ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 46

 

சொல்

பொருள்

தமிழ்ச்சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

லச்சி, லச்சை

குப்பைக்காரி

இலச்சி

இல் (=வீடு) + ஆய் (=கழிவு, குப்பை) + இ = இலாயி >>> இலச்சி >>> லச்சி = வீட்டுக் குப்பைகளைச் சேகரிப்பவள்.

லச்சை

கூச்சம், வெட்கம்

இலச்சை

இளை (=பின்னடை) + ஆய் (=சுருங்கு) + ஐ = இளாயை >>> இலச்சை >>> லச்சை = சுருங்கிப் பின்னடைதல் = கூச்சம்.

லச்சை

தொந்தரவு செய்தல்

அலச்சை

அலை (=மீண்டும் மீண்டும் வருத்து) + ஐ = அலயை >>> அலச்சை >>> லச்சை = மீண்டும் மீண்டும் வருத்துதல்.

லச்சி

வெட்கப்படு

இலச்சி

இலச்சை (=வெட்கம்) + இ = இலச்சி >>> லச்சி = வெட்கப்படு

லஞ்சம்

அரகசியமாய்ப் பெறும் குற்ற வருவாய்

இலஞ்சம்

இளி (=குற்றம்) + ஆயம் (=அரகசியம், வருவாய்) = இளாயம் >>> இலஞ்சம் >>> லஞ்சம் = அரகசியமாய்ப் பெறுகின்ற குற்ற வருவாய்.

லஞ்சா

விபச்சாரி

அலாசா

அளி (=கொடு, புணர்) + ஆயம் (=பணம்) + ஆ = அளாயா >>> அலாசா >>> அலஞ்சா >>> லஞ்சா = பணம் கொடுத்தால் புணர்பவள் = விபச்சாரி.

லட்சம்

நூறாயிரம்

இலக்கம்

இல் (=இன்மை, வெளி) + அகை (=ஒளிர்) + அம் = இலக்கம் >>> லக்சம் >>> லட்சம் = அண்டவெளியில் ஒளிர்கின்ற மீன்களின் எண்ணிக்கை.

லட்சியம்

குறிக்கோள்

இலக்கியம்

இலக்கு (=குறி) + இய (=செல், இயங்கு) + அம் = இலக்கியம் >>> லக்சியம் >>> லட்சியம் = இயங்குவதற்கான குறி.

லட்சுமி, லக்சுமி

திருமகள்

இலக்குமி, இலக்குமை

இலங்கு (=விளங்கு) + பை (=பணம், பெருக்கு) = இலங்குபை >>> இலக்குமை >>> இலக்குமி >>> லக்சுமி >>> லட்சுமி = பணத்தைப் பெருக்கி விளங்கச் செய்பவள்.

லட்சணம், லக்சணம்

தோற்றம்

இலங்கணம்

இலங்கு (=தோன்று) + அணம் = இலங்கணம் >>> இலக்கணம் >>> லக்சணம் >>> லட்சணம் = தோற்றம், வடிவம்

லட்டு

உருண்டையான இனிப்பு

உலட்டு

உலம் (=திரட்சி) + அண்டு (=வட்டம்) = உலண்டு >>> உலட்டு >>> லட்டு = வட்டமாகத் திரட்டிச் செய்யப்பட்டது

லடாய்

சண்டை

இலடை

இல் (=இன்மை) + அடு (=பொருந்து) + ஐ = இலடை >>> லடாய் = பொருத்தம் இன்மை.

லண்டன்

முட்டாள்

இலட்டன்

இல் (=இன்மை) + அறம் (=அறிவு) + அன் = இலற்றன் >>> இலட்டன் >>> லண்டன் = அறிவு இல்லாதவன்

லண்டன்

சண்டாளன்

இளட்டன்

இளி (=குற்றம்) + ஆறு (=வழி) + அன் = இளாற்றன் >>> இளட்டன் >>> லண்டன் = குற்றவழியைக் கொண்டவன். 

லண்டன்

சண்டைக்காரன்

இலட்டன்

இலடை (=சண்டை) + அன் = இலட்டன் >>> லண்டன் = சண்டை இடுபவன்.

