செவ்வாய், 7 செப்டம்பர், 2021

86 - (காவாலி > கிரீவம்) - சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

காவாலி, KAAVAALI

வஞ்சகன், CHEATER

காவாளி

கவை (=வஞ்சனை) + ஆளி = காவாளி >>> காவாலி = வஞ்சகன்

காவியம், KAAVIYAM

காப்பியம், EPICPOEM

காப்பியம்

காப்பியம் >>> காவியம்

காழகம், KAAZAKAM

கருமை, DARKNESS

காழகம்

காழ் (=ஒளி) + அகை (=நீங்கு) + அம் = காழகம் = ஒளி நீங்கியது

காழியன், KAAZIYAN

வண்ணான், WASHERMAN

காழீயன்

காழ் (=ஆடை, கருமை, கறை) + ஈ (=நீக்கு) + அன் = காழீயன் >>> காழியன் = ஆடையின் கறைகளை நீக்குபவன் = வண்ணான்.

காளகம், KAALHAKAM

இருள், DARKNESS

காளகம்

கள் (=மறை) + அகை (=எரி, ஒளிர்) + அம் = காளகம் = ஒளியின் மறைவு = இருள், கருமை.

காளகம், KAALHAKAM, காளம், KAALHAM

ஊதுகொம்பு, LONG TRUMPET

காலகம்

கால் (=காற்று, கிளை, கொம்பு) + அகை (=உயர், தூக்கு, செலுத்து) + அம் (=ஒலி) = காலகம் >>> காளகம் = உயரத் தூக்கிக் காற்றைச் செலுத்தி ஒலிக்கப்படும் கொம்பு = ஊதுகொம்பு

காளபம், KAALHAPAM

போர், WAR

காலவம்

கல (=ஒன்றுகூடு) + அவி (=அழி) + அம் (=செருக்கு) = காலவம் >>> காளபம் = ஒன்றுகூடிச் செருக்கி அழித்தல் = போர்.

காளம், KAALHAM, காலம், KAALAM

இருள், DARKNESS

காளம்

கள் (=மறை) + அம் (=ஒளி) = காளம் >>> காலம் = ஒளியின் மறைவு = இருள்

காளம், KAALHAM

நஞ்சு, POISON, பாம்பு, SNAKE

களம்

களம் (=நஞ்சு) >>> காளம் = நஞ்சு >>> நஞ்சுடையது = பாம்பு

காளம், KAALHAM

மேகம், CLOUD

கலம்

கலம் (=மேகம்) >>> காளம்

காளம், KAALHAM

மழை, RAIN

கால்

கால் (=மழை) + அம் = காலம் >>> காளம்

காளம், KAALHAM

சூலம், TRIDENT

காலம்

கால் (=நுனி, கிளை, தண்டு) + அம் (=நீளம்) = காலம் >>> காளம் = கிளைத்த நுனிகளைக் கொண்ட நீண்ட தண்டு = சூலம்.

காளமுகி, KAALHAMUKI

ஆலங்கட்டி மேகம், HAILSTONE CLOUD

காலமுகி

கல் (=கட்டி) + அம் (=நீர்) + உகு (=சொரி) + இ = காலமுகி >>> காளமுகி = நீர்க் கட்டிகளைச் சொரிவது

காளவனம், KAALHAVANAM

சுடுகாடு, BURNING GROUND

காலவாணம்

கால் (=ஒளி, தீ) + அவி (=எரி) + ஆணம் (=உடல், இடம்) = காலவாணம் >>> காளவனம் = உடலைத் தீயில் எரிக்கும் இடம்.

காளவாய், KAALHAVAAI

கழுதை, DONKEY

காளவாய்

காளம் (=எக்காளம்) + வாய் (=ஒப்பு, குரல்) = காளவாய் = எக்காளம் போன்ற குரலுடையது = கழுதை.

காளவாய், KAALHAVAAI

சூளை, KILN

காலவை

கல் + அவை (=அவி, எரி, இடம்) = காலவை >>> காளவாய் = (செங்கல் / சுண்ணாம்பு) கற்களை எரிக்கும் இடம்.

காளாம்பி, KAALHAAMPI

காளான், MUSHROOM

காலம்பி

கால் (=மழை, முளை, பொழுது, தண்டு) + அம் (=வளைவு, வெண்மை) + பூ (=பூமி) + இ = காலம்பி >>> காளாம்பி = மழையின்போது பூமியில் வெண்மையாய் வளைந்த தண்டுடன் முளைப்பது

காளிக்கம், KAALHIKKAM

கருநீலச்சாயம், DARK BLUE DYE

காளிக்கம்

காளம் (=கருமை, நீலம்) + இகு (=கரை) + அம் (=நீர்) = காளிக்கம் = கருநீலமாய்க் கரைக்கப்பட்ட நீர் = கருநீலச் சாயம்

காளிங்கன், KAALHINKAN

பாம்பு, SERPENT

காளிங்கன்

காளம் (=நஞ்சு) + இங்கு (=குத்து, கொத்து, புகுத்து) + அன் = காளிங்கன் = கொத்தி நஞ்சைப் புகுத்துபவன் = பாம்பு

காளிதம், KAALHITHAM

களிம்பு, PASTE

காளிதம்

களி (=குழைவு) + இதம் = காளிதம் = குழைவுடையது.

