வெள்ளி, 24 ஏப்ரல், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 21


சொல்
பொருள்
தமிழ்ச்சொல்
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
பற்சனம்
நிந்தனை, தாழ்ச்சி
பரிச்சணம்
பரி (=இரங்கு, தாழ்) >>> பரிச்சு (=தாழ்த்து) >>> பரிச்சணம் >>> பற்சனம் = தாழ்ச்சி, நிந்தனை
பற்சர்
பகைவர்
பறச்சர்
பறை (=நீங்கு, பிரி) >>> பறச்சு (=நீக்கு, அழி) >>> பறச்சர் >>> பற்சர் = அழிக்கப்பட வேண்டியவர்.
பற்பம், பற்மம்
பொடி, நீறு
பாறுமம்
பாறு (=சிதறு, தூளாகு) >>> பாறுமம் >>> பற்மம் >>> பற்பம் = சிதறல், தூள், பொடி
பற்பம், பற்பு
தாமரை
மறைமம்
மறை (=மூடு) + மம் = மறைமம் >>> பற்பம் = இரவில் இதழ்களைக் குவித்து மூடிக் கொள்வது. ஒ.நோ: பது (=மூடு) + மம் = பதுமம் = இரவில் இதழ்களை மூடிக் கொள்வது.
பற்பதம்
மலை
பருப்பதம்
பருப்பதம் (=மலை) >>> பற்பதம்
மர்மம்
மறைவானது
மறைமம்
மறை + மம் = மறைமம் >>> மர்மம் = மறைவானது
பறங்கி
பூசனிக்காய்
பரங்கி
பருமை + அங்கம் (=உடல்) = பரங்கம் >>> பரங்கி >>> பறங்கி = பருத்த உடல் கொண்டது.
மைதானம்
பொட்டல்
மைதானம்
மை (=மலடு, பாழ்) + தானம் (=இடம்) = மைதானம் = பாழிடம்
பன்மம்
தாமரை
மன்மம்
மன் (=மூடு, மறை) + மம் = மன்மம் >>> பன்மம் = இரவில் இதழ்களைக் குவித்து மூடிக் கொள்ளும் மலர். ஒ.நோ: பது (=மூடு) + மம் = பதுமம் = இரவில் இதழ்களை மூடிக் கொள்வது.
மந்திரம்
மறைசொல்
மன்திறம்
மன் (=மூடு, மறை) + திறம் (=செய்தி) = மந்திரம் = மறைவான செய்தியை உடையது.
மன்னன்
அரசன்
மன்னன்
மன் (=மறை, பாதுகா) >>> மன்னன் = மக்களைப் பாதுகாப்பவன்
மனம்
உள்ளம், எண்ணம்
மனம்
மன் (=மூடு, மறை) >>> மனம் = வெளிப்படாதது, மறைவானது.
பன்மம்
பொடி, நீறு
பன்மம்
பன்னு (=ஆராய், நுணுகு) >>> பன்மம் = நுணுக்கமானது.
பன்னம், பன்னகம்
கீற்று
பன்னம், பன்னகம்
பன்னு (=வகு, கீறு) >>> பன்னம் >>> பன்னகம் = கீறப்பட்டது = கீற்று.
பன்னம்
இலை
பன்னம்
பண்ணை (=இலை, கீரை) >>> பண்ணம் >>> பன்னம் = இலை
பன்னகம்
இலை
வண்ணகம்
வண்மை (=பசுமை) + அகம் = வண்ணகம் >>> பன்னகம் = பசுமையைக் கொண்டது = இலை
பன்னகண்டம்
மரம்
பன்னகண்டம்
பன்னம் (=இலை) + அகண்டம் (=நிறைவு) = பன்னகண்டம் = இலைகளால் நிறைந்தது.
பன்னகம்
நல்ல பாம்பு
பைந்நாகம்
பை + நாகம் = பைந்நாகம் >>> பன்னாகம் = பையுடைய பாம்பு
பன்னா
வார்
பன்னா
பன்னு (=வகு) >>> பன்னா = வகுக்கப்பட்டது = வார்.
பன்னாங்கு, பன்னாகம்
தென்னந்தட்டி
பன்னாங்கு, பன்னாகம்
பன்னு (=பின்னு) + ஆக்கம் (=பொருள்) = பன்னாக்கம் >>> பன்னாகம் >>> பன்னாங்கு = பின்னப்பட்ட பொருள்.