லத்தாடு

தடுமாற்றம்

உலத்தாட்டு

உலறு (=தடுமாறு) + ஆட்டம் + உ = உலற்றாட்டு >>> உலத்தாட்டு >>> லத்தாடு = தடுமாறிய ஆட்டம்.

லத்தி

யானைச் சாணம்

உலத்தி

உல (=கழி) + அத்தி (=யானை) = உலத்தி >>> லத்தி = யானையின் கழிவு.

லத்தை

கருணை

அளத்தை

அளி (=அன்பு) + அதி (=மிகுதி) + ஐ = அளத்தை >>> லத்தை = மிக்க அன்புடைமை.  

லதை

படர்கொடி

இலத்தை

இலை + தை (=மாலை தொடு) = இலைத்தை >>> இலத்தை >>> லதை = இலையால் தொடுத்த மாலை போன்றது.

லத்தி

தண்டிக்கும் தண்டு

இலத்தி

இலை (=தண்டு) + அறை (=அடி) + இ = இலற்றி >>> இலத்தி >>> லத்தி = அடிக்க உதவும் தண்டு.

லப்பம்

ஓட்டையை அடைப்பது

இல்லப்பம்

இல்லி (=துளை, பிளவு) + அப்பு (=பூசு) + அம் = இல்லப்பம் >>> லப்பம் = துளை / பிளவுகளில் பூசப்படுவது.

லம்பு

தடுமாறு

அலம்பு

அலம்பு (=தடுமாறு) >>> லம்பு

லயம்

அழிவு

இளாயம்

இளை (=மெலி, வற்று) + ஆய் (=நுண்மை, நீங்கு) + அம் = இளாயம் >>> லயம் = நுட்பமாக மெலிந்து நீங்குதல்.

லயம்

சேர்க்கை

அளாயம்

அளை (=கூடு) + ஆயம் (=கூட்டம்) = அளாயம் >>> லயம் = கூட்டமாகக் கூடுதல்.

லயி

சேர், கூடு

அளாயி

அளாயம் (=சேர்க்கை) >>> அளாயி >>> லயி = சேர்.

லலனை

பெண்

இல்லணை

இல் (=இல்லறம்) + அணை (=கரை) = இல்லணை >>> லலனை = இல்லறத்தின் கரையாகத் திகழ்பவள். = பெண்.

லலாடம், லாடம்

தலை, நெற்றி

இல்லடம்

இல் (=வீடு) + அறம் (=ஞானம்) = இல்லறம் >>> இல்லடம் >>> லலாடம், லாடம் = அறிவின் வீடு = தலை >>> நெற்றி.

லவங்கம்

உணவில் பயன்படும் ஒருவகைப் பூ

ஆலவக்கம்

ஆலம் (=பூ) + அக்கு (=சுருங்கு, கண், குவி) + அம் (=உணவு) = ஆலவக்கம் >>> ஆலவங்கம் >>> லவங்கம் = உணவாகப் பயன்படுகின்ற சுருங்கிய கண்போல் குவிந்த பூ.

லவணம்

உப்பு

அளவாணம்

அளவு (=கல, சிறிது) + ஆணு (=இனிமை) + அம் (=உணவு) = அளவாணம் >>> லவணம் = இனிமைக்காக உணவுடன்  சிறிதாகக் கலக்கப்படுவது. 

லவம்

சிறுபகுதி

இலவம்

இலம் (=சிறுமை) + அம் = இலவம் >>> லவம் = சிறுபகுதி

லளிதம்

சுலபம்

அள்ளளிதம்

அள் (=செறிவு, மிகுதி) + அளிது (=எளிமை) + அம் = அள்ளளிதம் >>> லளிதம் = மிக எளிதானது.

லளிதம்

இனிமை

அள்ளளிதம்

அள் (=செறிவு, மிகுதி) + அளிது (=இனிமை) + அம் = அள்ளளிதம் >>> லளிதம் = மிக்க இனிமையானது.

