புதன், 15 ஏப்ரல், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 18


சொல்
பொருள்
தமிழ்ச்
சொல்
மூலச்சொல்லும் தோன்றும் முறையும்
பரிமளம்
மிக்க மணம்
பரிமலம்
பரி (=மிகுதி) + மல் (=மணம்) + அம் = பரிமலம் >>> பரிமளம் = மிகுதியான மணம். ஒ.நோ: மல் (=மணம்) >>> மலர், மல்லி = மணம் கொண்டது.
பரிமளி
மிக்க மணம் வீசு
பரிமலி
பரிமலம் (=மிக்க மணம்) >>> பரிமலி = மிக்க மணம் வீசு
பரிமளிப்பு
மிகுமணம் வீசுகை, புகழ் பெறுகை
பரிமலிப்பு
பரிமலி (=மிக்க மணம் வீசு) >>> பரிமலிப்பு = மிகுமணம் வீசுகை >>> சிறப்புறுகை, புகழ்பெறுகை.
பரிமாணம்
அறியப்படும் அளவு
பரிமாணம்
பரி (=அறி) + மாண் (=அள) + அம் = பரிமாணம் = அறியப்படும் அளவு. ஒ.நோ: மாண் (=அள) >>> மாண் = அளவை, தடவை, மடங்கு.
பரிமிதம்
அளவுக்கு உட்பட்டது
பரிப்பிதம்
பரி (=அறு, வரையறு, அள) >>> பரிப்பு (=அளவு) >>> பரிப்பிதம் >>> பரிமிதம் >>> அளவுக்குட்பட்டது
பரிமேயம்
அளவுக்கு உட்பட்டது
பரிமையம்
பரி (=அறு, வரையறு, அள) >>> பரிமை (=அளவு) >>> பரிமையம் >>> பரிமேயம் = அளவுக்குட்பட்டது
பரியகம்
அணிகலன், சிலம்பு, வளை
பரியாக்கம்
பரி (=அணி) + ஆக்கம் (=பொருள்) = பரியாக்கம் >>> பரியகம் = அணியக்கூடிய பொருள்.
பரியங்கம்
படுக்கும் இடம்
வரியகம்
வரி (=படி, படு) + அகம் (=இடம்) = வரியகம் >>> பரியங்கம் = படுக்கும்
இடம்.
பரிவட்டம், பரியட்டம்
தலையில் கட்டும் துணி
பரிவட்டம், பரியட்டம்
பரி (=அணிவி) + வட்டம் = பரிவட்டம் >>> பரியட்டம் = தலையில் அணிவிக்கப்படும் வட்டமான அணி.
பரியந்தம்
எல்லை
வரியந்தம்
வரி (=கோடு) + அந்தம் (=முடிவு) = வரியந்தம் >>> பரியந்தம் = முடிவைக் காட்டும் கோடு.
பரியயணம்
குதிரைப்பயணம், குதிரைச்சேணம்
பரியயணம்
பரி (=குதிரை) + அயணம் (=பயணம்) = பரியயணம் = குதிரைப் பயணம், பயணம் செய்யும்போது அமருமிடம்
பரியவம்
பெரிய வழி
பரியவம்
பரி (=பெருமை) + இயவு (=வழி) + அம் = பரியவம் = பெரிய வழி.
பரியயம்
ஒழுங்கின்மை
பாறியம்
பாறு (=ஒழுங்கற்றுப் பரந்திரு) + இயை + அம் = பாறியையம் >>> பரியயம் = ஒழுங்கற்ற நிலை.
பரியயம்
கவனமின்மை
பரியயம்
பரி (=அறு) + ஆய் (=கவனி) + அம் = பரியாயம் >>> பரியயம் = கவனம் அற்ற நிலை.
ஆசம்
சிரிப்பு, நகை
ஆயம்
ஆய் (=ஒளிர், சிரி) >>> ஆயம் >>> ஆசம் = சிரிப்பு, நகை
பரியாசம், பரியாசை
பெருஞ்சிரிப்பு
பரியாசம், பரியாசை
பரி (=மிகுதி) + ஆசம் (=சிரிப்பு) = பரியாசம் >>> பரியாசை  = பெருஞ்சிரிப்பு.
