ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 45

 

சொல்

பொருள்

தமிழ்ச்சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

ரா

இரவு

இரா

இரா (=இரவு) >>> ரா

ராக்கோடி, ராக்கடி, ராக்குடி, ராக்கொடி

தலையில் அணியும் வளையம்

இறாக்கோடி

இறை (=தலை) + கோடி (=வளைவு, அலங்கரி) = இறய்கோடி >>> இறாக்கோடி >>> ராக்கோடி = தலையில் அணியப்படும் வளைவான அலங்காரப் பொருள்.

ராகம்

பாட்டு, இசை, ஒலி

இரங்கம்

இரங்கு (=ஒலி, பாடு) + அம் = இரங்கம் >>> இராகம் >>> ராகம் = பாட்டு, இசை, ஒலி.

ராகம்

மன விருப்பம்

ஈரகம்

ஈரம் (=பற்று) + அகம் (=உள்ளம்) = ஈரகம் >>> ராகம் = உள்ளப் பற்று = விருப்பம்.

ராகம்

சிவப்பு, நிறம்

அரக்கம்

அரக்கு (=சிவப்பு) + அம் = அரக்கம் >>> ராகம் = சிவப்பு, நிறம்

ராகவம்

கடல்

இராகவம்

இரங்கு (=ஒலி) + அம் (=நீர்) + அம் = இரங்கமம் >>> இராகவம் >>> ராகவம் = ஒலிக்கும் நீரைக் கொண்டது.

ராகி

கேழ்வரகு

அராகி

அரக்கு (=அரை, உண்ணு, சிவப்பு) + இ = அரக்கி >>> அராகி >>> ராகி = அரைத்து உண்ணப்படும் சிவப்பான பொருள்.

ராகு

பாம்பு

அராகு

(2). அரை (=வயிறு, தேய்) + அகை (=செல்) + உ = அராகு >>> ராகு = வயிற்றைத் தேய்த்துக்கொண்டு செல்வது.

ராங்கி

எதிர்த்துப் பேசுதல்

ஆராக்கி

ஆர் (=எதிர்) + ஆக்கம் (=சொல்) + இ = ஆராக்கி >>> ஆராங்கி >>> ராங்கி = எதிர்த்துப் பேசுதல்.

ராசன், ராசா

அரசன்

அரசன்

அரசன் >>> ராசன் >>> ராசா

ராசி

வரிசை

இராசி

ஈர் (=நீளு) + ஆசு (=ஒழுங்கு) + இ = ஈராசி >>> இராசி >>> ராசி = நீளமான ஒழுங்குமுறை.

ராசி

கூட்டம், மொத்தம்

இராசி

இருமை (=பெருமை) + ஆயம் (=கூட்டம்) + இ = ஈராயி >>> இராசி >>> ராசி = பெருங்கூட்டம், குவியல், இனம், மொத்தம்

ராசி

வீடு, தங்குமிடம்

இராசி

இரு (=தங்கு) + ஆசு (=பற்றுக்கோடு) + இ = இராசி >>> ராசி = தங்குகின்ற பற்றுக்கோடு.

ராசி

பொருத்தம், சமாதானம்

இராசி

இரு + ஆயம் (=கூட்டம்) + இ = இராயி >>> இராசி >>> ராசி = கூடி இருத்தல் = பொருத்தம், சமாதானம்.

ராக்சதன், ராட்சதன், ராட்சசன்

அரக்கன்

இராக்கதன்

இருமை (=பெருமை, கருமை) + ஆக்கை (=உடல்) + அதம் (=அழிவு) + அன் = இராக்கதன் >>> ராக்சதன், ராட்சதன் = கரிய பெரிய உடலுடன் அழிவைச் செய்பவன்.

இடபம்

காளை

இடவாம்

இட (=குத்து, தாக்கு) + ஆ (=மாடு) + அம் = இடவாம் >>> இடபம் = குத்தும் / தாக்கும் இயல்புடைய மாடு.

