புதன், 15 ஏப்ரல், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 20


சொல்
பொருள்
தமிழ்ச்
சொல்
மூலச்சொல்லும் தோன்றும் முறையும்
பலிதை
கிழவி
பலிதை
பலிதம் (=நரை) >>> பலிதை = நரைமயிர் கொண்டவள்.
பலிமுகம், வலிமுகம்
குரங்கு
பலிமுகம்
பலி (=நரை) + முகம் = பலிமுகம் >>> வலிமுகம் = நரைமயிர் மிக்க தலையைக் கொண்டது.
பலியங்கம்
சிப்பி
பலியகம்
பலி (=முத்து) + அகம் = பலியகம் >>> பலியங்கம் = முத்தினை அகத்தே கொண்டது.
பலியம்
தளிர், பூ
பலியம்
பலி (=விளை, தோன்று) >>> பலியம் = தோன்றியது
பலினி
வால்மிளகு, எலி
மாலினி
மால் (=கருமை, வால்) >>> மாலினி >>> பலினி = வாலும் கருமை நிறமும் கொண்டவை.
பலினி
மல்லிகை
மலினி
மல் (=மணம்) >>> மலினி >>> பலினி = மணம் மிக்கது.
பலுகு
உழு, கீறு
வளுகு
வள் (=கூர்மை) >>> வளுகு >>> பலுகு = உழு, கீறு.
பலே
நல்லது எனக்கூறி பாராட்டும் சொல்
வளேய்
வளம் (=நன்மை) + ஏய் (=பொருந்து) = வளேய் >>> பலே = நல்லது என்று கூறிப் பாராட்டும் சொல்.
பலேந்திரன்
பலசாலி
வலேந்திரன்
வலம் (=வலிமை) + ஏந்து (=மிகு) >>> வலேந்து >>> வலேந்திரன் >>> பலேந்திரன் = வலிமை மிக்கவன்.
பலோத்தமை
திராக்கைப் பழம்
வளோற்றமை
வளம் (=பழம்) + ஒற்று (=திரள், நெருங்கு) + அமை = வளோற்றமை >>> பலோத்தமை = திரண்டு நெருங்கி அமைந்திருக்கும் பழம்.
பலோதகம்
பழச்சாறு
வளோதகம்
வளம் (=பழம்) + உதகம் (=நீர்) = வளோதகம் >>> பலோதகம் = பழத்தில் இருந்து பெறப்படும் நீர்.
பலோதயம்
பயன் / நன்மை பெறல்
வளோதயம்
வளம் (=பயன், நன்மை) + உதயம் (=தோற்றம்) = வளோதயம் >>> பலோதயம் = பயன் / நன்மை பெறல்.
பலோதயம்
மோட்டம் (மோட்சம்)
வலோதயம்
வலம் (=மேலிடம்) + உதயம் (=எழுச்சி) = வலோதயம் >>> பலோதயம் = மேலிடத்திற்கான எழுச்சி.
பலோற்காரம்
வலிமையால் புணர்தல்
வலோற்றுகாரம்
வலம் (=வலிமை) + ஒற்று (=பொருந்து, புணர்) + காரம் (=செயல்) = வலோற்றுகாரம் >>> பலோற்காரம்.
பலோற்பதி
மாமரம்
பலோருப்பதி
பலி (=தளிர்) + உருப்பு (=சிவப்பு) + அதி = பலோருப்பதி >>> பலோற்பதி = செந்நிறத் தளிர் உடையது.
பவ்வம்
பௌர்ணமி
பம்பம்
பம்பு (=நிறை, முழுமையாகு) >>> பம்பம் >>> பவ்வம் = நிறைவான / முழுமையான நிலை.
பவ்வம்
கணு, மூட்டு
பம்பம்
பம்பு (=சேர், பொருந்து) >>> பம்பம் >>> பவ்வம் = பொருத்துவாய் = கணு, மூட்டு.
பவ்வம்
கடல்
பம்பம்
பம்பு (=சேர், திரள், கூடு) >>> பம்பம் >>> பவ்வம் = நீர் திரண்டு சேரும் இடம் = கடல்.
