புதன், 15 ஏப்ரல், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 19


சொல்
பொருள்
தமிழ்ச்
சொல்
மூலச்சொல்லும் தோன்றும் முறையும்
பரோதிகம்
அச்சுறுத்தல்
பரோத்திகம்
பரி (=அச்சம்) + உத்து (=எழுப்பு) + இகம் = பரோத்திகம் >>> பரோதிகம் = அச்சத்தை எழுப்புதல்.
உபகாரம்
உதவி / நன்மை செய்தல்.
உப்பகாரம்
உப்பு (=இன்பம்) >>> உப்பம் (=நன்மை) + காரம் (=செயல்) = உப்பகாரம் >>> உபகாரம் = நன்மை தரும் செயல்.
பரோபகாரம்
பிறர்க்கு உதவி / நன்மை செய்தல்
பரோபகாரம்
பரம் (=பிறர்) + உபகாரம் (=நன்மை, உதவி) = பரோபகாரம் = பிறர்க்கு உதவி / நன்மை செய்தல்.
பரோபகாரி
பிறர்க்கு உதவி செய்பவர்
பரோபகாரி
பரோபகாரம் (=பிறர்க்கு உதவி செய்தல்) >>> பரோபகாரி = பிறர்க்கு உதவி செய்பவர்.
பல்ட்டி, பல்டி
உருளுதல், சுழலுதல்
வலட்டி
(1). வல (=சுற்று) >>> வலட்டு (=உருட்டு, சுழற்று) >>> வலட்டி >>> பல்ட்டி = உருளுதல், சுழலுதல்.  (2) வல் (=சூதாடு கருவி) >>> வலட்டு (=உருட்டு) >>> வலட்டி >>> பல்ட்டி = உருளுதல், சுழலுதல்.
ஆக்கிரமணம்
வலிமையால் கவர்தல்
ஆக்கீர்வணம்
ஆக்கம் (=வலிமை) + ஈர்வு (=கவர்வு) + அணம் = ஆக்கீர்வணம் >>> ஆக்கிரமணம் = வலிமையால் கவர்தல்.
ஆக்கிரமி
வலிந்து கவர்
ஆக்கீர்வி
ஆக்கீர்வணம் (=வலிந்து கவர்கை) >>> ஆக்கீர்வி >>> ஆக்கிரமி = வலிந்து கவர்
பல்லாக்கு, பல்லக்கு
பலர் சுமந்து செல்வது
பல்லாகம்
பல் + ஆகம் (=மார்பு, தோள்) = பல்லாகம் >>> பல்லாக்கு >>> பல்லக்கு = பல தோள்களால் தாங்கப்படுவது.
பல்லகம், பல்லுகம்
கரடி
மாலாகம்
மால் (=கருமை) + ஆகம் (=உடல்) = மாலாகம் >>> மல்லகம் >>> பல்லகம் = கருநிற உடலைக் கொண்டது.
பல்லணம்
சேணம்
வள்ளணை
வள் (=உறை) + அணை (=பொருந்து, அமர்) = வள்ளணை >>> பல்லணம் = அமரக்கூடிய உறை.
பல்லம்
கரடி
மாலம்
மால் (=கருமை) >>> மாலம் >>> மல்லம் >>> பல்லம் = கருமைநிற விலங்கு.
பல்லம்
அம்பு, ஆயுதம்
வள்ளம்
வள் (=கூர்மை) >>> வள்ளம் >>> பல்லம் = கூரியது.
பல்லயம்
வாள்
வள்ளயம்
வள் (=கூர்மை) + அயம் (=இரும்பு) = வள்ளயம் >>> பல்லயம் = கூரிய இரும்பு ஆயுதம்.
பல்லவம்
தளிர், குருத்து
மல்லாவம், பல்லுவம்
(1). மல் (=வளமை, பசுமை) + ஆவி (=தோன்று) + அம் = மல்லாவம் >>> பல்லவம் = பசுமையாகத் தோன்றுவது = தளிர். (2) பல்லு (=உண்டாகு, தோன்று) >>> பல்லுவம் >>> பல்லவம் = உண்டானது = தளிர், குருத்து. ஒ.நோ: ஆம் (=நீர்) + பல் (=தோன்று) = ஆம்பல் = நீரில் தோன்றும் பூ.
பல்லவம்
அம்பு
வள்ளாவம்
வள் (=கூர்மை) + ஆவம் (=வில்நாண்) = வள்ளாவம் >>> பல்லவம் = வில்நாணில் ஏற்றப்படும் கூரிய பொருள்.
பல்லவன்
இழிந்தவன்
பள்ளவன்
பள்ளம் (=இழிவு) >>> பள்ளவன் >>> பல்லவன் = இழிவினைக் கொண்டவன்.
