சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
காண்டிகை, KAANTIKAI |
விளக்க உரை, BRIEF LECTURE |
காட்டிகை |
காட்டு (=அறிவி, விளக்கு) + இகு (=ஒலி, உரை) + ஐ = காட்டிகை >>> காண்டிகை = விளக்க உரை. |
காண்டீபம், KAANTEEPAM |
வில், BOW |
காட்டேவம் |
கடுமை (=விரைவு) + ஏவு (=செலுத்து) + அம் (=அம்பு) = காட்டேவம் >>> காண்டீவம், காண்டீபம், காண்டிபம், காண்டிவம் = அம்பை விரைவாகச் செலுத்துவது = வில். |
காண்டு, KAANTU |
கோபம், ANGER |
கடுமை |
கடுமை (=சினம்) + உ = காட்டு >>> காண்டு |
காண்டு, KAANTU |
கடினம், DIFFICULTY |
கடுமை |
கடுமை (=கடினம்) + உ = காட்டு >>> காண்டு |
காண்டை, KAANTAI |
மலைக்குகை, ROCK CAVE |
காண்டை |
காண்டம் (=மலை, பிரிவு, பிளவு) + ஐ = காண்டை = மலைப்பிளவு |
காணம், KAANHAM |
செக்கு, OIL PRESS |
காநம் |
காழ் (=முற்று, கொட்டை, வட்டம், மரம், ஒளி, சாறு) + நை (=நசுக்கு, பிழி) + அம் = காநம் >>> காணம் = முற்றிய கொட்டையை நசுக்கி ஒளிரும் சாறு பிழியும் வட்டமான மரம். |
காணி, KAANHI |
நிலம், LAND |
கண் |
கண் (=இடம்) + இ = காணி = இடம், நிலம். |
காணி, KAANHI |
உரிமை, RIGHTS |
காணி |
கண் (=பொருந்து, பற்று) + இ = காணி = பற்று, உரிமை |
காணிக்கை, KAANHIKKAI |
சமர்ப்பணம், OFFERING |
காணிக்கை |
காண் + இகு (=தாழ், பணி, கொடு) + ஐ = காணிக்கை = காணும்போது பணிந்து கொடுக்கப்படுவது. |
காத்தாலை, KAATHTHAALAI |
விடிகாலை, DAWN |
காற்றலை |
கால் (=பொழுது) + தலை (=முதல்) = காற்றலை >>> காத்தாலை = முதல் பொழுது = விடிகாலை. |
காத்தியம், KAATHTHIYAM |
கடித்துண்பவை, MUNCHABLES |
காற்றியம் |
கறி (=கடித்துண்ணு) + இயம் = காற்றியம் >>> காத்தியம் = கடித்து உண்ணப்படுவது. |
காத்திரம், காத்திரி, KAATHTHIRAM |
கீரி, MANGOOSE |
காத்திறம் |
கதம் (=பாம்பு, சினம்) + இறு (=கொல்லு) + அம் = காத்திறம் >>> காத்திரம் = பாம்பைச் சினந்து கொல்வது = கீரி. |
காத்திரம், காத்திரி, KAATHTHIRAM |
கடுங்கோபம், WRATH |
காத்திரம் |
கதம் (=கோபம்) + இருமை (=பெருமை, மிகுதி) + அம் = காத்திரம் = பெருங்கோபம் |
காத்திரம், KAATHTHIRAM |
உடல், BODY |
காற்றிறம் |
கால் (=காற்று, உயிர், தண்டு) + திறம் (=நிலைபேறு) = காற்றிறம் >>> காத்திரம் = உயிர் நிலைபெற்றுள்ள தண்டு = உடல். |
காத்திரம், KAATHTHIRAM |
உடல் உறுப்பு, BODY PART |
காற்றிறம் |
கால் (=பிரிவு) + திறம் (=உடல்) = காற்றிறம் >>> காத்திரம் = உடலில் உள்ள பிரிவுகள் = உடல் உறுப்புக்கள் |
காத்திரம், KAATHTHIRAM |
யானைமுன்கால், FRONTLEG OF ELEPHANT |
காற்றிரம் |
கால் (=உறுப்பு, தூண், கருமை) + திரம் (=மலை, வலிமை) = காற்றிரம் >>> காத்திரம் = கரிய மலையின் தூண்போன்ற வலுவான கால் = யானையின் முன்கால் |
காத்திரம், KAATHTHIRAM |
பாம்பு, SNAKE |
காற்றிறம் |
கறை (=சினம், நஞ்சு) + இறு (=குத்து, கொத்து, கொல்) + அம் = காற்றிறம் >>> காத்திரம் = சினந்து கொத்தி நஞ்சால் கொல்வது. |
காத்திரம், KAATHTHIRAM |
