புதன், 29 ஏப்ரல், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 24


சொல்
பொருள்
தமிழ்ச்சொல்
மூலச் சொல்லும் தோன்றும் முறையும்
பியல், பிசல்
தோள், பிடர், திமில்
பையள்
பை (=வலிமை) + அள் (=செறிவு) = பையள் >>> பியல் >>> பிசல் = வலிமையும் செறிவும் கொண்டது.
பிசவ்வியம்
பருத்தி
பைசம்பியம்
பை (=ஒளி, வெண்மை) + சம்பு (=நார்) + இயம் = பைசம்பியம் >>> பிசவ்வியம் = வெண்மையான நார் கொண்டது.
பிசனம்
சந்தனம்
வீசணம்
வீசு (=மண) + அணி (=பூசு) + அம் = வீசணம் >>> பிசனம் = நறுமணம் வீசும் பூச்சு.
பிசாத்து
அற்பம்
வீசற்றம்
வீசு (=பற) + அற்றம் (=பொடி) = வீசற்றம் >>> பிசத்தம் >>> பிசாத்து = காற்றில் பறக்கக்கூடிய பொடி.
பிசி, பிசில்
சோறு, உணவு
மிசி
மிசை (=உண்ணு) >>> மிசி >>> பிசி = உண்ணப்படுவது.
பிசிதம்
இறைச்சி
மிசிறம்
மிசை (=உண்ணு) + இறு (=கொல்) + அம் = மிசிறம் >>> பிசிதம் = கொன்று உண்ணப்படுவது.
பிசிதம்
வேம்பு
பைசீதம்
பை (=பசுமை) + சீதம் (=குளிர்ச்சி) = பைசீதம் >>> பிசிதம் = குளிர்ச்சி தரும் பசுமையான இலைகளைக் கொண்டது.
பிசிதம்
சாம்பல், நீறு
பையிறம்
பை (=ஒளி, வெண்மை) + இறு (=முடி) + அம் = பையிறம் >>> பிசிதம் = முடிவில் கிடைக்கும் வெண்ணிறப் பொருள்.
பிசு
பருத்தி
பிசு
வீசு (=பற, சிதறு) >>> பிசு = காற்றில் பறந்து சிதறக் கூடியது.
பிசு
குட்ட நோய்
விசு
விழு (=நோய்ப்படு, குன்று, வளை) >>> விசு >>> பிசு = உறுப்புகள் குன்றி வளையும் நோய்.
பிசுதூலம்
பருத்தி
வீசுதுல்லம்
வீசு (=பற, சிதறு) + துல்லம் (=வெண்மை) = வீசுதுல்லம் >>> பிசுதூலம் = காற்றில் பறந்து சிதறும் வெண்ணிறப் பொருள்.
பிசுமத்தம், பிசுமந்தம்
வேம்பு
பிசுபற்றம்
பிசு (=பிசின்) + பற்று (=பொருந்து) + அம் = பிசுபற்றம் >>> பிசுமத்தம் >>> பிசுமந்தம் = பிசின் பொருந்தியது.
பிசுனம்
பொய் / கோள் சொல்லுதல்
பிசிணம்
பிசி (=பொய், கோள்) >>> பிசிணம் >>> பிசுனம் = பொய் / கோள் சொல்லுதல்.
பிசுனம்
காக்கை
பிசுணம்
பிசி (=சோறு) + உண் + அம் = பிசுணம் >>> பிசுனம் = சோறு உண்பது = காகம்.
பிசுனம்
பருத்தி
பைசூனம்
பை (=ஒளி, வெண்மை) + சூனம் (=பெருக்கம்) = பைசூனம் >>> பிசுனம் = வெண்ணிறத்தில் பெருத்திருப்பது.
பிசுனம்
குங்குமம், மஞ்சள்
பைசுண்ணம்
பை (=நிறம்) + சுண்ணம் (=பொடி) = பைசுண்ணம் >>> பிசுனம் = நிறம் மிக்க பொடி வகைகள்.
பிஞ்சகன்
கொல்பவன்
பிய்யாகன்
பிய் (=அறு, கிழி) + ஆகம் (=உடல்) = பிய்யாகம் >>> பிஞ்ஞகம் >>> பிஞ்சகன் = உடலை அறுப்பவன் = கொல்பவன்.
