சொல்
|
பொருள்
|
தமிழ்ச்சொல்
|
மூலச்சொல்லும் தோன்றும் முறையும்
|
அயணம்
|
அசைவு, செலவு, பயணம்
|
ஆயணம்
|
ஆய் (=அசை, நீங்கு,
செல்) >>> ஆயணம் >>> அயணம் = அசைவு, செலவு, பயணம்
|
அனுபல்லவி
|
பல்லவியை அடுத்து
வருவது
|
அண்பல்லவி
|
அண்ணு (=நெருங்கு, அடு)
+ பல்லவி = அண்ணுபல்லவி >>> அனுபல்லவி = பல்லவியை அடுத்து வருவது.
|
ஆத்திரம்
|
அவசரம், கோபம்
|
அற்றிரம்
|
அல் + திரம் (=
அடக்கம், அமைதி) = அற்றிரம் >>> அத்திரம் >>> ஆத்திரம் =
அமைதியின்மை, அடங்காமை.
|
உதகம்
|
நீர்
|
உத்தாக்கம்
|
உத்து (=கழி, சுத்தம்செய்)
+ ஆக்கம் (=பொருள்) = உத்தாக்கம் >>> உதகம் = சுத்தம் செய்யத் தேவையான
பொருள்.
|
உதகம்
|
மேகம்
|
உதகம்
|
உதம் (=நீர்) + அகம் =
உதகம் = நீரை அகத்தே கொண்டது.
|
உத்தரவு
|
கட்டளை, அனுமதி
|
உய்த்தரவு
|
உய் (=ஈடேற்று, கட) + தரவு
(=சொல், கட்டளை) = உய்த்தரவு >>> உத்தரவு = ஈடேற்று / செல்லு வதற்கான
கட்டளை.
|
உததி
|
கடல்
|
உததி
|
உதம் (=நீர்) + அதி
(=மிகுதி) = உததி = நீரின் மிகுதி.
|
உதம்
|
நீர்
|
உத்தம்
|
உத்து (=கழி, சுத்தம்
செய்) >>> உத்தம் >>> உதம் = சுத்தம் செய்வது = நீர். ஒ.நோ:
உத்து >>> சுத்து >>> சுத்தம்.
|
உதாரம்
|
கொடை
|
உந்தறம்
|
உந்து (=வீசு, வழங்கு)
+ அறம் = உந்தறம் >>> உத்தறம் >>> உதாரம் = வழங்குவதாகிய
அறச்செயல் = கொடை.
|
கரம்
|
கூட்டம்
|
கரம்
|
கரு (=திரள், கூடு)
>>> கரம் = கூட்டம், திரள்.
|
கருமம்
|
வெப்பம், சினம்
|
கறுமம்
|
கறு (=சின)
>>> கறுமம் >>> கருமம் = சினம், வெப்பம்.
|
காசம்
|
பொன், பளிங்கு
|
காயம்
|
காய் (=ஒளிர்)
>>> காயம் >>> காசம் = ஒளிர்வது.
|
காசம்
|
ஆகாசம்
|
காயம்
|
காய் (=ஒளிர்)
>>> காயம் >>> காசம் = ஒளிரும் இடம்
|
காசம்
|
சிரிப்பு
|
காயம்
|
காய் (=ஒளிர், நகு)
>>> காயம் >>> காசம் = நகை, சிரிப்பு
|
காசம்
|
கோழை
|
காழம்
|
காழ் (=முதிர், முற்று)
>>> காழம் >>> காசம் = முற்றிய சளி
|
காரம்
|
உறைப்பு
|
காறம்
|
கறி (=மிளகு)
>>> காறம் >>> காரம் = மிளகின் சுவை.
|
காரம்
|
அழிவு
|
காரம்
|
கரி (=எரி, அழி)
>>> காரம் = அழிவு.
|
காரம்
|
திருநீறு
|
காரம்
|
கரி (=எரி)
>>> காரம் = எரித்தபின் எஞ்சும் சாம்பல்.