பருமன், THICKNESS |
கயத்திறம் |
கயம் (=பெருமை) + திறம் (=தன்மை) = கயத்திறம் >>> கைத்திரம் >>> காத்திரம் = பெரிதான தன்மை = பருமன் |
காத்திரம், KAATHTHIRAM |
உடல் பருமன், CORPULENCE |
கயத்திறம் |
கயம் (=பெருமை) + திறம் (=உடல், தன்மை) = கயத்திறம் >>> கைத்திரம் >>> காத்திரம் = உடலின் பெரிதான தன்மை. |
காத்திரம், KAATHTHIRAM |
முக்கியம், IMPORTANCE |
காத்திறம் |
கதி (=நிலை) + இறை (=தலைமை, முதன்மை) + அம் = காத்திறம் >>> காத்திரம் = முதன்மை நிலை |
காத்திரவேயம், KAATHTHIRAVEYAM |
பாம்பு, SNAKE |
காழ்த்திறவேயம் |
காழ் (=கயிறு) + திறம் (=உடல்) + ஏய் (=ஒப்பு) + அம் = காழ்த்திறவேயம் >>> காத்திரவேயம் = கயிறு போன்ற உடலினது |
காத்திரி, KAATHTHIRI, காத்திரை |
ஆயுதம், WEAPON |
காத்திறி |
கதம் (=அழிவு, கொலை) + இறை (=பொருள்) + இ = காத்திறி >>> காத்திரி = கொல்லும் பொருள் = ஆயுதம் |
காதகம், KAATHAKAM |
கொலை, MURDER |
காறகம் |
கறி (=ஊன், உடல், கடி, வெட்டு, பிரி) + அகம் (=உயிர்) = காறகம் >>> காதகம் = உடலில் இருந்து உயிரைப் பிரித்தல் = கொலை |
காதகன், KAATHAKAN |
கொலைகாரன், MURDERER |
காறகன் |
காறகம் (=கொலை) + அன் = காறகன் >>> காதகன் = கொலைகாரன். |
காதம், KAATHAM |
தூரம், DISTANCE |
காதம் |
கதி (=நடை, பயணம்) + அம் (=நீளம்) = காதம் = பயண நீளம் |
காதம், KAATHAM, காதை, KAATHAI |
கொலை, MURDER |
கறம் |
கறி (=ஊன், உடல், கடி, வெட்டு) + அம் = கறம் >>> கதம் >>> காதம் = உடலை வெட்டுதல் = கொலை. |
காதர், KAATHAR |
கடவுள், GOD |
கந்தார் |
கந்து (=ஆதாரம்) + ஆர் (=பூமி, உலகம்) = கந்தார் >>> காதர் = உலகத்தின் ஆதாரம் = கடவுள். |
காதரம், KAATHARAM |
பயம், FEAR |
கந்தறம் |
கந்து (=வலிமை, துணிவு) + அறம் (=அறிவு, எண்ணம், இன்மை) = கந்தறம் >>> காதரம் = துணிவில்லா எண்ணம் = பயம். |
காதல், KAATHAL, காது, KAATHU |
கொலை, MURDER |
காறல் |
கறி (=ஊன், உடல், கடி, வெட்டு) + அல் = காறல் >>> காதல் = உடலை வெட்டுகை = கொலை. |
காதல், KAATHAL, காது, KAATHU |
வெட்டுகை, CUTTING |
காறல் |
கறி (=கடி, வெட்டு) + அல் = காறல் >>> காதல் = வெட்டுகை |
காதல், KAATHAL |
இரவுநேர ஒலி, NIGHT CHIRP |
கத்தல் |
கத்து (=ஒலி) + அல் (=இரவு) = கத்தல் = இரவில் ஒலித்தல். |
காதவம், KAATHAVAM |
ஆலமரம், BANYAN TREE |
காழ்தாவம் |
காழ் (=தண்டு, மரம், வலிமை, கயிறு) + தா (=பரவு, படை) + அம் (=நீளம்) = காழ்தாவம் >>> காதவம் = தண்டில் இருந்து வலுவான நீண்ட கயிறுகளைப் படைத்துப் பரந்துள்ள மரம். |
காதா, KAATHAA |
தனிக் கணக்கு, LEDGER |
காதாய் |
கதி (=பிரிவு, தனி) + ஆய் (=கணி) = காதாய் >>> காதா = தனிக் கணக்கு. |
காதி, KAATHI |
நூலாடை, CLOTH |
காழ்தி |
காழ் (=தறி, நூல்) + தை (=பின்னு, உருவாக்கு) + இ = காழ்தி >>> காதி = தறியில் நூலைப் பின்னி உருவாக்கியது. |
காது, KAATHU |
கொல்லு, KILL |
காறு |
கறி (=ஊன், உடல், கடி, வெட்டு) + உ = காறு >>> காது = உடலை வெட்டு = கொல்லு |