காளிந்தம், KAALHINTHAM

ஏலக்காய், CARDAMOM

காளுந்தம்

கள் (=நறுமணம்) + உந்து (=சேர், தோல்) + அம் (=பசுமை, உணவு, காய்) = காளுந்தம் >>> காளிந்தம் = உணவில் நறுமணத்தைச் சேர்க்கும் தோலைக் கொண்ட பசுங்காய்.

காளிமம், KAALHIMAM, காளிமை, KAALHIMAI

இருள், DARKNESS

காளிமம்

கள் (=மறை) + இமை (=ஒளிர்) + அம் = காளிமம் = ஒளிமறைவு

காளிமம், KAALHIMAM

களிம்பு, PASTE

காளிமம்

களி (=குழைவு) + மம் = காளிமம் = குழைவானது

காளையம், KAALHAIYAM

பேரொலி UPROAR

காலையம்

கல் (=ஒலி) + ஐ (=பெருமை, மிகுதி) + அம் = காலையம் >>> காளையம் = மிக்க ஒலி

காற்பனிகம், KAARHPANIKAM

கற்பிக்கப்பட்ட அறிவு, FALSEHOOD

காற்பனிகம்

கற்பனை (=கற்பிக்கப்பட்டது) + இகம் (=அறிவு) = காற்பனிகம் = கற்பிக்கப்பட்ட அறிவு.

காற்பாசம், KAARHPAACAM

பருத்தி, COTTON

கார்ப்பாசம்

கார்ப்பாசம் (=பருத்தி) >>> காற்பாசம்

காறை, KAARHAI

வண்டி, CART

காறை

கால் (=சக்கரம், செல்) + தை (=பொருத்து) = காறை = சக்கரம் பொருத்தப்பட்டுச் செல்வது = வண்டி.

கான்மியம், KAANMIYAM, கான்மிகம், KAANMIKAM

கருமபலன், RESULT OF DEEDS

கான்மியம்

கன்மம் (=கருமம்) + இயை (=பொருந்து, நிறை) + அம் = கான்மியம் = கருமத்தால் பொருந்தி நிறைவது = கருமபலன்.

கானம், KAANAM

சக்கரம், வண்டி, WHEEL, CART

கானம்

கனை (=முழுமை, வட்டம், செல்) + அம் = கானம் = வட்டமாகச் செல்வது = சக்கரம், வண்டி

கானம், KAANAM

காடு, FOREST

கானம்

கனை (=இருளு, செறிவு, ஒலி, மிகுதி, செல்) + அம் (=கொடுமை, கடினம்) = கானம் = இருள் செறிந்துளதும் ஒலி மிக்கதும் செல்வதற்குக் கடினமானதும் ஆகியது = காடு.

கானம், KAANAM

தொகுதி, CROWD

கானம்

கனை (=திரள், தொகு) + அம் = கானம் = திரட்சி, தொகுதி

கானம், KAANAM

பாட்டு, SONG

கானம்

கனை (=ஒலி, பாடு) + அம் = கானம் = பாட்டு

கானம், KAANAM

வானம்பாடி,

கானம்

கனை (=ஒலி, பாடு, விரை, பற) + அம் (=நீளம், பொழுது, பறவை) = கானம் = பறந்துவாறு நெடுநேரம் பாடும் பறவை = வானம்பாடி.

கானனம், KAANANAM

காடு, FOREST

கானனம்

கால் (=மரம், இடம்) + நனி (=மிகுதி) + அம் = கானனம் = மரங்கள் மிக்க இடம் = காடு

காட்டை, காச்~டை, KAATTAI, KAASHTAI

விருப்பம், FOND

காட்டை

கட்டு (=பாசம், விருப்பம்) + ஐ = காட்டை >>> காச்~டை

காசாயம், KAACAAYAM, காசா~யம், KAASHAAYAM

காவியுடை, RED BROWN DRESS

காழ்சாயம்

காழ் (=சிவப்பு, உடை) + சாயம் = காழ்சாயம் >>> காசாயம் = சிவப்புச் சாய உடை = காவி உடை

கிக்கிரி, KIKKIRI

மீன்கொத்தி, KING FISHER

கிக்கிரி

கிக்கிரி >>> கிக்கிரி என்று ஒலி எழுப்புவது = மீன்கொத்தி.

கிங்கரன், KINKARAN

ஏவலாள், SERVANT

கீழ்க்காரன்

கீழ் (=தாழ்வு, பணிவு) + காரம் (=வேலை) + அன் = கீழ்க்காரன் >>> கிங்கரன் = பணிந்து வேலை செய்பவன் = ஏவலாள்

கிங்கிணி, KINKINHI

சதங்கை, ANKLET

கிண்கிணி

கிணி+கிணி >>> கிணிகிணி >>> கிண்கிணி >>> கிங்கிணி = கிணிகிணி என்று ஒலிப்பது = சதங்கை.

கிச்சடி, KICCATI

குழைகலப்புணவு, MIXED GRUEL

குழடி

கூழ் (=குழைவு, கலப்புணவு) + அடு (=சமை) + இ = குழடி >>> கிசடி >>> கிச்சடி = குழைவாகச் சமைத்த கலப்புணவு.

