடு அற்றது. | 
| மிகிரம் | மேகம் | வீக்கீரம் | வீக்கு (=நிறை, பெருமை) + ஈரம் (=நீர்) = வீக்கீரம் >>> மிகிரம் = நீர் நிறைந்து பெருத்திருப்பது. | 
| மிகிரன் | சந்திரன், சூரியன் | பைகீறன், மைகீறன் | (1). பை (=ஒளிர்) + கீறு (=கட) + அன் = பைகீறன் >>> பிகிரன் >>> மிகிரன் = ஒளிசெய்து கடப்பவர்கள். (2). மை (=இருள்) + கீறு (=கிழி) + அன் = மைகீறன் >>> மிகிரன் = இருளைக் கிழிப்பவர்கள் = சந்திரன், சூரியன். | 
| மிச்சம் | பொய் | பிச்சம் | பிசி (=பொய்) + அம் = பிச்சம் >>> மிச்சம் | 
| மிச்சாதிட்டி | பொய்த் தோற்றம் | மிச்சதீட்டி | மிச்சம் (=பொய்) + தீட்டு (=உருவாக்கு) + இ = மிச்சதீட்டி >>> மிச்சாதிட்டி = பொய்யாக உருவாக்கப்பட்டது. | 
| மிச்சிரம், மிசிரம் | கலந்து இருப்பது | பிச்சிரம் | பிசை (=கல) + இரு + அம் = பிச்சிரம் >>> மிச்சிரம் >>> மிசிரம் = கலந்து இருப்பது | 
| மிச்சை | குற்றம் | பிழை | பிழை (=குற்றம்) >>> மிசை >>> மிச்சை | 
| மிச்சை | வறுமை, அறியாமை | பிழை | பிழை (=குறைபாடு) >>> மிசை >>> மிச்சை = பொருள் குறைபாடு (=வறுமை), அறிவுக் குறைபாடு (=அறியாமை) | 
| மிசல் | ஒப்புமை | பிசி | பிசி (=ஒப்புமை) + அல் = பிசல் >>> மிசல் | 
| மிசல் | பரிசோதனை | பிசல் | பிசி (=ஒப்புமை) + அல் = பிசல் >>> மிசல் = ஒப்பிட்டுப் பார்த்தல் = பரிசோதித்தல். | 
| மிசல் | பதிவு | விழல் | விழு (=பதி) + அல் = விழல் >>> மிசல் = பதிவு | 
| மிசிகம் | பாம்பின் வளை | பையிங்கம் | பை (=பாம்பு) + இங்கு (=தங்கு) + அம் = பையிங்கம் >>> பிசிகம் >>> மிசிகம் = பாம்பு தங்கும் இடம். | 
| மிசிரன், மிசுரன் | உயர்நிலையில் இருப்பவன் | மிசிரன் | மிசை (=உயர்நிலை) + இரு + அன் = மிசிரன் >>> மிசுரன் = உயர்நிலையில் இருப்பவன். | 
| மிஞ்சிகம் | பெண் கூந்தல் | மீச்சிகம் | மீ (=மிகுதி) + சிகை (=மயிர்) + அம் = மீச்சிகம் >>> மிஞ்சிகம் = மிகுதியான மயிர். | 
| மிஞ்சிகை | காதுவளையம் | மிஞ்சிகை | மிஞ்சு (=வளையம்) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = மிஞ்சிகை = தாழ்ந்து தொங்கும் வளையம் | 
| மிட்டா | ஆட்சி | வீற்றா | வீறு (=ஆட்சி செய்) + ஆ = வீற்றா >>> மிட்டா = ஆட்சி. | 
| மிட்டா | ஆட்சிக்கு உட்பட்டது | வீற்றா | வீறு (=ஆட்சிசெய், பிரிவு) + ஆ = வீற்றா >>> மிட்டா = ஆட்சி செய்யும் நிலப்பிரிவு. | 
| மிட்டாய் | இனிப்புத் துண்டு உணவு | வீற்றாய் | வீறு (=இனிமை, துண்டு) + ஆய் (=உண்ணு) = வீற்றாய் >>> மிட்டாய் = இனிப்பான துண்டு உணவு. | 
| மிடன் | மகன் | பிறன் | பிற (=தோன்று) + அன் = பிறன் >>> மிடன் = பிறந்தவன். | 
