சொல்
|
பொருள்
|
தமிழ்ச்சொல்
|
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
|
வாணலி, பாணலி
|
வறுக்கும் சட்டி
|
வறலி, வாட்டலி
|
(1). வறு >>> வறல் >>> வறலி
>>> வடலி >>> வாணலி >>> பாணலி = வறுக்க உதவும் சட்டி.
(2) வாட்டல் >>> வாட்டலி >>> வாண்டலி >>> வாணலி
>>> பாணலி = வாட்ட உதவுவது.
|
பாணி
|
பக்கம்
|
பாணி
|
பணி (=சாய், சார்) >>> பாணி = சார்பு,
பக்கம்.
|
பாணி
|
கை
|
பாணி
|
(2). பாணி (=பக்கம்) >>> பாணி = பக்கங்களில்
இருப்பது = கை. ஒ.நோ: பக்கம் = சிறகு = பக்கங்களில் இருப்பது.
|
பாணி, வாணி
|
சொல், பேச்சு, பாட்டு
|
பன்னி, பண்ணி
|
(1). பன்னு (=பேசு) >>> பன்னி
>>> பாணி >>> வாணி. (2) பண்ணு (=பாடு) >>> பண்ணி
>>> பாணி >>> வாணி = பாட்டு, சொல்.
|
பாணி
|
சக்கரைக் குழம்பு, பழச்சாறு
|
பாணி
|
பனி (=இனிப்பானது, நீர்) >>> பாணி =
இன்சுவை கொண்ட நீர்மப் பொருட்கள்.
|
பாணி
|
கள்
|
பாணி
|
பனி (=வெண்மை, நீர்) >>> பாணி = வெண்ணிற
நீர்மம்.
|
பாணி
|
நீர்
|
பனி
|
பனி (=நீர்) >>> பாணி
|
பாணி
|
ஊர், சோலை, காடு, நாடு
|
பண்ணை
|
பண்ணை >>> பாணி = ஊர், தோட்டம், காடு,
நாடு.
|
பாணி
|
பொருள், கடைத்தெரு
|
பாணி
|
பண்ணியம் (=பொருள்) >>> பாணி = பொருள்,
பொருட்கள் கிடைக்குமிடம்
|
பாணி
|
முறை
|
மாணி
|
மாண் (=ஒழுங்கு) >>> மாணி
>>> பாணி = முறை
|
பாணிகை
|
அகப்பை
|
பணிகை
|
பணி (=செயல்) + கை = பணிகை >>> பாணிகை
= கைபோல செயல்படுவது = அகப்பை.
|
பாணிசம்
|
கைந்நகம்
|
பாணியம்
|
பாணி (=கை) + இய (=செல், நீள்) = பாணிய
>>> பாணிசம் = கைவிரல்களில் இருந்து நீண்டு வளர்வது.
|
பாணிதம்
|
கருப்பஞ்சாறு
|
பனிதம்
|
பனி (=நீர்) + இதம் (=இனிமை) = பனிதம்
>>> பாணிதம் = இன்சுவை கொண்ட நீர் = கருப்பஞ்சாறு.
|
பாணிதம்
|
கற்கண்டு
|
பாணிதம்
|
பாணி (=பொருள்) + இதம் (=இனிமை) = பாணிதம் = இன்சுவை
கொண்ட பொருள் = கற்கண்டு
|
பாணிரம்
|
தாமரை
|
பணிறம்
|
பனி (=நீர்) + நிற (=ஒளிர், எரி) = பணிறம்
>>> பாணிரம் = நீரில் தீப்பிடித்து எரிவதைப் போல ஒளிரும் மலர்.
|
|
|
|
|
பாணிருகம்
|
தாமரை
|
பனிறுக்கம்
|
பனி (=குளிர்ச்சி) + இறுக்கம் (=மூடல்) = பனிறுக்கம்
>>> பாணிருகம் = இரவின் குளிர்ச்சியில் மூடிக் கொள்ளும் மலர்
|
பாணிவாதன்
|
வாணிகன்
|
பாணிமாறன்
|
பாணி (=பொருள்) + மாறு (=விற்றல்) + அன் = பாணிமாறன்
>>> பாணிவாதன் = பொருளை விற்பவன்.
|
பாத்தம்
|
செய்தி, தரம்
|
மாற்றம்
|
மாற்று (=பேச்சு, தரம்) >>> மாற்றம்
>>> பாத்தம் = செய்தி, தரம்
|
பாத்தி
|
பகுதி, பங்கு
|
பாற்றி
|
பாற்று (=பகு, பிரி) >>> பாற்றி
>>> பாத்தி = பிரிவு, பகுதி
|
பாத்தி
|
வீடு
|
பற்று
|
பற்று (=தங்குமிடம்) >>> பத்து
>>> பாத்தி
|
பாத்தியம், பாத்திசம், பாத்தியதை
|
உரிமை, உறவு, பிணை, பங்கு
|
பற்றியம்
|
பற்று >>> பற்றியம் >>> பாத்தியம்
>>> பாத்திசம், பாத்தியதை = உரிமை, உறவு, பிணை, பங்கு.
