வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம் - பகுதி 43

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றிய முறையும்

மைத்திரம்

நட்பு

முற்றீரம்

மித்திரம் (=நட்பு) >>> மைத்திரம்

மைதுனம்

புணர்ச்சி

மைதுனம்

மை (=உடல்) + துன் (=செறி, இணை) + அம் = மைதுனம் = உடல்களின் இணைவு.

பைத்தியம்

பித்து

மைந்தியம்

மைந்து (=பித்து) + இயம் = மைந்தியம் >>> பைத்தியம்

மையத்து

பிணம்

மையற்றம்

மை (=உடல்) + அற்றம் (=அழிவு, மரணம்) = மையற்றம் >>> மையத்தம் >>> மையத்து = மரணித்த உடல்.

மையம்

சந்தேகம், நடு

மையம்

(3). மையா (=மயங்கு, சந்தேகி) + அம் = மையம் = சந்தேகம் = ஒரு முடிவுக்கும் வராமல் நடுவிருத்தல் >>> நடு.

மைரேயம்

மது

மயரேயம்

மயர் (=மயக்கம்) + ஏய் (=பொருந்து) + அம் (=நீர், உணவு) = மயரேயம் >>> மைரேயம் = மயக்கத்தைப் பொருந்தச்செய்யும் நீருணவு.

மைனம்

மீன்

மீனம்

மீனம் (=மீன்) >>> மைனம்

மொகர்

முத்திரை

முகார்

முகம் (=உருவம்) + ஆர் (=பொருத்து, பதி) = முகார் >>> மொகர் = பதிக்கப்படும் உருவம்.

மொஞ்சகம்

மயிற்பீலி

மொய்யாகம்

மொய் (=திரள், தொகு) + ஆகம் (=கண்) = மொய்யாகம் >>> மொஞ்சகம் = கண்களின் தொகுதி.

சிகிச்சை

குணப்படுத்து முறை

செகுய்யை

செகு (=வெல்) + உயா (=நோய்) + ஐ = செகுய்யை >>> சிகிச்சை = நோயை வெல்லும் முறை.

மோக்கம்

உயர்நிலை

மூக்கம்

முக (=உயர்) + அம் = மூக்கம் >>> மோக்கம் = உயர்நிலை.

மோகம்

அறியாமை, மயக்கம்

மூழ்கம்

மூழ்கு (=ஆழ், மறை) + அம் = மூழ்கம் >>> மூய்கம் >>> மோகம் = மறைப்பு, அறியாமை, மயக்கம்

மோகம்

ஆசை

மூகம்

முக (=விரும்பு) + அம் = மூகம் >>> மோகம் = விருப்பம், ஆசை

மோகரம்

பேரொலி

முக்காரம்

முக்காரம் (=பேரொலி) >>> மோகரம்

மோகரி

பேரொலிசெய்

முக்காரி

முக்காரம் (=பேரொலி) >>> முக்காரி >>> மோகரி = பேரொலி செய்

மோகனம்

புணரும் விருப்பம்

மூகணம்

முக (=விரும்பு) + அணை (=புணர்) + அம் = மூகணம் >>> மோகனம் = புணரும் விருப்பம்.

மோகி

விரும்பு

மோகி

மோகம் (=விருப்பம்) >>> மோகி = விரும்பு

மோகிதம்

காம விருப்பம்

மோகிதம்

மோகம் (=விருப்பம்) + இதம் (=இன்பம்) = மோகிதம் = இன்பம் பெறுவதற்கான விருப்பம்.

மோகி

போதைப் பொருட்கள்

மோகி

மோகம் (=மயக்கம்) + இ = மோகி = மயக்கத்தை உண்டாக்கும் பொருட்கள்.

மோகினி

ஆசையுண்டா க்கும் பெண்

மோகீனி

மோகம் (=விருப்பம், ஆசை) + ஈன் (=உண்டாக்கு) + இ = மோகீனி >>> மோகினி = விருப்பத்தை / ஆசையை உண்டாக்குபவள்.