லாகவம்

மெலிவுப் பண்பு

இளாகவம்

இளை (=மெலி) + அகம் (=பொருள்) + அம் = இளாகவம் >>> லாகவம் = பொருளின் மெலிந்த தன்மை

லாகை

செயல்முறை, விதம்

ஈலாகை

இயல் (=முறை) + ஆக்கம் (=செயல்) + ஐ = இயலாக்கை >>> ஈலாகை >>> லாகை = செயல்முறை

லாசடி

கவலை

இளசடி

இளை (=மெலி) + அறி (=எண்ணு) = இளயறி >>> இளசடி >>> லாசடி = மெலிவை உண்டாக்கும் எண்ணம்.

லாஞ்சனம், லாஞ்சனை

முத்திரை

இலச்சணம், இலச்சணை

இல் (=குத்து) + அச்சு (=உரு, வடிவம்) + அணம் = இலச்சணம் >>> லாஞ்சனம் = குத்தப்படும் வடிவம்.

லாடம்

விலங்கின் பாத இரும்பு

ஐலாடம், இலாடம்

அயில் (=இரும்பு) + அடி (=பாதம், அடி) + அம் = அயிலடம் >>> ஐலாடம் >>> லாடம் = பாதத்தில் அடிக்கப்படும் இரும்பு.

லாத்து, லாந்து

சுற்றித் திரி

உலாத்து

உலாத்து (=அலை, திரி) >>> லாத்து >>> லாந்து

லாந்து

வீட்டுக் கூரை அமை

இலாந்து

இல் (=வீடு) + ஆழ்த்து (=மூடு, மறை) = இலாழ்த்து >>> இலாந்து = வீட்டின் மேலே மூடு.

லாந்தல்

வீட்டுக் கூரை

இலாந்தல்

இல் (=வீடு) + ஆழ்த்து (=மூடு, மறை) + அல் = இலாழ்த்தல் >>> இலாந்தல் = வீட்டை மேலே மூடியிருப்பது.

லாபம்

பயன்

இலாவம்

இல் (=இன்மை) + அவம் (=பயனின்மை) = இலவம் >>> இலாவம் >>> லாபம் = பயனின்மை அற்றது = பயன்.

லாயக்கு

பொருத்தம், தகுதி

இலயக்கு

இல் (=இன்மை) + அயக்கு (=அசை, மாறுபடு) = இலயக்கு >>> லாயக்கு = அசைவின்மை, மாறுபாடின்மை

லாயம்

கட்டுவேலி

இளையம்

இளை (=காவல், கட்டுவேலி) + அம் = இளையம் >>> லாயம் = காவல் உடைய கட்டுவேலி.

லாலனம், லாலனை

கொஞ்சல், தாலாட்டு

இலலனம்

இளி (=சிரி) + அளி (=குழை, பேசு) + அணம் = இளளணம் >>> இலலனம் >>> லாலனம் = சிரித்துக் குழைந்து பேசுதல்.

லாலி

கொஞ்சல், தாலாட்டு

இலலி

இளி (=சிரி) + அளி (=குழை, பேசு) = இளளி >>> இலலி >>> லாலி = சிரித்துக் குழைந்து பேசுதல்.

லாவண்யம்

சிவப்பழகு

இலவணியம்

இலவு + அணி (=அழகு) + அம் = இலவணியம் >>> லாவண்யம் = இலவ மலர் போன்ற அழகு.

லாவு

பரவு

உலாவு

உலாவு (=பரவு) >>> லாவு

லிகிதம்

கடிதம், எழுதப் பட்டது

இலக்கிதம்

இலக்கு (=எழுது) + இறு (=முடி) + அம் = இலக்கிறம் >>> இலக்கிதம் >>> லிகிதம் = எழுதி முடிக்கப்பட்டது.

லிங்கம்

வரம்பு கடந்து தோன்றும் தீ

இலிங்கம்

இலை (=தீ, தோன்று) + இக (=வரம்பு கட) + அம் = இலிக்கம் >>> இலிங்கம் >>> லிங்கம் = வரம்பு கடந்து தோன்றும் தீ.

லாளிதம்

அழகு

இலளிதம்

இலை (=தோன்று) + அளிது (=இன்பம்) + அம் = இலளிதம் >>> லாளிதம் = இன்பம் தரும் தோற்றம்.