|
காரம்
|
கோபம்
|
காறம்
|
கறு (=சின)
>>> காறம் >>> காரம் = சினம்
|
காரம்
|
மரவைரம்
|
காரம்
|
கரு (=நடு)
>>> காரம் = மரத்தண்டின் நடுவில் இருப்பது.
|
காரம்
|
பொன், பொருள்
|
காரம்
|
கரு (=திரள், கூடு)
>>> காரம் = திரட்டப்படுவது, பொன், பொருள். ஒ.நோ: கரு (=திரள்)
>>> கார் = திரள்வது = மேகம்.
|
கிரகணம்
|
சூரிய சந்திரரை நிழல்
உண்ணல்
|
கிரகணம்
|
(2) கிரகி (=உண்ணு,
உள்வாங்கு) >>> கிரகணம் = சூரிய சந்திரரை நிழல் உண்ணும் / உள்வாங்கும்
நிகழ்வு.
|
கிரகம், கிருகம்
|
வீடு, மனைவி
|
கிரகம், கிருகம்
|
கிரகம் (=கோள்)
>>> கிருகம் = அனைத்து உயிர்களின் வாழ்விடம் = வீடு >>> மனைவி
|
கிரகி
|
அகப்படுத்து, உள்வாங்கு,
உண்ணு
|
கிரகி
|
கிரகம் (=வீடு, அகம்)
>>> கிரகி = அகப்படுத்து, உள்வாங்கு, உண்ணு, ஏற்றுக்கொள்.
|
கிருபை
|
அன்பு
|
கொறுவை
|
கோர் (=பிணி)
>>> கொறுவு (=கட்டு) >>> கொறுவை >>> கிருபை =
உள்ளங்களைப் பிணிப்பது / கட்டுவது. ஒ.நோ: கொறுவு (=கட்டு) >>> கொற்று =
கட்டடக் கட்டுமான வேலை.
|
கீரை
|
இலை
|
கீறை
|
கீறு (=அறு, பறி)
>> கீறை >>> கீரை = பறிக்கப்படுவது.
|
ச்`திரீ, ச்`திரி,
ச்`த்ரீ
|
மனைவி, திருமணம் ஆன
பெண்
|
திரி
|
திரு (= மாங்கலியம்)
>>> திரி >>> ச்`திரி, ச்`திரீ, ச்`த்ரி = மாங்கலியம் அணிந்தவர்
= மனைவி, திருமணமான பெண்.
|
சந்தம்
|
முத்திரை, உருவம்,
வடிவம்
|
சாத்தம்
|
சாத்து (=நடு, ஊன்று,
பதி) >>> சாத்தம் >>> சாந்தம் >>> சந்தம் =
பதியப்படுவது = முத்திரை. ஒ.நோ: சாத்து (=பதி) >>> கைச்சாத்து = கைரேகை
பதிவு.
|
சரணம்
|
பாடலின் நிறைவுப் பகுதி
|
ஆரணம்
|
ஆர் (=நிறைவுசெய்)
>>> ஆரணம் >>> சாரணம் >>> சரணம் = பாடலை
நிறைவுசெய்யும் பகுதி.
|
சன்னியாசம்
|
முழுச் சரணாகதி
|
செந்நியாசம்
|
செம்மை (=முழுமை) +
நியாசம் (=தஞ்சம்) = செந்நியாசம் >>> சன்னியாசம் = முழுமையாக இறைவனைத் தஞ்சம்
அடைதல்
|
சன்னியாசி
|
முழுச் சரணாகதி
அடைந்தவர்
|
செந்நியாசி
|
(2) செந்நியாசம்
(=முழுச் சரணாகதி) >>> செந்நியாசி >>> சன்னியாசி = இறைவனை
முழுமையாகச் சரணடைந்தவர்.