யக்சன், யட்சன்

செல்வத்தைக் கொடுப்பவன்

இயக்கன்

ஈ (=கொடு) + ஆக்கம் (=செல்வம்) + அன் = ஈயாக்கன் >>> இயக்கன் >>> யக்சன் >>> யட்சன் = செல்வம் கொடுப்பவன்

ரணம்

கீறல், புண்

இரணம்

ஈர் (=கீறு) + ஆணம் (=உடல்) = ஈராணம் >>> இரணம் >>> ரணம் = உடலில் உண்டான கீறல்.

இருடி

துறவி, முனிவர்

இரிட்டி, இருடி

இரி (=நீக்கு, துற) + இட்டம் (=ஆசை) + இ = இரிட்டி >>> இருடி = ஆசையைத் துறந்தவர்கள்.

ராட்டிரம்

நாடு, பெரிய வாழிடம்

இரட்டிரம்

இருமை (=பெருமை) + அறை (=இடம்) + இரு (=வாழ்) + அம் = இரற்றிரம் >>> இரட்டிரம் >>> ராட்டிரம் = பெரிய வாழிடம்.

ராட்டினம்

பெரிய சக்கரவகை

இரட்டினம்

இருமை (=பெருமை) + அறம் (=சக்கரம்) + இனம் (=வகை) = இரற்றினம் >>> இரட்டினம் >>> ராட்டினம் = பெரிய சக்கரவகை

ராட்டை, ராட்டு

பஞ்சுநூற்கும் சக்கரம்

இரட்டை

ஈர் (=இழு) + அறம் (=சக்கரம்) + ஐ = ஈரற்றை >>> இரட்டை >>> ராட்டை = பஞ்சை இழுக்க உதவும் சக்கரம்

ராணி

அரசி

இறாணி

இறை (=அரசன்) + அணை (=இணை) + இ = இறயணி >>> இறாணி >>> ராணி = அரசனுடன் இணைந்து இருப்பவள்.

ராணுவம்

போர்ப்படை

இறணுவம்

இறு (=கொல், அழி) + அணை (=பொருந்து, கூடு) + உவம் (=ஒப்பு, நேர்) = இறணுவம் >>> ராணுவம் = நேருக்குநேர் பொருந்திக் கொல்லும் கூட்டம்

ராத்திரி

இரவுப் பொழுது

இராத்திறி

இரா (=இருள்) + திறம் (=நிலை, பொழுது) + இ = இராத்திறி >>> ராத்திரி = இருண்ட பொழுது.  

ராப்தா

நட்பு, இணைப்பு

இரத்தா

இரு + அத்து (=பொருந்து) + ஆ = இரத்தா >>> ராத்தா >>> ராப்தா = பொருந்தி இருத்தல்.

ராப்தா

வழக்கம்

இராத்தா

இரு (=தங்கு, நிலை) + ஆறு (=முறை) + ஆ = இராற்றா >>> இராத்தா >>> ராப்தா = நிலையான முறை, வழக்கம்

ராப்தா

பெரும்பாதை, அரசபாதை

இராத்தா

இருமை (=பெருமை) + ஆறு (=வழி) + ஆ = இராற்றா >>> இராத்தா >>> ராப்தா = அரசர் முதலானோர் செல்லும் வழி.

ராச்`தா, ரச்`தா

செல்லும் வழி

இராத்தா

இரி (=ஓடு, செல்) + ஆறு (=வழி) + ஆ = இராற்றா >>> இராத்தா >>> ராச்`தா >>> ரச்`தா = செல்லும் வழி.

ராயசம்

பெருங்கணக்கு எழுதுதல்

இராயாசம்

இருமை (=பெருமை) + ஆயம் (=கணக்கு) + ஆசு (=எழுது) + அம் = இராயாசம் >>> ராயசம் = பெருங்கணக்கு எழுதுதல்.