மொயினி

அன்பளிப்பு

மொயீனி

மொய் (=அன்பு) + ஈன் (=கொடு) + இ = மொயீனி >>> மொயினி = அன்பளிப்பு.

மோகினி

அன்பளிப்பு

மோகீனி

மோகம் (=விருப்பம்) + ஈன் (=கொடு) + இ = மோகீனி >>> மோகினி = விரும்பிக் கொடுப்பது.

மோசகம்

துறவு

பூசாக்கம்

பூசு (=கழுவு, கைவிடு) + ஆக்கம் (=பொருள்) = பூசாக்கம் >>> மூசகம் >>> மோசகம் = பொருட்களைக் கைவிடுதல்.

மோசகம், மோசம்

வஞ்சனை, தவறு

பொய்யாக்கம்

பொய் + ஆக்கம் = பொய்யாக்கம் >>> போசாக்கம் >>> மோசகம் = பொய்யான ஆக்கம் = வஞ்சனை, தவறு.

மோசம்

வாழை

மூசம்

மூசு (=நெருங்கிச் சூழ்) + அம் (=அழகு, ஒளி, உணவு) = மூசம் >>> மோசம் = நெருங்கிச் சூழ்ந்திருக்கும் அழகிய ஒளிமிக்க உணவு.

மோசம்

முருங்கை

மூசம்

முசி (=திருகு, முறுங்கு) + அம் (=உணவு) = மூசம் >>> மோசம் = திருகிய / முறுங்கிய உணவு.

மோசனம்

விடுதலை

பூசணம்

பூசு (=கழுவு, கைவிடு) + அணம் = பூசணம் >>> மூசனம் >>> மோசனம் = கைவிட்ட நிலை = விடுதலை.

மோசாடம்

சந்தனம்

பூசாற்றம்

பூசு + ஆற்று (=குளிர்வி) + அம் = பூசாற்றம் >>> மூசாட்டம் >>> மோசாடம் = குளிர்விப்பதற்காகப் பூசப்படுவது.

மோசாடம்

வாழைப்பழம்

மோசாடம்

மோசம் (=வாழை) + அடு (=நெருங்கி இரு) + அம் (=உணவு) = மோசாடம் = வாழையில் நெருங்கி இருக்கும் உணவு.

மோசி

கைவிடு

பூசு

பூசு (=கழுவு, கைவிடு) + இ = பூசி >>> மோசி = கைவிடு

மோசு, மவுசு

விருப்பம்

மோயு

மொய் (=அன்பு, விருப்பம்) + உ = மோயு >>> மோசு >>> மவுசு

மோசூல்

பாதுகாவல், காவல்காரன்

மூயுள்

மூய் (=மூடு, பாதுகா) + உள் = மூயுள் >>> மோசூல் = உள்ளே மூடிப் பாதுகாத்தல் >>> காவல்காரன்.

மோசை

காதல் மோதிரம்

மொயிழை

மொய் (=காதல்) + இழை (=அணி) = மொயிழை >>> மோசை = காதலின் அடையாளமாக அணிவிக்கப்படுவது.

மோட்சம்

உயர்நிலை வீடு

மோட்டம்

மோடு (=உயர்நிலை, வீடு) + அம் = மோட்டம் >>> மோட்சம் = உயர்நிலையில் உள்ள வீடு.

மோட்சம்

விடுதலை

பூச்சம்

பூசு (=கழுவு, கைவிடு) + அம் = பூச்சம் >>> மூச்சம் >>> மோச்சம் >>> மோட்சம் = கைவிட்ட நிலை = விடுதலை.

மோட்டா

பெரியது

மோட்டா

மோடு (=பருமை) + ஆ = மோட்டா = பருத்தது / பெரியது.

