சொல்
|
பொருள்
|
தமிழ்ச்சொல்
|
மூலச்சொல்லும் தோன்றும் முறையும்
|
பரிசகம்
|
சித்திரசாலை
|
வரிச்சகம்
|
வரி (=எழுத்து, பூச்சு)
>>> வரிச்சு (=எழுது, பூசு) + அகம் (=இடம்) = வரிச்சகம் = பரிசகம் =
வரையும் இடம்.
|
பரிச்சதம்
|
போர்வை
|
பரிச்சாத்தம்
|
பரி (=பாதுகா) + சாத்து
(=மூடு) + அம் = பரிச்சாத்தம் >>> பரிச்சதம் = பாதுகாப்புக்காக மூடிக்
கொள்ள உதவுவது.
|
பரிச்சந்தம்
|
அரசமுத்திரை
|
பரிச்சந்தம்
|
பரி (=பெருமை, உயர்வு)
+ சந்தம் (=முத்திரை) = பரிச்சந்தம் = பெருமை / உயர்வு உடையோரின் முத்திரை.
|
பரிச்சயம், பரிச்சதம்,
பரிச்சை
|
பழக்கம்
|
பரிசையம்
|
பரி (=அன்புசெய்) + இசை
(=பொருந்து) + அம் = பரிசையம் = பரிச்சயம், பரிச்சதம் = அன்புசெய்து
பொருந்துதல்.
|
பரிச்சயி
|
பழகு
|
பரிச்சயி
|
பரிச்சயம் (=பழக்கம்)
>>> பரிச்சயி = பழகு
|
பரிசம்
|
திருமண நிச்சயதார்த்தம்
|
வரிச்சம்
|
வரை (=எல்லை, முடிவு)
>>> வரிச்சு (=முடிவுசெய், நிச்சயி) >>> வரிச்சம்
>>> பரிசம் = திருமணத்தை நிச்சயித்தல்.
|
பரிசம், பரிசனம்
|
தொடுகை
|
வரிச்சம்
|
வரி (=படு, பொருந்து)
>>> வரிச்சு (=படச்செய், தொடு) >>> வரிச்சம் >>>
பரிசம் = தொடுகை.
|
பரிசனம்
|
சொந்தபந்தம்
|
பரிசனம்
|
பரி (=சூழ்) + சனம்
(=மக்கள்) = பரிசனம் = சூழ்ந்திருக்கும் மக்கள், சொந்தபந்தம்
|
பரிசனம்
|
வேலையாட்கள்
|
பரிசனம்
|
பரி (=ஓடு) + சனம்
(=மக்கள்) = பரிசனம் = ஓடிவேலை செய்யும் மக்கள் = வேலையாட்கள்.
|
பரிசனன்
|
காற்று
|
வரிச்சனன், பரிசனன்
|
(1). வரி (=படி)
>>> வரிச்சு (=படியச்செய்) >>> வரிச்சனன் >>>
பரிசனன் = படியச்செய்பவன். (2) பரிசனம் (=தொடுகை) >>> பரிசனன் =
தொட்டுச்செல்பவன்.
|
பரிசன்னியம்
|
மேகம்
|
வாரிசனியம்
|
வாரி (=நீர்) + சனி
(=உண்டாக்கு) + இயம் = வாரிசனியம் >>> பரிசன்னியம் = நீரை
உண்டாக்குவது.
|
பரிசாரகம், பரிசாரம்
|
ஏவல்தொழில்
|
பரிசாராக்கம்
|
பரி (=ஓடு) + சார்
(=அடை) + ஆக்கம் (=செயல்) = பரிசாராக்கம் >>> பரிசாரகம் = ஓடி அடைந்து
செய்தல்.
|
பரிசாரகம், பரிசாரம்
|
சமையல் தொழில்
|
வரிச்சாராக்கம்
|
வரி (=ஒழுகு, வடி)
>>> வரிச்சு (=வடியச்செய்) + ஆர் (=ஊட்டு) + ஆக்கம் (=செயல்) =
வரிச்சாராக்கம் >>> பரிசாரகம் = வடியச்செய்து ஊட்டுவிக்கும் செயல் =
சமையல் தொழில்.