பல்லவை
இழிவான பொருள்
பள்ளவை
பள்ளம் (=இழிவு) >>> பள்ளவை >>> பல்லவை = இழிவான பொருள்.
பல்லா, பல்லாய்
பாத்திரம்
பள்ளா
பள்ளம் (=குழி) >>> பள்ளா >>> பல்லா = குழிவானது = பாத்திரம். ஒ.நோ: பள்ளம் >>> வள்ளம் = பாத்திரம்.
பல்லி
ஊர்வன விலங்கு
பல்லி
பல் >>> பல்லு (=ஒலி) >>> பல்லி = ஒலிப்பது.
பல்லி
வெள்ளைப்பூண்டு
பல்லி
பல் >>> பல்லி = பற்களைப் போல பல வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டது.
பல்லி
குருத்து
பல்லி
பல்லு (=உண்டாகு, தோன்று) >>> பல்லி = தோன்றியது
பல்லிக்கை
பல்லி
பல்லிக்கை
பல்லு (=ஒலி) + இக்கு + ஐ = பல்லிக்கை = இக்கு இக்கு என்று ஒலிப்பது = பல்லி.
பல்லியம்
பந்தி, தொழுவம்
வள்ளியம்
வள்ளு (=கட்டு, பிணி) + இயம் (=இடம்) = வள்ளியம் >>> பல்லியம் = கட்டிவைக்கும் இடம்.
பல்லியம்
தொங்கல்
வாலியம்
வால் (=தொங்கும் உறுப்பு) >>> வாலியம் >>> பல்லியம் = வால்போலத் தொங்குவன.
பல்லியம்
வேளாண் நிலம்
மல்லியம்
மல் (=வளமை, செழிப்பு) + இயம் (=இடம்) = மல்லியம் >>> பல்லியம் = வளமை / செழிப்பு மிக்க இடம்.
பலகம்
அடுக்கு, வரிசை
பாளகம்
பாளம் (=அடுக்கு) + அகம் (=தன்மை) = பாளகம் >>> பலகம் = அடுக்கு போன்ற தன்மை கொண்டது.
பலகம், பலகை
கேடகம்
வாளகம்
வாள் + அகை (=முறி) + அம் = வாளகம் >>> பலகம் = போரில் வாளைத் தடுத்து முறியச் செய்வது.
பலகம்
நாற்காலி
பலகம்
பலகை >>> பலகம் = உட்காரும் பலகை.
பலாகாரம், பலகாரம்
பலவித சிற்றுண்டிகள்
பலாகாரம், பலகாரம்
பல் + ஆகாரம் (=உணவு) = பலாகாரம் >>> பலகாரம் = பலவிதமான சிறுசிறு உணவுகள்.
பலகாரம்
யானைமேல் அமரும் பலகை
பலகாரம்
பலகை + ஆர் (=பொருந்து, அமர்) + அம் = பலகாரம் = அமரக்கூடிய பலகை.
பலகாரி
வலிமை தரும் மருந்து
பலகாரி
பலம் (=வலிமை) + காரி (=செய்வது) = பலகாரி = வலிமை செய்யும் பொருள்.
பலகம், பலகை, பலகி
தட்டையான பொருள்
பாளகம்
பாளம் (=தட்டையானது) + அகம் = பாளகம் >>> பலகம், பலகை = தட்டையான பொருள்.
பலகை
பறை
பல்லகை
பல்லு (=ஒலி) + அகை (=எழுப்பு) = பல்லகை >>> பலகை = ஒலியை எழுப்புவது.
பலசாயம்
பயிர் விளைச்சல்.
வளசாயம்
வளம் (=பயன், விளைச்சல்) + சாய் (=பயிர்) + அம் = வளசாயம் = பயிர் விளைச்சல்.
பலசாலி
வலிமை பொருந்தியவன்
வலசாலி
வலம் (=வலிமை) + சால் (=பொருந்து) + இ = வலசாலி >>> பலசாலி = வலிமை பொருந்தியவன்
பலட்சயம்
வலிமைக் குறைபாடு, பலவீனம்
வலாகையம்
வலம் (=வலிமை) + அகை (=குறை) + அம் = வலாகையம் >>> வலக்கயம் >>> பலக்ச~யம் >>> பலட்சயம் = வலிமைக் குறைவு.
பலவந்தம்
வன்புணர்ச்சி
வலபந்தம்
வலம் (=வலிமை) + பந்தம் (=உறவு, புணர்ச்சி) = வலபந்தம் >>> பலவந்தம் = வன்புணர்ச்சி. 
பலபத்திரம்
பனைமரம்
பல்லுபத்திரம்
பல்லு (=ஒலி) + பத்திரம் (=இலை) = பல்லுபத்திரம் >>> பலபத்திரம் = ஒலிக்கும் இலைகளைக் கொண்டது.