பிஞ்சரம்
தங்கம், அரிதாரம்
பையாரம்
பை (=ஒளி) + ஆர் (=பொருந்து) + அம் = பையாரம் >>> பிசாரம் >>> பிச்சாரம் >>> பிஞ்சரம் = ஒளி பொருந்தியது.
பிஞ்சலம்
புல்
பையளம்
பை (=பசுமை) + அள் (=நெருக்கம்) + அம் = பையளம் >>> பிசலம் >>> பிஞ்சலம் = பசுமையாக நெருக்கமாக வளர்வது
பிஞ்சை
மஞ்சள் கிழங்கு
வீழ்சாய்
வீழ் (=வேர்) + சாய் (=ஒளி) = வீழ்சாய் >>> பீச்சாய் >>> பிஞ்சை = ஒளிரும் வேரினைக் கொண்டது.
பிஞ்ஞகம்
தலை அணி
மிச்சகம்
மிசை (=மேல், தலை) + அகை (=ஒளிர்) + அம் = மிச்சகம் >>> பிஞ்ஞகம் = தலையின் மேல் ஒளிர்வது.
பிஞ்ஞகன்
சிவன்
பிஞ்சகன்
பிஞ்சகன் (=கொல்பவன்) >>> பிஞ்ஞகன் = அழிப்பவன் = சிவன்
பிட்சாடனம்
பிச்சை ஏற்று உண்ணல்
பிச்சாடணம்
பிச்சை + ஆடு (=அனுபவி) + அணம் = பிச்சாடணம் >>> பிட்சாடனம் = பிச்சை எடுத்து உண்ணுதல்.
பிட்சாடனன்
சிவன்
பிச்சாடணன்
பிச்சாடணம் (=பிச்சை எடுத்துண்டல்) >>> பிச்சாடணன் >>> பிட்சாடனன் = பிச்சை எடுத்து உண்டவன்.
பிட்டகம்
மாவு உணவு
பிட்டாக்கம்
பிட்டு (=மாவு) + ஆக்கம் (=உணவு) = பிட்டாக்கம் >>> பிட்டகம் = மாவில் செய்த உணவு
பிட்டம், பிட்டி
பின்புறம்
பின்றம்
பின்று (=பின்செல்) + அம் = பின்றம் >>> பிற்றம் >>> பிட்டம் = பின்னால் சென்ற உடல் பகுதி.
பிட்டம்
பிசைந்த மாவு
பிட்டாம்
பிட்டு (=மாவு) + ஆம் (=நீர்) = பிட்டாம் >>> பிட்டம் = நீர் கலந்து பிசைந்த மாவு.
பிட்டலை
குழம்பு
பீடலை
பீடு (=குழைவு) + அலை (=நீர்) = பீடலை >>> பிட்டலை = நீர் மிகுந்த குழைவான பொருள்.
பிட்டன்
புறம்பானவன்
பிட்டன்
பிட்டம் (=பின்புறம்) >>> பிட்டன் = கொள்கைக்குப் புறம்பானவன்
பிட்டி
பெருக்கம்
பீடி
பீடு (=பெருமை) >>> பீடி >>> பிட்டி = பெருக்கம்
பிட்டி
கூடை
பிட்டி
பிடி (=கொள்) >>> பிட்டி = கொள்கலம்.
பிட்டு
குழைமா
பிட்டு
பீடு (=குழைவு) >>> பிட்டு = குழைவானது
பிட்டு
குழாய்ப் பிட்டு
பிட்டம்
பிடி (=அடக்கு, உண்ணு) + அம் = பிட்டம் >>> பிட்டு = குழாயில் அடக்கி அவித்து உண்ணப்படுவது.
பிட்டு
பொடி, மாவு
பிட்டு
பிள் (=நொறுக்கு) + து = பிட்டு = நொறுக்கப்பட்டது.
பிட்டுவம்
அரைத்தல்
பிட்டுவம்
பிட்டு (=பொடி) >>> பிட்டுவம் = பொடி செய்தல்.
பிடகம், பிடாகம், பிடாகை
கூடை
பிடாக்கம்
பிடி (=கொள்) + ஆக்கம் (=பொருள்) = பிடாக்கம் >>> பிடாகம், பிடகம் >>> பிடாகை, பிடகை = கொள்ளும் பொருள் = கொள்கலம் = கூடை.
பிடகம்
நூல்
பீடாக்கம்
பீடு (=பெருமை) + ஆக்கம் (=படைப்பு) = பீடாக்கம் >>> பிடகம் = பெருமை சாற்றும் படைப்பு = நூல்.