கிச்சு, KICCU

தீ, FIRE

குய்யீ

குய் (=புகை) + ஈ (=படை, தோற்றுவி) = குய்யீ >>> கிச்சீ >>> கிச்சு = புகையைத் தோற்றுவிப்பது = தீ.

கிச்சு, KICCU

கூச்சம், SHYNESS

கூச்சம்

கூச்சம் + உ = குச்சு >>> கிச்சு

கிசம், KICAM

தளிர், SPROUT

குழை

குழை (=தளிர்) + அம் = குழம் >>> கிசம்

கிசலம், KICALAM, கிசலை, KICALAI

புத்தளிர், NEW SPROUT

குழளம், குழளை

குழை (=தளிர்) + அளி (=தோன்று) + அம் / ஐ = குழளம் / குழளை >>> கிசலம் / கிசலை = தோன்றிய தளிர் = புத்தளிர்.

கிசலயம், KICALAYAM

புத்தளிர், NEWSPROUT

குழளயம்

குழளை (=புத்தளிர்) + அம் = குழளயம் >>> கிசலயம்

கிஞ்சம், KINCAM, KINCU, கிஞ்சில், கிஞ்சு, KINCIL

சிறுமை, LITTLENESS

கையம்

கை (=சிறுமை) + அம் = கையம் >>> கிசம் >>> கிஞ்சம்

கிஞ்சம், KINCAM

புளி, TAMARIND

குச்சம்

கூசு + அம் (=உணவு) = குச்சம் >>> கிஞ்சம் = கூசுகின்ற உணவு

கிஞ்சல், KINCAL

குறைவு, DEFICIT

கையல்

கை (=சிறுமை) + அல் = கையல் >>> கிசல் >>> கிஞ்சல் = குறைவு

கிஞ்சன், KINCAN, கிஞ்சனன், KINCANAN

ஏழை, POORMAN

கையன்

கை (=சிறுமை, வறுமை) + அன் = கையன் >>> கிசன் >>> கிஞ்சன் = வறியவன் = ஏழை.

கிஞ்சி, KINCI

வேப்பமரம், MARGO

கையி

கை (=கசப்பு, மரம்) + இ = கையி >>> கிசி >>> கிஞ்சி = கசப்பான மரம் = வேப்பமரம்.

கிஞ்சிஞ்ஞம், KINCIJJAM

சிற்றறிவு, LIMITED KNOWLEDGE

கையிங்கம்

கை (=சிறுமை) + இங்கம் (=அறிவு) = கையிங்கம் >>> கிசிங்ஙம் >>> கிஞ்சிஞ்ஞம் = சிற்றறிவு

கிஞ்சித்து, KINCITHTHU, கிஞ்சிதம், KINCITHAM

மிகச்சிறுமை, VERY LITTLENESS

கையிற்று

கை (=சிறுமை) + இறை (=சிறுமை) + உ = கையிற்று >>> கிசித்து >>> கிஞ்சித்து = சிறுமையில் சிறுமை.

கிஞ்சித்து, KINCITHTHU

புளி, TAMARIND

குச்சிற்றூழ்

கூசு + இறை (=மரம்) + ஊழ் (=பழம்) = குச்சிற்றூழ் >>> கிஞ்சித்து = கூசுகின்ற பழமுடைய மரம் = புளியமரம்.

கிஞ்சுகம், KINCUKAM

கிளி, PARROT

கிய்யுகம்

கீ + உகு (=பற) + அம் (=ஒலி) = கிய்யுகம் >>> கிச்சுகம் >>> கிஞ்சுகம் = கீ கீ என்று ஒலிக்கும் பறவை = கிளி.

கிஞ்சுகம், KINCUKAM

சிவப்பு, RED

கிச்சுகம்

கிச்சு (=தீ) + உகை (=எழு, தோன்று) + அம் (=ஒளி, நிறம்) = கிச்சுகம் >>> கிஞ்சுகம் = தீயில் தோன்றும் நிறம் = சிவப்பு

கிட்டங்கி, KITTANKI

பொருளறை, STORE HOUSE

கிட்டக்கி

கிடை (=கிடக்கை) + அகம் (=பொருள், இடம்) + இ = கிட்டக்கி >>> கிட்டங்கி = பொருள் கிடக்கும் இடம்.

கிட்டம், KITTAM

உலோகக் கட்டி, METAL LUMP

கெட்டம்

கெட்டி (=வலிமை, கட்டி) + அம் (=ஒளி) = கெட்டம் >>> கிட்டம் = ஒளியுடைய வலுவான கட்டி = உலோகக் கட்டி.

கிட்டம், KITTAM

உலர்ச்சி, DRYNESS

கெட்டம்

கெடு (=அழி, நீங்கு) + அம் (=நீர்) = கெட்டம் >>> கிட்டம் = நீர் நீங்குதல் = உலர்தல், உலர்ச்சி.

கிட்டம், KITTAM

கறை, துரு, சேறு, DROSS, SCUM, MIRE

கெட்டம்

(1) கெடு + அம் (=அழகு) = கெட்டம் >>> கிட்டம் = அழகைக் கெடுப்பது = கறை, துரு. (2) கெடு + அம் (=நீர்) = கெட்டம் >>> கிட்டம் = நீரைக் கெடுப்பது = கறை, சேறு.