பன்னாசம், பன்னாசி
துளசி
பன்னாயம்
பன்னம் (=இலை) + ஆய் (=நறுமணம்) + அம் = பன்னாயம் >>> பன்னாசம் = நறுமணம் மிக்க இலையைக் கொண்டது
பன்னாணம்
தென்னந்தட்டி
பன்னாணம்
பன்னு (=பின்னு) + ஆணம் (=பொருள்) = பன்னாணம் = பின்னப்பட்ட பொருள்.
பன்னாலம்
தெப்பம்
மன்னாலம்
மன் (=பாதுகா) + ஆலம் (=நீர்) = மன்னாலம் >>> பன்னாலம் = நீரில் பாதுகாப்பு தருவது = தெப்பம்
பன்னி
மனைவி
மன்னி
மனை (=வீடு) >>> மன்னி >>> பன்னி = இல்லத்தரசி.
பன்னீர்
நறுமண நீர்
மன்னீர்
மல் (=நறுமணம்) + நீர் = மன்னீர் >>> பன்னீர் = நறுமண நீர்.
பன்னை
கற்பூரம்
பன்னை
பன் (=நுணுகு, சிறுகு) + நை (=அழி) = பன்னை = காற்றில் கரைந்து நுணுகி அழிவது.
பனசம்
பலா, முள்
பனாயம்
பன் (=பன்மை) + ஆய் (=குத்து) + அம் = பனாயம் >>> பனசம் = குத்தக்கூடிய பலவற்றைக் கொண்டது = பலா, முள்
பனசை
விசப்பாம்பு
பன்னச்சை
பல் + நச்சு + ஐ = பன்னச்சை >>> பனசை = பல்லில் நச்சுடைய பாம்பு வகை = விசப்பாம்பு.
பனம்
பருமை
பணை
பணை (=பருமை) >>> பணம் >>> பனம்
பனாயி
கற்பனை செய்
வனை
வனை (=உருவாக்கு, புனை) >>> பனாயி = கற்பனை செய்
பனித்து
கற்பூரம்
பனிறு
பன் (=நுணுகு, சிறுகு) + இறு (=முடி, அழி) = பனிறு >>> பனிது >>> பனித்து = காற்றில் கரைந்து நுணுகி அழிவது.
அனுசம், அனுடம்
பனை
அணூழம்
அண் (=மேல், உயரம்) + ஊழ் (=காய்) + அம் = அணூழம் >>> அனுசம் = உயரத்தில் காய்க்கும் மரம்.
பச்`தி
குடியிருப்பு
பத்தி
பற்று (=வீடு, ஊர்) >>> பற்றி >>> பத்தி >>> பச்`தி = குடியிருப்பு
பச்`தா
கட்டு
பற்று
பற்று (=கட்டு) >>> பற்றா >>> பத்தா >>> பச்`தா
பசா^ர், பசார்
கடைவீதி
பயார்
பயம் (=பொருள், சரக்கு) + ஆர் (=பெறு) = பயார் >>> பசார் = பொருள் / சரக்குகளைப் பெறும் இடம்.
பா
பாதுகாப்பு
பவ்வு
பம்மு (=மறை, பாதுகா) >>> பவ்வு >>> பவு >>> பா = பாதுகாப்பு. ஒ.நோ: (1) பலவு >>> பலா. (2) விழவு >>> விழா.
பா
பாம்பு
பாவு
பாம்பு >>> பாப்பு >>> பாவு >>> பா. 
பா
அழகு, தூய்மை
மா
மா (=அழகு) >>> பா = அழகு, தூய்மை
பாக்கன்
பூனை
வாங்கன்
வாங்கு (=இளை, சிறு) >>> வாங்கன் >>> வாக்கன் >>> பாக்கன் = இளைத்த சிறிய உடலைக் கொண்டது.
பாக்கியம்
சாறு, கசாயம்
வாக்கியம்
வார் (=ஒழுகு) >>> வாக்கு (=ஒழுகச்செய், வடிகட்டு) >>> வாக்கியம் >>> பாக்கியம் = வடிக்கப்பட்டது = சாறு.
பாக்கு
சோலை
பாங்கு
பாங்கு (=அழகு, இடம்) >>> பாக்கு = அழகிய இடம் = சோலை.
பாகண்டன்
வெளிவேசக்காரன்
பகட்டன்
பகட்டு (=வெளிவேசம்) >>> பகட்டன் >>> பாகண்டன்
பாகம்
சமையல், பக்குவம்
பாங்கம்
பாங்கு (=தகுதி, பொருத்தம்) >>> பாங்கம் >>> பாக்கம் >>> பாகம் = தகுதியாக்குதல்= உண்ணத் தக்கதாக மாற்றுதல்.