|
சீலம்
|
ஒழுக்கம், பண்பு, தன்மை
|
ஈலம்
|
ஈல் (=ஒழுகு, வடி)
>>> ஈலம் >>> சீலம் = ஒழுக்கம், பண்பு, தன்மை. ஒ.நோ: ஈல்
(=ஒழுகு) >>> ஈலம் >>> ஈரம் >>> ஞீரம் >>>
நீரம் = ஒழுகுவது / வடிவது = நீர்.
|
சீலனம், சீலனை
|
தொடர்ச்சி, பயிற்சி,
பழக்கம்
|
ஈலனம்
|
ஈல் (=ஒழுகு, நீளு,
தொடர்) >>> ஈலனம் >>> சீலனம் = தொடர்ந்து செய்தல் =
தொடர்ச்சி, பயிற்சி, பழக்கம்.
|
சூகம்
|
எலி, மூஞ்சூறு
|
சூகம்
|
ஊகம் (=கருமை)
>>> சூகம் = கரியது = எலி. ஒ.நோ: (1) ஊகம் (=கருமை) >>> ஊகம்
= கருங்குரங்கு. (2) ஊகம் (=கருமை) >>> சூகம் >>> சூகை =
கருப்பு எறும்பு, யானை.
|
சூகரம்
|
பன்றி
|
சூகரம்
|
ஊகம் (=கருமை)
>>> சூகம் >>> சூகரம் = கரியது = பன்றி.
|
தமனியம்
|
பொன்
|
தாமனியம்
|
தாமம் (=ஒளி)
>>> தாமன் >>> தமனியம் = ஒளிர்வது.
|
தாமம்
|
இடம், ஊர், பூமி, மலை
|
தமம்
|
தவம் (=நிலையான
இருப்பு) >>> தமம் >>> தாமம் = நிலையான இருப்பு = இடம், ஊர்,
பூமி, மலை
|
தாமம்
|
யானை
|
தமம்
|
தவம் (=வலிமை)
>>> தமம் >>> தாமம் = வலிமையானது
|
திரம்
|
அடக்கம், அமைதி
|
திரம்
|
தீர் (=முடி, அடங்கு,
அமை) >>> திரம் = முடிவு, அடக்கம், அமைதி.
|
பத்திரி, பத்திரை
|
காளி
|
பைத்திறி
|
பயம் (=அச்சம்) + திறம்
(=வடிவம்) = பயத்திறம் >>> பைத்திறி >>> பத்திரி = அச்சம்
தரும் வடிவம் கொண்டவள்.
|
பப்படம், பப்படகம்
|
அப்பளம்
|
பம்படை
|
பம்பு (=நிறை, எழு) +
அடை = பம்படை >>> பம்படம் >>> பப்படம் = எண்ணையில் இட்டதும்
நிறைந்து எழும் அடை.
|
பப்பரம்
|
புளி வகை
|
பம்பரை
|
பம்பு (=பெரு, உயர்) + அரை
(=தண்டு) = பம்பரை >>> பப்பரம் = மிகவும் பெருத்த உயரமான தண்டை உடைய
புளிய மரம்.
|
பப்பளி, பப்பாளி
|
பழ வகை
|
பம்பளி
|
பம்பு (= நிறை, திரள்)
+ அளி (=கனி) = பம்பளி >>> பப்பளி >>> பப்பாளி = விதைகள்
நிறைந்த திரண்ட கனி.
|
பம்பரம்
|
விளையாட்டுப் பொருள்
|
மம்மரம்
|
மம்மர் (=கிறக்கம்,
சுழற்சி) >>> மம்மரம் >>> பம்பரம் = சுழன்று கொண்டே இருக்கும்
விளையாட்டுப் பொருள்.
|
பம்பு
|
மூங்கில்
|
பம்பு
|
பம்பு (=செறி, உயர்)
>>> பம்பு = செறிந்து உயர்ந்து வளர்வது.
|
பம்பை
|
பறை
|
பம்பை
|
பம்பு (=ஒலி)
>>> பம்பை = ஒலிப்பது.
|
பம்மாத்து
|
வெளிவேசம்
|
பப்பத்து
|
பப்பு (=ஒப்பு, போலி) +
அத்து (=அணி) = பப்பத்து >>> பம்மாத்து = போலியாக / ஒப்பாக அணிதல்.
