ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 16

சொல்
பொருள்
தமிழ்ச்சொல்
மூலச்சொல்லும் தோன்றும் முறையும்
பரணம்
கவசம், ஆடை
பராணம்
பரி (=அணி) + ஆணம் (=பொருள்) = பராணம் >>> பரணம் = அணியப்படும் பொருள் = கவசம், ஆடை.
பரணம்
பாரம்
பராணம்
பரி (=சும) + ஆணம் (=பொருள்) = பராணம் >>> பரணம் = சுமக்கப்படும் பொருள்.
பரணம்
சம்பளம்
வாராணம்
வார் (=வழங்கு, கொடு) + ஆணம் (=பொருள்) >>> வாராணம் >>> பரணம் = வேலைக்காகக் கொடுக்கப்படும் பொருள்.
பர்ணம்
இலை
வறணம்
வறள் (=மெலி) >>> வறணம் >>> பர்ணம் = மெலிவானது.
பரணி
அடுப்பு
வறனி
வறன் (=வெப்பம், தீ) >>> வறனி >>> பரணி = தீ மூட்டப்படும் இடம் = அடுப்பு.
பரத்தமை, பரத்தை
அன்னியத் தன்மை
பரத்தமை, பரத்தை
பர (=அன்னியம்) >>> பரத்தை, பரத்தமை = அன்னியத் தன்மை
பர்த்தா
கணவன்
பரிதன்
பரி (=காதலி) >>> பரிதம் (=காதல்) >>> பரிதன் >>> பர்த்தா = மனைவியைக் காதலிப்பவன் = கணவன்.
பர்த்தி
நிரப்புகை
பரத்தி
பரத்து (=நிரப்பு) >>> பரத்தி >>> பர்த்தி = நிரப்புகை
பர்துருப்பு, பர்தரப்பு
வேலைநீக்கம்
பரித்தொறுவு
பரி (=நீக்கு) + தொறுவு (=வேலை) = பரித்தொறுவு >>> பர்தொருப்பு >>> பர்துருப்பு, பர்தரப்பு = வேலை நீக்கம்
பரதேசம்
ஊர்சுற்றுகை
பரதேசம்
பர (=செல், திரி) + தேசம் (=ஊர்) = பரதேசம் = ஊர் சுற்றுதல்.
பரதேசம்
அயல்நாடு
பரதேசம்
பரம் (=அன்னியம்) + தேசம் (=நாடு) = பரதேசம் = அயல்நாடு
பரதேசி
ஆண்டி
பரதேசி
பரதேசம் (=ஊர் சுற்றுகை) >>> பரதேசி = தனக்கென ஓர் இடமின்றி ஊரெல்லாம் சுற்றி வரும் ஆண்டி.
பரதை
வறியவர்
வறதை
வறம் (=வறுமை) >>> வறதை >>> பரதை = வறியவர்
பரந்தாமம்
மேலுலகம்
பரந்தாமம்
பரம் (=மேல்) + தாமம் (=இடம்) = பரந்தாமம் = மேலான இடம்
பரந்தாமம்
மேகம்
பரந்தாமம்
பரம் (=உயரம், மேல்) + தாமம் (=யானை) = பரந்தாமம் = உயரத்தில் இருக்கும் யானை = மேகம்.
பரந்தாமன்
திருமால்
பரந்தாமன்
பரந்தாமம் (=மேகம்) >>> பரந்தாமன் = மேகக் கடவுள்.
பர்ப்படம்
அப்பள வகை
பட்பட்டம்
பட்பட் >>> பட்பட்டம் >>> பர்ப்படம் = பட்பட் என்ற ஒலியுடன் பொறிகின்ற அப்பள வகை.
பரப்பு
கூரை
மறைப்பு
மறைப்பு >>> பறைப்பு >>> பரப்பு = மேற்கூரை
பர்பராட்டு
விமரிசை, ஆடம்பரம்
பார்பாராட்டு
பார் + பாராட்டு = பார்பாராட்டு >>> பர்பராட்டு = பலரும் பாராட்டும் விதமாகச் செய்தல்.
பரபாகம்
பிறர்க்காக சமைத்தல்
பரபாகம்
பரம் (=பிறர்) + பாகம் (=சமையல்) = பரபாகம் = பிறர்க்காகச் சமையல் செய்தல்.
பரபாகி
பிறர்க்காக சமைப்பவன்
பரபாகி
பரபாகம் (=பிறர்க்காக சமைத்தல்) >>> பரபாகி = பிறர்க்காக சமையல் செய்பவன்.