பாகம், பாகு
பிச்சை
வாங்கம்
வாங்கு (=இழி, தாழ், பெறு) >>> வாங்கம் >>> வாக்கம் >>> பாக்கம் >>> பாகம் = இழிந்து / தாழ்ந்து பெறப்பட்டது.
பாகம், பாகு
தோள், கை
பக்கம், வாங்கம்
(1). பக்கம் >>> பாகம் = பக்கங்களில் இருப்பவை. ஒ.நோ: பக்கம் = இறகு. (2) வாங்கு (=பெறு) >>> வாங்கம் >>> பாக்கம் >>> பாகம் = பெறுவதற்கு உதவுவது.
பாகல்
பலா
பாகல்
பகு (=கீறு, அறு, பகிர், உண்ணு) >>> பாகல் = கீறி அறுத்துப் பகிர்ந்து உண்ணப்படுவது = பலாப் பழம்.
பாகலம்
யானைச் சுரம்
பகலம்
பகல் (=வெயில், வெப்பம்) >>> பகலம் >>> பாகலம் = காய்ச்சல்.
பாகவதம்
இறைநெறி
பகவத்தம்
பகம் (=ஒளி, உண்மை) + அத்தம் (=வழி, நெறி) = பகவத்தம் >>> பாகவதம் = உண்மையைக் காணும் நெறி
பாகன்
செலுத்துபவன்
வாங்கன்
வாங்கு (=செலுத்து) >>> வாங்கன் >>> வாக்கன் >>> பாகன் = செலுத்துபவன்.
பாகனம்
ஆண்டு
பகணம்
பகு (=அறு) >>> பகணம் >>> பாகனம் = அறுக்கப்பட்டது = ஆண்டு. ஒ.நோ: பாறு (=அறு) >>> பாறுவம் >>> பருவம்.
பாகாயதி
தோட்ட நிலம்
பாகாயதி
பாகம் (=தோட்டம்) + ஆயது + இ = பாகாயதி = தோட்டத்திற்கு ஆகிய நிலம்.
பாகார்
கோட்டை மதில்
வாங்கார்
வாங்கு (=வளை) + ஆர் (=கட்டு) = வாங்கார் >>> பாக்கார் >>> பாகார் = வளைத்துக் கட்டப்பட்டது.
பாகாரம்
வகுத்தல்
பாகாரம்
பா (=பகு) + காரம் (=செயல்) = பாகாரம் = பகுக்கும் செயல்.
பாகி
பங்கிடு
பங்கி
பங்கு >>> பங்கி >>> பாகி = பங்கிடு
பாகி
தகுதியானவன்
பாங்கி
பாங்கு (=தகுதி) >>> பாங்கி >>> பாகி = தகுதியானவன்
பாகி
நாய்
வாங்கி
வாங்கு (=பணி, செலுத்து) >>> வாங்கி >>> வாக்கி >>> பாகி = பணிவுடையதும் ஏவப்படுவதும் ஆகிய விலங்கு.
பாகியம்
புறம்பானது, விலக்கப்பட்டது
வாங்கியம்
வாங்கு (=நீக்கு, விலக்கு) >>> வாங்கியம் >>> பாக்கியம் >>> பாகியம் = விலக்கப்பட்டது, புறம்பானது.
பாகு
உணவு, சோறு
வாக்கு
(1). வார் (=ஒழுகு, வடி) >>> வாக்கு (=வடியச்செய்) >>> பாக்கு >>> பாகு = வடித்துச் செய்யப்பட்டது = சோறு. ஒ.நோ: பச (=ஒழுகு, வடி) >>> பசக்கு (=வடியச்செய்) >>> பசக்கன் = சோறு வடிப்பவன். (2). பாகம் (=சமையல்) >>> பாகு = சமைக்கப்பட்டது.
பாகு
வெல்லம், சக்கரை
பாக்கு
பாங்கு (=நன்மை, இனிமை) >>> பாக்கு >>> பாகு = இனிப்பானது
சேது
அணைக்கட்டு
செது
செறு (=தடு, அடக்கு) >>> செது >>> சேது = நீரின் போக்கினைத் தடுத்து அடக்குவது = அணைக்கட்டு.
பாகு
கரை
பக்கு
பக்கம் >>> பக்கு >>> பாகு = பக்கங்களில் இருப்பது.
பாகு
பால்
பாக்கு
பாங்கு (=தகுதி, வெண்மை) = பாக்கு >>> பாகு = உண்ணத் தகுதியான வெண்ணிற உணவு.
