சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
மிருத்தியுபலம் |
இலந்தை |
விருந்துபழம் |
விரை (=கொட்டை) + உந்து (=பெரு, உருள்) + பழம் = விருந்துபழம் >>> மிருத்தியுபலம் = பெரிய உருண்டையான கொட்டையைக் கொண்ட பழம் |
மிருத்தியுபலை |
வாழை |
வீறுந்துபழை |
வீறு (=இனிமை, ஒளி, மிகுதி) + உந்து (=பெரு) + பழம் + ஐ = வீறுந்துபழை >>> மிருத்தியுபலை= ஒளிமிக்க இனிய பெரும்பழம். |
மிருத்தியுபலை |
மூங்கில் |
வீறுந்துவலை |
வீறு (=தீ) + உந்து (=எழுப்பு) + உவலை (=சருகு) = வீறுந்துவலை >>> மிருத்தியுபலை = சருகுகளில் தீயை எழுப்புவது. |
மிருத்து, மிருதை |
மண் |
விருந்து |
விரை (=விதை) + உந்து (=பிற, தோன்று) = விருந்து >>> மிருத்து = விதைகளைப் பிறக்கச் செய்வது. |
மிருத்து |
எமன், சாவு |
பிறிது |
பிறிது (=மரணம்) >>> மிருத்து = சாவு, யமன் |
மிருத்துகரன் |
குயவன் |
மிருத்துகரன் |
மிருத்து (=மண்) + கரம் (=செயல்) + அன் = மிருத்துகரன் = மண்ணைக் கொண்டு செய்பவன். |
மிருத்துசூதி |
நண்டு |
மிருத்துசூறி |
மிருத்து (=நிலம்) + சூறு (=தோண்டு) + இ = மிருத்துசூறி >>> மிருத்துசூதி = நிலத்தைத் தோண்டி வளைசெய்வது. |
மிருத்துவீசம் |
மூங்கில் |
வீறுந்துவீயம் |
வீறு (=தீ) + உந்து (=எழுப்பு) + வீ (=அழிவு) + அம் = வீறுந்துவீயம் >>> மிருத்துவீசம் = தீயை எழுப்பி அழிவை உண்டாக்குவது. |
மிருதகம், மிருதபம் |
பிணம் |
பிறிதாகம் |
பிறிது (=மரணம்) + ஆகம் (=உடல்) = பிறிதாகம் >>> மிருதகம் = மரணம் அடைந்த உடல். |
மிருதங்கம் |
பெரிய தோல் இசைக்கருவி |
வீறுந்தங்கம் |
வீறு (=ஒலி) + உந்து (=எழுப்பு, பெரு) + அங்கம் (=பொருள்) = வீறுந்தங்கம் >>> மிருதங்கம் = ஒலி எழுப்பும் பெரிய பொருள். |
மிருதங்கம் |
மூங்கில் |
வீறுந்தகம் |
வீறு (=தீ) + உந்து (=எழுப்பு) + அகம் (=இலை) = வீறுந்தகம் >>> மிருதங்கம் = இலைகளில் தீயை எழுப்புவது. |
மிருதண்டன், மிருதாண்டன் |
சூரியன் |
வீறுந்தண்டன் |
வீறு (=ஒளி) + உந்து (=செலுத்து) + அண்டம் (=உலகம்) + அன் = வீறுந்தண்டன் >>> மிருதண்டன் = உலகிற்கு ஒளி செலுத்துபவன் |
மிருதம் |
மரணம், போர், பிணம், நஞ்சு |
பிறிதம் |
பிறிது (=மரணம்) + அம் = பிறிதம் >>> மிருதம் = மரணம், மரணம் அடைந்தது, மரணம் தருவது. |
மிருதமத்தம், மிருதுமத்தம் |
நரி |
விருந்தமற்றம் |
விருந்தம் (=உணவு) + மறை (=ஏமாற்று) + அம் = விருந்தமற்றம் >>> மிருதமத்தம் = ஏமாற்றி உணவைப் பெறுவது. |
மிருதாரசிங்கி |
ஈயம் |
வீறுதாரசிங்கி |
வீறு (=பொடி) + தாரம் (=வெண்மை) + சிங்கி (=நஞ்சு) = வீறுதாரசிங்கி >>> மிருதாரசிங்கி = வெண்ணிற நச்சுப் பொடி. |
சிங்கி |
நஞ்சு |