|
பாத்திபம்
|
பூமி
|
பாத்திமம்
|
பாத்தி (=வீடு) >>> பாத்திமம்
>>> பாத்திபம் = உயிர்களின் வீடு.
|
பாத்தியன்
|
உரிமையாளன்
|
பாத்தியன்
|
பாத்தியம் (=உரிமை) >>> பாத்தியன் =
உரிமையாளன்
|
பாத்தியன்
|
அடியார்
|
பத்தியன்
|
பத்தி (=அன்பு) >>> பத்தியன்
>>> பாத்தியன் = அன்புடையவர்
|
பாத்திரம்
|
கொள்கலம்
|
பற்றிரம்
|
பற்று (=கொள், பெறு) + இர (=வேண்டு) = பற்றிரம்
>>> பாத்திரம் = வேண்டிப் பெற உதவுவது = கொள்கலம். ஒ.நோ: பற்று (=கொள்)
>>> பற்றல் >>> பத்தல் >>> பத்தர் = கொள்கலம்.
|
பாத்திரம்
|
வேசம், நடிக்கும் தோற்றம்
|
பற்றிரம்
|
பற்று (=பூசு) + இரு = பற்றிரம் >>>
பாத்திரம் = பூசப்பட்டிருக்கும் வேசம், நடிக்கும் தோற்றம்
|
பாத்திரம்
|
உடல்
|
பற்றிரம்
|
பற்று (=ஆதாரம்) + இரு = பற்றிரம் = பாத்திரம்
= உயிருக்கு ஆதாரமாக இருப்பது = உடல்.
|
பாத்திரம்
|
மந்திரி
|
பற்றிறம்
|
பல் + திறம் (=சூழ்ச்சி, நுட்பம்) = பற்றிறம்
>>> பத்திறம் >>> பாத்திரம் = பல நுட்பங்களை அறிந்தவன் = மந்திரி.
ஒ.நோ: பல் + திறம் = பற்றிறம் >>> மத்திறம் >>> மந்திரம் >>>
மந்திரி.
|
மந்திரம்
|
பலவகை நுட்பம் கொண்டது
|
பற்றிறம்
|
பல் + திறம் (=சூழ்ச்சி, நுட்பம்) = பற்றிறம்
>>> மத்திறம் >>> மந்திரம் = பல்வகை நுட்பம் / சூழ்ச்சிகளைக் கொண்டது.
|
மந்திரி
|
நுட்பம் அறிந்தவன்
|
மந்திரி
|
மந்திரம் (=நுட்பம், சூழ்ச்சி) >>> மந்திரி
= நுட்பம் / சூழ்ச்சி அறிந்தவன்
|
பாத்திரம்
|
இலை
|
பற்றீரம், பைத்திறம்
|
(1). பற்று (=உடல்) + ஈரம் (=பசுமை) = பற்றீரம்
>>> பத்திரம் >>> பாத்திரம் = பசுமையான உடலைக் கொண்டது. (2) பை
(=பசுமை) + திறம் (=உடல்) = பைத்திறம் >>> பாத்திரம் = பசுமையான உடலைக்
கொண்டது = இலை
|
பாத்திரம்
|
வாய்க்கால்
|
பற்றிறம்
|
பல் + திறம் (=வழி) = பற்றிறம் >>> பாத்திரம்
= பல வழிகளைக் கொண்டது = வாய்க்கால்.
|
பாத்தில்
|
தங்கும் வீடு
|
பற்றில்
|
பற்று (=தங்கு) + இல் (=வீடு) = பற்றில்
>>>பாத்தில்= தங்கும் வீடு
|
பாத்து
|
உணவு, சோறு
|
பத்து
|
பற்று (=கொள், உண்) >>> பத்து
>>> பாத்து = உணவு. ஒ.நோ: பற்று (=கொள், உண்) >>> பற்றம்
>>> பத்தம் >>> வத்தம், பதம் = உண்ணப்படுவது = சோறு.
|
பாதகம்
|
கேடு, குற்றம், பாவம்
|
பாறகம்
|
பாறு (=அழிவு) + அகம் = பாறகம் >>> பாதகம்
= அழிவை உடையது = குற்றம், கேடு, பாவம்
|
பாதி
|
கெடு, துன்புறு
|
பாறி
|
பாறு (=அழிவு, கேடு) >>> பாறி
>>> பாதி = கெடு, அழி, துன்புறு
|
பாதி
|
தடைசெய்
|
மறி
|
மறி (=தடு) >>> மதி >>> பாதி
|
பாதிப்பு
|
கேடு, துன்பம்
|
பாறிப்பு
|
பாறி (=கெடு, துன்புறு) >>> பாறிப்பு
>>> பாதிப்பு
|
பாதிப்பு
|
தடை
|
மறிப்பு
|
மறி (=தடு) >>> மறிப்பு
>>> பாறிப்பு >>> பாதிப்பு
|
பாதகம்
|
தடை
|
மறாக்கம்
|
மறு (=தடு) + ஆக்கம் (=பொருள்) = மறாக்கம்
>>> பதாக்கம் >>> பாதகம் = தடுக்கும் பொருள் = தடை.
