வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம் - பகுதி 44

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றிய முறையும்

யானம்

வாகனம்

இயாணம்

இய (=செல், பயணி) + ஆணம் (=பற்றுக்கோடு) = இயாணம் >>> யானம் = பயணத்திற்கான பற்றுக்கோடு = வாகனம்

யானம்

மரக்கலம்

இயான்னம்

இய (=செல், கட) + அன்னம் (=நீர்) = இயான்னம் >>> யானம் = நீரைக் கடக்க உதவுவது.

யானம்

சிவிகை

இயணம்

இய (=செல், பயணி) + அணை (=முட்டு, தாங்கல், உதவி) + அம் = இயணம் >>> யானம் = பிறர் தாங்கலுடன் பயணிப்பது.

யானம்

பயணம்

இயணம்

இய (=செல், பயணி) + அணம் = இயணம் >>> யானம் = பயணம்

யானம்

கள்

இழன்னம்

இழி (=தாழ்) + அன்னம் (=உணவு, நீர்) = இழன்னம் >>> இயனம் >>> யானம் = தாழ்வை உண்டாக்கும் நீருணவு.

யானம்

அறை

ஈயாணம்

ஈ (=வகு) + ஆணம் (=வீடு) = ஈயாணம் >>> யானம் = வீட்டின் வகுப்பு = அறை.

யுக்தம், யுக்தி

பொருத்தம், தகுதி

ஊக்கம்

உக (=பொருந்து) + அம் = ஊக்கம் >>> யூக்கம் >>> யுக்தம் = பொருத்தம், தகுதி.

யுக்தம்

முடிவு

ஊக்கம்

உகு (=சாவு, முடி) + அம் = ஊக்கம் >>>யூக்கம் >>>யுக்தம் = முடிவு

யுக்தி

சூழ்ச்சி, ஆய்வு

ஊக்கி

ஊக்கம் (=எண்ணம்) + இ = ஊக்கி >>> யுக்கி >>> யுக்தி = எண்ணம், சூழ்ச்சி, உபாயம், ஆய்வு.

யுக்மம், யுகம்

இரட்டை, இணை

உகவம்

உக (=பொருந்து, இணை) + அம் = உகவம் >>> யுகமம் >>> யுக்மம் = இணை, சோடி, இரட்டை.

யுகம்

காலம்

உகம்

உகு (=கழி, முடி) + அம் = உகம் >>> யுகம் = கழியும் இயல்பினது

யுகம்

ஏர்

உகம்

உகை (=பூமி, பதி, செலுத்து) + அம் = உகம் >>> யுகம் = பூமியில் பதித்துச் செலுத்தப்படுவது.

யுகம், யுகை

பூமி

உய்கம்

உய்கை (=வாழ்க்கை) + அம் = உய்கம் >>> உகம் >>> யுகம் = வாழும் இடம் = பூமி.

யுகளம், யுகளி

இரட்டை

உகாளம்

உக (=பொருந்து, இணை) + ஆள் + அம் = உகாளம் >>> யுகளம் = ஆட்களின் இணை.

யுகாதி

ஆண்டுப் பிறப்பு

உகாதி

உகம் (=காலம், ஆண்டு) + ஆதி (=முதல், தொடக்கம்) = உகாதி >>> யுகாதி = ஆண்டின் தொடக்கம்.

யுகாதி

கடவுள்

உகாதி

உகை (=தோன்று) + ஆதி (=முதல்) = உகாதி >>> யுகாதி = முதலில் தோன்றியவன்.

யுத்தம்

போர்

உந்தம்

உந்து (=செலுத்து, எறி, தாக்கு) + அம் = உந்தம் >>> உத்தம் >>> யுத்தம் = யானை, தேர் போன்றவற்றைச் செலுத்தலும் அம்பு, வேல் முதலானவற்றை எறிதலும் வாளால் தாக்குதலும் அடங்கியது.