பவ்வம்
நீர்க்குமிழி, நுரை
பூவாம்
பூ (=தோன்று) + ஆம் (=நீர்) = பூவாம் >>> பௌவம் >>> பவ்வம் = நீரின்மேல் தோன்றுவது.
பவ்வம்
பருவம்
வப்பம்
வப்பு (=பிளவு, பிரிவு) >>> வப்பம் >>> பவ்வம் = பருவம். ஒ.நோ: பாறு (=பிரி) >>> பாறுவம் >>> பருவம் = பிரிவு.
பவ்வியம், பவ்வியதை
அடக்கம், பணிவு
பம்மியம்
பம்மு (=அடங்கு, பணி) >>> பம்மியம் >>> பவ்வியம் = அடக்கம், பணிவு.
பவ
தோன்று
பூ
பூ (=தோன்று) >>> பௌ >>> பவ = தோன்று
பவஞ்சம்
பஞ்சபூதம்
பவஞ்சம்
பவம் (=பிறப்பு) + அஞ்சு + அம் = பவஞ்சம் = பிறப்புக்குக் காரணமான ஐந்து. ஒ.நோ: பிற + பஞ்சம் (=ஐந்து) = பிறபஞ்சம் >>> பிரபஞ்சம் = பிறப்பதற்குக் காரணமான ஐந்து = பஞ்ச பூதங்கள்.
பவண்
தாவரக்கொடி
பாவண், பூண்
(1). பாவு (=படர்) + வண் (=வளமை) >>> பாவண் >>> பவண் = வளம் மிக்கதும் படரக் கூடியதும் ஆனது. ஒ.நோ: பாவு (=படர்) >>> பவர் = படரும் தன்மையது = கொடி. (2) பூண் (=சுற்று, சூழ்) >>> பௌண் >>> பவண் = சுற்றிப் படரும் தன்மையது = கொடி.
பவணை
கழுகு
பாப்பணை, பூணை
(1). பாப்பு + அணை (=அவி, அழி) = பாப்பணை >>> பாவ்வணை >>> பவணை = பாம்புகளை அழிப்பது. (2) பூண் (=சுற்று, வட்டமிடு) >>> பூணை >>> பௌணை >>> பவணை = ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறப்பது.
பம்மாத்து
வெளிவேசம், பாசாங்கு
பம்மாற்றம்
(2). பம்மு (=மறை, அடங்கு) + ஆற்று (=செய்) + அம் = பம்மாற்றம் >>> பம்மாத்து = மறைவாகச் செய்தல் = மூடிமறைத்தல், பாசாங்கு, வெளிவேசம்.
பவந்தம், பவுந்தம்
பாசாங்கு, சூது
பம்முதம்
பம்மு (=மறை, மூடு) >>> பம்முதம் >>> பவ்வுதம் >>> பவுந்தம், பவந்தம் = மூடி மறைத்துச் செய்தல்.
பவம்
பிறப்பு
பூவம்
பூ (=தோன்று, பிற) >>> பூவம் >>> பௌவம் >>> பவம் = தோற்றம், பிறப்பு
பவம்
உலகம், உலக வாழ்க்கை
பூவம்
புவி (=பூமி) >>> பூவம் >>> பௌவம் >>> பவம் = உலகம், உலக வாழ்க்கை.
பவம், பாவம்
பொய், வஞ்சனை, குற்றம்
பம்மம், வம்பம்
(1). பம்மு (=மூடு, மறை) >>> பம்மம் >>> பவ்வம் >>> பவம், பாவம் = மூடி மறைக்கும் செயல் = வஞ்சனை, பொய். (2). வம்பு (=பொய், வஞ்சனை, குற்றம்) >>> வம்பம் >>> பவ்வம் >>> பவம், பாவம்.