|
பாதங்கம், பதங்கம்
|
பொடி
|
பாறங்கம்
|
பாறு (=சிதறு) + அங்கம் (=பொருள்) = பாறங்கம்
>>> பாதங்கம் >>> பதங்கம் = சிதறிய பொருள் = பொடி.
|
பாதம்
|
கால், அடி
|
பாறம்
|
பாறு (=நீங்கு, நட, ஓடு) >>> பாறம்
>>> பாதம் = நடக்கவும் ஓடவும் உதவுகின்ற உறுப்பு.
|
சாகை
|
மரக்கிளை, உட்பிரிவு
|
அகை
|
அகை (=பிரிவு, கிளை) >>> ஆகை
>>> சாகை
|
பாதசாகை
|
கால்விரல்
|
பாதசாகை
|
பாதம் (=கால்) + சாகை (=பிரிவு, கிளை) = பாதசாகை
= காலில் இருந்து பிரிந்து / கிளைத்துச் செல்வது = கால் விரல்.
|
பாதபம், பாதவம்
|
மரம், தோப்பு
|
பாதப்பம்
|
பாதம் (=கால்) + அப்பு (=பற்று) + அம் = பாதப்பம்
>>> பாதபம் >>> பாதவம் = காலால் பற்றி இருப்பது = மரம்
>>> தோப்பு
|
பாதபம், பாதவம்
|
மலை
|
மாதவம்
|
மா (=பெரிய) + தவம் (=நிலையானது) = மாதவம்
>>> பாதவம் >>> பாதபம் = மிகப்பெரிய நிலையான பொருள்.
|
பதம், பாதம்
|
நீர்
|
பற்றம்
|
பற்று (=பசை, ஈரம்) >>> பற்றம்
>>> பத்தம் >>> பதம் >>> பாதம் = ஈரம் உடையது = நீர்.
|
பாதனம்
|
காலில் விழுந்து வணங்குதல்
|
பாதணை
|
பாதம் (=காலடி) + அணை (=பொருந்து) = பாதணை
>>> பாதனம் = காலடியில் பொருந்துதல் = காலில் விழுந்து வணங்குதல்
|
ஆர், ஆரல்
|
நெருப்பு, தீ
|
ஆர், ஆரல்
|
ஆர் (=உண்ணு, பரவு) >>> ஆர்
>>> ஆரல் = தன்னுடன் சேர்ந்த பொருளை உண்பதும் பரவக் கூடியதும் ஆனது.
|
அரவிந்தம்
|
தாமரை
|
ஆரமிழ்தம்
|
ஆர் (=நெருப்பு) + அமிழ்தம் (=நீர்) = ஆரமிழ்தம்
>>> ஆரவிய்த்தம் >>> அரவிந்தம் = நீரில் பற்றி எரியும் நெருப்பு
போன்ற மலர்.
|
தாமரை
|
செந்நிற மலர்
|
தாபலை
|
தாபம் (=நெருப்பு) + அலை (=நீர்) = தாபலை
>>> தாமரை = நீரில் பற்றி எரியும் நெருப்பு போன்ற மலர்.
|
தபம், தாபம்
|
நெருப்பு, தீ
|
தபம்
|
தபுத்து (=உலர்த்து) >>> தபம்
>>> தாபம் = உலர்த்துவது = நெருப்பு
|
நீரசம்
|
தாமரை
|
நிறயம்
|
நிறம் (=நெருப்பு) + அயம் (=நீர்) = நிறயம்
>>> நீரசம் = நீரில் பற்றி எரியும் நெருப்பு போன்ற மலர்.
|
பாதாளம், பாதலம்
|
மிகவும் கீழே இருப்பது
|
மாதாளம்
|
மா (=மிகுதி) + தாள் (=அடி) + அம் = மாதாளம்
>>> பாதாளம் >>> பாதலம் = மிகவும் அடியில் / கீழே இருப்பது.
|
பாதாளம்
|
குகை
|
பாறளம்
|
பாறு (=தோண்டு, குடை) + அளம் (=இடம்) = பாறளம்
>>> பாதளம் >>> பாதாளம் = குடைவுற்ற இடம்
|
பாதலம், பாதாளம்
|
நரகம்
|
பாறலம்
|
பாறு (=பள்ளம்) + அலம் (=துன்பம்) = பாறலம்
>>> பாதலம் >>> பாதாளம் = பாவிகளைத் துன்புறுத்தும் பள்ளம்.
|
பாதாளம்
|
மறைவிடம்
|
பதளம்
|
பது (=ஒளி, மறை) + அளம் (=இடம்) = பதளம்
>>> பாதாளம் = ஒளிந்து கொள்ளும் இடம்.
|
பாதாளி
|
வலையைப் போல சிக்கலானது
|
பறாளி
|
பறி (=வலை) + ஆளு (=பயன்படுத்து) = பறாளு
>>> பாதாளி = வலையைப் பயன்படுத்துவதைப் போல சிக்கலாக இருப்பது.
