புதன், 12 ஆகஸ்ட், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 42

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றிய முறையும்

முதிதம், முதிதை

மகிழ்ச்சி

வீறிதம்

வீறு (=இன்பம்) + இதம் (=நன்மை) = வீறிதம் >>> மிதிதம் >>> முதிதம் = நன்மை தரும் இன்பம்.

முதிசம்

பூர்விகச் சொத்து

முதீயம்

முதுமை (=பழமை, பூர்விகம்) + ஈ (=கொடு) + அம் = முதீயம் >>> முதிசம் = பூர்விகமாகக் கொடுக்கப்பட்டது.

முதிரம்

மேகம்

பிதிரம்

பிதிர் (=மழை) + அம் = பிதிரம் >>> மிதிரம் >>> முதிரம் = மழையைத் தருவது.

முதிரன்

இன்பமிகையா லழிந்தவன்

வீற்றிறன்

வீறு (=மிகுதி, இன்பம்) + இறு (=கெடு) + அன் = வீற்றிறன் >>> மித்திரன் >>> முதிரன் = மிக்க இன்பத்தால் கெட்டுப்போனவன்.

சமாதி

இறந்தவர் வாழ்விடம்

சாவதி

சா (=இற) + வதி (=தங்கு, உறை) = சாவதி >>> சமாதி = இறந்தவரின் உறைவிடம்.

முந்திரிகை

திராட்சை

முத்தீரிகை

முத்து (=சேர், திரள், பழு, உருண்டை) + ஈர் (=இனிமை) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = முத்தீரிகை >>> முந்திரிகை = திரண்டு தாழ்வாகத் தொங்குகின்ற இனிய உருண்டையான பழம்.

முமுட்சு, முமூட்சு, முமூடம்

முழுமையான துறவு

மூழ்வீற்று

முழுமை + வீறு (=நீக்கு, துற) + உ = மூழ்வீற்று >>> முய்மீட்டு >>> முமூட்டு >>> முமூட்சு, முமூடம் = முழுமையாகத் துறத்தல்.

முயலாக்கிரம்

உலக்கையின் தலை

முயலாக்கரம்

முயலம் (=உலக்கை) + அகரம் (=தலை) = முயலாக்கரம் >>> முயலாக்கிரம் = உலக்கையின் தலை.

முரதம்

சங்கு

முரற்றம்

முரற்று (=ஒலிக்கச்செய்) + அம் (=நீர்) = முரற்றம் >>> முரத்தம் >>> முரதம் = ஒலிக்கப்படுகின்ற நீர்பெறு பொருள் = சங்கு.

முரப்பா, முரபா

காரமான பாகுணவு

வீறுபாகு

வீறு (=காரம், துண்டு) + பாகு (=உணவு) = வீறுபாகு >>> மிரப்பாகு >>> முரப்பா, முரபா = காரமான பாகுநிலை உணவுத் துண்டு.

முரளி

புல்லாங்குழல்

முரலி

முரல் (=நீட்டி ஒலி) + இ = முரலி >>> முரளி = நீட்டி ஒலிக்கப் படுவது = புல்லாங்குழல்.

முலாகத்து, முலாகாத்

கண்களால் சந்திப்பு

புல்லாகத்து

புல் (=சந்தி) + ஆகம் (=கண்) + அத்து (=பொருந்து) = புலாகத்து >>> முலாகத்து = கண்களால் பொருந்தி சந்தித்தல்.

முலாஞ்சனை

தயவு

புலாயாணை

புல் (=பொருந்து) + ஆய் (=மென்மை) + ஆணம் (=அன்பு) + ஐ = புலாயாணை >>> முலாஞ்சனை = அன்பும் மென்மையும் பொருந்தியது.  