பாகு
தலைப்பாகை
வாங்கை
வாங்கு (=வளை, கட்டு) >>> வாங்கை >>> வாக்கை >>> பாகை = தலையில் வளைத்துக் கட்டப்படும் துணி.
பாகு
அழகு
பாங்கு
பாங்கு (=அழகு) >>> பாகு
மகுடம்
கிரீடம்
மாகுடம்
மாகம் (=மேலிடம்) + உடு (=சுற்று, அணி) + அம் = மாகுடம் >>> மகுடம் = மேலிடமாகிய தலையைச் சுற்றி அணிவிக்கப் படுவது.
பாகுடம்
கப்பம், திறை
பாகொடம்
பம்மு (=பணி) >>> பவ்வு >>> பா + கொடு + அம் = பாகொடம் >>> பாகுடம் = பணிந்து கொடுக்கப்படுவது.
பாகுலம்
கார்த்திகை
மாகுலம்
மாகம் (=மேகம்) + உலமு (=கல) = மாகுலம் >>> பாகுலம் = மேகங்கள் தம்முள் கலந்து திரியும் காலம். ஒ.நோ: கார் (=மேகம்) + திகை (=மயங்கு, கல) = கார்த்திகை = மேகங்கள் தம்முள் மயங்கும் / கலங்கும் காலம்.
கார்த்திகை
மாதத்தின் பெயர்
கார்த்திகை
கார் (=மேகம்) + திகை (=மயங்கு, கல) = கார்த்திகை = மேகங்கள் தம்முள் மயங்கும் / கலக்கும் காலம்.
பாகுவன்
சமையற்காரன்
பாகுவன்
பாகம் (=சமையல்) >>> பாகுவன் = சமையல்காரன்
பாகுளி
பௌர்ணமி
பாங்கொளி
பாங்கு (=நிறைவு) + ஒளி = பாங்கொளி >>> பாக்கொளி >>> பாகுளி = நிறைவான ஒளி = முழுநிலா.
பாச்சி
பால்
பயம்
பயம் (=பால்) >>> பசம் >>> பாச்சி
பாய்ச்சிகை, பாச்சிகை, பாச்சி
சூதாடு கருவி
பாய்ச்சி
பாய் (=உருள்) >>> பாய்ச்சு (=உருட்டு) >>> பாய்ச்சி >>> பாச்சி, பாய்ச்சிகை >>> பாச்சிகை = உருட்டப்படுவது = சூதாடு கருவி
பாச்சியம்
பகுதி, வகுக்கப்படுவது
வாச்சியம்
வசி (=பகு, வகு) + இயம் = வாச்சியம் >>> பாச்சியம் = (1) பகுக்கப்பட்டது = பகுதி. (2) வகுக்கப்படுவது.
பாச்சை
பூச்சி
பாழ்செய்
பாழ் + செய் = பாச்செய் >>> பாச்சை = பயிர்களைப் பாழ்செய்வன
பாசகம்
இரைப்பையில் ஊறும் நீர்
பாயகை
பயம் (=நீர்) + அகை (=எரி, செரி) = பாயகை >>> பாயகம் >>> பாசகம் = செறிக்க உதவும் நீர்.
பாசகம்
வகுக்கும் எண்
வாசகம்
வசி (=வகு) + அகம் = வாசகம் >>> பாசகம் = வகுக்கும் எண்
பாசகன், பாசீகன்
சமையற்காரன்
பசக்கன்
பச (=ஒழுகு, வடி) >>> பசக்கு (=வடியச்செய்) >>> பசக்கன் >>> பாசகன் = சோறு வடிப்பவன் = சமையல்காரன்
பாசண்டம்
புறம்பானது, பொருந்தாதது
பாழண்டம்
பாழ் (=இன்மை) + அண்டு (=பொருந்து) + அம் = பாழண்டம் >>> பாசண்டம் = பொருத்தமின்மை.
பாசண்டன், பாசண்டி, பாசண்டிகன்
சமயத்திற்குப் புறம்பானவன்
பாசண்டன், பாசண்டி, பாசண்டிகன்
பாசண்டம் (=சமயத்திற்குப் புறம்பானது) >>> பாசண்டன், பாசண்டி, பாசண்டிகன் = சமயக் கொள்கைகளுக்குப் புறம்பாக நடந்து கொள்பவன்.