| மிடன் | பிறைச்சந்திரன் | பிறன் | பிறை + அன் = பிறன் >>> மிடன் = பிறைச்சந்திரன் | 
| பிரமாதம் | பெருமை மிக்கது | விறமதம் | விற (=மிகு) + மதம் (=பெருமை) = விறமதம் >>> பிரமாதம் = பெருமை மிக்கது | 
| அற்புதம் | மிக அருமையானது | ஆர்முற்றம் | அருமை + முற்று (=மிகு) + அம் = ஆர்முற்றம் >>> அர்புத்தம் >>> அற்புதம் = மிக அருமையானது | 
| சோமன் | சந்திரன் | சேமன் | (2). செம்மை (=அழகு, ஒளி) + அன் = சேமன் >>> சோமன் = அழகிய ஒளி தருபவன் = சந்திரன். | 
| மித்தம் | தாமதம் | மீற்றம் | மீறு (=கட, நீளு) + அம் = மீற்றம் >>> மித்தம் = நீட்டம் | 
| மித்தம் | ஓய்வு, தூக்கம் | பிந்தம் | பிந்து (=தளர், ஓய்) + அம் = பிந்தம் >>> மித்தம் = ஓய்வு | 
| சயம், செயம் | வெற்றி | சாயம் | சாய் (=வீழ்த்து, வெல்) + அம் = சாயம் >>> சயம் >>> செயம் | 
| மிருத்யு, மிருத்தியு | மரணம், யமன், பகைவன் | பிறிது | பிறிது (=மரணம்) >>> மிருத்யு = மரணம், மரணத்தை உண்டாக்குபவன் = யமன், பகைவன். | 
| மிருத்யுஞ்சயம், மித்திஞ்சயம் | மரணத்தை வெல்லுதல் | பிறிதுச்சயம் | பிறிது (=மரணம்) + சயம் (=வெற்றி) = பிறிதுச்சயம் >>> மிர்த்துஞ்சயம் >>> மித்திஞ்சயம் = மரணத்தை வெல்லுதல். | 
| மித்தியம், மித்தியை | பொய், கோள், வஞ்சனை | புற்றியம் | புற்று (=ஓட்டை) + இயம் (=சொல்) = புற்றியம் >>> முத்தியம் >>> மித்தியம் = ஓட்டையான சொல் = பொய். | 
| சத்தியம் | உண்மை | சாற்றியம் | சாற்று (=அமை, நிலையாக்கு) + இயம் = சாற்றியம் >>> சத்தியம் = நிலையானது; மாறாதது. | 
| மித்திரம், மித்துரு | நட்பு | முற்றீரம் | முற்று (=மிகு, சேர்) + ஈரம் (=அன்பு) = முற்றீரம் >>> மித்திரம் = மிக்க அன்பினால் சேர்ந்து இருத்தல். | 
| மித்திரன் | நண்பன் | மித்திரன் | மித்திரம் (=நட்பு) + அன் >>> மித்திரன் = நட்புடைய ஆண். | 
| மித்திரை | தோழி | மித்திரை | மித்திரம் (=நட்பு) + ஐ >>> மித்திரை = நட்புடைய பெண். | 
| மித்திரம் | பொய், கோள் சொல்லுகை | புற்றிறம் | புற்று (=ஓட்டை) + இறு (=பேசு) + அம் = புற்றிறம் >>> முத்திரம் >>> மித்திரம் = ஓட்டையான பேச்சு. | 
| மித்திரன் | சூரியன் | வீற்றிறன் | வீறு (=ஒளி) + இறு (=கொடு) + அன் = வீற்றிறன் >>> மித்திரன் = ஒளி கொடுப்பவன். | 
| மித்தை | பொய் | புற்றை, பொத்தை | (1). புற்று (=ஓட்டை) + ஐ = புற்றை >>> முத்தை >>> மித்தை = ஓட்டையின் தன்மை கொண்டது. (2) பொத்து (=பொய்) + ஐ = பொத்தை >>> மொத்தை >>> முத்தை >>> மித்தை. | 
| மிதடி | நீர் | மிதாடி | மித + ஆடு + இ = மிதாடி >>> மிதடி = மிதந்து ஆடச்செய்வது | 
| மிதடு, மிதழ் | மூளை | மிதறு | மித + அறி + உ = மிதறு >>> மிதடு = மிதக்கும் அறிவூற்று | 