லிபி

எழுத்துரு

இலீவி

இலை (=தோன்று) + ஈவு (=வகு, கீறு) + இ = இலீவி >>> லிபி = கீறிய தோற்றம்.

லீலை

விளையாட்டு

இளீளை

இளி (=சிரி, மகிழ்) + இளை (=சோர்) = இளீளை >>> இலீலை >>> லீலை = மகிழ்ச்சியும் சோர்வும் தருவது.

லுங்கி

தளர்வான கீழுடை

இளுக்கி

இளை (=தளர்) + உக்கம் (=இடுப்பு) + இ = இளுக்கி >> இலுங்கி >>> லுங்கி = இடுப்பில் தளர்வாக அணியப்படுவது.

லுச்சான்

நட்டம்

இலுச்சான்

இல் (=இன்மை) + உச்சம் (=பெருக்கம், உயர்வு, இலாபம்) + ஆன் = இலுச்சான் >>> லுச்சான் = இலாபம் இன்மை.

லுப்தம்

நட்டம், கேடு

இலுத்தம்

இல் (=இன்மை) + உந்தி (=பெருக்கம், உயர்வு, இலாபம்) + அம் = இலுந்தம் >>> இலுத்தம் >>> லுப்தம் = உயர்வின்மை, இலாபம் இன்மை.

லுப்தம், லுத்தம்

கஞ்சத்தனம்

இலுத்தம்

இல் (=கூசு) + உந்து (=வழங்கு) + அம் = இலுந்தம் >>> இலுத்தம் >>> லுப்தம் = வழங்குவதற்குக் கூசுதல்.

லுப்தன், லுத்தன்

கஞ்சன்

இலுத்தன்

இலுத்தம் (=கஞ்சத்தனம்) + அன் = இலுத்தன் = கஞ்சன்.

லுச்சா, லுச்சன்

நாடோடி, வீடு அற்றவன்

இலுச்சன்

இல் (=இன்மை, வீடு) + உய் (=வாழ்) + அன் = இலுய்யன் >>> இலுச்சன் >>> லுச்சா = வீடின்றி வாழ்பவன்.

லூட்டி

கூடிச் சிரித்துப் பேசுதல்

இலூட்டி

இளி (=சிரி) + இறு (=சொல், பேசு, கூடு) + இ = இளீற்றி >>> இலீட்டி >>> இலூட்டி = லூட்டி = கூடிச் சிரித்துப் பேசுதல்

லெக்கு

குறி

இலக்கு

இலக்கு >>> லெக்கு

லெகு

இலேசு

இலகு

இலகு >>> லெகு

லேகம்

எழுத்து

இலக்கம்

இலக்கு (=எழுது) + அம் = இலக்கம் >>> லேகம் = எழுத்து

லேகணி, லேகனி

எழுதுகோல்

இலக்காணி

இலக்கு (=எழுது) + ஆணி = இலக்காணி >>> லேகணி >>> லேகனி = எழுத்தாணி, எழுதுகோல்.

லேகியம்

இளக்கமான பொருள்

இளகியம்

இளகு + இயம் = இளகியம் >>> லேகியம் = இளகிய தன்மையைக் கொண்டது.

லேசு

மெலிவானது

இளைசு

இளை (=மெலி) + உ = இளையு >>> இளைசு >>> இலேசு >>> லேசு = மெலிவானது.

லேஞ்சி, லேஞ்சு

சிறு நூல் துணி

இலேஞ்சி

இளை (=சிறு) + இழை (=நூல், பின்னு) + இ = இளேழி >>> இலேசி >>> இலேஞ்சி >>> லேஞ்சி = நூலால் பின்னப்பட்ட சிறிய துணி.

லேணி

கடன்

ஏலேணி

ஏல் (=வாங்கு) + ஏணம் (=உறுதி) + ஈ (=கொடு) = ஏலேணீ >>> லேணி = உறுதி வழங்கிப் பெறப்படுவது / உறுதி வாங்கிக் கொடுக்கப்படுவது = கடன்.

லேபனம்

பூசுதல், பூசுபொருள்

இளேப்பணம்

இளை (=மெலி) + அப்பு (=பூசு, மூடு) + அணம் = இளேப்பணம் >>> லேபனம் = மெலிதாகப் பூசுதல். 