பிடகம்
கொப்புளம்
பீடகம்
பீடு (=குழைவு) + அகம் (=உள்) = பீடகம் >>> பிடகம் = உள்ளே குழைவாக இருப்பது.
பிடகன், பிடகாரி
விசமுறிவு வைத்தியன்
விடகன்
விடம் (=நஞ்சு) + அகை (=முறி) + அன் = விடகன் >>> பிடகன் = நஞ்சை முறிப்பவன்.
பிடகம்
பிச்சை
பீடாக்கம்
பீடு (=தாழ்வு) + ஆக்கம் (=உணவு) = பீடாக்கம் >>> பிடகம் = தாழ்வான உணவு.
பிடல்
கதவு
பிடல்
பிடி (=அகப்படுத்து, மூடு) >>> பிடல் = மூட உதவுவது
பிடவம்
மரக்கிளை
வீறமம்
வீறு (=பிரி) + அமை (=தண்டு) + அம் = வீறமம் >>> பிடவம் = பிரியும் தண்டு.
பிடார்
கருவம்
பீடார்
பீடு (=பெருமை) + ஆர் (=மிகுதி) = பீடார் >>> பிடார் = மிகுதியான பெருமை = கருவம்.
பிடாரம்
விசமுறி வைத்தியம்
விடாறம்
விடம் (=நஞ்சு) + அறு (=நீக்கு) + அம் = விடாறம் >>> பிடாரம் = நஞ்சு நீக்குதல்.
விடை
பாம்பு
விடை
விடம் (=நஞ்சு) >>> விடை = நஞ்சுடையது.
பிடாரன்
விசமுறி வைத்தியன்
விடாறன்
விடம் (=நஞ்சு) + அறு (=நீக்கு) + அன் = விடாறன் >>> பிடாரன் = நஞ்சை நீக்குபவன்.
பிடாரன்
பாம்பாட்டி
விடாரன்
விடை (=பாம்பு) + ஆர் (=ஒலி, கட்டு) + அன் = விடாரன் >>> பிடாரன் = பாம்பின் முன் இசைத்து அதனைக் கட்டுபவன்
பிடாரி
கட்டற்றது, கட்டுப்படாதது
பிடாறி
பிடி (=கட்டு) + அறு + இ = பிடாறி >>> பிடாரி = கட்டற்றது, கட்டுக்குள் அடங்காதது.
பிடிகம்
வளையம்
பிடிகம்
பிடி (=வளை) >>> பிடிகம் = வளையம்
பிடிதம்
பிச்சை
பிடிறம்
பிடி (=பெறு) + இறு (=வீழ், தாழ்) + அம் = பிடிறம் >>> பிடிதம் = தாழ்ந்து பெறப்படுவது.
பிடுகு
இடியோசை
பிடுகு
பிட்கு (=ஒலி) >>> பிடுகு = இடியோசை.
பிடை
குப்பி
பிடை
பிடி (=கொள்) >>> பிடை = சிறிய கொள்கலம்
பிண்டம்
உண்டை, கரு
மிட்டம், மிண்டம்
(1). மிடை (=சேர், திரள், செறி) + அம் = மிட்டம் >>> மிண்டம் >>> பிண்டம் = சேர்ந்து திரண்டது / செறிவுற்றது. (2). மிண்டு (=நெருங்கு, செறி, திரள்) >>> மிண்டம் >>> பிண்டம் = திரட்சி.
பிண்டம்
நூல், உடல்
மிட்டம், மிண்டம்
மிடை (=கட்டு, தொகு) + அம் = மிட்டம் >>> மிண்டம் >>> பிண்டம் = கட்டப் / தொகுக்கப் பட்டது = நூல், உடல்.
பிண்டதன்
பங்காளி, தாயாதி
மிண்டத்தன்
மிண்டு (=நெருங்கு) + அத்து (=பொருந்து) + அன் = மிண்டத்தன் >>> பிண்டதன் = நெருங்கிப் பொருந்தியவர்.
பிண்டாரி
கொள்ளையன்
மிண்டாரி
மிண்டு (=பொருள்) + ஆர் (=கட்டு, சுருட்டு) + இ = மிண்டாரி >>> பிண்டாரி = பொருட்களைச் சுருட்டிக்கொண்டு செல்பவன்.
பிண்டி
பொடி, மாவு
பிட்டு
பிள் (=பிள, துண்டாகு) + து = பிட்டு >>> பிண்டு >>> பிண்டி = துண்டாகியது = பொடி, மாவு.