கிட்டாலம், KITTAALAM

செப்புப்பாத்திரம், COPPER VESSEL

குட்டலம்

குடம் (=பாத்திரம்) + அலி (=தீ) + அம் (=ஒளி, ஒப்பு) = குட்டலம் >>> கிட்டாலம் = தீ போல ஒளிரும் பாத்திரம் = செப்புப்பாத்திரம்

கிட்டாரம், KITTAARAM

செப்புப்பாத்திரம், COPPER VESSEL

குட்டாரம்

குடம் (=பாத்திரம்) + ஆர் (=ஒளி, தீ) + அம் (=ஒப்பு) = குட்டாரம் >>> கிட்டாரம் = தீ போல ஒளிரும் பாத்திரம் = செப்புப்பாத்திரம்.

கிட்டி, KITTI, கிடி, KITI

காட்டுப்பன்றி, HOG

கெண்டி

கெண்டு (=பூமியைத் தோண்டு, உண்) + இ = கெண்டி >>> கிண்டி >>> கிட்டி = பூமியைத் தோண்டி உண்பது = காட்டுப்பன்றி.

கிட்டிணம்,

கருமை,

கெட்டினம்

கெடு (=அழி) + இனை (=எரி, ஒளிர்) + அம் = கெட்டினம் >>> கிட்டிணம் = ஒளியின் அழிவு = இருள், கருமை.

கிடங்கு, KITANKU

பொருளறை, STORE HOUSE

கிடக்கு

கிடை (=கிடக்கை) + அகம் (=பொருள், இடம்) + உ = கிடக்கு >>> கிடங்கு = பொருள் கிடக்கும் இடம்.

கிடங்கு, KITANKU

சிறை, JAIL

குற்றகு

குற்றம் + அகை (=வருத்து, தண்டி, பிரிவு, அறை) + உ = குற்றகு >>> கிட்டகு >>> கிடங்கு = குற்றத்திற்காகத் தண்டிக்கும் அறை.

கிடாரம், KITAARAM

கொப்பரை, CAULDRON

கிண்டாரம்

கிண்டு (=தோண்டு, பள்ளமாக்கு, சமை, கடை, கிளறு) + ஆரம் (=வட்டம்) = கிண்டாரம் >>> கிடாரம் = கடைந்து கிளறிச் சமைப்பதற்கான வட்டமான பள்ளமுடையது = கொப்பரை

கிடுகு, KITUKU

அம்பைத் தடுப்பது, BUCKLER

கெடுகோ

கெடு (=தடு) + கோ (=அம்பு) = கெடுகோ >>> கிடுகு = அம்பைத் தடுப்பது.

கிடுகு, KITUKU

மரச்சட்டம், WOODEN FRAME

கிட்டோக்கு

கிட்டி (=மரக்கட்டை) + ஓக்கு (=கட்டு) = கிட்டோக்கு >>> கிடோகு >>> கிடுகு = மரக்கட்டைகளால் கட்டப்பட்டது.

கிடுகு, KITUKU

ஓலைக்கட்டு, DRY LEAF BRAID

கிற்றோக்கு

கீற்று (=ஓலை) + ஓக்கு (=கட்டு) = கிற்றோக்கு >>> கிட்டோகு >>> கிடுகு = ஓலைகளால் கட்டப்பட்டது.

கிடுகு, KITUKU

பறை, DRUM

கிறிகு

கிறு (=சுற்று, வட்டமாகு) + இகு (=அடி, ஒலி) = கிறிகு >>> கிடிகு >>> கிடுகு = அடித்து ஒலிக்கப்படும் வட்டப் பொருள் = பறை.

கிடுபிடி, KITUPITI, கிடுமுடி, KITUMUTI

பறை, DRUM

கிறுவிடி

கிறு (=சுற்று, வட்டமாகு) + இடி (=அடி, ஒலி) = கிறுவிடி >>> கிடுபிடி >>> கிடுமுடி = அடித்து ஒலிக்கப்படும் வட்டப் பொருள்.

கிடுபிடி, KITUPITI

பேரொலி, UPROAR

கிடுபீடி

கிடு (=ஒலி) + பீடு (=பெருமை) + இ = கிடுபீடி >>> கிடுபிடி = பேரொலி

கிண்டன், KINTAN

தடியன், FAT MAN

குண்டன்

குண்டன் (=தடியன்) >>> கிண்டன்

கிண்டன், KINTAN, கிண்டான், KINTAAN

முரட்டுத்துணி, COARSE CLOTH

குற்றாண்

கூறை (=துணி) + ஆண் (=வலிமை) = குற்றாண் >>> கிட்டான் >>> கிண்டன் = வலுவான துணி.

கிண்டி, KINTI

ஊற்றும் பாத்திரம், NOZZLED VESSEL

குட்டீ

குடம் (=குவிந்த பாத்திரம்) + ஈ (=கொடு, ஊற்று) = குட்டீ >>> கிண்டி = ஊற்றுவதற்கான குவிந்த பாத்திரம்

கித்தான், KITHTHAAN

முரட்டுத்துணி, COARSE CLOTH

குற்றாண்

கூறை (=துணி) + ஆண் (=வலிமை) = குற்றாண் >>> கித்தான் = வலுவான துணி.