|
பரிசாரகன்
|
வேலையாள், சமையல்காரன்
|
பரிசாரகன்
|
பரிசாரகம் (=ஏவல்
தொழில், சமையல்) >>> பரிசாரகன் = ஏவலாள், சமையல்காரன்.
|
பரிசாரம்
|
அவை வணக்கம்
|
பரிசாரம்
|
பரி (=பெருமை) + சார்
(=சாய், வணங்கு) + அம் = பரிசாரம் = பெருமை உடையோர் முன் சாய்ந்து வணங்குதல்.
|
பரிசாரிகை
|
வேலைக்காரி
|
பரிசாரிகை
|
பரிசாரகம்
(=ஏவல்தொழில்) >>> பரிசாரிகை = வேலைக்காரி
|
பரிசி
|
தொடு
|
வரிச்சு
|
வரிச்சு (=படியச்செய்,
தொடு) >>> பரிசு >>> பரிசி = தொடு
|
பரிசீலனம், பரிசீலனை
|
மீள்சோதனை, மீளாய்வு.
|
பரிசீலனம்
|
பரி (=பகுத்தறி,
ஆய்வுசெய்) + சீலனம் (=தொடர்ச்சி) = பரிசீலனம் = தொடர்ந்து ஆய்வுசெய்தல்.
|
பரிசு
|
ஒழுங்கு, விதி, தன்மை,
கொடை, பெருமை
|
வரிசை
|
வரிசை (=ஒழுங்கு, விதி,
தன்மை, கொடை, பெருமை) >>> பரிசு
|
பரிசுத்தம்
|
முழுத் தூய்மை
|
பரிசுத்தம்
|
பரி (=முழுமை) +
சுத்தம் (=தூய்மை) = பரிசுத்தம் = முழுமையான தூய்மை.
|
பரிசோதனை
|
முழுச்சோதனை
|
பரிசோதனை
|
பரி (=முழுமை) + சோதனை
= பரிசோதனை = முழுசோதனை
|
பரிசோதி
|
முழுஆய்வுசெய்
|
பரிசோதி
|
பரிசோதனை (=முழு ஆய்வு)
>>> பரிசோதி.
|
பரிஞ்சு
|
வாள், வாட்பிடி
|
பரிஞ்சு
|
பரி (=அறு, வெட்டு)
>>> பரிஞ்சு = அறுக்க / வெட்ட உதவுவது.
|
பரிட்டினகம்
|
பறவைகள் கூட்டமாகச்
சுற்றிப் பறத்தல்
|
பரீட்டினகம்
|
பரி (=சூழ், சுற்று) +
ஈட்டினம் (=கூட்டம்) + அகம் = பரீட்டினகம் >>> பரிட்டினகம் = பறவைகள்
கூட்டமாகச் சேர்ந்து சுற்றிச் சுற்றிப் பறத்தல்.
|
பரிணதன்
|
கற்றவன்
|
பரிநாதன்
|
பரி (=அறி) + நாதம்
(=இசை, பாட்டு) = பரிநாதம் >>> பரிநாதன் >>> பரிணதன் = இசை /
பாட்டை அறிந்தவன்.
|
பரிணமி
|
இனம் மாறு
|
பரிணமி
|
பரிணாமம் (=இனவகை
மாற்றம்) >>> பரிணமி
|
பரிணயம்
|
திருமணம்
|
வரிணையம்
|
வரி (=கட்டு, அணிவி) +
இணை (=சேர், ஒன்றாகு) + அம் = வரிணையம் >>> பரிணயம் = தாலி கட்டி
ஒன்றாகுதல்.
|
பரிணாமம்
|
இனவகை மாற்றம்
|
மாறினமம்
|
மாறு + இனம் + அம் =
மாறினமம் >>> பரிணாமம் = ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனமாக மாறுதல்.