| மிதம் | நடுநிலை | மிதம் | மித >>> மிதம் = மூழ்கியும் போகாமல் பறந்தும் போகாமல் நடுவில் இருக்கும் நிலை. | 
| மிதலை | கொப்பூழ் | மிதளை | மிதம் (=நடு) + அளி (=ஈனு, பிறப்பி) + ஐ = மிதளை >>> மிதலை = பிறப்புடன் தொடர்புடைய நடுப்பகுதி. . | 
| விவசாயம் | வேளாண்மை | வீமசாயம் | வீமம் (=பருமை) + சாய் (=புல், பயிர்) + அம் = வீமசாயம் >>> விவசாயம் = பெரும் பெயிர் செய்தல். | 
| துரை | பெரியவர் | துறை | (2). துறு (=பெருமை) + ஐ = துறை >>> துரை = பெரியவர். | 
| துர் | கெட்ட | துரு | திரி (=கெடு) >>> துரு >>> துர் = கெட்ட | 
| ரோந்து | ஊரை வலம் வருதல் | ஊரொற்று | ஊர் + ஒற்று = ஊரொற்று >>> உரோத்து >>> ரோந்து = வேவு பார்க்க ஊரை வலம் வருதல். | 
| சங்கு | பூச்சியின் கூடு | சக்கு | அக்கு (=மூடு, எலும்பு) >>> சக்கு >>> சங்கு = உடலை மூடியுள்ள எலும்பு போன்ற ஓடு. | 
| ஆண்டி | ஏதும் அற்றவன் | ஆற்றி | அறு (=இல்லாமல் போ) + இ = ஆற்றி >>> ஆட்டி >>> ஆண்டி = எதுவும் இல்லாமல் போனவன். | 
| மிதி | அறிவு | புத்தி | புத்தி (=அறிவு) >>> முதி >>> மிதி | 
| மிதி | அளக்கப் பட்டது | வீறி | வீறு (=வெட்டு, வரையறு, அள) + இ = வீறி >>> மிதி = வரையறுக்க / அளக்கப் பட்டது. | 
| மிதுனம் | உடலுறவு,ஆண் - பெண் இணை | மைதுனம் | மை (=உடல்) + துன் (= செறி, பொருந்து) + அம் = மைதுனம் >>> மிதுனம் = உடல்கள் செறிந்து பொருந்துதல். | 
| மிதுனி | இரட்டைவால் குருவி | மைதுனி | மை (=கருமை) + துனி (=பிரி, பிள, நுனி, வால்) = மைதுனி >>> மிதுனி = பிளவுபட்ட கரிய நுனியை / வாலைக் கொண்டது. | 
| மிரதம் | பாம்பு | மயிறற்றம் | மை (=நஞ்சு) + இறு (=செலுத்து) + அற்றம் (=அழிவு) = மயிறற்றம் >>> மய்ரத்தம் >>> மைரதம் >>> மிரதம் = நஞ்சைச் செலுத்தி அழிவை உண்டாக்குவது. | 
| மிராசு | பரம்பரைச் சொத்து | முறாயு | முறை (=பரம்பரை) + ஆயம் (=வருவாய், சொத்து) + உ = முறாயு >> மிராசு = பரம்பரையாக வந்த வருவாய் / சொத்து. | 
| மிராண்டி | குகையில் வாழ்ந்தவன் | புராண்டி | புரை (=குகை) + அண்டு (=செறி, தங்கு) + இ = புராண்டி >>> முராண்டி >>> மிராண்டி = குகைகளில் செறிந்து வாழ்ந்தவன். | 
| மிரிநாளம், மிருணாளம், மிருணாலி | தாமரை | வீறுணாலம் | வீறு (=ஒளி, தீ) + உண் (=ஒப்பு) + ஆலம் (=நீர், மலர்) = வீறுணாலம் >>> மிருணாளம் >>> மிரிநாளம் = தீயைப் போலத் தோன்றும் நீரில் பூக்கும் மலர். | 
| மிரியம், மிரியல் | மிளகு | வீறியம் | வீறு (=எரி) + இயம் = வீறியம் >>> வீரியம் >>> மிரியம், மிரியல் = எரிதலைப் போன்ற சுவைகொண்டது. | 