ராயசக்காரன்

பெருங் கணக்கன்

இராயாசக் காரன்

இராயாசம் (=பெருங்கணக்கு) + காரன் = இராயாசக் காரன் >>> ராயசக்காரன் = பெருங்கணக்கு எழுதுபவன்.

ராயசம்

கட்டளை

இறாயசம்

இறை (=கடமை) + ஆய் (=செலுத்து) + அசை (=சொல்) + அம் = இறாயசம் >>> ராயசம் = கடமைக்காகச் செலுத்தும் சொல்.

ராயர்

தலைவர், அரசர்

இறயர்

இறை (=தலைமை) + அர் = இறயர் >>> ராயர் = தலைவர், அரசர்.

ராவடம்

அராவும் தொழில்

அராவடம்

அராவு (=இரும்பால் தேய்) + ஆற்று (=செய்) + அம் = அராவாற்றம் >>> அராவாட்டம் >>> அராவடம் >>> ராவடம் = இரும்பால் தேய்க்கும் செயல்.

ராவணன்

சீதையைச் சிறைப் படுத்தியவன்

இராவணன்

ஈர் (=இழு) + அவ்வை (=பெண்) + அணை (=சிறைவை) + அன் = ஈரவ்வணன் >>> இராவணன் >>> ராவணன் = இழுத்துச்சென்று பெண்ணைச் சிறைவைத்தவன்.

ராவுத்தன்

குதிரைக் காரன்

இறாவுத்தன்

இறை (=கட்டளை) + வீதி (=குதிரை) + அன் = இறய்வீதன் >>> இறாவுத்தன் >>> ராவுத்தன் = குதிரைக்குக் கட்டளை இடுபவன்.

ராச்சியம், ராச்^யம்

அரசனின் கட்டளைக்கு உட்பட்டது

இறாச்சியம்

இறை (=அரசன், கட்டளை) + ஈ (=வழங்கு) + அம் = இறயீயம் >>> இறசீயம் >>> இறாச்சியம் >>> ராச்சியம் >>> ராச்^யம் = அரசனின் கட்டளை வழங்குமிடம்.

ராசன், ராசா

அரசன்

இறாசன்

இறை (=தலைமை) + அன் = இறயன் >>> இறாசன் >>> ராசன் = தலைமை ஆனவன்.

ராசாங்கம்

அரசனுக்குக் கட்டுப்பட்ட இடம்

இறாசாங்கம்

இறை (=அரசு, கட்டளை) + அகம் (=இடம்) = இறயகம் >>> இறசக்கம் >>> இறாசாங்கம் >>> ராசாங்கம் = அரச கட்டளைக்கு உட்பட்ட இடம்.

ராசாத்தி

அரசனின் துணைவி

இறாசாத்தி

இறை (=அரசன்) + ஆத்தம் (=துணை) + இ = இறயாத்தி >>> இறாசாத்தி >>> ராசாத்தி = அரசனின் துணைவி.

ராசி^நாமா, ராசிநாமா, ராசினாமா

வேலையில் இருந்து விலகுதல்

இறாசீநாமா

இறை (=கடமை, வேலை) + சீ (=நீக்கு) + நாமம் (=பெயர்) = இறய்சீநாமம் >>> இறாசீநாமா >>> ராசிநாமா = கடமை / வேலையில் இருந்து பெயரை நீக்குதல்.

ரித்தம்

வறுமை

அரித்தம்

அரி (=தங்கம், செல்வம்) + இறு (=அழி) + அம் = அரிற்றம் >>> அரித்தம் >>> ரித்தம் = செல்வம் அழிந்த நிலை. .

ரித்தன்

ஏழை

அரித்தன்

அரி (=தங்கம், செல்வம்) + இறு (=அழி) + அன் = அரிற்றன் >>> அரித்தன் >>> ரித்தன் = செல்வம் அழிந்தவன்.

ரிபு

பகைவன்

அரிபு

ஆர் (=எதிர்) + ஈவு (=ஒழிக்கை) = ஆரீவு >>> அரிபு >>> ரிபு = ஒழிக்கும் எதிரி.