இக்கி |
இகு (=கொல்) + இ = இக்கி >>> சிக்கி >>> சிங்கி = கொல்வது. |
மிருதி |
மரணம் |
பிறிது |
பிறிது (=மரணம்) + இ = பிறிதி >>> மிருதி |
மிருதி |
இற |
பிறிதி |
பிறிது (=மரணம்) + இ = பிறிதி >>> மிருதி = மரணி, இற |
மிருதி |
எண்ணம் |
வீறுதி |
வீறு (=தலை) + உதி (=தோன்று) = வீறுதி >>> மிருதி = தலையில் தோன்றுவது. |
மிருதினி |
நிலம் |
விருந்தினி |
விரை (=விதை) + உந்து (=பிற) + இனி = விருந்தினி >>> மிருதினி = விதையைப் பிறக்கச் செய்வது. |
மிருது |
மென்மை |
புருறு |
புரை (=குழி) + உறு (=தொடு) = புருறு >>> முருது >>> மிருது = தொட்டால் குழியும் தன்மை. |
மிருது |
மந்தம், பொறுமை |
பொறுதி |
பொறுதி (=பொறுமை, தாமதம்) >>> புருது >>> முருது >>> மிருது = பொறுமை, தாமதம். |
மிருதுளம் |
மென்மை ஆனது |
மிருதுளம் |
மிருது (=மென்மை) + உள் + அம் = மிருதுளம் = மென்மை உடையது. |
மிருதுன்னகம் |
தங்கம் |
வீறுதுன்னாக்கம் |
வீறு (=ஒளி, வளை) + துன்னு (=செறி) + ஆக்கம் (=செல்வம்) = வீறுதுன்னாக்கம் >>> மிருதுன்னகம் = ஒளிச்செறிவுடைய வளையக்கூடிய செல்வம். |
மிருதோற்பவம் |
கடல் |
மிருதோர் பம்பம் |
மிருதை (=பூமி) + உரு (=தோன்று) + பம்பு (=செறி) + அம் (=நீர்) = மிருதோர்பம்பம் >>> மிருதோற்பவம் = பூமியில் தோன்றிச் செறிந்த நீர். |
மிலேச்சன், மிலைச்சன் |
வேடன் |
விலேயன் |
வில் + ஏ (=அம்பு, எய்யும் தொழில்) + அன் = விலேயன் >>> மிலேச்சன் = வில்லில் அம்புகொண்டு எய்யும் தொழிலினன். |
வார்த்தை |
சொல் |
மாறுதை |
(3). மாறு (=பேசு) + தை = மாறுதை >>> வார்த்தை = பேச்சு |
பேமாணி, பேமானி |
கேடு கெட்டவன் |
வேமாணி |
வே (=அழி) + மாண் (=சிறப்பு, பெருமை) + இ = வேமாணி >>> பேமாணி >>> பேமானி = பெருமை / சிறப்பு அழிந்தவன். |
கசுமாலம், கசுமலம், கச்`மாலம் |
அருவருக்கத் தக்க கழிவுப் பொருள் |
காய்மலம் |
காய் (=வெறு, அருவரு) + மலம் (=கழிவு) = காய்மலம் >>> கச்`மாலம் >>> கசுமாலம் >>> கசுமலம் = அருவருக்கத் தக்க கழிவுப் பொருள்.. |
டகாட்டி, டகால்டி |
நம்பிக்கைத் துரோகம் |
இடங்காட்டி |
இடம் + காட்டி = இடங்காட்டி >>> டக்காட்டி >>> டகால்டி = இடத்தைக் காட்டிக் கொடுத்தல் = நம்பிக்கைத் துரோகம். |
டுபாக்கு, டுபாக்கூர் |
இட்டுக் கட்டிக் கூறுதல் |
இடுவாக்கு |
இடு (=இட்டுக்கட்டு) + வாக்கு (=சொல்) = இடுவாக்கு >>> டுபாக்கு >>> டுபாக்கூர் = இட்டுக்கட்டிச் சொல்லுதல். |
கம்மனாட்டி, கம்முனாட்டி |
இழிசெயல் புரிபவன் |
கயமைநாட்டி |
கயமை (=கீழ்மை, இழிவு) + நாட்டு (-=செய்) + இ = கயமைநாட்டி >>> கம்மனாட்டி = இழிவான / கீழான செயல் புரிபவன். |
மீகாமன் |
மாலுமி |
வியங்கமன் |