முலாம்

பூச்சு

புல்லம்

புல்லு (=ஒட்டு, பூசு) + அம் = புல்லம் >>> முலாம் = பூச்சு

முச்`தீபு, முச்`திப்பு

ஏற்பாடு செய்கை

முத்துபி

முற்றுவி (=நடத்து, நிகழ்த்து) >>> முத்துவி >>> முத்தீபு >>> முச்`தீபு, முச்`திப்பு = நடத்துகை, நிகழ்த்துகை, ஏற்பாடு செய்கை

மூக்கம்

சினம்

பூக்கம்

புகை (=சின) + அம் = பூக்கம் >>> மூக்கம் = சினம்

மூகம்

தியானம்,  ஊமை

மூழ்கம்

மூழ்கு (=ஆழ், ஒடுங்கு) + அம் = மூழ்கம் >>> மூகம் = ஆழ்ந்த நிலை = தியானம், மௌனம், ஊமை.

மூகம்

வறுமை

பொக்கம்

பொக்கு (=வெறுமை) + அம் = பொக்கம் >>> புக்கம் >>> மூகம் = ஒன்றும் இல்லாமை = வறுமை

மூகம்

பேய்

போக்கம்

போக்கு (=மரணம்) + அம் = போக்கம் >>> பூக்கம் >>> மூகம் = மரணம் அடைந்தது = பேய்.

மூகை

கூட்டம், ஈரல்குலை

வீங்கை

வீங்கு (=திரள், கூடு) + ஐ = வீங்கை >>> மீக்கை >>> மூகை = கூட்டம், திரள்., ஈரக்குலை.

மூச்சை

மயக்கம்

மையை

மையா (=மயங்கு) + ஐ = மையை >>> மிசை >>> மூச்சை = மயக்கம்.

மூசாந்தம்

தாமரை

மூயந்தம்

மூய் (=மூடு) + அந்தி (=மாலை) + அம் (=நீர்) = மூயந்தம் >>> மூசாந்தம் = மாலையில் மூடிக் கொள்ளும் நீர்ப்பூ.

மூசாப்பு

மந்தாரம்

விசும்பு, மூயாப்பு

(1). விசும்பு (=மேகம்) >>> மிசுப்பு >>> மூசாப்பு = மேகத் திரள். (2). மூய் (=மறை) + ஆப்பு = மூயாப்பு >>> மூசாப்பு = மறைப்பு.

மூசாப்பு

மூச்சுத் திணறல்

மூச்சவு

மூச்சு + அவி (=அடங்கு) + உ = மூச்சவு >>> மூசாப்பு = மூச்சு அடங்குதல், மூச்சுத் திணறல்.

மூசாலை

சோம்பல்

முசளை

முசி (=சோர்) + அள் (=மிகுதி) + ஐ = முசளை >>> மூசாலை = மிகுதியான சோர்வு.

மூசாலை

அறியாமை

மூயாளை

மூய் (=மூடு, மறை) + ஆள் (=ஆளுமை) + ஐ = மூயாளை >>> மூசாலை = அறிவு மூடப்பட்ட ஆளுமை

மூசை

குப்பி

பிழா

பிழா (=குப்பி) + ஐ = பீழை >>> மீசை >>> மூசை

மூடனம்

மிளகு

மூட்டன்னம்

மூட்டம் (=தீ) + அன்ன (=போல) + அம் (=உணவு) = மூட்டன்னம் >>> மூடனம் = தீயைப் போல எரியும் உணவு.

மூசிகம், மூடிகம்

எலி

மூயிங்கம்

மூய் (=மறை, மொய்) + இங்கு (=தங்கு) + அம் = மூயிங்கம் >>> மூசிகம் = மறைவில் தங்குவதும் மொய்ப்பதுமான உயிரி.

மூண்டன்

மிளகு

மூட்டன்

மூட்டம் (=தீ) + அன் = மூட்டன் >>> மூண்டன் = தீயைப் போல எரிகின்ற உணவு.