லேவாதேவி

கொடுக்கல் வாங்கல்

இலேவாதேவி

இளை (=கட்டுப்பாடு) + ஈவு (=கொடு) + தெவ்வு (=வாங்கு) + இ = இளேவுதெவ்வி >>> இலேவாதேவி >>> லேவாதேவி = கட்டுப்பாட்டுடன் கொடுத்து வாங்குதல்.

லொங்கு

பணிந்து நட

இளோகு

இளை (=சோர்) + உகு (=தாழ்) = இளோகு >>> லொங்கு = சோர்ந்து தாழ்

லொட்டி

கள்

இளோற்றி

இளை (=சோர், மயங்கு) + ஊற்று + இ = இளோற்றி >>> இலொட்டி >>> லொட்டி = மயக்கம் தரும் பானம்.

லொட்டு

சிறு பொருட்கள்

இளோட்டு

இளை (=சிறு) + உடை (=பொருள்) + உ = இளோட்டு >>> லொட்டு = சிறு பொருட்கள்.

லொட்டை

தாழ்ந்தது

இளோட்டை

இளை (=சிறு) + உடை = இளோட்டை >>> லொட்டை = சிறுமை உடையது.

லொட்டை

உள்ளீடு அற்றது

உளோட்டை

உள் + ஓட்டை = உளோட்டை >>> லொட்டை = உள்ளே ஓட்டையைக் கொண்டது. 

லொடுக்கு

உள்ளீடு அற்றது

இலொடுக்கு

இல் (=இன்மை, வெளி) + ஒடுக்கு (=அடக்கு) = இலொடுக்கு >>> லொடுக்கு = வெளியை அடக்கியது.

லொத்து

நையப் புடை

இளொற்று

இளை (=மெலி) + ஒற்று (=அடி) = இளொற்று >>> லொத்து = அடித்து மெலிதாக்கு.

லோகம்

பூமி, உலகம்

உளோங்கம்

உள் (=இடம்) + ஓங்கு (=பெரு, பரவு) + அம் = உளோங்கம் >>> உலோகம் >>> லோகம் = பெரிய பரந்த இடம்.

லோக்கியம்

உலகத்துடன் பொருந்தியது

உளோங்கியம்

உளோங்கம் (=உலகம்) + இயை (=பொருந்து) + அம் = உளோங்கியம் >>> லோக்கியம்

லோகம், உலோகம்

உலையில் உருகுவது

உலோகம்

உலை (=அடுப்பு, நிலைகுலை) + உகு (=கரை) + அம் = உலோகம் = அடுப்பில் நிலைகுலைந்து கரையும் பொருள்.

லோட்டா, லோடா

மிகச்சிறிய குவளை

இளோட்டா

இளை (=சிறு) + ஓடு (=குழியுடைய பாத்திரம்) + ஆ = இளோட்டா >>> லோட்டா = குழியுடைய சிறு பாத்திரம்.

லோபம், உலோபம்

கஞ்சத்தனம்

உளோம்பம்

உளை (=சிதறு, வழங்கு) + ஓம்பு (=தவிர்) + அம் = உளோம்பம் >>> உலோபம் = வழங்குவதைத் தவிர்த்தல்.

லோபி, உலோபி

கஞ்சன்

உளோம்பி

உளோம்பம் (=கஞ்சத்தனம்) + இ >>> உளோம்பி = கஞ்சன்

லோலம், லோல், லோலாயி

திண்டாட்டம், சீரழிவு

அல்லோலம்

அலை + உலை (=நிலைகுலை) + அம் = அல்லோலம் >>> லோலம், லோல் = அலைந்து நிலைகுலைதல்.

லோலன்

சீர்கெட்டவன்

அல்லோலன்

அல்லோலம் (=சீரழிவு) + அன் = அல்லோலன் >>> லோலன் = சீரழிந்தவன்

லௌகீகம்

உலகத்தைப் பற்றிய அறிவு

உலோகிகம்

உளோங்கம் (=உலகம்) + இங்கம் (=அறிவு) = உளோங்கிங்கம் >>> உலோகிகம் >>> உலௌகீகம் >>> லௌகீகம் = உலகத்தைப் பற்றிய அறிவு.