காது, KAATHU |
வெட்டு, CUT |
காறு |
கறி (=கடி, வெட்டு) + உ = காறு >>> காது = வெட்டு |
காதுகம், KAATHUKAM |
கொலை, MURDER |
காறுகம் |
கால் (=காற்று, உயிர்) + துகை (=உழக்கு, அழி) + அம் = காறுகம் >>> காதுகம் = உயிரை அழித்தல் = கொலை. |
காதுகன், KAATHUKAN |
கொலைகாரன், MURDERER |
காறுகன் |
கால் (=காற்று, உயிர்) + துகை (=உழக்கு, அழி) + அன் = காறுகன் >>> காதுகன் = உயிரை அழிப்பவன் = கொலைகாரன். |
காதை, KAATHAI |
சொல், WORD, வரலாறு, EPIC, பாட்டு, POEM |
கத்தை |
கத்து (=ஒலி, பாடு, சொல்) + ஐ = கத்தை >>> காதை = சொல், பாட்டு, சொல்லப்பட்டது, புராணம், வரலாறு. |
காதை, KAATHAI |
பகுதி, SECTION |
காறை |
கறி (=வெட்டு, பிரி) + ஐ = காறை >>> காதை = பிரிவு, பகுதி |
காந்தம், KAANTHAM |
இரும்பீர்ப்பது, MAGNET |
கத்தயம் |
கதுவு / கது (=துண்டு, இழு, பற்று) + அயம் (=இரும்பு) = கத்தயம் >>> கந்தாம் >>> காந்தம் = இரும்புத் துண்டை இழுத்துப் பற்றுவது. |
காந்தம், KAANTHAM |
கவர்ச்சி, ATTRACTION |
காந்தம் |
காந்து (=எரி, ஒளிர்) + அம் (=அழகு) = காந்தம் = ஒளிரும் அழகு, கவர்ச்சி. |
காந்தருவம், KAANTHARUVAM |
கூடல் வகை, FORM OF UNION |
கத்தாருவம் |
கதுவு / கது (=பற்று) + ஆர் (=கல) + உவ (=மகிழ்) + அம் = கத்தாருவம் >>> காந்தருவம் = பற்றுடையோர் கலந்து மகிழ்தல். |
காந்தன், KAANTHAN |
கணவன், HUSBAND |
காத்தன் |
கதுவு / கது (=பற்று, அன்புகொள்) + அன் = காத்தன் >>> காந்தன் = அன்பு கொண்டவன் = கணவன். |
காந்தாரம், KAANTHAARAM |
காடு, JUNGLE |
காந்தாரம் |
கந்து (=தண்டு, மரம்) + ஆர் (=நிறை, இடம்) + அம் = காந்தாரம் = மரங்கள் நிறைந்த இடம். |
காந்தாரம், KAANTHAARAM |
போர், WAR |
காந்தாரம் |
காந்து (=சின) + ஆர் (=கூடு, தாக்கு) + அம் = காந்தாரம் = சினந்து கூடித் தாக்குதல் = போர். |
காந்தி, KAANTHI |
ஒளி, LIGHT, அழகு, BEAUTY |
காந்தி |
காந்து (=ஒளிர்) + இ = காந்தி = ஒளிர்வது = ஒளி, அழகு |
|
வெப்பம், HEAT, காரம், BASE |
காந்தி |
காந்து (=எரி) + இ = காந்தி = எரிவது = எரிச்சல், வெப்பம், காரம் |
காந்தை, KAANTHAN |
மனைவி, WIFE |
காத்தை |
கதுவு / கது (=பற்று, அன்புகொள்) + ஐ = காத்தை >>> காந்தை = அன்பு கொண்டவள் = மனைவி. |
காப்பி, COFFEE |
பான வகை, A DRINK |
காய்ப்பி |
காய் (=வற்று, வறு, வெறு, கச, கொட்டை, காய்ச்சு) + பை (=நிறம், நீர்) + இ = காய்ப்பி >>> காப்பி = வறுக்கப்பட்ட கசப்பான கொட்டைகளைக் காய்ச்சிய வண்ண நீர். |
காப்பியம், KAAPPIYAM |
நூல் வகை, TYPE OF TREATISE |
காழ்ப்பீயம் |
காழ்ப்பு (=உறுதி, சாரம், பொருள்) + ஈ (=வழங்கு) + அம் (=சொல்) = காழ்ப்பீயம் >>> காப்பியம் = உறுதிப் பொருட்களைச் சொல்லால் வழங்குவது. |
காப்பில், KAAPPIL |
மீன்பிடிவேல், BABRBED FISHING SPEAR |
கவ்வயில் |
கவ்வு (=பிடி) + அயில் (= மீன், இரும்பு, கூர்மை, வேல்) = கவ்வயில் >>> கப்பைல் >>> காப்பில் = மீன் பிடிப்பதற்கான கூரிய இரும்பு வேல். |
காபட்டியம், KAAPATTIYAM |