யுத்தம்

பொருத்தம், தகுதி

உந்தம்

உந்து (=பொருந்து) + அம் = உந்தம் >>> உத்தம் >>> யுத்தம் = பொருத்தம், தகுதி.

யுத்தி

எண்ணம், சூழ்ச்சி

உந்தி

உந்து (=எழு, தோன்று) + இ = உந்தி >>> உத்தி >>> யுத்தி = தோன்றியது = எண்ணம், சூழ்ச்சி.

யுவதி

அழகிய பெண்

அவ்வதை

(2). அவ்வை (=அழகு) + தை (=பெண்) = அவ்வதை >>> யவ்வதி >>> யௌவதி >>> யுவதி = அழகிய பெண், இளம்பெண்

யுவன்

அழகிய ஆண்

அவ்வன்

(2). அவ்வை (=அழகு) + அன் = அவ்வன் >>> யவ்வன் >>> யௌவன் >>> யுவன் = அழகிய ஆண், இளைஞன்

யூகம், யூகை

பேன்

உழுக்கம்

உழு (=பூச்சி) + உக்கம் (=தலை) = உழுக்கம் >>> உயுக்கம் >>> யூகம் = தலையில் இருக்கும் பூச்சி.

யூகம்

எண்ணம், தியானம்

ஊழ்கம், ஊக்கம்

(1). ஊழ்கு (=தியானி, எண்ணு) + அம் = ஊழ்கம் >>> ஊகம் >>> யூகம் = தியானம், எண்ணம். (2) ஊக்கு (=நினை) + அம் >>> ஊக்கம் >>> யூகம் = நினைவு, எண்ணம்.

யூகம்

ஒளி

உகம்

உகை (=எழு, தோன்று) + அம் = உகம் >>> யூகம் = தோன்றுவது.

யூகம்

போர்ப்படை, படைவகுப்பு

உகம்

உகை (=பதி, அமை, செலுத்து) + அம் = உகம் >>> யூகம் = அணியாக அமைத்துப் பின்னர் போருக்குச் செலுத்தப்படுவது

யூகம்

உடல்குறை

உகம்

உகை (=சிந்து, நீக்கு) + அம் = உகம் >>> யுகம் = நீக்கப்பட்டது.

யூகி

கருது, அறி

யூகி

யூகம் (=எண்ணம்) >>> யூகி = கருது, அறி.

யூகை

அறிவு, அறிவாளி

யூகை

யூகி (=அறி) + ஐ = யூகை = அறியப்படுவது = அறிவு, கல்வி, அறிவுடையவன்.

யூதம்

கூட்டம்

உந்தம்

உந்து (=பொருந்து, கூடு, பெருகு) + அம் = உந்தம் >>> யுந்தம் >>> யூதம் = பெருக்கம், கூட்டம்.

யூதம்

போர்ப்படை

யுத்தம்

யுத்தம் (=போர்) >>> யூதம் = போர்ப்படை.

யூதபம், யூதபன்

கூட்டத் தலைவன்

யூதபம், யூதபன்

யூதம் (=கூட்டம்) + அம் / அன் = யூதவம் / யூதவன் >>> யூதபம் / யூதபன் = கூட்டத் தலைவன்.

யூதபதி

படைத் தலைவன்

யூதபதி

யூதம் (=போர்ப்படை) + பதி (=தலைவன்) = யூதபதி = போர்ப்படையின் தலைவன்.

யூதிகம், யூதி, யூதிகை

மல்லிகை

உந்திகம்

உந்து (=பெருகு, பரப்பு) + இகம் (=நறுமணம்) = உந்திகம் >>> யூதிகம் >>> யூதிகை = மிக்க நறுமணம் பரப்புவது.

யூபம்

வேள்வி

ஓமம்

ஓமம் (=வேள்வி) >>> யோபம் >>> யூபம்

யூபம்

உடல்குறை, படைப்பிரிவு

அவ்வம்

அவி (=வெட்டு, பிரி) + அம் = அவ்வம் >>> யவ்வம் >>> யௌவம் >>> யூபம் = வெட்டப்பட்டது, பிரிக்கப்பட்டது.