பாசம்
கயிறு
பாசம்
பசை (=ஒட்டு, பொருத்து, பிணி) >>> பாசம் = பிணிக்க உதவுவது
பாசம், பாசு
அன்பு, பற்று
பாயம்
பாயம் (=விருப்பம்) >>> பாசம் = பற்று
பாசம்
பேய்
பயம்
பயம் >>> பாசம் = அச்சம் தரக்கூடியது = பேய்
பாசனம்
நீர் பாய்ச்சுகை
பாய்ச்சணம்
பாய்ச்சு + அணம் = பாய்ச்சணம் >>> பாசனம் = நீர் பாய்ச்சுகை
பாசனம்
பாத்திரம்
பயான்னம்
பய (=பெறு) + அன்னம் (=உணவு) = பயான்னம் >>> பாசனம் = உணவைப் பெற உதவுவது.
பாசனம்
மரக்கலம்
பயாணம்
பயம் (=நீர்) + ஆணம் (=ஆதரவு) = பயாணம் >>> பாசனம் = நீரில் ஆதரவாக இருப்பது = மரக்கலம்
பாசனம்
ஆதாரம்
பசாணம்
பசை (=ஒட்டு, பொருந்து) + ஆணம் (=பற்றுக்கோடு) = பசாணம் >>> பாசனம் = பொருந்திய பற்றுக்கோடு = ஆதாரம்
பாசனம்
சுற்றம், பந்தம்
பாசணம்
பாசம் (=பற்று, அன்பு) + அண் (=பொருந்து) + அம் = பாசணம் = பாசனம் = அன்பு பொருந்தியவர்கள்.
பாசனம்
பங்கு, பிரிவுக் கணக்கு
வாசணம்
வசி (=பகு, பிரி) >>> வாசணம் >>> பாசனம் = பிரிக்கப்பட்டது = பங்கு, பிரிவுக் கணக்கு.
பாசனம்
நெருப்பு
பாசணம்
பசி (=எரி) >>> பாசணம் >>> பாசனம் = எரிவது = நெருப்பு.
பாசாங்கு
வஞ்சகம், போலி
வஞ்சகம்
வஞ்சகம் >>> பச்சகம் >>> பாசாங்கு
பாசி
மேகம்
பாசி
பயம் (=நீர்) >>> பாசி = நீரைக் கொண்டது
பாசி
எமன்
பாசி
பாசம் (=கயிறு) >>> பாசி = உயிரைக் கொல்லும் கயிற்றைக் கொண்டவன் = எமன்.
பாசி
வருணன்
பாசி
பயம் (=நீர், மழை) >>> பாசி = மழைக் கடவுள்
பாசி
ஆன்மா
பாசி
பாசம் (=பற்று, தளை) >>> பாசி = தளைப்பட்டது.
பாசி
நாய்
பாய்ச்சி
பாய் >>> பாய்ச்சு (=ஏவு) >>> பாய்ச்சி >>> பாசி = ஏவப்படுவது
பாசி
கிழக்கு
பாசி
பய (=உண்டாகு, தோன்று) >>> பாசி = சூரியன் தோன்றும் திசை
பாசி, பாசை
சமையல்
பாசி
பச (=ஒழுகு, வடி) >>> பாசி = வடிக்கும் செயல் = சமையல்
பாசி
மீன்
பாசி
பயம் (=நீர்நிலை, குளம்) >>> பாசி = நீர்நிலைகளில் வாழ்வது. ஒ.நோ: கயம் (=குளம்) >>> கயல் = குளத்தில் வாழ்வது = மீன்.
பாசிதம்
பிரிக்கப்பட்ட பங்கு
வசிதம்
வசி (=பிரி, பகு) >>> வசிதம் >>> பாசிதம் = பிரிக்கப்பட்டது.
பாசு
மூங்கில்
பாசி
(1). பசி (=எரி) >>> பாசி >>> பாசு = காடுகளில் தீ மூட்டுவது. (2). பை / பய் (=எரி) >>> பாசு = காடுகளில் எரி மூட்டக் கூடியது.
பாசு
வலிமை
வயம்
வயம் (=வலிமை) >>> வசம் >>> வாசி >>> பாசி
மச்சம்
மீன்
மசம்
பயம் (=நீர்நிலை, குளம்) >>> மசம் >>> மச்சம் = நீர்நிலைகளில் வாழ்வது = மீன். ஒ.நோ: கயம் (=குளம்) >>> கயல் = குளத்தில் வாழ்வது = மீன்
பாசுணம்
பக்கம்
வயினம்
வயின் (=பக்கம்) >>> வயினம் >>> பாசினம் >>> பாசுணம் 
பாசை
மொழி
வாயை
வாய் (=மொழி) >>> வாயை >>> பாசை = மொழி
பாஞ்சலம்
கனல், வெப்பம்
பாசலம்
பசுமை (=ஈரம்) + அலம் (=இன்மை, அழிவு) = பாசலம் >>> பாஞ்சலம் = ஈரத்தை அழிப்பது = வெப்பம், கனல்.