கிண்ணம், KINHNHAM, கிண்ணி, KINHNHI

சிறுவட்டில், SMALL CUP

குன்னி, குன்னம்

குன் (=வளை, குறுகு, தாழ், பள்ளமாகு) + இ / அம் = குன்னி / குன்னம் >>> கிண்ணி / கிண்ணம் = வளைவான பள்ளமுடைய குறும்பொருள்.

கிண்ணரம், கின்னரம், KINHNHARAM, KINNARAM

நரம்பிசைக்கருவி, STRINGED INSTRUMENT

கிண்ணரம்

கிண் + அரவு / அரா (=கயிறு, நரம்பு, ஒலி) + அம் (=நீளம்) = கிண்ணரம் >>> கின்னரம் = கிண் கிண் என்று ஒலிக்கும் நீண்ட நரம்புகளைக் கொண்டது.

கிணகன், KINHAKAN

அடிமை, SLAVE

குனாக்கன்

கூன் (=வளைவு, பணிவு) + ஆக்கம் (=செயல், வேலை) + அன் = குனாக்கன் >>> கிணகன் = பணிந்து வேலை செய்பவன்

கிணம், KINHAM

தழும்பு, SCAR

கீனம்

கீன் (=கீறு) + அம் = கீனம் >>> கிணம் = கீறல், தழும்பு.

கித்தாப்பு, KITHTHAAPPU, கிதாப்பு, KITHAAPPU

புத்தகம், BOOK

கிற்றாப்பு

கீறு (=எழுது) + ஆப்பு (=கட்டு) = கிற்றாப்பு >>> கித்தாப்பு = எழுத்துக்களால் கட்டப்பட்டது = புத்தகம்

கியாதி, கியாதம், KIYAATHI, KIYAATHAM

பெருமை, புகழ், GREATNESS, FAME

கீழறி

கீழ்மை (=இழிவு) + அறு (=இல்லாகு) + இ = கீழறி >>> கியதி >>> கியாதி = இழிவு இல்லாதது = பெருமை, புகழ்.

கிரகணம், KIRAKANHAM,  கிராணம், KIRAANHAM

ஒளிமறைப்பு,, ECLIPSE

கிரகணம்

(3) கிரகம் (=சூரியன், சந்திரன், பூமி) + அணை (=அவி, மறை) + அம் (=ஒளி) = கிரகணம் = சூரிய சந்திர ஒளியைப் பூமிமறைத்தல்.

கிரகணம், KIRAKANHAM

பற்றுதல், SEIZURE

குறகணம்

குறு (=இழு, வாங்கு) + அகம் (=உள்) + அணம் = குறகணம் >>> கிரகணம் = உள் வாங்குதல் = பற்றுதல்.

கிரகணம், KIRAKANHAM

புரிதல், COMPREHENSION

குறகணம்

குறி (=சொல்லு, அடை, பெறு) + அகம் (=மனம், உள்) + அணம் = குறகணம் >>> கிரகணம் = சொல்லியதை மனதிற்குள் பெறுதல்.

கிரகம், KIRAKAM

வான்கோள், PLANET

கிறகம்

(2) கிறு (=சுற்று) + அகை (=உயர், எரி, ஒளிர், செல்) + அம் = கிறகம் >>> கிரகம் = உயரத்தில் சுற்றிக்கொண்டு ஒளிர்ந்தவாறே செல்வது = சூரியன், சந்திரன் முதலான கோள்கள்.

கிரகம், KIRAKAM

வீடு, HOUSE

குரகம், கிறகம்

(1) கூரை (=மேல்மறைப்பு) + அகம் (=இடம்) = குரகம் >>> கிரகம் = மேல்மறைப்புடைய இடம் = வீடு. (2) கீறு (=பிள) + அகம் (=இடம்) = கிறகம் >>> கிரகம் = பிளவுடைய இடம் = வீடு.

கிரகி, KIRAKI

பற்று, புரிந்துகொள், SEIZE, UNDERSTAND

கிரகி

கிரகணம் (=பற்றுதல், புரிதல்) >>> கிரகி = பற்று, புரிந்துகொள்

கிரணம், KIRANHAM

ஒளிக்கதிர், LIGHT RAY

குரணம்

கூர்மை + அணி (=பிரிவு, பகுதி) + அம் (=ஒளி, நீளம்) = குரணம் >>> கிரணம் = ஒளியின் நீண்ட கூரிய பகுதி = கதிர்

கிரணமாலி, கிரணன், KIRANHAMAALI, KIRANHAN

சூரியன், SUN

கிரணவாளி

கிரணம் (=ஒளிக்கதிர்) + ஆள் + இ = கிரணவாளி >>> கிரணமாலி = ஒளிக்கதிர்களை ஆள்பவன் = சூரியன்

கிரது, KIRATHU

யாகம், SACRIFICE

குராற்று

குரு (=புரோகிதர், ஒளி, தீ) + ஆற்று (=உண்டாக்கு, கொடு, உண்ணு) = குராற்று >>> கிராத்து >>> கிரது = புரோகிதர் தீயை உண்டாக்கி அதற்கு உணவு கொடுத்தல்.