யூமியா, யோமியா

ஓய்வூதியம்

ஓம்பீயா

ஓம்பு (=பேணு) + ஈ (=கொடு) + ஆ = ஓம்பீயா >>> யோமியா >>> யூமியா = பேணுதலுக்காக கொடுக்கப்படுவது.

யோக்கியம், யோக்கியதை

பொருத்தம், தகுதி

உகியம்

உக (=பொருந்து, தகு) + இயம் = உகியம் >>> ஊக்கியம் >>> யூக்கியம் >>> யோக்கியம் = பொருத்தம், தகுதி

யோக்கியம், யோக்கியதை

ஆற்றல்

ஊக்கியம்

ஊக்கம் (=வலிமை) + இயம் = ஊக்கியம் >>> யூக்கியம் >>> யோக்கியம் = வலிமை, ஆற்றல்.

யோக்கியம், யோக்கியதை

ஒழுக்கம், நேர்மை

ஒழுக்கியம்

ஒழுக்கம் + இயம் = ஒழுக்கியம் >>> ஓக்கியம் >>> யோக்கியம் = ஒழுக்கம், நேர்மை.

யோகம்

கூட்டல், புணர்ச்சி, பொருத்தம்

உகம்

உக (=பொருந்து, கூடு, புணர்) + அம் = உகம் >>> யுகம் >>> யோகம் = கூட்டல், புணர்ச்சி, சேர்க்கை, பொருத்தம், தகுதி,

யோகம்

உயர்வு, எழுச்சி

ஓங்கம்

ஓங்கு (=உயர், எழு) + அம் = ஓங்கம் >>> யோகம் = உயர்வு, எழுச்சி

யோகம்

உபாயம்

ஊக்கம்

ஊக்கு (=தப்பு) + அம் = ஊக்கம் >>> யூகம் >>> யோகம் = தப்பிக்கும் வழி. 

யோகம்

மருந்து

உய்கம்

உய்கை (=பிழைக்கை) + அம் (=உணவு) = உய்கம் >>> ஊகம் >>> யூகம் >>> யோகம் = பிழைக்கச்செய்யும் உணவு.

யோகம்

சூத்திரம், மந்திரம்

ஊக்கம்

ஊக்கு (=கற்பி) + அம் = ஊக்கம் >>> யூகம் >>> யோகம் = கற்பிக்கப் படுவது = பாட்டு, சூத்திரம், மந்திரம்

யோகம்

வஞ்சனை

யூகம்

யூகம் (=சூழ்ச்சி, தந்திரம்) >>> யோகம் = மறைப்பு, வஞ்சனை

யோகம்

இடுப்புப் பட்டிகை

உக்கம்

உக்கம் (=இடுப்பு) >>> யூகம் >>> யோகம் = இடுப்பில் கட்டப்படும் பட்டிகை.

யோகம்

நன்மை

ஓக்கம்

ஓக்கு (=உயர்த்து, ஆக்கு) + அம் = ஓக்கம் >>> யோகம் = உயர்த்துகின்ற ஆக்கம்.

யோகம்,யோகு, யோகிப்பு

தியானம்

ஊழ்கம்

ஊழ்கு (=தியானி) + அம் = ஊழ்கம் >>> ஊகம் >>> யூகம் >>> யோகம் = தியானம்.

யோகம்

உணர்ச்சி

யூகை

யூகை (=அறிவு) + அம் = யூகம் >>> யோகம் = அறிவுணர்ச்சி.

யோகம்

மரணம்

உகம்

உகு (=உதிர், நீங்கு) + அம் = உகம் >>> யூகம் >>> யோகம் = உதிர்ந்த / நீங்கிய நிலை. 

யோகி, யோகர்

முனிவர்

யோகி, யோகர்

யோகம் (=தியானம்) + இ / அர் >>> யோகி / யோகர் = தியானத்தைப் பயில்பவர்.