| மிருகம் | செருக்கித் தாக்குவது | வீறூக்கம் | வீறு (=செருக்கு, தாக்கு) + ஊக்கம் (=மிகுதி, கடுமை) = வீறூக்கம் >>> மிருகம் = செருக்கிக் கடுமையாகத் தாக்குவது. | 
| மிருகம் | மான் | வீறுகம் | வீறு (=அழகு, மிகுதி) + உகை (=உயர எழும்பு) + அம் = வீறுகம் >>> மிருகம் = மிக உயரமாக எழுகின்ற அழகு மிக்க விலங்கு. | 
| மிருகம் | பன்றி | வீறுகம் | வீறு (=வெட்டு, பிள) + உகம் (=பூமி, நிலம்) = வீறுகம் >>> மிருகம் = நிலத்தைப் பிளக்கின்ற விலங்கு. | 
| மிருகம் | யானை | வீறூகம் | வீறு (=வலிமை, மிகுதி, பெருமை) + ஊகம் (=கருமை) = வீறூகம் >>> மிருகம் = வலிமை மிக்க பெரிய கருப்பு விலங்கு. | 
| மிருகம் | பாம்பு | வீறுகம் | வீறு (=சின, தாக்கு, நஞ்சு) + உகை (=செலுத்து) + அம் = வீறுகம் = சினந்து தாக்கி நஞ்சைச் செலுத்துவது. | 
| மிருகதரன் | சந்திரன் | வீறுகைதாரன் | வீறு (=ஒளி) + உகை (=செலுத்து) + தாரம் (=வெண்மை) + அன் = வீறுகய்தாரன் = மிருகதரன் = வெண்ணிற ஒளியைச் செலுத்துபவன். | 
| மிருகம் | வேட்டை | புருகம் | புரை (=வலை) + உகை (=பதி, செறியச்செய்) + அம் = புருகம் >>> முருகம் >>> மிருகம் = வலைக்குள் செறித்தல். | 
| மிருகாங்கம் | சந்திரன் | வீறுகாங்கம் | வீறு (=இனிமை, ஒளி) + உகை (=செலுத்து) + அங்கம் (=உடல்) = வீறுகாங்கம் >>> மிருகாங்கம் = இனிய ஒளியைச் செலுத்தும் உடலைக் கொண்டவன். | 
| மிருகாங்கம் | காற்று | விருகங்கம் | விரை (=ஓடு) + உகு (=பற, நிலைகுலை) + அங்கம் = விருகங்கம் >>> மிருகாங்கம் = நிலைகுலைந்து பறந்தோடும் உடலைக் கொண்டது. | 
| மிருகாதி, மிருகாரி | புலி | விருகாறி | விரை (=பாய்) + உகை (=உயர எழு) + அறு (=கொல்) + இ = விருகாறி >>> மிருகாதி, மிருகாரி = உயர எழுந்து பாய்ந்து கொல்லக் கூடியது. | 
| மிருசகம் | எலுமிச்சை | வீறுசகம் | வீறு (=அறு, ஒளி, அழகு) + சகம் (=சாறு, பாதி) = வீறுசகம் >>> மிருசகம் = பாதியாக அறுக்கப்படுவதும் ஒளியுடன் கூடிய அழகும் கொண்ட சாறுடைய பழம். | 
| சாகம், சகம் | சாறு | சாக்கம் | ஆக்கம் (=நீர்) >>> சாக்கம் >>> சாகம், சகம் = சாறு. | 
| மிருசம் | காட்சி | வீறுயம் | வீறு (=ஒளி) + உய் (=அனுபவி, அறி) + அம் = வீறுயம் >>> மிருசம் = ஒளியால் கிட்டும் அனுபவ அறிவு. | 
| மிருசு | தேனீ | விருயு | விரை (=தேன், பற) + உய் (=பிரி, கொண்டுசெல்) + உ = விருயு >>> மிருசு = தேனைப் பிரித்துக் கொண்டுசெல்லும் பறவை. | 
| மிருட்டி | சமையல் | முறூட்டி | முறை (=தன்மை) + ஊட்டம் (=உணவு) + இ = முறூட்டி >>> மிருட்டி = உணவைத் தன்மையாக்குதல்.. | 
| மிருட்டி | அசுத்தம் | புரூறி | புரை (=குற்றம், களங்கம்) + ஊறு (=கேடு) + இ = புரூறி >>> முருடி >>> மிருட்டி = கேடு உறச்செய்யும் களங்கப் பொருள். | 