கிரது, KIRATHU

நரகம், HELL

குறற்று

குறை (=குற்றம்) + அற்றம் (=மரணம், துன்பம், பள்ளம்) + உ = குறற்று >>> கிரத்து >>> கிரது = மரணித்தோர் குற்றத்திற்காக துன்புறும் பள்ளம்.

கிரந்தம், KIRANTHAM

புத்தகம், BOOK

கிறத்தம்

கீறு (=எழுது) + அத்து (=பொருத்து, கட்டு) + அம் (=சொல்) = கிறத்தம் >>> கிரந்தம் = சொற்களால் எழுதிக் கட்டப்பட்டது = நூல்

கிரந்தி, KIRANTHI

முடிச்சு, KNOT

கயிறத்தி

கயிறு + அத்து (=பொருத்து, கட்டு) + இ = கயிறத்தி >>> கைரந்தி >>> கிரந்தி = கயிற்றில் பொருத்திய கட்டு = முடிச்சு.

கிரந்தி, KIRANTHI

நாடிப்பொருத்து, VENAL INTERSECTION

கயிறத்தி

கயிறு (=நரம்பு, நாடி) + அத்து (=பொருத்து) + இ = கயிறத்தி >>> கைரந்தி >>> கிரந்தி = நரம்பு / நாடிகளின் பொருத்து.

கிரந்தி, KIRANTHI

தோல், SKIN

குறத்தி

குறை (=மாமிசம், தசை) + அத்து (=பொருந்து, சார்) + இ = குறத்தி >>> கிரந்தி = தசையுடன் பொருந்திச் சார்ந்திருப்பது = தோல்.

கிரமம், KIRAMAM

ஒழுங்குமுறை, ORDER

குறமம்

குறி (=வரையறு) + அமை (=செய்) + அம் = குறமம் >>> கிரமம் = வரையறுத்துச் செய்தல் = ஒழுங்கு, வரைமுறை.

கிரமுகம், KIRAMUKAM

பாக்கு, BETEL NUT

குரமுகம்

குரு (=சிவப்பு, கொட்டை) + அம் (=உண்ணு) + உகு (=வெளிப்படுத்து, துப்பு) + அம் = குரமுகம் >>> கிரமுகம் = உண்டு துப்பப்படும் சிவப்புநிறக் கொட்டை = பாக்கு.

கிரயம், KIRAYAM

விற்பனை, SALES

குறாயம்

குறு (=வாங்கு, கொடு) + ஆயம் (=பணம், பொருள்) = குறாயம் >>> கிரயம் = பணத்தை வாங்கிப் பொருளைக் கொடுத்தல்.

கிரயம், KIRAYAM

விற்கும் தொகை, SELLING PRICE

குறாயம்

குறு (=வாங்கு, கொடு) + ஆயம் (=பணம், பொருள்) = குறாயம் >>> கிரயம் = பொருளைக் கொடுத்து வாங்கும் பணம்.

கிரவுஞ்சம், KIRAVUNCAM

அன்றில், INDIAN LOVE BIRD

கிறவியம்

கீறு (=பிரி) + அவி (=அழி, இற) + அம் (=நீர், பறவை) = கிறவியம் >>> கிரவுசம் >>> கிரவுஞ்சம் = பிரிந்தால் இறக்கும் நீர்ப்பறவை

கிரவுஞ்சம், KIRAVUNCAM

கோழி பறக்கும் தூரம், FLIGHT DISTANCE OF FOWL

குறபூழம்

குறு / குற (=விரை, பற) + பூழ் (=கோழி) + அம் (=நீளம், தூரம்) = குறபூழம் >>> கிரவூசம் >>> கிரவுஞ்சம் = கோழி பறக்கும் தூரம்.

கிராக்கி, KIRAAKKI

பெரிய விலை, HIGH PRICE

குராக்கீ

கூர் (=மிகு) + ஆக்கம் (=பணம், பொருள்) + ஈ (=கொடு) = குராக்கீ >>> கிராக்கி = பொருளுக்குக் கொடுக்கும் மிக்க பணம்

கிராகியம், KIRAAKIYAM

கொள்ளத்தக்கது, RECEIVABLE

கிரகியம்

கிரகி (=பற்று, கொள்) + இயை (=தகு) + அம் = கிரகியம் >>> கிராகியம் = கொள்ளத் தக்கது.

கிராசம், KIRAACAM

கவளம், RICE BALL

குரசம்

கூர் (=குவி, திரட்டு) + அசை (=உணவு) + அம் = குரசம் >>> கிராசம் = திரட்டப்பட்ட உணவு = கவளம்.

கிராணம், KIRAANHAM

மூக்கு, NOSE

குரணம்

கூர் (=வளை, குவி) + அணி (=முகம், பிரிவு, உறுப்பு) + அம் = குரணம் >>> கிராணம் = முகத்தில் வளைந்து குவிந்த உறுப்பு.

கிராணம், KIRAANHAM

சிறுபாத்திரம், SMALL BASIN

குறாணம்

குறுமை (=சிறுமை) + ஆணம் (=கொள்கலம்) = குறாணம் >>> கிராணம் = சிறிய கொள்கலம்.