யோகினி

மந்திரப்பெண்

யோகினி

யோகம் (=பாட்டு, மந்திரம்) + இனி = யோகினி = மந்திரப்பெண்

யோசனம், யோசனை

சிந்தனை, ஆராய்ச்சி

உசாணம்

உசா (=ஆராய், சிந்தி) + அணம் = உசாணம் >>> யூசனம் >>> யோசனம், யோசனை = சிந்தனை, ஆராய்ச்சி.

யோசனை

ஓசை

ஓசை

ஓசை >>> ஓசனை >>> யோசனை.

யோசனன்

கடவுள்

உய்யணன்

உய் (=உயிர், படை) + அணன் = உய்யணன் >>> ஊசணன் >>> யூசனன் >>> யோசனன் = உயிர்களைப் படைப்பவன். 

யோசி

சிந்தி

யோசி

யோசனை (=சிந்தனை) >>> யோசி = சிந்தி

யோசி

சேர்ப்பி

உயி

உய் (=கொண்டுபோ, கொடு) + இ = உயி >> யூசி >>> யோசி = கொண்டுபோய்க் கொடு, சேர்ப்பி.

யோசியம்

சோதிடம்

யோசியம்

யோசி (=சிந்தி, கணி) + இயம் (=சொல்) = யோசியம் = கணித்துச் சொல்லுதல்.

யோதனம்

போர்

யுத்தம்

யுத்தம் (=போர்) + அணம் = யுத்தணம் >>> யோதனம்

யோதை

அறிவாளி

ஒற்றை

ஒற்று (=உய்த்துணர், அறி) + ஐ = ஒற்றை >>> ஒத்தை >>> யோதை = உய்த்தறிபவர், அறிவாளி.

யோனி

பிறப்பு, பிறப்புறுப்பு

ஒண்ணி

ஒண்ணு (=இயலு, தோன்று) + இ = ஒண்ணி >>> யோனி = தோற்றம், பிறப்பு, பிறப்புறுப்பு.

யோனி

உண்ணுநீர்

உண்ணீர்

உண் + நீர் = உண்ணீர் >>> உண்ணி >>> யுன்னி >>> யோனி

யௌதம்

பெண்களின் கூட்டம்

அவுந்தம்

அவ்வை (=பெண்) + உந்து (=பெருகு) + அம் = அவுந்தம் >>> ஔதம் >>> யௌதம் = பெண்களின் கூட்டம்

யௌதகம், யௌதுகம்

மணமேடை யில் தரும் பரிசுகள்

உந்தாக்கம்

உந்து (=பொருந்தியிரு, கொடு) + ஆக்கம் (=பொருள்) = உந்தாக்கம் >>> யுதக்கம் >>> யௌதகம் = மணமக்கள் பொருந்தி இருக்கும்போது கொடுக்கப்படும் பொருள்.

யௌவனிகை

இளம்பெண்

யௌவனிகை

யௌவனம் (=இளமை) + இகம் (=உடல்) + ஐ = யௌவனிகை = இளமையான உடலைக் கொண்டவள்.

ரக்கை, ரக்க

இறக்கை

இறக்கை

இறக்கை >>> றக்கை >>> ரக்கை >>> ரக்க

ரக்தம்

இரத்தம்

இரத்தம்

இரத்தம் >>> ரத்தம் >>> ரக்தம்

ரக்தி

மிக்க இனிமை

ஈரதி, இரத்தி

ஈர் (=இனிமை) + அதி (=மிகுதி) = ஈரதி >>> இரத்தி >>> ரக்தி = மிக்க இனிமை கொண்டது

ரகசியம்

வெளிப்படாத சொல்

அறகசியம்

அறை (=இன்மை) + கசி (=வெளிப்படு) + இயம் (=சொல்) = அறகசியம் >>> ரகசியம் = வெளிப்படுத்தப் படாத சொல்.

ரகம்

பிரிவு, வகை

அறகம்

அறு (=பிரி, வகு) + அகம் = அறகம் >>> ரகம் = பிரிவு, வகை.