மூத்திரம்

சிறுநீர்

முற்றிரம்

(2). முறி (=தன்மைமாறு, கெடு) + இரி (=ஓடு, கழி) + அம் (=நீர்) = முற்றிரம் >>> மூத்திரம் = தன்மைமாறிக் கெட்டுப்போன கழிவுநீர்

மூதம்

விந்து

வித்து

(1). வித்து + அம் = வித்தம் >>> மிதம் >>> மூதம். (2). முற்று (=தங்கு, பெருகு, முழுவளர்ச்சி பெறு) + அம் (=நீர்) = முற்றம் >>> முத்தம் >>> மூதம் = தங்கிப் பெருகி முழுவளர்ச்சி பெறும் நீர்

மூர்க்கம், மூர்க்கை

சினம்

முறுக்கம்

முறுக்கு (=சின) + அம் = முறுக்கம் >>> மூர்க்கம் = சினம்

மூர்க்கம்

பகை

முறுக்கம்

முறுக்கு (=மாறுபாடு) + அம் = முறுக்கம் >>> மூர்க்கம் = பகை

மூர்க்கம், மூர்க்கை

அறியாமை

முறுக்கம்

முறுக்கு (=பொதி, கட்டு) + அம் = முறுக்கம் >>> மூர்க்கம் = கட்டுண்ட அறிவு = அறியாமை.

மூர்க்கம், மூர்க்கு

பிடிவாதம், செருக்கு

முறுக்கம்

முறுக்கு (=செருக்கு) + அம் = முறுக்கம் >>> மூர்க்கம் = செருக்கு, பிடிவாதம்.

மூர்க்கம், மூர்க்கை

வலிமை, கடுமை

முறுக்கம்

முறுக்கு (=கடுமை, வலிமை) + அம் = முறுக்கம் >>> மூர்க்கம்

மூர்க்கம், மூர்க்கன்

பாம்பு

வீறுகம்

வீறு (=நஞ்சு) + உகு (=உமிழ்) + அம் = வீறுகம் >>> மீறுகம் >>> மூர்க்கம் = நஞ்சினை உமிழ்வது.

மூர்ச்சனம், மூர்ச்சை, மூர்ச்சிதம்

மயக்கம், அறியாமை

பிறழணம்

பிறழ் (=கலங்கு, மயங்கு) + அணம் = பிறழணம் >>> மிரசனம் >>> மூர்ச்சனம், மூர்ச்சனை, மூர்ச்சை, மூர்ச்சிதம் = மயக்கம், அறிவின் மயக்கம் = அறியாமை.

மூர்ச்சி

மயங்கு

பிறழி

பிறழ் (=மயங்கு) >>> பிறழி >>> மிரசி >>> மூர்ச்சி

மூர்ச்சை

கூர்மை

புரியை

புரி (=மொட்டு) + இயை = புரியை >>> முரிசை >>> மூர்ச்சை = மொட்டைப் போன்ற இயல்பு = கூர்மை.

மூர்த்தகோலம்

வெண்குடை

முருந்தகோலம்

முருந்தம் (=வெண்மை) + கோலு (=வளை, கவி) + அம் = முருந்தகோலம் >>> மூர்த்தகோலம் = வெண்ணிறத்தில் வளைத்துக் கவிக்கப்படுவது.

மூர்த்தம், மூர்த்தினி

தலை

புருந்தம்

புரி (=அறி, இடம்) + உந்து (=தோன்று) + அம் = புருந்தம் >>> மூர்த்தம் = அறிவு தோன்றும் இடம்.

மூர்த்தம், மூர்த்தி

உடல், வடிவப் பொருள்

புருந்தம்

புரி (=தோன்று) + உந்து (=வளர்) + அம் = புருந்தம் >>> மூர்த்தம் = தோன்றி வளர்வது = உடல்.>>> வடிவம் கொண்டது.

மூர்த்தி

கடவுள்

விருந்தி

விரை (=உயிர்) + உந்து (=படை, தோற்றுவி) + இ = விருந்தி >>> மிருத்தி >>> மூர்த்தி = உயிர்களைப் படைப்பவன்

மூர்த்தி

தலைவன்

மூருந்தி

மூரி (=வலிமை, பெருமை) + உந்து (=பெருகு, மிகு) + இ = மூருந்தி >>> மூர்த்தி = வலிமையும் பெருமையும் மிக்கவன்.

மூர்த்தி

வடிவம், மாதிரி

புருந்தி

புரி (=தோன்று) + உந்து (=படை) + இ = புருந்தி >>> மூர்த்தி = படைப்பின் தோற்றம் = வடிவம்.