மோடசகன்

திருடன்

மோடாயகன்

மோடு (=முகடு) + ஆய் (=பிரி) + அகம் (=வீடு, உள்) + அன் = மோடாயகன் >>> மோடசகன் = வீட்டின் முகட்டைப் பிரித்து உள்ளே நுழைபவன் = திருடன்.

மோடனம்

காற்று

வேறாணம்

வேறு (=மாறு) + ஆணம் (=பற்றுக்கோடு, நிலை) = வேறாணம் >>> மேடனம் >>> மோடனம் = நிலைமாறும் இயல்புடையது.

மோடனம்

அரைத்தல்

போடணம்

பொடி + அணம் = போடணம் >>> மோடனம் = பொடிசெய்தல்

மோடனம்

அவமானம்

மோடணம்

மோடு (=பெருமை) + அணை (=அழி) + அம் = மோடணம் >>> மோடனம் = பெருமையை அழிப்பது.

மோடனம்

அறியாமை, மாயவித்தை

மூடணம்

மூடம் (=அறியாமை, மயக்கம்) + அணம் = மூடணம் >>> மோடனம் = அறியாமை, மயக்க வித்தை

மோடி

செருக்கு, ஆடம்பரம்

மோடு

மோடு (=பெருமை, செருக்கு, ஆடம்பரம்) + இ = மோடி

மோடி

விதம்

மூறி

முறை + இ = மூறி >>> மோடி = முறை, விதம்

மோடி

கம்பீரம்

வீறி

வீறு (=கம்பீரம்) + இ = வீறி >>> மீடி >>> மோடி

மோடி

வஞ்சனை, மாயவித்தை

மூடி

மூடம் (=மறைப்பு) + இ = மூடி >>> மோடி. = வஞ்சனை, கண்கட்டி வித்தை.

மோடி

மொத்தம்

போற்றி

போற்று (=கூட்டு) + இ = போற்றி >>> மோட்டி >>> மோடி = கூட்டு.

மோடி

பிணக்கு

வேறி

வேறு + இ = வேறி >>> மேடி >>> மோடி = வேறுபாடு, பிணக்கு

மோணம்

வற்றல்

முற்றம்

முற்று (=உலர்) + அம் (=உணவு) = முற்றம் >>> முட்டம் >>> மோடம் >>> மோணம் = வற்றிய உணவுப் பொருள்.

மோணம்

பெட்டி

மூடம்

மூடு + அம் = மூடம் >>> மோடம் >>> மோணம் = மூடப்படுவது

மோதகம்

கொழுக் கட்டை

போதாக்கம்

பொதி + ஆக்கம் (=உணவு) = போதாக்கம் >>> மோதகம் = உள்ளே பொதித்துச் செய்த உணவு.

மோதகம், மோதம்

மகிழ்ச்சி

வீறகம்

வீறு (=இன்பம்) + அகம் (=எண்ணம்) = வீறகம் >>> மீதகம் >>> மோதகம் = இன்பமான எண்ணம்.

மோதகம்

இணக்கம்

போதகம்

போது (=பொருந்து) + அகம் (=எண்ணம்) = போதகம் >>> மோதகம் = பொருத்தமான எண்ணம்.

மோதம், மோதவம்

வாசனை

வெறி

வெறி (=வாசனை) + அம் = வேறம் >>> மேதம் >>> மோதம்

மோதினி

கத்தூரி, மல்லிகை

வெறீனி

வெறி (=நறுமணம்) + ஈன் (=தா) + இ = வெறீனி >>> மேதினி >>> மோதினி = நறுமணம் தருவது.

மோது

கட்டு

பொத்து

பொத்து (=கட்டு) >>> போது >>> மோது

மோரி

வடிகால்

புரை

புரை (=துளை) >>> முரி >>> மோரி = நீர் செல்லும் வழி.