ரகிதம்

முழுமையான நீக்கம்

அரங்கிறம்

அரங்கு (=அழி, நீக்கு) + இறு (=முடி) + அம் = அரங்கிறம் >>> அரக்கிதம் >>> ரகிதம் = முழுமையாக நீக்குதல்..

ரங்கம்

அரங்கம்

அலங்கம்

அலங்கு (=ஆடு) + அம் = அலங்கம் >>> அரங்கம் >>> ரங்கம் = ஆடுமிடம்.

ரங்கு

செம்மை, நிறம்

அரக்கு

அரக்கு (=சிவப்பு) >>> ரக்கு >>> ரங்கு = செந்நிறம் >>> நிறத்திற்கான பொதுப்பெயர். 

ரங்கு

சூதாட்டம்

அரங்கு

அரங்கு >>> ரங்கு = அரங்கில் ஆடப்படுவது.

ரங்கு

விபச்சாரி

ஆரங்கு

ஆர் (=அனுபவி, கொடு) + அங்கம் (=பொருள், உடல்) + உ = ஆரங்கு >>> ரங்கு = பொருளுக்காகத் தனது உடலை அனுபவிக்கக் கொடுப்பவள் = விலைமாது.

ராசன்

சந்திரன்

இராயன், இராசன்

இருமை (=இருள்) + ஆய் (=ஒளி) + அன் = இராயன் >>> இராசன் >>> ராசன் = இருளில் ஒளி தருபவன்.

ரசிதம், ரசதம்

வெள்ளி

இராசிதம்

இராசன் (=சந்திரன்) + இறு (=வடி, வார்) + அம் = இராசிறம் >>> இராசிதம் >>> ரசிதம் = சந்திரனைப் போல் ஒளிரும் வார்ப்பு.  

ரசம்

சாறு

இறசம்

இறு (=வடி) + அயம் (=நீர்) = இறயம் >>> இறசம் >>> ரசம் = வடிக்கப்படும் நீர் = சாறு.

ரசம்

இன்சுவை, இனிமை

ஈராயம், இரசம்

ஈர் (=இனிமை) + ஆய் (=அறி, உணர்) + அம் = ஈராயம் >>> இரசம் >>> ரசம் = இனிய உணர்வு = இன்சுவை.

ரசனை

சுவையறிவு, நாக்கு.

இரசனை

இரசம் (=இன்சுவை) >>> இரசன் + ஐ = இரசனை >>> ரசனை = சுவை அறிதல் >>> சுவை அறிவது = நாக்கு.

ரசி

இன்சுவையறி

இரசி

இரசம் (=இன்சுவை) >>> இரசி >>> ரசி = இன்சுவை அறி.

ரசாயனம்

வேதிய அறிவியல்

இரசாயணம்

இரசம் (=சாறு) + ஆய் (=அறி, ஆராய்) + அணம் = இரசாயணம் >>> ரசாயனம் = சாறுகளைப் பற்றி ஆராய்ந்து அறிதல்.

ரசீது

ஒப்புகைச் சீட்டு

உறாசிறு, உராசிது

உறு (=பெறு) + ஆசு (=எழுது) + இறு (=கொடு)  = உறாசிறு >>> உராசிது >>> ரசீது = பெற்றேன் என்று எழுதிக் கொடுப்பது.

ரசோனம்

வெள்ளைப் பூண்டு

உரசூனம்

உறை (=காரம், மருந்து) + ஊண் (=உணவு) + அம் = உறயூணம் >>> உரசூனம் >>> ரசோனம் = காரமான மருந்து உணவு.

ரஞ்சகம்

சுவையானது

இரஞ்சகம்

இரசம் (=இன்சுவை) + அகம் = இரச்சகம் >>> இரஞ்சகம் >>> ரஞ்சகம் = இன்சுவை கொண்டது.