மூலகம்

கிழங்கு

மூளகம்

முளை (=தோன்று) + அகம் (=உள், பூமி, உணவு) = மூளகம் >>> மூலகம் = பூமியின் உள்ளே தோன்றும் உணவு.

மூலம், மூலி

மரம், செடி. கொடி

மூளம்

முளை (=தோன்று) + அம் = மூளம் >>> மூலம் = தோன்றியது = மரம், செடி, கொடி

மூலம்

வேர்

பீளம்

பிள (=ஊடுருவு, உட்புகு) + அம் = பீளம் >>> மீலம் >>> மூலம் = ஊடுருவிச் செல்வது.

மூலம்

கிழங்கு

பீளம்

பிள (=தோண்டு) + அம் (=உணவு) = பீளம் >>> மீலம் >>> மூலம் = தோண்டப்படும் உணவு.

மூலம்

அடிப்படை, காரணம்

புலம்

புலம் (=நிலம், அடி) >>> முலம் >>> மூலம் = அடிப்படை, காரணம்.

மூலம்

சொந்தம், நெருக்கம்

புல்லம்

புல்லு (=பொருந்து, நெருங்கு) + அம் = புல்லம் >>> மூலம் = பொருந்தியோர், நெருக்கம்

மூலம்

பாதரசம்

போலம்

பொலி (=வெண்மை) + அம் (=நீர்) = போலம் >>> பூலம் >>> மூலம் = வெண்ணிற நீர்மப் பொருள்.

மூலிகை, மூலி

படர்கொடி

மூளிகை

முளை (=தோன்று) + இக (=பரவு, ஓடு) + ஐ = மூளிகை >>> மூலிகை = தோன்றிப் பரவி ஓடுவது = கொடி.

மூலியம்

விலை

விலையம்

விலை + அம் = விலையம் >>> மிலியம் >>> மூலியம்

மூலை

பிளவு, வீடு

பீளை

பிள + ஐ = பீளை >>> மீலை >>> மூலை = பிளவு = வீடு.

மூனாயம்

குற்றம் கண்டறிதல்

பூனாயம்

புன்மை (=குற்றம்) + ஆய் (=கண்டறி) + அம் = பூனாயம் >>> மூனாயம் = குற்றம் கண்டறிதல்

மூச^பர்

உயர்வு, பெருமை

மூசமர்

மிசை (=மேல்) + அமர் (=இரு, நிலை) = மீசமர் >>> மூச^பர் = மேல் நிலை = உயர்வு, பெருமை

மெகனத்து

உடல் உழைப்பு

மெய்கணாற்று

மெய் (=உடல்) + கண் (=இடம்) + ஆற்று (=செய்) = மெய்கணாற்று >>> மெகனத்து = உடலை இடமாய்க் கொண்டு செய்தல்.

வெந்தயம், மெந்தியம், மேத்தி, மேந்தி

சிறிய தானியம்

வித்தாயம்

விதை + ஆய் (=சிறுமை, வலிமை) + அம் (=உணவு) = வித்தாயம் >>> வெந்தயம் >>> மெந்தியம் >>> மேத்தி >>> மேந்தி = வலிமைமிக்க சிறிய விதை உணவு.

மெய்ப்பிரம்

மேகம்

பெய்ப்பேரம்

பெய் (=பொழி) + பேரை (=நீர்) + அம் = பெய்ப்பேரம் >>> மெய்ப்பிரம் = நீரைப் பொழிவது.

மேக்கு

ஆப்பு

போக்கு

போக்கு (=உட்செலுத்து) >>> மோக்கு >>> மேக்கு = உள்ளே செலுத்தப் படுவது

மேகசம்

முத்து

பிகாயம்

பிகு (=வலிமை) + ஆய் (=ஒளி, வெண்மை, சிறுமை) + அம் = பிகாயம் >>> மிகசம் >>> மேகசம் = வலிமையான வெண்ணிற சிறிய ஒளிர்பொருள்.

மேகசாரம்

கற்பூரம்

வேகாயாரம்

வேகு (=எரி) + ஆய் (=ஒளி, வெண்மை) + ஆரம் (=வட்டம்) = வேகாயாரம் >>> மேகசாரம் = எரிந்து ஒளிதரும் வெண்ணிற வட்டப் பொருள்.