பரம்
அன்னியம்
பரம்
பர (=நீங்கு) >>> பரம் = தான் நீங்கலான அனைத்தும்.
பரம்
பக்கம்
பால், புறம், வலம்
(1). பால் (=பக்கம்) >>> பார் >>> பரம் (2) புறம் (=பக்கம்) >>> பறம் >>> பரம். (3) வலம் (=பக்கம்) >>> வரம் >>> பரம்
பரம்
நரகம்
பாறம்
பாறு (=தண்டி, தோண்டு) >>> பாறம் >>> பரம் = பாவிகள் தண்டிக்கப்படும் பள்ளமான இடம்
பரம்
பாரம், உடல், கவசம்
பரம்
பரி (=சும, அணி) >>> பரம் = (1) சுமக்கப்படுவது = பாரம், உடல். (2) அணியப்படுவது = கவசம். 
பரம்
நிறைவு
பரம்
பரம்பு (=நிறை) >>> பரம் = நிறைவு
பரம், பரமம்
மேலானது, மேலிடம், கடவுள்
வாரம், வலம்
(1). வார் (=உயர்) >>> வாரம் >>> வரம் >>> பரம் = உயரம், உயரமானது, உயரத்தில் இருப்பவர். (2) வலம் (=மேலிடம்) >>> வரம் >>> பரம்.
பரம்பரை
பரவல், விரிவு
பரம்பரை
பரம்பு (=விரி, பரவு) + அரை (=அடிப்பகுதி, வேர்) = பரம்பரை = அடிப்பகுதி / வேரின் பரவல் / விரிவு.
பரமம்
நிறைவு
பரமம்
பரம்பு (=நிறை) >>> பரமம் = நிறைவு
பரமம், பரமன்
கடவுள்
பரவம்
பரவு (=வாழ்த்து, போற்று) >>> பரவம் >>> பரமம் >>> பரமன் = போற்றப்படுவது, வாழ்த்தப்படுவது = இறை, கடவுள்.
பரமார்த்தம்
உண்மை, மோட்டம்
பரமருத்தம்
பரம் (=மேலானது) + அருத்தம் (=பொருள்) = பரமருத்தம் >>> பரமார்த்தம் = மேலான பொருள் = உண்மை, மோட்டம்
பரமேட்டி
பரம்பொருள்
பரவேற்றி
பரவு (=புகழ், பாடு) + ஏற்று (=உயர்த்து) = பரவேற்று >>> பரவேற்றி >>> பரமேட்டி = புகழ்ந்து பாடி உயர்த்தப்படுவது.
பரவசம்
பிறவசம் ஆதல்
பரவசம்
பரம் (=அன்னியம்) + வசம் = பரவசம் = பிறவசமாதல்.
பரவசம்
மிகு களிப்பு, பேருவகை
பரவாயம்
பரவு (=நிறை) + ஆய் (=கொண்டாடு, களி) + அம் = பரவாயம் >>> பரவசம் = நிறைவான / மிகுதியான களிப்பு.
பரவணி
பரம்பரை
பரவணி
பரவு (=படர், விரி) + அணி (=வரிசை) = பரவணி = படர்ந்த / விரிந்த வரிசை = பரம்பரை.
பர்வானா
கொடை
புரவணம்
புரவு (=கொடை) >>> புரவணம் >>> பர்வானா = கொடை.
பர்வானா, பரமானா
அனுமதிச்சீட்டு, உத்தரவு
பரவாணை
பரவு (=செல், கட) + ஆணை (=கட்டளை) = பரவாணை >>> பர்வானா = கடப்பதற்கான கட்டளை = அனுமதிச்சீட்டு.
பரன்
கடவுள்
பரன்
பரம் (=மேலானது) >>> பரன் = மேலானவர் = கடவுள்
பரன், பரர்
பிறர், பகைவர்
பரர்
பரம் (=அன்னியம்) >>> பரன் >>> பரர் = அன்னியர்
பராக்கதம், பராக்கிரதம்
விலக்கப்பட்டது
பாறாக்கதம்
பாறு (=கேடு, இழிவு) + ஆக்கு = பாறாக்கு >>> பாறாக்கதம் >>> பராக்கதம்  = இழிவு / கேடு என இயற்றப்பட்டது.