|
பாதிமம்
|
நாலில் ஒன்று
|
பாதிமம்
|
பாதம் (=கால்) >>> பாதிமம் = கால் பாகம்
= நாலில் ஒன்று
|
பாதிரம்
|
சந்தனம்
|
பற்றீரம்
|
பற்று (=பூச்சு) + ஈரம் (=குளிர்ச்சி) = பற்றீரம்
>>> பத்தீரம் >>> பாதிரம் = குளிர்ச்சிக்காக பூசப்படுவது = சந்தனம்.
|
பாதிரி, பாதிரை
|
மூங்கில்
|
பைத்திரி
|
பை (=எரி) + திரி = பைத்திரி >>> பய்த்திரி
>>> பாதிரி = காடுகளில் எரியுண்டாக்கும் திரிபோலச் செயல்படுவது.
|
பாதிரியம்
|
செவிடு
|
பற்றிரியம்
|
பற்று (=கேள்) + இரி (=நீங்கு) + அம் = பற்றிரியம்
>>> பத்திரியம் >>> பாதிரியம் = கேட்டல் நீங்கிய நிலை.
|
பாதிலி
|
வலை
|
பறிலி
|
பறி (=வலை) >>> பறிலி >>> பதிலி
>>> பாதிலி
|
பாது
|
காவல்
|
பாது
|
பது (=மூடு, மறை) >>> பாது = மூடி மறைத்தல்
= காவல்
|
பாது
|
சூரியன்
|
பாற்று
|
பால் (=வெண்மை, ஒளி) >>> பாற்று (=காய்,
ஒளிர்) >>> பாத்து >>> பாது = காய்பவன் / ஒளிர்பவன்
|
பாதுகம், பாதுகை
|
செருப்பு
|
பாதுகம், பாதுகை
|
பாதம் (=காலடி) + உகம் (=ஏற்றது) = பாதுகம்
>>> பாதுகை = காலடிக்கு ஏற்புடையது = செருப்பு
|
பாதேயம்
|
கட்டுச்சோறு
|
பதேயம்
|
பதம் (=உணவு) + ஏய் (=பொருத்து, கட்டு) + அம்
= பதேயம் >>> பாதேயம் = கட்டப்பட்ட உணவு.
|
பாதை
|
வழி
|
பாறை
|
(1). பாறு (=நீங்கு, செல், நட) >>> பாறை
>>> பாதை = நடப்பதற்கான இடம். (2). பாதம் (=காலடி) >>> பாதை =
காலடிகள் உருவாக்கிய தடம்.
|
பாதை
|
படகு
|
பஃறி
|
பஃறி (=படகு) >>> பாறி >>>
பாதி >>> பாதை
|
பாதை
|
துன்பம்
|
பாறை
|
பாறு (=அழி, கெடு) >>> பாறை
>>> பாதை = கேடு, அழிவு
|
பாதோசம்
|
தாமரை
|
பைத்தோயம்
|
பை (=எரி) + தோயம் (=நீர்) = பைத்தோயம்
>>> பய்த்தோசம் >>> பாதோசம் = நீரில் எரியும் நெருப்பு போன்ற மலர்
|
பாந்தம்
|
இணக்கம், பற்று
|
பற்றம்
|
பற்று (=இணக்கம்) >>> பற்றம்
>>> பத்தம் >>> பாந்தம்
|
பாந்தவம்
|
உறவு
|
பாந்தம்
|
பாந்தம் (=இணக்கம்) + அம் = பாந்தமம்
>>> பாந்தவம் = உறவு
|
பாதல்
|
மேகம்
|
பாந்தள்
|
பாந்தள் (=பாம்பு) >>> பாந்தல்
>>> பாதல் = மேகம். பி.கு: பாம்பைக் குறிக்கும் பல சொற்கள் மேகத்தையும்
குறிக்கும். ஒ.நோ: பாம்பு, நாகம், அரவு.
|
பாந்தன்
|
வழிப்போக்கன்
|
பாத்தன்
|
பதம் (=வழி) >>> பாத்தன்
>>> பாந்தன் = வழியில் செல்வோன்
|
பாந்து
|
பொந்து, இடைவெளி
|
பாத்து, பாந்து
|
(1). பாத்து (=பிளவு, விரிசல்) >>> பாந்து
= இடைவெளி, பொந்து. (2). பாந்து (=ஒளி, பதுங்கு) >>> பாந்து = ஒளியும்
/ பதுங்கும் இடம்
|
பாந்தள்
|
பாம்பு
|
பைத்தல்
|
பை (=சின, சீறு) >>> பைத்தல்
>>> பாந்தள் = சீறுவது.
|
பாந்தள்
|
மேகம்
|
பாந்தல்
|
பாந்து (=மூடு, மறை) >>> பாந்தல்
>>> பாந்தள் = மூடிமறைப்பது
|
பாப்பம்
|
சோறு
|
பாப்பம்
|
பாவு (=விரி, மலர்) >>> பாப்பு (=மலர்த்து)
>>> பாப்பம் = மலர்த்தப் பட்டது = அவித்த சோறு.