|
பம்மை
|
திருமகள்
|
பம்மை
|
பம்மு (=மூடு, மறை)
>>> பம்மம் (=இரவில் மூடிக்கொள்ளும் தாமரை மலர்) >>> பம்மை = தாமரையில்
அமர்பவள்.
|
பம்மை
|
பொம்மை
|
பம்மை
|
பப்பு (=ஒப்பு, போலி)
>>> பம்மு >>> பம்மை = போலியானது
|
பமரம்
|
தேனீ
|
பம்மாரம்
|
(1). பம்மு (=திரள்,
சேர்) + ஆர் (=கட்டு) + அம் = பம்மாரம் >>> பமரம் = ஒன்றாகச் சேர்ந்து கூடு
கட்டுவது. (2) பம்மு (=ஒலி) + ஆர் (=உண்) + அம் = பம்மாரம் >>> பமரம் =
பூவைச் சுற்றி ஒலித்துக்கொண்டே தேனை உண்பது.
|
பயங்கரம்
|
அச்சம் தரும் செயல்
|
பயங்காரம்
|
பயம் (=அச்சம்) + காரம்
(=செயல்) = பயங்காரம் >>> பயங்கரம் = அச்சம் விளைவிக்கும் செயல்.
|
பயசு, பயசி, பயசம்
|
நீர், பால்
|
பயசு
|
பய (= விளை, ஒழுகு)
>>> பயசு = (1) மேகத்தில் இருந்து விளைவதும் ஒழுகுவதும் ஆகிய நீர். (2)
பசுவில் இருந்து விளைவதும் ஒழுகுவதும் ஆகிய பால். ஒ.நோ: பய (=விளை, ஒழுகு)
>>> பயம் = நீர், பால், தேன்.
|
பயசுகம்
|
பூனை
|
பயசுகம், பயசூகம்
|
(1). பயசு (=பால்) + உக
(=விரும்பு) = பயசுக >>> பயசுகம் = பாலை விரும்புவது. (2) பயம்
(=அச்சம்) + சூகம் (=எலி) = பயசூகம் >>> பயசுகம் = எலிக்கு அச்சம்
தருவது.
|
பயணம்
|
செலவு, சென்றடைவு
|
பயணம்
|
(2) பய (=ஒழுகு, செல்)
+ அணம் (= அடைவு) >>> பயணம் = சென்று அடைதல்.
|
பயதம்
|
தேனீ
|
பயத்தம்
|
பயம் (=தேன்) + அத்து
(=சேர், சேகரி) + அம் = பயத்தம் >>> பயதம் = தேனைச் சேகரிப்பது.
|
பயதி
|
இயற்கை
|
பயதி
|
பய (=உண்டாகு)
>>> பயதி = தானே உண்டாகியது.
|
பயம்
|
அச்சம், நடுக்கம்
|
பயம்
|
(1). பை (=அஞ்சு, நடுங்கு)
+ அம் >>> பயம் = அச்சம், நடுக்கம். ஒ.நோ: பை (=அஞ்சு, நடுங்கு) + தல்
= பைதல் = நடுக்கம். (2) பேஎம் (=அச்சம்) >>> பேயம் >>> பையம்
>>> பயம் = அச்சம்.
|
பயல், பயம்
|
பள்ளம்
|
பயல், பயம்
|
பய (=ஒழுகு)
>>> பயம் / பயல் = ஒழுகும்
இடம்.
|
பயலி
|
ஏழை, முட்டாள்
|
பயலி
|
பயல் (=பள்ளம், வெறுமை)
>>> பயலி = ஒன்றும் அற்றவன்
|
பயானகம்
|
அச்சந்தரும் வடிவம்
|
பயாணங்கம்
|
பயம் (=அச்சம்) +
அணங்கு (=வடிவம்) + அம் = பயாணங்கம் >>> பயானகம் = அச்சம் தரும்
வடிவம்.