பவம்
மனவைரம், பகை
வம்பம்
வம்பு (=பகை) >>> வம்பம் >>> பவ்வம் >>> பவம்
பவர்
நெருங்கு
பூர்
பூர் (=நிறை, நெருங்கு) >>> பௌர் >>> பவர் = நெருங்கு
பவர்
நெருக்கம்
பூர்
பூர் (=நிறை, நெருங்கு) >>> பௌர் >>> பவர் = நெருக்கம்
பவமானன்
காற்று
பாவுமானன், பூமானன்
(1). பாவு (=பரவு) + மானம் (=ஆகாயம், வெளி) = பவமானம் >>> பவமானன் = வெளியில் பரவியிருப்பவன் = காற்று. (2) பூ (=பூமி) + மானம் (=வலிமை) = பூமானம் >>> பௌமானன் >>> பவமானன் = பூமிக்கு வலிமை சேர்ப்பவன். ஒ.நோ: குறள் 245.
பவர்
கொடி
பவர்
பாவு (=படர்) >>> பவர் = படரும் தன்மையது
பவர்க்கம்
நரகம்
பவருக்கம்
பவம் (=பாவம்) + அருக்கு (=அழி, தண்டி) + அம் = பவருக்கம் >>> பவர்க்கம் = பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும் இடம்.
பௌரணை, பவுரணை, பவரணை
பௌர்ணமி
பூரணை
பூரணம் (=நிறைவு, முழுமை) >>> பூரணை >>> பௌரணை >>> பவுரணை >>> பவரணை = முழுமையான ஒளி. ஒ.நோ: பூமன் >>> பௌமன் >>> பவுமன்.
பவளம், பவழம்
பவளக் கொடி
பாவளம்
பாவு (=படர்) + அள் (=செறி) + அம் = பாவளம் >>> பவளம், பவழம் = கொடிபோல படரக் கூடியதும் செறிந்து வளர்வதுமாகிய உயிரி.
பவனம், பவனன்
காற்று
பாவானம், பூமானம்
(1). பாவு (=பரவு) + வானம் (=வெளி) >>> பாவானம் >>> பவனம் >>> பவனன் = வெளியெங்கும் பரவி இருப்பது. (2)  பூ (=பூமி) + மானம் (= வலிமை) = பூமானம் >>> பௌவானம் >>> பவ்வானம் >>> பவனம் = பூமிக்கு வலிமை சேர்ப்பது. ஒ.நோ: குறள் 245
பவனம்
வீடு, அரண்மனை
பம்மாணம்
பம்மு (=மூடு, மறை) + ஆணம் (=ஆதரவு) >>> பம்மாணம் >>> பவ்வானம் >>> பவனம் = மறைந்து வாழ்வதற்கு ஆதரவாக இருப்பது.
பவனம்
மலைப்பாம்பு
பூணம்
பூண் (=சுற்று, இறுக்கு) >>> பூணம் >>> பௌணம் >>> பவனம் = உடலைச் சுற்றி இறுக்கும் பாம்பு.
பவனம்
பூமி, உலகம்
புவனம்
புவனம் (=பூமி) >>> பூனம் >>> பௌனம் >>> பவனம்
பவனம்
பூனை
பூனை
பூனை >>> பூனம் >>> பௌனம் >>> பவனம்
பவனி
உலா
பூணி
பூண் (=சுற்று) >>> பூணி (=சுற்றிவா) >>> பௌனி >>> பவனி = சுற்றி வருதல்.
பவி
உண்டாகு, நிகழ்
பூ
பூ (=தோன்று, நிகழ்) >>> பௌ >>> பவ >>> பவி
பவி
இடியோசை
பம்பி
பம்பு (= திரள், ஒலி) >>> பம்பி >>> பவ்வி >>> பவி = மேகங்கள் திரண்டு ஒலிப்பது.
பவி
மின்னல்
பூவி
பூ (=தோன்று, ஒளிர்) >>> பூவி >>> பௌவி >>> பவி = வானில் திடீரெனத் தோன்றி ஒளிர்வது.
பவிகம்
சிறப்பு
பூவிகம்
பூ (=தலைஅணி, பட்டம்) >>> பூவிகம் >>> பௌவிகம் >>> பவிகம் = பெருமை, சிறப்பு.