வக்கணம், வக்கணை

ஒழுங்கு, நாகரிகம்

பாங்கணம்

பாங்கு (=ஒழுங்கு) + அணம் = பாங்கணம் >>> பக்கணம் >>> வக்கணம் >>> வக்கணை = ஒழுங்கு >>> பண்பாடு

வக்கணம், வக்கணை

அறிவு, திறமை

பாங்கணம்

பாங்கு (=அறிவு) + அணம் = பாங்கணம் >>> பக்கணம் >>> வக்கணம் >>> வக்கணை = அறிவு, திறமை

வக்கணம்

முலை

பைக்கனம்

பை (=பெரு) + கனை (=திரள்) + அம் = பைக்கனம் >>> பக்கணம் >>> வக்கணம் = திரண்டு பெருத்து இருப்பது

வக்கணி, வக்காணி

விரிவாகக் கூறு

பைக்கணி

பை (=விரி) + கணி (=படி, கூறு) = பைக்கணி >>> பக்கணி >>> வக்கணி = விரிவாகக் கூறு

வக்கணை

வருணனை, விளக்கவுரை, முகவுரை

பைக்கணை

பைக்கணி (=விரிவாகக் கூறு) + ஐ = பைக்கணை >>> பக்கணை >>> வக்கணை = விரிவான உரை = வருணனை, முகவுரை, விளக்கவுரை

வக்கா

கொக்கு

பகம்

பகம் (=கொக்கு) + ஆ = பக்கா >>> வக்கா

வக்காணம்

ஒலி நீட்டம்

பைக்கனம்

பை (=விரி, நீட்டு) + கனை (=ஒலி) + அம் = பைக்கனம் >>> பக்கணம் >>> வக்காணம் = ஒலியை நீட்டி முழக்குதல்

வக்காலத்து

இணக்கப் பத்திரம்

பாங்கெழுத்து

பாங்கு (=சம்மதம், இணக்கம்) + எழுத்து = பாங்கெழுத்து >>> பக்கலத்து >>> வக்காலத்து = இணக்கமாக எழுதப்பட்டது

வக்கிரம்

வளைவு, கோணல்

வாங்கிரம்

வாங்கு (=வளை) + இரு + அம் = வாங்கிரம் >>> வக்கிரம் = வளைந்திருக்கும் நிலை.

வக்கிரம்

வட்டம்

வாங்கிறம்

வாங்கு (=வளை) + இறு (=முடி, முற்று) + அம் = வாங்கிறம் >>> வக்கிரம் = முற்றிலும் வளைந்தது

வக்கிரம்

திரும்பிச் செல்லுதல்

வாங்கிரம்

வாங்கு (=வளை, திரும்பு) + இரி (=செல்) + அம் = வாங்கிரம் >>> வக்கிரம் = திரும்பிச் செல்லுதல்

வக்கிரம்

கொடுமை செய்தல்

மற்குரம்

மற்கு (=சினம்) + உரம் (=வலிமை, கடுமை) = மற்குரம் >>> மக்குரம் >>> வக்கிரம் = சினந்து கடுமையாக நடத்தல்

வக்கிரம்

பொறாமை

வக்கிரம்

வக்கு (=வேகு, புழுங்கு) + இரு + அம் = வக்கிரம் = புழுங்கி இருக்கும் நிலை.

வக்கிரம்

பொய், வஞ்சனை

வாங்குரம்

வாங்கு (=வளை, கோணு, மாறுபடு) + உரை (=பேசு) + அம் = வாங்குரம் >>> வக்கிரம் = மாறுபட்ட பேச்சு

வக்கிரம்

மயக்கம்

மாழ்கிரம்

மாழ்கு (=மயங்கு) + இரு + அம் = மாழ்கிரம் >>> மாக்கிரம் >>> வக்கிரம் = மயங்கி இருக்கும் நிலை.