பாஞ்சலம்
காற்று
பாய்ச்சலம்
பாய்ச்சல் >>> பாய்ச்சலம் >>> பாஞ்சலம் = பாயும் இயல்பினது
பாஞ்சலம்
அளுவம்
பயாளம்
பயம் (=பொருள்) + அள் (=மிகுதி) + அம் = பயாளம் >>> பச்சலம் >>> பாஞ்சலம் = மிகுதியான பொருள். ஒ.நோ: அள் (=மிகுதி) >>> அளுவம் >>> லாபம் = மிகுதியானது.
பாட்டா
கள்
மட்டா
மட்டு (=கள்) >>> மட்டா >>> பாட்டா
பாட்டில்
கை வளையம்
பாண்டில்
பாண்டில் (=வளையம்) >>> பாட்டில் = கை வளையம்
பாட்டை
வழி, நெறி
பாட்டை
பாடு (=முறை, விதம்) >>> பாட்டை = நெறி, வழி
பாச்~பம், பாட்பம்
வெப்பம்
பசிமம், பைமம்
(1). பசி (=எரி) >>> பசிமம் >>> பாச்~பம் >>> பாட்பம் = வெப்பம். (2). பை (=எரி) >>> பைமம் >>> பச்~பம் >>> பாச்~பம் >>> பாட்பம் = வெப்பம்.
பாச்~பம், பாட்பம்
கண்ணீர்
பசப்பம்
பசப்பு (=கண்ணீர்) >>> பசப்பம் >>> பாச்~பம் >>> பாட்பம்
பாடகம்
தெரு
பாடகம்
பாடு (=ஒழுங்கு, வரிசை) + அகம் = பாடகம் = ஒழுங்கு / வரிசையினை உடையது.
பாடகம்
நிலப்பிரிவு
பாடகம்
பாடு (=கூறு, பிரிவு) + அகம் (=இடம்) = பாடகம் = இடப்பிரிவு
பாடகம்
நிழல்
பாடாக்கம்
பாடு (=மறைப்பு) + ஆக்கம் = பாடாக்கம் >>> பாடகம் = மறைப்பைச் செய்வது.
பாடகம்
பறை
பாடகம்
பாடு (=ஒலி) + அகம் = பாடகம் = ஒலிப்பினை உடையது
பாடகம்
நீர்க்கரை
பாடாக்கம்
பாடு (=பக்கம்) + ஆக்கம் (=நீர்) = பாடாக்கம் >>> பாடகம் = நீரின் பக்கங்களில் இருப்பவை = கரை.
பாடகம்
சூதாடு கருவி
பாடாக்கம்
பாடு (=அழிவு, கேடு) + ஆக்கம் (=பொருள்) = பாடாக்கம் >>> பாடகம் = அழிவு / கேட்டைத் தரும் பொருள்
பாடகம்
குறைபாடு, நட்டம்
பாடாக்கம்
பாடு (=குறைவு) + ஆக்கம் (=பொருள்) = பாடாக்கம் >>> பாடகம் = பொருட்குறைவு.
பாடகம்
சலங்கை
பாடகம்
பாடு (=ஒலி) + அகம் = பாடகம் = ஒலிப்பினைக் கொண்டது
பாடகம்
ஆடை
படகம்
படகம் (=ஆடை) >>> பாடகம்
பாடகம்
கூலி
பாடாக்கம்
பாடு (=உழைப்பு) + ஆக்கம் (=பொருள்) = பாடாக்கம் >>> பாடகம் = உழைப்புக்காகக் கொடுக்கப்படும் பொருள்.
பாச~ணம், பாடணம்
பேச்சு, சொல்
வாயணம்
வாய் (=பேச்சு, சொல்) >>> வாயணம் >>> பாச~ணம் >>> பாடணம்
பாடம்
படிக்கப்படுவது
பாடம்
பாடு >>> பாடம் = பாடப்படுவது. பி.கு: பழங்காலத்தில் அனைத்து கல்வியும் பாடல் வடிவில் இருந்து பாடப்பட்டதால் கல்வியைப் பாடம் என்றனர்.