பரியாத்தி
முழுநிறைவு, திருத்தி
பரியான்றி
பரி (=முழுமை) + ஆன்றி (=நிறைவு) = பரியான்றி >>> பரியாற்றி >>> பரியாத்தி = முழு நிறைவு
பரியாத்தி
பகுத்தறிவு
பரியாற்றி
பரி (=நீக்கு, பகு) + அறி = பரியறி >>> பரியாற்றி >>> பரியாத்தி = பகுத்து அறிதல்.
பரியாத்தி
சம்பாதிக்கும் பொருள்
பரியாத்தி
பரி (=வாங்கு, பெறு) + ஆத்தி (=செல்வம், பொருள்) = பரியாத்தி = பெற்றுக்கொள்ளும் செல்வம்.
பரியாயம்
ஒருபொருட் பன்மொழி
மாறியையம்
மாறு (=சொல்) + இயை (=பொருந்து) +அம் = மாறியையம் >>> பரியாயம் = பொருளுடன் பொருந்திய சொற்கள்.
பரியாளம்
சொந்தபந்தம்
பரியாளம்
பரி (=சூழ், சுற்று) + ஆள் + அம் = பரியாளம் = தம்மைச் சுற்றியிருக்கும் ஆட்கள் = சொந்த பந்தம்.
பரிவத்தனம்
மீண்டும் மீண்டும் சுற்றி வருகை
பரிமாற்றணம்
பரி (=சூழ், சுற்று) + மறி (=மீள், திரும்பு) + அணம் = பரிமாற்றணம் >>> பரிவத்தனம் = மீண்டும் மீண்டும் சுற்றி வருதல்.
பரிவத்தி
சுற்றி வா
பரிமறி
பரி (=சூழ், சுற்று) + மறி (=மீள், திரும்பு) = பரிமறி >>> பரிவதி >>> பரிவத்தி = மீண்டும் மீண்டும் சுற்றி வா
பரிவதனம்
அழுகை
வரிமதனம்
வரி (=ஒழுக்கு) + மதனம் (=மனக் கலக்கம்) = வரிமதனம் >>> பரிவதனம் = மனக்கலக்கத்தால் உண்டாகும் ஒழுக்கு
பரிவதனம்
நிந்தனை, இழிவு
பறிமாற்றணம்
பறி (=பள்ளம், தாழ்வு, இழிவு) + மாற்று (=சொல்) + அணம் = பறிமாற்றணம் >>> பரிமாத்தனம் >>> பரிவதனம் = இழிவு / தாழ்வு செய்யும் சொல்.
பரிவயம்
இளமை
மறிமயம்
மறி (=குட்டி) + மயம் (=தன்மை) = மறிமயம் >>> பரிவயம் = குட்டியின் தன்மை = இளமை.
பரிவயம்
அரிசி
வரிவாயம்
வரி (=நெல்) + வாய் (=பெறு) + அம் = வரிவாயம் >>> பரிவயம் = நெல்லில் இருந்து பெறப்படுவது.
பரிவர்த்தனம்
நீட்டல் அளவை
பரிவார்த்தனம்
பரி (=அறி, அள) + வார் (=நீட்டு) + தனம் = பரிவார்த்தனம் >>> பரிவர்த்தனம் = நீட்டி அளத்தல்.
பரிவர்த்தனம், பரிவருத்தனம், பரிவர்த்தனை
பண்டமாற்று
மறிவார்த்தனம்
மறி (=மீள், திரும்பு) + வார் (=வழங்கு, கொடு) + தனம் = மறிவார்த்தனம் >>> பரிவர்த்தனம் = கொடுத்ததற்காகத் திரும்பக் கொடுத்தல்.
பரிவர்த்துளம்
நரகம்
பறிவருத்துளம்
பறி (=பள்ளம்) + வருத்து + உளம் = பறிவருத்துளம் >>> பரிவர்த்துளம் = பாவிகளை வருத்தும் பள்ளமான இடம்.