|
பரிதபி, பரிதவி
|
இரங்கு, வருந்து
|
பரிதவி
|
பரிதாபம் (=இரங்கல்,
வருத்தம்) >>> பரிதபி, பரிதவி
|
பரிதாபம்
|
பிறர் துன்பம் கண்டு
இரங்கல்
|
பரிதாபம்
|
பரி (=இரங்கு, வருந்து)
+ தாபம் (=கேடு, துன்பம்) = பரிதாபம் = பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்குதல்
/ வருந்துதல்
|
பரிதாபம்
|
பெருவேட்கை
|
பரிதாபம்
|
பரி (=மிகுதி) + தாபம்
(=வேட்கை) = பரிதாபம் = மிகுவேட்கை
|
பரிதானம்
|
பெருங்கொடை
|
பரிதானம்
|
பரி (=மிகுதி) + தானம்
(=கொடை) = பரிதானம் = பெருங்கொடை
|
பரிதானம்
|
பண்டமாற்று
|
மறிதானம்
|
மறி (=திரும்பச்செய்) +
தானம் (=கொடை) = மறிதானம் >>> பரிதானம் = கொடுத்ததற்காகத் திரும்பக்
கொடுத்தல்.
|
பரிதி
|
ஒளி வட்டம், வட்ட
வடிவம்
|
பரிதி
|
பரி (=சூழ்)
>>> பரிதி = சூழ்ந்திருப்பது = சூரிய, சந்திரனைச் சுற்றியுள்ள
ஒளிவட்டம், வட்ட வடிவம்.
|
பரிதி
|
சூரியன்
|
பரிதீ
|
பரி (=சூழ், சுற்று) +
தீ = பரிதீ >>> பரிதி = சுற்றிக் கொண்டே இருக்கும் தீ = சூரியன். ஒ.நோ:
சூர் (=சுற்று) + இயன் (=கடப்பவன்) = சூரியன் = சுற்றிக் கடப்பவன்.
|
பரிதி
|
சக்கரம்
|
பரிதி
|
பரி (=சூழ், சுற்று)
>>> பரிதி = சுற்றக்கூடியது.
|
பரிதி
|
ஒளி
|
பரிதி
|
பரி (=அறு)
>>> பரிதி = அறுக்கும் இயல்புடையது. ஒ.நோ: பகு (=அறு) = பகல், பகர் =
அறுக்கும் இயல்புடையது = ஒளி.
|
பரிநாமம்
|
புகழ்
|
பரிநாமம்
|
பரி (=பெருமை) + நாமம்
(=பெயர்) = பரிநாமம் = பெரும்பெயர்
|
பரிநியாசம்
|
சொற்பொருள்
|
வரிநியாசம்
|
வரி (=சொல்) + நியாசம்
(=தஞ்சம், அடைவு) = வரிநியாசம் >>> பரிநியாசம் = சொல்லின் அடைவு =
பொருள்.
|
பரிநியாசம்
|
முழுமுடிவு
|
பரிநியாசம்
|
பரி (=முழுமை) +
நியாசம் (=அடைவு, முடிவு) = பரிநியாசம் = முழுமையான முடிவு.
|
பரிபந்தி
|
எதிரி
|
பரிபந்தி
|
பரி (=அறுப்பு) +
பந்தம் (=நட்பு) = பரிபந்தம் >>> பரிபந்தி = நட்பை அறுத்தவன் = எதிரி.
|
பரிபந்தி
|
திருடன்
|
பரிபந்தி
|
பரி (=கருமை) + பந்தம்
(=கட்டு) = பரிபந்தம் >>> பரிபந்தி = கருமைநிறத் துணியால் கண்ணைக்
கட்டியிருப்பவன்.
|
பரிபவம்
|
இழிவு, அவமானம்
|
பறிபாவம்
|
பறி (=பள்ளம், தாழ்வு)
+ பாவம் (=எண்ணம்) >>> பறிபாவம் = பரிபவம் = தாழ்வான எண்ணம் = இழிவு,
அவமானம்
|
பரிபவி
|
அவமதி
|
பறிபவி
|
பறிபாவம் (=அவமானம்)
>>> பறிபவி = அவமதி
|
பரிபாகம்
|
பெருஞ்சமையல்
|
பரிபாகம்
|
பரி (=மிகுதி) +
பாகம்(=சமையல்) =பரிபாகம் =பெருஞ்சமையல்
|
பரிபாகம்
|
முழுபக்குவம்
|
பரிபாகம்
|
பரி (=முழுமை) + பாகம்
(=பக்குவம்) = பரிபாகம் = முழுபக்குவம்
|
பரிபாகி
|
முழுபக்குவம் அடைந்தவன்
|
பரிபாகி
|
பரிபாகம்
(=முழுபக்குவம்) >>> பரிபாகி = முழு பக்குவம் அடைந்தவன்.