வியம் (=ஏவல்) + கம் (=நீர்) + அன் = வியங்கமன் >>> மீகாமன் = நீரில் செலுத்துபவன் = மாலுமி. |
மீடம் |
மூத்திரம் |
வீறம் |
வீறு (=நீக்கு, கழி) + அம் (=நீர்) = வீறம் >>> மீடம் = கழிக்கப்பட வேண்டிய நீர் = சிறுநீர். |
மீமாஞ்சம், மீமாஞ்சை |
உயர்சிந்தனை க்குரியது |
மீமானசம் |
மீ (=உயர்ந்த) + மானசம் (=சிந்தனைக் குரியது) = மீமானசம் >>> மீமாஞ்சம், மீமாஞ்சை = உயர்ந்த சிந்தனைக் குரியது. |
மீரம் |
கடல் |
மீறம் |
மீறு (=மிகு, அளவுகட) + அம் (=நீர்) = மீறம் >>> மீரம் = அளவு கடந்த நீர் = கடல். |
மீராசு |
விளைபயன் |
பீறாயு |
பிற (=தோன்று, விளை) + ஆயம் (=பயன், நன்மை) + உ = பீறாயு >>> மீராசு = விளையும் பயன். |
மீலம் |
வானம் |
மேலம் |
மேல் + அம் = மேலம் >>> மீலம் = மேலிருப்பது = ஆகாயம் |
மீலனம் |
கண் இமைத்தல் |
மூலணம் |
முலை (=கண்ணிமை) + அணம் = மூலணம் >>> மீலனம் = கண்ணை இமைத்தல். |
மீனம், மீன் |
மீன் |
மீனம் |
மின் (=மினுக்கு) + அம் (=நீர்) = மீனம் = நீரில் மினுக்குவது |
மீனாண்டி |
சர்க்கரை |
பீனாண்ணி |
பின்னம் (=பொடி) + ஆணு (=இனிப்பு) + இ = பீனாண்ணி >>> மீனாண்டி = இனிப்பான பொடி. |
முக்காரம், முகரம் |
பெரு முழக்கம் |
முக்காரம் |
முக்கு (=பெருமுயற்சி செய்) + ஆர் (=ஒலி) + அம் = முக்காரம் = பெருமுயற்சி செய்து வெளிப்படும் ஒலி = பேரொலி |
முக்காரம் |
தாழ்ப்பாள் |
முக்காரம் |
முக்கு (=மறை) + ஆர் (=இணை, தண்டு) + அம் = முக்காரம் = கதவை மறைத்து இணைக்க உதவும் தண்டு. |
முக்காரம், முச்~காரம் |
பிடிவாதம் |
மிக்காரம் |
மிகு (=எதிர்) + ஆர் (=பொருந்து, ஒப்பு) + அம் = மிக்காரம் >>> முக்காரம் >>> முச்~காரம் = ஒப்புக்கொள்ளாமல் எதிர்த்தல். |
முக்காரம் |
ஓட்டையை அடைத்தல் |
பொக்காரம் |
பொக்கு (=ஓட்டை) + ஆர் (=நிறை) + அம் = பொக்காரம் >>> புக்காரம் >>> முக்காரம் = ஓட்டையை நிறைத்தல். |
முக்கியம் |
மேம்பாடு, முதன்மை |
மிக்கியம் |
மிகு (=சிற, மேம்படு) + இயம் (=தன்மை) = மிக்கியம் >>> முக்கியம் = மேம்பாடு, சிறப்பு, முதன்மை |
முக்தாகரம் |
முத்துச்சிப்பி |
முத்தாகரம் |
முத்து + ஆகரம் (=உறைவிடம்) = முத்தாகரம் >>> முக்தாகரம் = முத்தின் உறைவிடம் = முத்துச்சிப்பி. |
ஆகரம் |
உறைவிடம் |
அங்கறம் |
அங்கு (=தங்கு) + அறை (=இடம்) + அம் = அங்கறம் >>> ஆகரம் = தங்குமிடம். |
வந்தனம் |
பணிவைக் கூறுஞ்சொல் |
மாற்றணம் |
மாறு (=பணி, சொல்) + அணம் = மாற்றணம் >>> மாத்தனம் >>> வந்தனம் = பணிவைக் குறிக்கும் சொல். |
முகந்தகம் |
வெங்காயம் |
மீகந்தாக்கம் |
மீ (=மிகுதி) + கந்தம் (=நெடி) + ஆக்கம் (=உணவு) = மீகந்தாக்கம் >>> முகந்தகம் = மிக்க நெடியைக் கொண்ட உண்பொருள். |