வக்கிரி

வளை, திரும்பு

வக்கிரி

வக்கிரம் (=வளைவு, திருப்பம்) >>> வக்கிரி = வளை, திரும்பு

வக்கிரி

நீட்டி ஒலி

பைக்குரி

பை (=விரி, நீட்டு) + குரை (=ஒலி) + இ = பைக்குரி >>> பக்கிரி >>> வக்கிரி = நீட்டி ஒலி

வக்கீல்

வழக்கை நடத்துபவர்

வழக்கியல்

வழக்கு + இயல் (=நடத்து) = வழக்கியல் >>> வய்க்கீல் >>> வக்கீல் = வழக்கை நடத்துபவர்

வக்கு

தோல்

பக்கு

பக்கு (=தோல்) >>> வக்கு

வக்கு

நீர்த்தொட்டி

வக்கு

வாக்கு (=ஊற்று) >>> வக்கு = ஊற்றும் இடம்.

வக்கு

வழிவகை

பாங்கு

பாங்கு (=வழிவகை) >>> வக்கு

வக்கு

கொட்டை

பாக்கு

பாக்கு (=கொட்டை) >>> வக்கு

வக்தா

பேச்சாளி

வாக்கா

வாக்கு (=பேச்சு) + ஆ = வாக்கா >>> வக்தா = பேச்சாளி

வக்திரம்

வாய், முகம்

வாக்கிரம், பத்திரம்

(1) வாக்கு (=பேச்சு) + இரி (=நீங்கு, வெளியேறு) + அம் = வாக்கிரம் >>> வக்திரம் = பேச்சு வெளியேறும் இடம் = வாய். (2). பதம் (=சொல்) + இரி (=வெளியேறு) + அம் = பத்திரம் >>> வக்திரம் = சொல் வெளிப்படும் இடம் = வாய். >>> வாய் அமைந்த இடம் = முகம்.

வதனம்

முகம், வாய்

பதாணம்

(2). பதம் (=சொல்) + ஆணம் (=பற்றுக்கோடு) = பதாணம் >>> வதனம் = சொல்லுக்கான பற்றுக்கோடு = வாய் >>> வாய் அமைந்த இடம் = முகம்.

வக்து

காலம்

பதம்

பதம் (=காலம்) + உ = பத்து >>> வக்து

வகதி, வகது

காளை மாடு

மகாற்றி

மகம் (=ஏர்) + ஆற்று (=சும) + இ = மகாற்றி >>> மகத்தி >>> வகதி = ஏரைச் சுமப்பது

வகதி

காற்று

பாங்கறி

பாங்கு (=நிலை) + அறை (=இன்மை) + இ = பாங்கறி >>> பக்கதி >>> வகதி = நிலை அற்றது.

வகதி

நண்பன்

பாங்கத்தி

பாங்கு (=இணக்கம்) + அத்து (=பொருந்து) + இ = பாங்கத்தி >>> பக்கதி >>> வகதி = இணங்கிப் பொருந்தியவன்

வகது

பயணி

பாங்கத்து

பாங்கு (=வழி) + அத்து (=பொருந்து) = பாங்கத்து >>> பக்கது >>> வகது = வழியில் பொருந்தியவன்

வகந்தம்

காற்று

பாங்கற்றம்

பாங்கு (=நிலை) + அறு (=இல்லாகு) + அம் = பாங்கற்றம் >>> பக்கத்தம் >>> வகந்தம் = நிலை அற்றது

வகந்தம்

கைக்குழந்தை

மகாத்தம்

மகா (=குழந்தை) + அத்தம் (=கை) = மகாத்தம் >>> வகந்தம் = கைக்குழந்தை

வகம்

காற்று

வாங்கம்

வாங்கு (=அலை, அடி, தழுவு) + அம் = வாங்கம் >>> வாகம் >>> வகம் = அலைவதும் அடிப்பதும் தழுவுவதும் ஆனது

வகம்

வழி

பாங்கம்

பாங்கு (=வழி) + அம் = பாங்கம் >>> வாக்கம் >>> வகம்

வகம்

குதிரை, வண்டி

வாங்கம்

வாங்கு (=செலுத்து, ஓட்டு) + அம் = வாங்கம் >>> வாகம் >>> வகம் = ஓட்டப்படுவது = குதிரை, வண்டி