ரியாயத்

வரித் தள்ளுபடி

அரியாயத்து

அரி (=கட்டு) + ஆயம் (=வரி) + அறு (=நீக்கு) = அரியாயறு = அரியாயத்து >>> ரியாயத் = வரி கட்டுவதை நீக்குதல்.

ரிவாசு, ரிவாச்`, ரிவாச்^, ரிவாசா^

வழக்கமான முறை

இறிவாசு

இறை (=கடமை, நிலை) + வாய் (=உபாயம், முறை) + உ = இறைவாயு >>> இறிவாசு >>> ரிவாசு = கடமை செய்வதற்கான நிலையான முறை 

ரிச~பம், ரிசபம்

ஏரிழுக்கும் காளைமாடு

ஏரிசபம்

ஏர் + இழு + ஆ + அம் = ஏரிழாவம் >> ஏரிசபம் >>> ரிசபம் = ஏரினை இழுக்கும் மாடு.

ரிசி~, ரிசி, ருசி~, ருசி

முனிவர்

இரிச்சி

இரி (=நீக்கு) + இச்சை (=ஆசை, பற்று) + இ = இரிச்சி >>> ரிசி = ஆசையைத் துறந்தவர்.

ரீகர்

கரம்பை நிலம்

அரிகார்

அரி (=இடம், நிலம்) + கார் (=கருமை) = அரிகார் >>> ரீகர் = கருப்பான நிலம்.

ரீதி

செய்முறை

ஆரிதி

ஆறு (=வழி, முறை) + இறு (=செய், முடி) + இ = ஆறிறி >>> ஆரிதி >>> ரீதி = முடிக்கும் வழிமுறை.

ரீப்பர்

அறுக்கப்பட்ட மரத்துண்டு

அரிப்பரம்

அரி (=அறு) + மரம் = அரிமரம் >>> அரிப்பரம் >>> ரீப்பர் = அறுக்கப்பட்ட மரத்துண்டு.

ருசி

உணவுச்சுவை, சுவையறி

ஆருசி

ஆர் (=உண்ணு) + உய் (=உணர்) + இ = ஆருயி >>> ஆருசி >>> ருசி = உண்டு உணரப் படுவது = சுவை, சுவையறி

ருசு

ஆதாரம், கையொப்பம்

உறுசு

உறு (=உறுதியாகு) + உய் (=அறிவி) + உ = உறுயு >>> உறுசு >>> ருசு = உறுதியாக அறிவிப்பது, கையொப்பம்.

ருசுவு

உறுதிசெய், கையொப்பமிடு

உறுசுவு

உறுசு (=உறுதி, கையொப்பம்) >>> உறுசுவு >>> ருசுவு = உறுதிப்படுத்து, கையொப்பமிடு.

ருத்திரம்

பெருஞ்சினம்

உருத்திறம்

உரு (=சினம்) + திறம் (=மிகுதி) = உருத்திறம் >>> ருத்திரம் = மிகுதியான சினம்.

ருத்து

அன்பு

உரித்து

உரித்து (=நட்பு, அன்பு) >>> ரித்து >>> ருத்து

ருது

காலம்

இறுது

இறு (=முடி) + உந்து (=தோன்று) = இறுந்து >>> இறுது >>> ருது = தோன்றியதும் முடிந்து போவது = காலம்.

ருது

மாதவிடாய்

இறுது

இறு (=கெடு, வடி) + உந்து (=வெளிப்படு, நீர்) = இறுந்து >>> இறுது >>> ருது = வெளிப்பட்டு வடிகின்ற கெட்ட நீர். 

ருப்பு

பொடியாக்கு

எருப்பு

எரு (=பொடி) >>> எருப்பு >>> ருப்பு = அரை, பொடியாக்கு

ருச்~டி, ருட்டி

மிகுதியான சினம்

உருட்டி

உரு (=சினம்) + உறு (=மிகுதி) + இ = உருற்றி >>> உருட்டி >>> ருட்டி >>> ருச்~டி = மிகுதியான சினம்.