|
பயானகம்
|
நரகம்
|
பயாணங்கம்
|
பயம் (=பள்ளம்) + அணங்கு
(=வருத்து, கொல்) + அம் = பயாணங்கம் >>> பயானகம் = தவறு செய்தோரை
வருத்திக் கொல்லும் பள்ளமான இடம்.
|
பயிக்கம்
|
பிச்சை
|
பயிங்கம்
|
பய (=ஒழுகு, இழி) +
இங்கம் (=பொருள்) = பயிங்கம் >>> பயிக்கம் = இழிந்து பெறப்படும்
பொருள்.
|
பயிட்டம்
|
முத்து
|
பயீட்டம்
|
பயம் (=நீர்) + ஈட்டம்
(=தேடி எடுக்கப்படுவது) = பயீட்டம் >>> பயிட்டம் = நீரில் மூழ்கித்
தேடி எடுக்கப்படுவது = முத்து.
|
பயித்தியம், பைத்தியம்
|
பேராசை
|
பற்றியம்
|
பற்று (=ஆசை)
>>> பற்றியம் >>> பத்தியம் >>> பைத்தியம்
>>> பயித்தியம் = பேராசை.
|
பயிரங்கம்
|
வெளிப்படையான செயல்
|
பயிராக்கம்
|
பயிர் (=தோன்று,
வெளிப்படு) + ஆக்கம் (=செயல்) = பயிராக்கம் >>> பயிரங்கம் =
வெளிப்படையான செயல்.
|
பயிருகம்
|
நீர்ப்பாசி
|
பயிருகம்
|
பயிர் (=பசுமையானது) +
உகு (=சிதறு) + அம் = பயிருகம் = நீரின்மேல் பசுமையாகச் சிதறி இருப்பது.
|
பயில்வான்
|
பலசாலி
|
பயில்வான்
|
பயில் (=பழகு, செறி)
>>> பயில்வு (=பழக்கம், செறிவு) >>> பயில்வான் =
பழக்கத்தினால் செறிந்த உடலைப் பெற்றவன்.
|
பயோகனம்
|
ஆலங்கட்டி
|
பயோக்கணம்
|
பயம் (=நீர்) + உகு (=உதிர்)
+ கணம் (=திரள், கட்டி) = பயோக்கணம் >>> பயோகனம் = கட்டியாக உதிரும்
நீர்.
|
பயோததி
|
பாற்கடல்
|
பயோததி
|
பயம் (=பால்) + உததி
(=கடல்) = பயோததி = பாற்கடல்
|
பயோததி
|
நீர்க்கடல்
|
பயோததி
|
பயம் (=நீர்) + உததி
(=கடல்) = பயோததி = நீர்க்கடல்
|
பயோதம்
|
மேகம்
|
பயோந்தம்
|
பயம் (=நீர்) + உந்து
(=வழங்கு) + அம் = பயோந்தம் >>> பயோத்தம் >>> பயோதம் = நீரை
வழங்குவது.
|
பயோதரம்
|
மேகம்
|
பயோதாரம்
|
பயம் (=நீர்) + உதாரம்
(=கொடை) = பயோதாரம் >>> பயோதரம் = நீரினைக் கொடுப்பது = மேகம்.
|
பயோதரம்
|
மார்பகம்
|
பயோதாரம்
|
பயம் (=பால்) + உதாரம்
(=கொடை) = பயோதாரம் >>> பயோதரம் = பாலினைக் கொடுப்பது = மார்பகங்கள்.
|
பயோதரம்
|
கடல்
|
பயோதலம்
|
பயம் (=நீர்) + ஊதலம்
(=மிகுதி) = பயோதலம் >>> பயோதரம் = நீரின் மிகுதி = கடல்
|
பயோதரம்
|
கரும்பு
|
பயோந்தரை
|
பயம் (=நீர், சாறு) +
உந்து (=வழங்கு) + அரை (=தண்டு) = பயோந்தரை >>> பயோத்தரம் >>>
பயோதரம் = நீரினை / சாற்றினை வழங்கும் தண்டு.