பிண்டி
பிண்ணாக்கு
மிண்டி
மிண்டு (=நெருங்கு, செறி) >>> மிண்டி >>> பிண்டி = செறிந்தது
பிண்டி
கூட்டம்
மிண்டி
மிண்டு (= செறி, கூடு) >>> மிண்டி >>> பிண்டி = கூட்டம்
பிண்டி
வடிவம்
வீற்றி
வீற்று (=கீறு, வரை) >>> வீற்றி >>> பிட்டி >>> பிண்டி = வரையப்பட்டது = உருவம், வடிவம்.
பிண்டிகை
ஆசனம்
மிண்டிங்கம்
மிண்டு (=பொருந்து, தங்கு) + இங்கம் (=பொருள்) = மிண்டிங்கம் >>> பிண்டிகம் >>> பிண்டிகை = பொருந்தும் / தங்கும் பொருள்.
பிண்டோதகம்
பிதிர்க்கடன்
பிண்டோதகம்
பிண்டம் (=உருண்டை) + உதகம் (=நீர்) = பிண்டோதகம் = பிதிரர்க்குச் சோற்று உருண்டையும் நீரும் சமர்ப்பித்தல்.
பிண்ணாக்கு
எண்ணை பிழிந்த சக்கை
மிண்டாக்கு
மிண்டு (=நெருங்கு, செறி) + ஆக்கு = மிண்டாக்கு >>> பிண்ணாக்கு = நெருக்கிச் செறிவூட்டப் பட்டது.
பிணாரம்
பருமனானது
பிணரம்
பிணர் (=பருமன்) >>> பிணரம் >>> பிணாரம் = பருமனானது
பிணிமுகம்
தோகை, மயில்
பிணிமுகம்
பிணி (=தொகு) + முகம் (=கண்) = பிணிமுகம் = பல கண்களின் தொகுப்பு = தோகை = மயில்.
பித்தம், பித்தி, பித்து
கல்லீரலின் செரிமான நீர்
வீற்றம்
வீற்று (=கூறுசெய், செரி) + அம் = வீற்றம் >>> பித்தம் = உண்ட உணவுத் துகள்களைக் கூறுசெய்து செரிக்க உதவும் நீர்.
வாதம்
காற்று
மாறம்
மாறு (=இடம்பெயர், அடி, தாக்கு) + அம் = மாறம் >>> வாதம் = ஒரு நிலையின்றி இடம்பெயரக் கூடியதும் திடீரென்று வலிமை பெற்று அடித்துத் தாக்குவதும் ஆனது = காற்று.
கபம்
சளி
கம்மம்
(2) கம்மு (=மூடு, அடை) + அம் >>> கம்மம் >>> கப்பம் >>> கபம் = அடைப்பை ஏற்படுத்துவது = சளி.
பித்தம், பித்து
மயக்கம், பைத்தியம்
வித்தம்
விது (=கலங்கு, மயங்கு) + அம் = வித்தம் >>> பித்தம் = கலக்கம், மயக்கம், அறிவு கலக்கம்
பித்தம்
மிளகு
வீற்றம்
வீறு (=காட்டம்) + அம் = வீற்றம் >>> பித்தம் = காட்டமானது. ஒ.நோ: வீறு >>> வீறியம் >>> வீரியம் = காட்டம்.
காட்டம்
உறைப்பு
காட்டம்
கடுமை (=வெம்மை) + அம் >>> காட்டம்
பித்தல்
நீர்க்கரை
வீற்றால்
வீறு (=நிலை, நீளு, வளை) + ஆல் (=நீர்) = வீற்றால் >>> பித்தல் = நீரைக் கொண்டதும் நீண்டு வளைந்து செல்வதும் ஆனது.
பித்தல்
கழுத்து
வித்தல்
வித்து (=பதி, பொருத்து) >>> வித்தல் >>> பித்தல் = தலையை உடலுடன் பொருத்துவது.
பித்தளை
செம்பு கலந்த துத்தநாகம்
பைத்தளை
பைது (=செம்மை) + அளை (=கல) = பைத்தளை >>> பித்தளை = செம்பு கலந்தது. ஒ.நோ: பைது (=செம்மை) + இரு (=தங்கு) + அம் = பைதிரம் = செம்மையாகத் தங்கியது = நிலம்.