ரூட்டி

தொந்தரவு

ஊறூட்டி

ஊறு (=துன்பம், வருத்தம்) + ஊட்டு + இ = ஊறூட்டி >>> ரூட்டி = துன்பம் / வருத்தம் ஊட்டுதல். 

ரூபகம்

உருவகம்

உருவகம்

உருவகம் >>> ரூபகம்

ரூபகம்

ஆதாரம்

உறுவகம்

உறு (=உறுதியாக்கு) + அகம் (=பொருள்) = உறுவகம் >>> ரூபகம் = உறுதியாக்கும் பொருள்.

ரூபம்

உருவம்

உருவம்

உருவம் >>> ருவம் >>> ரூபம்

ரூபாய்

இந்திய அரசின் பணம்

உருவாய்

உரு (=படம், முத்திரை) + ஆயம் (=செல்வம்) = உருவாயம் >>> உருவாய் >>> ரூபாய் = முத்திரை கொண்ட செல்வம். 

ரூபி

உறுதியாக்கு

உறுவி

உறுவி (=உறுதியாக்கு) >>> ரூபி

ரூபி

உருவம் கொண்டது

உருவி

உருவம் + இ = உருவி >>> ரூபி = உருவம் கொண்டது

ரேக்கு

அடுக்கு, இதழ், தகடு, வரிசை

நிரக்கு

நிர (=ஒழுங்குசெய்) >>> நிரக்கு (=ஒழுங்கு, வரிசை, அடுக்கு) >>> ரேக்கு = அடுக்கு, இதழ், தகடு. ஒ.நோ: நிரப்பு >>> ரெப்பு.

ரேக்ளா

ஒருகாளை மாட்டு வண்டி

ஒரேகாளை

ஒரே + காளை = ஒரேகாளை >>> ரேக்ளா = ஒருகாளையைக் கொண்ட வண்டி..

ரேகடி

கரம்பை நிலம்

இருங்கடி, இரிக்கடி

இருமை (=கருமை) + கடம் (=இடம், நிலம்) + இ = இருங்கடி >>> இரிக்கடி >>> ரேகடி = கருப்பான நிலம்.

ரேகை, ரேகா

கையில் ஓடும் வரிகள்

இரிகை

இரி (=ஓடு) + கை = இரிகை >>> ரீகை >>> ரேகை = கையில் ஓடுவது

ரேங்கு

சினம் கொள்ளுதல்

எரேக்கு

எரி (=தீ) + எக்கு (=மேலே வீசு) = எரேக்கு >>> ரேங்கு = தீயை மேலே வீசுதல் = சினம் கொள்ளுதல்.

ரேசகம்

மூச்சை வெளியேற்றும் முறை

இரிசகம்

(2). இரி (=நீக்கு, வெளியேற்று) + அகம் (=உள், உயிர், மூச்சு) = இரியகம் >>> இரிசகம் >>> ரேசகம் = உள்ளிருந்து மூச்சை வெளியேற்றுதல்.

ரேதசு, ரேதச்`

விந்து

இரேதாசு

இரி (=ஓடு, ஒழுகு) + ஏறு (=புணர்) + ஆய் (=வெண்மை) + உ = இரேறாயு >>> இரேதாசு >>> ரேதசு, ரேதச்` = புணரும்போது ஒழுகுகின்ற வெண்ணிறப் பொருள்.

ரேந்தை, ரேந்தா

பூவேலைப் பாடு

ஆரேந்தை

ஆர் (=மலர், வடிவம்) + ஏற்று (=பொருத்து) + ஐ = ஆரேற்றை = ஆரேத்தை >>> ஆரேந்தை >>> ரேந்தை = மலரின் வடிவத்தைப் பொருத்துதல்.

ரேவு

கடல்துறை

அரேவு

அரி (=கடல்) + ஏவு (=செலுத்து) = அரேவு >>> ரேவு = கப்பலைக் கடலில் செலுத்தும் இடம்.