பலம்
பயன், கனி, காய், கிழங்கு,
வளம்
வளம் (=பயன்) >>> பலம் = விளைச்சல், பயன், காய், கனி, கிழங்கு.
பலம்
இறைச்சி
வலம்
வல் (=வலிமை) >>> வலம் >>> பலம் = வலிமைக்குக் காரணமானது = தசை >>> இறைச்சி.
பலம்
பொன்
வளம்
வளம் (=செல்வம்) >>> பலம் = பொன்.
பலம்
நிமிசம்
பாலம்
பால் (=பிரிவு, கூறுபாடு) >>> பாலம் >>> பலம் = கூறுபட்டது. ஒ.நோ: பகு (=அறு) >>> பகல், பகர்.
பலம்
வட்டத்தின் சுற்றளவு
வலம்
வலம் (=சுற்று) >>> பலம் = சுற்றளவு..
பலம்
ஆயுத நுனி, கலப்பைக் கொழு
வள்ளம்
வள் (=கூர்மை) >>> வள்ளம் >>> வல்லம் >>> பல்லம் >>> பலம் = கூரியது = ஆயுதநுனி, கலப்பைக் கொழு.
பலம்
வலிமை
வலம்
வல் (=வலிமை) >>> வலம் >>> பலம்
பலம்
விரைவு, வேகம்
வலம்
வல் (=விரைவு) >>> வலம் >>> பலம் = விரைவு
பலம்
படை
வளம்
வளம் (=மிகுதி, கூட்டம்) >>> பலம் = படைத்திரள்.
பலம்
எடை, பருமன்
வலம்
வல் (=வலிமை) >>> வலம் >>> பலம் = வலிமை மிக்கது = எடை, பருமன்
பலம், பலலம்
நெற்றி, தலை
வலம்
வலம் (=மேலிடம்) >>> பலம் = மேலிருக்கும் உறுப்பு.
பலம்
இலை
வளம்
வளம் (=பசுமை) >>> பலம் = பசுமையானது
பலர்க்கம்
கன்னம்
வளருகம்
வள் (=காது) + அருகு + அம் = வளருகம் >>> பலர்க்கம் = காதுக்கு அருகில் இருப்பது.
பலலம்
சேறு
வளலம்
வளம் (=நீர்) + அல் + அம் = வளலம் >>> பலலம் = நீர் அற்றது = சேறு.
பலலம், பலாலம்
பிண்ணாக்கு, வைக்கோல்
வளலம்
வளம் (=பயன்) + அல் + அம் = வளலம் >>> பலலம் = பயன் நீங்கியது.
பலலம்
இறைச்சி
வாளலம்
வாள் + அல (=கீறு, பிரி) + அம் = வாளலம் >>> பலலம் = வாளால் கீறப்பட்டது = இறைச்சி.
பலலாசயம்
கழுத்து
பலலாசயம்
பலலம் (=தலை) + அசை (=கட்டு, பொருத்து) + அம் = பலலாசயம் = தலையை உடலுடன் பொருத்துவது.
பலவத்து
பயனுள்ளது
வளவத்து
வளம் (=பயன்) + அத்து (=பொருந்தியது) = வளவத்து >>> பலவத்து = பயன் பொருந்தியது.
பலவத்து
வலிமையுள்ளது
வலவத்து
வலம் (=வலிமை) + அத்து (=பொருந்தியது) = வலவத்து >>> பலவத்து = வலிமை பொருந்தியது
பலவம்
காய், பழம்
வளமம்
வளம் (=பயன்) + அம் = வளமம் >>> பலவம் = பயனாகக் கிடைப்பவை = காய், பழம்.
பலவம்
குழி
பள்ளமம்
பள்ளம் + அம் = பள்ளமம் >>> பல்லவம் >>> பலவம்.
பலவான்
பலமிக்கவன்
வலவான்
வலம் (=வலிமை) >>> வலவான் >>> பலவான் = வலிமை பொருந்தியவன்.
ஈனம்
இழிவு, குறைபாடு
இலம்
இலம் (=வறுமை, குறைபாடு, இழிவு) >>> ஈனம்.
பலவீனம்
வலியின்மை
வலவீனம்
வலம் (=வலிமை) + ஈனம் (=குறை) = வலவீனம் >>> பலவீனம் = வலிமைக் குறைவு.
பலன்
பயன்
வளன்
வளன் (=பயன்) >>> பலன்
பலன்
வலிமை
வலன்
வலம் (=வலிமை) >>> வலன் >>> பலன்
பலாக்கன்
குறும்பார்வை கொண்டவன்
வாலாகன்
வால் (=இளமை, சிறுமை) + ஆகம் (=கண், பார்வை) = வாலாகம் >>> பலாக்கன் = குறும்பார்வை கொண்டவன்
பலாகம்
கொக்கு
வாலாகம்
வால் (=வெண்மை) + ஆகம் (=உடல்) = வாலாகம் >>> பலாகம் = வெண்ணிற உடலைக் கொண்டது.