|
பாவம், பாபம்
|
கருமை
|
பாப்பம்
|
பாப்பு (=மேகம்) >>> பாப்பம்
>>> பாபம் >>> பாவம் = மேகத்தின் கருநிறம்.
|
பாபக்கினம்
|
எள்
|
பாபக்கினம்
|
பாபம் (=கருமை) + அக்கு (=சிறுமை, நுண்மை) + இனம்
= பாபக்கினம் = கருநிறங்கொண்ட நுண்ணிய பொருள் = எள்
|
பாபத்தி
|
வேட்டை
|
மாபற்றி
|
மா (=விலங்கு) + பற்று (=பிடி) = மாபற்று
>>> மாபற்றி >>> பாபத்தி = விலங்குகளைப் பிடித்தல்.
|
பாபத்து, பாபது
|
தனி கணக்கு
|
பாபற்று
|
பா (=பிரிவு) + பற்று (=கணக்கு) = பாபற்று
>>> பாபத்து = கணக்குப் பிரிவு = தனிப்பட்ட கணக்கு.
|
பாவமூர்த்தி
|
வேட்டைக்காரன்
|
மாவவ்வுறுத்தி
|
மா (=விலங்கு) + வவ்வுறுத்து (=பிடிபடச்செய்,
அகப்படுத்து) + இ = மாவவ்வுறுத்தி >>> பாவம்முறுத்தி >>> பாவமூர்த்தி
= விலங்குகளை பிடிபடச்செய்பவன் / அகப்படுத்துபவன்.
|
பீடு, பீடை
|
துன்பம், கேடு
|
வீறு, வீறை
|
வீறு (=தாக்கு, துன்புறுத்து) >>> வீறை
>>> பீடை = துன்பம்
|
பாபிட்டன், பாபிச்~டன்
|
பெரும் பாவம் செய்தவன்
|
மாபீட்டன்
|
மா (=பெரிய) + பீடு (=கேடு) + அன் = மாபீட்டன்
>>> பாபிட்டன் >>> பாபிச்~டன் = பெரும் கேட்டை உடையவன்.
|
பாபு
|
பெருமை மிக்கவர்
|
மாபூ
|
மா (=பெருமை) + பூ (=தோன்று) = மாபூ
>>> பாபு = பெருமை தோன்றுபவர்.
|
பாபு
|
பகுதி, பிரிவு
|
வப்பு
|
வப்பு (=பிளவு, பிரிவு) >>> பப்பு
>>> பாபு = பிரிவு, பகுதி
|
பாபு
|
கதவு
|
பம்மு
|
பம்மு (=மூடு, மறை) >>> பப்பு
>>> பாபு = மூட உதவுவது
|
பாம்பு
|
நீர்க்கரை
|
பாம்பு
|
பாவு (=நீளு) >>> பாபு >>>
பாம்பு = நீளமானது = நீர்க்கரை. ஒ.நோ: பாவு (=நீளு) >>> பாவு = நீளமானது
= நெசவின் பாவு.
|
பாம்பு
|
தாளக்கருவி
|
பாம்பு
|
பம்பு (=ஒலி) >> பாம்பு = ஒலி எழுப்புவது
|
பாம்புரி
|
அகழி
|
பாப்புரி, பயம்புரி
|
(1). பா (=காவல்) + புரி (=கோட்டை) = பாப்புரி
>>> பாம்புரி = கோட்டையின் காவலுக்காக அமைக்கப்பட்ட நீர்நிலை. (2) பயம்
(=நீர்நிலை) + புரி (=கோட்டை) = பயம்புரி >>> பாம்புரி = கோட்டையைச் சுற்றியிருக்கும்
நீர்நிலை.
|
பாமம், பாமை
|
சிரங்கு, புண்
|
வப்பம்
|
வப்பு (=பிளவு, கீறல்) >>> வப்பம்
>>> பம்மம் >>> பாமம் = கீறலால் உண்டாவது = புண்
|
வாவி
|
குளம்
|
வவ்வி
|
வவ்வு (=பறி, தோண்டு) = வவ்வி >>> வாவி
= தோண்டப்பட்டது
|
பாமம்
|
ஒளி, அழகு
|
பாமம்
|
பாவு (=நீள், பரவு) >>> பாமு
>>> பாமம் = நீண்டு பரவுவது = ஒளி. ஒ.நோ: நீ (=நீளு) >>> நீமம்
= நீளமானது = ஒளி.
|
பாமம்
|
சினம்
|
பைமம்
|
பை (=சின) + மம் = பைமம் >>> பய்மம்
>>> பாமம் = சினம்
|
பாமன்
|
சூரியன்
|
பாமன்
|
பாமம் (=ஒளி) >>> பாமன் = ஒளி தருபவன்
= சூரியன்
|
பாமரம்
|
மூடத்தனம்
|
பம்மாரம்
|
பம்மு (=மூடு, மறை) + ஆர் (=கூர்மை, அறிவு) +
அம் >>> பம்மாரம் >>> பாமரம் = மூடிய / மறைவுண்ட அறிவு
|
பாமரன்
|
மூடன்
|
பாமரன்
|
பாமரம் (=மூடத்தனம்) >>> பாமரன் = மூடன்
|
பாமன்
|
சகோதரி கணவன்
|
மாமன்
|
மாமன் >>> பாமன் = சகோதரியின் கணவன்.