பாடம்
தெரு
பாடம்
பாடு (=ஒழுங்கு, வரிசை) >>> பாடம் = வரிசையாய் இருப்பது
பாடம்
சம்மதம்
பாடம்
படு / படி (=இணங்கு, சம்மதி) >>> பாடம் = சம்மதம்
பாடம்
கடுமை, அழுத்தம்
பாடம்
படு (=அழுந்து) >>> பாடம் = அழுத்தம், கடுமை
பாடம்
மிகுதி
பாடம்
பாடு (=பெருமை) >>> பாடம் = மிகுதி
பாடம்
ஒளி
பாடம்
படு (=ஒளிர்) >>> பாடம் = ஒளி
பாடலம்
சிவப்பு, குங்குமம்
பாடலம்
பாடலி (=பாதிரி) >>> பாடலம் = பாதிரி மலர் போன்ற சிவப்பு, சிவப்பான பொருள்.
பாடலம்
குதிரை
பாறளம்
பாறு (=ஓடு) + அள் (=வலிமை) + அம் = பாறளம் >>> பாடலம் = வலிமையுடன் ஓடக் கூடியது.
பாடலம்
சபதம்
பாடலம்
பாடு (=உறுதி, கூறு) >>> பாடல் >>> பாடலம் = உறுதியாகக் கூறப்படுவது = சபதம்.
பாடலி
கடுங்கள்
படளி
படு (=கள்) + அள் (=கூர்மை, கடுமை) + இ = படளி >>> பாடலி = கூர்மை / கடுமை மிக்க கள்
பாடவம்
அம்பெய்தல்
பாடாவம்
பாடு (=தொழில்) + ஆவம் (= வில் நாண்) >>> பாடாவம் >>> பாடவம் = வில் நாணால் செய்யும் தொழில்.
பாடவம்
களிப்பு
பாடம்மம்
படு (=கள்) + அம்மு (=உண்) + அம் >>> பாடம்மம் >>> பாடவ்வம் >>> பாடவம் = கள் உண்பதால் உண்டாவது.
பாடவம்
பெருமை
பாடவம்
பாடு (=பெருமை) >>> பாடம் >>> பாடமம் >>> பாடவம்
பாடவம்
சுகம்
பாடவம்
பாடு (=துன்பம்) + அவி (=அழி) = பாடவி >>> பாடவம் = துன்பத்தை அழிப்பது = இன்பம், சுகம்.
பாடனம்
கற்பித்தல், பாடுதல்
பாடனம்
பாடம் (=கல்வி) >>> பாடன் >>> பாடனம் = கற்பித்தல், பாடுதல். பி.கு: பழங்காலத்தில் கல்வியானது பாடல் வடிவில் இருந்தது.
பாடனம்
பிளத்தல்
பாடனம்
பாடு (=கூறு, பிரிவு) >>> பாடனம் = கூறுசெய்தல்.
பாடா
ஆடு தின்னாப் பாளை
மடா
மடு (=உண்) + ஆ = மடா >>> படா >>> பாடா = உண்ணப் படாதது.
அந்தரம்
வேறுபாடு
அத்தறம்
அத்து (=பொருந்து) + அறு (=இல்லையாகு) + அம் = அத்தறம் >>> அந்தரம் = பொருத்தம் இல்லாமை = வேறுபாடு.
பாடாந்தரம்
பாடவேறுபாடு
பாடாந்தரம்
பாடம் (=கல்வி) + அந்தரம் (=வேறுபாடு) = பாடாந்தரம்
பாடாந்தரம்
வேற்றுமொழி
பாசாந்தரம்
பாசை (=மொழி) + அந்தரம் (=வேறுபாடு) = பாசாந்தரம் >>> பாடாந்தரம் = வேறுபட்ட மொழி.
பாடாவதி
பெருந்துன்பம்
படவதி
படு (=மிகுதி) + அவதி (=துன்பம்) = படவதி >>> பாடாவதி.
பாடிதம்
வசனம்
பாடிதம்
பாடி (=பேசு) >>> பாடிதம் = பேசப்பட்டது = வசனம்.
பாச்~யம், பாசியம்
விரிவுரை, விளக்கவுரை
பையியம்
பை (=பெருக்கு, விரி) + இயம் (=சொல்) = பையியம் >>> பாசியம் >>> பாச்~யம் = விரிவான சொல்.
பாடியம்
விரிவுரை
பாடியம்
பாடு (=பெருமை, விரிவு) + இயம் (=சொல்) =பாடியம் =விரிவுரை
பாடீரம்
சந்தனம்
பாடீரம்
பாடு (=பூசுகை) + ஈரம் (=குளிர்ச்சி) = பாடீரம் = குளிர்ச்சிக்காகப் பூசப்படுவது = சந்தனம்.