பராக்கிரமம்
பெருவீரம், அழியாச் சினம்
பாறாக்கருமம்
பாறு (=சிதறு, அழி) + ஆ + கருமம் (=சினம்) = பாறாக்கருமம் >>> பராக்கிரமம் = சிதறாத / அழியாத சினம்.
பராக்கு
கவனமின்மை
பாராக்கு
பார் + ஆ + அக்கு (=கண்) = பாராக்கு >>> பராக்கு = கண் பாராத நிலை = கவனமின்மை.
பராகண்டம், பராகண்டிதம்
கவனமின்மை
பாராக்கண்
பார் + ஆ + கண் = பாராக்கண் >>> பராகண்டம், பராகண்டிதம் = கண்பாராத நிலை = கவனமின்மை.
பராகம்
தூள், பொடி
பாறாக்கம்
பாறு (=சிதறு) + ஆக்கம் (=பொருள்) = பாறாக்கம் >>> பாராகம் = பராகம் = சிதறிய பொருள் = தூள், பொடி.
பராகம்
உண்ணாவிரதம்
மறாக்கம்
மறு + ஆக்கம் (=உணவு ) = மறாக்கம் >>> மராகம் >>> பராகம் = உணவை மறுத்து இருக்கும் நிலை.
பராசனன்
கொலைகாரன்
பாறுசனன்
பாறு (=அழி, கொல்) + சனம் (=மக்கள்) = பாறுசனம் >>> பராசனன் = மக்களைக் கொல்பவன்.
பராடம்
பாலைவனம்
வறட்டம்
வறட்டு (=வறட்சி) >>> வறட்டம் >>> பராடம் = வறண்ட இடம்.
பராதி, பராது, பிராது
பழிச்சொல்
பரறை
பரு (=பழி) + அறை (=சொல்) = பரறை >>> பரதை >>> பராதி >>> பராது >>> பிராது = பழிச்சொல் = புகார்.
பராதீனம்
பிறரைச் சார்ந்திருத்தல்
பராத்தினம்
பரம் (=பிறர்) + அத்து (=சார்) + இனம் = பராத்தினம் >>> பராதீனம் = பிறரைச் சார்ந்திருத்தல்.
பராபர்
சமம், சரி
பரம்பர்
பரம்பு (=சமமாக்கு) >>> பரம்பர் >>> பரப்பர் >>> பராபர் = சமமானது.
பராபரம், பராபரன்
இறைவன்
பரம்பரம், பராபரம்
(1). பரம்பு (=சமமாக்கு) >>> பரம்பரம் (=சமம்) >>> பரப்பரம் >>> பராபரம் = அனைவருக்கும் சமமானவன் = இறைவன். (2) பரவு (=வணங்கு) + பரம் (=மேலானது) = பராபரம் = வணங்கப்படும் முதல்வன்.
பராபரி
சமம், ஒழுங்கு
பரம்பரி
பரம்பு (=சமமாக்கு, ஒழுங்குசெய்) >>> பரம்பரி >>> பரப்பரி >>> பராபரி = சமம், ஒழுங்கு.
பராபரி
சோதனை செய்
பரம்பறி
பரம்பு (=சமம், சரி) + அறி = பரம்பறி >>> பரப்பறி >>> பராபரி = எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அறி.
பராபரி
சொல்வழி, செவிவழி
பறைப்பரி
பறை (=சொல்) + பரி (=வழி) = பறய்ப்பரி >>> பறாபரி >>> பராபரி = சொல்வழி, செவிவழி.
பராபரிக்கை
சோதனை
பரம்பறிகை
பரம்பு (=சமம், சரி) + அறிகை = பரம்பறிகை >>> பரப்பறிகை >>> பராபரிக்கை = சரியாக இருக்கிறதா என்று அறிதல்.
பராமரி
சமமாக வைத்திரு, வளர்
பரம்பரி
பரம்பு (=சமம்) >>> பரம்பரி >>> பரப்பரி >>> பராமரி = சமமாக வைத்திரு = குறையாமல் / குறைவின்றி பார்த்துக்கொள்.
பராமரிசம்
ஆலோசனை
பராமரிசை
பரம் (=பிறர்) + அமர் (=விருப்பம்) + இசை (=ஒப்பு) = பராமரிசை >>> பராமரிசம் = பிறர் விருப்பங்களையும் கேட்டு ஒப்புக்கொள்ளுதல் = ஆலோசித்தல்.
பராமரிசி
ஆலோசி
பராமரிசை
பராமரிசம் (=ஆலோசனை) >>>  பராமரிசி = ஆலோசி.