பித்தன்
திருடன்
வித்தன்
வித்து (=புதை, மூடு, மறை) >>> வித்தன் >>> பித்தன் = மறைந்து இருப்பவன் = திருடன்.
பித்தான்
பொத்தான்
வித்தான்
வித்து (=மூடு, மறை) >>> வித்தான் >>> பித்தான் = மூட உதவுவது. ஒ.நோ: பொத்து (=மூடு) >>> பொத்தான்.
பித்தி, பித்திகை
சுவர், பங்கு
வீற்றி
வீற்று (=பிரி) >>> வீற்றி >>> பித்தி = (1) பிரிப்பது = சுவர். (2) பிரிக்கப்பட்டது = பங்கு.
பித்தி
பின்புறம்
பிற்றை
பிற்றை (=பின்புறம்) >>> பித்தை >>> பித்தி
பித்திகம், பித்திகை, பித்தி
பிச்சிப் பூ
பித்திகம்
பித்து (=மயக்கம்) + இகம் (=மணம்) = பித்திகம் >>> பித்திகை >>> பித்தி = மயக்கும் மணம் கொண்ட மலர்.
இகம்
மணம்
இகம்
இக (=கட, பரவு, வீசு) >>> இகம் = வீசுவது = மணம். ஒ.நோ: இகமலர் = நறுமண மலர்.
பிதகம்
மின்னல்
வீறகம்
(1). வீறு (=பிள) + அகை (=ஒளிர்) + அம் = வீறகம் >>> பிதகம் = வானத்தைப் பிளக்கும் ஒளி. (2). வீறு (=ஒளி) + அகை (=பிள) + அம் = வீறகம் >>> பிதகம் = விண்ணைப் பிளக்கும் ஒளி.
பிதா
தந்தை, கடவுள்
வீற்றன்
வீற்று (=உண்டாக்கு, தோற்றுவி) >>> வீற்றன் >>> பித்தன் >>> பிதா = தோற்றுவித்தவன்.
பிதாமகன்
தந்தை வழிப் பாட்டன்
பிதாமகன்
பிதா (=தந்தை) + மகன் = பிதாமகன் = தந்தையை மகனாகப் பெற்றவர் = தந்தைவழிப் பாட்டன்.
பிதி
இடியோசை
வீறி
வீறு (=தோன்று, பிள) >>> வீறி >>> பிதி = வானத்தில் திடீரெனத் தோன்றிப் பிளப்பது.
பிதிகாரம்
பரிகாரம்
வீறிகலம்
வீறு (=நீக்கு) + இகல் (=நோய், துன்பம்) + அம் = வீறிகலம் >>> பிதிகாரம் = நோய் / துன்பத்தை நீக்குதல்.
பிதிரர், பிதிர், பிதுரர், பிதுர்
முன்னோர், தந்தை.
பிற்றிரர்
பிற்றை (=பின்னால்) + இரு + அர் = பிற்றிரர் >>> பித்திரர் >>> பிதிரர் = காலச் சுழற்சியில் பின்னால் இருப்பவர்கள்.
பிதிரம், பிதுரம்
மின்னல்
வீறிரம்
வீறு (=பிள, ஒளி) + ஈர் (=நீளு) + அம் = வீறிரம் >>> பிதிரம் = வானத்தைப் பிளக்கும் நீண்ட ஒளி.
பிதிலி, பிதளை
எண்ணைப் பாத்திரம்
பைதைலம்
பை (=கொள்கலம்) + தைலம் (=எண்ணை) = பைதைலம் >>> பிதிலம் >>> பிதிலி >>> பிதளை = எண்ணைக் கலம்.
பிது
பெருமை
வீறு
வீறு (=பெருமை) >>> வீது >>> பிது
பிதூரி
சூழ்ச்சி
வித்தூரி
வித்து (=மூடு, மறை) + ஊர் (=நகர்த்து, நடத்து) + இ = வித்தூரி >>> பிதூரி = மறைவாகச் செயல் நடத்துதல் / நகர்த்தல்..
பிந்தாரம்
ஓவியம்
வீற்றாரம்
வீறு (=கீறு, வரை) + ஆர் (=நிறைவு, அழகு) + அம் = வீற்றாரம் >>> பித்தாரம் >>> பிந்தாரம் = நிறைவாகவும் அழகாகவும் வரையப்பட்டது = ஓவியம்.