முகம் |
தொடக்கம் |
புகம் |
புகு (=தொடங்கு) + அம் = புகம் >>> முகம் = தொடக்கம் |
முகம் |
வாசல், வாய் |
புகம் |
புகு (=நுழை) + அம் = புகம் >>> முகம் = நுழைவாயில், வாய் |
முகம் |
மேலிடம் |
புகம் |
புகு (=ஏறு, உயர்) + அம் = புகம் >>> முகம் = உயர்நிலை |
முகம் |
நுனி, பார்வை |
புகம் |
புகு (=உட்செல்) + அம் = புகம் >>> முகம் = உள்ளே செல்வது = நுனி, பார்வை. |
முகம் |
தியானம் |
புகம் |
புகு (=அகப்படு) + அம் = புகம் >>> முகம் = அகத்தில் படுவது. |
முகம் |
தோற்றம், இயல்பு,நிலை |
புகம் |
புகு (=நிகழ், தோன்று) + அம் = புகம் >>> முகம் = தோற்றம், வடிவம், இயல்பு, நிலை. |
முகர் |
முத்திரை |
முகார் |
முகம் (=தோற்றம், வடிவம்) + ஆர் (=பொருத்து, பதி) = முகார் >>> முகர் = பொருத்தப் / பதிக்கப்படும் வடிவம். |
முகரம் |
காகம் |
முகாரம் |
முகம் (=வாசல்) + ஆர் (=பொருந்து, ஒலி) + அம் = முகாரம் >>> முகரம் = வீட்டு வாசலில் பொருந்தி ஒலிப்பது. |
முகரம் |
சங்கு |
முக்காரம் |
முக்கு (=பெருமுயற்சி செய்) + ஆர் (=ஒலி) + அம் = முக்காரம் >>> முகரம் = பெருமுயற்சி செய்து ஒலிக்கப்படுவது. |
முகரன், முகரி |
ஆரவாரம் செய்பவன் |
முகரன், முகரி |
முகரம் (=பேரொலி) + அன் = முகரன் = பேரொலி செய்வோன் |
முகரி, முகரை |
மூக்கினடி |
முகரி |
முகர் (=மோந்துபார்) + இ = முகரி = மோந்து பார்க்குமிடம் |
முகரிமை |
பேரறிவு |
மிகறிவை |
மிகு + அறிவு + ஐ = மிகறிவை >>> முகரிமை = மிக்க அறிவு |
முகாக்கினி |
கொள்ளிவாய் பிசாசு |
முகாக்கினி |
முகம் (=வாய்) + அக்கினி (=தீ, கொள்ளி) = முகாக்கினி = வாயில் கொள்ளியை / தீயைக் கொண்ட பிசாசு. |
முகாக்கினி |
காட்டுத்தீ |
மிகாக்கினி |
மிகை (=மிகுதி) + அக்கினி (=தீ) = மிகாக்கினி >>> முகாக்கினி = மிகுதியான தீ. |
முகாந்தரம், முகாந்திரம் |
மூலம் |
புகாற்றரம் |
புகு (=நுழை, செல்) + ஆறு (=வழி) + அரம் = புகாற்றரம் >>> முகாத்தரம் >>> முகாந்தரம் = செல்லும் வழி = மூலம். |
முகாந்தரம், முகாந்திரம் |
காரணம் |
புகாத்தரம் |
புகு (=நிகழ், நட) + ஆதி (=அடிப்படை) + அரம் = புகாத்தரம் >>> முகாந்தரம் = நிகழ்வதற்கான அடிப்படை. |
முகாம், முகான் |
தங்கிச் செல்லுமிடம் |
புகம் |
புகு (=அடை, அகப்படு, செல்) + அம் = புகம் >>> முகாம் = அடைந்து அகப்பட்டுச் செல்லும் / நீங்கும் இடம். |
முகாரி |
தலைவன் |
முகாரி |
முகம் (=தொடக்கம், முன்னிலை) + ஆர் (=பொருந்து) + இ = முகாரி = முன்னிலையில் பொருந்தி இருப்பவன். |
முகாவளி |
எதிர்முகம் |
முகமலை |
முகம் + மலை (=எதிர்) = முகமலை >>> முகாவளி = எதிர்முகம் |
முகாவளி |