|
பாமினி
|
அழகிய பெண்
|
பாமினி
|
பாமம் (=ஒளி, அழகு) >>> பாமினி = அழகான
பெண்
|
பாயாசம், பாயசம்
|
பால் சேர்த்து செய்த உணவு
|
பாயாசம், பாயசம்
|
பயம் (=பால்) + ஆய் (=உண்ணு) + அம் = பயாயம்
>>> பாயாசம் >>> பாயசம் = பால் சேர்த்து செய்த உணவு
|
பாயதானம்
|
பால்சோறு
|
பயத்தன்னம்
|
பயம் (=பால்) >>> பயத்து + அன்னம்
(=சோறு) = பயத்தன்னம் >>> பாயதானம் = பால் சோறு
|
பாயு, பாயுரு
|
குதம்
|
வாயு
|
வாய் (=வழி, துளை) >>> வாயு
>>> பாயு >>> பாயுரு = குதம்
|
பார்ப்பான், பார்ப்பனன்
|
அறிஞன், புலவன்
|
பார்ப்பான்
|
பார் (=அறி) >>> பார்ப்பான் >>>
பார்ப்பனன் = அறிஞன், புலவன்
|
பார்த்திபம், பார்த்திவம்
|
பூமி, பூமி தொடர்பானது, நில ஊதியம்
|
பருதிமம்
|
பருதி (=பூமி) + மம் = பருதிமம் >>>
பார்த்திவம், பார்த்திபம் = பூமி, பூமி தொடர்பானவை, நிலத்தில் இருந்து பெறப்படும்
ஊதியம்.
|
பார்த்திவன்
|
அரசன்
|
பார்த்திவன்
|
பார்த்திவம் (=பூமி, நிலம்) >>> பார்த்திவன்
= நிலத்தின் அரசன்.
|
பார்வதம்
|
வேம்பு
|
பார்வற்றம்
|
பார்வை (=சூனியம்) + அற்றம் (=இன்மை) = பார்வற்றம்
>>> பார்வத்தம் >>> பார்வதம் = சூனியத்தை இல்லாமல் செய்வது.
|
பார்வதி
|
செம்மண்
|
பார்பற்றி
|
பார் (=நிலம்) + பற்று (=படி, தங்கு) + இ = பார்பற்றி
>>> பார்வத்தி >>> பார்வதி = நிலத்தில் படிந்திருப்பது.
|
பாரகம்
|
திரைச்சீலை
|
மறாக்கம்
|
மறை + ஆக்கம் (=துணி) = மறாக்கம்
>>> பராக்கம் >>> பாரகம் = மறைப்பைச் செய்யும் துணி.
|
பாரகம்
|
தோணி, கப்பல்
|
பாறாக்கம்
|
பாறு (=நீங்கு, கட) + ஆக்கம் (=நீர்) = பாறாக்கம்
>>> பாராக்கம் >>> பாரகம் = நீரைக் கடக்க உதவுவது.
|
பாரகன்
|
சுமப்பவன்
|
பாரகன்
|
பாரம் (=சுமை) >>> பாரகன் = சுமப்பவன்
|
பாரங்கதன்
|
வேதத்தை நன்கு அறிந்தவன்
|
பாரங்கதன்
|
பார் (=அறி) + அங்கம் (=வேதம்) = பாரங்கம்
>>> பாரங்கதன் = வேதத்தை நன்கு அறிந்தவன்.
|
பாரகன்
|
வேதத்தை நன்கு அறிந்தவன்
|
பாரங்கன்
|
பார் (=அறி) + அங்கம் (=வேதம்) = பாரங்கம்
>>> பாரங்கன் >>> பாரகன் = வேதத்தை நன்கு அறிந்தவன்.
|
பாரகன்
|
மாலுமி
|
பாரகன்
|
பாரகம் (=தோணி, கப்பல்) >>> பாரகன்
= கப்பல் ஓட்டுபவன்
|
அங்கம்
|
பொருள்
|
ஆக்கம்
|
ஆக்கம் (=பொருள்) >>> அங்கம்
|
பாரங்கம்
|
இலவங்கப்பட்டை
|
மரக்கம்
|
மரம் + அக்கு (=தோல்) + அம் = மரக்கம்
>>> பாரங்கம் = மரத்தின் தோல் = பட்டை.
|
பாரசவம்
|
ஆயுதம்
|
பறைச்சவம்
|
பறை >>> பறைச்சு (=அழி,கொல்)
>>> பறைச்சவம் >>> பாரசவம் = அழிக்க / கொல்ல உதவுவது.
|
பாரசிகை
|
பருந்து
|
பறசிகை
|
பற + சிகை (=உச்சி, உயரம்) = பறசிகை
>>> பாரசிகை = உச்சத்தில் / உயரத்தில் பறப்பது.