மேகம்

முகில்

வெஃகம்

வெஃகு (=கவர், விரும்பு) + அம் (=நீர்) = வெஃகம் >>> மேகம் = நீரை விரும்பிக் கவர்வது.

மேகலை

நெற்றியின் அணி

மேகலை

மே (=மேலிடம், நெற்றி) + கலம் (=அணி) + ஐ = மேகலை = மேலிடம் ஆகிய நெற்றியில் அணியப்படுவது.

மேகலை

ஆடை

மெய்கலை

மெய் (=உடல்) + கலம் (=அணி) + ஐ = மெய்கலை >>> மேகலை = உடலில் அணியப்படுவது = ஆடை.

மேகவாய்

தயிர்

பிகமாய்

பிகு (=கெட்டியாகு) + அம் (=உணவு) + ஆய் (=வெண்மை) = பிகமாய் >>> மிகவாய் >>> மேகவாய் = கெட்டியான வெண்ணிற உணவுப் பொருள்.

மேகை

மாமிசம்

மெயிகை

மெய் (=உடல்) + இகு (=கொல்) + ஐ = மெயிகை >>> மேகை = கொல்லப்பட்ட உடல் = மாமிசம்.

மேங்கா

படகு

மையிகா

மை (=நீர்) + இக (=கட) + ஆ = மையிகா >>> மேகா >>> மேங்கா = நீரைக் கடக்க உதவுவது.

மேசகம், மேசகை

இருள், கருமை

மையகம்

மை (=கருநிறம்) + அகம் = மையகம் >>> மேசகம் = கருநிறம் கொண்டது =

மேசகம்

மேகம்

மையகம்

மை (=கருமை, நீர்) + அகம் = மையகம் >>> மேசகம் = நீரை அகத்தே கொண்ட கருநிறப் பொருள்.

மேசகம்

புகை

மையகம்

மை (=தூசு) + அகை (=எரி) + அம் = மையகம் >>> மேசகம் = எரியும்போது எழுகின்ற தூசு.

மேசகம்

விரிந்த மயில் தோகை

பையாகம்

பை (=விரி, மிகு, அழகு) + ஆகம் (=கண்) = பையாகம் >>> பேசாகம் >>> மேசகம் = விரிக்கப்பட்ட அழகிய பல கண்கள்.

மேசை

உயரமாகச் செதுக்கியது

மீயிழை

மீ (=மேல், உயரம்) + இழை (=செதுக்கு, செய்) = மீயிழை >>> மேசை = உயரமாகச் செதுக்கிச் செய்யப்பட்டது.

மேச்`திரி

திறன் மிக்கவன்

மேத்திறி

மே + திறமை + இ = மேத்திறி >>> மேச்`திரி = மேலான திறமை உடையவன்.

மேடம், மேண்டம்

ஆடு

வெட்டம்

வெட்டு (=பிள, கொல்) + அம் (=உண்ணு) = வெட்டம் >>> மேண்டம் >>> மேடம் = வெட்டிக் கொன்று உண்ணப்படுவது.

மேடகம்

ஆடு

வெட்டாக்கம்

வெட்டு (=பிள, கொல்) + ஆக்கம் (=உணவு) = வெட்டாக்கம் >>> மேடகம் = வெட்டிக் கொன்று உண்ணப்படுவது.

மேடம்

கவசம்

மூடம்

மூடு (=மறை) + அம் = மூடம் >>> மேடம் = மறைப்பு தருவது

மேத்தியம்

பரிசுத்தம்

வீற்றியம்

வீறு (=அழகு, ஒளி) + ஈ (=தா) + அம் = வீற்றீயம் >>> மீத்தியம் >>> மேத்தியம் = அழகு / ஒளி தருவது.