வஞ்சனை, FRAUD |
கவட்டியம் |
கவடு (=வஞ்சனை) + இயம் = கவட்டியம் >>> காபட்டியம் |
காபணம், KAAPANHAM |
ஒத்தடம், FOMENTATION |
கப்பணம் |
கப்பு (=எரி, வெப்பமாக்கு) + அணை (=பொருத்து, ஒற்று) + அம் = கப்பணம் >>> காபணம் = வெப்பமாக்கி ஒற்றுதல். |
காபந்து, KAAPANTHU, காவந்து, KAAVANTHU |
காவல், PROTECTION |
காப்பாற்று |
காப்பு (=காவல்) + ஆற்று (=செய்) = காப்பாற்று >>> காப்பாத்து >>> காபந்து >>> காவந்து = காவல் செய்தல் = காவல். |
காபரா, KAAPARAA |
குழப்பம், CONFUSION |
காழ்ப்பறா |
காழ்ப்பு (=உறுதி, பொருள்) + அறு (=இல்லாகு) + ஆ = காழ்ப்பறா >>> காபரா = உறுதியான பொருள் இல்லாமை = குழப்பம். |
காபில், KAAPIL |
தகுதி, FITNESS |
காப்பியல் |
காப்பு (=கட்டியது, பொருத்தியது) + இயல் (=தன்மை) = காப்பியல் >>> காபில் = பொருந்தும் தன்மை = தகுதி. |
காமதம், KAAMATHAM |
பசுஞ்சாணம், COW DUNG |
கழிபெற்றம் |
கழி + பெற்று (=பசு) + அம் (=பசுமை) = கழிபெற்றம் >>> கயிமெத்தம் >>> காமதம் = பசுவின் பசுமையான கழிவு |
காமம், KAAMAM |
புணர்ச்சி, UNION |
காவம் |
கவை (=அகத்திடு, அணை) + அம் = காவம் >>> காமம் = அகத்திடுதல், அணைப்பு = புணர்ச்சி. |
காமம், KAAMAM |
விருப்பம், DESIRE |
காவம் |
(1) கவவு / கவா (=விரும்பு) + அம் = காவம் >>> காமம் = விருப்பம். (2) காவு (=விரும்பு) + அம் = காவம் >>> காமம் |
காமரம், KAAMARAM |
இசை, MUSIC |
காமாரம் |
காமம் (=விருப்பம்) + ஆர் (=மிகு, ஒலி) + அம் (=இனிமை) = காமாரம் >>> காமரம் = விருப்பம் மிக்க இனிய ஒலி = இசை. |
காமனை, KAAMANAI |
புணருமாசை, SEX DESIRE |
காமணை |
காமம் (=விருப்பம்) + அணை (=புணர்ச்சி) = காமணை >>> காமனை = புணர்ச்சி விருப்பம். |
காமாட்டி, KAAMAATTI |
மூடன், IDIOT |
காவற்றி |
கவி (=மூடு) + அறி + இ = காவற்றி >>> காமாட்டி = அறிவு மூடப்பட்டவன் = முட்டாள். |
காமாலை, KAAMAALAI |
நோய் வகை, JAUNDICE |
கழிமாலை |
கழி (=மிகுதி, கழிவு) + மால் (=கருமை, வெப்பம்) + ஐ = கழிமாலை >>> கயிமாலை >>> காமாலை = மிகுதியான வெப்பமும் கருமையான கழிவும் உண்டாக்குவது. |
காமி, KAAMI |
விரும்பு,, LIKE |
காமி |
காமம் (=விருப்பம்) >>> காமி = விரும்பு |
காமியம், KAAMIYAM |
விருப்பமானது, FAVOURITE |
காமியம் |
காமம் (=விருப்பம்) + இயை (=பொருந்து) + அம் = காமியம் = விருப்பம் பொருந்தியது. |
காமினி, KAAMINI |
அழகி, PRETTY WOMAN |
காமினி |
காமம் (=அழகு) + இனி = காமினி = அழகுடையவள் = அழகி |
காயகம், KAAYAKAM |
பாட்டு, இசை, MUSIC, POEM |
கயாக்கம் |
கை (=நீளு, நீட்டு) + ஆக்கம் (=சொல், ஒலி) = கயாக்கம் >>> காயகம் = நீட்டி ஒலிக்கப்படுவது = பாட்டு. |
காயகம், KAAYAKAM |
வியாபாரம், BUSINESS |
கயாக்கம் |
கை (=ஊட்டு, கொடு) + ஆக்கம் (=பொருள், இலாபம், பேறு, செயல்) = கயாக்கம் >>> காயகம் = பொருளைக் கொடுத்து இலாபம் பெறுகின்ற செயல் = வியாபாரம். |
காயகன், KAAYAKAN |
மயக்குவோன், FASCINATOR, பாடகன்,SINGER |
காயகன் |