பரிவற்சனம்
கொலை
பரிவற்சனம்
பரி (=அழி) + வல் (=வன்மை) + சனம் (=உயிர்கள்) = பரிவற்சனம் = உயிர்களை வன்மையால் அழித்தல்.
பரிவற்சனம்
துறத்தல்
பரிவற்றனம்
பரிவு (=பற்று) + அல் + தனம் = பரிவற்றனம் >>> பரிவற்சனம் = பற்று அற்ற நிலை.
பரிவாதம்
பழிச்சொல், இழிசொல்
பறிமாற்றம்
பறி (=பள்ளம், தாழ்வு, இழிவு) + மாற்று (=சொல்) + அம் = பறிமாற்றம் >>> பரிவாத்தம் >>> பரிவாதம் = இழிவு / தாழ்வு செய்யும் சொல்.
பரிவாதினி
வீணை
பரிமாற்றினி
பரி (=இரங்கு) + மாற்று (=சொல்) + இனி = பரிமாற்றினி >>> பரிவாத்தினி >>> பரிவாதினி = இரங்கிப் பேசும் சொல் போல ஒலிக்கும் இசைக்கருவி.
பரிவாபம்
சவரம் செய்தல்
பரிமாவம்
பரி (=நீக்கு, கழி) + மா (=மயிர்) + அம் = பரிமாவம் >>> பரிவாபம் = மயிர் நீக்குகை.
மாபுலி
சிங்கம்
மாபுலி
மா (=மயிர்) + புலி = மாபுலி = மயிர் நிறைந்த புலி போன்றது.
பரிவாபம்
பெருங்குளம்
பரிவாவி
பரி (=மிகுதி, பெருமை) + வாவி (=குளம்) = பரிவாவி >>> பரிவாபி >>> பரிவாபம் = பெருங்குளம்.
பரிவாரம்
சுற்றம், படை
பரிவாரம்
பரி (=சூழ்) + வாரம் (=வருகை) = பரிவாரம் = தம்மைச் சூழ்ந்து வருபவர்கள்.
பரிவாரம்
வேலையாட்கள்
பரிவாரம்
பரி (=ஓடு) + வாரம் (=வருகை) = பரிவாரம் = அழைத்தவுடன் ஓடி வருபவர்கள்.
பரிவாரம்
உறை
பரிபாரம்
பரி (=பாதுகா) + பாரம் (=கவசம்) = பரிபாரம் >>> பரிவாரம் = பாதுகாக்கும் கவசம்.
பரிவித்தி
தம்பிக்குப் பின் மணமுடித்த அண்ணன்
பரிபிந்தி
பரி (=அணிவி, கட்டு) + பிந்து (=பிற்படு) = பரிபிந்து >>> பரிபிந்தி >>> பரிவித்தி = தாலி கட்டியதில் தம்பிக்குப் பிற்பட்ட அண்ணன்.
பரிவேந்தா
அண்ணனுக்கு முன்னரே மணமுடித்த தம்பி
பரிவீற்றன்
பரி (=அணிவி, கட்டு) + வீறு (=முற்படு) = பரிவீறு >>> பரிவீற்றன் >>> பரிவீத்தன் >>> பரிவேந்தா = தாலி கட்டியதில் அண்ணனுக்கு முற்பட்ட தம்பி.
பரிவிரட்டம்
தவறு
பரிபிரட்டம்
பரி (=பெருமை) + பிரட்டு (=தலைகீழாக்கு) + அம் = பரிபிரட்டம் >>> பரிவிரட்டம் = பெருமையைத் தலைகீழாக்கும் செயல்பாடு.
பரிவிராசகன்
துறவி
பரிவிரசகன்
பரி (=பற்று) + விரசு (=ஓட்டு) + அகன் = பரிவிரசகன் >>> பரிவிராசகன் = பற்றுக்களை ஓட்டிய உள்ளமுடையவன்.
பரிவிருகிதம்
மிகுதியான வளர்ச்சி
பரிவிருக்கிதம்
பரி (=மிகுதி) + விருக்கம் (=வளர்ச்சி) + இதம் = பரிவிருக்கிதம் = மிகுதியான வளர்ச்சி.