பலாசம்
இலை
வளாயம்
வளம் (=பசுமை) + ஆய் (=சிறுமை, மென்மை) + அம் = வளாயம் >>> பலாசம் = சிறிய மெலிந்த பச்சைநிறப் பொருள் = இலை.
பலாசனம்
கிளி
வளாயணம்
வளம் (=பசுமை) + ஆய் (=கொத்து) + அணம் = வளாயணம் >>> பலாசனம் = கொத்தி உண்பதும் பச்சைநிறம் உடையதுமானது..
பலாட்டியம், பலாட்டிகம்
மிக்க வலிமை
வலாற்றியம்
வலம் (=வலிமை) + ஆற்று (=மிகு, கூடு) + இயம் = வலாற்றியம் >>> பலாட்டியம் = மிக்க வலிமை
பலாட்டியம்
பலவந்தம், வற்புறுத்துகை
வலாற்றியம்
வலம் (=வலிமை) + ஆற்று (=சுமத்து) + இயம் = வலாற்றியம் >>> பலாட்டியம் = வலிமையைச் சுமத்துதல்.
பலாட்டிகன்
பலசாலி
பலாட்டிகன்
பலாட்டிகம் (=மிக்க வலிமை) >>> பலாட்டிகன் = மிக்க வலிமை உடையவன்.
பலாண்டு
வெள்ளைப்பூண்டு
பலண்டு
பல் + அண்டு (=நெருங்கு) = பலண்டு >>> பலாண்டு = பற்களைப்போல பல சிறிய வெண்ணிறத் துண்டுகள் நெருக்கமாக இருப்பது.
பலாத்காரம்
வன்புணர்வு, பலவந்தம்
வலாத்துகாரம்
வலம் (=வலிமை) + அத்து (=கூடு, புணர்) + காரம் = வலாத்துகாரம் >>> பலாத்காரம் = வன்புணர்வு.
பலாந்தம்
முள்மூங்கில்
வளாத்தம்
வள் (=கூர்மை, முள்) + அத்து (=செறி) + அம் = வளாத்தம் >>> பலாந்தம் = முட்கள் செறிந்தது.
பலாபம்
யானையின் நெற்றி
பலாப்பம்
பலம் (=நெற்றி) + அப்பு (=யானை) + அம் = பலாப்பம் >>> பலாபம் = யானையின் நெற்றி.
அப்பு
யானை
அப்பு
அம்பு (=நீர், மேகம்) >>> அப்பு = மேகம் போன்றது
பலாயனம்
தோற்று ஓடுகை
வளாயணம்
வளை (=பணி, தோலு) + அயணம் (=செலவு, ஓட்டம்) = வளாயணம் >>> பலாயனம் = தோற்று ஓடுகை
பலார்த்தி
பயனை நுகர்பவன்
வளார்த்தி
வளம் (=பயன்) + ஆர்த்தி (=பெறுபவன், நுகர்பவன்) = வளார்த்தி >>> பலார்த்தி = பயனை நுகர்பவன்
பலி
சோறு, பூ, கப்பம், இறைச்சி
பலி
பலி (=கொடு) >>> பலி = கொடுக்கப்படுவது, இறைவனுக்கு / அரசனுக்குக் கொடுக்கப்படுவன.
பலி
சாம்பல், திருநீறு, நரைமயிர், முத்து
பாலி
பால் (=வெண்மை) >>> பாலி >>> பலி = வெண்மை நிறம் கொண்ட பொருட்கள்.
பலி
காக்கை
மாலி, பலி
(1). மால் (=கருமை) >>> மாலி >>> பாலி >>> பலி = கரியது. (2). பலி (= கொடு) >>> பலி = கொடுக்கப்படும் சோறு, இறைச்சியை உண்பது.
பலிசை
அளுவம், வட்டி
பலியை
பலி (=மிகு) + இயை (=சேர்) = பலியை >>> பலிசை = மிகுதியாகச் சேர்ந்த நன்மை.
பலிதம், பலித்தம்
அளுவம்
பலிதம்
பலி (=மிகு) + இதம் (=நன்மை) = பலிதம் = மிகுதியாகச் சேர்ந்த நன்மை. ஒ.நோ: அள் (=செறி, மிகு) >>> அளுவம் >>> லாபம் = மிகுதியாகச் சேர்ந்தது.
பலிதம்
நரை
பாலிதம்
பால் (=வெண்மை) >>> பாலிதம் >>> பலிதம் = வெண்ணிறம் கொண்டது = நரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.