காயகம் (=மயக்கம், பாட்டு) + அன் = காயகன் = மயக்குபவன், பாடகன் |
காயம், KAAYAM |
உடல், BODY |
கழி |
கழி (=ஊன்) + அம் = காழம் >>> காயம் = ஊனுடையது = உடல். |
காயம், KAAYAM |
ஆகாயம், SKY |
காழம் |
காழ் (=கருமை, இருள், ஒளி, நிறை) + அம் = காழம் >>> காயம் = இருளும் ஒளியும் நிறைந்திருப்பது. |
காயம், KAAYAM |
உறுதி, CONFIRM |
காழ் |
காழ் (=உறுதி) + அம் = காழம் >>> காயம் = உறுதி, நிலைபேறு |
காயலா, KAAYALAA |
காய்ச்சல், FEVER |
காயல் |
காயல் (=காய்ச்சல்) + ஆ = காயலா |
காயிகம், KAAYIKAM |
உடல் செயல், PHYSICAL ACTIVITY |
காயிகம் |
காயம் (=உடல்) + இகு (=ஓட்டு, இயக்கு) + அம் = காயிகம் = உடல் இயக்கம். |
காயிதா, KAAYITHAA, காய்தா, KAAYTHAA |
வழக்கம், CUSTOM |
கயிறா |
கை (=ஒழுங்கு) + இறு (=செய்) + ஆ = கயிறா >>> காயிதா, காய்தா = செயலுக்கான ஒழுங்கு = வழக்கம், முறை. |
கார்ப்பணியம், KAARPPANHIYAM |
பொறாமை, ENVY |
கரமனியம் |
கரம் (=வெப்பம்) + மனம் + இயம் = கரமனியம் >>> கரப்பணியம் >>> கார்ப்பணியம் = மனதிற்குள் வெம்புதல் = பொறாமை. |
கார்ப்பணியம், KAARPPANHIYAM |
கஞ்சத்தனம், MISERLINESS |
கரப்பணியம் |
கர (=தயங்கு) + பணி (=குறை, கொடு) + அம் = கரப்பணியம் >>> கார்ப்பணியம் = தயங்கிக் குறைவாகக் கொடுத்தல். |
கார்ப்பாசம், KAARPPACAM |
பருத்தி, COTTON |
கருப்பஞ்சம் |
கரு (=நடு, விதை) + பஞ்சு + அம் (=வெண்மை) = கருப்பஞ்சம் >>> கார்ப்பாசம் = விதையை நடுவில் கொண்ட வெண்பஞ்சு. |
கார்பார், KAARPAAR, கார்வார், KAARVAAR |
மேலாண்மை, MANAGEMENT |
கற்பார் |
கற்பு (=வேலை) + ஆர் (=கட்டுப்படுத்து, நிறை, பெறு) = கற்பார் >>> கார்பார் = வேலையைக் கட்டுப்படுத்தி நிறைவாக்கிப் பெறுகை. |
கார்பாரி, KAARPAARI, கார்வாரி, KAARVAARI |
மேலாளர், MANAGER |
கற்பாரி |
கற்பு (=வேலை) + ஆர் (=கட்டுப்படுத்து, நிறை, பெறு) + இ = கற்பாரி >>> கார்பாரி = வேலையைக் கட்டுப்படுத்தி நிறைவாக்கிப் பெறுபவர் = மேலாளர். |
கார்முகம், KAARMUKAM |
வில், BOW |
கருமுக்கம் |
கரு (=மரம், தண்டு, நடு) + முக்கு (=முயலு, வளைவு) + அம் (=அம்பு) = கருமுக்கம் >>> கார்முகம் = நடுவில் வளைவுடைய அம்பு முயலும் மரத்தண்டு = வில். |
கார்முகம், KAARMUKAM |
மூங்கில், BAMBOO |
கார்முக்கம் |
கார் (=மேகம், பசுமை) + முக்கு (=மூழ்கு, புகு) + அம் (=நீளம்) = கார்முக்கம் >>> கார்முகம் = மேகங்களில் புகுந்திருக்கும் நீண்ட பசும்பொருள் = மூங்கில். |
காரகம், KAARAKAM |
சிறைச்சாலை, PRISON |
காரகம் |
(1) கர (=ஒடுக்கு, அடை) + அகம் (=உள், வீடு) = காரகம் = உள்ளே ஒடுக்கி அடைக்கப்படும் வீடு = சிறைச்சாலை. (2) கருமை (=குற்றம்) + அகை (=வருத்து, தண்டி, பிரிவு, அறை) + அம் = காரகம் = குற்றத்திற்காகத் தண்டிக்கும் அறை. |
காரகம், KAARAKAM |
செயல், WORK |
காரகம் |
கரை (=வருத்து) + அகம் (=உடல்) = காரகம் = உடலை வருத்துதல் = உழைப்பு, செயல், ஆக்கம். |
காரகன், KAARAKAN |
படைப்பவன், CREATOR |
காரகன் |