பிந்தாரி
ஓவியம் வரை
பிந்தாரி
பிந்தாரம் (=ஓவியம்) >>> பிந்தாரி = ஓவியம் வரை
பிந்து
பொடி, துளி, புள்ளி, விந்து
வீற்று
வீற்று (=துண்டு) >>> வித்து >>> விந்து >>> பிந்து = பொடி, துளி, புள்ளி, விந்து.
பிப்பலகம்
முலைக்காம்பு
வைப்பாலகம்
வை (=கூர்மை) + பாலகம் (=முலை) = வைப்பாலகம் >>> விப்பாலகம் >>> பிப்பலகம் = முலையில் கூரியதாக இருப்பது
பிப்பலம்
கடல்
வைப்பாலம்
வைப்பு (=பூமி, இருப்பு) + ஆலம் (=நீர்) = வைப்பாலம் >>> விப்பலம் >>> பிப்பலம் = பூமியில் எப்போதும் இருக்கும் நீர்
பிப்பலம்
பறவை, காற்று
வைப்பலம்
வைப்பு (=இருப்பு, நிலை) + அல் + அம் = வைப்பலம் >>> விப்பலம் >>> பிப்பலம் = இருப்பு / நிலை அற்றது.
பிப்பலம், பிப்பலிகை
அரச மரம்
வைப்பலம்
வை (=கூர்மை) + பலம் (=இலை) = வைப்பலம் >>> விப்பலம் >>> பிப்பலம் = கூரிய இலைகளைக் கொண்டது.
பிப்பா
பெரிய கொள்கலம்
வைப்பா
வை (=இருத்து) + பா (=பரப்பு, பருமன்) = வைப்பா >>> விப்பா >>> பிப்பா = பொருளை இருத்தக்கூடிய பெரிய கொள்கலம்.
பிப்பிகை
பற்கறை
மைவிகை
மை (=கறை) + விகை (=பல்) = மைவிகை >>> மிவ்விகை >>> பிப்பிகிய = பல்லில் உள்ள கறை.
விகி, விகை
பல்
விகி, விகை
விங்கு (=அழுத்து, துளை) >>> விங்கி >>> விகி >>> விகை = அழுத்தித் துளையிட உதவுவது = பல்.
விகிரம்
பறவை
விகிலம்
விகி (=பல்) + இலம் = விகிலம் >>> விகிரம் = பற்கள் அற்றது.
பீலிகை, பீலு, பிலன்
எறும்பு
பீலு
பிள்ளு (=சிறுசிறு துண்டாக்கு) >>> பீலு >>> பிலன், பீலிகை = உணவைச் சிறுசிறு துண்டாக்கிக் கொண்டு செல்வது.
பைபீலம், பிபீலிகை, பிபீலி
கட்டெறும்பு
மைபீலிகை
மை (=வலிமை, கருமை) + பீலிகை (=எறும்பு) = மைபீலிகை >>> பைபீலம், பிபீலிகை = வலிமை மிக்க கருப்பு எறும்பு.
முசிறு
சித்தெறும்பு
முசிறு
மொய் + சிறு = மொச்சிறு >>> முசிறு = மொய்க்கும் சிற்றுயிரி
பிபாசம், பிபாசை
தாகம்
பைபாயம்
பை (=பசுமை, ஈரம்) + பாயம் (=விருப்பம்) = பைபாயம் >>> பிபாசம் >>> பிபாசை = ஈரப்படுத்துவதற்கான விருப்பம்.
பிபாசிதன்
தாகமுள்ளவன்
பிபாசிதன்
பிபாசம் (=தாகம்) >>> பிபாசிதன் = தாகமுள்ளவன்
பியாரம்
விசம், விசச்செடி
வீயாரம், பையாலம்
(1). வீ (=மரணம்) + ஆர் (=உண்ணு) + அம் = வீயாரம் >>> பியாரம் = உண்டால் மரணம் தருவது = விசம், விசச்செடி. (2). பை (=பசுமை) + ஆலம் (=நஞ்சு) = பையாலம் >>> பியாரம் = நச்சுடைய பச்சை இலை.  
பியாலிகை
அரச இலை
பையாலிகை
பை (=பசுமை) + ஆலி (=ஒலி) + கை (=உறுப்பு) = பையாலிகை >>> பியாலிகை = காற்றில் ஒலிக்கும் பசுமையான உறுப்பு.
பியந்தை
பாட்டு, இசை
வியந்தை
விய (=பாடு) >>> வியந்தை >>> பியந்தை = பாட்டு