எதிர்முகமாக ஆக்கு |
முகமலை |
முகம் + மலை (=எதிர்) = முகமலை >>> முகாவளி = எதிர்முகமாக ஆக்கு. |
முகாபலா, முகாபிலா, முகாபுலா |
எதிர்த்து நிற்கை, ஒப்பிடுகை |
முகமலை |
முகாவளி (=எதிர்முகமாக ஆக்கு) >>> முகாபலி >>> முகாபலா, முகாபுலா, முகாபிலா = எதிர்த்து நிற்கை, எதிரெதிரே வைத்து ஒப்பிடுகை. |
முகூர்த்தம், முகுத்தம் |
நல்லநேரம் |
மிகீறுதம் |
(2). மிகை (=மேன்மை, பெருமை) + இறுது (=பொழுது) + அம் = மிகீறுதம் >>> முகூர்த்தம் = மேன்மையான பொழுது. |
முகுடம் |
கிரீடம் |
முகுடம் |
முகம் (=தலை) + உடு (=அணிவி) + அம் = முகுடம் = தலையில் அணிவிக்கப் படுவது. |
முகுரம் |
கண்ணாடி |
முகுரம் |
முகம் + உரு (=வடிவம், தோன்று) + அம் = முகுரம் = முகத்தின் வடிவத்தைத் தோன்றுமாறு செய்வது. |
முகுரம் |
இலைத்தளிர் |
பூகீரம் |
பூ (=தோன்று, அரும்பு) + கீரை (=இலை) + அம் = பூகீரம் >>> முகுரம் = அரும்பிய இலை = இலைத்தளிர் |
முகுளம் |
பூந்தண்டு |
முகுளம் |
முகை (=மலர்) + உள் + அம் = முகுளம் = மலர் உள்ள இடம். |
முச்சலிக்கை, முச்சலிக்கா |
உடன்படிக்கை |
பொஞ்சளிக்கை |
பொஞ்சு (=உடன்படு) + அளி (=கொடு) + கை = பொஞ்சளிக்கை >>> புச்சலிக்கை >>> முச்சலிக்கை = உடன்பட்டுக் கொடுத்தல். |
முசர், முசரு |
தயிர் |
மூசாரு |
மூசு (=திரள்) + ஆர் (=தங்கு, உறை, உண்ணு) + உ = மூசாரு >>> முசரு, முசர் = திரண்டு உறைந்த உணவுப் பொருள். |
முசலம், முயலம் |
உலக்கை |
மூழலம் |
மூழ் (=ஆழ், அழுந்து) + அலை (=அடி, இடி) + அம் = மூழலம் >>> முயலம் >>> முசலம் = ஆழ்ந்து இடிப்பது. |
முசலி |
பல்லி |
பொஞ்சாலி |
பொஞ்சு (=உடன்படு) + ஆல் (=ஒலி) + இ = பொஞ்சாலி >>> புச்சலி >>> முசலி = உடன்படுவதைப் போல ஒலிப்பது. |
முசலி |
பச்சோந்தி, ஓணான் |
பைசலி |
பை (=நிறம்) + சலம் (=வஞ்சனை, மாறுபாடு) + இ = பைசலி >>> பிசலி >>> மிசலி >>> முசலி = நிறத்தை மாற்றி வஞ்சிப்பது. |
முசலி |
உடும்பு |
மூழளி |
மூழ் (=பற்றிக்கொள்) + அள் (=செறிவு, இறுக்கம்) + இ = மூழளி >>> முசலி = இறுக்கமாகப் பற்றிக் கொள்வது. |
முசலி |
முதலை |
மூழாலி |
மூழ் (=மூழ்கு, மறை) + ஆலம் (=நீர்) + இ = மூழாலி >>> முசலி = நீரில் மூழ்கி மறைந்திருப்பது. |
முசாதகம் |
வெண் தாமரை |
பூசந்தகம், மூசந்தகம் |
(1). பூ (=வெண்மை, மலர்) + சந்தி (=இரவு) + அஃகு (=குவி, மூடு) + அம் (=நீர்) = பூசந்தகம் >>> முசாதகம் = இரவில் மூடிக் கொள்ளும் வெண்ணிற நீர்ப்பூ. (2) மூசு (=மூடு) + அந்தி (=இரவு) + அகம் (=உள், வண்டு) = மூசந்தகம் >>> முசாதகம் = இரவில் வண்டுகளை உள்ளே மூடிக் கொள்வது. |
முசாவரி, முசாபரி, முசாபர் |
பயணம், பயணிகள் |
புழைவரி, புழைபரி |