காரகம் (=செயல், படைப்பு) + அன் = காரகன் = செய்பவன், படைப்பவன். |
காரடம், KAARATAM, காருடம், KAARUTAM |
மாயசாலம், JUGGLING |
கராடம் |
கர (=மறை, ஏமாற்று) + ஆட்டம் = கராட்டம் >>> காரடம் = ஏமாற்றி மறைத்து ஆடுவது. |
கரடி, KARATI |
மாயசாலம், JUGGLING |
கராடி |
கர (=மறை, ஏமாற்று) + ஆடு + இ = கராடி >>> கரடி = ஏமாற்றி மறைத்து ஆடுவது = சாலவித்தை. |
காரணம், KAARANHAM |
மூலம், ORIGIN |
காரணம் |
கரு (=மூலம்) + அணை (=உண்டாக்கு, செய்) + அம் = காரணம் = செயலுக்கான மூலம். |
காரணம், KAARANHAM |
நோக்கம், MOTIVE |
காரணம் |
கரு (=அறிவு, எண்ணம்) + அணை (=உண்டாக்கு, செய்) + அம் = காரணம் = செயலுக்கான எண்ணம் = நோக்கம் |
காரணம், KAARANHAM |
விதி, METHOD |
காரணம் |
கரை (=எல்லை, விதி) + அணை (=உண்டாக்கு, செய்) + அம் = காரணம் = செயலுக்கான விதி. |
காரணிக்கம், KAARANHIKKAM |
வரலாறு, HISTORY |
காரணிக்கம் |
கார் (=காலம்) + அணை (=உண்டாகு, நிகழ்) + இகு (=தொகு) + அம் = காரணிக்கம் = காலந்தோறும் நிகழ்பவற்றின் தொகுப்பு. |
காரணிகன், KAARANHIKAN |
நடுவர், JUDGE |
காரணிகன் |
கரு (=நடு) + அணி + இகு (=ஒலி, பேசு) + அன் = காரணிகன் = அணிகளுக்கு நடுவில் இருந்து பேசுபவர் |
காரம், KAARAM |
எரிச்சல், PUNGENCY |
காறம் |
கறு (=சின, எரி) + அம் = காறம் >>> காரம் = எரிச்சல். |
காரம், KAARAM |
அழிவு, RUIN |
காரம் |
கரை (=தேய், அழி) + அம் = காரம் = அழிவு |
காரம், KAARAM |
திருநீறு, SACRED ASH |
காரம் |
கரு (=பொடி, நிறம்) + அம் (=ஒளி, வெண்மை) = காரம் = ஒளிவீசும் வெண்ணிறப் பொடி = திருநீறு |
காரம், KAARAM |
சினம், ANGER |
காறம் |
கறு (=சின) + அம் = காறம் >>> காரம் = சினம் |
காரம், KAARAM |
மரவைரம், TIMBER CORE |
காரம் |
கரு (=மரம், தண்டு, நடு) + அம் = காரம் = மரத்தண்டின் நடு. |
காரம், KAARAM |
தங்கம், GOLD |
காரம் |
கரை (=உருக்கு, மெலி) + அம் (=நீளம், அழகு, ஒளி) = காரம் = உருக்கி மெலித்து நீட்டப்படும் அழகிய ஒளிரும் பொருள். |
காரம், KAARAM |
ஆக்கம், ACTION |
காரம் |
கரு (=பிறப்பு, ஆக்கம்) + அம் = காரம் = ஆக்கம், செயல். |
காரி, KAARI |
செய்வோன், DOER |
காரி |
காரம் (=ஆக்கம், செயல்) + இ = காரி = ஆக்குவோன், செய்வோன் |
காரிக்கம், KAARIKKAM, காரிக்கன், KAARIKKAN |
தார்ப்பாய், CLOTH TYPE |
காரிக்கம் |
காரை (=உடை, துணி, கறை, வலிமை) + இகு (=தாழ்த்து, விரி) + அம் (=நீளம்) = காரிக்கம் = தாழ்த்தி விரிக்கப்படும் கறையுடைய நீண்ட வலுவான துணி = தார்ப்பாய். |
காரிகம், KAARIKAM |
காவிக்கல், RED OCHRE |
காரிகம் |
கருமை (=செம்மை, வலிமை) + இகு (=திரள்) + அம் = காரிகம் = செந்நிறத்தில் திரண்டிருக்கும் வலுவான பொருள். |
காரிகை, KAARIKAI |
அழகு, BEAUTY, CLEANNESS |
காரிகை |
கருமை (=கறை, அழுக்கு) + இக (=நீங்கு) + ஐ = காரிகை = கறை / அழுக்கு நீங்கிய தன்மை = தூய்மை, அழகு. |
காரிகை, KAARIKAI |
அழகி, PRETTY LADY |
காரிகை |
கார் (=அழகு) + இகு (=மிகு) + ஐ = காரிகை = அழகு மிக்கவள் |