| மிருட்டி | நெருக்கம், செறிவு | விறுறி | விற (=செறி) + உறு (=சேர்) + இ = விறுறி >>> மிருடி >>> மிருட்டி = சேர்ந்து செறிதல். | 
| மிருட்டேருகன் | பெருங் கொடையாளன் | வீறூட்டேறுகன் | வீறு (=பொருள்) + ஊட்டு (=வழங்கு) + ஏறு (=மிகு) + உக (=விரும்பு) + அன் = வீறூட்டேறுகன் >>> மிருட்டேருகன் = பொருள் வழங்குவதனை மிகவும் விரும்புபவன். | 
| மிருடங்கனம் | குழந்தை | வீறுறாக்கணம் | வீறு (=பிரி) + உறு (=பெறு) + ஆக்கம் (=படைப்பு) + அணம் = வீறுறாக்கணம் >>> மிருடங்கனம் >>> பிரித்துப் பெற்ற படைப்பு | 
| மிருடாகம் | மாமரம் | வீறூட்டாக்கம் | வீறு (=ஒளி, அழகு, மிகுதி) + ஊட்டம் (=உணவு) + ஆக்கு (=படை) + அம் = வீறூட்டாக்கம் >>> மிருடாகம் = ஒளிமிக்க அழகிய உணவினை மிகுதியாகப் படைப்பது. | 
| மிருடார்த்தகம் | உள்ளே எதுவும் இல்லாதது | புருடாருத்தகம் | புருடா (=பொய்) + அருத்தம் (=பொருள்) + அகம் (=உள்) = புருடாருத்தகம் >>> மிருடார்த்தகம் = உள்ளே பொய்யான பொருளைக் கொண்டது. | 
| மிருடாவாதம் | வஞ்சகப் புகழ்ச்சி | புருடாவாழ்த்தம் | புருடா (=பொய்) + வாழ்த்து + அம் = புருடாவாழ்த்தம் >>> முருடாவாய்த்தம் >>> மிருடாவாதம் = பொய்யான வாழ்த்து | 
| மிருடிகம், மிருடி | மான் | விருறிகம் | விரை (=வேகமாக ஓடு) + உறு (=மிகுதி) + இகம் (=உடல்) = விருறிகம் >>> மிருடிகம் = மிக விரைவாக ஓடும் உடலினது | 
| மிருடோத்தியம் | பொய் | புருடோற்றியம் | புருடா (=பொய்) + உறு + இயம் = புருடோற்றியம் >>> மிருடோத்தியம் = பொய்யானது. | 
| மிருத்தனம் | உவர்மண் | புருத்தாணம் | புரை (=களங்கம்) + உத்து (=நீக்கு) + ஆணம் (=மண்) = புருத்தாணம் >>> முருத்தனம் >>> மிருத்தனம் = களங்கத்தை நீக்குகின்ற ஒருவகை மண். | 
| மிருத்தாலகம் | உவர்மண் | புருத்தைலகம் | புரை (=களங்கம்) + உத்து (=நீக்கு) + தைலம் (=எண்ணெய்) + அகம் (=இடம், மண்) = புருத்தைலகம் >>> முருத்தய்லகம் >>> மிருத்தாலகம் = எண்ணெயில் உள்ள களங்கத்தை நீக்க உதவுகின்ற மண். . | 
| மிருத்திகம் | கொடிமுந்திரி | விறுந்திகம் | விற (=செறி) + உந்து (=பெருகு) + இகு (=தொங்கு) + அம் (=உணவு) = விறுந்திகம் >>> மிருத்திகம் = செறிந்து பெருகித் தொங்குகின்ற உணவுப் பொருள். | 
| மிருத்திகை, மிருத்தியம் | மண், நிலம் | விருந்திகை | விரை (=விதை) + உந்து (=தோன்று, பிற) + இகை = விருந்திகை >>> மிருத்திகை = விதையில் பிறக்கச் செய்வது. | 
செவ்வாய், 28 ஜூலை, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம் - பகுதி 40
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