மோச்`தர்

மாதிரி

மாதிரி

மாதிரி >>> மௌத்ரி >>> மோத்தர் >>> மோச்`தர்

மௌலி

கள்

முள்ளி

முள்ளி (=கள்) >>> மௌலி

மௌத்து

மரணம்

மாவுந்து

மா (=உயிர்) + உந்து (=நீங்கு, கழி) = மாவுந்து >>> மவுத்து >>> மௌத்து = உயிர் நீங்குதல் = மரணம்

மௌத்திகம்

முத்து

முற்றிங்கம்

முற்று (=வலிமை, முழுமை, உருண்டை) + இங்கம் (=பொருள்) = முற்றிங்கம் >>> மௌத்திகம் = வலிமை மிக்க உருண்டைப் பொருள்.

யக்கதரு

ஆலமரம்

இயக்கதரு

இயக்கம் (=பெருமை) + தரு (=மரம்) = இயக்கதரு >>> யக்கதரு = பெரிய மரம் = ஆலமரம்

யக்கியம், யக்கிஞம், யக்ஞம்

யாகம்

ஆக்கீயம்

அகை (=எரி) + ஈ (=கொடு) + அம் (=உணவு) = ஆக்கீயம் >>> யக்கியம், யக்கிஞம், யக்ஞம் = தீயில் உணவுப் பொருட்களை இடுதல் = யாகம்.

யங்கோரம்

நெல்லி

ஆங்கோலம்

ஆம் (=நீர்) + கோலி (=உருண்டை) + அம் (=உணவு) = ஆங்கோலம் >>> யங்கோரம் = நீருடைய உருண்டையான உணவு.

யசசு

புகழ்

ஆயசு

ஆய் (=அழகு, சிறப்பு) + அசை (=சொல்) + உ = ஆயசு >>> யசசு = சிறப்பிக்கும் சொல்.

யசமான், யசமானன்

தலைவன்

அசைமான்

அசை (=கட்டளை) + மான் (=மனிதன்) = அசைமான் >>> யசமான் = கட்டளையிடும் மனிதன் = தலைவன்

யட்சம்

நாய்

அற்றம்

அற்றம் (=நாய்) >>> அட்டம் >>> யட்டம் >>> யட்சம்

யட்சம்

மந்திரம்

இயட்டம்

இயம் (=சொல், மொழி) + அடை (=மறை) + அம் = இயட்டம் >>> யட்டம் >>> யட்சம் = மறைமொழி.

யட்சவாசம்

ஆலமரம்

இயக்கவாசம்

இயக்கம் (=பெருமை) + வாசம் (=தங்குமிடம்) = இயக்கவாசம் >>> யக்சவாசம் >>> யட்சவாசம் = பெரிய தங்குமிடம்.

யட்டி

தண்டாயுதம்

ஆட்டி

அடு (=தாக்கு) + இ = ஆட்டி >>> யட்டி = தாக்கும் ஆயுதம்

யட்டி

ஊன்றுகோல்

ஆட்டி

அடை (=தாங்கி) + இ = ஆட்டி >>> யாட்டி = தாங்கும் தண்டு

யட்டி

மாலை

ஆட்டி

அடை (=சேர், கட்டு) + இ = ஆட்டி >>> யட்டி = கட்டப்பட்டது.

யத்தனம், எத்தனம்

செயல், முயற்சி

ஆற்றணம்

ஆற்று (=செய்) + அணம் = ஆற்றணம் >>> யத்தனம் = செயல்

யதார்த்தம்

உண்மை

அறாருத்தம்

அறம் (=இயல்பு) + அருத்தம் (=பொருள்) = அறாருத்தம் >>> யதார்த்தம் = இயல்பான பொருள்.

யதி

துறவி

அறி

அறு (=நீக்கு, துற) + இ = அறி >>> யதி = துறந்தவர்.

யதி

அடக்கம், ஓய்வு

ஆறி

ஆறு (=அடங்கு, பொறு, ஓய்) + இ = ஆறி >>> யதி = அடக்கம், ஓய்வு

யதி

மோனை

ஆதி

ஆதி (=முதல்) >>> யதி = முதல் எழுத்து

யதி, ச^தி

சீரோசை முடியுமிடம்

அறி

அறு (=முடி) + இ = அறி >>> யதி >>> ச^தி = முடிவு >>> சீரோசை முடியுமிடம்.