பராமரிப்பு
சமமாக வைத்திருக்கை
பரம்பரிப்பு
பராமரி >>> பராமரிப்பு = குறைவின்றி பார்த்துக் கொள்ளுகை, சமமாக வைத்திருக்கை.
பராமுகம்
கவனமின்மை
பாராமுகம்
பார் + ஆ+ முகம் (=கண்) = பாராமுகம் = கண்பாராத நிலை.
பராமோசி~
கவனமின்மை
பாராமுழி
பார் + ஆ+ முழி (=கண்) = பாராமுழி >>> பராமுயி >>> பராமோசி~ = கண் பாராத நிலை = கவனமின்மை.
பராயணம்
குறிக்கோள்
பாராயணம்
பார் (=எதிர்நோக்கு) + ஆய் (=தேர்ந்தெடு) + அணம் = பாராயணம் >>> பராயணம் = ஒன்றை எதிர்நோக்கித் தெரிந்து எடுக்கப்பட்டது = குறிக்கோள்.
பராயணம்
இராசிமண்டலம்
பாலாயணம்
பால் (=பாகுபாடு) + ஆயணம் (=பயணம்) = பாலாயணம் >>> பராயணம் = கிரகங்கள் பயணிக்கும் பாகுபாட்டு முறை.
பராயணி
கர்ணன்
பறையணி
பறை (=காது) + அணி = பறையணி >>> பராயணி = காதில் குண்டல அணியுடன் பிறந்தவன்.
பரார்த்தம்
பிறர் பொருட்டுச் செய்கை
பராருத்தம்
பரம் (=பிறர்) + அருத்தம் (=பொருள்) = பராருத்தம் >>> பரார்த்தம் = பிறர் பொருட்டாகச் செய்யப்படுவது.
பராரி
கூட்டிக்கொண்டு ஓடுதல்
பாறரி
பாறு (=ஓடு) + அரி (=கூட்டு) = பாறரி >>> பராரி = கூட்டிக்கொண்டு ஓடுதல்.
பராவணம்
இறைவனுக்கு அழகு / சிறப்பு
பரவண்ணம்
பரம் (=மேலானது, கடவுள்) + வண்ணம் (=அழகு, சிறப்பு) = பரவண்ணம் >>> பராவணம் = கடவுளுக்கு அழகு / சிறப்பு
பராவர்த்து
சம்பளம்
பரமருத்து
பரம் (=பிறர்) + அருத்து (=ஊட்டு, கொடு) = பரமருத்து >>> பராவர்த்து = பிறர்க்குக் கொடுக்கப்பட வேண்டியது.
பரிக்காரம், பரிச்`காரம்
அலங்கரித்தல்
பரிக்காரம்
பரி (=அணிவி) + காரம் (=செயல்) = பரிக்காரம் >>> பரிச்`காரம் = அணிவிக்கும் செயல் = அலங்காரம் செய்தல்.
பரிக்கிரகம்
வைப்பாட்டி
பரிக்கிரகம்
பரி (=மிகுதி) + கிரகம் (=வீடு, மனைவி) = பரிக்கிரகம் = ஒன்றுக்கு மேற்பட்ட வீடு / மனைவி.
பரிக்கிரகம்
அங்கீகாரம், ஊர்ச்சபை
பரிக்கிரகம்
பரிக்கிரகி (=அங்கீகரி) >>> பரிக்கிரகம் = அங்கீகாரம், அங்கீகரிக்கும் குழு, ஊர்ச்சபை.
பரிக்கிரகி
அங்கீகரி
பரிக்கிரகி
பரி (=பரிந்துரை) + கிரகி (=ஏற்றுக்கொள்) = பரிக்கிரகி = பரிந்துரையை ஏற்றுக்கொள் = அங்கீகரி.
பரிக்கிரியை
வேலி அடைத்தல்
பரிக்கரவை
பரி (=சூழ், சுற்று) + கரவை (=மறைப்பு) = பரிக்கரவை >>> பரிக்கிரியை = சுற்றிலும் மறைப்பு உண்டாக்குதல்.
பரிக்கை, பரீட்சை, பரீக்சை~
சோதனை, ஆராய்ச்சி
பரிங்கம்
பரி (=அறி) + இங்கம் (=அறிவு) = பரிங்கம் >>> பரிக்கம் >>> பரிக்கை >>> பரீக்சை~ >>> பரீட்சை = ஒருவர் அடைந்துள்ள அறிவை அறிதல்.