|
பாரணம்
|
உண்ணுதல்
|
வாரன்னம்
|
வார் (=நிறை) + அன்னம் (=உணவு) = வாரன்னம்
>>> பாரணம் = வயிற்றை உணவினால் நிறைத்தல்.
|
பாரணம்
|
நிறைவு
|
வாரணம்
|
வார் (=நிறை) + அணம் = வாரணம் >>> பாரணம்
= நிறைவு
|
பாரணம், பாரணை
|
மேகம்
|
மாராணம்
|
மாரி (=மழை) + ஆணம் (=பற்றுக்கோடு) = மாராணம்
>>> பாரணம் = மழைக்கான பற்றுக்கோடாக இருப்பது
|
பாரதன்
|
தீ
|
பாறத்தன்
|
பாறு (=அழி) + அத்து (=பொருந்து, சேர்) + அன்
= பாறத்தன் >>> பாரதன் = சேர்ந்தவற்றை அழிக்கும் இயல்பினது.
|
பாரதன்
|
கூத்தன்
|
பரதன்
|
பரதம் (=கூத்து) >>> பரதன்
>>> பாரதன் = கூத்தன்
|
பாரதி
|
சரசுவதி
|
பாராதி
|
பார் (=அறி, கல்) + ஆதி (=அடிப்படை, முதல்) =
பாராதி >>> பாரதி = கற்பதற்கு அடிப்படையாக விளங்கும் தெய்வம்
|
பாரதி
|
பண்டிதன்
|
பாரதி
|
பார் (=அறி) + அதி (=மிகுதி) = பாரதி = மிக்க
அறிவுடையவன்
|
பாரதி
|
சொல்
|
மாறத்தி
|
மாறு (=பேசு) + அத்து (=பொருந்து) + இ = மாறத்தி
>>> பாரதி = பேசுதலுடன் பொருந்தியது = சொல்.
|
வார்த்தை
|
சொல்
|
மாறத்தை
|
(2). மாறு (=பேசு) + அத்து (=பொருந்து) + ஐ =
மாறத்தை >>> வார்த்தை = பேசுதலுடன் பொருந்தியது = சொல்.
|
பாரதி
|
மரக்கலம்
|
வாரத்தி
|
வாரி (=நீர்) + அத்து (=பற்று) + இ = வாரத்தி
>>> பாரதி = நீரில் பற்றுக்கோடாக இருப்பது.
|
பாரபட்சம்
|
ஒரு பக்கமாகச் சார்தல்
|
பரபக்கம்
|
பரம் (=சார்பு) + பக்கம் = பரபக்கம்
>>> பாரபக்ச~ம் >>> பாரபட்சம் = ஒரு பக்கமாகச் சார்ந்திருக்கும்
நிலை.
|
பத்தியம்
|
விசாரணை
|
பற்றியம்
|
பற்று (=கொள், கேள், கவனி) + இயம் (=சொல்) = பற்றியம்
>>> பத்தியம் = கொள்ளப்படும் / கேட்கப்படும் சொல்.
|
பாரபத்தியம்
|
மேல் விசாரணை
|
பரபத்தியம்
|
பரம் (=மேல்) + பத்தியம் (=விசாரணை) = பரபத்தியம்
>>> பாரபத்தியம் = மேல் விசாரணை.
|
பாரம்
|
பூமி
|
பாரம்
|
பருமை >>> பாரம் = பருமை கொண்டது = பூமி.
ஒ.நோ: பரு (=பருமை) >>> பருதி = பருமை கொண்டது = பூமி.
|
பாரம்
|
பருத்தி
|
பாலம்
|
பால் (=வெண்மை) >>> பாலம்
>>> பாரம் = வெண்மையானது.
|
பாரம்
|
நீர்க்கரை
|
வாரம்
|
வார் (=நீளு) >>> வாரம்
>>> பாரம் = நீளமானது = கரை
|
பாரம்
|
முடிவு, நிறைவு
|
வாரம்
|
வார் (=நிறை) >>> வாரம்
>>> பாரம் = நிறைவு
|
பாரம், பாரா
|
பாதரசம்
|
பாலம்
|
பால் (=வெண்மை) >>> பாலம்
>>> பாரம் = வெண்மையானது.
|
அச்`திவாரம்
|
தாங்கும் பகுதி
|
ஆற்றுபாரம்
|
(2). ஆற்று (=பொறு, சும) + பார் (=பரப்பு) + அம்
= ஆற்றுபாரம் >>> அத்துவாரம் >>> அச்`திவாரம் = பொறுக்கும் / சுமக்கும்
பரப்பு.
|
பாரம்பரியம்
|
பரவல்
|
பரம்பரையம்
|
பரம்பு (=பரவு) + அரை (=அடி, வேர்) + அம் = பரம்பரையம்
>>> பாரம்பரியம் = வேரின் பரவல்.
|
பாரமார்த்திகம்
|
மெய் ஞானம்
|
பரமருத்திகம்
|
பரம் (=மேல்) + அருத்தம் (=பொருள்) + இகம் = பரமருத்திகம்
>>> பாரமார்த்திகம் = மேலான பொருள் = மெய்ஞானம்
|
பாரமிதம், பாரமிதை
|
மேலான நன்மை
|
பரமிதம்
|
பரம் (=மேல்) + இதம் (=நன்மை) = பரமிதம்
>>> பாரமிதம் = மேலான நன்மை.