பரிவிருங்கணம்
மிகுதியான வளர்ச்சி
பரிவிருக்கணம்
பரி (=மிகுதி) + விருக்கம் (=வளர்ச்சி) + அணம் = பரிவிருக்கணம் = மிகுதியான வளர்ச்சி.
விருக்கம், விருக்ச~ம், விருட்சம்
மரம், வளர்ச்சி
வீறுகம்
வீறு (=வளர், பெருகு) >>> வீறுகம் >>> விருக்கம் >>> விருக்ச~ம் >>> விருட்சம் = வளரும் / பெருகும் இயல்புடையது.
விருத்தி
வளர்ச்சி
வீறுதி
வீறு (=வளர், பெருகு) >>> வீறுதி >>> விருத்தி = வளர்ச்சி
விருத்தி
விளக்கம்
வீறுதி
வீறு (=ஒளி) >>> வீறுதி >>> விருத்தி = விளக்கம்
பரிவிருத்தி
கிரகச் சுற்றினை விளக்குதல்
பரிவிருத்தி
பரி (=சுற்று) + விருத்தி (=விளக்கம்) = பரிவிருத்தி = கிரகங்கள் சுற்றி வருதலை விளக்குதல்.
பரிவீதம்
வில்
பரிவீற்றம்
பரி (=அழி) + வீற்று (=வளைவு) + அம் = பரிவீற்றம் >>> பரிவீத்தம் >>> பரிவீதம் = அழிவைத் தருகின்ற வளைவான பொருள்.
பரிவேசம், பரிவேடம்
சூழ்ந்திருக்கும் வட்டம்
பரிவேயம்
பரி (=சுற்று, வட்டம்) + வேய் (=சூழ்) + அம் = பரிவேயம் >>> பரிவேசம் >>> பரிவேடம் = சூரிய சந்திரனைச்  சூழ்ந்திருக்கும் வட்டம்.
பரிவேட்டி
சுற்றிவா
பரிவேட்டி
பரிவேடம் (=சுற்றுவட்டம்) >>> பரிவேட்டி = சுற்றிவா
பரிவேட்டணம், பரிவேட்பு
சுற்றி வருதல்
பரிவேட்டணம், பரிவேட்பு
பரிவேட்டி (=சுற்றிவா) >>> பரிவேட்டணம், பரிவேட்பு = சுற்றி வருதல்.
பரிவேதனம்
பெருந்துயரம்
பரிவேதனை
பரி (=மிகுதி) + வேதனை = பரிவேதனை >>> பரிவேதனம்
பரிவேதனம்
அழுகை
வரிபேதனம்
வரி (=ஒழுக்கு) + பேது (=கலங்கு) + அனம் = வரிபேதனம் >>> பரிவேதனம் = கலக்கத்தால் உண்டாகும் ஒழுக்கு.
வேதனம்
பொன்
பேறணம்
பேறு (=செல்வம்) >>> பேறணம் >>> வேதனம் = பொன்.
வேதனம்
சம்பளம்
பேறணம்
பேறு (=பெறப்படுவது) >>> பேறணம் >>> வேதனம் = பெறப்படும் கூலி
வேதனம்
அறிவு
பேறணம்
பேறு (=கல்வி) >>> பேறணம் >>> வேதனம் = அறிவு
பரிவேதனம்
திருமணம்
பரிவேதனம்
பரி (=கட்டு, அணிவி) + வேதனம் (=பொன்) = பரிவேதனம் = பொன்னாலான மாங்கலியத்தைக் கட்டுதல்.
பரிவேதனம்
பெருஞ்சம்பளம்
பரிவேதனம்
பரி (=மிகுதி) + வேதனம் (=சம்பளம்) = பரிவேதனம் = மிகுதியான சம்பளம்.
பரிவேதனம்
பேரறிவு
பரிவேதனம்
பரி (=மிகுதி) + வேதனம் (=அறிவு) = பரிவேதனம் = பரந்துபட்ட / மிகுதியான அறிவு.