யதேச்சம், யதேச்`டம், யதேச்சை

விருப்பத்தின் படி ஆதல்

ஆத்தேயம்

ஆத்தம் (=விருப்பம்) + ஏய் (=நிகழ்) + அம் = ஆத்தேயம் >>> யதேச்சம் >>> யதேச்சை, யதேச்`டம் = விரும்பியவாறு நிகழ்தல்.

யந்திரம்

சக்கரம், தேர், செக்கு

ஆதிரம்

ஆதி (=வட்டம்) + இரி (=செல், இயங்கு) + அம் = ஆதிரம் >>> யந்திரம் = வட்டமாக இயங்குவது.  

யந்திரு

பாகன்

ஆதூரு

ஆதி (=ஓட்டம்) + ஊர் (=ஏறு) + உ = ஆதூரு >>> யந்துரு >>> யந்திரு = ஏறி ஓட்டுபவன் = பாகன்.

யமகம்

மடக்கு அணி

இயவாக்கம்

இயம் (=சொல்) + ஆக்கம் (=பொருள், பாட்டு) = இயவாக்கம் >>> இயமகம் >>> யமகம் = ஒரு சொல்லைப் பல பொருட்களில் அமைத்து இயற்றப்படும் பாட்டு வகை.

யமம்

தவம்

அமம்

அமை (=பொறு, தாங்கு) + அம் = அமம் >>> யமம் = பொறுத்தல்.

யமம்

காக்கை

யாப்பம்

யாப்பு (=தந்திரம்) + அம் = யாப்பம் >>> யமம் = தந்திரம் மிக்கது.

யமம்

தடை

யாவம்

யா (=அணை, தடு) + அம் = யாவம் >>> யமம் = தடை.

யமம்

திருவிழா

அயம்

அயம் (=விழா) + அம் = அயமம் >>> யமம்

யமன்

எமன்

அவன்

அவி (=அழி, கொல்) + அன் = அவன் >>> யமன்

யமளம், யாமளம்

இரட்டை

யாவாளம்

யா (=கட்டு, பிணை) + ஆள் + அம் = யாவாளம் >>> யாமளம், யமளம் = ஆட்களின் பிணை.

யமி

முனிவன்

யமி

யமம் (=தவம்) + இ = யமி = தவம் புரிபவர்.

யவ்வனம், யௌவனம்

அழகு, இளமை

அவ்வணம்

அவ்வை (=அழகு) + அணம் = அவ்வணம் >>> யவ்வனம் >>> யௌவனம் = அழகு, இளமை

யமம்

கோதுமை, நெல்

அமம்

அம் (=ஒளி, உணவு) + அம் = அமம் >>> யமம் = ஒளிமிக்க / மஞ்சள்நிற உணவுப் பொருட்கள் = கோதுமை, நெல்.

யவகம்

கோதுமை, நெல்

அமாக்கம்

அம் (=ஒளி) + ஆக்கம் (=உணவு) = அமாக்கம் >>> யவகம் = ஒளிமிக்க / மஞ்சள்நிற உணவுப் பொருட்கள் = கோதுமை, நெல்.

யவபலம்

மூங்கில்

ஆம்பல்

ஆம்பல் (=மூங்கில்) + அம் = ஆம்பலம் >>> யாம்பலம் >>> யவபலம்

யவனம், யாவனம்

வரிப்பணம்

ஆயப்பணம்

ஆயம் (=வரி) + பணம் = ஆயப்பணம் >>> யவனம் = வரிப்பணம்

யவனம்

விரைவு

ஆய்வண்ணம்

ஆய் (=பாய், விரை) + வண்ணம் (=நிலை) = ஆய்வண்ணம் >>> யாவனம் >>> யவனம் = விரையும் நிலை.