|
பரிபாசை, பரிபாடை
|
குழூக்குறி
|
பரிபாசை
|
பரி (=கூட்டம்) + பாசை
(=மொழி) = பரிபாசை = ஒரு கூட்டத்தினர் தமக்குள் பேசிக்கொள்ளும் மொழி.
|
பரிபாடி
|
ஒழுங்கு
|
வரிபாடி
|
வரி (=வரிசை) + பாடு
(=முறை) >>> வரிபாடு >>> வரிபாடி >>> பரிபாடி =
வரிசைமுறை.
|
பரிபாலகன், பரிபாலனன்
|
காப்பாற்றுபவன்
|
பரிபாளகன், பரிபாளணன்
|
பரிபாளி (=காப்பாற்று)
>>> பரிபாளகன் = காப்பாற்றுபவன்
|
பரிபாலனம், பரிபாலனை
|
முழுப்பாதுகாப்பு
|
பரிபாளணம், பரிபாளணை
|
பரி (=முழுமை) + பாளணம்
(=பாதுகாப்பு) = பரிபாளணம் = முழுமையான பாதுகாப்பு அளித்தல்.
|
பரிபாலி
|
முழுப்பாதுகாப்பு கொடு
|
பரிபாளி
|
பரிபாளணம்
(=முழுப்பாதுகாப்பு) >>> பரிபாளி = முழுப்பாதுகாப்பு கொடு.
|
பரிபீடனம்
|
நரகம்
|
பறிவீறனம்
|
பறி (=பள்ளம்) + வீறு
(=வெட்டு, அடி) + அனம் = பறிவீறனம் = பரிபீடனம் = பாவம் செய்தோரை வெட்டியும்
அடித்தும் தண்டிக்கின்ற பள்ளமான இடம் = நரகம்.
|
பரிபுப்புசம்
|
நுரையீரலைச் சூழ்ந்த
சவ்வு
|
பரிபுப்புசம்
|
பரி (=சூழ்) +
புப்புசம் (=நுரையீரல்) = பரிபுப்புசம் = நுரையீரலைச் சூழ்ந்திருக்கும் சவ்வு.
|
பரிபுரம்
|
சிலம்பு, சலங்கை
|
பரிபுலம்
|
பரி (=அணி) + புலம்
(=ஒலி) = பரிபுலம் >>> பரிபுரம் = ஒலிக்கக் கூடிய அணிகலன் = சிலம்பு,
சலங்கை.
|
பரிபூரணம்
|
முழுநிறைவு, மரணம்,
முத்தி
|
பரிபூரணம்
|
பரி (=முழுமை) + பூரணம்
(=நிறைவு, முடிவு) = பரிபூரணம் = முழுமையான நிறைவு, முடிவு, மரணம், முத்தி.
|
பருப்பதம், பருவதம்,
பர்வதம்
|
மலை
|
பருப்பதம்
|
பருமை + பதம் (=இடம்) =
பருப்பதம் >>> பருவதம் >>> பர்வதம் = அகற்சியும் உயரமும்
மிக்க பெரிய இடம்.
|
பல்லவி
|
பலமுறை பாடப்படுவது.
|
பல்லம்மை
|
பல் (=பலமுறை) + அம்மை
(=பாட்டு) = பல்லம்மை >>> பல்லவ்வை >>> பல்லவி = பலமுறைப்
பாடப்படும் வரிகள்.
|
பாம்பு
|
மேகம்
|
பாம்பு
|
பம்பு (=திரள், செறி)
>>> பாம்பு = திரள்வது / செறிவது.