ரேவு

ஆயத்துறை

இறேவு

இறை (=வரி) + ஈ (=கொடு) + உ = இறேவு >>> வரியைக் கொடுக்கும் இடம்.

ரேழி

ஓடக்கூடிய நடு இடம்

இறேழி

இறை (=ஓடு, இயங்கு, நடு) + உழி (=இடம்) = இறேழி >>> ரேழி = ஓடக்கூடிய / இயங்கக்கூடிய நடு இடம்.

ரொக்கம்

பணம்

உரோக்கம்

உராவு (=இடம்பெயர்) + ஆக்கம் (=செல்வம்) = உராவாக்கம் >>> உரவக்கம் >>> உரௌக்கம் >> உரோக்கம் >>> ரொக்கம் =  இடம்பெயரக் கூடிய செல்வம் = பணம்.

ரொட்டி

வலிமையான உணவு

உரோட்டி

உரம் (=வலிமை, கடினம்) + ஊட்டம் (=உணவு) + இ = உரவூட்டி >>> உரௌட்டி >>> உரோட்டி >>> ரொட்டி = வலிமை தரும் கடினமான உணவு.

ரோகா, ருக்கா

துண்டு

அருக்கா

அருக்கு (=குறை, வெட்டு) + ஆ = அருக்கா >>> ருக்கா >>> ரோக்கா = வெட்டப்பட்டது = துண்டு.

ரோகம்

நோய்

உரோகம்

உரம் (=வலிமை, திண்மை) + உகு (=தேய், அழி) + அம் = உரவுகம் >>> உரௌகம் >>> உரோகம் >>> ரோகம் = உடல் வலிமையையும் மனத்திண்மையையும் தேய்த்து அழிப்பது.

ரோகி

நோயாளி

உரோகி

உரோகம் (=நோய்) + இ = உரோகி >>> ரோகி = நோயாளி

ரோசம், ரோச~ம்

தூண்டப்படும் சினம்

உரோச்சம்

உரு (=சின, தோன்று) + ஓச்சு (=தூண்டு) + அம் = உரோச்சம் >>> ரோசம் = தூண்டுவதால் தோன்றும் சினம்

ரோதம்

நீர்க்கரை

இறோந்தம், இரோத்தம்

இறை (=சிறகு) + உந்து (=நீர்) + அம் = இறோந்தம் >>> இரோத்தம் >>> ரோதம் = நீரின் சிறகுகள் = கரைகள்.

ரோதம்

அணைக்கட்டு

இறோந்தம், இரோத்தம்

இறை (=தங்கல், நிறை, கட்டு) + உந்து (=நீர்) + அம் = இறோந்தம் >>> இரோத்தம் >>> ரோதம் = நீர் தங்கி நிறையுமாறு கட்டப்பட்டது. 

ரோதனம்,ரோதம், ரோதனை

தொந்தரவு செய்தல்

அரோத்தனம்

அரி (=இம்சி) + ஒற்று (=தொடர்) + அணம் = அரோற்றணம் >>> அரோத்தனம் >>> ரோதனம் = தொடர்ந்து இம்சித்தல்.

ரோதனம்

அழுகை

அரோந்தணம்,

அரோத்தனம்

அரி (=துன்பம், கண், ஒழுகு) + உந்து (=நீர்) + அணம் = அரோந்தணம் >>> அரோத்தனம் >>> ரோதனம் = துன்பத்தால் கண்ணில் இருந்து நீர் ஒழுகுதல்.

ரோதனம்

தடை செய்தல்

இரோத்தனம்

இரி (=செல், இயங்கு) + ஒற்று (=கட்டு) + அணம் = இரோற்றணம் >>> இரோத்தனம் >>> ரோதனம் = இயங்க விடாமல் கட்டுதல்.