யவனிகை

இடுதிரை

ஆழ்பணிகை

ஆழ் (=மறை) + பணி (=துணி) + இகு (=தாழ்ந்து விழு) + ஐ = ஆழ்பணிகை >>> ஆபணிகை >>> யாவனிகை >>> யவனிகை = தாழ்ந்து விழுகின்ற மறைப்புத் துணி.

யவாகு

கஞ்சி

அயவாக்கு

அயம் (=நீர், குழைவு) + ஆக்கம் (=உணவு) + உ = அயவாக்கு >>> யவாகு = நீர் மிக்க குழைவான உணவு = கஞ்சி.

யவை

கோதுமை, நெல்,துவரை

அமை

அம் (=ஒளி, உணவு) + ஐ = அமை >>> யவை = ஒளிமிக்க / மஞ்சள்நிற உணவுப் பொருட்கள் = கோதுமை, நெல், துவரம்பருப்பு

யசமானன், யசமான்

இறைவன், தலைவன்

இயவானன்

இய (=கட) + வான் (=மேலிடம்) + அன் = இயவானன் >>> இயமானன் >>> எசமானன் >>> யசமானன் = கடந்து மேலிருப்பவன்.

யாகம்

வேள்வி

ஆகம்

அகை (=தீ, வளர்) + அம் = ஆகம் >>> யாகம் = தீ வளர்த்தல்.

யாங்கர்

அரக்கர்

அக்கர்

அகை (=அடி, முறி, கொல்) + அர் = அக்கர் >>> யாங்கர் = பிற உயிர்களை அடித்தும் முறித்தும் கொல்பவர்கள்.

யாசகம்

பிச்சை

இழாசாக்கம்

இழி (=தாழ்) + ஆசை (=வேட்கை) + ஆக்கம் (=உணவு, பொருள்) = இழாசாக்கம் >>> இயாசகம் >>> யாசகம் = உணவு / பொருளுக்காகத் தாழ்ந்து வேண்டுதல்.

யாசனை

பிச்சை

இழாசன்னை

இழி (=தாழ்) + ஆசை (=வேட்கை) + அன்னம் (=உணவு) + ஐ = இழாசன்னை >>> இயாசனை >>> யாசனை = உணவுக்காகத் தாழ்ந்து வேண்டுதல்.

யாசி

பிச்சையெடு

யாசி

யாசனை (=பிச்சை) >>> யாசி = பிச்சையெடு

யாணர்

தச்சர்

இழைநர்

இழை (=செதுக்கு, செய்) + நர் = இழைநர் >>> இயைநர் >>> இயாணர் >>> யாணர் = இழைத்துச் செய்பவர்.

யாத்தார்

நண்பர்

ஆத்தார்

ஆத்தம் (=நட்பு) + ஆர் = ஆத்தார் >>> யாத்தார் = நண்பர்.

யாத்திரை

சுற்றுப் பயணம்

ஆத்திரை

ஆதி (=சுற்றுப் பயணம்) + இரி (=செல்) + ஐ = ஆத்திரை >>> யாத்திரை = சுற்றுப் பயணம் செல்லுதல்.

யாத்திரை

வழக்கம்

இயற்றிரை

இயல் (=இயல்பு) + திரி (=இயங்கு) + ஐ = இயற்றிரை >>> யாத்திரை = இயல்பான இயக்கம்.

யாத்திரை

திருவிழாக் கூட்டம்

அயத்திறை

அயம் (=விழா) + திறம் (=கூட்டம்) + ஐ = அயத்திறை >>> யாத்திரை = திருவிழாக் கூட்டம்.

யாதம்

அங்குசம்

அயாதம்

அயம் (=இரும்பு) + ஆதி (=ஓட்டம்) + அம் = அயாதம் >>> யாதம் = ஓட்டுவதற்கு உதவும் இரும்புப் பொருள்.