|
பாரம்
|
சுமக்கப்படுவது
|
பாரம்
|
பரி (=சும)
>>> பாரம் = சுமக்கப்படுவது.
|
பாலனம், பாலனை
|
பாதுகாப்பு
|
பாளணம்
|
பாளி (=பாதுகாவல் செய்)
+ அணம் >>> பாளணம் >>> பாலனம் = பாதுகாப்பு.
|
பாலி
|
பாதுகா
|
பாளி
|
பாளை (= பூக்களைப்
பாதுகாக்கும் உறை) >>> பாளி >>> பாலி = பாதுகாவல் செய்.
|
பிகில்
|
நீண்ட ஒலி
|
பயில்
|
பயில் (=அழை, ஒலி)
>>> பகில் >>> பிகில் = அழைப்பதற்காக எழுப்பப்படும் நீண்ட
ஒலி.
|
பிரவேசம்
|
வாசல்
|
பரவேயம்
|
பர (=கட, செல்) + வேயம்
(=வழி) = பரவேயம் = பரவேசம் >>> பிரவேசம் = கடப்பதற்கான வழி.
|
பிரவேசம்
|
உள்நுழைகை
|
பரவேயம்
|
பர (=கட, செல்) + வேயம்
(=வழி) = பரவேயம் = பரவேசம் >>> பிரவேசம் = வழியாகச் செல்லுதல்.
|
புப்புசம்
|
நுரையீரல்
|
பூப்புயம்
|
பூ (=மலர், விரி) +
புய் (=திரள், சுருங்கு) + அம் = பூப்புயம் >>> புப்புசம் = விரிந்து
சுருங்கும் தன்மை கொண்டது. ஒ.நோ: புய் (=திரள்) >>> புயல் = திரள்வது =
மேகம்.
|
பூரணம்
|
நிறைவு, முடிவு
|
பூரணம்
|
பூரி (=நிறை)
>>> பூரணம் = நிறைவு, முடிவு.
|
பைத்தியம், பயித்தியம்
|
மனம் கலங்கிய நிலை
|
பேத்தியம்
|
பேது (=மயங்கு, கலங்கு)
+ இயம் = பேத்தியம் >>> பைத்தியம் >>> பித்தியம், பயித்தியம்
= மன மயக்க / கலக்க நிலை. ஒ.நோ: பேஎம் (=அச்சம்) >>> பையம்
>>> பயம்.
|
பைரவம், வைரவம்,
பயிரவம்
|
அச்சம் தரும் வடிவம்
|
பைருவம்
|
பை (=அஞ்சு) + உருவம் =
பையுருவம் >>> பைருவம் >>> பைரவம் >>> வைரவம்,
பயிரவம் = அச்சம் தரும் வடிவம்.
|
பைரவி, வைரவி, பயிரவி
|
காளி
|
பைரவி
|
பைரவம் (=அச்சம் தரும்
வடிவம்) >>> பைரவி >>> பயிரவி = அச்சம் தரும் வடிவம்
கொண்டவள்.
|
மண்டூகம்
|
தவளை
|
மண்டூக்கம்
|
மண் + தூக்கம் =
மண்டூக்கம் >>> மண்டூகம் = மண்ணுக்குள் புதைந்து தூங்குவது.
|
மோட்சம்
|
உயர்நிலை
|
மோட்டம்
|
(2) மோடு (=உயர்நிலை)
>>> மோட்டம் >>> மோட்சம்
|
வயோதிகம்
|
வயதான நிலை
|
வயோதிகம்
|
பயோதிகம் (=கடல் நுரை)
>>> வயோதிகம் = கடல்நுரையைப் போலத் தலைமயிர் வெண்ணிறமாகும் வயதான நிலை.
|
வேயம்
|
துளை, வழி
|
வேயம்
|
வேய் (=துளையிடு)
>>> வேயம் = துளை, வழி. ஒ.நோ: வேய் (=துளையிடு) >>> வேய் =
துளையுடையது = மூங்கில்.
|
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையான தெளிவுபடுத்தல்
பதிலளிநீக்குhttp://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
நீக்கு