புழை (=வழி) + வரி / பரி (=செல்) = புழைவரி / புழைபரி >>> முசய்வரி / முசய்பரி >>> முசாவரி / முசாபரி = வழியில் செல்லுதல் = பயணம் >>> பயணிகள். |
முசிறு |
எறும்பு |
மூசீரு |
மூசு (=மொய்) + ஈர் (=உண்ணு, இழு) + உ = மூசீரு >>> முசிறு = உணவை மொய்த்து இழுத்துக் கொண்டு செல்வது. . |
முசிரம் |
வள்ளன்மை |
வீசீரம் |
வீசு (=வழங்கு) + ஈரம் (=அன்பு) = வீசீரம் >>> மிசிரம் >>> முசிரம் = அன்புகொண்டு வழங்குவது. |
முகுந்தம் |
கடல் |
முகுந்தம் |
முகை (=கூட்டம், தொகுதி) + உந்து (=நீர்) + அம் = முகுந்தம் = நீரின் தொகுதி = கடல். |
முஞ்சரம் |
தாமரைத் தண்டு |
மூழரம் |
மூழ் (=மூழ்கு) + அரை (=தண்டு) + அம் (=நீர், உணவு) = மூழரம் >>> முசரம் >>> முஞ்சரம் = நீரில் மூழ்கியிருக்கும் தண்டுணவு |
முஞ்சி |
புல் |
பையி |
பையம் (=புல்) + இ = பையி >>> பிசி >>> புஞ்சி >>> முஞ்சி |
அங்குசம் |
செலுத்த உதவுவது |
அக்குயம் |
(2). அக்கு (=கூர்மை) + உய் (=செலுத்து) + அம் = அக்குயம் >>> அங்குசம் = செலுத்த உதவும் கூரிய பொருள். |
முட்டா |
சொத்து |
வீற்றா |
வீறு (=செல்வம்) + ஆ = வீற்றா >>> மிட்டா >>> முட்டா |
முட்டி, முச்~டி |
மூடிய கை |
மூட்டி |
மூட்டம் (=மூடியிருப்பது) + இ = மூட்டி >>> முட்டி >>> முச்~டி = விரல்களை மூடியிருக்கும் நிலை. |
முட்டி |
பிச்சை |
வீற்றீ |
வீறு (=வளை, பணி, உணவு) + ஈ (=கொடு) = வீற்றீ >>> மிட்டி >>> முட்டி = கொடு என்று பணிந்து பெறும் உணவு. |
முட்டி, மிட்டி |
மண்பானை |
வீற்றீ |
வீறு (= நிலம், மண்) + ஈ (=படை) = வீற்றீ >>> மிட்டி >>> முட்டி = மண்ணைக்கொண்டு படைக்கப்பட்டது. |
முட்டி |
பலியுணவு |
வீற்றீ |
வீறு (=கொல், உணவு) + ஈ (=படை) = வீற்றீ >>> மிட்டி >>> முட்டி = கொன்று படைக்கப்படும் உணவு. |
முட்டி |
செங்கல் துண்டு |
வீற்றி |
வீறு (=மண், துண்டு) + இ = வீற்றி >>> மிட்டி >>> முட்டி = மண்ணாலான சிறிய துண்டு. |
முட்டி |
வெல்லக் கட்டி |
வீற்றி |
வீறு (=இனிமை, துண்டு, உணவு) + இ = வீற்றி >>> மிட்டி >>> முட்டி = இனிப்பான உணவுத் துண்டு. |
முண்டகம் |
தாமரை |
மூடகம் |
மூடு + அகம் (=உள், வண்டு) = மூடகம் >>> முட்டகம் >>> முண்டகம் = உள்ளே வண்டுகளை மூடிக் கொள்வது. |
முண்டகம் |
தலை, நெற்றி |
முட்டாகம் |
முடி (=உச்சி) + ஆகம் (=உடல்) = முட்டாகம் >>> முண்டகம் = உடலின் உச்சியில் இருப்பது = தலை >>> நெற்றி. |
முண்டகம் |
வாழை |
வீற்றாக்கம் |
வீறு (=ஒளி, இனிமை, வளை) + ஆக்கம் (=உணவு) = வீற்றாக்கம் >>> மிட்டாகம் >>> முண்டகம் = ஒளிமிக்க இனிப்பான வளைந்து தொங்கும் உணவினைக் கொடுப்பது. |
முண்டகம் |
கடல் |
முற்றாக்கம் |