யாதம்

கடல்

அயதம்

அயம் (=நீர்) + அதி (=மிகுதி) + அம் = அயதம் >>> யாதம் = மிக்கநீர்

யாதவம்

மாட்டுக் கூட்டம்

ஆதவம்

ஆ (=மாடு) + தவ (=மிகுதி) + அம் = ஆதவம் >>> யாதவம் = மாடுகளின் கூட்டம்.

யாதவர்

இடையர்

யாதவர்

யாதவம் (=மாட்டுக்கூட்டம்) >>> யாதவர் = மாடுகளை மேய்ப்பவர்

யாதனம்

தெப்பம்

யாற்றாணம்

யாறு (=நீர்) + ஆணம் (=பற்றுக்கோடு) = யாற்றாணம் >>> யாத்தானம் >>> யாதனம் = நீரில் உதவும் பற்றுக்கோடு.

யாதனம், யாதனை

வருத்தம், நோய்

உழத்தணம்

உழத்து (=வருத்து) + அணம் = உழத்தணம் >>> உயத்தனம் >>> யாதனம் = வருத்துவது, நோய்

யாதார்த்தியம்

உண்மை

அறாருத்தியம்

அறம் (=இயற்கை) + அருத்தம் (=பயன்) + இயம் = அறாருத்தியம் >>> யதார்த்தியம் = இயற்கையின் பயன். 

யாதி, யாது

நினைவு

அறி

அறி (=நினை) >>> யதி >>> யாதி = நினைவு.

யாதாச்`து

ஞாபகக் குறிப்பு

யாதச்சு

யாது (=நினைவு) + அச்சு (=எழுத்து, குறிப்பு) = யாதச்சு >>> யாதாச்`து = நினைவுக் குறிப்பு.

யாதிகன்

வழிப் போக்கன்

ஆறிகன்

ஆறு (=வழி) + இக (=செல்) + அன் = ஆறிகன் >>> யாதிகன் = வழியில் செல்வோன்.

யாது

பேய்

அற்று

அற்றம் (=சாவு) + உ = அற்று >>> அத்து >>> யாது = இறந்தது.

யாப்பியம்

பொழுது போக்கு

ஆவிழம்

ஆவு (=விரும்பு) + இழை (=செய்) + அம் = ஆவிழம் >>> ஆபியம் >>> யாப்பியம் = விரும்பியதைச் செய்தல்.

யாப்பியம்

அற்பமானது

ஆய்ப்பியம்

ஆய்ப்பு (=சிறுமை) + இயம் = ஆய்ப்பியம் >>> யாப்பியம் = சிறுமைத் தன்மை கொண்டது

யாப்பு

பாம்பு

ஆம்பு

அம்பு (=நஞ்சு) + உ = ஆம்பு >>> ஆவு, யாப்பு = நஞ்சுடையது.

யாபம்

புணர்ச்சி

யாவம்

யா (=கட்டு, புணர்த்து) + அம் = யாவம் >>> யாபம் = புணர்ச்சி.

யாபனம்

பொழுது போக்குதல்

யாவாணம்

யா (=செய்) + ஆணம் (=விருப்பம்) = யாவாணம் >>> யாபனம் = விரும்பியதைச் செய்தல்.

யாபனம்

தாமதம், இகழ்ச்சி

யாவணம்

யா (=அகலம், நீளம்) + அணம் = யாவணம் >>> யாபனம் = நீட்சி, தாமதம், இகழ்ச்சி.

யாபாரம், யாவாரம்

கூவி விற்றல்

யாமாறம்

(2). யா (=சொல், கூவு) + மாறு (=விற்பனை செய்) + அம் = யாமாறம் >>> யாபாரம், யாவாரம் = கூவி விற்பனை செய்தல்.

வியாபாரம்

பெரிய விற்பனை

வியமாறம்

(2). வியம் (=விரிவு) + மாறு (=விற்பனை செய்) + அம் = வியமாறம் >>> வியாபாரம் = விரிவான விற்பனை.