ரோதை, ரோதா, ரோத்தை

வண்டிச் சக்கரம்

ஆரோந்தை

ஆரம் (=சக்கரம்) + உந்து (=வண்டி) + ஐ = ஆரோந்தை >>> ஆரோத்தை >>> ரோத்தை, ரோதை, ரோதா = வண்டிச்சக்கரம்

ரோதை, ரோதா, ரோத்தை

சக்கரத் தடம்

ஆரோத்தை

ஆரம் (=சக்கரம்) + ஒற்று (=தரம்) + ஐ = ஆரோற்றை >>> ஆரோத்தை >>> ரோத்தை, ரோதை, ரோதா = சக்கரத் தடம்.

ரோந்து

வட்டமாகச் சுற்றுதல், உளவறிய இயங்குதல்.

ஆரோந்து, ஊரொத்து

(1). ஆரம் (=வட்டம்) + உந்து (=செல்) = ஆரவுந்து >>> ஆரௌந்து >>> ஆரோந்து >>> ரோந்து = வட்டமாகச் செல்லுதல். (2). ஊர் (=வசிப்பிடம், இயங்கு) + ஒற்று (=உளவறி) = ஊரொற்று >>> ஊரொத்து >>> ரோந்து = ஊரை உளவறிய இயங்குதல். 

ரோந்தை

அசிங்கம்

ஒறோத்தை

ஒறு (=வெறு) + ஊத்தை (=கழிவு) = ஒறோத்தை >>> ரோத்தை >>> ரோந்தை = வெறுக்கத்தக்க கழிவு

ரோந்தை

பொய், புரட்டு

அரோத்தை

அறம் (=தன்மை) + ஊற்று (=துளை) + ஐ = அறோற்றை >>> அரோத்தை >>> ரோந்தை = துளையின் தன்மை உடையது..

ரோமம்

மயிர்

உரோமம்

உரி (=தோல்) + ஓம்பு (=பற்று, வளர்) + அம் = உரோம்பம் >>> உரோமம் >>> ரோமம் = தோலைப் பற்றி வளர்வது.

ரோசா

முளரிப் பூ

உரூசா

உரு (=சிவப்பு) + ஊசி (=முள்) + ஆ = உரூசா >>> ரோசா = முள்ளுடைய சிவப்பு மலர்.

ரௌத்திரம்

மிக்க கோபம்

உரௌத்திரம்

உரவு (=வலிதாகு) + தெறு (=சின) + அம் = உரவுத்தெறம் >>> உரௌத்திரம் >>> ரௌத்திரம் = வலிய சினம்.

ரௌரவம்

நரகம்

இரௌரவம்

இறவு (=மரணம்) + அரவு (=வருத்து) + அம் = இறவரவம் >>> இரௌரவம் >>> ரௌரவம் = இறந்தவர்களை வருத்துமிடம்

லக்கம், லக்கு

குறி, குறியீடு, குறிக்கோள்

இலக்கம், இலக்கு

இலங்கு (=தோன்று) >>> இலக்கு (=தோற்றுவி, எழுது, குறி) + அம் = இலக்கம் >>> லக்கம் = குறி, குறியீடு. ஒ.நோ: எழு (=தோன்று) >>> எழுது (=தோற்றுவி, குறி) >>> எழுத்து = தோற்றுவிக்கப் பட்டது, குறிக்கப்பட்டது, குறியீடு.

லக்கடி, லக்டி

விறகு

உலக்கட்டி

உல (=காய், வற்று) + கட்டை (=மரத்துண்டு) + இ = உலக்கட்டி >>> லக்கடி = காய்ந்த மரத்துண்டு

லக்கினம்

தோன்றிய பிரிவு

இலக்கினம்

இலங்கு (=தோன்று, பிற) + இனம் (=பிரிவு) = இலங்கினம் >>> இலக்கினம் >>> லக்கினம் = தோன்றிய பிரிவு.

லக்குறடு

உலையில் உதவும் குறடு

உலைக்குறடு

உலை + குறடு = உலய்க்குறடு >>> உலக்குறடு >>> லக்குறடு = உலையில் காய்ந்தவற்றை எடுக்க உதவும் குறடு.