பரிக்கரி
சுத்தம்செய், திருத்து
பரிக்கரி
பரிக்காரம் >>> பரிக்கரி = திருத்து, சுத்தம் செய்
பரிக்காரம்
சுத்தம், திருத்தம்
பரிக்காரம்
பரி (=நீக்கு, கழி) + காரம் (=செயல்) = பரிக்காரம் = நீக்கும் / கழிக்கும் செயல்.
பரிசத்து
புலவர்களின் அவை
பரிசாத்து
பரி (=பகுத்தறி) + சாத்து (=கூட்டம்) = பரிசாத்து >>> பரிசத்து = பகுத்தறியும் கூட்டம்.
பரிசேசனம்
உண்கலங்களைச் சுற்றி நீரைச் செலுத்திச் சுத்திகரித்தல்
பரிசேசனம்
பரி (=சுற்று) + சேசு (=செலுத்து) + அனம் = பரிசேசனம் = சுற்றிலும் செலுத்துதல்.
பரீட்சி
சோதி, அறி
பரீக்கி
பரீக்கை (=சோதனை) >>> பரீக்கி >>> பரீக்சி~ >>> பரீட்சி = சோதி, அறி
பரீட்சகன்
சோதிப்பவன்
பரீக்கிதன்
பரீக்கி (=சோதி) >>> பரீக்கிதன் >>> பரீட்சகன்
பருக்கை
பளிங்கு
பருங்கை
பருங்கம் (=ஒளி) >>> பருங்கை >>> பருக்கை = ஒளிர்வது
பருங்கி
வண்டு, தேனீ
பருகி, பருங்கி
பருகு (=குடி, நுகர்) >>> பருகி >>> பருங்கி = பூக்களில் தேனை நுகர்வது.
பருணன்
நிர்வகிப்பவன்
பரிநன்
பரி (=நிர்வகி) >>> பரிநன் >>> பருணன் = நிர்வகிப்பவன்
பருணிதன்
புலவன்
பருணாதன்
பரு (=மிகுதி) + நாதம் (=கல்வி) = பருநாதம் >>> பருணாதன் >>> பருணிதன் = மிக்க புலமை உடையவன்
பருத்தாரம்
குதிரை
பருத்தாரம்
பரு (=மிகுதி) + தார் (=பிடரிமயிர்) + அம் = பருத்தாரம் = மிகுதியான பிடரிமயிர் கொண்டது.
பருவதி
சந்திரன்
பருவதி
பருவம் (=மாதம்) >>> பருவதி = மாதங்களை உருவாக்குவது. ஒ.நோ: மதி (=சந்திரன்) >>> மாதம்.
பரேதம்
பிசாசு
பாறேதம்
பாறு (=அழி, சாவு) + ஏதம் (=துன்பம்) = பாறேதம் >>> பரேதம் = இறந்தபின்னும் பிறர்க்குத் துன்பம் தருவது.
பரேபம்
குளம்
பறேமம்
பறி (=பள்ளம்) + ஏமம் (=கள், நீர்) = பறேமம் >>> பரேபம் = நீர் தங்கிய பள்ளம்.
ஓக்கம்
எண்ணம், அறிவு
ஓங்கம்
ஓங்கு (=உயர், எழு, தோன்று) >>> ஓங்கம் >>> ஓக்கம் = மனதில் எழுவது / தோன்றுவது = எண்ணம், அறிவு
பரோக்கம், பரோக்ச~ம், பரோட்சம்
பிறர் மூலம் பெற்ற அறிவு
பரோக்கம்
பரம் (=பிறர்) + ஓக்கம் (=எண்ணம், அறிவு) = பரோக்கம் >>> பரோக்ச~ம் >>> பரோட்சம் = பிறர் மூலம் பெறப்படும் அறிவு.
பரோக்கம், பரோக்ச~ம், பரோட்சம்
பார்வைக்கு அப்பாற்பட்டது
பாரோங்கம்
பார் + ஓங்கு (=தாவு, தாண்டு) + அம் = பாரோங்கம் >>> பரோக்கம் = பார்வைக்குத் தாண்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.