பவிசி, பவிசு, பவிஞ்சு, பவுஞ்சு, பவுசு
பெருஞ்சிறப்பு, பெரும்புகழ், பெருஞ்செல்வம்
பம்பிசை, பூச்சு
(1). பம்பு (=நிறை) + இசை (=செல்வம், புகழ்) = பம்பிசை >>> பவ்விசை >>> பவிசி, பவிசு, பவிஞ்சு, பவுஞ்சு, பவுசு = நிறைந்த செல்வம் / புகழ் / பெருமை. (2) பூச்சு (=மதிப்பு, பெருமை) >>> பௌசு >>> பவுசு, பவிசு, பவுஞ்சு ….
பவித்திரம்
தூய்மை
பவிற்றிறம்
பவம் (=பாவம்) + இல் + திறம் (=தன்மை) = பவிற்றிறம் >>> பவித்திறம் >>> பவித்திரம் = பாவமற்ற தன்மை.
அத்தியாயம்
பிரிவு, பகுதி
ஆற்றிழையம்
அறு (=பிரி, பகு) + இழை (=செய்) + அம் = ஆற்றிழையம் >>> ஆத்தியையம் >>> அத்தியாயம் = பிரித்துச் / பகுத்துச் செய்யப்பட்டது = பிரிவு, பகுதி
பவுத்திரம், பவித்திரம்
தருப்பைப் புல்
புற்றிறம்
புல் + திறம் (=வகை) = புற்றிறம் >>> புத்திறம் >>> பௌத்திரம் >>> பவுத்திரம், பவித்திரம் = புல்வகை.
பவுத்திரம், பவித்திரம்
பூணூல்
பூத்திறம்
பூ (=தோன்று, பிற) + திறம் (=அணி) = பூத்திறம் >>> பௌத்திரம் >>> பவுத்திரம் >>> பவித்திரம் = பிறப்பினைக் குறிக்க அணியப்படுவது = பூணூல்.
பவுத்திரம், பவித்திரம்
தேன்
பூத்திறம்
பூ + திறம் (=பேறு) = பூத்திறம் >>> பௌத்திரம் >>> பவுத்திரம் >>> பவித்திரம் = பூவில் இருந்து பெறப்படுவது
பொட்டல்
பாழிடம், வெளி
பொன்றல்
பொன்று (=அழி, பாழாகு) >>> பொன்றல் >>> பொற்றல் >>> பொட்டல் = பாழான இடம்.
சிவன்
சிவபெருமான்
சிவன்
சிவப்பு >>> சிவன் = சிவந்த உரு உடையவன்.
விச்~ணு, விட்ணு, விட்டுணு
திருமால்
விசுனு
விசும்பு (=மேகம்) >>> விசுமு >>> விசுனு >>> விச்~ணு >>> விட்ணு, விட்டுணு = மேக உருவானவன் / மேகத்தில் உறைபவன்.
பிரம்மன், பிரம்மா
பிரம்மன்
பிறப்பன்
பிறப்பு >>> பிறப்பன் >>> பிரம்மன் >>> பிரம்மா = பிறப்புக்குக் கடவுள்.
பவுச்சிகம், பவுச்~டிகம், பவுட்டிகம்,
மேம்பாட்டிற்காகச் செய்யும் சடங்கு
பூசிகம்
பூசி (=உயர்த்து, மேம்படுத்து) >> பூசிகம் >>> பௌசிகம் >>> பவுச்சிகம் >>> பவுச்~டிகம் >>> பவுட்டிகம் = மேம்பாட்டிற்காகச் செய்யும் சடங்கு.
பவுண்டு
காவல், தொழுவம்
பூண்டு
பூண் (=சுற்று, பாதுகா, வளையம்) >>> பூண்டு >>> பௌண்டு >>> பவுண்டு = பாதுகாப்பு வளையம். 
பவுத்து, மவுத், மவுத்து
மரணம்
முத்து, புத்து
முற்று (=முடி, இற) >>> முத்து, புத்து >>> மௌத்து, பௌத்து >>> மவுத்து, பவுத்து = இறப்பு.  