லக்கு

கண்களின் குறி

இலக்கு

இல் (=குத்து) + அக்கு (=கண்) = இலக்கு >>> லக்கு = கண்கள் குத்திட்டு நிற்கும் நிலை.

லக்தி

அடுத்திருக்கும் நிலம்

அளத்தி

அளம் (=இடம், நிலம்) + அத்து (=சேர், அடு) + இ = அளத்தி >>> லக்தி = அடுத்த நிலம்.

லகம், லகாம், லகான்

கடிவாளக் கயிறு

இளக்கம்

இளை (=தளர்) + அக்கம் (=கயிறு) = இளக்கம் >>> லகம் >>> லகாம், லகான் = தளர்த்த உதவும் கயிறு.

லகரி

பேரலை

அலகரி

அலை + கருமை (=பெருமை) + இ = அலைகரி >>> அலகரி >>> லகரி = பெரிய அலை

லாகிரி

போதைதரும் பொடி

அலாக்கிரி

அல் (=மயக்கம்) + ஆக்கம் (=உணவு) + ஈர் (=நுண்மை) + இ = அலாக்கீரி >>> லாகிரி = மயக்கம் தரும் நுண் உணவு.

லகாய்

தண்டித்தல்

இளகை

இளி (=குற்றம்) + அகை (=வருத்து) = இளகை >>> லகை >>> லகாய் = குற்றத்திற்காக வருத்துதல்

லகு

மெலிந்த பொருள்

இளகு

இளை (=மெலி) + அகம் (=பொருள்) + உ = இளகு >>> இலகு = மெலிவான பொருள்.

லகிமா

மென்மை ஆக்கும் ஆற்றல்

இளகிமா

இளகு (=மெலிந்த பொருள்) >>> இளகி (=மெலியச்செய்) + மா (=ஆற்றல்) = இளகிமா >>> லகிமா = கனமான பொருளை மெலியச்செய்யும் ஆற்றல்.

லங்கடா

நொண்டி

ஒலக்கடா

ஒல்கு (=சாய்) + அடி (=நடை) + ஆ = ஒல்கடா >>> ஒலக்கடா >>> லங்கடா = சாய்ந்த நடையைக் கொண்டவன்.

லங்கணம், லங்கனம்

பட்டினி

இலாக்கணம்

இல் (=இன்மை) + ஆக்கம் (=உணவு) + அணம் = இலாக்கணம் >>> லங்கணம் = உணவு இன்மை.

லங்கர்

நங்கூரம்

ஆலக்கார்

ஆலம் (=கடல்) + அகை (=செலுத்து) + ஆர் (=நிலம், பொருந்து, கூர்மை) = ஆலக்கார் >>> லங்கர் = கடலில் செலுத்தப்பட்டு நிலத்தில் பொருந்தும் கூரிய பொருள்.

லங்கணம்

கடலைக் கடத்தல்

ஆலக்கானம்

ஆலம் (=கடல்) + அகை (=செலுத்து) + ஆனம் (=மரக்கலம்) = ஆலக்கானம் >>> லங்கணம் = கடலில் மரக்கலம் செலுத்தல்.

லங்கணம்

நெறி தவறுதல்

அலங்காணம்

அலங்கு (=அசை) + ஆணம் (=உறுதி) = அலங்காணம் >>> லங்கணம் = உறுதியில் இருந்து அசைதல் = நெறி தவறுதல்.

லங்குனி

குதிரைப் பல் அசைவு

அலங்குன்னி

அலங்கு (=அசை) + உன்னி (=குதிரை) = அலங்குன்னி >>> லங்குனி = குதிரையின் பற்களில் உண்டாகும் அசைவு.

லங்கோடி, லங்கோடு

கோமணம்

இலங்கோடு

இலம் (=வறுமை) + கோடி (=ஆடை) + உ = இலங்கோடு >>> லங்கோடு = வறுமையின் ஆடை = கோமணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.