காரிகை, KAARIKAI |
அழகுப்பொருள், ORNAMENT |
காரிகை |
கார் (=அழகு) + இகம் (=பொருள்) + ஐ = காரிகை = அழகுப்பொருள் |
காரியம், KAARIYAM |
ஆக்கம்,செயல், EFFECT, ACTION |
காரியம் |
கரு (=பிறப்பு, ஆக்கம்) + இயம் = காரியம் = ஆக்கம், செயல் |
காரியம், KAARIYAM |
நோக்கம், MOTIVE |
காரியம் |
கரு (=பிறப்பு, ஆக்கம், அறிவு, எண்ணம்) + இயம் = காரியம் = ஆக்குவதற்கான எண்ணம் = நோக்கம். |
காரியம், KAARIYAM |
இறுதிச்செயல், LAST CEREMONY |
காரியம் |
காரம் (=செயல்) + இயை (=நிறை) + அம் = காரியம் = நிறைவு செய்யும் செயல். |
காரு, KAARU |
வண்ணான், WASHERMAN |
காருய் |
காரை (=ஆடை, கறை) + உய் (=நீக்கு) = காருய் >>> காரு = ஆடையின் கறையை நீக்குபவன் = வண்ணான். |
காருகத்தம், KAARUKATHTHAM, காருகத்தியம், KAARUKATHTHIYAM |
இல்லறம், HOUSEHOLD |
காருகாற்றம், காருகாற்றியம் |
காருகம் (=வீடு, இல்லம்) + ஆற்று (=வாழ்) + அம் / இயம் = காருகாற்றம் / காருகாற்றியம் >>> காருகத்தம் / காருகத்தியம் = இல்ல வாழ்க்கை.. |
காருகம், KAARUKAM |
வீடு,இல்லறம், HOUSE,LIFEHOLD |
காரிங்கம் |
கர (=மறை) + இங்கு (=தங்கு) + அம் = காரிங்கம் >>> காருகம் = தங்குவதற்கான மறைவிடம் = வீடு, இல்லம் >>> இல்லறம். |
காருகம், KAARUKAM |
நெசவுத்தொழில், WEAVING |
காரீகம் |
காரை (=ஆடை) + ஈ (=படை) + கம் (=தொழில்) = காரீகம் >>> காருகம் = ஆடைகளைப் படைக்கும் தொழில். |
காருகம், KAARUKAM |
சலவை, WASHING |
காருகம் |
காரை (=ஆடை, கறை) + உகு (=நீக்கு) + அம் = காருகம் = ஆடையின் கறையை நீக்குதல் = துவைத்தல், சலவை. |
காருகம், KAARUKAM |
உடலுழைப்பு, LABOUR |
காருகம் |
கரு (=உடல்) + உகு (=தேய், வருத்து) + அம் = காருகம் = உடலை வருத்துதல் = உடல் உழைப்பு. |
காருகம், KAARUKAM |
ஓவியம், PAINTING |
காரிழுகம் |
கரு (=நிறம், உருவம், ஆக்கம்) + இழுகு (=பூசு) + அம் = காரிழுகம் >>> காரிகம் >>> காருகம் = நிறங்களைப் பூசி ஆக்கிய உருவம். |
காருகம், KAARUKAM |
கொலை, MURDER |
காருகம் |
கரு (=உடல், உயிர்) + உகு (=நீக்கு) + அம் = காருகம் = உடலில் இருந்து உயிரை நீக்குதல் = கொலை. |
காருடம், KAARUTAM |
நஞ்சழித்தல், DETOXICATION |
காருடம் |
காரி (=நஞ்சு) + உடை (=முறி, வெளிப்படுத்து) + அம் = காருடம் = நஞ்சை முறித்து வெளிப்படுத்துதல் |
காருடம், KAARUTAM |
புடலங்காய், SNAKE GOURD |
காருடம் |
கறி (=காய், மாமிசம், உடல்) + ஊன்றி (=பாம்பு) + அம் (=ஒப்பு) = காறூன்றம் >>> காரூடம் = பாம்பின் உடல் ஒத்த காய். |
காருண்யம், |
அன்பு, LOVE |
கருணை |
கருணை (=அன்பு) + இயம் = காருணியம் >>> காருண்யம் |
காருராசி, KAARURAACI |
புடலங்காய், SNAKE GOURD |
காறிலஞ்சி |
கறி (=காய், மாமிசம், உடல்) + இலஞ்சி (=பாம்பு, தன்மை) = காறிலஞ்சி >>> காறுரச்சி >>> காருராசி = பாம்பின் உடல் தன்மை கொண்ட காய் = புடலங்காய். |
காருவாகன், KAARUVAAKAN |
வண்ணான், WASHERMAN |
காருவகன் |