பாடீரம்
வயல்
பாடீரம்
பாடு (=மிகுதி) + ஈரம் = பாடீரம் = மிக்க ஈரம் கொண்டது.
பாடீரம்
மேகம்
பாடீரம்
பாடு (=விழுகை) + ஈரம் (=நீர்) = பாடீரம் = நீரை வீழ்த்துவது.
பாடீரம்
மூங்கில் அரிசி
பாடிரமை
பாடு (=விழுகை) + ஈர் (=உண்ணு) + அமை (=மூங்கில்) = பாடீரமை >>> பாடீரம் = மூங்கிலில் இருந்து விழும் உணவு.
இரை
உணவு
இரை
ஈர் (=உண்ணு) >>> இரை = உணவு
சாகரம்
கடல்
சகலம்
அகலம் (=பரப்பு) >>> சகலம் >>> சகரம் >>> சாகரம் = பரப்பைக் கொண்டது = கடல். ஒ.நோ: பரப்பு >>> பரப்பை >>> பரவை = பரப்பைக் கொண்டது = கடல்.
பாடை
பிணக்கட்டில்
பாடை
(1). படு >>> பாடை = இறந்தவரைப் படுக்கவைத்து எடுத்துச் செல்லும் கட்டில். (2). பாடு (=மரணம்) >>> பாடை = மரணம் அடைந்தவருக்கான கட்டில்.
பாடை
மொழி
வாயை
வாய் (=மொழி) >>> வாயை >>> பாசை >>> பாடை
பாடை
உறுதிமொழி, சபதம்
வாயை
வாய் (=உறுதி, மொழி) >>> வாயை >>> பாசை >>> பாடை = உறுதிமொழி, சபதம்
பாடை
பருத்தி
பாடை
படு (=ஒளிர்) >>> பாடை = வெண்மையாய் ஒளிர்வது.
பண்டம், பாண்டம்
பாத்திரம், வயிறு
மண்டம்
மண்டு (=கொள்) >>> மண்டம் >>> பண்டம் >>> பாண்டம் = கொள்கலம், வயிறு. ஒ.நோ: மண்டு (=கொள்) >>> மண்டை = கொள்கலம்.
பாண்டரம், பாண்டுரம்
வெண்மை, வெண்ணீறு, மல்லிகை
பாட்டாரம்
பாடம் (=ஒளி) + ஆர் (=பொருந்து) + அம் = பாட்டாரம் >>> பாண்டரம் = ஒளி பொருந்தியது = வெண்மை, வெண்நீறு, வெண்ணிற மல்லிகை. 
பாண்டல்
பழைமை
பண்டு
பண்டு (=பழைமை) >>> பண்டல் >>> பாண்டல்
வண்டல்
கசடு, பாசி, சேறு
மண்டல்
மண்டு (=தங்கு, படி) >>> மண்டல் >>> வண்டல் = படிந்தது, தங்கியது = கசடு, பாசி, சேறு
பாண்டல், பாண்டை
நாட்பட்ட கசடு, கெட்டநாற்றம்
பண்டல்
பண்டு (=பழைமை) >>> பண்டல் >>> பாண்டல் = நாட்பட்டுத் தங்கிய கசடு >>> அதன் கெட்டநாற்றம்
பாண்டரம்
நாட்பட்ட கசடு, கெட்டநாற்றம்
பண்டாரம்
பண்டு (=பழைமை) + ஆர் (=தங்கு, பொருந்து) + அம் = பண்டாரம் >>> பாண்டரம் = நாட்பட்டுத் தங்கிய கசடு >>> கெட்டநாற்றம்
பாண்டு
வெண்மை
வாட்டு, பாடு, மண்டு
(1). வாள் (=அழகு, ஒளி) + து >>> வாட்டு >>> பாண்டு = ஒளி உடையது = வெண்மை. (2) படு (=ஒளிர்) >>> பாடு >>> பாண்டு = ஒளி, வெண்மை. (3). மண் (=ஒளி) + து = மண்டு >>> பாண்டு = ஒளி மிக்கது = வெண்மை.
வாணம், பாணம்
வெடிவகை
வாணம்
வாள் (=ஒளி) >>> வாணம் >>> பாணம் = வெடிக்கும்போது ஒளியைத் தரும் வெடிவகை.
பாணல்
வெற்றிலை
மனாலம், மடல், பண்ணை
(1). மனாலம் (=வெற்றிலை) >>> மாணலம் >>> பாணல். (2) பண்ணை (=இலை) >>> பண்ணல் >>> பாணல் = வெற்றிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.