பரிகணி
அளவிடு
பரிக்கணி
பரி (=எடை) + கணி (=அறி) = பரிக்கணி = எடையறி, அளவிடு
பரிகம்
கொலை
பரிகம்
பரி (=அழி, கொல்) >>> பரிகம் = அழிக்கை, கொலை
பரிகம்
ஆயுதம்
பரிங்கம்
பரி (=அழி, கொல்) + இங்கம் (=பொருள்) = பரிங்கம் >>> பரிக்கம் >>> பரிகம் = கொல்லும் பொருள் = ஆயுதம்
பரிகம்
காலப்பிரிவு
பரிகம்
பரி (=அறு, பிரி) >>> பரிகம் = பிரிக்கப்பட்டது.
பரிகம், பரிகை
மதில்
பரிகம்
பரி (=சூழ், சுற்று, பாதுகா) >>> பரிகம் = பாதுகாக்கும் பொருட்டுச் சூழ்ந்திருப்பது.
பரிகம், பரிகை
அகழி, கிடங்கு
பறிகம்
பறி (=தோண்டு) >>> பறிகம் >>> பரிகம் = தோண்டப்பட்டது.
பரிகரம்
கருவி
பரிகரம்
பரி (=நிர்வகி) + கரம் (=கை) = பரிகரம் = ஒரு வேலையை நிர்வகிக்க கைபோல உதவுவது.
பரிகரம்
போர்ப்படை
பரிகரம்
பரி (=அழி, கொல்) + கரம் (=கூட்டம், திரள்) = பரிகரம் = அழிக்கும் / கொல்லும் கூட்டம் = சேனை.
பரிகரம்
பரிவாரம்
பரிகரம்
பரி (=சூழ்) + கரம் (=கூட்டம், திரள்) = பரிகரம் = சூழ்ந்து வரும் கூட்டம் / திரள்.
பரிகரி
நீக்கு, குணமாக்கு
பரிகரி
பரிகாரம் (=தீர்வு, மருந்து) >>> பரிகரி = நீக்கு, குணமாக்கு.
பரிகரி
பாதுகா, போற்று
பரிகரி
பரிகாரம் (=பாதுகாப்பு) >>> பரிகரி = பாதுகாவல்செய், போற்று
பரிகலம்
போர்ப்படை
பரிகளம்
பரி (=அழி, கொல்) + களம் (=கூட்டம்) = பரிகளம் >>> பரிகலம் = அழிக்கும் / கொல்லும் கூட்டம்.
பரிகாசம்
பெருஞ்சிரிப்பு
பரிகாசம்
பரி (=குதிரை, மிகுதி) + காசம் (=சிரிப்பு) = பரிகாசம் = குதிரையைப் போல மிகுதியான சிரிப்பு.
பரிகாசி
கோமாளி
பரிகாசி
பரிகாசம் (=பெருஞ்சிரிப்பு) >>> பரிகாசி = பிறரைப் பெரிதாகச் சிரிக்க வைப்பவன்.
பரிகாரம்
தீர்வு, மருந்து
பரிகாரம்
பரி (=நீக்கு, ஓட்டு) + காரம் (=பொருள்) = பரிகாரம் = சிக்கலை / நோயை நீக்கும் / ஓட்டும் பொருள்.
பரிகாரம்
விரும்பும் பொருள்
பரிகாரம்
பரி (=விரும்பு) + காரம் (=பொருள்) = பரிகாரம் = விரும்பும் பொருள்.
பரிகாரம்
பாதுகாப்பு
பாதுகாப்பு
பரி (=பாதுகா) + காரம் (=செயல்) = பரிகாரம் = பாதுகாப்பு
பரிகாரம்
பெண்மயிர்
பரிகாரம்
பரி (=நீளம்) + காரம் (=கருமை) = பரிகாரம் = நீளம் மிகுந்த கருமைநிறப் பொருள் = பெண்மயிர்.
பரிகாரி
வைத்தியம்
பரிகாரி
பரிகாரம் (=மருந்து, தீர்வு) >>> பரிகாரி = மருந்தினால் நோய்க்குத் தீர்வு அளிப்பவன்.
பரிகாரி
முடிவெட்டுபவர்
பரிகாரி
பரிகாரம் (=தலைமயிர்) >>> பரிகாரி = தலைமயிரை வெட்டித் திருத்துபவர்.
பரிகை
காவல்
பரிகை
பரி (=பாதுகா) >>> பரிகை = பாதுகாப்பு, காவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.