மேத்திரம்

ஆட்டுக்கடா

வீற்றிறம்

வீறு (=வெட்டு) + இறு (=கொல்) + அம் (=உண்ணு) = வீற்றிறம் >>> மீத்திரம் >>> மேத்திரம் = வெட்டிக் கொன்று உண்ணப்படுவது

மேதகம்

கோமேதகம்

வீறகம்

வீறு (=கீறு, அழகு, ஒளி, துண்டு) + அகை (=எரி) + அம் = வீறகம் >>> மீதகம் >>> மேதகம் = தீயைப் போன்ற ஒளியும் அழகும் கொண்ட கீறல்மிக்க துண்டுப் பொருள்.

மேதசு, மேதை, மேதம்

கொழுப்பு

மேதாயு

மெது (=மென்மை) + ஆய் (=வெண்மை, உண்ணு) + உ = மேதாயு >>> மேதசு = மென்மையும் வெண்மையும் கொண்ட உணவு.

மேதம்

யாகம்

வீறம்

வீறு (=தீ, எரி) + அம் (=உணவு) = வீறம் >>> மீதம் >>> மேதம் = தீயில் உணவுப் பொருட்களை இட்டு எரித்தல்.

மேதம்

கொலை

வீறம்

வீறு (=வெட்டு, கொல்) + அம் = வீறம் >>> மீதம் >>> மேதம்

மேதரம்

மலை

மேதரம்

மே (=மேல், உயர்வு) + தரை (=நிலம், பூமி) + அம் = மேதரம் = உயர்வான நிலம் = மலை.

மேதரம்

மூங்கில்

மேதரம்

மே (=மேல், உயரம்) + தரு (=மரம்) + அம் = மேதரம் = உயரமான மரம் = மூங்கில்.

மேதி

நெற்களம்

மிதி

மிதி (=உழக்கு) >>> மேதி = நெற்கதிர்களை உழக்கும் இடம்.

மேதி

எருதுகளைக் கட்டுமிடம்

விதி

விதி (=கட்டுப்படுத்து) >>> மிதி >>> மேதி = கட்டிவைக்கும் இடம்

மேதினி

பூமி

மெய்திணி

மெய் (=உயிர்) + திணை (=வீடு) + இ = மெய்திணி >>> மேதினி = உயிர்களுக்கான வீடு = பூமி. 

மேதை

அறிவு, அறிவாளி

வீறை

வீறு (=ஒளி) + ஐ = வீறை >>> மீதை >>> மேதை = ஒளியைக் கொண்டது = அறிவு., அறிவாளி.

மேதை

கள்

பேதை

பேது (=மயக்கம்) + ஐ = பேதை >>> மேதை = மயக்கம் தருவது

மேதை

மாமிசம், தசை

வீறை

வீறு (=வெட்டு, கொல்) + ஐ = வீறை >>> மீதை >>> மேதை = வெட்டிக் கொல்லப்பட்டது.

மேதை

தோல்

மெய்த்தை

மெய் (=உடல்) + தை (=அணி, மூடு) = மெய்த்தை >>> மேதை = உடலை மூடியிருப்பது.

மேதை

நரம்பு

மெய்த்தை

மெய் (=உடல்) + தை (=பிணி, பின்னு) = மெய்த்தை >>> மேதை = உடலைப் பின்னியிருப்பது.

மேதோசம்

எலும்பு

மேதோழம்

மேதை (=தசை) + ஊழ் (=வலிமை) + அம் = மேதோழம் >>> மேதோசம் = தசைக்கு வலிமை சேர்ப்பது.

மேயம்

அளத்தற்கு உரியது

வேயம்

வேய் (=அறி, அள) + அம் = வேயம் >>> மேயம் = அளத்தற்கு உரியது, அறியத் தக்கது

மேரு

மலை

மேலு

மேல் (=மேலிடம்) + உ = மேலு >>> மேரு = உயர்ந்த இடம்.

மேரு

உச்சி

மேலு

மேல் (=தலை) + உ = மேலு >>> மேரு = தலை, உச்சி.

மேரு

நீர்க்குப்பி

பேரு

பேரை (=நீர்) + உ = பேரு >>> மேரு = நீரைக் கொண்டது.

மேருகம்

வாசனைப் பொருள்

வீருகம்

விரை (=நறுமணம்) + உகு (=வெளியிடு) + அம் = வீருகம் >>> மீருகம் >>> மேருகம் = நறுமணத்தை வெளியிடுவது.