ரஞ்சிதம்

சுவையானது

இரஞ்சிதம்

(2) இறைச்சி (=விருப்பம்) + இதம் (=இனிமை) = இறச்சிதம் >>> இரஞ்சிதம் >>> ரஞ்சிதம் = விரும்பத்தக்க இனிமை.

ரக்சி, ரட்சி

கருணைசெய்

இரக்கி

இரங்கு (=கருணைசெய்) >>> இரங்கி >>> இரக்கி >>> ரக்சி >>> ரட்சி

ரக்சை, ரட்சை

கருணை

இரக்கை

இரக்கம் + ஐ = இரக்கை >>> ரக்சை >>> ரட்சை = கருணை

ரட்சகன், ரக்சகன்

கருணை உள்ளத்தினன்

இரக்ககன்

இரங்கு (=கருணைசெய்) + அகம் (=உள்ளம்) + அன் = இரங்ககன் >>> இரக்ககன் >>> ரக்சகன் >>> ரட்சகன் = கருணை உள்ளத்தன்.

ரணம்

புண்

அறாணம்

அறு (=கீறு, பிள) + ஆணம் (=உடல்) = அறாணம் >>> அரணம் >>> ரணம் = உடலில் உண்டான கீறல் / பிளவு.

ரணம்

போர்

ஆரணம்

ஆர் (=போரிடு) + அணம் = ஆரணம் >>> ரணம் = போர்

ரணம்

கடன்

ஆராணம்

ஆர் (=கட்டு, பெறு, ஈடு) + ஆணம் (=பொருள்) = ஆராணம் >>> ரணம் = பொருளை ஈடாகக் கட்டிப் பெறப்படுவது.

சுதந்திரம்

ஒட்டுறவற்ற நிலை

சுற்றற்றிரம்

சுற்றம் (=ஒட்டு, உறவு) + அல் + திறம் (=இயல்பு, நிலை) = சுற்றற்றிறம் >>> சுத்தத்திரம் >>> சுதந்திரம் = ஒட்டுறவற்ற நிலை.

தியானம்

ஆதாரத்தில் மூழ்குதல்

தோயாணம்

தோய் (=மூழ்கு, உறை) + ஆணம் (=பற்றுக்கோடு) = தோயாணம் >>> தியானம் = பற்றுக்கோட்டில் மூழ்கி உறைதல்.

ரத்தம்

குருதி

இரத்தம்

இரி (=ஓடு, ஒழுகு) + அறு (=கொல்) + அம் (=நீர்) = இரற்றம் >>> இரத்தம் >>> ரத்தம் = கொல்லும்போது / அறுக்கும்போது ஒழுகும் நீர்.

ரத்து

தொடர்பு அறுதி

அறாத்து

அறு (=நீக்கு) + ஆத்தம் (=நட்பு, பிணிப்பு) + உ = அறாத்து >>> ரத்து = பிணிப்பை நீக்குதல்.

ரத்னம், ரத்தினம்

பட்டை ஆக்கியமணி

அரத்தினம்

அரம் + தின் (=தீட்டு) + அம் = அரந்தினம் >>> அரத்தினம் >>> ரத்தினம் = அரத்தினால் தீட்டப்பட்டது.

ரதம்

வண்டி

இரதம்

இரி (=ஓடு) + அறம் (=சக்கரம்) = இரறம் >>> இரதம் >>> ரதம் = சக்கரங்களால் ஓடுவது.

ரதி

அன்பின் மிகுதி

இரதி

ஈரம் (=அன்பு) + அதி (=மிகுதி) = ஈரதி >>> இரதி >>> ரதி = மிகுதியான அன்பு.

ரந்திரம்

துளை, வெளி, பலவீனம், குற்றம்

அரந்திரம்

அறை (=அறுகை, இன்மை) + திறம் (=இயல்பு, நிலை) = அறைத்திறம் >>> அரந்திரம் >>> ரந்திரம் = ஏதும் இல்லா நிலை = வெளி, துளை, பொய், குற்றம், பலவீனம்.