பூதம்
மிகப் பழைய இயற்கைப் பொருட்கள்
முற்றம்
முற்று (=தங்கு, பழமையாகு, பெருகு) >>> முற்றம் >>> முத்தம் >>> புத்தம் >>> பூதம் = உலகில் பழமையாகத் தங்கியிருக்கும் பெருக்கம் சான்ற பொருட்கள். 
பூதம்
பேய்
முற்றம்
முற்று (=இற, தாக்கு, அழி) >>> முற்றம் >>> புற்றம் >>> புத்தம் >>> பூதம் = இறந்தபின்னும் பிறரைத் தாக்கிக் கொல்லுவது  = பேய்.
பௌதிகம், பவுதிகம்
இயற்கைப் பொருட்களைப் பற்றிய அறிவு
பூதிங்கம்
பூதம் (=இயற்கைப் பொருட்கள்) + இங்கம் (=அறிவு) >>> பூதிங்கம் >>> பூதிகம் >>> பௌதிகம் >>> பவுதிகம் = இயற்கைப் பொருட்களைப் பற்றிய அறிவு.
பூமன், பௌமன், பவுமன்
சேயோன், செவ்வாய்
பூமன்
பூமி (=நிலம், மலை) >>> பூமன் >>> பௌமன் >>> பவுமன் = நிலம் / மலைக்கான கடவுள் = சேயோன், செவ்வாய். ஒ.நோ: பூதிகம் >>> பௌதிகம்.
புத்திரம்
குழந்தை
பூத்திறம்
பூ + திறம் = பூத்திறம் >>> புத்திரம் = பூமொக்கினைப் போன்ற தன்மை கொண்டது = குழந்தை. ஒ.நோ: புதல் (=பூமொக்கு) >>> புதல்வன் = குழந்தை.
பவுராணிகன்
புராணங்களின் அறிவைக் கொண்டவன்
புராணிங்கன்
புராணம் + இங்கம் (=அறிவு) >>> புராணிங்கம் >>> புராணிங்கன் >>> பௌராணிகன் >>> பவுராணிகன் = புராணங்களின் அறிவைப் பெற்றவன்.
பவுரி
வட்டம், சுழற்சி, முழுமை
பூரி
பூர் (=நிறை, முழுமையாகு) >>> பூரி >>> பௌரி >>> பவரி = முழுமை, வட்டம், சுழற்சி.
பளகம்
மலை
மாலகம்
மால் (=உயரம்) + அகம் (=இடம்) = மாலகம் >>> பளகம் = உயரமான இடம் = மலை
பளகு
அறிவுக் குறைபாடு
மளகு
மள்கு (=குறை) >>> மளகு >>> பளகு = குறைபாடு
பளகு
குற்றம், கேடு
மளகு
மள்கு (=கெடு) >>> மளகு >>> பளகு = கேடு, குற்றம்
பளகர்
முட்டாள், குற்றவாளி
மளகர்
மளகு (=அறியாமை, குற்றம்) >>> மளகர் >>> பளகர் = முட்டாள், குற்றவாளி
பளிங்கம், பளிங்கு
படிகம், கண்ணாடி
பளிங்கம்
பளி (=எதிரொளி) + இங்கம் (=பொருள்) = பளிங்கம் >>> பளிங்கு = எதிரொளிக்கும் பொருள்.
பளிங்கம், பளிங்கு
கற்பூரம்
மாளிங்கம்
மாள் (=குன்று, அழி) + இங்கம் (=பொருள்) = மாளிங்கம் >>> பளிங்கம் = காற்றில் குன்றி அழியும் பொருள்.
பளிஞ்சு
கயிறு
பளிச்சு
வளைச்சு (=அடக்கு, கட்டு) >>> பளிச்சு >>> பளிஞ்சு = அடக்க / கட்ட உதவுவது.
பளிதம்
கற்பூரம்
மாளிதம்
மாள் (=குன்று, அழி) >>> மாளிதம் >>> பளிதம் = காற்றில் கரைந்து குன்றி அழிவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.