மேரை

எல்லை

வீறை

வீறு (=பிரி) + ஐ = வீறை >>> மீரை >>> மேரை = பிரிப்பது

மேரை

மரியாதை, பெருமை

வீறை

வீறு (=பெருமை) + ஐ = வீறை >>> மீரை >>> மேரை = பெருமையைத் தருவது.

மேரை

அடக்கம்

வீறை

வீறு (=வளை, பணி) + ஐ = வீறை >>> மீரை >>> மேரை = பணிவு, அடக்கம்.

மேரை, மேர்வை

பங்கு

வீறை

வீறு (=பிரி, பங்கிடு) + ஐ = வீறை >>> மீரை >>> மேரை = பங்கிடப் பட்டது.

மேரக்காலி

பேய், பிசாசு

வீறாக்காலி

வீறு (=பிள) + ஆ + கால் + இ = வீறாக்காலி >>> மேரக்காலி = பிளவுபடாத ஒற்றைக் காலுடையவை.

மேலனம், மேளனம்

பழக்கம், கூட்டம், கலப்பு

பயிலணம்

பயில் (=கூடு, கல, பழகு) + அணம் = பயிலணம் >>> பைலனம் >>> பேலனம் >>> மேலனம், மேளனம் = பழக்கம், கூட்டம், கலப்பு.

மேழகம், மேழம்

கவசம்

மூழாகம்

மூழ் (=மூடு, மறை) + ஆகம் (=உடல்) = மூழாகம் >>> மேழகம் = உடலை மூடுவது / மறைப்பது.

மேழகம், மேழம், மேசம்

ஆடு

பேழாக்கம்

பேழ் (=பிள, வெட்டு, கொல்) + ஆக்கம் (=உணவு) = பேழாக்கம் >>> மேழகம் = வெட்டிக் கொன்று பெறும் உணவு.

மேழி

கலப்பை

பேழி

பேழ் (=பிள, கீறு) + இ = பேழி >>> மேழி = நிலத்தைக் கீறுவது

மேளம்

ஒலி, ஒலிக்கருவி

மெல்லம்

மெல்லம் (=ஒலி) >>> மேலம் >>> மேளம் = ஒலி, ஒலியை எழுப்பும் கருவி.

மேளம்

மருந்துக் கலவை

பயிலம்

பயில் (=கல, கூடு) + அம் (=உணவு, மருந்து) = பயிலம் >>> பைலம் >>> பேலம் >>> மேளம் = மருந்துக் கலவை

மேளம்

பேருணவு

மேலம்

மேல் (=மிகுதி) + அம் (=உணவு) = மேலம் >>> மேளம் = மிகுதியான உணவு.

மேளி

கூட்டு

பயிலி

பயில் (=கூடு) + இ = பயிலி >>> பைலி >>> பேலி >>> மேளி = கூட்டு.

ஆன்மீகம்

அன்பைக் கொடுப்பது

அன்பீகம்

அன்பு + ஈகை (=கொடை) + அம் = அன்பீகம் >>> ஆன்மீகம் = அன்பைக் கொடையாகக் கொடுப்பது.

மேனாதம்

ஆடு

மேனறம்

மேனி (=உடல்) + அறு (=வெட்டு) + அம் (=உண்ணு) = மேனறம் >>> மேனாதம் = உடலை வெட்டி உண்ணப்படுவது.

மேனாதம்

பூனை

மென்னாதம்

மெல் (=மென்மை) + நாதம் (=ஒலி) = மென்னாதம் >>> மேனாதம் = மென்மையான ஒலியை எழுப்புவது.

ஆத்திகம்

கடவுள் இருப்புக் கொள்கை

அத்திங்கம்

அத்து (=இரு) + இங்கம் (=அறிவு, கொள்கை) = அத்திங்கம் >>> ஆத்திகம் = இருப்புக் கொள்கை

நாத்திகம்

கடவுள் இன்மைக் கொள்கை

நத்திங்கம்

நந்து (=இல்லாகு) + இங்கம் (=கொள்கை) = நந்திங்கம் >>> நாத்திகம் = இன்மைக் கொள்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.