|
பயோதி
|
நீர்க்கடல்
|
பயோந்தி
|
பயம் (=நீர்) + உந்தி
(=கடல்) = பயோந்தி >>> பயோத்தி >>> பயோதி = நீர்க்கடல்.
|
பயோதிகம்
|
கடல் நுரை
|
பயோந்திகம்
|
பயம் (=நீர்) + உந்து
(=தள்ளு) + இகம் (=நீக்குவது) = பயோந்திகம் >>> பயோதிகம் = நீர் தள்ளி
நீக்குவது = நுரை.
|
பயோற்கடம்
|
நரகம்
|
பயோற்கடம்
|
பயம் (=பள்ளம்) + ஒறு (=தண்டி)
+ கடம் (=பாவம்) = பயோற்கடம் = பாவத்திற்காகத் தண்டிக்கப்படும் பள்ளம்.
|
பர்க்கம்
|
ஒளி
|
பருங்கம்
|
பருங்கு (=கொய், அறு)
>>> பருங்கம் >>> பருக்கம் >>> பர்க்கம் = அறுக்கும்
தன்மையது = ஒளி. ஒ.நோ: பகு (=அறு) >>> பகல், பகர், பக்கம் = அறுக்கும்
தன்மையது = ஒளி.
|
பர்க்கன்
|
சூரியன்
|
பருங்கன்
|
பர்க்கம் (=ஒளி)
>>> பர்க்கன் = ஒளி தருபவன் = சூரியன்
|
பர்க்கா
|
வரையறை
|
பருக்கை
|
பருங்கு (=அறு)
>>> பருக்கு (=வரையறு) >>> பருக்கை >>> பர்க்கா =
இன்னார்க்கு இன்னதென்னும் வரையறை.
|
பர்க்காச்`து
|
நுகர்பொருள்,
பொருள்வளம்
|
பருகத்தம்
|
பருகு (=நுகர்) +
அத்தம் (=பொருள்) = பருகத்தம் >>> பர்காத்தம் >>>
பர்க்காச்`து = நுகர்பொருள் = செல்வம்
|
பர்காணா
|
நில உட்பிரிவு
|
பரிக்காணி
|
பரி (=அறு) + காணி
(=நிலம்) = பரிக்காணி >>> பர்காணா
|
பரச்`பரம்
|
ஒருவருக்கு ஒருவர்
கொடுத்தலும் கொள்ளலும்
|
பரப்பரம்
|
பரம் (=பிறர்) + பரம்
(=பிறர்) = பரம்பரம் >>> பரப்பரம் >>> பரச்`பரம் = பிறர்
பிறர்க்குக் கொடுத்தலும் வாங்கலும்.
|
பர்ச்சானியன்
|
சூரியன்
|
மாரிசனியன்
|
மாரி (=மேகம்) + சனி
(=உண்டாக்கு) + இயம் >>> மாரிசனியம் >>> பர்ச்சானியன் =
மேகங்களை உண்டாக்குபவன்.
|
பரசியம், பராசியம்
|
அனைவரும் அறிந்தது
|
பறைச்சியம்
|
பறைச்சு (=பறைசாற்று)
>>> பறைச்சியம் >>> பரசியம் = அனைவரும் அறியுமாறு பறைசாற்றப்
பட்டது.
|
பரசு
|
மழு, கோடாலி
|
வரசு
|
வரை >>>
வரைச்சு (=வகு, அறு, வெட்டு) >>> வரசு >>> பரசு = வெட்டுவது =
மழு, கோடாலி.
|
பரசு
|
மூங்கில்
|
வரை
|
வரை (=மூங்கில்)
>>> வரய் >>> வரசு >>> பரசு = மூங்கில்
|
பரண்
|
காவல்மேடை, மச்சு
|
பரண்
|
பரம் (=உயரம்)
>>> பரண் = உயரமான இடம் = காவல்மேடை, மச்சு.
|
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 15
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.