கிராணி, KIRAANHI

கணக்குப்பிள்ளை, CLERK

கிறேணி

கீறு (=எழுது) + ஏணி (=எண்ணிக்கை, கணக்கு) = கிறேணி >>> கிராணி = கணக்கு எழுதுபவன் = கணக்கன்

கிராதகன், KIRAATHAKAN

கொடியவன், VILLAIN

குறைதகன்

குறை (=குற்றம்) + தகு (=தொடங்கு, செய்) + அன் = குறைதகன் >>> கிராதகன் = குற்றம் செய்பவன் = கொடியவன்.

கிராதன், KIRAATHAN

வேடன், HUNTER

குறேதன்

குறை (=அழி, கொல், மறை + எய்து (=அடை, பிடி) + அன் = குறேதன் = கிராதன் = மறைந்திருந்து பிடித்துக் கொல்பவன்.

கிராதி, KIRAATHI

அளியடைப்பு, LATTICE

குறத்தி

குறி (=சிறுதண்டு, வரையறு) + அத்து (=பொருத்து, கட்டு) + இ = குறத்தி >>> கிராதி = சிறுதண்டுகளால் வரையறுத்துக் கட்டப்பட்டது = அளியடைப்பு

கிராந்தி, KIRAANTHI

சுற்றுப்பாதை, ORBIT

கிறாற்றி

கிறு (=சுற்று) + ஆறு (=வழி, பாதை) + இ = கிறாற்றி >>> கிராத்தி >>> கிராந்தி = சுற்றுப்பாதை.

கிராம், KIRAAM

கடிவாளம், BRIDLE

குறம்

குறு (=விரை, குறை, இழு) + அம் (=நீளம்) = குறம் >>> கிராம் = விரைவைக் குறைக்க இழுக்கப்படும் நீண்ட பொருள் = கடிவாளம்.

கிராம்பு, KIRAAMPU

உணவு வகை, CLOVE

குரம்பூ

குரு (=வேர்க்குரு, வெப்பம், எரிச்சல்) + அம் (=ஒப்பு, உணவு) + பூ = குரம்பூ >>> கிராம்பு = வேர்க்குரு போல எரிகின்ற பூ உணவு.

கிராமம், KIRAAMAM

சிற்றூர், VILLAGE

குறவம்

குறுமை (=சிறுமை) + அவை (=கூடுமிடம், ஊர்) + அம் = குறவம் >>> கிராமம் = சிற்றூர்.

கிராமம், KIRAAMAM

நீர்ப்பறவை, WATER FOWL

குறமம்

குறு (=விரை, பற) + அம் (=நீர்) + அம் = குறமம் >>> கிராமம் = நீர்ப்பறவை.

கிராமியம், KIRAAMIYAM

சிற்றூருக்குரியது, RELATED TO VILLAGE

கிராமியம்

கிராமம் (=சிற்றூர்) + இயை (=பொருந்து) + அம் = கிராமியம் = சிற்றூருடன் பொருந்தியது.

கிராமியம், KIRAAMIYAM

இழிசொல், VULGAR WORD

குறமியம்

குறை (=குற்றம், இழிவு) + அமை (=பொருந்து) + இயம் (=சொல்) = குறமியம் = கிராமியம் = இழிவு / குற்றம் பொருந்திய சொல்.

கிரி, KIRI

பன்றி, HOG

குறி

குறை (=வெட்டு, தோண்டு, உண்) + இ = குறி >>> கிரி = தோண்டி உண்பது = பன்றி.

கிரி, KIRI

மலை, HILL

குருழி

கூர் (=குவி, மிகுதி) + உழி (=இடம், நிலம்) = குருழி >>> கிரியி >>> கிரி = மிகுதியாகக் குவிந்திருக்கும் நிலம் = மலை.

கிரி, KIRI

பிணையாளி, HOSTAGE

குறீ

குறை (=சுருக்கு, கட்டு, பிணி) + ஈ (=கொடு) = குறீ >>> கிரி = கட்டு / பிணை கொடுப்பவன் = பிணையாளி.

கிரிகிரி, KIRIKIRI

மலைப்பன்றி, WILD HOG

கிரிகிரி

கிரி (=மலை) + கிரி (=பன்றி) = கிரிகிரி = மலைப்பன்றி.

கிரிச்சம், KIRICCAM

வருத்தம், HARDSHIP

குறிச்சம்

குறை (=அழி) + இசை (=இன்பம்) + அம் = குறிச்சம் >>> கிரிச்சம் = இன்பத்தை அழிப்பது = துன்பம்.

கிருச்சிரம், கிரிச்சிரம், KIRUCCIRAM, KIRICCIRAM

நீர்ச்சுருக்கு, URETHRAL STRICTURE

குறுச்சிரம்

குறை + உச்சை (=சிறுநீர்) + இரி (=நீங்கு, கழி) + அம் = குறுச்சிரம் >>> கிருச்சிரம் = சிறுநீர் குறைவாகக் கழிதல்.