|
பாரமேட்டி
|
துறவி
|
பாரமெற்றி
|
பாரம் (=பொறுப்பு, சுமை) + எற்று (=உதை, தள்ளு)
+ இ = பாரமெற்றி >>> பாரமேட்டி = பொறுப்பு / சுமையைத் தள்ளியவர்.
|
பாரவம்
|
வில் நாண்
|
வலாவம்
|
வல (=செலுத்து) + ஆவம் (=கயிறு) = வலாவம்
>>> பாரவம் = அம்பைச் செலுத்த உதவும் கயிறு.
|
பாரவிருதம்
|
உதவி
|
பாரவிறுத்தம்
|
பாரம் (=சுமை) + இறுத்து (=வீழ்த்து, இறக்கு)
+ அம் = பாரவிறுத்தம் >>> பாரவிருதம் = சுமையை இறக்கி வைத்தல்.
|
பாரவிருதம்
|
பலி
|
பரவிறுத்தம்
|
பரம் (=கடவுள்) + இறுத்து (=கொடு, வழங்கு) + அம்
= பரவிறுத்தம் >>> பாரவிருதம் = கடவுட்கு வழங்கப்படுவது.
|
பாரா
|
காவல்
|
பாரா
|
பார் (=கவனி) >>> பாரா = கவனித்துக்
கொள்ளல்.
|
பாரா
|
பகுதி, பிரிவு
|
பாறா
|
பாறு (=பகு, பிரி) >>> பாறா
>>> பாரா = பிரிவு, பகுதி
|
பாராத்தியம்
|
துன்பம்
|
பாறத்தியம்
|
பாறு (=அழிவு, கேடு) + அத்து (=பொருந்து) + இயம்
= பாறத்தியம் >>> பாராத்தியம் = அழிவு / கேடு பொருந்தியது.
|
பாராயணம்
|
ஓதுகை, கல்வி
|
பறையணம்
|
பறை (=ஒலி, ஓது) + அணம் = பறையணம்
>>> பறாயணம் >>> பாராயணம் = ஓதுதல், கல்வி
|
பாராயணன்
|
ஓதுவான்
|
பறையணன்
|
பாராயணம் (=ஓதுகை) >>> பாராயணன் = ஓதுவான்
|
பாராயணன்
|
ஒன்றைக் குறித்து இயங்குபவன்
|
பாரயணன்
|
பார் (=கவனி, குறி) + அயணன் (=இயங்குபவன்) = பாரயணன்
>>> பாராயணன் = ஒன்றைக் குறித்து இயங்குபவன்.
|
பாராயணி
|
சரசுவதி
|
பாராயணி
|
பாராயணம் (=கல்வி) >>> பாராயணி = கல்விக்
கடவுள்.
|
பாராயணிகன்
|
மாணவன்
|
பாராயணிகன்
|
பாராயணம் (=கல்வி) >>> பாராயணிகன் =
கற்பவன்.
|
பாராருகம்
|
பாறை
|
பரலூக்கம்
|
பரல் (=கல்) + ஊக்கம் (=மிகுதி, வலிமை) = பரலூக்கம்
>>> பரரூக்கம் >>> பாராருகம் = வலிமை கொண்ட பெருங்கல்.
|
பாராவதம்
|
புறா
|
பறவத்தம்
|
பற + அத்து (=சேர்ப்பி) + அம் = பறவத்தம்
>>> பாராவதம் = பறந்துசென்று சேர்ப்பிப்பது.
|
பாராவதம்
|
குரங்கு
|
மரப்பற்றம்
|
மரம் + பற்று + அம் = மரப்பற்றம்
>>> பரவத்தம் >>> பாராவதம் = மரத்தைப் பற்றித் தொங்குவது.
|
பாராவதம்
|
மலை
|
பாரப்பதம்
|
பாரம் (=சுமை) + பதம் (=இடம்) = பாரப்பதம்
>>> பாராவதம் = பூமி தாங்கும் சுமை போல விளங்கும் இடம்.
|
பாராவதம்
|
கருங்காலி மரம்
|
மாலாம்பதம்
|
மால் (=கருமை) + ஆம் + பதம் (=கால்) = மாலாம்பதம்
>>> பாராப்பதம் >>> பாராவதம் = கருநிறக் கால் கொண்டது.
|
பாராவாரம்
|
கடல், கடற்கரை
|
பாரவாரம்
|
பாரம் (=கரை) + வார் (=நீளு) + அம் = பாரவாரம்
= நீளமான கரையினைக் கொண்டது.
|
வெள்ளி, 24 ஏப்ரல், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 22
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொடர்ந்து வாசிக்கிறேன். பல புதிய செய்திகளையும், சொல் பயன்பாட்டையும் அறிகிறேன். நன்றி.
பதிலளிநீக்கு(எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :))
நீக்கு