ரந்திரம்

சொல்லப்படா செய்தி

அரந்திரம்

அறை (=சொல்லு, இன்மை) + திறம் (=செய்தி) = அறைத்திறம் >>> அரந்திரம் >>> ரந்திரம் = சொல்லப்படாத செய்தி.

ரந்திரம்

பிறந்தவீடு, சென்ம லக்கினம்

அரந்திரம்

அறை (=இடம், பிரிவு) + திற (=வெளிப்படு, பிற) + அம் = அறைத்திறம் >>> அரந்திரம் >>> ரந்திரம் = பிறந்த இடம், பிறப்பைக் குறிக்கும் பிரிவு.

ரப், ரப்பா

இறைவன்

இரப்பா

இறைவன் >>> இறப்பன் >>> இரப்பா >>> ரப்பா, ரப்.

ரம்பா

வாழை

அரம்பை, ஆரம்பை

ஆர் (=உண்ணு, தண்டு) + அம் (=அழகு) + பை (=பசுமை) = ஆரம்பை >>> அரம்பை >>> ரம்பா = உண்ணக்கூடிய அழகிய பசுமையான தண்டினைக் கொண்டது.

ரம்மியம், ரம்யம்

நிறைந்த அழகுடையது

ஆரம்மியம்

ஆர் (=நிறைவு) + அம் (=அழகு) + இயம் = ஆரம்மியம் >>> ரம்மியம் = நிறைவான அழகினைக் கொண்டது.

ரமணன்

கணவன்

ஆரமணன்

ஆரம் (=மாலை) + மணம் + அன் = ஆரமணன் >>> ரமணன் = மாலையிட்டு மணந்தவன்.

ரமணன்

கடவுள், தலைவன்

அறவாணன்

அறம் + ஆள் + நன் = அறவாணன் = அரமணன் >>> ரமணன் = அறத்தை ஆள்பவன்..

ரமி

இன்புறு

இரமி

ஈரம் (=இனிமை) >>> இரமி >>> ரமி = இன்புறு, புணர்

ரயத்து, ரயத், ரயித்து

உழவு, உழவன்

ஏராயத்து

ஏர் + ஆயம் (=வருவாய்) + ஆற்று (=செய்) = ஏராயாற்று >>> ஏராயத்து >>> ரயத்து = ஏரினால் வருவாய் ஈட்டு (தல் / பவன்)

ரயத்துவாரி, ரயித்துவாரி

உழவு வரி

ஏராயத்துவரி

ஏராயத்து (=உழவன்) + வரி = ஏராயத்துவரி >>> ரயத்துவாரி = உழவு / உழவர் க்கான வரி.

ரயாதி

அரசுக்கான நிலவரி

இரயாத்தி

இறை (=அரசு, நிலவரி) + ஆற்று (=கொடு) + இ = இறயாற்றி >>> இரயாத்தி >>> ரயாதி = அரசுக்குக் கொடுக்கப்படும் நிலவரி.

ரவா, ரவை

பொடி

அரவை

அராவு (=பொடிசெய்) + ஐ = அரவை >>> ரவை >>> ரவா = பொடி.

ரவி

சூரியன்

இரவி

இருமை (=இருள்) + அவி (=அழி) = இரவி >>> ரவி = இருளை அழிப்பவன் = சூரியன்.

ரவிக்கை

மார்புக் கச்சை

உரவிக்கை

உரம் (=மார்பு) + இக்கு (=இறுக்க முடிச்சு) + ஐ = உரவிக்கை >>> ரவிக்கை = மார்பை இறுக்கி முடிச்சிடப்படுவது.

ரவை

துப்பாக்கிக் குண்டு

அரவை

அரி (=கூர்மை, சிறுகல்) + அவை (=குத்து, துளை) = அரவை >>> ரவை = துளைத்துச் செல்லும் கூரிய சிறுகல்.

ரவை

கோலி

ஆரவை

ஆரம் (=வட்டம்) + ஐ = ஆரவை >>> ரவை = வட்டமானது.