கிருச்சிரம், கிரிச்சிரம், KIRUCCIRAM, KIRICCIRAM

பரிகாரம், REMEDY

குறையிறம்

குறை (=குற்றம், பாவம், கழி) + இறு (=செய்) + அம் = குறையிறம் >>> குறிசிறம் >>> கிரிச்சிரம் >>> கிருச்சிரம் = பாவங்களைக் கழிப்பதற்காகச் செய்யப்படுவது = பரிகாரம்

கிரிசம், KIRICAM

மென்மை, SOFTNESS

குறூழம்

குறை (=அழி, இல்லாகு) + ஊழ் (=முதிர்ச்சி, வலிமை) + அம் = குறூழம் >>> கிருசம் >>> கிரிசம் = வலிமை அற்றது

கிரிசு, KIRICU

கத்தி, DAGGER

குறிழு

குறு (=சிறு, குத்து) + இழு = குறிழு >>> கிரிசு = குத்தி இழுக்கப்படும் சிறிய பொருள் = குறுவாள், கத்தி

கிரியை, கிரிசை, KIRIYAI, KIRICAI

முயற்சி, செயல், EFFORT, ACTION

குறிழை

குறி (=இலக்கு, அடை) + இழை (=செய்) = குறிழை >>> கிரியை >>> கிரிசை = இலக்கை அடைவதற்குச் செய்யப்படுவது.

கிரீச்~மம், கிரீட்டுமம், KIREESHMAM

கோடைக்காலம், SUMMER

குரூழிமம்

குரு (=வேர்க்குரு, தோன்று) + ஊழி (=காலம்) + மம் = குரூழிமம் >>> கிரீசிமம் >>> கிரீச்~மம் = வேர்க்குருக்கள் தோன்றும் காலம்

கிரீடம், KIREETAM

மகுடம், CROWN

குரிறம்

குரை (=பெருமை, ஒலி, சாற்று) + இறை (=அரசன், தலை, தங்கு, பொருள்) + அம் = குரிறம் >>> கிரீடம் = அரசனின் தலையில் தங்கிப் பெருமை சாற்றும் பொருள்.

கிரீடி, KIREETI

அரசன், KING

கிரீடி

கிரீடம் (=மணிமகுடம்) + இ = கிரீடி = மகுடம் அணிந்தவன்

கிரீடை, KIREETAI

உடலுறவு, SEX

குறீடை

குறி (=பிறப்புக்குறி) + இடு (=கொடு, பரிமாறு) + ஐ = குறீடை >>> கிரீடை = பிறப்புக்குறிகளைப் பரிமாறுதல்.

கிரீடை, KIREETAI

விளையாட்டு, PASTIME

குறிறை

குறை (=விருப்பம், செயல்) + இறை (=சிதறு, ஓடு) = குறிறை >>> கிரீடை = விரும்பி ஓடும் செயல் = விளையாட்டு

கிரீதன், KIREETHAN

விலைக்குப் பெற்ற குழந்தை, CHILD ADOPTED FOR MONEY

குறிறன்

குறு (=வாங்கு) + இறு (=பணம் கட்டு) + அன் = குறிறன் >>> கிரீதன் = பணம் கட்டி வாங்கப்பட்டவன்.

கிரீவம், KIREEVAM

கழுத்து, NECK

குறீவம்

கூறு (=பகுதி, உறுப்பு) + ஈவு (=கொடை) + அம் (=ஒலி) = குறீவம் >>> கிரீவம் = ஒலியைக் கொடுக்கும் உறுப்பு = தொண்டை

உச்சை, UCCAI

சிறுநீர், URINE

உழாய்

ஊழ் (=உடல், கெடு, நாற்றம், சிந்து) + ஆய் (=கழிவு) = உழாய் >>> உசாய் >>> உச்சை = உடலில் இருந்து சிந்தப்படும் கெட்டநாற்றம் உடைய கழிவு = சிறுநீர்.

ஆயுதம், AAYUTHAM

தாக்கிரும்பு, IRON WEAPON

ஆயுந்தம்

(2) அயம் (=இரும்பு) + உந்து (=எறி, தாக்கு) + அம் = ஆயுந்தம் >>> ஆயுதம் = எறிந்து தாக்கும் இரும்பு.

கேடயம், KAETAYAM

கேடயம், SHIELD

கேடயம்

கெடு (=தடு) + அயம் (=இரும்பு) = கேடயம் = இரும்பைத் தடுப்பது

கேடகம், KAETAKAM

கேடயம், SHIELD

கேடெஃகம்

கெடு (=தடு) + எஃகு (=ஆயுதம்) + அம் = கேடெஃகம் >>> கேடகம் = ஆயுதத்தைத் தடுப்பது.

கருணை, KARUNHAI

கருணைக்கிழங்கு, ELEPHANT YAM

கறுணை

காறு (=காறல்சுவை, கட்டி) + உண் + ஐ = கறுணை >>> கருணை = காறல்சுவை கொண்ட கட்டியான உணவு.

காளான், KAALHAAN

காளான், MUSHROOM

காலம்

கால் (=மழை, பொழுது, முளை, தண்டு, இடம், பூமி) + அம் (=வெண்மை, வளைவு) = காலம் >>> காளான் = மழையின்போது பூமியில் வெண்மையாய் வளைந்த தண்டுடன் முளைப்பது.

ஆம்பி, AAMPI

காளான், MUSHROOM

ஆம்பி

அம் (=நீர், மழை, வெண்மை, பொழுது, வளைவு) + பூ (=பூமி, தோன்று, முளை) + இ = ஆம்பி = மழையின்போது பூமியில் வெண்மையாய் வளைவுடன் முளைப்பது = காளான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.