காரை (=ஆடை, கறை) + உவி (=அழி) + அகை (=நீக்கு) + அன் = காருவகன் >>> காருவாகன் = ஆடையின் கறைகளை அழித்து நீக்குபவன் = வண்ணான். |
காருவன், KAARUVAN |
வண்ணான், WASHERMAN |
காருவன் |
காரை (=ஆடை, கறை) + உவி (=அழி) + அன் = காருவன் = ஆடையின் கறைகளை அழிப்பவன் = வண்ணான். |
காலம், KAALAM |
பொழுது, TIME |
காலம் |
கலி (=தோன்று, விரை, நழுவு) + அம் = காலம் = தோன்றியதும் விரைந்து நழுவுவது = பொழுது. |
காலாட்சேபம், KAALAATCHAEPAM |
பொழுதுபோக்கு, வாழ்க்கை, PASSTIME, LIFE |
காலாயேமம் |
கால் (=பொழுது) + ஆய் (=நீக்கு, கழி) + ஏமம் (=இன்பம்) = காலாயேமம் >>> காலாசேபம் >>> காலாச்சேபம் >>> காலாட்சேபம் = பொழுதை இன்பமாய்க் கழித்தல், வாழ்தல். |
காலாட்சேபம், KAALAATCHAEPAM |
இசைப்பாட்டுடன் கூடிய விளக்கவுரை, SACRED MUSICAL EXPOSITION |
காலாயேம்பம் |
கலை (=நூல், இசை, நேரம்) + ஆய் (=நுட்பம், கருது, கொண்டாடு) + ஏம்பு (=ஒலி, கூறு) + அம் (=நீளம்) = காலாயேம்பம் >>> காலாசேபம் >>> காலாட்சேபம் = நூலின் நுட்பமான கருத்துக்களைக் கூறி இசையுடன் நீண்டநேரம் கொண்டாடுதல். |
காலி, KAALI |
வெற்றிடம், EMPTINESS |
காலி |
கல் (=தோண்டு, நீக்கு) + இ = காலி = தோண்டி நீக்கப்பட்டது = பள்ளம், வெற்றிடம். |
காலியம், KAALIYAM |
விடியல், DAWN |
காலியம் |
கால் (=ஒளி, தோன்று, நேரம்) + இயம் = காலியம் = ஒளி தோன்றும் நேரம் = விடியல், காலைப்பொழுது. |
காலூரம், KAALOORAM |
தவளை, FROG |
காலூரம் |
கால் (=தாவு) + ஊர் (=செல்) + அம் = காலூரம் = தாவித் தாவிச் செல்வது = தவளை. |
காலேயம், காலேசம், KAALAEYAM, KAALAESAM |
விலங்கு, ANIMAL |
காலேயம் |
கால் (=உறுப்பு, நடை) + ஏ (=பெருக்கம், மிகுதி) + அம் (=நீளம், தூரம்) = காலேயம் >>> காலேசம் = கால்களால் வெகுதூரம் நடப்பவை = விலங்கு. |
காலேயம், KAALAEYAM |
மஞ்சள், TURMERIC |
காலேயம் |
கால் (=ஒளி) + ஏய் (=பொருத்து, பூசு) + அம் (=அழகு) = காலேயம் = ஒளிரும் அழகுக்காக பூசப்படுவது = மஞ்சள். |
காலேயம், KAALAEYAM |
மோர், BUTTER MILK |
காளேயம் |
கள் + ஏய் (=ஒப்பு) + அம் (=நீர், உணவு) = காளேயம் >>> காலேயம் = கள்ளை ஒத்த நீருணவு = மோர். |
காலேயம், KAALAEYAM |
கள், TODDY |
காளேயம் |
களி (=மயக்கம், போதை) + ஏய் (=பொருந்து) + அம் (=நீர், உணவு) = காளேயம் >>> காலேயம் = போதை பொருந்திய நீருணவு = கள். |
காலை, KAALAI |
வளாகம், ENCLOSURE |
காலை |
கால் (=சக்கரம், வட்டம், பிரிவு, இடம்) + ஐ = காலை = வட்டமாகப் பிரிக்கப்பட்ட இடம் = வளாகம். |
காலோலம், KAALOALAM |
அண்டங்காக்கை, RAVEN |
காலொளம் |
கால் (=கருமை) + ஒளி (=பெருமை, மிகுதி) + அம் (=பறவை) = காலொளம் >>> காலோலம் = கருமை மிக்க பெரிய பறவை. |
காவதம், KAAVATHAM |
பத்துமர தூரம், TEN MILES |
காபத்தம் |
கா (=மரம்) + பத்து + அம் (=நீளம், தூரம்) = காபத்தம் >>> காவதம் = பத்து மர தூரம். பி.கு: பழங்காலத்தில் தூரக்கணக்கை அறிய கல்நடுவதற்குப் பதிலாக பயண வழியில் இருக்கும் மரத்தின் தலையை வெட்டிக் குறித்து வைத்தனர். |