ரவை

ஒலி, நடுக்கம்

அரவை

அரவு (=ஒலி, நடுங்கு) + ஐ = அரவை >>> ரவை = ஒலி, நடுக்கம்

ரவை

இரவு

இரவு

இரவு + ஐ = இரவை >>> ரவை

ரச்சு

கயிறு

இரச்சு

ஈர் (=இழு, நீளு) + அசை (=கட்டு) + உ = ஈரசு >>> இரச்சு >>> ரச்சு = கட்ட உதவுகின்ற நீளமான பொருள்.

ரசசு

நுண்பொடி

உரசாசு

உரை (=பொடி) + ஆசு (=நுட்பம்) = உரயாசு >>> உரசாசு >>> ரசசு = நுட்பமான பொடி.

ரசசு

மாதவிடாய்

இரசாசு

இறு (=வடி, ஒழுகு) + அயம் (=நீர்) + ஆசு (=கறை, அழுக்கு) = இறயாசு >>> இரசாசு >>> ரசசு = வடிகின்ற கறையுடைய நீர்.

ரசா^

விடுமுறை

இரசை

இரி (=ஓடு, விரை) + அசை (=தளர்) = இரசை >>> ரசா^ = ஓட்டம் / விரைவில் இருந்து தளர்வு.

ரசா^

அனுமதி

ஆரசை

ஆர் (=பொருந்து, ஒப்பு) + அசை (=சொல்) = ஆரசை >>> ரசா^ = ஒப்புதல் சொல்.

ரசா^ய்

பஞ்சு மெத்தை

அரசாய்

அரி (=படுக்கை) + அசை (=கட்டு) + ஆய் (=மென்மை, வெண்மை) = அரசாய் >>> ரசா^ய் = மெல்லிய வெண்பஞ்சினால் கட்டப்பட்ட படுக்கை.

ரச்`மி

ஒளிக்கீற்று

ஆரச்`மி

ஆர் (=தண்டு) + ஆய் (=நுண்மை) + பை (=ஒளி) = ஆராய்பை >>> ஆராச்`மை >>> ஆரச்`மி >>> ரச்`மி = ஒளியின் நுண்ணிய தண்டு.

ரச்`தா, ராச்`தா

பெரும்பாதை

இராத்தா

(2). இருமை (=பெருமை) + ஆறு (=வழி) + ஆ = இராற்றா >>> இராத்தா >>> ராத்தா >>> ராச்`தா, ரச்`தா = பெரும்பாதை.

`ரச்`தாளி

செவ்வாழைப் பழம்

இரத்தாளி

இரத்தம் (=சிவப்பு) + அளி (=பழம்) = இரத்தாளி >>> ரத்தாளி >>> ரச்`தாளி = சிவப்புநிறப் பழம்.

ரச்`து

உணவுப் பொருள்

இரத்து

இரை (=உணவு) + அத்தம் (=பொருள்) + உ = இரத்து >>> ரச்`து = உணவுப் பொருள்.

ரசோக்தி

சுவையான பேச்சு

இரசோத்தி

இரசம் (=இன்சுவை) + உத்தி (=பேச்சு) = இரசோத்தி >>> ரசோத்தி >>> ரசோக்தி = இன்சுவையான பேச்சு.

ரகுமான்

மழைபோல் கருணையன்

இரகுமான்

இரங்கு (=கருணைசெய்) + வான் (=மழை) = இரங்குவான் >>> இரகுமான் >>> ரகுமான் = மழைபோலக் கருணை செய்பவன்.

ரகுமத்து

கருணை

இரகுமத்து

இரங்கு (=உருகு) + பற்று (=அன்பு) = இரங்குபற்று >>> இரகுமத்து >>> ரகுமத் = உருக்கமான அன்பு.

ரகீம்

பெரும் கருணையன்

இரகிமா

இரங்கு (=கருணை செய்) >>> இரங்கி + மா (=பெருமை) = இரங்கிமா >>> இரகிமா >>> ரகீம் = பெரும் கருணையன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.