முற்று (=மிகு, பெருகு) + ஆக்கம் (=நீர்) = முற்றாக்கம் >>> முட்டாக்கம் >>> முண்டகம் = மிக்க நீருடையது. |
முண்டம் |
தலை, நெற்றி |
முட்டம் |
முடி (=உச்சி) + அம் = முட்டம் >>> முண்டம் = உச்சியில் இருப்பது = தலை >>> நெற்றி. |
முண்டம் |
மொட்டைத் தலை |
முட்டம் |
முடி (=மயிர், அழி, தலை) + அம் = முட்டம் >>> முண்டம் = மயிர் அழிக்கப்பட்ட தலை |
முண்டம் |
குறையுடைய உடல் |
முட்டம் |
முடை (=குறைவு, உடல்) + அம் = முட்டம் >>> முண்டம் = தலை / கை / கால் / உடை போன்றவற்றில் ஏதேனும் குறைவுடைய உடல். |
முண்டம் |
கரு |
பிண்டம் |
பிண்டம் (=கரு) >>> மிண்டம் >>> முண்டம். |
முண்டம் |
முட்டாள் |
மூடம் |
மூடம் (=அறிவின்மை) >>> முட்டம் >>> முண்டம் = அறிவற்றவன் = முட்டாள். |
முண்டம் |
உருண்டை |
முட்டம் |
முட்டை (=உருண்டை) + அம் = முட்டம் >>> முண்டம் |
முண்டம் |
கோல் |
வீற்றம் |
வீறு (=அடி, துண்டு) + அம் = வீற்றம் >>> மீட்டம் >>> முண்டம் = அடிக்க உதவும் துண்டுப் பொருள். |
முண்டம் |
துண்டு |
வீற்றம் |
வீறு (=வெட்டு) + அம் = வீற்றம் >>> மீட்டம் >>> முண்டம் = வெட்டப்பட்டது = துண்டு. |
முண்டம் |
பிட்டு |
பிட்டு |
பிட்டு + அம் = பிட்டம் >>> மிண்டம் >>> முண்டம் |
முண்டம் |
மூட்டுவாய் |
மூட்டு |
மூட்டு + அம் = மூட்டம் >>> முண்டம் |
முண்டம் |
கட்டி |
முற்றம் |
முற்று (=பெரு, வலிமையாகு) + அம் = முற்றம் >>> முட்டம் >>> முண்டம் = வலிமையான பெரும்பொருள். |
முண்டனம், முண்டிதம் |
தலையை மழித்தல் |
முண்டணம் |
முண்டம் (=மழித்த தலை) + அணம் = முண்டணம் >>> முண்டனம் = தலையை மழித்தல். |
முண்டா |
தோள் |
வீற்றா |
வீறு (=வலிமை, வளைவு, இடம்) + ஆ = வீற்றா >>> மிட்டா >>> முண்டா = வலிமை மிக்க வளைவான இடம் = தோள். |
முண்டாசு |
தலைப்பாகை |
முண்டாசு |
முண்டம் (=தலை, நெற்றி) + அசை (=கட்டு, அணி) + உ = முண்டாசு = தலையில் / நெற்றியில் கட்டப்படுவது. |
முண்டான் |
மஞ்சள் கிழங்கு |
வீற்றான் |
வீறு (=வலிமை, ஒளி, துண்டு) + ஆன் = வீற்றான் >>> மிட்டான் >>> முண்டான் = ஒளி / அழகு தரக்கூடிய வலிய துண்டு. |
முண்டி |
முட்டாள் |
மூடி |
மூடம் (=அறிவின்மை) + இ = மூடி >>> முட்டி >>> முண்டி = அறிவற்றவன். |
முண்டி |
தலைமழி |
முண்டி |
முண்டம் (=மழித்த தலை) >>> முண்டி = தலையை மழி |
விதவை |
கணவனை இழந்தவள் |
வீறம்மை |
வீறு (=பொலிவு, நீங்கு) + அம்மை (=பெண்) = வீறம்மை >>> விதவை = பொலிவு நீங்கிய பெண். |
முத்தகம் |
எறிபடை / எய்படை |
முற்றகம் |
முற்று (=அழி, தாக்கு) + அகை (=விட்டுவிட்டுச் செல்) + அம் = முற்றகம் >>> முத்தகம் = விட்டுவிட்டுச் சென்று தாக்கி அழிப்பது = எறியப்படும் / எய்யப்படும் ஆயுத வகைகள் |