யாபி

பொழுது போக்கு

யாபி

யாபனம் (=பொழுதுபோக்கு) >>> யாபி = பொழுதினைப் போக்கு, விரும்பியதைச் செய், அனுபவி

யாபி

பரவு

யாவி

யா (=அகலம், நீளம்) >>> யாவி (=நீளு, பரவு) >>> யாபி 

யாமகோடம்

சேவல்

யாமக்கொட்டம்

யாமம் + கொட்டு (=ஒலி) + அம் = யாமக்கொட்டம் >>> யாமகோடம் = யாமப் பொழுதில் ஒலி எழுப்புவது.

யாமகோடம்

நாழிகை வட்டில்

யாமக்கூறம்

யாமம் (=பொழுது) + கூறு + அம் = யாமக்கூறம் >>> யாமகோடம் = பொழுதைக் கூறுவது.

யாமபதி

சந்திரன்

யாமபதீ

யாமம் (=இரவு) + பதம் (=ஒளி) + ஈ (=கொடு) = யாமபதீ >>> யாமபதி = இரவில் ஒளி தருபவன்.

யாமம்

நீளம், அகலம்

யாவம்

யா (=நீளு) + அம் = யாவம் >>> யாமம் = நீளம், அகலம்.

யாமம்

பொழுது

ஆமம்

அமை (=முடிவடை) + அம் = ஆமம் >>> யாமம் = முடியக்கூடியது = பொழுது. ஒ.நோ: அமை (=முடிவடை) + அம் = அமையம் = முடியக்கூடியது = பொழுது.

யாமளம்

பச்சை

ஆய்பலம்

ஆய் (=நிறம்) + பலம் (=இலை) = ஆய்பலம் >>> யாமளம் = இலையின் நிறம் = பச்சை.

யாமளம்

இளமை

ஆய்வளம்

ஆய் (=அழகு) + வளம் (=செழிப்பு) = ஆய்வளம் >>> யாமளம் = அழகும் செழிப்பும் உடைமை = இளமை.

யாமிகன்

இரவுக் காவலன்

யாமிகன்

யாமம் (=இரவு) + இக (=திரி) + அன் = யாமிகன் = இரவில் திரிபவன் = இரவுக் காவலன்.

யாமியம்

சந்தனம்

ஆவீயம்

ஆவி (=நறுமணம்) + ஈ (=தா) + அம் = ஆவீயம் >>> யாமியம் = நறுமணம் தருவது = சந்தனம்.

யாமியம்

பிணையம்

யாப்பீயம்

யாப்பு (=கட்டு, பிணை) + ஈ (=கொடு) + அம் = யாப்பீயம் >>> யாமியம் = பிணையாகக் கொடுக்கப்படுவது.

சா^மீன்

பிணையம்

யாப்பீன்

யாப்பு (=கட்டு, பிணை) + ஈன் (=கொடு) = யாப்பீன் = சா^மீன் = பிணையாகக் கொடுக்கப்படுவது.

யாமினிபதி

சந்திரன்

யாமினிபதீ

யாமினி (=இரவு) + பதம் (=ஒளி) + ஈ = யாமினிபதீ >>> யாமினிபதி = இரவில் ஒளி தருபவன்.

யாமீரன்

சந்திரன்

யாமிரன்

யாமம் (=இரவு) + இரி (=திரி) + அன் = யாமிரன் >>> யாமீரன் = இரவில் திரிபவன்.

யாமுகம்

கவலை

அவூக்கம்

அவி (=கெடு) + ஊக்கம் = அவூக்கம் >>> யாமுகம் = ஊக்கத்தைக் கெடுப்பது = மனக்கவலை.

யாரி

பகைவன்

அரி

அரி (=எதிரி) >>> யாரி

யாலம்

இரவு

ஆலம்

அல் (=இரவு) + அம் = ஆலம் >>> யாலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.