முத்தம் |
இன்பம், மகிழ்ச்சி |
வீற்றம் |
வீறு (=இனிமை) + அம் = வீற்றம் >>> மித்தம் >>> முத்தம் = இன்பம், மகிழ்ச்சி. |
முத்தம், முத்தி |
மோட்சம் |
முற்றம் |
முற்று (=இற, அடை) + அம் = முற்றம் >>> முத்தம் = இறந்தபின் அடையப்படுவது. |
முத்தம், முத்தி |
விடுதலை |
வீற்றம் |
வீறு (=நீங்கு, விடுபடு) + அம் = வீற்றம் >>> மித்தம் >>> முத்தம் = விடுபடுதல். |
முத்தம் |
புல் |
முற்றம் |
முறி (= வளை, இலை) + அம் = முற்றம் >>> முத்தம் = வளைந்திருக்கும் இலை = புல். |
முத்தாய் |
குற்றம் சாட்டுபவன் |
மிற்றாய் |
மிறை (=குற்றம்) + ஆய் (=தெரி, சுட்டு) = மிற்றாய் >>> முத்தாய் = குற்றங்களைச் சுட்டிக் காட்டுபவன். |
முத்தாயலே |
குற்றம் சாட்டப் பட்டவர் |
மிற்றேயாள் |
மிறை (=குற்றம்) + ஏய் (=பொருத்து, சுமத்து) + ஆள் = மிற்றேயாள் = முத்தேயால் >>> முத்தாயாலே = குற்றம் சுமத்தப்பட்ட ஆள். |
முத்தாளம் |
காலை |
வீற்றளம் |
வீறு (=ஒளி, தோன்று) + அளவை (=காலம்) + அம் = வீற்றளம் >>> மித்தாளம் >>> முத்தாளம் = ஒளி தோன்றும் காலம். |
முத்தானம் |
அடுப்பு |
பொத்தாணம் |
பொத்து (=தீ மூட்டு) + ஆணம் (=பற்றுக்கோடு) = பொத்தாணம் >>> புத்தானம் >>> முத்தானம் = தீ மூட்டப்படும் பற்றுக்கோடு. |
முத்தி |
திசை |
புற்றி |
புறம் (=பக்கம்) + இ = புற்றி >>> முத்தி = பக்கம், திசை |
முத்தி |
தேமல் |
பொற்றி |
பொறி (=புள்ளி, நிறம்) + இ = பொற்றி >>> புத்தி >>> முத்தி = நிறம் கொண்ட புள்ளி. |
முத்திரை |
அடையாள உருவம் |
முத்தீரை, பொற்றீரை |
(1). முத்து (=பதி) + ஈர் (=எழுது) + ஐ = முத்தீரை >>> முத்திரை. (2). பொறி (=அழுத்து, பதி) + ஈர் (=எழுது) + ஐ = பொற்றீரை >>> புத்திரை >>> முத்திரை = பதிக்கப்படும் எழுத்து / உருவம். |
முத்து |
அழகு, மகிழ்ச்சி |
வீறு |
வீறு (=அழகு, இன்பம்) + உ = வீற்று >>> மித்து >>> முத்து = அழகு, இன்பம் |
முத்து, முந்து |
வெண்குருகு |
புதா, வீற்று |
(1). புதா (=நாரை) + உ = புத்து >>> முத்து. (2). வீறு (=ஒளி, வெண்மை, விரை) + உ = வீற்று >>> மித்து >>> முத்து = வெண்ணிறத்தில் விரைந்து செல்வது. |
முதம் |
மகிழ்ச்சி |
வீறு |
வீறு (=இன்பம்) + அம் = வீறம் >>> பிதம் >>> புதம் >>> முதம் |
முதலை, முதளை |
நீர் விலங்கு |
மிதலை |
மித + அலை (=நீர், இயங்கு) = மிதலை >>> முதலை = நீரில் மிதந்தவாறே இயங்கக் கூடியது. |
முதாம் |
நிரந்தரம் ஆனது |
முற்றம் |
முற்று (=தங்கு, நிலைபெறு) + அம் = முற்றம் >>> முத்தம் >>> முதாம் = நிலைபெற்றது, நிரந்தரமானது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.